கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

13.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

Shaliha ali

Moderator
Staff member
13.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே.



தோழிகள் இருவருக்குள்ளும் அக்கப்போர் நடந்துக் கொண்டிருக்க... பியூன் வந்து "மலரை கதிர் சார் அழைக்கிறார்" என்று சொல்ல... இப்பொழுது மலருக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.

"ஏய் தேவி எனக்கு ரொம்ப பயமாக இருக்கு,கூடவே நீயும் வாயேன்" என்று அவளை அழைக்க...


"என்ன செல்லம் விளையாடுறீயா? எப்பவும் எல்லாத்தையும் சிங்களா தானே ஹாண்டில் பண்ணுவே,இப்போ எதுக்கு ஒரு ஆளு? நீ தனியாகவே போ நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்க வேண்டாமா?" என்று தேவி கேட்க...


"ஓ.... அப்போ உனக்கு என்னை விட உன் நிம்மதி தான் பெரிசா போச்சா?"

"ம்ம்... இதில் என்ன சந்தேகம் "என்று தேவி எங்கேயோ பார்த்து சொல்ல...


"அப்படியா? ஏய் பாரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் இல்லைன்னு ரொம்ப வருத்தப்படுவ அப்போ நீ என்னை பார்க்கனும் நினைச்சாலும் பார்க்க முடியாது பாரு "என்று அவள் ஒரு விரல் நீட்டி கண்களை உருட்டிக் கொண்டு சொல்ல...அதை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவாறு "அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல இடத்தை காலி பண்ணு காத்து வரட்டும்" என்று சொன்னாள் தேவி.


"ரொம்ப வருத்தப்படுவ"

"பரவாயில்லை" என்றாள் தேவி.



மலர் சொன்னதே விரைவில் நடக்கப்போவதை அறியாமல் தேவியும் சரி என்றாள்.

"உன்னை அப்புறமா வைச்சுக்கிறேன்"

"என்னை அப்புறமா இடுப்புல தூக்கி வைச்சுக்கோ இப்போதைக்கு கதிர் கூப்பிட்டதற்கு என்னவென்று கேளு அப்புறமா அவரு இங்க வந்து உங்க ரெண்டுபேரையும் சமாளிக்க என்னால முடியாதுபா" என்றதும்

"ஏய் போடி வெவ்வே ...." என்று முகத்தை சுழித்துக் கொண்டு சென்றாள் மலர்.



மலர் கொஞ்சம் நடந்து சென்றதும் அவள் பின்னாடியே தேவியும் நடந்து சென்றாள் மலர் திரும்பி பார்க்கும் நேரம் ஒழிந்துக் கொண்டாள் தேவி.அவள் செய்வதை இவளும் கவனித்து சிரித்துக் கொண்டே நடந்தாள்.


மலருக்கு தெரியாதா? அவளுடைய தேவியை பற்றி என்ன தான் சொல்லால் முடியாது என்றாலும் மனதால் என்னாச்சு என்று ஓடி வரும் நட்பு அல்லவோ அவளுடைய நட்பு.

ஆபிஸ் உள்ளே சென்றதும் அங்கே அவன் அமர்ந்திருக்க சிறு தயக்கத்தோடு உள்ளே செல்ல...தேவியோ ஓரமாக சுவற்றோடு ஒட்டி நின்றாள்.மலர் தயக்கத்தோடு "சார் ..... சார் கூப்பிட்டிங்களா?" என்று மென்று முழுங்கிய வாறே கேட்க... அவளை ஏறெடுத்து ஒரு பார்வை பார்த்தவன் திரும்ப குனிந்துக் கொள்ள இவளுக்கோ கோபமாக வந்தது.



'கேட்கிறாளே ஒரு பதில் சொல்வோமே' என்று கூட நினைக்காமல் என்று நினைக்கும் போது "மலர் கூப்பிட்ட உடனே வர மாட்டீங்களா?"


"அது.... வந்து..." என்று இழுக்க.. வெளியே நின்றுக் கொண்டிருந்த தேவி" என்ன எதுவுமே காதுல விழ மாட்டேங்குது? ஒருவேளை ரெண்டுபேரும் கண்ணாலேயே பேசிக்கிறாங்களோ? இருக்காது இந்த மலருக்கு ரொமான்ஸே என்னன்னு தெரியாதே? அப்போ உள்ளே என்ன நடக்குது? ஒரு வேளை நமக்கு சரியாக காது கேட்கலையோ "என்று காதை அறையின் பக்கம் கொண்டு செல்ல...

எதிரே வந்த தலைமை ஆசிரியர் "என்ன பண்ணுறீங்க தேவி?"என்று கேட்க...


அவரை அங்கு திடீரென கண்டு பதறியவள் "அது ... அது .... நோட்ஸ் எடுக்க வந்தேன்"

"அப்படியா! சரி இப்போ தான் எல்லாத்தையும் செக் பண்ணி என் ரூம்ல வைச்சேன் போய் எடுத்துட்டு மற்றவங்களுக்கும் கொடுத்துடுங்க"


"ஓ...ஓகே சார் .. "என்று அங்கிருந்து சென்றவள் மூச்சை இழுத்து விட்டு


"ஷ்ஷ்ஷ்ஷ்ப்பா நல்ல வேலை தப்பிச்சேன் இல்லை அசிங்கமா போயிருக்கும் இந்த மலருக்காக என்ன வேலையெல்லாம் பண்ண வேண்டி இருக்கு.ம்ம்ம்ம் ..... எப்படியும் தனியா சமாளிச்சிடுவா.அவ வந்த பிறகு என்ன நடந்திச்சுன்னு கேட்கலாம்" என்று சென்றாள் தேவி.


இங்கே மலரிடம் கதிர் "கூப்பிட்ட உடனே எந்த வேலையாக இருந்தாலும் உடனே விட்டுட்டு வரணும் உங்க வேலையை முடிச்சுட்டு மெதுவா வர்ற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க புரியுதா?" என்று முகத்தை காட்டமாக வைத்து கேட்க...


"சாரி ... சார்"

"அப்புறம் இந்த பைலை ஒழுங்கா டைப் பண்ணிங்களா இல்லையா? அவ்வளவும் தப்பா இருக்கு மீட்டிங் போய் பார்த்த எதுவுமே சரியில்லை நீங்க ஒழுங்கா பண்ணாததால நான் மீட்டிங்க நாளைக்கு வைச்சுக்கலாம்னு சொல்லிட்டேன் உங்களால எனக்கு தேவையில்லாத டென்ஷன் "அவன் பொரிந்து தள்ள மலருக்கு ஏனோ அவள் எதிர் பார்த்ததற்கு மாறாக நடக்க ஏமாற்றத்தில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.


இதுவரை யார் பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மனம் இன்று அவன் கொஞ்சம் கோபமாக பேசியதும் மனம் பொறுக்க வில்லை.


"சாரி .... சார்.... இனிமேல் எந்த தப்பும் நடக்காத மாதிரி பார்த்துக்கிறேன்" என்று சொல்ல...


"சரி திரும்ப ரெடி பண்ணி கொண்டு வாங்க"என்றான்.

இவளும் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாமல் வெளியே வந்தாள்.அவள் வெளியே வரவும் நோட்ஸ்ஸை எடுத்துக் கொண்டு தேவி ஏதிரே வர...

"மலர்...மலர் என்னாச்சு?"என்று கேட்க...


"ஏய் போடி நானே ரொம்ப டென்ஷன்ல இருக்கேன் அமைதியா போய்டு "

"என்ன கதிர் சாரு கத்தி விட்டாரா? முகமே சரியில்லை"என்று கேட்க...


"எனக்கு பேசவே நேரம் இல்லை வேலை இருக்கு" என்று பைலை எடுத்து விட்டு சென்றாள்.


கதிர் ஒருவார்த்தை கூட நேற்றைய நடந்ததை பற்றி விசாரிக்காமல் இருந்தது அவளுக்கு வருத்தத்தை தந்தது.வேலையை முடித்துக் கொண்டு அவனிடம் பைலை கொடுத்து விட்டு திரும்ப இருக்கையை விட்டு எழுந்தவளிடம் "கலை"என்றழைக்க...


"என்ன சார்?"அவனிடம் பதிலில்லை.


"சார் பைலை கரெக்டா செக் பண்ணிட்டேன்"

"அது .. இல்லை இன்னும் நேற்று நடந்ததை நினைத்து இன்னும் கவலையா இருக்கியா?"
மலரிடம் பதிலில்லை.


"எனக்கு உன்கிட்ட கேட்க ரொம்ப யோசனையா இருந்தது அதனால தான் கேட்கலை திரும்பவும் அதை ஞாபகப்படுத்தி உன்னை கஷ்டப்டுத்த விரும்பலை இருந்தாலும் முகமே சரியில்லையே "என்று அடுத்தடுத்த சந்தேகங்களை கேட்க...


மலருக்கோ மனதினுள் 'இதை கேட்க மாட்டீங்களான்னு தான் நான் ரொம்ப வருத்தப்பட்டேன்' என்று அவள் நினைக்க...


"என்ன கலை பதிலே பேச மாட்டீங்கிற நான் கோபமா பேசினாலாவது என்கிட்ட எதாவது வம்பு பேசுவேன்னு பார்த்தால் ...... பதிலே பேசமால் இருக்க கலை"


"அது... ஒன்றுமே இல்லை சார்" அவள் தலையை குனிந்துக் கொண்டுச் சொல்ல...



"கலை கதிர் என்றே சொல்லேன்"


"ம்ம்ம்ம் ...எந்த யோசனையும் இல்லைடா" என்று அவள் சொல்ல அவன் முகத்தில் புன்னகை.

"எதுவுமே கேட்கலைன்னு தான் கோபம்" என்றாள்.


அவனிடம் இருந்து முகத்தை திருப்பிக் கொண்டு மலர் சொன்ன வார்த்தைகள் மனதோடு சேர்ந்து மகிழ்ச்சியை தர "எனக்கு தான் புரியலை'என்று அவன் சொல்ல...


"சரியான மர மண்டை"என்று அவன் தலையில் தட்டியவள் "நேற்று எனக்காக நீங்க தீபக்கிட்ட பேசும் போது என்னை புரிஞ்சு பேசுனது அவ்வளவு சந்தோஷம் அதுல நான் ஏன் நீங்க என்கிட்ட கேள்வி கேட்டால் கோபப்பட போறேன்" என்றாள்.


"சாரி..."என்று கதிர் காதை பிடிக்க...

"ம்ம்ம் சாரி எல்லாம் ஏற்றுக்க முடியாது அதுக்கு பதிலா ஒரு தண்டனை தான் தர முடியும்"

"என்ன தண்டனைன்னு தெரிஞ்சுக்கலாமா?"


"என்னை ஒரு நாள் வெளியே கூடிட்டு போங்க"

"எ.....ன்ன?" என்று அவன் ஆச்சர்யமான மகிழ்ச்சியோடு கேட்க...


"ஆமாம் நேற்று நீங்க கூடிட்டு போனப்போ சூழ்நிலை
சரியில்லை அதுக்கு தான்"


"ம்ம்ம் எனக்கு இந்த தண்டனை பிடிச்சிருக்கு கூடிய சீக்கிரமா நிறைவேற்றுகிறேன்" என்று கைகள் இரண்டையும் நெஞ்சில் குறுக்கே கட்டியபடி இதழோர புன்னகையோடு அவளை ஆழமாக பார்க்க மலரால் அந்த பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் .... கை அசைத்து பாய் என்று சொல்லி சென்றாள்.


கதிர் மனதினில் மலரை வெளியே அழைத்து சென்று தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல முடிவெடுத்தான்.


உன் சிறு பார்வை என் மீது


விழுந்ததும் உன் மீதே என் பார்வை


முழுவதும் சரணடைந்து


விடுகிறது.நெஞ்சில் புதைக்க


தெரிந்த என் காதலை என்


கண்களுக்கு அதை மறைக்க


தெரியாமல் அனைத்தையும் காட்டி


கொடுத்து விடுகிறது.



இங்கே தீபக் சுந்தரிக்கு போன் செய்து தனியே சந்திக்குமாறு அழைத்தான்.இருவரும் சொன்னபடியே சொன்ன இடத்தில் சந்தித்தனர்.

சுந்தரி "என்ன தம்பி? ரொம்ப அவசரமா வரச் சொன்னீங்க.?"

"எதுக்கு கூப்பிட்டேன்னு தெரிஞ்சே தெரியாத மாதிரி கேட்கிறீங்க"


"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியலை"


"ஏன் மலர் நேற்று நடந்ததை எதுவும் சொல்லலையா?"


"இல்லை எதுவுமே சொல்லலையே" என்று கேட்க...


"அப்படியா!" என்று நேற்று நடந்த அனைத்தையும் சொன்னான் தீபக்.

நடந்த அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியடைந்த சுந்தரி...


"என்ன சொல்லுறீங்க? எனக்கு தெரியாம யார் அவள் கூட பழகுறது? எனக்கும் தெரியலை நான் விசாரிக்கிறேன்"


"இங்க பாருங்க நீங்க சொன்ன மாதிரி மலர் எனக்கு தான் கிடைக்கனும் இல்லை அவ்வளவு தான்" என்று மிரட்ட...


"இங்க பாருங்க தம்பி நீங்க தேவையில்லாமல் குழப்பிட்டு இருக்காதீங்க எவன் வந்தாலும் சரி மலரை உங்களுக்கே கல்யாணம் செஞ்சு வைக்கிறேன் நான் இருக்கிற நிலைமைக்கு என்னால அந்த மலருக்கு கல்யாணம் பண்ணி செலவு செய்ய முடியாது அதனால அவ அம்மாகிட்ட எப்படி பேசனுமோ அப்படி பக்குவமா பேசி அந்த மலரை உங்களுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க, இன்றைக்கே அதற்கான வேலையை நான் பார்க்கிறேன் நீங்க அந்த மலரோட பழகுறது யாருன்னு மட்டும் கண்டுபிடிச்சு சொல்லுங்க நான் மற்றதை பார்த்துக்கிறேன்" என்று சொல்லி விட்டு சென்றாள் சுந்தரி.


தீபக் மனதினுள் 'மலர் நீ என்கிட்ட இருந்து தப்பவே முடியாது 'என்று கருவினான்.



சுந்தரியோ 'காமாட்சி இன்னைக்கு நான் உன்கிட்ட கேட்கிற கேள்வியில நீயே இந்த தீபக்குக்கு மலரையே கல்யாணம் பண்ணி வைக்கிறீயா? இல்லையான்னு பாரு மலரு என்ன வாய் பேசுற உன்னை அடக்குறேனா இல்லையான்னு பாரு' என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு நோக்கி வேகமாக நடந்தாள் சுந்தரி.




(தொடரும்)
 
Top