கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

14.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

Shaliha ali

Moderator
Staff member
வீட்டுக்குள் நுழைந்த சுந்தரி புலம்பியபடி வந்து தலையில் கையை வைத்து நாற்காலியில் அமர... சங்கர் அதை பார்த்து விட்டு அமைதியாக இருந்தார்.


அங்கே வந்த காமாட்சி சுந்தரி அமைந்திருப்பதை கண்டு சுந்தரியிடம் "சுந்தரி... என்னாச்சு தலை வலிக்குதா? டீ எதாவது சூடாக போட்டு தரவா?" என்று சுந்தரியிடம் கேட்க...


"வேண்டாம் அண்ணி எனக்கு ஒன்னும் வேண்டாம் நான் இருக்கிற டென்ஷன்ல என்ன குடிச்சாலும் சரியாகாது"


"என்னாச்சு? என்ன பிரச்சனை?" என்று கேட்க...சுந்தரியிடம் பதிலில்லை.



காமாட்சி அமைதியாய் இருக்க ... சங்கர் "அண்ணி இவளுக்கு ஒரு வேலையில்லை தேவையில்லாத விஷயங்களை பற்றி யோசித்து கவலைப்படுவதே வேலையாக போயிற்று" என்று சொல்ல...


சுந்தரி உடனே "தேவையில்லாத விஷயத்தை பற்றி யோசிக்கலை வினோவைப் பற்றி தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்னதை பற்றி என்ன முடிவு எடுத்தீங்க?"என்று கேட்க...


சங்கர் "இங்க பாரு சுந்தரி நேற்று தானே வந்தாங்க இன்னைக்கே பதில் சொல்லனும் அவசியமில்லை ஒரு வாரம் டைம் கொடு அதற்கிடையில் என்னால என்ன பண்ண முடியும்னு சொல்றேன்னு அதற்குள்ளாக அவசரப்படுத்தாதே" என்று சங்கர் சொல்லி முடிக்கவும் அவருக்கு போன் வர அங்கிருந்து சென்று விட்டார்.



காமாட்சிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.அமைதியாக நிற்க சுந்தரி வாராத கண்ணீரை வரவழைப்பது போல் பாவானை செய்ய சுந்தரிக்கு அருகில் அமர்ந்து காமாட்சி "என்னாச்சு" என்று கேட்க...


இதற்குத் தான் இவ்வளவு நேரம் எதிர்ப்பார்த்தவராய் "அண்ணி நேற்று வினோவை பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு வினோவை ரொம்ப பிடிச்சிருந்தது ஆனால்..."என்று நிறுத்த...


"என்ன சொல்லு?"


"அத பத்தி நான் உங்ககிட்ட சொன்னாலும் உங்களால எதுவுமே செய்ய முடியாது?" என்று சொல்ல...


"இல்ல சுந்தரி என்னால முடிந்ததை கண்டிப்பா செய்வேன்" என்றார்.



"அப்படியா! அண்ணி மாப்பிள்ளை வீட்ல வரதட்சணை கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறாங்க அவங்க எதிர் பார்க்கிற அளவுக்கு நம்மாலள செய்ய முடியாதுன்னு வினோவோட அப்பா சொல்லுறாங்க ஆனால் வினோவுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு நல்லா குடும்பமாவும் இருக்காங்க,நல்ல வேலை இப்படி எல்லாமே நமக்கு ஏத்த மாதிரி இருக்குது அவங்க பணக்காரங்கிறதுனால வரதட்சணை அதிகமாக கேட்குறாங்க அதுக்கு வினோவோட அப்பா ஏற்கனவே மலரோட கல்யாணத்துல வாங்குன கடனே இன்னும் கொடுத்து முடியலை இதுல இன்னும் கடன் வாங்க முடியாது என்று சொல்லி யோசிக்கிறாங்க" என்று சொல்ல...


காமாட்சிக்கும் என்ன செய்வதென்றே தெரிய வில்லை.

"இப்போ சொல்லுங்க அண்ணி உங்களால எதுவும் செய்ய முடியாதுல்ல அதை தான் நான் சொன்னேன் என் பொண்ணுக்கு அவ விருப்பப்படி கல்யாணம் கூட செய்து வைக்க முடியலை" என்று இயலாமையோடு சுந்தரி சொல்ல காமாட்சிக்கும் வருத்தமாக இருந்தது.


அன்றைய மாலை மலர் வேலை முடித்து வர அம்மாவின் முகம் சரியில்லாததை கவனித்தவள் "அம்மா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க "என்று கேட்க...


"அது ஒன்னுமில்லை"

"அம்மா சொல்லுங்க" என்று திரும்பவும் கேட்க...

நேற்று வினோவை பொண்ணு பார்க்க வந்ததிலிருந்து இன்று நடந்த வரை சொல்ல அதைக் கேட்ட மலரும் யோசனையோடு இருந்தாள்.


"அம்மா வினோக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நானும் விரும்புறேன் ஆனால் பண உதவி செய்ய நம்மால முடியாதே ஆபிஸ்ல எதாவது வேலை பார்த்தாவது லோன் போடலாம், ஆனால் ஸ்கூல்ல கிடைக்கிற கொஞ்ச சம்பளத்துல என்ன செய்ய முடியும்?"என்று அவள் கவலையோடு சொல்ல...


"மலர் எனக்கும் அதே யோசனையாகத் தான் இருக்கு என்ன செய்ய? எதாவது கண்டிப்பா ஒரு வழி கிடைக்கும்" என்றார்.


மறுநாள் மலரின் முகமோ சரியில்லை.அம்மா சொன்னவற்றை தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.தேவி போகும் வழியினில் கேட்க... நடந்தவற்றை சொன்னாள் மலர்.


தேவி கோபத்தோடு மலரிடம் "உன்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை அதை பற்றி கொஞ்சமாவது யோசிச்சியா? அதை விட்டுட்டு பணத்தைப் பற்றி யோசிக்கிற"என்று கேட்க...


"விடு தேவி இப்போ நான் அதை பற்றி எல்லாம் யோசிக்கலை வினோக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும் என்ற எண்ணம் தான் இருக்கு"

"இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்லு எப்பவும் அவங்க நல்லதை மட்டும் யோசி சுந்தரி சித்தி மட்டும் என் கையில மாட்டுச்சு அவ்வளவு தான்"என்றவள்


அவளது ஆழ்ந்த யோசனைக் கண்டு "சரி விடு மலரு ரொம்ப யோசிக்காதே! எல்லாம் நல்ல படியா நடக்கும்னு நம்பு" என்றாள்.


தோழிக்கு" ம்ம்ம்ம் ...."என்ற பதில் அளித்தவளுக்கு மனதிலோ ஆயிரம் கேள்விகள் தோன்றியதற்கு பதில் தருவோர் எவருமில்லை.


ஆபிஸில் மலர் தனது வேலையை செய்ய கதிருக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை. 'அவள் ஒரு முறையேனும் தன்னை பார்க்க மாட்டாளா? தன்னைக் கண்டு ஒரு வார்த்தை பேச மாட்டாளா?' என்று ஏங்கியவனுக்கு பதில் என்னவோ இல்லை என்று தான் வந்தது.


அவனும் தான் வந்ததை அவனும் அவளோடு உடன் இருப்பதை அவளுக்கு அறிவிக்க லேசாக குரலை செருமிக் காட்டினான்.அவள் திரும்புவதாகவே இல்லை.சரி போன் பேசுவது போல் பாவனை செய்து கத்தி பேசினான்.அதற்கும் எந்த வித பதிலுமில்லை பொறுக்க முடியாமல் அவள் அருகே செல்ல கண்கள் இரண்டும் சிவந்திருக்க கண்டு திடுக்கிட்டவன் "கலை என்னாச்சு?" என்று கேட்க...


அவள் ஆழ்ந்த யோசனையில் இருக்க அவன் கேட்டது கவனிக்காமல் இருப்பதை உணர்ந்து லேசாக அவளை தட்டி "கலை என்னாச்சு?"என்று கேட்டு அவள் அருகில் சேரை போட்டு அமர்ந்து கேட்க...

"அது...அது.... கதிர் நீங்க எப்போ வந்தீங்க?"


"நான் இந்த உலகத்துக்கு வந்து இருபத்தி எட்டு வருஷமாச்சு நீ என்ன இப்போ தான் கேட்கிற" என்று சீரியஸாக பதில் சொல்ல... தன் சோகத்தை மறைத்தவாறே லேசாக சிரித்தபடி "போங்க கதிர் நான் என்ன கேட்கிறேன்? நீங்க என்ன பதில் சொல்லுறீங்க" என்று கேட்க...

"ஆமாம் நானும் கலை கலை என்று கூப்பிடுறேன் பதில் வர மாட்டேங்குது அப்படி என்ன யோசனை?"


"அது ஒன்றுமில்லை"


"நீ ஒன்னுமில்லை என்று சொல்லுற ஆனால் உன் முகமும் கண்களும் சொல்லி விடுகிறது ஏதோ இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி விடுகிறது கலை" என்றதும் அவள் தன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.


கலையின் கைகளை பிடித்து தன் கையில் வைத்துக் கொண்டவன் "இங்கே பாரு கலை சில விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருப்பதை விட யார்கிட்டயாவது சொன்னாலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்"என்று சொல்ல...


"கதிர் நான் எப்பவும் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக் கொள்ள மாட்டேன் ஏன் என்றால்? என்னை யாராவது அதை என் பலகீனமா நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்"


"ம்ம்ம் .... சரி தான் ஆனால் என்னை நம்பி எப்படி உன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை சொன்னியோ அதே மாதிரி உன் மேல நம்பிக்கை வைத்து என்கிட்ட சொல்லு நீ நினைக்கிற மாதிரி எந்த வித தப்பும் நடக்காது" என்றான்.கதிர் சொன்னதும் உண்மையாக இருக்க தன் மனதிலுள்ளதை நேற்று நடந்ததை அவனிடம் சொன்னாள்.



அனைத்தையும் கேட்டவன் "சரி .... கலை இப்போ உன்னால என்ன செய்ய முடியும்னு நினைக்கிறே?"

"என்னோட கேள்வி எல்லாம் இது தான் பொண்ணு பார்க்க வந்ததை பற்றி சித்தி சொல்லலை பரவாயில்லை ஆனால் சித்தப்பாவும் வினோவும் சொல்லாம இருந்தது தான் எனக்கு வருத்தமா இருக்குது"


"ம்ம்ம் நீ சொன்ன படி பார்த்த அவங்க ரெண்டுபேரும் ஏன் உன்கிட்ட சொல்லலை என்றால் அக்கா திருமணம் செய்யாமல் இருக்கும் போது தான் மட்டும் குடும்பத்தோடு வாழ்வது வினோவுக்கு பிடிக்காமல் இருந்ததால் அவங்க சொல்லாமல் இருக்கலாம் இதே தான் உன் சித்தப்பாவுடைய நிலைமையாக இருக்கலாம்" என்றான்.


அவன் சொன்னதை கேட்டு ..."நீங்க சொன்னது உண்மை தான் கதிர் நான் தப்பா நினைச்சு அழுதிட்டு இருந்தேன் சித்தப்பாவும் வினோவும் என்கிட்ட எதுவும் சொல்ல விரும்பலைன்னு தப்பா நினைத்தேன்"



"ரொம்ப தாங்ஸ் கதிர் என்னோட குழப்பத்தை தீர்த்து விட்டீங்க "என்றவள் புன்னகையோடு அவனுடைய கைகளை இருக்க அழுத்தியவள் திரும்ப ஒரு முறை தாங்ஸ் என்று கண்களால சொல்லிச் செல்ல கதிரோ மனதினுள் 'உன்னோட பிரச்சினைக்கு என்னால் உதவ முடியும் கலை ஆனால் எப்படி உதவி செய்ய தான் தெரியலை கலை உன்னோட ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான்' மனதோடு.....


இங்கே சுந்தரி "அண்ணி நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை பற்றி சொல்ல வேண்டும்"


"சொல்லு சுந்தரி"


"நம்ம மலருக்கு ஏற்கனவே பேசினோம்ல தீபக் அந்த தம்பி கொஞ்ச நாளாவே என்கிட்ட வந்து மலரை தனக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேட்கிறாங்க நான் செய்தது தப்பு தான் மன்னிச்சு ஏத்துக்கோங்கன்னு வந்து ஒரே கெஞ்சுறாங்க"என்று சொல்ல காமாட்சி எந்த வித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் இருக்க சுந்தரி தொடர்ந்தார்.


"நீ ஒத்துக் கொண்டால் மலரும் ஒத்துக் கொள்வாள் அப்படி என்றால் மலருக்கும் வினோவுக்கும் ஒரே மேடையில் திருமணத்தை முடிச்சிடலாம்
ஏன்னா கல்யாண செலவு மொத்தத்தையும் தீபக்கே ஏத்துக்கிறேன்னு சொல்லுறாரு அப்புறம் வினோவுடைய கல்யாணத்துக்கு தேவைப்படுற பணத்தை தான் தருவதாகவும் உங்களால் எப்ப முடியுமோ அப்பொழுது திரும்ப தருவதாகவும் சொல்லுறாங்க நீங்க என்ன சொல்லுறீங்க அண்ணி இந்த காலத்துல யாருக்கு இவ்வளவு பெரிய மனசு இருக்கு சொல்லுங்க ஏதோ ஒரு தப்பு நடந்ததால எல்லோரையும் தப்பா நினைக்க முடியாதுல்ல அதான் சொல்றேன்.அண்ணி நீங்க மலரை பற்றி கவலை படுவது எனக்கு தெரியாமலா இருக்கு.நீங்க மட்டும் ம்ம்ம் என்று ஒருவார்த்தை சொல்லுங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.


அவள் சொன்னதை கேட்டு யோசித்தவாறே காமாட்சி இருக்க "சுந்தரி கொஞ்சம் டைம் கொடு"நான் யோசிச்சு சொல்றேன் என்றார்.


"அண்ணி ஒன்னே ஒன்னு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோங்க நீங்க சொல்ற பதில் வைத்து தான் வினோவோட வாழ்க்கையும் இருக்கு 'என்றாள்.


காமாட்சியை சொல்லாமல் சொல்லி மிரட்டி சென்றாள் சுந்தரி.



ஒரு வாரம் செல்ல ..... வினோவை பொண்ணு பார்த்து விட்டு சென்ற மாப்பிள்ளை வீட்டிலிருந்து போன் வர அட்டன் செய்து கேட்க "என்ன வென்று கேட்டபொழுது எப்போது நிச்சயம் வைக்கலாம்" என்று கேட்க... அதற்கு சங்கர் வீட்டில் உள்ளவர்களிடம் பேசி விட்டு சொல்வதாக பதில் சொன்னார் சங்கர்.இங்கே கதிர் தன் காதலை கலையுடன் சொல்வதற்கான நாளை எதிர்பார்த்திருந்தான்.


(தொடரும்)
 
Top