கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

14. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 14


விராட் நினைத்தது போல சூரஜும் செல்வியும் தினமும் எல்லார் முன்னிலையலும் வெளிப்படையாக காதல் நாடகத்தை நடத்தவில்லை. காதல் நாடகம் நடத்தி அவனை அவஸ்த்தை படுத்தவில்லை. வீட்டில் திருமணத்தை எதிர்பார்த்து தம்பி ஒருவன் இருக்கிறான். பாபி பாபி என்று தன்னையே சுற்றிச் சுற்றி வரும் பக்கத்து வீட்டு டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிறுமி வந்து போய்க் கொண்டிருக்கிறாள். அதனால் பார்வையில் கண்ணியம். பேச்சில் கண்ணியம். நடத்தையில் கண்ணியம் என்று இருவரும் வாழ்வதைப் பார்த்த விராட்டுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அதற்காக அவர்கள் காதல் புரியாமல் இல்லை. அதை தங்கள் அறையோடு அளவோடு நிறுத்திக் கொண்டார்கள்.

நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது.

அன்று இரவு உணவு உண்டபின் ஹாலில் அமர்ந்து சூரஜும் செல்வியும் ஊருக்குப் போவதற்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்ட பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். விராட் அவர்களருகில் வந்து அமர்ந்தான். செல்வியிடம் கேட்டான்.

"பாபி! ஆனந்தியோட இன்ட்ரஸ்ட்ஸ் என்ன? அவளுக்கு என்ன பிடிக்கும்?"

"எதுக்கு கேக்கறீங்க விராட்?"

"அவளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கலாம்னு!"

"விராட்! நான் சொல்றேன்." சூரஜ் சொன்னான்.

"உனக்கு தெரியுமா பையா!"

"ம். நல்லா தெரியும்!"

"உங்களுக்கு எப்டி அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரியும்?" ஒரு மாதிரி கண்ணை உருட்டி கேட்டாள்.

"ஆமா டமில்! எனக்கு தெரியும்!" கண் சிமிட்டிச் சொன்னான்.

"அதான் கேட்டேன்? உங்களுக்கு எப்டி தெரியும்?" முறைத்தாள்.

"ஐயோ! பாபி! உங்க சண்டைய அப்றம் வெச்சுக்கோங்க! பையா நீ சொல்லு!" பரபரப்பானான்.

"நீ இரு டமில்! டேய்! இங்க கேளுடா! அவளுக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு எனக்குத் தெரியும்!" சிரித்துக் கொண்டே சொன்னான்.

இவன் ஏன் இப்டி சிரிக்கறான்! என்று தன் போலீஸ் புத்தியை தூண்டி விட்டான். அவனுக்கு எளிதாக விடை கிடைத்தது.

"நீ ஒண்ணும் சொல்ல வேணாம். எனக்கே தெரியும்!" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.

"என்னது?" செல்வி கேட்டாள்.

"அத அவனே சொல்வான்!" என்று கோபமாய் எழுந்தவனை கையைப் பிடித்து அமர வைத்தான் சூரஜ்.

"டேய்! உக்காருடா! கோபப்படாத! டமில் நீ சொல்லு!"

"நான் என்ன சொல்லணும்? உங்களுக்குதானே தெரியும்னு சொன்னீங்க?"

"ஐயோ பாபி! அவன் என்ன தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்றான்!" கடுகடுத்தான்.

சூரஜ் செல்வியைப் பார்த்து அசடு வழிய விராட் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

"சரி! போதும்! ரொம்ப அடிச்சுக்காதீங்க! தலை வலிக்கும்!" செல்வி விராட்டைப் பார்த்து சொன்னாள்.

"என்ன?"

"உங்க அண்ணனையும் என்னையும் நெனச்சு மனசுக்குள்ள உங்க தலையில அடிச்சுகிட்டீங்கல்ல! அதான் சொன்னேன். ரொம்ப அடிச்சுக்காதீங்க!"

"அதெப்படி உங்களுக்கு தெரியும்!" கண்ணை விரித்து கேட்டான்.

"அதான் உங்க முகத்த இப்டி கடுகடுன்னு வெச்சுக்கிட்டு எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி கோவமா பாக்கறீங்களே!"

"சரி! சரி! பாபி! ப்ளீஸ் சொல்லுங்க பாபி!"

"அவளுக்கு ஆர்ட்ஸ் அன் க்ராஃப்ட்ஸ்ல பயங்கர இன்ட்ரஸ்ட் உண்டு. அழகுணர்ச்சி ஜாஸ்த்தி! கலர் சென்ஸ் ஜாஸ்த்தி! சுருக்கமா சொல்லணும்னா இந்த உலகத்தில எது அழகா இருந்தாலும் அவளுக்கு பிடிக்கும்."

"ஓ! அதனாலதான் அவளுக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு!" விராட் பெருமையுடன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டான். செல்வியும் சூரஜும் சிரித்தனர்.

"ம். அப்றம்!" விராட் கேட்டான்.

"நான் என்ன கதையா சொல்றேன்?"

"ப்ளீஸ் சொல்லுங்க பாபி!"

"அவ பயங்கர டேலன்டட்! அவ தென்றல் மாதிரி மென்மையானவ! ஆனா புயல் மாதிரி வேகமும் உண்டு! ரெண்டு எக்ஸ்ட்ரீமும் அவகிட்ட இருக்கு!"

"என்ன பாபி கொழப்பறீங்க? சரி உங்களவிட டேலன்டடா?"

"என்கிட்ட இருக்கறது எல்லாம் ஆட்னரி (Ordinary) டேலன்ட்ஸ்! அவகிட்ட இருக்கறது எக்ஸ்ட்ராடினரி (extraordinary) டேலன்ட்ஸ்! நான் பண்ற எல்லாத்தையும் அவளால பண்ண முடியும்! ஆனா அவ பண்ற எதையும் என்னால பண்ணவே முடியாது!"

"நான் உங்களப் பாத்தே மலைச்சுப் போய் இருக்கேன். அவ உங்களவிட டேலன்டட்ன்னா, அவ பக்கத்தில என்னால நிக்க கூட முடியாது போலிருக்கே?"

"விராட்! அவளுக்கு ஏத்த பெர்ஃபக்ட் மேட்ச் நீங்கதான்! உங்களுக்கு அதுல டௌட் எல்லாம் வேண்டாம்! அவ பல விஷயம் தெரிஞ்சிகிட்டிருக்கா! அதுல தன் திறமைய வளத்துக்கிட்டு இருக்கா! ஒரு போலீஸ்காரனுக்கு ஏத்த மனைவியா அவளால இருக்க முடியும்!"

"தேங்க்யூ பாபி!"

"இருங்க! இருங்க! இன்னும் நான் சொல்லி முடிக்கல! ஒரு விஷயம் இருக்கு! அவளுக்குப் பிடிக்காதது! ஆனா அது உங்க சுபாவம்!"

"என்ன பாபி!"

"அவ கிட்ட யாராவது கோபப்பட்டு கத்தினா அதோட அவ அவங்கள திரும்பிக் கூட பாக்க மாட்டா!"

"ஹேங்! ஐயையோ! நான் காலி!"

"ஹூம்! அதுதான் எங்க எல்லார்க்கும் பயமா இருக்கு! அவ அடங்கிப் போற ஒரே ஆளு, ஆனந்த் மட்டும்தான்!"

"அவன் கத்தினா ரெண்டு நாள்ல மன்னிச்சுடுவான்னா மத்தவங்க யாரையும் லேசில மன்னிக்கவே மாட்டா! எங்க சித்தப்பாவுக்கே இந்த நிலைமைதான்."

"அவ கிட்ட கோவமே படக்கூடாதா!"

"கோவப்படலாம்! கத்தக்கூடாது!"

"அப்ப எப்டி கோவத்த காட்றது?"

"எதுக்கு காட்டனும்?"

"அவ மேல கோவம் வந்தா அவகிட்டதானே காட்டனும்!"

"அவ மேல உங்களுக்கு கோவமே வராது!"

"அது எப்டி சொல்றீங்க!"

"அவ அந்த மாதிரிதான்! யாருக்கும் அவ மேல கோவம் வரவே வராது! வேற எங்கியாவது வந்த கோவத்தக் கூட இவ முகத்தைப் பாத்தா வந்த கோவம் தானா போயிடும். அப்டி கோவமா இருந்து அந்த கோவத்த இவகிட்ட காமிச்சாலும் எந்தப் ப்ரச்சனையுமில்ல! ஆனா அந்த கோவத்துல இவளப் பாத்து கத்தினா நீங்க காலி!"

"ரொம்ப கொழப்பறீங்களே!"

"டேய்! சிம்பிள்டா! அவ கிட்ட உனக்கு கோவம் வராது! வெளிலேந்து கோவம் வந்தா அவ கிட்ட காட்டாத! அந்தமாதிரி வெளிலேந்து கோவம் வந்துதுன்னா அந்த கோவத்த கம்மி பண்ற மருந்து அவதான்னு நெனச்சுக்கோ! புரிதா?" சூரஜ் விளக்கினான்.

"கொஞ்சம் புரியுது! கொஞ்சம் புரில!"

"இங்க பாருங்க விராட்! இப்ப நம்ம வீட்ல ஒரு குழந்தை இருக்குன்னு வெச்சுக்குங்க! நீங்க ட்யூட்டிலேர்ந்து கோவமா வறீங்க! அப்ப அந்த குழந்தைகிட்ட கோவத்த உங்களால காட்டமுடியாதுல்ல! ஆனா அந்த குழந்தையப் பாத்ததும் உங்க கோவம் எல்லாம் பறந்து போயிடும்ல! அப்டிதான்! புரிதா!"

"மொத்தத்தில அவ குழந்தை மாதிரின்னு சொல்றீங்க!"

"இப்டியும் சொல்லலாம்!"

சூரஜ் அவன் காதில் கிசுகிசுத்தான்.

"அதேதான்! கோவம் வந்தா அவள கட்டிபிடிச்சு கொஞ்சிடு! கோவமும் போய்டும்! ஜாலியும் வந்திடும்!" செல்விக்கு கேட்காத மாதிரி சூரஜ் சொன்னான்.

"ஐயோ! நீ வேற! போடா!" விராட் சிரித்துக் கொண்டான்.

"சரி! ஆனா என்னோட மெயின் கேள்விக்கு ஆன்ஸரே கிடைக்கல!"

"என்ன கேள்வி?"

"அவளுக்கு என்ன கிஃப்ட் வாங்கலாம்?"

"டேய்! டமில்தான் சொன்னால்ல! அழகா இருக்கறது எல்லாம் பிடிக்கும்னு! எதையாவது வாங்கிக் குடு!"

"விராட் அவளுக்கு பிடிக்காதது எதுன்னு சொன்னேன். பிடிச்சது சிலதுதான் சொன்னேன். அவளோட ரெண்டு மூணு டேலன்ட் ரொம்ப ஸ்பெஷல்! அத அவதான் உங்க கிட்ட சொல்வேன்னு சொல்லியிருக்கா! இல்லன்னா நீங்களே உங்க போலீஸ் புத்திய யூஸ் பண்ணி கண்டுபிடிங்க!"

"எப்டி பாபி!"

"கண்டுபிடிங்க! இது ஒரு புதிர்! இல்லனா நீங்க போலீசே இல்ல!"

"சரி பாபி! நான் கண்டு பிடிக்கறேன்!" என்று எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றான். தன் மடிக்கணிணியை ஆன் செய்தான். செல்வி கூறியவற்றை வைத்து ஆர்ட்ஸ் அன் க்ராஃப்ட்ஸ் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தான்.

வேலையை முடித்துக் கொண்டு சூரஜும் செல்வியும் எழுந்தனர். கௌரியும் தீன்தயாளும் ஏற்கனவே போய் படுத்துவிட்டனர். வாசல் கதவை அடைத்து விளக்கை அணைத்துவிட்டு சென்று படுத்தனர்.

"நீ சொன்னல்ல! நம்ம வீட்ல ஒரு குழந்தை இருந்துதுன்னா அப்டீன்னு!" செல்வியை அணைத்துக் கொண்டு சூரஜ் கேட்டான்.

"ம்! ஆமாங்க!" நாளைக்கு வேலைக்கு எந்த ட்ரஸஸை போடலாம் என்று யோசித்துக் கொண்டே பதில் சொன்னாள்.

"அதுக்கு ஏதாவது முயற்சி பண்லாமா?" அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து மூச்சிழுத்தான்.

"என்ன? என்னது?" அவனைப் பார்த்து கேட்டாள்.

"நம்ம குழந்தைக்கு முயற்சி எதாவது பண்லாமான்னு கேட்டேன்!" கண்களில் காதலுடன் கேட்டான்.

"அது.. ம்.. பண்.. லா.. மே!" கேள்வி புரிந்து அவன் பார்வை புரிந்து மெதுவாய் அதே காதலுடன் பதில் சொன்னாள்.

"மை டியர் டமில்! மை லவ்!" அவளை கட்டித் தழுவினான். இருவரும் ஒரு புதிய உலகைப் படைக்க தங்கள் காதல் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தை அழகான கவிதையாய் எழுதத் தொடங்கினர்.


**********


மறுநாள் மாலை ட்யூட்டியிலிருந்து வரும் போதே உற்சாகமாய் வந்தான் விராட்!

"பாபி! பாபி!"

ட்யூஷன் முடிந்து சமையலறையில் இரவு உணவுக்காக மாவு பிசைந்து கொண்டிருந்த செல்வி அவனது பரபரப்பான குரலைக் கேட்டு பதறிப் போய் அவசரமாக ஓடி வந்தாள்.

"என்ன விராட்! என்னாச்சு?"

பாதி பிசைந்த மாவு கையுடன் அரக்கப் பறக்க வந்தவளைக் கண்டதும்,

"ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! பயப்படாதீங்க!"

"பின்ன அப்டி கூப்டீங்களே! பயப்படாம எப்டி இருக்கறது?" செல்லமாய் கோபித்துக் கொண்டே சமைலறைக்குள் சென்று மறுபடியும் மாவை கவனித்தாள். ஷூ ஸாக்ஸை கழற்றிவிட்டு அவளுடன் சமையலறையில் நுழைந்தான்.

"சரி! சொல்லுங்க! எதுக்கு கூப்டீங்க!"

"நான் கண்டுபிடிச்சுட்டேன்!"

"என்ன கண்டுபிடிச்சீங்க?"

"ஆனந்தியோட டேலன்ட்ஸ் என்னன்னு கண்டுபிடிச்சுட்டேன்!"

"நிஜமாவா! க்ரேட் விராட்! சூப்பர்! எப்டி கண்டுபிடிச்சீங்க?"

"நீங்கதானே சொன்னீங்க! போலீஸ் மூளைய யூஸ் பண்ணனும்னு! அதான்! கொஞ்சம் கசக்கிப் பிழிஞ்சு கண்டுபிடிச்சேன்!"

மாவைப் பிசைந்து முடித்து மூடி வைத்துவிட்டு தேநீர் கலந்தாள்.

"தட்ஸ் குட்! சரி! சொல்லுங்க! அது கரெக்ட்டான்னு பாக்கலாம்!"

"அவ ஒரு ஸ்டோரி டெல்லர்! கரெக்ட்டா?" செல்வி தந்த தேநீரை வாங்கிக் கொண்டே சொன்னான்.

"கரெக்ட்! நீங்க போலீஸ்ன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க விராட்!" தன்னுடைய தேநீரை கையில் எடுத்துக் கொண்டாள்.

"என்ன ப்ரூவ் பண்ணினான்!?" கேட்டுக் கொண்டே வேலை முடிந்து ஆஃபீஸிருந்து வந்தவன் சமையல் அறையில் குரல் கேட்கவே சமையல் அறைக்குள்ளே வந்தான் சூரஜ்! அவனிடமும் தேநீரை கொடுத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள். பின்னாலேயே சகோதரர்கள் இருவரும் வந்தனர். மூவரும் சோபாவில் அமர்ந்தனர்.

"பையா! நான் ஆனந்தியோட டேலன்ட்ஸ் என்னன்னு கண்டுபிடிச்சுட்டேன்!"

"இஸ் இட்! எப்டி!"

"அதான்! போலீஸ் மூளை!"

"ஹூம்! ஏற்கனவே ரொம்ப அமக்களம் பண்ணுவான்! இப்ப போலீஸ் ஆனதுலேந்து இவன் தொல்ல தாங்கலயே!"

"சும்மா இருங்க! அவரே இன்னிக்குதான் கோவமில்லாம ஏதோ சந்தோஷமா சொல்ல வந்திருக்காரு! அவரப் போய் கடுப்படிச்சிகிட்டு! நீங்க சொல்லுங்க விராட்!"

"என்னடா! டமில் உனக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றா!"

"ஏன்னா அவங்க என்னோட பாபி!" சொல்லிவிட்டு சிரித்தான். கூட மற்ற இருவரும் சிரித்தனர்.

"சரி! ஆனந்தியோட டேலன்ட் என்ன?"

"அவ ஒரு ஸ்டோரி டெல்லர்!"

"அப்டீன்னா?!" சூரஜ் கேட்டான்.

"சின்ன குழந்தைகளுக்கு அவங்க ரசிக்கற மாதிரி ஆடி பாடி நடிச்சுகிட்டே கதை சொல்றவங்க! அதுல ஆனந்தி எக்ஸ்பெர்ட்!" செல்வி விளக்கினாள்.

"வெரி இன்ட்ரெஸ்டிங்!" சூரஜ் வியந்தான்.

"நிறைய ஷோஸ் பண்ணிருக்கா! அதுல கிடைக்கிற வருமானத்தில அவங்க வீட்டு பக்கத்தில இருக்கற, படிக்க ஆசைப்படற ஏழைக் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிகிட்டு இருக்கா! இப்ப வரைக்கும் அம்பது பசங்க அவளால படிப்பு பாதியில நிக்காம படிச்சுகிட்டு இருக்காங்க!" செல்வி சொன்னாள்.

"திஸ் இஸ் ரியலி க்ரேட்! ஆனந்திக்கு ரொம்ப நல்ல மனசு!"

"ஆமாண்ணா! தெரிஞ்சுகிட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது."

"நான் நேத்து சொன்னேன்ல! அவ மேல யாருக்கும் கோவமே வராதுன்னு! இப்ப பாருங்க! உங்க முகம் எப்டி பூ மாதிரி மலர்ந்து இருக்குன்னு! அவ உங்க லைஃப் கலர்ஃபுல்லா மாத்திடுவா விராட்! ஆனா அவளுக்கு இன்னும் நிறைய டேலன்ட்ஸ் இருக்கு!"

"அப்டியா!" சூரஜுக்கும் விராட்டுக்கும் வியப்பு!

"நீங்க பாக்கதானே போறீங்க!"

"சரி சொல்லுங்க எப்டி கண்டு பிடிச்சீங்க?"

"முதல்ல இன்டர்நெட்ல ஆர்ட்ஸ் அன் க்ராப்ட்ஸ்ன்னு தான் தேடினேன். அப்றம் நீங்க பேசினதெல்லாம் திரும்ப திரும்ப யோசிச்சேன்! குழந்தை, கலர்ஃபுல், இப்டி வார்த்தைகள்! திடீர்ன்னு குழந்தைகளுக்கு பிடிச்சதெல்லாம் போட்டு தேடும்போது கதைகள்ன்னு தேடினேன். அப்பதான் ஆனந்தி ஸ்டோரி டெல்லர் அப்டீன்னு வந்துது! அத ஓபன் பண்ணினேன். ஆனந்தி அழகா சிரிச்சுகிட்டு இருக்கா!"

"சூப்பர் விராட்! நான் குடுத்த க்ளூஸ் வேஸ்ட் ஆகல! தேங்க்ஸ் விராட்!"

"நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்! க்ளூஸ் குடுத்து என் மானத்த காப்பாத்தினீங்க!"

"ஆக்சுவலா அவர் கிட்ட சொல்லாத அக்கான்னுதான் ஆனந்தி சொல்லிருந்தா! நீங்க எனக்கு வெறும் கொழுந்தனா இருந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன்! ஆனா நீங்க என் ஃப்ரண்டாச்சே! ஃப்ரண்ட எப்டி விட்டு குடுக்க முடியும்! தங்கையையும் விடக்கூடாது! ஃப்ரண்டுக்கும் ஹெல்ப் பண்ணனும்! அதான் அப்டி க்ளூ குடுத்தேன்! நீங்க புத்திசாலிதான்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க!"

சூரஜ் விராட்டை தட்டிக் கொடுத்தான்.

"விராட்! ஆனந்தி என்கிட்ட இன்ணொணும் சொன்னா! ஒரு வேள நீங்க அவளப்பத்தி கண்டு பிடிச்சீங்கன்னா, ஊருக்கு வரும் போது குழந்தைகளுக்கு கொஞ்சம் கிஃப்ட்ஸ் வாங்கி வரச்சொன்னா! அவ அதுக்கு காசு குடுத்திடறேன்னு சொன்னா! குழந்தைங்க நீங்க ஏதாவது குடுப்பீங்கன்னு எதிர்பாத்து இருப்பாங்க! ஸோ நீங்க தர மாதிரி இருக்கணும்! அதனால நீ மும்பைல வாங்குக்கா! நான் காசு தரேன்னா!"

"நிச்சயமா பாபி! கிஃப்ட்ஸ் வாங்கிடலாம்! ஆனா அவ ஏன் காசு தரணும்! நானே தரேன்! நான் தர கிஃப்ட்! நான்தான் காசு தரணும்!"

"அதுதான் நானும் நெனச்சேன்! அவ தரவேண்டாம்! நான் தரலாம்னு நெனச்சேன்!"

"நானும் தரேன்! நாளைக்கு ஈவ்னிங் போய் வாங்கிடலாம்! அப்பதான் பேக் பண்ண முடியும்!" சூரஜ் சொன்னான்.

"சரி! ரொம்ப நேரமா யூனிஃபார்ம்லயே இருக்கீங்க! போய் குளிச்சிட்டு வாங்க! நீங்களும் போங்க சூரஜ்! நான் டிபன் ரெடி பண்றேன்!" இருவரையும் அனுப்பிவிட்டு சமையலை கவனிக்கப் போனாள்.

விராட்டுக்கு உள்ளம் இங்கு இல்லவேயில்லை! ஆனந்தியின் காதல், அவளுடைய நல்ல குணங்கள், மென்மையான மனம், என்று ஆனந்தியின் நினைப்பு ஒரு பக்கம் இழுக்க, செல்வி தன்னை ஒரு நண்பன் என்று கூறி தன்னை மேன்மையாய் நினைத்திருப்பது இன்னொரு பக்கம் இழுத்தது! முதல்ல தம்பின்னாங்க! இப்ப ஃப்ரண்டுன்னு செல்றாங்க! இவங்க என்ன எவ்ளோ உயர்வா நினைச்சிருக்காங்க! இப்டி ஒரு நல்ல குணம் இருக்கறவங்க ஏன் அப்டி பண்ணாங்க.. அது மட்டும் புரியாத புதிராவே இருக்கே? என்று நினைத்துக் கொண்டான்.

சூரஜ் மிகவும் மகிழ்ச்சியான மன நிலையில் இருந்தான். என் தம்பிய அவ தம்பியா நெனக்கிறா! இன்னிக்கு அவ தங்கைக்காக பாக்காம என் தம்பிக்காக பாக்கறா! அவன ஒரு ஃப்ரண்டா நெனக்கிறான்னா அவளக்கு எவ்ளோ நல்ல மனசு இருக்கணும். டமில் யூ ஆர் க்ரேட்! ஐ லவ் யூ டா செல்லம்! என்று நினைத்தான்.

இரவு உணவின் போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். அப்போது அம்மாவிடமும் அப்பாவிடமும் ஆனந்தியின் நற்குணங்களைப் பற்றி விராட் தெரிவித்தான். பெற்றவர்கள் இருவருக்கும் மனம் மிகவும் மகிழ்ந்தது.

கௌரி செல்விக்கு போட்டது போலவே ஆனந்திக்காகவும் ஒரு செயின் எடுத்து வைத்துக் கொண்டாள்.

விராட் குழந்தைகளுக்கு கிஃப்ட் வாங்கிக் கொண்டான். ஆனந்திக்காக ஒரு பென்டென்ட் வாங்கிக் கொண்டான். அவளது கதை சொல்லும் நிகழ்ச்சிகளுகாக ஒரு முகமூடி போன்ற ஸ்கார்ஃப் ஒன்றையும் வாங்கினான்.

சூரஜ் ஊரிலிருந்து வரும்போது அனைவருக்கும் வாங்கி வந்திருந்த பரிசுகளை பத்திரமாக பேக் செய்து எடுத்துக் கொண்டாள் செல்வி. அனைவரும் விராட்டின் நிச்சயத்துக்கு தயாராகி விட்டனர். தீபிகாவும் தன் சின்ன பாபிக்காக ஒரு பரிசு தயார் செய்து எடுத்துக் கொண்டாள்.



மனதிற்கு இனியவளின் மனம் தனில்
இடம் பிடித்து ஆட்சி செய்யப்
பரிசொன்றை வாங்க எண்ணி
மன்னனவன் தவித்து நின்றான்!

அண்ணியின் உதவி வேண்டி
அவன் நிற்க செல்வியுமே
தங்கையின் தங்கப் பண்புகளை
தன்மையுடன் எடுத்துச் சொன்னாள்!

திறமைகளின் பன்முக மேடையவள்
அன்பைக் கொட்டும் அரக்கியுமே!
சினம் கொண்டால் சீறிடுவாள்!
சிறுமை கண்டு பொங்கிடுவாள்!

மலர் போன்ற மென்மை மனதில்!
புயல் போன்ற வேகம் செயலில்!
தங்கையின் இரசனையைக் கண்டறிய
கை காட்டித் தூண்டி விட்டாள்!

கதை சொல்லும் திறமைக்காரி!
ஏழைக் குழந்தைகளின் கல்விப்பசி
தீர்த்து வைக்கப் பொருளுதவி
அள்ளி வழங்கும் கருணைக்காரி!

தன்னவளின் பெருமைகளைக்
கண்டுணர்ந்து மகிழ்ந்து நின்றான்!
தங்க மகளின் சிங்கக்குட்டிகளுக்கு
பரிசுகளை வாங்கிக் குவித்தான்!

காதலில் நெகிழ்ந்தவனின் இதயம்
காதலியைக் காணத் துடிக்கையில்
அண்ணனும் அண்ணியும் மனதில்
ஆனந்தம் கொண்டு நின்றனரே!





- C. புவனா



- காதலின் மொழி என்ன?









 
Top