Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 15.
விராட்டின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வியின் பெற்றோர் இரண்டு நாள் முன்னரே திருச்சி சென்றனர். லட்சுமி அம்மாளும் உடன் சென்றார். தஞ்சை கிராமத்திலிருந்து ஆனந்தியின் தாத்தா பாட்டியும் வந்து விட்டனர். ஆனந்தன் விழாவுக்கு முதல் நாள் வந்துவிட்டான். வீடே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
விராட் தன் குடும்பத்தாருடன் திருச்சி விமானநிலையம் வந்து இறங்கிய போது ஆனந்தனும் கிரிதரனும் வந்து வரவேற்றனர். அடுத்த அரைமணி நேரத்தில் தீபிகாவும் வந்தாள். அனைவரையும் அழைத்துக் கொண்டு கிரிதரனும் ஆனந்தனும் தங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
அது ஒரு காலனி மாதிரி இருந்தது. அங்கிருந்த வீடுகள் கிட்தட்ட ஒரே மாதிரி இருந்தன. காலனியில் உள்ள குழந்தைகள் எல்லாம் ஆனந்தியின் நண்பர்கள். இவர்கள் வந்து இறங்கியதும் ஹோ வென்று கத்திக் கொண்டு ஆர்ப்பரித்தார்கள்.
பூங்குழலியும் கீர்த்திவாசனும் ஆரத்தி எடுத்து வாய்நிறைய வாங்க வாங்க என்றழைத்து வரவேற்றனர். அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார்கள்.
கௌரி இரண்டு கைகளையும் கூப்பி வாய் நிறைய ராம் ராம் என்று கூறி அனைவரையும் வணங்கி பூங்குழலியின் பெற்றோரின் பாதம் தொட்டு வணங்கினாள். லட்சுமி அம்மாளின் பாதம் தொட்டு வணங்கினாள். தீன்தயாளும் கைகூப்பி பெரியவர்களின் பாதம் தொட்டு வணங்கினார்.
அவர்களைப் பின்பற்றி , சூரஜ், செல்வி, விராட், தீபிகா அனைவரும் பெரியவர்களின் பாதம் தொட்டு வணங்கினார்கள். ஆனந்தனைக் கட்டிக் கொண்டு தன் அன்பைக் காட்டினான் சூரஜ். ஆனந்தன் விராட்டுடன் கைகுலிக்கினான்.
விராட் வான்நீல நிறத்தில் முழுக்கைசட்டை அணிந்து அடர் நீல நிற பேண்ட் அணிந்திருந்தான். சூரஜ் போலவே நல்ல உயரத்தில் ராஜா போல முறுக்கு மீசையுடன் போலீஸ் மிடுக்கும் சேர்ந்ததால் கம்பீரமாக இருந்தான். பார்த்தவர்கள் மயங்கும்படி இருக்கும் தோற்றத்துடன் மாப்பிள்ளையாய் ஆனந்தியின் வீட்டில் வந்து அமர்ந்தான்.
ஏற்கனவே உறவினர்கள் என்பதால் அனைவரும் தயக்கமின்றி பேசிக் கொண்டனர். கௌரி மங்கையிடம் செல்வியைப் பற்றி பெருமையாகச் சொல்லி மங்கையை மனம் குளிரச் செய்தாள். மங்கையும் கிரிதரனும் தமிழ்ச்செல்வியை கொஞ்சி மகிழ்ந்தார்கள். பாட்டிகளும் தாத்தாவும் பேத்தியைப் பார்த்து மனம் நிறைந்தார்கள்.
விராட் ஆனந்தியின் வீட்டைப் பார்த்து அசந்துவிட்டான். அற்புதமாய் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தீபிகா செல்வியிடம் கேட்டாள்.
"பாபி, சூப்பரா அலங்காரம் செஞ்சிருக்காங்களே! ரொம்ப காஸ்ட்லி பெயின்டிங்ஸ் எல்லாம் வாங்கி மாட்டிருக்காங்க! நிச்சயதார்த்த ஃபங்ஷன்க்காகவா?"
"இல்ல சுட்கி! எங்க சித்தி வீடு எப்பவுமே இப்டிதான் இருக்கும்!"
"என்ன?" ஆச்சரியமாய்க் கேட்டது தீபிகா இல்லை! விராட்!
"என்ன பாபி சொல்றீங்க?"
"ஆமா விராட்! எப்பவுமே இப்டி அலங்காரமாதான் இருக்கும்! எல்லாம் ஆனந்தியின் கைவண்ணம்!"
"இந்த பெயின்டிங்கஸ்?" அங்கிருந்த ஆயில் பெயின்டிங்கைப் பார்த்து சூரஜ் கேட்டான்.
"இது மட்டுமில்ல, அதோ அந்த ம்யூரல் பெயின்டிங், அந்த டேஞ்சூர் பெயின்டிங், வாசல்ல இருந்ததே அந்த பாட் பெயின்டிங், மாடிப்படி வளைவுல இருக்கே அந்த க்ளாஸ் பெயின்டிங் எல்லாமே ஆனந்தி வரைஞ்சதுதான்!"
அனைவருமே விழி விரித்தனர். செல்வி தொடர்ந்தாள்.
"சித்தி கட்டியிருக்காங்களே அந்த ஸாரில கூட ஆனந்திதான் ஸ்டோன் வொர்க் பண்ணியிருக்கா! எல்லா ரூம் வாசல்லயும் தொங்கர ஸ்க்ரீன் எல்லாமே அவ பெயின்டிங்தான். அங்கங்க இருக்கற வால் ஹேங்கிங், டோர் ஹேங்கிங் எல்லாமே ஆனந்தி பண்ணினதுதான்!"
"ஓ! மை காட்! இவ்வளவும் ஆனந்தி பண்ணின பெயின்டிங்க்ஸா! பாபி! நான் காலி! அவ முன்னாடி வர தகுதி கூட எனக்கு கிடையாது பாபி! நாம போகலாமா?"
"விராட்! விளையாட்டுக்கு கூட இப்டி பேசாதீங்க! அவளுக்கு நிறைய டேலன்ட்ஸ் இருக்கு! அப்டின்னா அவள மதிக்கற, அவ டேலன்ட்ஸ மதிக்கற ஒருத்தன்தான் அவளுக்கு புருஷனா வரணும்! நீங்க அவளோட டேலன்ட்ஸ மதிக்கறீங்கதானே?"
"ஆமா பாபி! ரியலி ஷீ இஸ் வெரி டேலன்டட்! ஐ ரெஸ்பெக்ட் ஹர் அன் ஹர் டேலன்ட்ஸ் டூ!" விராட் பெருமைப்பட்டான்.
அப்போது குழந்தைகள் பட்டாளம் வீட்டுக்குள் ஓடி வந்தது. குறைந்தது பன்னிரெண்டு அல்லது பதினைந்து குழந்தைகள் வேறு வேறு வயதுடன் இருந்தனர். சூரஜையும் விராட்டையும் மாறி மாறி பார்த்துவிட்டு, தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். இருப்பவர்களிலேயே ரொம்பச் சின்ன பெண் குழந்தை தைரியமாக முன்னால் வந்து சூரஜிடம்,
"நீங்கதான் எங்க ஆனந்தி அக்காவ கய்யாணம் பன்னிக்க போதீங்களா?" என்று மழலை மாறாமல் கேட்டாள்.
சூரஜ் சிரித்துக் கொண்டே அந்தக் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு,
"இல்லம்மா! நான் இல்ல! இதோ என் பக்கத்தில இருக்கார்ல, இவர்தான் உங்க ஆனந்தி அக்காவ கல்யாணம் பண்ணிக்கப் போறார்!" என்று கூறி விட்டு அதன் கன்னத்தில் முத்தமிட்டான்.
"ஐயைய! எச்ச பன்ன கூதாது! உங்கலுக்கு தெதியாதா? உங்க மிஸ் உங்கலுக்கு சொல்லி தல்லையா?" என்று கன்னத்தை தடவிக் கொண்டே இறங்கி ஓடினாள். சூரஜும் செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
ஒரு குழந்தை தைரியமாக கேட்டதும் மற்ற குழந்தைகள் எல்லாம் விராட்டை இன்டர்வ்யூ செய்யத் தொடங்கினர்!
"அங்கிள் உங்க பேர் என்ன?"
"விராட்!"
"ஹை! விராட் கோஹ்லி! எனக்கு பிடிச்ச கிரிகெட்டர்!"
"உங்களுக்கு கிரிகெட் பிடிக்குமா?"
"ம்! பிடிக்குமே!"
"நீங்களும் கிரிகெட்டரா?"
"இல்ல! நான் போலீஸ்!"
போலீஸ் என்றதும் குழந்தைகள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டனர். பிறகு திரும்பவும் கேள்வி கேட்டார்கள்.
"அதனாலதான் பெரிய மீசை வெச்சிருக்கீங்களா?"
சிரித்துக் கொண்டே, "ஆமா!" என்றான்.
"அப்ப அந்த அங்கிளும் போலீசா?"
"இல்லயே!"
"அப்ப ஏன் அந்த அங்கிள் மீசை வெச்சிருக்காரு?"
"அது நீங்க அந்த அங்கிளதான் கேக்கணும்!"
"அங்கிள் நீங்க ஏன் பெரிய மீசை வெச்சிருக்கீங்க?" சூரஜிடம் கேட்டான் ஒரு வாண்டு!
"சும்மாதான்!" சூரஜ் சொன்னான்.
"உங்க பேர் சுரேஷ் ரைனாவா!?"
"இல்ல! சூரஜ்!" சிரித்தான்.
"அவருக்கு மட்டும் கிரிகெட்டர் பேர் வெச்சிருக்கு? உங்களுக்கு ஏன் வெக்கல?"
குழந்தைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி ஏதேதோ கேள்விகள் கேட்க விராட்டும் சூரஜும் சளைக்காமல் பதில் சொன்னார்கள்.
ஆனந்தன் அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தான்.
செல்வியும் தீபிகாவும் எழுந்து ஆனந்தியைப் பார்க்கப் போனார்கள்.
"ஆனந்தி!" செல்வி ஓடிச்சென்று தங்கையைக் கட்டிக் கொண்டாள்.
"அக்கா!" பதிலுக்கு தங்கையும் செல்வியை அணைத்துக் கொண்டாள்.
"சோட்டி பாபி!" என்று அழைத்தபடி செல்வியின் பின்னால் நிற்கும் தீபிகாவைப் பார்த்து ஆனந்தி புன்னகைத்தாள்.
தீபிகா தன்னுடைய பரிசுப் பொருளை ஆனந்தியிடம் தந்தாள். மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். அது ஒரு டிசைனர் குங்குமச்சிமிழ். இன்னொரு சிமிழை எடுத்து,
"செல்வி பாபி! திஸ் இஸ் ஃபார் யூ!" என்று கொடுத்தாள்.
"சோட்டி பாபி! நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க! உங்க பெயின்டிங்ஸ் எல்லாம் சூப்பர்! ஏதோ ஆர்ட் கேலரியில இருக்கற மாதிரி இருக்கு!" தீபிகா ஹிந்தியில் கூறினாள்.
"தேங்க்ஸ்! ஆனா! நீ ஆனந்தின்னே கூப்பிடு!" தீபிகாவிடம் கூறினாள்.
"ஹையோ! சின்ன அண்ணன் கட்டி வெச்சு அடிப்பான்!"
"அவர்ட்ட நான் சொல்றேன்!"
"ம்ஹூம்! ஆனா! நான் வேணா ஆனந்தி பாபின்னு கூப்டவா?"
"சரி! உனக்கு எப்டி கூப்பிடணுமோ அப்டியே கூப்டு!" தீபிகாவிடம் சொல்லி விட்டு செல்வியிடம் ஜாடையாக கேட்டாள்.
அவர் என்னக்கா சொன்னார்?
அவர் உங்க வீட்டப் பாத்து மயங்கிட்டார்! என்று செல்வியும் ஜாடையாகவே சொன்னாள்.
பூங்குழலி தீபிகாவுக்கும் செல்விக்கும் ஆனந்திக்கும் பழச்சாறு கொடுத்துவிட்டு குடித்தபின் ஆனந்தியை அழைத்துக் கொண்டு போகலாம் என்று கூறினாள். மூவரும் பழச்சாறு பருகினார்கள். ஆனந்திக்கு படபடப்பாய் இருந்தது. செல்வியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
"வா ஆனந்தி! விராட் உன்னப் பாக்க துடிச்சிகிட்டு இருக்கார்! இன்னும் லேட் பண்ணினா அவரே எழுந்து உள்ள வந்துடுவார்!" என்று செல்வி சொல்லவும் ஆனந்தியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
ஆனந்தி கத்தரிப்பூ நிறத்தில் சிவப்பு பார்டர் கொண்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலையுடுத்தி சிவப்பு நிறத்தில் பட்டு டிசைனர் ப்ளவுஸ் அணிந்திருந்தாள். புடவைக்கு மேட்சாக அணிகலன்கள் யாவும் கச்சிதமாக அணிந்திருந்தாள். தலையைப் பின்னி மல்லிச்சரமும் கனகாம்பரச் சரமும் வைத்திருந்தாள். அவளுடைய நீண்ட ஜடை அவள் மெதுவாய் நடக்க அழகாய் அசைந்தது. காலில் கொலுசு செல்லமாய் சிணுங்கி அவள் வருவதை விராட்டுக்கு தெரிவித்தது.
ஆனந்தி அன்ன நடை நடந்து வந்து கௌரி தீனதயாள் தம்பதியின் காலில் விழுந்து வணங்கினாள். சூரஜ் செல்வியின் காலில் விழுந்து வணங்கினாள். விராட்டின் காலிலும் விழுந்து வணங்கினாள். கௌரி அவளைத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டாள்.
விராட் ஆனந்தியைப் பார்த்ததும் மயங்கியே விட்டான். மை காட்! இவ என்னோட தேவதை! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
"நீ வரைஞ்ச படம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்மா! நீயும் ரொம்ப அழகா இருக்க!" என்று கௌரி ஹிந்தியில் கூறினாள்.
தீன்தயாள் ஆனந்தியை கூப்பிட்டு ஆயில் பெயின்டிங் நல்லா இருக்கு என்று சைகை காட்டினார். அவள் அவரிடம் தேங்க்ஸ் என்று சைகை காட்டினாள். அவள் சைகை பாஷை பேசவே, அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார். அவள் ஏதோ சொல்ல, அவர் ஏதோ கேட்க இருவரும் பேசுவதை சூரஜும் விராட்டும் தீபிகாவும் கௌரியும் ஆச்சரியமாய் பார்த்தனர்.
"அப்பா பேசறது புரியுதா?" விராட் ஆனந்தியிடம் கேட்டான்.
"ம்."
"என்ன சொல்றார்?" இது தீபிகா.
"அந்த பெயின்டிங்ல ரெட் கலர்க்கு பதிலா டார்க் மெரூன் குடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னார்."
"அதுக்கு நீ என்ன சொன்ன?" இது சூரஜ்.
"சரி! அத மாத்தி பெயின்ட் பண்றேன்னு சொன்னேன்."
"க்ரேட்!" சூரஜ் எழுந்து வந்து கைகுலுக்கி ஆனந்தியை பாராட்டினான்.
கௌரி கண்கள் குளமாக ஆனந்தியின் நெற்றியில் முத்தமிட்டாள். ஆனந்தி கௌரியின் கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொண்டாள்.
"நீ பாடுவியாம்மா?"
"எனக்கு அக்கா அளவுக்கு பாட்டெல்லாம் பாடத் தெரியாது அத்த!"
"பரவால்லமா! தெரிஞ்ச வரைக்கும் பாடு!"
விராட்டை மெதுவாகப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பாடணுமா! என்று ஜாடை பேசினாள். ப்ளீஸ் பாடு! என்று அவனும் ஜாடையாகவே பதில் சொன்னான்.
ஆனந்தி பாடினாள். நாலுவரிதான் பாடினாள்.
"சொல்ல சொல்ல இனிக்குதடா!
சொல்ல சொல்ல இனிக்குதடா! முருகா!
உள்ளமெலாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா!
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே!
உள்ளமெலாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா! "
சொல்ல சொல்ல இனிக்குதடா! முருகா!
உள்ளமெலாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா!
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே!
உள்ளமெலாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா! "
பாடி முடித்ததும் எல்லாரும் கைதட்டினார்கள்.
"நீயும் நல்லாதாம்மா பாடற! உன் பாட்டு அருமையா இருந்துது!" என்று கௌரி சொன்னாள்.
ஆனந்தி வெட்கத்தோடு உள்ளே எழுந்து சென்றாள். விராட்டுக்கு அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது. மெதுவாய் செல்வியிடம் கூறினான்.
"பாபி! ப்ளீஸ் பாபி!"
விராட்டிடம் புன்னகையுடன் தலையாட்டிவிட்டு ஆனந்தனின் காதைக் கடித்தாள். ஆனந்தனும் புன்னகைத்தபடி குழந்தைகளை எல்லாம் வெளியே விளையாட அனுப்பினான். பின்னர்,
"சூரஜ் மாமா, மாப்ள, தீபிகாஜி வாங்க! எங்க வீட்ட நீங்க பாத்ததேயில்லையே! நான் காட்டறேன் வாங்க! அக்கா நீயும் வாக்கா! பெரியவங்க பேசட்டும்! அவங்க கூப்டும் போது வரலாம்!" என்று அனைவரையும் மாடிக்கு அழைத்துச் சென்றான். அவனது புத்திக் கூர்மையை மெச்சிக் கொண்டே உடன் சென்றனர்.
"மாப்ள! ஆனந்தி இங்க இருக்கா! போய்ப் பேசுங்க!" என்று ஆனந்தியின் அறையைக் காட்டிவிட்டு மற்றவர்களை மாடியில் உள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.
மாடி தோட்டத்தைப் பார்க்க தீபிகாவுக்கு ரொம்ப பிடித்தது. இடம் கொஞ்சம் சிறியதாய் இருந்தாலும் அழகாய் பராமரிக்கப்பட்டிருந்தது.
சூரஜும் செல்வியும் தோட்டத்தின் ஓரத்தில் இருந்த குட்டிச் செடிகளைப் பார்த்தபடி நிழலில் நின்றார்கள்.
தீபிகா தோட்டத்தை முழுதாய் சுற்றி வந்தாள். உடன் ஆனந்தனும் வந்தான்.
"வாவ்! எவ்ளோ அழகா இருக்கு உங்க வீடு!"
"தேங்க்ஸ்!"
"இதெல்லாம் யாரோட இன்ட்ரெஸ்ட்? ஆனந்தி பாபியோடதா?"
"இல்லங்க! அவ பெயின்டிங்! ஆர்டஸ்! க்ராஃப்ட்ஸ்! அவ இன்ட்ரெஸ்ட் அதுலதான்! இந்த கார்டனிங் என்னோட இன்ட்ரெஸ்ட்! எனக்குதான் செடிங்கன்னா பிடிக்கும்!"
"வீட்டுக்குள்ள பாத்தா ஆர்ட் கேலரி மாதிரி இருக்கு! மாடிக்கு வந்தா நந்தவனம் மாதிரி இருக்கு!" என்று கூறினாள்.
வாயேன்! இங்கயே வந்து என் கூடவே குடித்தனம் பண்ணு! இந்த செடிங்கள பாத்துக்கற மாதிரி உன்னையும் பத்திரமா பாத்துக்கறேன்! என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
"ரொம்ப அழகா மெயின்டேய்ன் பண்றீங்க!"
"தேங்க்ஸ்!" என்றான்.
ஒவ்வொரு செடியாக பார்த்துவிட்டு நகர்ந்தாள். செல்வியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
விராட் ஆனந்தியிடம்:
ஆனந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு, மென்மையாகப் பேசினான். தனக்குக் கூட இப்படி மென்மையாகப் பேச வருமா என்று அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.
"ஆனந்தி!"
"ம்!" அவன் தன் கையைப் பிடித்திருப்பதால் பிடித்த இடம் குறுகுறுக்க வெட்கத்துடன் தலைகுனிந்தபடி பேசினாள்.
"அப்பா பேசறது உனக்கு புரியுது! எப்டி?"
"அக்கா ஷ்பெஷல் சில்ரன் ஸ்கூல்ல வேலைக்கு போறதப் பாத்து இன்ஸ்பைர் ஆகி நானும் இதமாதிரி எதாவது கத்துக்கணும்னு கத்துகிட்டேன்!"
"ஆமா! பாபி ரொம்ப டிஃபரண்ட்! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! அப்பா நம்மளோட மிங்கிள் ஆகாம தனியா இருக்காரேன்னு! இனிமே நம்ம அரட்டைல அவரும் ஒருத்தர் ஆகிடுவார்!"
"ஆமா!"
"ரொம்ப அழகா பாடின!" அவள் முகத்தையே பார்த்தபடி பேசினான்.
"பாட்டு மட்டும்தான் அழகா இருந்துதா?" மெல்லிய குரலில் கேட்டாள்.
"உன் வீடு ரொம்ப அழகா இருக்கு!" அவள் வெட்கப்படுவதை ரசித்தான்.
"வீடு மட்டுமா?"
"எல்லாத்தவிட நீதான் ரொம்ப அழகா இருக்க!" அவளுக்கு மிக அருகில் வந்து கூறினான்.
".." வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது.
"பேச மாட்டியா!" அவள் முகத்தை தன் கையால் மெதுவாக நிமிர்த்தினான். அவள் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"உன்னப் பாக்கணும்னு துடிச்சிகிட்டு இருந்தேன்!"
"நானும்தான்!"
"அப்ப பாக்கவே மாட்டேங்கற! குனிஞ்சுகிட்டே இருந்தா எப்டி பாப்ப!"
".."
"ஏய்! கேக்கறேன்ல!"
அவள் தன் கையை உருவி தன் முகத்தை மூடிக் கொண்டாள். அவன் அவள் கையை விலக்கி அவள் முகத்தை நோக்கி குனிய, அவனுடைய செல்போன் சிணுங்கியது. அவள் டக்கென்று நகர்ந்து கொண்டாள். அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தாலும் சிரித்தபடி செல்லை பார்த்தான். விரைப்பாய் நின்றான். அவளிடம் கிசுகிசுப்பாக, என் சீனியர் ஆஃபீசர்! என்று கூறிவிட்டு, அவரிடம் பேசினான்.
"ஜீ சாப்!"
".."
"ஷுக்ரியா சாப்!"
போனை வைத்துவிட்டு, அவளிடம், "நமக்கு விஷ் பண்ணினார்!" என்றான். தன் மொபைலில் அவளுடன் இணைந்து நின்று கொண்டு ஒரு செல்ஃபீ எடுத்துக் கொண்டான். அவளும் தன் மொபைலில் ஒரு செல்ஃபீ எடுத்துக் கொண்டாள். அவன் அவளை போட்டோ எடுத்துக் கொண்டான். அவள் அவனை போட்டோ எடுத்துக் கொண்டாள்.
"சரி! இப்ப இங்க நம்மள பேச விடமாட்டாங்க! நம்ம அப்றம் பேசலாம்! இப்போதைக்கு இத வெச்சுக்கோ!" என்று கூறிக் கொண்டே அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல தள்ளி நின்று கொண்டான். அவள் இன்ப அதிர்ச்சிக்குள்ளானாள்.
"பேசியாச்சா!" மெதுவாய்க் கேட்டபடி உள்ளே வந்தாள் செல்வி.
"அதுக்குள்ளதான் நீங்க வந்துட்டீங்களே பாபி!"
"என்ன பண்ண!? எனக்கும் உங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னுதான் இருக்கு! ஆனா கீழ கூப்பிடறாங்களே!" என்றாள் செல்வி.
"வா விராட்!" சூரஜ் அழைத்தான்.
"சரி!" என்று வெளியே செல்லும்போது, விராட் ஆனந்தியைப் பார்த்து விஷமமாய் கண்சிமிட்டினான். அவள் தன் வெட்கத்தை மறைக்க படாத பாடு பட்டாள். அவள் அவஸ்த்தையை ரசித்தபடி சூரஜுடன் சென்றுவிட்டான்.
செல்வி ஆனந்தியை பார்த்து த்ருஷ்டி கழித்தாள்.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி! விராட் என்ன சொல்றார்!"
"ம்.. வெக்கமா இருக்குக்கா!"
அவன் தந்த முத்தத்தின் மயக்கம் இன்னும் தெளியாதவளாக குறுநகை பூத்தபடி இருந்தாள். செல்வி தங்கையின் வெட்கத்தை ரசித்தாள்.
இரு வீட்டு பெரியவர்களும் சேர்ந்து விராட்டுக்கும் ஆனந்திக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்து கொண்டனர். வடக்கு வழக்கம் தெற்கு வழக்கம் என்று சில பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் நடந்தேறின. விராட்டும் ஆனந்தியும் ஜோடியாக நின்று பெற்றவர்கள் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் செய்தனர்.
பூங்குழலியும் மங்கையும் சேர்ந்து விருந்தினை அமர்க்களப் படுத்தியிருந்தனர்.
அக்கம் பக்கத்தவர்களுடன் தாத்தா மற்றும் இரண்டு பாட்டிகளையும் குழந்தைகளையும் முதலில் அமர வைத்து முதல் பந்தி நடை பெற்றது. அடுத்த பந்தியில் பிள்ளை வீட்டார் உணவு உண்ணத் தயாராக, ஆனந்தி புடவையை இழுத்துச் சொருகிக் கொண்டு பரிமாறத் தொடங்கினாள். செல்வியும் அவர்களுக்கு உதவி செய்ய முயல,
"இல்லம்மா! நீ மாப்ள வீட்டுக்காரி! நீ ஹெல்ப் பண்ணக் கூடாது!" என்று மங்கையும் பூங்குழலியும் மறுக்க,
"அப்ப நான் இந்த வீட்டு மூத்த மாப்ள! நான் ஹெல்ப் பண்றேன்!" என்று சூரஜ் உதவ முன்வந்தான்.
"ஐயோ வேண்டாம் மாப்ள! உங்களுக்கு எதுக்கு இந்த வேலை!" என்று மங்கை மறுக்க,
"எதுக்கு இப்ப இந்த வம்பு! வாங்க! எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்!" என்று கௌரி அழைக்க இதைக் கேட்ட மங்கையும் பூங்குழலியும் மனம் பூரித்துப் போனார்கள்.
பேச்சும் சிரிப்புமாக பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் அனைவரின் கண்படும்படி ஒன்றாக வட்டமாக உட்கார்ந்து தங்களுக்குத் தானே பரிமாரிக் கொண்டு சந்தோஷமாக உணவு உண்டனர்.
சூரஜும் செல்வியும் தங்களுக்குள் பேசியபடி சாப்பிட, விராட் ஆனந்தியை சைட் அடித்துக் கொண்டே சாப்பிட்டான். ஆனந்தி வெட்கப்பட்டுக் கொண்டே அரை குறையாய் சாப்பிட்டாள். ஆனந்தன் தீபிகாவை சைட் அடிக்க அவளோ அவனை கண்டு கொண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை. கௌரியும் மங்கையும் பூங்குழலியும் சளசளத்தபடி சாப்பிட்டனர். கிரிதரனும் கீர்த்திவாசனும் தீன்தயாளிடம் புரிந்தவரை பேசியபடி சாப்பிட்டனர்.
அனைவரும் உண்டு முடித்ததும் ஆனந்தி தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள். விராட் ஆனந்தியிடம் பேசவேண்டும் என்று அனுமதி வாங்கிக் கொண்டு அவளுடைய அறைக்குச் சென்றான்.
"ஆனந்தி! இது உனக்காக நான் வாங்கின கிஃப்ட்! பாத்துட்டு நல்லா இருக்கான்னு சொல்லு!" என்று கூறிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.
"தேங்க்யூ விராட்! ரொம்ப அழகா இருக்கு! என்னோட ஸ்டோரி ஷோஸ்க்காக நானே இது மாதிரி ஒரு ஸ்கார்ஃப் வாங்கணும்னு நெனச்சுகிட்டு இருந்தேன்! தேங்க்யூ சோ மச்!" அவள் சந்தோஷத்தில் குழந்தை போல குதிக்கவே செய்தாள்!
அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்த விராட்டுக்கு தலைசுற்றியது. அவளை அப்படியே கையில் தூக்கி சுற்ற வேண்டும்போல இருந்தது. அவளை ஆட்கொண்டுவிடும் ஆர்வம் அவனுடைய ஒவ்வொரு செல்லிலும் தோன்றுவதைப் போல உணர்ந்தான். ஆனால் ஒன்றும் செய்வதறியாது அவள் செய்வதை ரசித்துக் கொண்டு நின்றான்.
அவளும் ஒரு சிறிய கையேடு (நோட்புக்) ஒன்றை அவனிடம் தந்தாள்!
"என்ன இது?"
"பாருங்க!"
பிரித்துப் பார்த்தான். அதில் விராட் விதவிதமான போஸ்களில் சிரித்துக் கொண்டிருந்தான். எல்லாம் பென்சிலால் வரையப்பட்ட ஓவியங்கள். குறைந்தது ஐம்பது படங்கள் இருக்கும். ஒன்றோடு ஒன்று ஒட்டி கரி படியக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு படத்துக்கு மேலேயும் பாலிதீன் ஷீட்கள் ஒட்டப் பட்டிருந்தது.
"இதெல்லாம் நீ வரைஞ்சதா?"
"ம்! அன்னிக்கு உங்களுக்கு போன் பண்ண முடியாம தவிச்சேன்ல! அப்ப உங்கள நெனச்சு வரைஞ்சது!"
"இத்தனையும் ஒரே நாள்ல வரைஞ்சதா?" ஆச்சர்யமாய்க் கேட்டான்.
"அரை நாள்ல?!" மென்மையாய் சொன்னாள்.
"ஆனந்தி! யூ ஆர் மை லவ்! நீ உன் மனசில எந்தளவுக்கு என்னையே நெனச்சிருந்தா இவ்ளோ தத்ரூபமா வரைஞ்சிருப்ப! யூ ஆர் க்ரேட்!" இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆவலாய் அவள் கையைப் பற்றி அதில் முத்தமிட்டான். அவளுக்கு வெட்கமாயிருந்தது.
"இப்பவே என் கூட வந்துடறியா? ப்ளீஸ்! உன்ன விட்டு எப்டி இருப்பேன்னு தெரில!"
"எனக்கும் அப்டிதான் இருக்கு!"
"எவ்ளோ சீக்ரம் முடியுமோ அவ்ளோ சீக்ரம் மேரேஜ் வெச்சா நல்லா இருக்கும்ல!" அவள் கையைப் பிடித்துக் கொண்டே சிரித்தபடி சொன்னான்.
"ம்!" அவளும் சிரித்தாள்.
"குழந்தைகளுக்கு கிஃப்ட்ஸ் இந்த பேக்ல இருக்கு! குடுத்திடு!"
"தேங்க்ஸ்! காசு.."
"அதெல்லாம் பேசக் கூடாது!"
"இதுக்கும் தேங்க்ஸ்!"
"சரி! ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு! நாளைக்கு ட்யூட்டி போகணும்! வரட்டுமா!"
"ம்!"
அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு அவளிடம் தன் கன்னத்தை காட்டினான். அவளும் வெட்கத்துடன் பட்டும் படாமல் முத்தமிட்டாள்.
"பை!" சிரித்தபடி சொன்னான்.
"பை!" வெட்கம் மாறாமல் சொன்னாள்.
மனம் நிறைய சந்தோஷத்துடன் வெளியேறினான்.
சூரஜ் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை செல்வி எல்லாருக்கும் கொடுத்தாள். பாட்டி பேத்தியிடம் ரகசியம் பேசினார்.
"சீக்கிரமா ஒரு குழந்தையப் பெத்து உங்க மாமியார் கிட்டக் குடு! அந்த குழந்தைய மாப்ள தூக்கினப்போ அவங்க கண்ல ஏக்கத்தப் பாத்தேன்!"
"ம்.. சரி பாட்டி!" வெட்கத்தோடு கூறினாள்.
ஆனந்தியைப் பார்த்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பிள்ளை வீட்டார் கிளம்பினர்.
பிள்ளைவீட்டார் அனைவரையும் விமான நிலையத்தில் விட ஆனந்தன் வந்திருந்தான். ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி தீபிகா டில்லிக்கு விமானம் ஏறிய பிறகு மற்றவர்கள் மும்பைக்கு விமானம் ஏறவேண்டும்! ஆனால் டில்லி செல்லும் விமானம் இரண்டு மணிநேரம் தாமதமாகியது. மும்பை செல்லும் விமானம் சரியான நேரத்துக்கு கிளம்பியது. ஆனந்தன் தீபிகாவை விமானம் ஏற்றும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறி மற்றவர்களை அனுப்பி வைத்தான்.
தானே விமானம் ஏறிக் கொள்வதாகக் கூறி ஆனந்தனை செல்லுமாறு சொன்னாள். ஆனால் அவன் செல்லாமல் அவள் விமானம் ஏறும் வரை காத்திருந்தான்.
அவனுக்கு இதுதான் நல்ல சமயம்! தன் மனதை அவளிடம் தெரிவிக்கலாம் என்று நினைத்தான். என்ன பேசலாம்! எப்படி சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, தீபிகா அழைத்தாள்.
"ஆனந்த்!"
"சொல்லுங்க!" நான் நெனக்கறதயே சொல்லப் போறாளோ!
"நான் ஒண்ணு சொல்றேன். தப்பா நெனக்காதீங்க!"
"என்னங்க!" அதேதான்! சொல்லு! சொல்லு! மனதுக்குள் பறக்க ஆரம்பித்தான்.
"நீங்க என்ன ஃபாலோ பண்றீங்களோன்னு எனக்கு தோணுது! தயவு செய்து என்கிட்ட வந்து என்னை லவ் பண்றேன்னு சொல்லிடாதீங்க! ப்ளீஸ்!"
"என்.. என்ன சொல்றீங்க!" என்னடி குண்டத் தூக்கி தலைல போடற!
"ப்ளீஸ் ஆனந்த்! எனக்கு பயமா இருக்கு! நான் என் எம்பிபிஎஸ் படிப்ப முடிச்சுட்டு மேல படிக்கணும்! பெரிய டாக்டர் ஆகணும்னுதான் கனவு கண்டுட்டுருக்கேன்! கல்யாணம் எல்லாம் பண்ணிகிட்டா ஹஸ்பண்ட் குழந்தைங்கனு இப்டி லைஃப் மாறிடும்! ஐ டோன் வான்ட் டு பீ எ டிபிக்கல் இண்டியன் வைஃப்! நான் ஒரு பெரிய டாக்டர் ஆகி மெடிக்கல் ஃபீல்டுல எதாவது பெரிசா சாதிக்கணும்! இதான் என் கனவு! லட்சியம் எல்லாம்! உங்க பார்வை என்ன தொறத்துது! என்னால என் படிப்பை உங்களுக்காக விட்டுக் குடுக்க முடியாது. நீங்க என்ன நெனக்காதீங்க! நான் ஃப்ராங்க்கா பேசினது உங்களுக்கு ஹர்டிங்கா இருந்ததுன்னா ஸாரி!"
தெளிவாக உறைக்கும்படி கூறிவிட்டாள்.
"ஸாரிங்க! உங்கள நெனச்சது உண்மைதான்! ஆனா உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! நல்லா படிங்க! இந்த காலத்தில படிக்கணும்னு ஆசைப்படறவங்க ரொம்ப கம்மி! அப்படி ஆசைப்படறவங்கள என்கரேஜ் பண்ணனும்! நான் உங்கள தொந்திரவு செய்யவே மாட்டேன்!" என்றான்.
பரவால்ல! தைரியமானவதான்! ஸாரி! தீபிகா! இனிமே உங்கள தொந்திரவு செய்யவே மாட்டேன்! மனதுக்குள்ளும் அதையே சொல்லிக் கொண்டான்.
"என்ன புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ்!"
"டெல்லி ரீச் ஆனதும் ஆனந்திக்கு மெஸேஜ் பண்ணிடுங்க!"
"சரி!"
அதற்கு மேல் அவர்கள் இருவரும் பேசவேயில்லை! விமானம் ஏறி டெல்லி பறந்துவிட்டாள். ஆனந்திக்கும் மெஸேஜ் செய்துவிட்டாள்.
கிரிதரனும் மங்கையும் லட்சுமி அம்மாளுடன் வாடகை டாக்ஸி (Cab) ஒன்றை புக் செய்துகொண்டு அன்றிரவே சென்னை புறப்பட்டனர். இருந்துவிட்டு போலாமே என்ற கீர்த்திவாசனிடம்,
"ரிடைர் ஆகப் போற சமயத்தில எதுக்கு ப்ளாக் மார்க்! அதான்! அப்றம் ஆனந்தி கல்யாணத்துக்கு வேற லீவ் போடணும்ல!" என்று கூறிக் கிளம்பினார்.
கலைமகளின் பரிபூரண அருளுடனே
கலைகளின் அரசியான தன்னவளைக்
கண்ட விராட்டும் மனமகிழ்ந்தான்!
கண்மணியாக மங்கையைப் போற்றி
அளவிலாக் காதலை அள்ளி வழங்கி
நற்றுணையாக நிற்க உறுதி பூண்டான்!
ஆனந்தியின் அண்ணன் ஆனந்தனும்
தீபிகாவெனும் பெண்மயிலின் அழகில்
தன் மனதைப் பறிகொடுத்து நின்றான்!
வழியனுப்பச் சென்றவனும் தன்மனதை
மங்கையிடம் திறந்து காட்டும் முன்னே
மறுத்தே அவளும் பிரிந்து சென்றாள்!
காலம் மாறினால் காதல் கனியுமென்று
காளையவன் தன்மனதில் எண்ணியுமே
கனவுகளில் அன்பை வளர்த்திடுவான்!
- C. புவனா
- காதலின் மொழி என்ன?