கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

19. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 19

பிள்ளை வீட்டார் அனைவரும் புதுமணத் தம்பதியினருடன் மும்பை கிளம்பினர். ஆனந்தியை மாமியார் வீட்டில் கொண்டு விடும் சம்பிரதாயமாக அவர்களுடன் மங்கையும் கிரிதரனும் மும்பை வந்தனர். திருமண வரவேற்பில் பங்கேற்க மறுநாள் பூங்குழலியும் கீர்த்திவாசனும் வந்தனர்.

திருமண வரவேற்பு மிகவும் விமரிசையாக இருந்தது. விராட்டின் போலீஸ் அதிகாரிகள் நண்பர்கள், என நிறைய விருந்தினர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

சென்ற வாரம் சந்தித்த விராட்டின் நண்பன் ரோஹித், விராட்டுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சூரஜிடம் பேசச் செல்லும் போது விராட் அவனிடம், சூரஜ் குழந்தை தள்ளிப் போட்டது பற்றித் தன்னிடம் சொன்னதை அண்ணனிடம் காட்டிக் கொள்ளாதே; அவன் வருத்தப்படுவான் என்று எச்சரித்தான்.

"எனக்கு தெரியாதாடா? கண்டிப்பா உனக்கு சொன்னதா காட்டிக்க மாட்டேன். நா உன்கிட்ட சொன்னதும் கூட அவரு மேலயும் உன் மேலயும் இருந்த அன்பாலதானே தவிர அவர குற்றம் சொல்லி குடும்பத்துக்குள்ள காட்டி குடுக்கறதுக்கில்ல. அந்த காலத்தில உங்கப்பா எனக்காக ஸ்கூல் ஃபீஸ் கட்டிருக்கார். அதுக்கு என்னால முடிஞ்ச நன்மையாதான் இத செய்தேன்டா!" என்றான் ரோஹித்.

"தேங்க்ஸ்டா!"

"சரி! சரி! நீ மத்தவங்கள கவனி." என்ற ரோஹித், ஆனந்திக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு நகர்ந்தான்.

சூரஜிடம் அன்பாக நலம் விசாரித்துவிட்டு மற்ற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான்.

ஆனந்தன் தீபிகா இருக்கும் பக்கம் கூடப் போகவில்லை. அப்படிப் போக நேர்ந்தாலும் அவளைப் பார்க்காமல் இருந்தான். மறுநாள் வேலை உயர்வு கிடைத்து யூஎஸ் கிளம்புகிறான். இடமாற்றம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து போராடி வாங்கியிருக்கிறான். தீபிகாவை மறப்பதற்காக! ஆனால் அவனால் மறக்க முடியுமா?

செல்வி வேலை செய்யும் பள்ளி தலைமை ஆசிரியை முதல் அவளுடன் வேலை பார்க்கும் ஆசிரிய ஆசிரியைகள் செல்வியின் பெற்றோரிடம் அவளைப் பற்றி உயர்வாகக் கூறி அவர்களை மகிழ்வித்தனர்.

செல்விக்கு நடந்தது போலவே மூஹ் திக்காய் என்ற முகம் காட்டும் நிகழ்வு ஆனந்திக்கும் நடந்தது.

ஆனால் ஆனந்தி சோர்வாக உணராமல் மிகவும் உற்சாகமாகவே உணர்ந்தாள். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று செல்வி, அம்மா, பெரியம்மா என்று அவளுடைய பிறந்த வீட்டு சொந்தங்கள் எல்லாம் அவளுடைய பக்கத்திலேயே இருந்தனர்.

இரண்டாவது, செல்விக்கு இருந்தது போல ஆனந்திக்கு மொழிப் பிரச்சனையில்லை. பள்ளியிலேயே இரண்டாவது மொழியாக ஹிந்தியை தேர்ந்தெடுத்துப் படித்திருந்ததால் அவளுக்கு ஹிந்தி நன்றாகவே தெரியும்.

அதனால் அவள் செல்வி போல சோர்வாக உணரவில்லை.

"உனக்கு பரவால்ல ஆனந்தி! பக்கத்தில நாங்கல்லாம் இருக்கோம்! நா இங்க கல்யாணம் ஆகி வந்தப்ப.. தனியா உக்கார்ந்திருந்தேன். என்ன வந்து பாக்கறவங்க யாரையும் தெரியாது. எனக்கு தெரிஞ்சவங்க யாரும் என் பக்கத்தில இல்ல! எவ்ளோ கொடுமையா இருந்துச்சு தெரியுமா? ஆனா.. என் செல்ல தங்கைய அப்டி கொடுமைலாம் அனுபவிக்க விட மாட்டேன்!" என்று சொல்லி சிரித்தாள் செல்வி!

"தேங்க்ஸ்க்கா! நீ இருக்கறதாலதான் எனக்கு தெம்பா இருக்கு!"

"இப்ப இப்டி சொல்வ! அப்றம் பாரு.. நா இருக்கறது இடைஞ்சலா இருக்குன்னு சொல்வ..".என்று அவளை வம்புக்கு இழுத்தாள் செல்வி.

"என் செல்ல அக்கா, எப்பவும் எனக்கு இடைஞ்சலாவே இருக்க மாட்டா!" என்று ஆனந்தி சொல்ல,

"ஓ! இப்டி சொல்லி என்னைய விரட்டிடுவ.. ஓகே! ஓகே! பெரிய வித்தக்காரிடீ நீ!" என்று செல்வி தன் தங்கையிடம் விளையாடினாள்.

அவளுடைய மலர்ந்த சிரிப்பை வெகு நாட்கள் கழித்துக் கண்ட தீபிகாவும் விராட்டும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

"பாபி இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காங்கல்ல!" என்று விராட் சொல்ல,

"ஆமா பையா! அவங்க கல்யாணத்தப்ப இப்டி இருந்தாங்க! அவங்க இங்க வந்தப்றம் தன்னோட சிரிப்பை தொலைச்சிட்டாங்க!" என்றாள் தீபிகா.

"நீ சொல்றதும் சரிதான். அவங்களோட சிரிப்பை நாம அவங்களுக்கு திருப்பி தரணும்!" என்றான் விராட் உறுதியான குரலில்.

"ஆமா பையா! அட் எனி காஸ்ட், பாபி இனிமே இந்த சிரிப்பை திரும்பவும் தொலைச்சிடாம நாம பாத்துக்கணும்!" என்றாள் தீபிகா.

இரண்டு நாட்கள் செல்வியுடனும் ஆனந்தியுடனும் இருந்துவிட்டு இரு பெண்களின் பெற்றோரும் அவரவர் ஊர்களுக்கு கிளம்பினர்.

அதற்கு மறுநாள் வழக்கம் போல குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். மறுநாள் விராட் ஆனந்தி தங்கள் தேன்நிலவுக்கு ஷிம்லா சென்றனர். விராட்டுக்கு இன்னும் பத்து நாட்கள் விடுமுறை இருக்கிறது. எனவே அவர்கள் திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.

"ஆனந்தி! உன்னைத் தவிர வேற யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டு இருந்தாலும் நான் இவ்ளோ சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன்னு விராட் நெனக்கணும். இப்ப மட்டும் இல்ல! எப்பவுமே! புரியுதா?"

"ம்!" வெட்கத்தோடு புன்னகைத்தவளின் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைத்தாள்.

தீபிகாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை இருப்பதால் அவள் வீட்டிலிருந்தாள். சூரஜ் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிட்டான். இன்று இரவு வீடு வருவானோ! மாட்டானோ! அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

செல்வி வழக்கம் போல தன் வேலைகளை முடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள்.

கௌரி தீபிகாவிடம் கூறினாள்.

"சுட்கி! செல்விக்கு இன்னும் ஏன் ஒண்ணும் உண்டாகல! ஏதாவது பெரிய டாக்டர்கிட்ட காட்டலாமா? ஏதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போலாமா?"

"அம்மா! நான் டாக்டர்க்கு படிக்கறதுனாலதானே என் கிட்ட இத கேக்கறீங்க!" "

"ஆமா!"

"நான் ஒண்ணு சொல்றேன்! கோவப்படக் கூடாது!"

"சொல்லு!"

"முதல்ல பாபிகிட்ட எல்லா வேலையையும் வாங்காதீங்க! அவங்களுக்கு கொஞ்சமாவது ரெஸ்ட் குடுங்க!"

"நான் எங்க அவள வேல வாங்கறேன்! அவதானே எல்லா வேலையையும் செய்யறா!"

"ஏன் செய்ய மாட்டாங்க? சூரஜ் பையா சீக்கிரம் ஆஃபீஸ் போய்ட்டு லேட்டா வரான்! வந்ததும் சாப்ட்டு தூங்கதான் முடியும்! இவன் இப்டி நடந்துகிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க? அவங்க தன்னோட வருத்தத்தை குறைச்சுக்க எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுகிட்டு செய்றாங்க! நீங்களும் இதான் சாக்குன்னு எல்லா வேலையையும் அவங்க கிட்ட குடுத்துட்டு ஹாயா உக்காந்துக்கறீங்க!"

"என்னடீ இப்டி சொல்ற?"

"வேற எப்டி சொல்லச் சொல்றீங்க? பையா யூஎஸ் போறப்ப அவங்க மும்பை வந்தாங்க.. வந்ததுலேர்ந்து முகம் சுளிக்காம வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க! நானா இருந்தா இந்நேரம் ஓடி வந்திருப்பேன்!"

"என்னடி நீ?"

"வீட்டுக்குள்ளயேதானே இருக்கீங்க! வீட்ல என்ன நடக்குதுன்னு உங்களுக்கு புரியலையா? சூரஜ் பையாகிட்ட வேலைக்கு போய்ட்டு சீக்ரம் வரச் சொல்லுங்க! வீட்டு வேலைக்கு ஆளைப் போடுங்க! பையாவையும் பாபியையும் எங்கியாவது ஊருக்கு போயிட்டு வரச் சொல்லுங்க! குழந்தை தானா வரும்! அதவிட்டு டாக்டர்கிட்ட போலாமா கோவிலுக்குப் போலாமான்னு கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும்!"

"சரிடீ! நான் செய்யறேன்!"

சின்னப் பெண்ணாக இருந்தாலும் உள்ளதைச் சொல்லி கௌரிக்கு சரியான நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாள்.

அன்று மாலை, செல்வி பள்ளியிலிருந்து வந்து தன் டியூஷன் வகுப்பில் இருக்கும்போது அவளுடைய கைப்பேசி அழைத்தது. அவளுடைய அம்மா மங்கைதான் பேசினாள்.

"அம்மா! என்னம்மா திடீர்னு!"

"பாட்டி கீழ விழுந்துட்டாங்க செல்விம்மா! கால்ல ஏர்லைன் க்ராக்! நடக்க முடியல! உன்ன பாக்கணும்னு சொல்றாங்க! ஒரெட்டு வந்துட்டு போக முடியுமான்னு கேக்க தான் போன் பண்ணினேன்ம்மா! உன்னால வர முடியாதுன்னு தெரியும்! இருந்தாலும் கேக்கலாமேன்னுதான்.." என்றாள் மங்கை.

"அடடா! இப்ப எப்டி இருக்காங்க! மாவுக்கட்டு போட்ருக்கா?" பதற்றமாக இருந்தாலும் அதிலும் கொஞ்சம் நிதானம் இருந்தது.

"ம்! ஆமாம்மா! மூணு வாரத்துக்கு!"

"பாட்டிகிட்ட குடுங்கம்மா!"

"தூங்கறாங்க!"

"எந்த கால்ம்மா?"

"வலது கால் செல்வி!"

"சரிம்மா! நான் அவர்கிட்டயும் அத்தகிட்டயும் கேட்டுட்டு வர ட்ரை பண்றேன்! பாட்டிய பத்திரமா பாத்துக்கோங்க! நான் வெச்சுடவா!" கேட்டாள் செல்வி.

"சரிம்மா!" போனை வைத்தார்கள்.

பிள்ளைகளை அனுப்பிவிட்டு பாட்டியைப் பற்றி யோசித்தபடியே கீழே இறங்கி வந்தவளைக் கண்ட தீபிகா என்னவென்று விசாரித்தாள். செல்வியும் தன் பாட்டியின் நிலை பற்றிக் கூறினாள். தீபிகாவின் மனதில் தன் அண்ணிக்கு நல்லது செய்ய இதுதான் நல்ல சமயம் என்று தோன்றியது.

"அப்போ கிளம்புங்க பாபி! என்ன யோசிக்கறீங்க?" என்று கேட்டுவிட்டு தன் அம்மாவிடமும் கூறினாள்.

கௌரியும் தீபிகா கூறியதைக் கேட்டு ஆமோதித்தாள்.

"ஆமா செல்வி! பாட்டி பாவம்! நீ போய் அம்மாவுக்கும் பாட்டிக்கும் கொஞ்ச நாள் உதவி பண்ணும்மா.. பாட்டிக்கும் சந்தோஷமா இருக்கும்.." என்று கூறினாள்.

"எப்டி அத்த.. நா கிளம்பிட்டா.. இங்க வேல எல்லாம் உங்களால தனியா சமாளிக்க முடியாது.. அதெல்லாம் வேணாம் அத்த.." என்று மறுத்தாள் செல்வி.

ஆனால் தீபிகா விடவேயில்லை.

"வீட்டு வேல எல்லாம் நா பண்ணுவேன் பாபி! நீங்க போய் பாட்டி கூட இருங்க.. அப்போதான் பாட்டிக்கு சரியாகும்.."

"ஆனா சுட்கி?! உங்கண்ணா?!?" என்று செல்வி இழுக்க,

"பையா ஒண்ணும் சொல்ல மாட்டார்.." என்று கூறியவள் அதோடு நிறுத்தாமல் சூரஜை அழைத்தாள்.

அவனிடம் என்ன சொன்னாளோ, அடுத்த பத்து நிமிடத்தில், மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு சென்னை செல்லும் விமானத்தில் செல்விக்கு ஒரு டிக்கெட் தயார் என்று செய்தி வந்தது.

"அவ்ளோதான்! பையா ஃப்ளைட் டிக்கெட்டே போட்டு அனுப்பிட்டார்.. கெட் ரெடி பாபி! நாளைக்கு காலைல 5.30க்கு ஃப்ளைட்!" என்று கூறி செல்வியை அனுப்பிவிட்டு விராட்டுக்கு அழைத்து விவரம் கூறினாள்.

"நல்லது பண்ணின சுட்கி! பாபி பக்கத்தில இல்லன்னாதான் அவனுக்கு அவங்களோட அருமை தெரியும்.. பாபிய மிஸ் பண்ணினாதான் அவன் அவங்க கூட ஒழுங்கா குடும்பம் நடத்துவான்.." என்றான் விராட்.

"கரெக்ட் பையா! " என்றாள் தீபிகா.

அண்ணனும் தங்கையும் சேர்ந்து தன் மூத்த அண்ணனின் வாழ்வை சரி செய்ய முடிவெடுத்துக் கொண்டனர்.

செல்வி இங்கு செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று தீபிகாவுக்கு சொல்லிக் கொடுத்தாள்.

"காலையில மாமாவுக்கும் அத்தைக்கும் ஸ்ட்ராங்கா டீ வேணும்.. ஈவ்னிங் லைட்டா போதும்.. ரெண்டு பேருக்கும் சுகர் கம்மியா போட்டா போதும்.. அப்புறம் அத்தைக்கு ஆலு வேண்டாம்.. மாமாவுக்கு தால் வேண்டாம்.. மாமாவுக்கு கொஞ்சம் ரைஸ் வேண்டியிருக்கும்.. சோ தினம் கொஞ்சம் ரைஸ் வெச்சுடு சுட்கி.. ப்ரொவிஷன் எல்லாம் இப்போதான் வாங்கிருக்கோம்.. எதுவும் தேவைப்படாதுன்னு நினைக்கறேன்.. அப்டியே ஏதாவது வேணும்ன்னா பக்கத்து கடையில வாங்கிக்கோ.. அப்புறம் கேஸ் போன வாரம்தான் எடுத்தது.. சோ இப்போதைக்கு மாத்த வேண்டியிருக்காது.. ஈபி பில் கட்டியாச்சு.. டெலிபோன் பில் கட்டியாச்சு.. " செல்வி சொல்லிக்கொண்டே போனாள்.

"ஹையோ பாபி! விடுங்க! எல்லாம் நா பாத்துக்கறேன்.. நீங்க உங்களுக்கு வேண்டியதை பேக் பண்ணிக்கோங்க.." என்று தீபிகா அவளை உள்ளே அனுப்பினாள்.

"ம்.. சரி.. டின்னர் ரெடி பண்ணிட்டு அப்புறம் போய் பேக் பண்ணிக்கறேன்.." என்று சொல்லிக்கொண்டே செல்வி சப்பாத்திக்கு மாவு பிசையப் போக, தீபிகாவும் கௌரியும் அவளை செல்லமாகத் தள்ளிக்கொண்டு போய் அவளுடைய அறையில் விட்டனர்.

"எல்லாம் நா பாத்துக்கறேன் செல்வி!" என்று அன்புடன் கூறிய கௌரியைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள் செல்வி.

"கேட்டீங்கல்ல பாபி! அம்மாவும் நானும் எல்லாம் பாத்துக்குவோம்.. நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் என்னெல்லாம் பண்லாம்ன்னு பிளான் போடுங்க.." என்ற தீபிகா தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

'இன்னிக்கு இவங்களுக்கு என்ன ஆச்சு?' என்று தனக்குள் நினைத்தபடியே தனக்குத் தேவையான துணி மணிகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள் செல்வி.

சூரஜ் அன்றிரவு அதிக வேலை என்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரவில்லை.

திட்டமிட்டபடி மறுநாள் காலை, செல்வி சென்னை கிளம்பிவிட்டாள். சூரஜ் நேற்று வீட்டுக்கு வராததால் அவனிடம் கைபேசியில் வீடியோ கால் செய்து பேசிவிட்டு கால் டாக்ஸியில் கிளம்பி விமான நிலையம் சென்று விட்டாள்.

அன்று தீபிகாவும் கௌரியும் சேர்ந்து வேலைகளைச் செய்தனர்.

சூரஜ் மதியம் மூன்று மணியளவில் வீட்டுக்கு வந்தான். வீடு அமைதியாக இருந்தது. ஆனால் அது அவனுடைய கருத்தில் பதியவேயில்லை. வீட்டுக்கு வந்த பின்பும் தன் மடிக்கணினியில் வேலை செய்வதும் தன் கைபேசியில் யாரிடமோ பேசுவதுமாகவே இருந்தான்.

தீபிகா தன்னுடைய அம்மாவுக்கு சூரஜின் செயல்பாடுகளை சுட்டிக் காட்டினாள்.

"பையாவ பாத்தீங்களாம்மா! நேத்து நைட்டும் வீட்டுக்கு வரல.. இன்னிக்கும் இவ்ளோ நேரம் கழிச்சுதான் வந்திருக்கான்.. இங்கயும் கூட ஆபீஸ் வேலைதான் பண்ணிட்டு இருக்கான்.. அவனுக்கு பாபி வீட்டுல இல்லன்னு கூட ஞாபகம் இல்ல.. இப்டிதான் அவன் குடும்பம் நடத்தறான்.. அப்புறம் எப்டி பாபிக்கு குழந்தை உண்டாகும்?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

"ஆமாண்டி.. நீ சொன்ன அப்புறம்தான் எனக்கு இது புரியுது.. இவன் ஏன் இப்டி ஆகிட்டான்.." என்று கௌரி கவலையுடன் கேட்டாள்.

"இந்த குடும்ப பாரத்தை தன் தலையில தாங்கிட்டு இருக்கான்ம்மா.." என்றாள் தீபிகா.

கௌரியின் கண்கள் கசிந்தன.

"நா அவன் வாழ்க்கையை பாழ் பண்ணிட்டேனல்ல?" என்றாள்.

"ச்சே! என்னம்மா பேசறீங்க? நீங்க என்னிக்குமே நாங்க நல்லா இருக்கணும்ன்னுதான் யோசிச்சிருக்கீங்க.. கண் கலங்காதீங்கம்மா.. நா சொல்ற மாதிரி செய்ங்க.. எல்லாம் சரியாகும்.." என்று சொல்லி அம்மாவின் காதில் எதையோ சொன்னாள்.

அதைக் கேட்ட கௌரியும் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு மகளைப் பார்த்து புன்னகை செய்தாள். அன்றிரவு சாப்பிட அமர்ந்தான் சூரஜ். தன் தட்டில் இருந்த சப்பாத்தியை அவனால் பிய்க்கக் கூட முடியவில்லை.

"மா! இது என்ன? சப்பாத்தி இவ்ளோ ஹார்டா இருக்கு? நீங்க பண்ணினா சாஃப்ட்டா இருக்குமே?" என்று கேட்டான்.

"இல்லையேடா! எப்பவும் போலதானே பண்ணினேன்!" என்றாள் கௌரி.

"அப்டியா என்ன? இல்லையே? நல்லா சாஃப்ட்டாதானே பையா இருக்கு!" என்றாள் தீபிகா.

சூரஜ் இல்லை என்று மறுத்து சப்பாத்தியை பிய்க்க முடியாததைக் காட்ட, இதைக் கவனித்த தீன்தயாளும் சப்பாத்தி நன்றாக இருப்பதாகக் கூறினார்.

சூரஜுக்கு குழப்பமாக இருந்தது. சரி! அம்மா தன்னால் முடிந்ததை செய்திருக்கிறாள். அவளை குற்றம் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டபடி சப்பாத்தையை சிரமப்பட்டு உடைத்து வாயில் போட்டுக் கொண்டான். ஆனால் அவனால் அதை கடிக்கவே முடியவில்லை. அழுத்திக் கடித்தால் பல்லே உடைந்துவிடுமோ என்று தோன்றியது.

சரி! சப்பாத்தி வேண்டாம். சாதம் சாப்பிடலாம் என்று பார்த்தால் அன்று அம்மா சாதமே வைக்கவில்லை. இதென்ன? இன்று பட்டினியா? என்று நினைத்துக் கொண்டு எழுந்தான்.

அவன் சோர்ந்து போய் எழுந்து போவதைப் பார்த்த கௌரிக்கு மனம் கலங்கியது.

"ஏய் சுட்கி! அவன் பாவம்டீ! பசியோட எழுந்து போறான்.." என்று வருத்தத்துடன் கூறினாள்.

"ம்மா! பையா வாழ்க்கைக்காக இத பண்றோம்! கொஞ்சம் அமைதியா இருங்கம்மா! ப்ளீஸ்!" என்றாள்.

"அவனால பசி தாங்க முடியாதுடீ! வேணும்னா அவன் சாப்பிட்டப்றம் இந்த ட்ராமாவ பண்லாம்டீ!" என்றாள்.

"பசி அடங்கிடுச்சுன்னா அவனுக்கு பாபியோட நெனப்பே வராது.. நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.." என்றாள் தீபிகா மீண்டும்.

"வீட்டுக்கு சம்பாதிச்சி போடற புள்ளை.. இப்டி பண்றியேடீ?!" என்று வருத்தமாகக் கடிந்து கொண்டாள் கௌரி.

"அப்ப பாபிக்கு குழந்தை வராது! பரவால்லையா?" என்று கோபமாகக் கேட்டாள் தீபிகா.

"வரணும்தான்.." கௌரி மெல்லிய குரலில் இழுத்தாள்.

"அப்ப அமைதியா இருங்க! இன்னிக்கு ஒரு நைட்! நாளைக்கு காலையில எழுந்து பையாவுக்கு நல்லா சமைச்சி குடுங்க.." என்று கூறிய தீபிகா எழுந்து சென்று சூரஜ் என்ன செய்கிறான் என்று பார்த்தாள்.

தீன்தயாளுக்கு நடப்பது என்னவென்று லேசாகப் புரிந்து அவரும் மனைவியை சமாதானம் செய்தார்.

பசியோடு எழுந்து சமையலறைக்குச் சென்ற சூரஜ் இரண்டு சொம்பு நிறைய தண்ணீர் எடுத்து கடகடவென்று குடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தான்.

மதியம் அவன் வந்ததும் தன் அலுவலக வேலையில் மூழ்கியிருந்ததால் அறையின் நிலை அவன் கருத்தில் பதியவில்லை.

'செம்ம டயர்ட்! இப்ப ஒழுங்கா தூங்கினாதான் நாளைக்கு ஆஃபீஸ் வேலையில கான்சென்ட்ரேட் பண்ண முடியும்' என்று நினைத்தவன் மெத்தையின் மேல் விழ எத்தனிக்க, அதன் மேல் அவன் அவிழ்த்துப் போட்ட துணிமணிகள், அன்று காலை செல்வி அவிழ்த்துப் போட்ட துணிமணிகள் எல்லாம் ஒருபக்கமும் நேற்று துவைத்த துணிகள் மடிக்கப்படாமல் மறுபக்கமும் கோபுரம் போல சேர்ந்திருந்தன.

'இவ்ளோ துணி எங்க இங்க வந்துச்சு? இப்ப நா எப்டி படுப்பேன்?' என்று சிந்தித்தபடியே துவைக்காத துணிகளை எடுத்துப்போய் அதற்குரிய இடத்தில் போட்டுவிட்டு துவைத்த துணிகளை எடுத்து அங்கிருந்த நாற்காலியில் போட்டான்.

அப்படி நாலு முறை அறைக்குள் நடந்த பின்பே அறையில் இருந்த குப்பை அவனுடைய கண்ணிலும் கருத்திலும் பதிந்தது. அவனுடைய உள்ளங்காலில் பெரிய மணல் துகள்கள் ஒட்டிக் கொண்டு உறுத்தியது.

'என்ன இது ரூம்ல இவ்ளோ குப்பை? யாரும் இந்த ரூமை பெருக்கலயா?' என்று நினைத்தபடியே தன் உள்ளங்காலை தட்டிக் கொண்டு மெத்தையில் விழுந்தான்.

ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. ஒரு புறம் பசி வயிற்றைக் கிள்ளியது. மறுபுறம் செல்வி இல்லாத வெறுமை அவனைத் தாக்கியது.

'ரொம்ப பசிக்கிதே! என்ன பண்லாம்? அம்மா எதாவது திங்கறதுக்கு வெச்சிருக்காங்களான்னு பாக்கலாம்!' என்று நினைத்து எழுந்தான்.

சமையலறைக்குச் சென்று ஃப்ரிட்ஜில் எதாவது வைத்திருக்கிறார்களா என்று தேடினான். ஃப்ரிட்ஜில் எதுவும் இல்லை. சமையல் மேடை மேல் ஒரு கூடையில் இரண்டு ஆப்பிள்கள் இருந்தன. அதை எடுத்து அவசரமாகக் கடித்தான். ஆனால் அது உண்மையான ஆப்பிள்கள் இல்லை. மெழுகு பொம்மைகள்.

'அட ச்சே! பொம்மை ஆப்பிள்! இத யாரு இங்க வச்சாங்க?!' என்று அலுத்தபடியே அதை துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்தான்.

'இப்ப என்ன பண்றது?' என்று மீண்டும் ஃப்ரிட்ஜைக் குடைந்தான். கொஞ்சம் கேரட்டும் தக்காளியும் ஒரு பெரிய ரொட்டி (Bread) பேக்கெட்டும் இருந்தது இப்போதுதான் அவன் கண்ணில் பட்டது.

சூரஜ் வாய் கொப்பளிக்கச் சென்றிருந்த போது தீபிகா அதை அவனறியாமல் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.

'மொதல்ல பாக்கறச்சே இது இல்லையே!' என்று குழம்பியபடியே தீபிகா வைத்த ரொட்டியை எடுத்தான்.

'இதுவும் பொம்மையோ?!' என்ற சந்தேகம் திடீரென்று எழ, அவசரமாக கத்தியை வைத்து கேரட்டையும் தக்காளியையும் நறுக்கினான். ரொட்டித் துட்டை எடுத்து கையினால் பிய்த்துப் பார்த்தான்.

'நல்ல வேளை! பொம்மையில்ல! தேங்க் காட்!' என்று தனக்குள் சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டவன் தக்காளி கேரட் இரண்டையும் வில்லை வில்லையாக நறுக்கி ரொட்டித் துண்டுகளின் நடுவில் வைத்து சேன்ட்விச் போல வேக வேகமாக சாப்பிட்டான்.

'பட்டர், சீஸ், க்ரீன் சட்னி, ஸ்வீட் சட்னி வெங்காயம் எதுவுமில்ல.. ஆனாலும் இது தேவாம்ருதமா இருக்கு!' என்று நினைத்துக் கொண்டே சில ரொட்டித் துண்டுகளை காலி செய்தான்.

கூடவே தண்ணீர் எடுத்து மடக் மடக்கென்று குடித்தான். இப்போதுதான் அவன் பசி அடங்கியது.

'யப்பா சாமீ! ஒரு நாள் செல்வி இல்ல! அதுக்கே நா இந்த கதி ஆகிட்டேனே?!' என்று நினைத்தபடி தன்னுடைய அறைக்கு வந்தான்.

குப்பைக் கூளமாய் இருந்த அவனுடைய அறை அவனை அருவருக்கச் செய்தது. ஆயினும் வேறு வழியின்றி மெத்தையில் படுத்தான். துவைத்த துணிகளில் செல்வியின் துப்பட்டா காற்றில் அசைய அதை கை நீட்டி எடுத்து தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டான்.

'டமில் இல்லன்னா எனக்கு சோறு இல்ல.. என் ரூம் கண்றாவியா ஆயிடுச்சு.. அவ இல்லாம என்னால தூங்க முடியல.. ஐ மிஸ் யூ டமில்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது. தன் கைப்பேசி எடுத்து மணி பார்க்க, மணி இரவு பதினொன்றரை என்று காட்டியது.

'இவ்ளோ நேரம் ஆயிடுச்சே! அவ நைட் எட்டு மணிக்கு மேல யார் கிட்டயும் பேச மாட்டாளே! சரி! எதுக்கும் மெசேஜ் பண்ணுவோம்!' என்று நினைத்தபடியே வாட்ஸ்அப் செயலியை திறந்தான்.

வாட்ஸ்அப்பில் செல்வியின் பெயரை அவன் தேட வேண்டியிருந்தது. அவளுக்கு அவன் செய்தி அனுப்பி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. அதுவும் விராட் திருமணத்துக்கு டிக்கட் புக் செய்வதற்காக ஏதோ விவரம் கேட்டு செய்தி அனுப்பியிருந்தான்.

அதன் பிறகு அவன் அவளுக்கு எந்த செய்தியும் அனுப்பியிருக்கவில்லை. அவனுக்கு மனதில் குற்றவுணர்ச்சியாக இருந்தது.

இதற்கு முன் எப்போது அவளுக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பினான் என்று மேலே ஸ்க்ரால் செய்தான்.

ம்ஹூம்! அவன் அமெரிக்காவில் இருக்கும் போது காதலாக அனுப்பிய செய்திகளுக்குப் பின் அவன் அவளுக்கு செய்தியே அனுப்பவில்லை.

'என்ன இது? நா டமிலுக்கு ஒரு மெசேஜ் கூட அனுப்பலயா? அட ஆண்டவா?!' என்று நினைத்தான்.

'மொதல்ல மெசேஜ் அனுப்பணும்!' என்று அவசர அவசரமாக டைப் செய்யத் தொடங்க, அவள் கடைசியாக வாட்ஸ்அப் பார்த்த நேரம் அன்று மாலை நான்கு மணி என்று காட்டியது!

'அவ ஈவ்னிங் ஃபோர் ஓ க்ளாக் அப்றம் மெசேஜே பாக்கலயா? ஏன்? பத்திரமா சென்னை போய் சேர்ந்தாளா இல்லையா? அதப்பத்தி கூட ஏன் மெசேஜ் பண்ணல?' என்று நினைத்தபடியே செல்வியின் சேட்டிலிருந்து வெளியில் வந்தவனின் கண்களில் தீபிகாவின் செய்தி பட்டது.

தீபிகாதான் செல்வி சென்னைக்கு பத்திரமாக சென்று சேர்ந்து விட்டதாகத் தெரிவித்திருந்தாள். அதையே அவன் இப்போதுதான் கவனித்தான்.

'சுட்கி ஏன் இந்த மெசேஜை எனக்கு அனுப்பினா? இவ ஏன் சுட்கிக்கு இந்த மெசேஜை அனுப்பினா?' என்று நினைத்து குழம்பியபடியே தீபிகாவின் சேட்டை திறந்தான்.

செல்வி சென்னை செல்வதற்கான விமான டிக்கெட்டை தன் தங்கைக்கு அனுப்பியிருந்ததையும் அப்போதுதான் கவனித்தான்.

அது மட்டுமல்லாமல் செல்வி சென்னை செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் பற்றி தீபிகாதான் அவனுடன் பகிர்ந்திருந்தாள்.

'அட ஆண்டவா! என் பொண்டாட்டி சென்னை போறது பத்தி எல்லா விவரமும் சுட்கிட்ட தான் நா பேசியிருக்கேன்.. அதான் டமில் என்கிட்ட பேசாம எல்லாம் சுட்கியே பேசியிருக்கா.. நா ஏன் இப்டி பண்ணினேன்?' என்றெல்லாம் நினைத்து குழம்பியபடி படுத்துக் கிடந்தான். அவனுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் வருவேனா என்றிருந்தது.

'இதென்ன? ஒரு நாள்ல இப்டி ஆகிட்டேன்?' என்று தனக்குத் தானே நொந்து கொண்டபடி புரண்டு கொண்டிருந்தான்.

அதிகாலை வரையும் உறக்கம் வராமல் தவித்துவிட்டு அதன் பின்னர் லேசாக உறங்கினான். அப்போதும் நன்றாக உறங்க முடியவில்லை.

இனி படுத்துக் கிடப்பதில் பயனில்லை என்று நினைத்து எழுந்துவிட்டான்.

மீண்டும் வாட்ஸ்அப் செயலியை எடுத்துப் பார்த்தால் செல்வி இன்னும் வாட்ஸ்அப் பார்க்கவில்லை என்றே காட்டியது.

'இவ மொபைலே பாக்க மாட்டா போலிருக்கே!' என்று நினைத்துக் கொண்டான்.

இன்று அவனுக்கு அவனுடைய உடன் பிறந்த சகோதர சகோதரியிடமிருந்து பெரிய பெரிய அணுகுண்டுகள் வரவிருப்பது தெரியாமல் குளித்துக் கிளம்பி அம்மா கொடுத்ததை சுவாரசியமில்லாமல் கொறித்துவிட்டு அலுவலகம் கிளம்பினான்.



புதுமணத் தம்பதியும்
புது வாழ்வின் இன்பம் நாடி
தேனிலவின் சுகம் தேடி
விடை பெற்றுச் சென்றனரே!

மருமகளின் குறை களைய
மருத்துவ உதவி நாடுவோமென
தாயவள் பேசிய சொற்கேட்டு
மகளும் துயருற்றாள்!

மருத்துவம் படித்தவளின் நாவோ
அண்ணியிடம் குறையில்லையென
அன்னையிடம் உரைத்ததுடன்
அடுத்த திட்டமும் வரையறுத்ததுவே!

பிறந்த வீட்டு அழைப்பை ஏற்று
பிரிந்தாளே மங்கை மன்னவனை!
அருகிலே துணையில்லாமல்
மன்னவனும் மயங்கி நின்றான்!

செல்வியின் அருமை புரிந்திடுமோ?
அவள் மணிவயிறு திறந்திடுமோ?
இறைவனே! அருள் செய்வாயோ?
இனிமை அள்ளித் தெளிப்பாயோ?


- C. Puvana


- காதலின் மொழி என்ன?
 
Top