கீதவாணியிடம் இருந்து சம்மதத்தை பெற்று விட்டான் கதிர்.ஆனால் அம்மாவின் கண்டிஷனை ஒத்துக் கொண்டதை நினைத்து அவன் பெரிதாக நினைக்கவில்லை.பார்த்திபனிடம் விஷயத்தை சொன்ன கீதவாணி ஆறு மாதத்திற்குள் எப்படியாவது கதிருக்கு திருமணம் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் சொன்னார்.
ஆனந்த் கதிரிடம்" நீ ஒரு ரவுண்டு அடிக்கிறதுக்கு எப்படி எல்லாம் ஒரு காரணத்தை சொல்லுறே?" என்று கேட்க... "ஆமாம் அம்மாகிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசினால் தான் வேலை நடக்கும் அதனால் தான் அம்மா சொன்னதற்கு ஓகே சொன்னேன்" என்றான்.
"சரி தான் ஆனால் நீ திரும்ப வருவதற்குள் அம்மா பொண்ணு பார்த்து விட்டால் என்ன செய்ய? உனக்கு கல்யாணத்தில் விருப்பம் தானா? "என்று அவன் கேள்வி எழுப்ப...
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ,அம்மா சம்மதிச்சதே இப்போதைக்கு நான் சந்தோஷத்துல இருக்கேன், என்றவன் அதுவும் இல்லாமல் நான் காதலிப்பதாக இருந்தால் தானே கல்யாணத்தை பற்றி யோசிக்கனும் எனக்கு தான் அந்த காதல் என்பதே வராதே" என்று சொல்ல ...
ஆனந்த்"இப்படி சொல்றவங்க தான் பிறகு உருகி உருகி காதலிக்கிறதை நான்
பார்த்துக்கிறேன்"என்றவனுக்கு அசட்டையாக " எல்லாம் பார்க்கலாம்" என்றான்.
"அதெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை "என்று கேலியாக சொன்ன கதிர்நிலவன் காதலில் விழுவானா இல்லையா? என்று போகப் போக தெரிந்து விடும்.
மறுநாள் .... கதிரின் அத்தை தன் குடும்பத்தோடு வந்தாள். பேச்சில் நாகரிகத்தோடு உடையில் சேர்ந்திருக்க நவீன அழகியான அத்தை மகள் வித்யா கதிரை காண அவனது அறைக்கு சென்றாள்.
அங்கே கதிர் தனது அறையின் உள்ளே ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கும் போது அவனுக்கு பின்னாடி வந்து கட்டிக் கொள்ள திடீரென நடந்த நிகழ்வில் தன்னை சுதாகரித்து அவளை தன்னிடம் இருந்து விடுவித்துக் கொண்டான் கதிர்.
"வித்யா என்ன பண்ணுறே?" என்று கோபமாக கேட்க...
அவளோ எந்த வித பதற்றமும் இல்லாமல் அவனிடம் இன்னும் ஒட்டிக் கொண்டு "என்ன கதிர் நீங்க? நான் உங்க அத்தை பொண்ணு உங்களை கட்டிப்பிடிக்க அனுமதி வாங்கணுமா என்ன?" என்று கேட்க ...
அதற்கு அவன் "அத்தை பொண்ணாக இருந்தாலும் ஒரு வரைமுறை இருக்கு வித்யா,இனிமேல் இப்படி செய்யாதே" என்று கண்டிப்போடு அவன் சொல்ல... அவளோ அவன் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ,"என்ன கதிர் நீங்க? வெளிநாட்டுல இருந்து வந்த மாதிரியா பேசிறீங்க? அங்கே இதெல்லாம் சகஜம் தானே என்னவோ நான் கட்டிப்பிடிச்சதை பெரிசா பேசுறீங்க" என்று கிண்டலோடு சொல்ல...
அவள் பேசுவதை விரும்பாதவன் " இங்கே பாரு வித்யா அங்கே இது சாதாரண விஷயமா இருக்கலாம்.,ஆனால் எனக்கு இதெல்லாம் பிடிக்காது" என்று முகத்திற்கு நேராக பேசிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
வித்யா தன் மனதில் "நீ என்னை சுற்றி வருவது போல் உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று நினைத்துக் கொண்டாள்.
அவனது அத்தையின் பேச்சில் எப்பொழுதும் பணமும் கவுரமும் தான் அவருடைய பேச்சில் இருக்கும்.அதனால் அவரிடம் பேசுவதை எப்படியாவது தவிர்த்து விடுவான் கதிர்.ஆனால் அவனின் அத்தையோ இந்த முறை கதிரை விட்டால் தானே அவனை பிடித்து தன்னுடைய பெருமைகளை சொல்லாமல் விடுவது இல்லை என்ற முடிவோடு இருந்தவர் இன்றும் அது தான் நடந்து கொண்டு இருந்தது.
"வா கதிர் எப்படி இருக்கே? என்று கேட்க... "நல்ல இருக்கேன் அத்தை "
"அப்புறம் எல்லா நாட்டையும் சுத்தி பார்த்தாச்சா?"என்று கேட்க...
இவனோ "இல்லை "என்று சொல்ல உடனே," என்ன கதிர் நீ எல்லா இடத்தையும் இப்பவே சுத்திப் பார்க்க ஆரம்பிக்கனும்,இப்ப கூட அடுத்த
மாதம் நாங்க எல்லோரும் இத்தாலி போறோம் "என்று தனது பெருமைகளைப் பற்றி பேச ஆரம்பிக்க...
எப்படி? அத்தையிடம் இருந்து தப்பிக்க என்று யோசித்தவன் அங்கே வந்த பார்த்திபனை கண்டு "அப்பா வாங்க"என்று அவரை தன்னோடு அழைத்து சென்றவன் தான் அடுத்த வாரம் செல்ல இருப்பதைப் பற்றி சொன்னான் கதிர்.
அதைக் கேட்டு பார்த்திபன் "எனக்கு தெரியும் கதிர் அம்மா எல்லாத்தையும் சொல்லி விட்டாள் " என்றவர்
"சரி கதிர் உன்னோடு சேர்ந்து வருவதற்கு ஆளுங்களையும் நான் ஏற்பாடு பண்ணுறேன்" என்றார்.
"இல்லை அப்பா நான் தனியா போலாம்னு இருக்கேன்"
"என்ன சொல்றே? தனியா எப்படி போவாய்? உனக்கு பாதுகாப்பு முக்கியம் "என்று சொல்ல...
" இல்லை அப்பா எனக்கு சாதாரண ஒரு ஆளா போய் எல்லா இடத்தையும் பார்க்கனும் தான் என்னுடைய விருப்பம், அதனால எங்கூட யாரும் வர வேண்டாம் என்று சொல்ல...
" சரி நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும் ஆனால் உன்னுடைய அடையாளத்தை என்ன செய்வாய்? "என்று கேட்க ...
" அது நான் இப்போதைக்கு இருப்பதை விடுத்து கொஞ்சம் என்னை மாத்திக் கொண்டால் போதும்,அப்புறம் அம்மாகிட்ட நாம பேசிய விஷயத்தைச் சொல்லாதீங்க" என்றான் கதிர்.
பார்த்திபன் கதிரிடம் சரி என்று
சொன்னாலும் அவனுக்கு தெரியாமல் அவனை கண்காணிக்க இரண்டு பேரை நியமிக்க எண்ணினார்.
வித்யா அங்கேயே தங்கி அவனை தொல்லை செய்து கொண்டிருந்தாள்.அவன் செல்வதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அம்மாவிடம் சொல்லி இருந்தான்.முக்கியமாக வித்யாவிற்கு தான் தெரியக் கூடாது என்று எண்ணினான் கதிர்,ஏனோ அவள் அதிகப்படியான உரிமை எடுத்துக் கொள்வது அவனுக்கு பிடிக்கவில்லை.ஏற்கனவே கதிரிடம் பழகிய பெண்கள் அவனிடம் இருக்கும் பணத்தையும் அழகையும் கண்டு வந்து தனக்காக எதையும் செய்வதாக சொல்வது அவனுக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தது.தங்களுடைய உண்மையான குணத்தை விடுத்து அவனுக்காக தங்களை மாற்றிக் கொள்வது போல் செய்வது கதிருக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தது.
ஒருவாரம் கடந்து செல்ல ... தனது பெற்றோரிடமும் நண்பனிடமும் சொல்லி விட்டு கீதவாணியின் அழுகையோடு பயணத்தை தொடர்ந்தான் கதிர்.
எங்கே முதலில் செல்ல வேண்டும்? என்று முன்னரே திட்டமிட்டு சென்றான்.ஒவ்வொரு மாநிலத்தின் முக்கியமான இடங்களுக்கும் பயணித்தான் கதிர்.
மூன்று மாதங்களுக்கு பிறகு .....
மலைக்கோட்டை நகரமான திருச்சியில் ....காலை நேரம் சங்கரின் வீட்டில் அவரது மனைவி
சுந்தரி கத்திக் கொண்டு இருந்தாள்," ஏய் மலரு எங்கே போனே? எங்கே போனா இவ?" என்று கத்திக் கொண்டு இருந்தவர் கிச்சனில் இருந்த அண்ணியிடம் "அண்ணி மலரு எங்கே? என்று கேட்க...
சுந்தரிஅவ கோயிலுக்கு போறேன்னு சொன்னாள் இந்நேரம் வந்திருக்கனுமே? என்று சொல்ல... அங்கே வந்த பன்னிரெண்டு வயதான சுந்தரியின் மகன் சதீஷ் "அம்மா அக்கா பக்கத்து தெருவுல வண்டி ஓட்ட கத்துக்கிட்டு இருக்காங்க" என்று சொல்ல... சுந்தரி கோபத்தோடு "இவளுக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லை இதுல எதுக்கு தேவையில்லாத வேலை,வீட்ல ஒழுங்கா வேலை செய்யாம எப்படி ஊர் சுத்தலாம்னு? ஒரே நினைப்பு பொம்மளை பிள்ளையை ஒழுங்கா வளர்க்கனும் இல்லைன்னா இப்படி தான் பொய் சொல்லுவா" என்று வாயில் வந்த வார்த்தைகளைக் கொண்டு வசைபாட சங்கர் தனது மனைவியிடம், "வாயை மூடு சுந்தரி மலர் இப்போ என்ன பண்ணிட்டான்னு இப்படி பேசுற?" என்று கேட்க ...
"என்னடா இது இன்னும் அண்ணன் பொண்ணுக்கு வக்காலத்து வாங்க வரலையேன்னு நினைச்சேன் கரெக்ட்டா வந்துடுங்க இதுவே நான் ஏதாவது சொன்னா காதுலே விழாது" என்று கணவனிடம் கடிந்து கொள்ள காமாட்சி மகளை சொன்னதை பற்றி சொன்னதைக் கேட்டு கண்ணில் தோன்றிய கண்ணீரை துடைத்தபடி தனது வேலையை தொடர்ந்தார்.
வீட்டில் பெரிய கலவரம் முடிந்து அமைதியாக இருக்க வீட்டில் மெதுவாக யாருக்கும் சத்தம் கேட்காத மாதிரி மெதுவாக அடி எடுத்து வைப்பதற்கு தனது காலின் அணிந்துள்ள கொலுசின் சத்தம் கேட்காமல் நடக்க தனது மையிட்ட மீன்விழி கண்ணின் கருவிழியை உருட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் கலைமலர்.பெயருக்கு ஏற்ற மாதிரி அழகுக்கு அழகான அவள் முகத்தில் எப்பொழுதும் முகத்தில் கலைநயத்தோடு புன்னகை தவழ விட்டவளின் மனமோ மலரை விட மெல்லிய மனதுடையவள் உள்ளே வர அவளுக்காக காத்திருந்தார் சுந்தரி.
"என்னம்மா கோயிலுக்கு போயிட்டு வந்துட்டியா? "என்று கேட்க...
"போனேன் சித்தி அங்கே போன என் தோழி தேவி இருக்கால்ல அவ வண்டி ஓட்ட என்னை வண்டியை பின்னாடி பிடிக்க சொல்லி கூப்பிட்டா அதான் வர லேட்டாயிடுச்சு" என்று சொல்ல...
"இல்லை நீ பொய் சொல்லுறே சதீஷ் வந்து சொன்னான் நீ தான் வண்டி ஓட்டிக் கிட்டு இருந்தேன்னு"
" இல்லை சித்தி உங்ககிட்ட பொய் சொல்லுவேனா? என்றவள் எங்கே சதீஷ்? இங்கே வாடா சதீஷ் நீ பார்க்கும் போது நான் வண்டி ஓட்டினேனா இல்லை வண்டியை பிடிச்சு தள்ளிட்டு இருந்தேனா?" என்று கண்களை உருட்டிக் கொண்டு அவனை குழப்ப திரும்ப திரும்ப கேட்க ....
அவனோ தலையை சொறிந்து கொண்டு "தள்ளிட்டு தான்ம்மா இருந்தாங்க அக்கா" என்று சொல்ல...
"சித்தி பார்த்தீங்களா சதீஷ் என்ன சொன்னான்னு? நான் பொய் சொல்லலை போதுமா இந்தாங்க பிரசாதம் "என்று அவரிடம் நீட்டி விட்டு சித்தப்பாவை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றாள் கலைமலர்.
கலைமலர் தன்னுடைய பத்தாவது வயதில் அப்பாவை இழந்தவள் தன் அம்மா காமாட்சியோடு அப்பாவின் தம்பியான சங்கரோடு இருக்கிறாள்.சுந்தரிக்கு அவர்களோடு இருப்பது பிடிக்கவில்லை.ஆனால் அவர்கள் இருக்கும் வீடு அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் சமமான பங்கு இருப்பதால் அவர்கள் இருவரும் இருப்பதற்கு மறுப்பேதும் கூறாமல் இருக்கிறாள்.அவர்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் என இருபிள்ளைகள் இருந்தனர்.சுந்தரிக்கு மட்டும் தான் அவர்களை பிடிக்கவில்லை.ஆனால் சங்கரும் பிள்ளைகளும் இருவரும் மீதும் பாசமாக இருந்தனர்.மலருக்கு ஸ்கூட்டி ஓட்ட வேண்டும் என்ற ஆசையை சுந்தரிக்கு தெரியாமல் சங்கர் அதற்கு அனுமதி அளித்து இருந்தார்.அதனால் தான் மலர் தனது வேலையை முடித்து விட்டதாக சித்தப்பாவிடம் சொன்னாள்.சங்கருக்கு தனது அண்ணனின் ஸ்தானத்தில் தன்னால் முடிந்த உதவிகளை சுந்தரிக்கு தெரியாமல் செய்கிறார்.இந்த சதீஷ் அம்மாவிடம் எப்பொழுதும் பொய்யை சொல்லாமல் உண்மையே சொல்லுவான்.அப்படி தான் கண்ணால் பார்த்ததை அப்படியே சொல்லி விட்டான்.
"மலர்" என்று அம்மா என்றழைக்க பதில் வராததால் தனது அறைக்கு செல்ல அம்மா அழுது கொண்டு இருப்பதை கண்டவள் " அம்மா ஏன் அழுகிறீங்க?" என்று கேட்க... அவரோ முகத்தை திருப்பிக் கொள்ள "என்னம்மா என்னாச்சு?" என்று கேட்க...
" ஏன் மலர் நீ எதை செய்யாதேன்னு சுந்தரி சொல்லுறாளோ அதை ஏன் செய்ற? " என்று கேட்க...
" என்ன என்னை திட்டினிங்களா?"என்று கேட்க அவரிடம் அமைதி அம்மாவின் முகத்தை தன் புறம் திருப்பியவள் "அம்மா சித்தி என்னை இப்பவா திட்டுறாங்க எப்பவுமே இப்படி தானே பேசுறாங்க இதை போய் பெரிசா நினைச்சுகிட்டு விடுங்க"
"இல்லைம்மா நீ எனக்கு ஒரே பொண்ணு உன் சின்ன சின்ன ஆசையை கூட என்னால நிறைவேத்த முடியலை அதை நினைச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு" என்று சொல்ல...
"விடுங்க அம்மா அதான் சித்தப்பா இருக்கும் போது எனக்கு என்ன கவலை "என்று சொல்ல..."என்ன சொல்ற மலர்?"
"ஆமாம் அம்மா நான் தேவிகிட்ட வண்டி ஓட்ட ஆசையா இருக்குன்னு சொன்னேன்,அதை சித்தப்பா கேட்டுகிட்டு சித்திக்கு தெரியாம வண்டி வாங்கி அதை தேவி வீட்ல விட்டுடாங்க அம்மா, அந்த வண்டில தான் ஓட்ட கத்துக்கிட்டேன்" என்றாள்.
அப்பொழுது அங்கே வந்த சங்கர்" மலர் உன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்ல தம்பி எதுக்கு இதெல்லாம்?" என்று கேட்க ...
"அண்ணி அண்ணன் இருந்தா செய்ய மாட்டாங்களா அதை தான் நான் செய்தேன் விடுங்க இனிமேல் இதை பற்றி பேச வேண்டாம்" என்று தடுத்து விட்டு சென்று விட்டார் சங்கர்.
"அம்மா வாங்க எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு நான் சீக்கிரமா போகனும் என்று சொல்லி விட்டு மலர் ரெடியாகி தனது டிபன் பாக்ஸை வாங்க மலர் சுந்தரி உன் மேல உள்ள கோபத்துல என்னை சாப்பாடு செய்ய விடலை,காலைல செஞ்ச இட்லி வைச்சு இருக்கேன் சாப்பிடு "என்று கொடுத்து விட்டு சென்றார்.
அவள் வாசலருகே வந்ததும் மலரின் தோழி ஸ்கூட்டியோடு வந்து நின்றாள்.அவள் முன்னே இருந்து ஓட்ட மலர் பின்னே அமர்ந்து கொண்டு இருவரும் தங்கள் வேலை செய்யும் பள்ளிக்கு சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும்... "தேவி வண்டியை நிப்பாட்டுடி" என்று மலர் சொல்ல, வண்டியை நிறுத்தியதும் தேவியை இறங்க சொல்லி விட்டு அவளை பின்னே அமர சொல்லி மலர் ஸ்கூட்டியில் அமர்ந்து கொண்டாள்.
" ஏய் மலரு இன்னும் நல்ல ஓட்ட கத்துகிட்ட பின்னாடி ஓட்டலாம் சொன்ன கேளுடி"
ஏய் இந்த தெரு பக்கமா யாரும் வரமாட்டாங்க அதனால தைரியமா ஓட்டலாம்.நீ சும்மா இரு மெயின் ரோடு வந்ததும் நீயே ஓட்டு" என்று சொல்லி விட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள் மலர்.
"ஏய் பரவாயில்லை நான் நல்ல டிரைவ் பண்றேன்ல "என்று மலர் சொல்ல...
" ஏய் அதை நான் சொல்லனும் நீயே உன்னை புகழக் கூடாது என்றவள் வண்டியை முன்னாடி பார்த்து ஓட்டு யார் மேலயாவது இடிச்சிற போற "என்று தேவி சொல்லவும் "ஏய் போடி" என்று மலர் பழிப்பு காட்ட இவர்களின் வண்டிக்கு எதிராக நேராக ஒருவன் வந்து கொண்டிருக்க...
தேவி பிரேக் பிடிக்க சொல்ல மலருக்கு பதற்றத்தில் நிலை தடுமாறி அவன் மீது மோதி விழ எதிரே வந்தவன் தலைசுற்றி விழ பதற்றத்தில் இருவரும் வேகமாக அவன் மீது வண்டியை இடித்து விட்டனர்.அவனுடன் விழ இவர்களும் விழுந்தனர் ,விழுந்த இருவரும் வண்டியிலிருந்து எழுந்துக் கொண்டு வண்டியை தூக்கி நகர்த்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க அங்கே யாரும் இல்லாததை உணர்ந்து கொண்டு மலர், தேவியிடம்" நீ முதல்ல வண்டியை வந்த பக்கமா கொண்டு போய் வேற பக்கமா போய்டு ,ஏய் என்ன சொல்ற முதல்ல அந்த ஆளுக்கு என்னாச்சுன்னு பாரு?" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
"எனக்கு பயமா இருக்கு" என்ற தேவியிடம் "நான் வண்டியை வைச்சு இடிச்சதை யாரும் பார்க்கலை,யாராவது வந்தால் நான் இந்த ஆளு சும்மா தன்னாலே மயக்கம் போட்டு விழுந்தான் என்று சொல்லி பார்க்கிறேன்" என்றாள்.
"ஏய் வேண்டாம் டி உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்" என்றாள் தேவி.
"ஏய் லேசா தான் அடி பட்டு இருக்கும். நான் பார்த்துக்கிறேன்" என்றவள் " தேவி யாராவது வந்துட்டாங்கன்னா நாம வண்டி இடிச்சு தான் இப்படி ஆயிடுச்சுன்னு சொல்வாங்க தேவையில்லாம வீடு வரைக்கும் பிரச்சினை போகும்.
ஏற்கனவே எல்லோரும் என்னால வந்த பிரச்சினை சமாளிச்சு இப்ப தான் நிம்மதியா இருக்காங்க. இப்ப இது வேற தேவையில்லாம பிரச்சினை வரும்.நீ ஸ்கூல்ல நான் வருவதற்கு ஒரு மணி நேரமாகும் என்று பர்மிஷன் கேட்டு வை" என்று தனது கைப்பையை எடுத்துக் கொண்டு தேவியை அனுப்பி விட்டு விழுந்தவன் அருகில் சென்று அவனை பார்க்க அவனோ பார்க்க நல்ல வாட்ட சாட்டமான ஆளாக இருக்க அவன் கண்களோ பாதி திறந்து பாதி மூடி இருக்க முனகல் சத்தம் கேட்டு அவனருகில் சென்றவள்," ரொம்ப அடி பட்டுடிச்சா என்று கேட்க அவனோ தண்ணீர் "என்று கேட்க ...
தன் கைப்பையை திறந்து அதிலிருந்த பாட்டிலை எடுத்து தண்ணீரை எடுத்து அவனது வாயில் ஊற்றி விட்டு அவனை கைத்தாங்கலாக பிடிக்க முடியாமல் தடுமாற அப்பொழுது அந்த பக்கமாக ஒருவர் வர "என்னாச்சு" என்று கேட்க, ம7லரோ" கீழே விழுந்துட்டாங்க அதான் உதவி செய்யலாமேன்னு அப்படியா வாம்மா ரெண்டு பேரும் சேர்ந்து அதோ அந்த பக்கமா உட்கார வைக்கலாம்" என்று சொல்லி இருவரும் சேர்ந்து அவனை பிடித்து ஓரிடத்தில் அமர வைத்தனர்.
அவனை பார்க்கும் போது மலருக்கு தோன்றியது ஒன்று தான்' இவன் வீக்கா இருக்கானா? இல்லை நாம வண்டியை இவன் மேல ரொம்ப வேகமா இடிச்சுட்டோமா?' என்று யோசித்த வண்ணம் அவனை மேலும் கீழும் பார்த்தவாறே அமர வைத்தாள்.
வந்தவர் "யம்மா எனக்கு வேலை இருக்கு நான் போறேன் "என்று சொல்லி விட்டு சென்றார்.அவனுடைய முகத்தில் லேசாக தண்ணியை தெளித்து தண்ணீரை திரும்பவும் குடிக்க கொடுத்ததும் கொஞ்சம் நினைவு திரும்ப "சார் உங்க பேரு? "என்று கேட்க என் பெயர் "கதிர் "என்றான் அவன்.
(தொடரும்)