கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

25. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 25

விராட் ஆனந்தி தம்பதி ஷிம்லாவில் இருந்தும் சூரஜ் செல்வி தம்பதி சென்னையில் இருந்தும் ஒரே நாளில் அடுத்தடுத்து மும்பை வந்தனர்.

இரு தம்பதிகளும் மனம் நிறைய உற்சாகத்தையும் இனிமைகளையும் சந்தோஷங்களையும் வழிய வழிய நிரப்பிக்கொண்டு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் வீடு திரும்பும்போது தீபிகா வீட்டில் இல்லை. தில்லி சென்றிருந்தாள். தன்னுடைய மேற்படிப்பு சம்மந்தமாக பழைய கல்லூரியில் தன் பேராசிரியர்களிடம் ஆலோசனை கேட்பதற்காகச் சென்றிருந்தாள்.

வீடு வந்ததும் செல்வியும் ஆனந்தியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர். அவர்களிடையே பேசிக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

சகோதரிகள் இருவரும் இத்தனை அன்பு பாராட்டுகிறார்களே என்று சூரஜுக்கும் விராட்டுக்கும் ஏன், கௌரிக்குமே ஆச்சர்யம்.

விராட் சூரஜுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

"பாரு.. பாபி எவ்ளோ சந்தோஷமா இருக்காங்கன்னு.. இததான் நாங்க உன்கிட்ட எதிர் பார்த்தோம்!" என்று.

அவனுடைய கையைப் பற்றிக் கொண்டான். அவன் வாயிலிருந்து நன்றி என்ற வார்த்தை வரவில்லையே தவிர அவனுடைய கண்கள் கலங்கின.

"மூஞ்சியப் பாரு.." என்று சொல்லி அண்ணனின் முதுகில் ஒன்று போட்டான் விராட்.

"அடப்பாவி! ஏண்டா இப்டி அடிச்ச.. அக்யூஸ்ட்டுங்கள அடிச்சி அடிச்சி பழகிடுச்சு போல.. என்னா வலி வலிக்கிது.." என்று தன் முதுகைத் தேய்த்துக் கொண்டான் சூரஜ்.

"நல்ல வேளை நா கொஞ்சம் நல்ல மூடுல இருக்கேன்.. அதனால லேசா தட்டினேன்.. இல்லன்னா உன்ன செம்மையா வெளுக்கணும்னுதான் நெனச்சிட்டிருந்தேன்.." என்று கூறி பல்லைக் கடித்தான் விராட்.

"என்னது? லேசா தட்டினியா? அதுக்கே இப்டி வலிக்கிதே.. நீ நெனச்ச மாதிரி வெளுத்திருந்தா.. பாப் ரே.." என்றான் சூரஜ்.

"சரி! சரி! ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாது.. சென்னையில எல்லாரும் எப்டியிருக்காங்க?" என்று விராட் கேட்டான்.

"எல்லாரும் நல்லா இருக்காங்க.. பாட்டி கிட்ட பேசிக்கிட்டிருந்தாலே செம ஜாலியா இருக்குடா!"

"ம்! ஆனந்தி கூட சொன்னா! சூப்பர் பாட்டியில்ல!"

"ஆமாடா!"

சகோதரர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக உணர்ந்தார்கள்.

கௌரி, எல்லாரையும் அழைத்தாள். தீன்தயாள் அவளருகில் அமர்ந்திருந்தார். சூரஜ், செல்வி, விராட், ஆனந்தி நால்வரும் வந்து அவர்கள் எதிரே இருந்த இரு சோபாவில் தம்பதிகளாய் சேர்ந்து அமர்ந்தனர்.

"எல்லாரும் கவனமா கேளுங்க! இவ்வளவு நாளா நம்ம வீட்ல கொஞ்சம் பணத்துக்கு கஷ்டம் இருந்தது. அதனால சூரஜ் வேலை வேலைன்னே இருந்துட்டான். ஆனா அவனோட கடின உழைப்பு, அப்றம் விராட்டோட சம்பளம், செல்வியோட சம்பளம் எல்லாம் நம்ம வீட்டு கஷ்டத்த குறைச்சு இப்ப நம்மள நல்ல நெலைமைக்கு கொண்டு வந்துடுச்சு! அன்னிக்கு இருந்த சூழ்நிலைக்கு என்னால வீட்ல வேலை பண்றதுக்கு ஆள் வெச்சுக்க முடியல! ஆனா இப்ப நம்ம வீட்ல வேலை செய்ய கண்டிப்பா ஆள் போட்டே ஆகணும்! அதனால நான் வீட்டு வேலைக்கு ரெண்டு ஆள் வெச்சிருக்கேன்! ஒருத்தர் சமையல் செஞ்சு பாத்திரம் தேய்ப்பாங்க! இன்னொருத்தர் வீடு பெருக்கி துடைச்சு துணி தோச்சு காயப் போடுவாங்க! துணி மடிச்சு எடுத்து வெக்கறது என் வேலை! இனிமே என் ரெண்டு மருமகள்களும் என் பிள்ளைங்களோட சந்தோஷமா இருந்தா போதும்!"

சூரஜும் விராட்டும் கைதட்டி பாராட்டினர். ஆனந்தி மாமனாருக்கு விளக்க, அவரும் கைதட்டினார்.

"நல்ல வேலை பண்ணினீங்கமா!"

"அத்த! என்ன அத்த இதெல்லாம்!?" செல்வி செல்லமாக கோபித்தாள்.

"என்னால எல்லா வேலையும் செய்ய முடியும் அத்த!"

"தெரியும் செல்வி! உன்னால எல்லா வேலையும் செய்ய முடியும்னு எனக்கு நல்லா தெரியும்! ஆனா அதவிட உனக்கு என்னென்னமோ தெரியும்! பாட்டு பாட, கம்யுடர் பண்ண, ட்யுசன் எடுக்க, அன்னிக்கு ஒரு க்ளாஸுக்கு கேட்டியே, ப்ரஞ்சு, அது தெரியும்! இதெல்லாம் நீ கத்துகுடு! நீ படிச்ச படிப்பு வெறுமனயே வீட்டு வேல செஞ்சு வீணா போகக்கூடாது! அதே மாதிரி ஆனந்தி நிறைய படம் வரையணும். அவங்க வீடு மாதிரி நம்ம வீட்லயும் அவ வரையற படம் மாட்டணும். நம்ம வீட்லயும் கொஞ்சம் தோட்டம் போடலாம்! பாக்க அழகா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்ல! அதான்! இதெல்லாம் பண்ண உங்களுக்கு உடம்பில தெம்பு வேணாமா! நேரம் வேணாமா! அப்றம் ரொம்ப முக்கியமா என் பிள்ளைங்களோட நீங்க சந்தோஷமா இருந்தாதானே எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷமா இருக்கும்!" என்றாள் கௌரி.

"தமிழ்! அம்மா சொல்றது கரெக்ட்!" என்று சூரஜ் கூறினான்.

"ஆமா பாபி! அம்மா சொல்றது கரெக்ட்!" என்றான் விராட்.

செல்விக்கு இதில் உடன்பாடில்லை என்றாலும் சரியென்று ஒப்புக் கொண்டாள்.

விராட் வேலைக்கு சேர்ந்தவர்களின் விவரங்களை முழுதாக தெரிந்து கொண்டான்.

அனைவருடைய வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பியது. செல்வி பிங்கியுடன் பள்ளி வேலைக்கு செல்லலானாள். சூரஜ் தன் அலுவலகத்திற்கு எடுத்திருந்த விடுப்பு முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். விராட் தன்னுடைய திருமணத்துக்காக எடுத்திருந்த விடுப்பு முடிந்து வேலையில் சென்று சேர்ந்தான்.

வீட்டு வேலைக்கு ஆள் இருந்ததால் ஆனந்தி படம் வரைவது போன்றவற்றை தடையின்றி செய்தாள். தினமும் விராட்டுக்கு மதிய உணவு கொண்டு போய் கொடுத்தாள். அவள் போய் வர அவளுடைய ஸ்கூட்டியை திருச்சயில் இருந்து அனுப்பி வைத்திருந்தார் கீர்த்திவாசன். செல்வி வேலை செய்யும் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியையாகவும் பணிபுரிந்தாள். மாலையில் செல்வியுடன் சேர்ந்து ஆனந்தியும் ட்யூஷன் எடுத்தாள்.

எல்லா குழந்தைகளும் செல்வியை படி பாபி என்றும் ஆனந்தியை சோட்டி பாபி என்றழைக்க ஆரம்பித்தனர்.

ஒரு வாரம் கழிந்த நிலையில் சூரஜ் - செல்வியின் முதல் திருமண நாள் வந்தது.

செல்வி சூரஜ் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு அதனுடன் இணையாக வாங்கிய பவழ செட் நெக்லெசும் கம்மல்களும் வளையல்களும் அணிந்தாள்.

சூரஜ் செல்வி எடுத்து கொடுத்த க்ரீம் கலர் குர்த்தா செட் அணிந்து கொண்டு அவள் முன்னால் ஒரு மகாராஜா போல வந்து நின்றான்.

"மெனி மோர் ஹேப்பி ரிடன்ஸ் ஆஃப் தி டே, சூரஜ்!" என்று கணவனுக்கு வாழ்த்தினாள்.

"தேங்க்யூ தமிழ்! மெனி மோர் ஹேப்பி ரிடன்ஸ் ஆஃப் தி டே!" என்று கூறி பதிலுக்கு அவனும் வாழ்த்தினான்.

இருவர் முகத்திலும் பூரிப்பு நிரம்பி வழிந்தது.

கிரிதரன், மங்கை, லட்சுமி பாட்டி, தஞ்சாவூர் தாத்தா பாட்டி, கீர்த்திவாசன், பூங்குழலி, செல்வியின் பழைய பள்ளி நிர்வாகி நாராயணி எல்லாரும் போன் செய்து வாழ்த்தினர்.

சூரஜ் செல்வி தம்பதியின் முதல் திருமண நாளுக்கு கௌரியும் தீன்தயாளும் இருவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்து தங்கள் அன்பை காட்டினர். இருவரும் பெற்றோருக்கு நமஸ்காரம் செய்தனர்.

விராட் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு ஒரு பரிசு தந்தான்.

"பையா! பாபி! இது உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து என்னோட சின்ன கிஃப்ட்! மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!"

"தேங்க்யூ டா!"

"தேங்க்யூ விராட்! இது என்ன விராட்?" கேட்டாள் செல்வி.

"பிரிச்சு பாருங்க பாபி! அநேகமா உங்களுக்குதான் பிடிக்கும்னு நெனக்கிறேன்!" என்றான் விராட்.

செல்வியும் சூரஜும் ஆவலுடன் பிரித்தனர். அது ஒரு பென் ட்ரைவ்! அதில் கர்நாடக சங்கீத முண்ணனி பாடகர்களின் கீர்த்தனைகள், கச்சேரிகளின் ஒரு தொகுப்பு இருந்தது. சூரஜ் மிகவும் பாராட்டினான்.

"வெரி தாட்ஃபுல் கிஃப்ட்! தேங்க்யூடா!"

"தேங்க்யூ விராட்! தேங்க்யூ சோ மச்! நிஜமாவே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!" என்றாள்.

"உங்களுக்கு இது பிடிக்கும்னு எனக்கு தெரியும் பாபி!" என்று கூறி சிரித்தான் விராட்.

"எங்க அக்காவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?" என்று கேட்டாள் ஆனந்தி!

"பாபிக்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும்!" என்றான்.

"என்ன?" திரும்பவும் கேட்டாள் ஆனந்தி.

"ஒண்ணு கர்நாடிக் ம்யூசிக்!" என்று நிறுத்தினான். மற்ற மூவரும் அடுத்து என்ன என்பது போல அவனையே பார்க்க,

"ரெண்டாவது.." என்று இழுத்தான்.

"ம்.. சொல்லுங்க!" என்றாள் ஆனந்தி.

"பாபிக்கு பிடிச்ச ரெண்டாவது.. சூரஜ் பையா!" என்றான்.

"ஐய.. இது பெரிய கண்டுபிடிப்பாக்கும்.." என்று பழிப்பு காட்டிய ஆனந்தி, தன்னுடைய பரிசை சூரஜிடம் கொடுத்தாள்.

அது 3' 2' என்ற அளவில் ஒரு பெரிய படம் போல இருந்தது. வண்ணக் காகிதம் சுற்றப்பட்டு இருந்தது.

"அதான்! விராட் குடுத்துட்டாரே! இது என்ன?" ஆச்சர்யமாய்க் கேட்டாள் செல்வி.

"இது என்னோட கிஃப்ட்க்கா! பிரிச்சுப் பாரு!"

இருவரும் சேர்ந்து பிரித்தனர். அது ஒரு பென்சிலால் வரையப்பட்ட ஓவியம். சூரஜும் செல்வியும் அருகருகே நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் காதலுடன் பார்ப்பது போல இருந்தது. மிகவும் தத்ரூபமாக இருந்தது. அழகாக கண்ணாடி ஃப்ரேம் செய்யப்பட்டு இருந்தது.

செல்வியும் சூரஜும் பார்த்ததும் மலைத்து விட்டனர்.

"ஆனந்தி! தேங்க்யூ சோ மச்!" என்று அவள் கைகளை குலுக்கினான்.

"யூ ஆர் வெல்கம் மாமா!" என்றாள் ஆனந்தி!

"ரொம்ப அழகா இருக்குடி! தேங்க்யூ சோ மச்!" செல்வி மனதாரப் பாராட்டினாள். கையோடு தன்னுடைய அறையில் அதை மாட்டியும் வைத்தாள்.

கௌரியும் தீன்தயாளும் ஆனந்தி வரைந்த படத்தைப் பார்த்து வியந்தனர்.

ஆனந்தி தன் மாமனாரிடம், உங்களையும் இது மாதிரி வரைந்து கொண்டிருக்கிறேன் என்று சைகை மொழியில் கூற அவருக்கு மேலும் வியப்பாக இருந்தது.

அவளுடைய தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். கௌரி தன் கண்களில் சேரத் தொடங்கியிருந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக் கொண்டாள்.

ஆனந்தன் போன் செய்தான். தன் வாழ்த்துகளை அக்காவுக்கும் மாமாவுக்கும் தெரிவித்தான். தன்னுடைய பரிசாக ஆன்லைன் வழியாக ஆடர் செய்திருப்பதாகவும் அதைப் பெற்றுக் கொண்டு பரிசு பிடித்திருக்கிறதா என்று போன் செய்யுமாறும் கூறினான்.

தீபிகா இன்னும் தில்லியிலிருந்து வரவில்லை. பையாவுக்கும் பாபிக்கும் கைப்பேசியில் அழைத்துத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தாள். தன்னுடைய பரிசாக ஆன்லைன் வழியாக ஆடர் செய்திருப்பதாகவும் அதைப் பெற்றுக் கொண்டு பரிசு பிடித்திருக்கிறதா என்று போன் செய்யுமாறும் கூறினாள்.

இருவரும் ஒரே மாதிரி சொல்கிறார்களே என்று அவர்களுடைய சகோதர சகோதரிகள் நால்வரும் அவரவர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர். மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளவில்லை.

இருவர் ஆன்லைனில் அனுப்பியிருந்த பரிசுகளும் அடுத்தடுத்து வந்தன. இரண்டு அனுப்பியிருந்ததும் பரிசுகளுமே ஒன்றுதான். கணவன் மனைவி இருவரும் ஜோடியாக அணியும் கைக்கடிகாரம் செட். அதுவும் ஒரே ப்ராண்ட், ஒரே நிறம், ஒரே டிசைன், ஒரே விலை!

நால்வருக்கும் ஒரே ஆச்சரியம்! இருவருடைய சிந்தனையும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டனர்.

இருவருக்கும் பரிசு நன்றாக இருக்கிறது என்று கூறினர். ஆனால் இருவர் அனுப்பியதும் ஒன்றே என்று அவர்களிருவரிடமும் சொல்லவில்லை!

ட்யூஷன் குழந்தைகள் தங்களுக்கு பிரியமான படி பாபிக்கும் பையாவுக்கும் எல்லாரும் சேர்ந்து ஒரு படத்தை வரைந்து திருமண நாள் பரிசாக தந்துவிட்டுச் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் சூரஜ் ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தான்.

அன்று இரவு சூரஜ், செல்வி, விராட், ஆனந்தி நால்வரும் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர உணவகத்துக்கு டின்னருக்கு சென்றனர். கௌரியும் தீன்தயாளும் நாங்கள் வரவில்லை என்று கூறிவிட்டனர். பேசிச் சிரித்து வம்பு செய்து கிண்டல் செய்தபடி நால்வரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

அன்று இரவு தங்களுடைய அறையில் நிமிர்ந்து படுத்திருந்த சூரஜின் நெஞ்சின் மேல் தன் தலையை வைத்து படுத்திருந்தாள் செல்வி. அவள் தலையை மென்மையாய் கோதியபடி ஏதோ ஹிந்திப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் சூரஜ். அவள் கண்மூடி அதை ரசித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஏதோ தோன்றியவளாய் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

"என்ன தமிழ்?"

"சூரஜ்! இந்த சுட்கியும் ஆனந்தும் ஒரே கிஃப்ட் அனுப்பியிருக்காங்களே! ஆச்சரியமா இருக்குல்ல!"

"ம்! ஆமா! நானும் இததான் நெனச்சேன்! ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சிருக்காங்களே!"

"ஆனா நம்ம இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ரெண்டு பேரும் ஒரே கிஃப்ட் பண்ணியிருக்கீங்கன்னு சொல்லல! பாவம் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணுவாங்க!"

"ஏன் தமிழ்! ஒரு வேள ஆனந்த் நம்ம சுட்கிய உசார் பண்ணிட்டானோ?"

"ஒரு அண்ணன் மாதிரியா பேசறீங்க?"

"ஏன்! அவனோட அக்காவ நான் உசார் பண்ணலாம்னா என் தங்கைய அவன் உசார் பண்ணக் கூடாதா?"

"ஆஹா! என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு!"

"ஏய்! ஆனந்த் நல்ல பையன்! அவன் என் தங்கைக்கு புருஷனா வந்தா என் தங்கை வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்! ரெண்டு பேர் சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கேன்னு சொன்னேன்!"

"இது ஜஸ்ட் கோஇன்சிடென்ஸ்தான்!"

"அதுவும் சரிதான்! நம்மளா எதையும் கற்பனை பண்ணிக்க கூடாது!"

"ஆமாங்க!"

இருவருக்கும் வாய் இவ்வாறு சொல்லியதே தவிர இருவருடைய மனமும் அவர்கள் இருவரும் இணைந்தால் மிக மிக நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தது.

கிட்டதட்ட இதைப் பற்றியேதான் விராட்டும் ஆனந்தியும் அப்போது அவர்களுடைய அறையில் பேசிக் கொண்டிருந்தனர்.

"உங்க அண்ணன் ஆனந்த் ரொம்ப நல்லவன்! அவன் என் தங்கைய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான்னா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி சுட்கிய அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடுவேன்!"

"சுட்கி மட்டும் எங்கம்மாவுக்கு மருமகளா வந்தா எங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க!"

இருவரும் சுட்கியைப் பற்றிய தங்கள் மனதின் விருப்பங்களைக் கூறிக் கொண்டனர்.

"நல்லதையே நெனப்போம்! நல்லதே நடக்கும்!" என்றான் விராட்.


திரும்பியது தேனிலவு ஜோடியும் !
சென்னை சென்ற ஜோடியும் வந்தது!
நெஞ்சினில் நிறைத்த இனிமையுடன்
கூட்டில் களிப்புடன் அடைந்தனவே!

புகுந்த வீட்டுப் பெரியோரும்
இளையோரின் இன்பம் கண்டு
இதுவே இனி தொடரட்டும் என
எண்ணியே நல்வழி வகுத்தனரே!

வீட்டில் அலுவல்களைக் குறைப்பது
தேவையென நன்கு உணர்ந்ததுடன்
இனி உடல் வருத்திப் பணம் சேர்க்கத்
தேவையில்லை என்று மொழிந்தனரே!

பெண்களுக்கும் ரசனையுடன்
சித்திரம் தீட்டி மகிழ்ந்திடவும்
மனம் லயிக்கும் செயல் செயவும்
மணித்துளிகள் கிடைத்தனவே!

முதலாம் திருமண நாளிலும்
மூத்தோரின் ஆசிகள் குவிந்தனவே
இளையோரின் வாழ்த்துகளுடன்
இனிமையாக நாள் கழிந்ததுவே!

தீபிகாவும் ஆனந்தனும் அனுப்பிய
பரிசுகளின் ஒற்றுமை கண்டு
அடுத்த ஜோடி இவரோ என்று
அகமகிழ்ந்து அனைவரும் நின்றனரே!


- C. புவனா.



- காதலின் மொழி என்ன?
 
Top