Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 27
இரவு பத்து மணியளவில் விராட் வீடு வந்து சேர்ந்தான். அம்மாவும் அப்பாவும் தூங்கிவிட்டனர். அவன் வரும்போது ஆனந்தி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
"பாபி! ஆனந்தி எப்டி இருக்கா?"
"ஓகே! பயம் குறைஞ்சுடுச்சு! ஆனா ஃபீவர் இருக்கு!"
"எதுனா சாப்ட்டாளா?"
"ம்! கஞ்சி குடிச்சி மாத்திரை போட்டுகிட்டுதான் தூங்கிட்டிருக்கா!" என்றாள் செல்வி.
"ம்.."
"என்னடா ஆச்சு? அந்த கைதி கிடைச்சானா இல்லையா?" என்று சூரஜ் கேட்டான்.
"ஒரு வழியா அவனைப் பிடிச்சுட்டேன்!"
"எங்களுக்குத் தெரியும்டா! நீ பிடிச்சுடுவன்னு!" சூரஜ் அவனைப் பாராட்டினான்.
"பாபி! உங்களுக்குதான் தேங்கஸ் சொல்லணும்! நீங்க குடுத்த க்ளூ வெச்சுதான் அவன கண்டுபிடிச்சேன். தேங்க்ஸ் பாபி!"
"ஐயோ! நான் எங்க க்ளூ குடுத்தேன்! நீங்க சொல்றதப் பாத்தா நான்தான் அக்யூஸ்டு மாதிரி இருக்கு!"
"ஐயோ பாபி! நான் அந்த அர்த்தத்தில சொல்லல! அவன் உங்க கண்ணு முன்னாலயே சந்துக்குள்ளயோ பொந்துக்குள்ளயோ இருப்பான்னு சொன்னீங்கல்ல! அத வெச்சுதான் அவனைக் கண்டு பிடிச்சேன்னு சொன்னேன். நெஜமாவே ஸ்டேஷன் பக்கத்து சந்துக்குள்ள இருந்த பழைய ஓட்டு வீட்டுக்குள்ளதான் ஒளிஞ்சுகிட்டு இருந்தான்! "
"ரியலி!"
"ஆமா பாபி! அவன மட்டுமில்ல! அவனோட பூரா நெட் வொர்க்கையும் பிடிச்சு ஜெயில்ல வெச்சுட்டுதான் வரேன்!"
"சூப்பர் விராட்!" ன்று பாராட்டிய செல்வி,
"சரி வாங்க சாப்பிடலாம்!" என்று அழைத்தாள்.
"இன்னும் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலயா?"
"உன்ன விட்டு எப்டிடா சாப்பிட முடியும்! போ யூனிஃபார்ம கழட்டிட்டு ஒரு குளியலப் போட்டு வா! நாங்க வெயிட் பண்றோம்!"
"பாஞ்ச் மினிட்!" என்று தன் கையை விரித்துக் காட்டிவிட்டு மாடிக்கு ஓடினான்.
சொன்னது போல் ஐந்தே நிமிடங்களில் குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்தான். மூவரும் சாப்பிட்டனர்.
ஹால் சோபாவில் படுக்கப் போன சூரஜையும் விராட்டையும் விராட்டின் அறையில் படுக்கச் சொல்லி அனுப்பிவிட்டு, ஆனந்தியுடன் செல்வி தன்னுடைய அறையில் படுத்தாள்.
'இந்த ஆனந்தி என்ன.. இன்னும் குழந்தையாவே இருக்கா..' என்று நினைத்தபடி உறங்கிப் போனாள்.
காலையில் ஆனந்திக்கு ஜுரம் விட்டிருந்தது. சூரஜ் அலுவலகத்துக்கு கிளம்பியிருந்தான். நேற்று ஆனந்திக்காக போட்டது போட்டபடி கிளம்பி வந்துவிட்டானே! அதனால் இன்று சீக்கிரம் சென்றுவிட்டான்.
விராட் கிளம்பிக் கொண்டிருந்தான். செல்வி அன்று பள்ளி வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள்.
"அக்கா!"
"ஹாய்! குட் மானிங்! பாபி கிச்சன்ல இருக்காங்க!" விராட் அவளருகில் வந்து அமர்ந்தான்.
"குட் மானிங் விராட்! கிளம்பிட்டீங்களா?" அருகில் அமர்ந்த கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"ஆமாடா! இப்ப எப்டி இருக்க?" அவளுடைய கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டான்.
"நல்லா இருக்கேம்ப்பா! ஆனா செம டயடா இருக்கு!"
"ப்ரஷ் பண்ணிட்டு சாப்பிடு! சாப்பிட்டு நல்லா தூங்கு! சரியா? சாயந்திரம் சரியாய்டும்!"
"சரிங்க!"
"ஓகே! பை!"
"பை!"
அவள் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றான்.
அன்று முழுவதும் செல்வி ஆனந்தியை கவனித்துக் கொள்ள, மதியத்துக்கு மேல் ஆனந்தி இயல்பு நிலைக்கு வந்துவிட்டாள். எழுந்து சென்று குளித்து உடுப்பு மாற்றிக் கொண்டாள். செல்வி அவளுக்கு தலையை வாரி பின்னி விட்டாள். நன்றாக பசியெடுத்தது. செல்வி செய்துக் கொடுத்த ரசம் சாதத்தை விரும்பி சாப்பிட்டாள்.
மாலை ட்யூஷனில் பாடமும் எடுத்தாள்.
மாலை விராட் ட்யூட்டி முடிந்து வரும்போது ஆனந்தி நன்றாக இருந்தாள். அவளுடைய அறையில் இருந்தாள். அவளின் தெளிந்த முகத்தைக் கண்ட மனநிறைவுடன் குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்தான். அவளருகில் வந்து அமர்ந்தான்.
"ஹாய்! மை டியர்! எப்டி இருக்க?"
"நல்லா இருக்கேனே!" கண்களில் சிரிப்புடன் கூறினாள்.
"ஏண்டி என்னப் பாத்து பயந்த?" செல்லமாகக் கேட்டான்.
அவள் சிரித்தாள்.
"ஏய்! நீ இப்டி அடிக்கடி பயந்து பயந்து ஜுரம் வர வெச்சுகிட்டா, நான் அப்றம் சாமியாராதான் போகணும்!" சொல்லிக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டான்.
"அது.. உங்கள எப்பவும் அன்பாவே பாத்து பழகிட்டேனா! கோபத்தில உங்க முகம் கண்ணெல்லாம் அப்டியே செவசெவன்னு நெருப்பு மாதிரி இருந்துதா! பயங்கரமா கத்தி வேற பேசினீங்களா! நெஜமாவே ராட்சசன் மாதிரியே இருந்தீங்களா! அதான் பயந்துட்டேன்!" சிரித்துக் கொண்டே குறும்பாகச் சொன்னாள்.
"என்னையா ராட்சசன்னு சொன்ன?" என்று செல்லக் குரலில் கேட்டவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
"ஆனந்தி!"
கீழேயிருந்து செல்வியின் குரல் கேட்டது!
"அக்கா கூப்பட்றாங்க!"
"அப்றமா வரேன்னு சொல்லு!" அவளை விடுவிக்காமல் கூறினான்.
"ஆனந்தி! கொஞ்சம் வந்துட்டுப் போம்மா!" செல்வி மீண்டும் அழைத்தாள்.
"எதுனா நெனச்சுக்கப் போறாங்க! விடுங்க! நம்ம அப்றமா...." அவளை பேசவிடாமல் இன்னும் இறுக்கிக் கொண்டான்.
"ம்ச்.. விடுங்க!" அவள் சிணுங்கினாள்!
"சரி! போ!" அவளை விடுவித்தான்.
"தேங்க்யூ!" அவனுடைய மீசையை திருகிவிட்டு ஓடினாள்.
"ஆ! ராட்சசி! வலிக்குதுடீ!" சிரித்துக் கொண்டே திட்டினான்!
"போடா! ராட்சசா!" அவ்வளவு அவசரத்திலும் நின்று அவனருகில் வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனுடைய காதில் திருப்பித் திட்டிவிட்டுதான் சென்றாள்.
விராட் இந்த விளையாடல்களை மிகவும் ரசித்தான்.
'அவ இப்போதைக்கு மாடிக்கு வரமாட்டா..' என்று நினைத்தபடியே கீழே இறங்கி வந்தான்.
ஆனந்தி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். அருகில் சூரஜ் இருந்தான். விராட் சென்று சூரஜின் அருகே அமர்ந்தான். செல்வி அனைவருக்கும் டிபன் எடுத்து வந்தாள்.
"லக்ஷ்மி பாட்டி லைன்ல இருக்காங்க! உங்ககிட்ட பேசணுமாம்! பேசுங்க!" என்ற ஆனந்தி கைப்பேசியை விராட்டிடம் நீட்டினாள்.
வியப்புடன் அதை வாங்கி காதுக்குக் கொடுத்தான்.
"ஹலோ! பாட்டி! ராம்! ராம்!"
"ராம்! ராம்! மாப்ள! எப்டி இருக்கீங்க!"
"நல்லா இருக்கேன் பாட்டி! நீங்க எப்டி இருக்கீங்க? கால் வலி சரியாகிடுச்சா?"
"எனக்கென்ன மாப்ள! நீங்க எல்லாரும் இவ்வளவு அன்பா கேக்கும்போது எனக்கு ரொம்ப தெம்பா இருக்கு! சென்னை வாங்க மாப்ள!"
"வரேன் பாட்டி! லீவ் கிடைக்கட்டும்! கண்டிப்பா சென்னை வரேன்!"
"ரொம்ப சந்தோஷம் மாப்ள! உங்க அம்மா, அப்பாகிட்ட நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க! நான் வெச்சுடவா!"
"சரி பாட்டி! பெரிய மாமா, அத்தைகிட்ட நான் ராம்! ராம்! சொன்னேன்னு சொல்லிடுங்க!"
"கண்டிப்பா சொல்றேன்! பை! மாப்ள!"
"பை! பாட்டி!"
அழைப்பைத் துண்டித்து கைப்பேசியை ஆனந்தியிடம் தந்தான்.
"அக்கா கிட்ட குடுங்க! அது அக்கா மொபைல்!"
"ஓ! இந்தாங்க பாபி!" அவளிடம் தந்துவிட்டு அவள் தந்த டிபனை வாங்கிக் கொண்டான்.
"குழந்தை மாதிரி இருக்கார்! இவரப் பாத்துதான் பயந்து உனக்கு ஜுரம் வந்துது!" செல்வி ஆனந்தியை கேலி செய்தாள்.
"அப்டி சொல்லுங்க பாபி!" விராட் ஆனந்தியைப் பார்த்து பழிப்பு காட்டினான்.
"அக்கா! இப்ப குழந்தை மாதிரி இருக்கார்! போலீஸ் ஸ்டேஷன்ல போய்ப் பாருக்கா! யம்மா! எவ்ளோ கோவம் தெரியுமா!" செல்லமாய் சிணுங்கியபடி கூறினாள்.
"சும்மா சொன்னேன்டி! எனக்குத் தெரியாதா? இவரோட கோபத்தப் பத்தி!" சமாதானம் செய்தாள்.
"ஐயோ! கவுத்துட்டீங்களே பாபி!"
இதைக் கேட்ட ஆனந்தி சிரித்துக் கொண்டே விராட்டைப் பார்த்து பழிப்பு காட்டினாள்.
சூரஜும் செல்வியும் தம்பியையும் தங்கையையும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
"ரெண்டு பேரும் சின்ன குழந்தைங்க மாதிரி விளையாடறீங்க!" என்றான் சூரஜ்.
இருவரும் பழிப்பு காட்டி விளையாடும் போது விராட்டுக்கு புரைக்கேறியது.
"டேய்! கவனமா சாப்பிடுடா!" சூரஜ் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். செல்வி கொழுந்தனின் தலையில் மெதுவாய் தட்டினாள்.
"அக்கா! என்னக்கா இப்டி மெதுவா தட்ற! நல்லா ஓங்கி ஒண்ணு போடுக்கா!" என்றாள் ஆனந்தி.
"காட்டு! உன் தலைல போடறேன்!" என்றாள் செல்வி.
"அப்டி சொல்லுங்க பாபி!" விராட் திரும்பவும் ஆனந்தியிடம் பழிப்பு காட்டினான்.
"டேய்! அவ குழந்தைடா! அவளப் போய் வம்பு பண்ற! சும்மா இருடா!" சூரஜ் ஆனந்திக்காக பரிந்து பேசினான்.
"போங்க! உங்களுக்கு உங்க பாபி சப்போர்ட் பண்ணினா எனக்கு எங்க மாமா இருக்கார்!" இப்போது ஆனந்தி பழிப்பு காட்டினாள்.
"ரெண்டும் ரெட்டை வாலுங்க!" என்றாள் செல்வி. சூரஜும் செல்வியும் சிரித்துக் கொண்டனர்.
அனைவரும் கலாட்டா செய்தபடியே பேசி சிரித்து சாப்பிட்டனர்.
இரவு தங்களுடைய அறையில் விராட் ஆனந்தியிடம் கேட்டான்.
"என்ன திடீர்ன்னு லக்ஷ்மி பாட்டி போன் பண்ணியிருந்தாங்க!" தன் மொபைலை நோண்டியபடியே கேட்டான்.
"எனக்கு ஒடம்பு சரியில்லன்னு அக்கா சொன்னாங்களாம்! அதான்!" அவனுக்கு காலை வேலைக்கு வேண்டியதை எடுத்து டேபிளின் மேல் வைத்துக் கொண்டே சொன்னாள்.
"பாட்டி உன்கிட்ட என்ன சொன்னாங்க?"
"போலீஸ்காரன்தான் வேணும்னு காதல் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கியே! போலீஸ்காரன் உன்ன மட்டும்தான் கொஞ்சுவான்! மத்தவங்களையெல்லாம் பாத்தா கத்ததான் செய்வான். நீ ஏன் பயப்பட்டன்னு கேட்டாங்க!"
"ஹா! ஹா! ஹா! சூப்பர் பாட்டி! சரியாதான் கேட்டிருக்காங்க! உன்ன மட்டும்தான் கொஞ்சுவேன்! ஓடி வா! கொஞ்சலாம்!" வாய்விட்டு சிரித்தபடி அவளை அழைத்தான்.
"இனிமே பயப்படாதே! மாப்ள கோவக்காரர் கிடையாது! போலீஸா இருக்கும்போது கோபமாதான் இருக்கணும்! அப்பதான் மிடுக்கா கம்பீரமா இருக்கும்! மத்த நேரத்தில அன்பான மனுஷர்தானே! நீ இப்டி அடிக்கடி பயந்தா மாப்ளைக்கும் கஷ்டம்! மத்தவங்களுக்கும் கஷ்டம்! உனக்கும் உடம்பு வீணா போய்டும்னு சொன்னாங்க!" சொல்லிக் கொண்டே மின்விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தாள்.
"சூப்பர் பாட்டி!" என்றவன் ஆனந்தியின் தலையை மெதுவாகக் கோதிவிட்டான்.
"ஆனந்தி! நீ என் உயிர்! உனக்கு எதுனா ஒண்ணுன்னா என்னால தாங்கவே முடியாது. நேத்தி ஒரு நாள் என் பக்கத்தில நீ இல்ல! எப்டி தவிச்சேன் தெரியுமா? ஆனா சூரஜும் பாபியும் எப்டிதான் நாலு மாசம் பிரிஞ்சு இருந்தாங்ளோ! நேத்திதான் அவங்க கஷ்டம் எனக்கு புரிஞ்சுது!"
"பாவம்ல!"
"ம்! உனக்காக வேலைய போட்டது போட்டபடி விட்டுட்டு ஓடி வந்துட்டானே! அவனுக்கு ஃபேமிலி மேல பயங்கர பாசம்! அதனாலதான் இப்படி தன் சந்தோஷத்த விட்டுட்டு நமக்காக எந்தக் கஷ்டத்தையும் ஏத்துக்கறான்!"
"ஆமாங்க!"
"பாபியும் அவனுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறாங்க! நல்ல சப்போட்டிவ் வைஃப் கிடைக்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கணும்!"
"ம்!"
"நான் கூட மொதல்ல என்னமோன்னு நெனச்சேன்! ஆனா அவங்க பண்ணின தியாகத்துக்கு முன்னாடி நம்மல்லாம் ஒண்ணுமேயில்ல!" தன் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டே சென்றான்.
"என்ன தியாகம்ங்க?"
பெருமூச்சு ஒன்றை விட்டான்.
"இப்டி அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லாம அவன் வெளிநாட்டுக்கும் இவங்க இங்கயும் இருந்தாங்களே! அததான் சொன்னேன்!"
"ஓ!!"
"சரி தூங்கு! எனக்கும் தூக்கம் வருது!" என்றுபடி அவளை அணைத்தபடி உறங்கிப் போனான்.
தப்பித்துப் போன கைதியையும் அவன் கூட்டாளிகள் அனைவரையும் பிடித்து நற்பெயர் பெற்ற விராட்டுக்கு பதவியுயர்வு வந்தது. காவல் உதவி ஆய்வாளராக அதாவது அஸிஸ்டென்ட் கமிஷ்னராக பதவி உயர்வு பெற்றான். செய்திதாளில் முதல் பக்கத்தில் விராட்டைப் பற்றி பாராட்டி செய்தி வந்தது.
"கங்கிராட்ஸ் ராட்சசா!" என்று பூரிப்புடன் பாராட்டிய மனைவியை, "தேங்க்ஸ்டீ ராட்சசி!" என்று சொல்லிக் கொண்டே தூக்கிக் கொஞ்சினான் விராட்!
கௌரிக்கு பெருமையாய் இருந்தது. தீன்தயாள் மகனைத் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்.
சூரஜ், செல்வி இருவரும் மனமாறப் பாராட்டினர். தீபிகா தன் வாழ்த்துக்களைச் சொன்னாள். ஆனந்தன் விராட்டுக்கு போன் செய்து பாராட்டியதோடு நிற்காமல் பரிசுப் பொருளும் அனுப்பி வைத்தான்.
தன்னவனின் சினம் கண்டு
அஞ்சி நடுங்கி நோயுற்ற மங்கை
தமக்கையின் உபசரிப்பால்
துடிப்புடன் மீண்டு வந்தாள்!
காவலனாகக் கடமை ஆற்றுகையில்
அன்றாடப் பணியின் அழுத்தமென்று
பெரியோரும் எடுத்துச் சொல்ல
ஏற்றுக் கொண்டாள் ஏந்திழையும்!
கடமையில் தவறாத கணவனும்
பதவி உயர்வு பெற்றதையுரைக்க
இல்லத்தில் உற்சாகம் மொட்டவிழ்த்து
இன்பத்தை வாரி இறைத்ததுவே!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?