காத்திருப்பது எவ்வளவு அழகானது.
இதோ இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவாள். இதோ காலடிகேட்கிறது. இதோ மெல்லிய மல்லிகை வாசனை. இதோ நிழல் தெரிகிறது.
“தம்பி கொஞ்சம் தள்ளி உட்காரேன்”
என்ற பூக்கார பாட்டியின் திடீர் குரலுக்கு சற்று திடுக்கிட்டு தள்ளி அமர்ந்தேன். இது போல கற்பனையில் ஆழ்ந்து நெடுநாட்களாகிறது.
விற்பனைபிரதிநிதியாக ஊர்ஊராக சுற்றும் வேலை. கிடைத்த இடத்தில் சாப்பிட்டு கிடைத்ததை குடித்து பாடாவதி லாட்ஜ்களில் புரண்டு..இதுவொரு தனி உலகம்.
“தம்பி.. வந்து கால்மணிநேரமாச்சு”
“ப்ளீஸ்… வெயிட்சார்… ஐயாம் கம்”
சந்திக்கும் முகவர்களின் அலாதியான மரியாதையும் கவனிப்பும் ‘தலவலி கேஸூ.. வந்துட்டாண்டா’ என்ற அவர்களின் மன எதிரொலிப்பையும் மீறி திகட்டவைக்கும்.
இந்த ஊருக்கு வருவது இது நான்காவது தடவை. முகவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் பத்து கிலோமீட்டர் முன்னமே ஒரு நபரை சந்திக்க இறங்கிவிட்டேன். கடைபையனை அனுப்புவதாகவும், சந்திக்கவேண்டிய நபரை அடையாளம் காட்ட உதவுவானென்றும் சொல்லியிருந்தார்.
பையன் என்று சொல்கிறேனே தவிர உண்மையில் பையர். ஒரு முப்பது வயது இருக்கும். அவரது பெண்கூட நாலாவதோ ஐந்தாவதோ படிப்பதாக ஞாபகம்.
“நேரமாவுதப்பா…. வந்து அரைமணியாச்சு”
“ஜஸ்ட் பக்கமா கமிங் சார்….”
“நடந்துவந்தா கூட சீக்கிரம் வர்லாமேப்பா… பஸ்ஸுக்கு காத்திருக்கயோ?”
“நோ சார்….. ஐயாம் ட்ராவல் இன் டூவீலர்”
அலைபேசியை அணைத்துவிட்டு திரும்ப யோசனையில் ஆழ்ந்தேன். எவ்வளவு வெறித்தனமான நபர் இந்த பையர். பெயர்கூட ராஜா…. இல்லை ராஜேஷ்… ஆமாம். முதல்தடவை சந்தித்தபோது இயல்பாக பேசவில்லை. சிலநேரம் கழித்து தேவையான இடத்தில் சுண்டிவிட்டதும் படபடவென்று பேச ஆரம்பித்தார்.
“இதபாருங்ணா… இந்தாள்கிட்ட கொத்தடிமையா வேல செய்றேன். என் பொண்ணுக்காக. எவ்ளோ தெனாவட்டா திரிஞ்சேன் தெர்மா… ம்ப்ச்… அதெல்லாம் ஒரு காலம்”
“ஏப்பா சம்பளம் பத்தலன்னா கேளேன்..”
“இன்னும் ஆயிரம் கொறச்சுன்னாகூட நா சமாளிப்பேன் சார். கணக்கா செலவு பண்ணுவேன். மரியாத இல்ல சார்”
“என்னவாம்”
“நான் படிக்காதவனாம்.. எம்புள்ளயும் சுமாராதான் படிக்கவைப்பேனாம். இவுங்க புள்ளைங்க பிரைவேட்டா படிச்சு என் புள்ளய வேல வாங்குமாம்”
“எந்தகாலத்தில இருக்க… நான் பிரைவேட் ஸ்கூல்லதான் படிச்சேன்… ஊர்ஊரா லோல்படறேன்… என் செட்டு, கவர்மெண்டு ஸ்கூல்ல படிச்சி எத்தனபேரு உத்தியோகம் வாங்கிட்டாங்க தெரியுமா?”
“அதெல்லாம் நான் பாத்துக்குவேன் சார்… எம்மவ கலக்கறா… இதுங்களுக்கு வயித்தெரிச்சல்”
“அப்புறமென்ன”
“பாப்பா கூட நானும் இங்லீஸ்ல பேச ஆசையாயிருக்கு சார்… ஒருவாட்டி ஓனர்ட்ட சும்மா சொன்னேன்… தப்பா சார்?”
நான் ஏதும் சொல்லவில்லை.
“வுளுந்துவுளுந்து சிரிக்கறாங்க…வெட்கமாபோச்சு சார்”
அடுத்த பயணத்தின்போது தமிழ்வழி ஆங்கிலம் புத்தகம் ஒன்றை அவரிடம் சேர்ப்பித்தேன். அவரது கண்கலங்கிவிட்டது.
“முடியுமா சார்?”
“கமல் எத்தினிமொழி பேசுவார்?”
“தலைவர் பெரிய இடம் சார்… படிச்சவர்”
“இல்லப்பா …. அவுரு எட்டாவதோ என்னவோ… ஆர்வத்திலதான் எல்லாம் கத்துகிட்டது”.
பின்வந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மாறுபாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன். மிக அழகாக கற்றுக்கொண்டு வருகிறார். தன் மகளோடு முழுமையாக ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதாகவும்…ஓனரின் குடும்பம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஆங்கிலம் கலந்தே பேசுவதாகவும் தெரிவித்தார்.
சுரீரென்றது . மிக அழகாக எனக்கு கொடுக்கப்பட்ட புரஜெக்டை முடியுமாவென்ற தயக்கம் காரணமாய் தவறவிட இருந்ததை சுட்டிக்காட்டியதாய் அந்த சந்திப்பு அமைந்தது.
“தம்பி…. ரொம்ப நேரமாவுது… இதுமாதிரி எங்கயும் உட்காந்ததேயில்ல”
“டோண்ட்டொரி சார்… ஐயாம்.. கம்”
ஜம்பது நிமிடங்களும் கடந்த நிலையில் அலைபேசி அழைத்தது.
காத்திருப்பது எவ்வளவு அலுப்பானது.
“சார்… வேர் யூ ப்ளேஸ் சார்?”
தீய வைக்க..
“பஸ் ஸ்டாப் எதுத்தாப்ல பொட்டிகடை பக்கமா வாப்பா”
“ஓகே சார்…. ஐயாம் பாஸ்ட்”
ஓரளவுக்குதான் … எவ்வளவு நேரம் அடக்கிகிட்டு அமைதியா உட்கார்றது.
பையரா இது…. இன்சர்ட் பண்ணியிருந்தார். நடந்து வந்து கொண்டிருந்தார்.
“ராஜி…. இங்க”
“ஐ … சீ.. யூ சார்”
“ஓடிவா…. ரொம்ப அர்ஜண்ட்…. ஒதுங்கணும்”
“வி… கோ டூ… அந்தப்பக்கமா… சார்”
“நடக்கமுடியாது… வண்டி எங்கே”
“மை டூவீலர் அட்… அந்தா அந்த சைட் சார்”
பெண்களாய் இருக்க, வேறிடம்போக அவரோடு ஓட்டமும் நடையுமாய் விரைந்தேன்.
“எங்கப்பா வண்டி?”
“திஸ் மை வண்டி சார்”
அவர் சுட்டிகாட்டிய இடத்தில் புதிய அழகான அட்லஸ் சைக்கிள் இருந்தது.