கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

30. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 30


கௌரியும் தீபிகாவும் செல்வியும் ஆனந்தியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டனர்.

செல்வியின் யோகா ஆசிரியரிடம் கேட்டு மும்பையில் இருக்கும் அவர்களுடைய யோகா மையத்தில் ஆனந்தியை சேர்த்து விட்டு கர்ப்ப காலத்தில் செய்யக் கூடிய யோகப் பயிற்ச்சிகளையும் சுவாசப் பயிற்சிகளையும் கற்றுக் கொண்டு செய்ய வைத்தான் விராட்! அவளும் அந்தப் பயிற்சிகளை விடாமல் செய்தாள்.

அவளுடைய மனம் அமைதியாக இருக்க நல்ல இசையை அவள் கேட்கச் செய்தான். அவள் பயப்படாமல் இருக்க தன் போலீஸ் கோபத்தையெல்லாம் வீட்டு வாசலிலேயே கழற்றி விட்டு வர பழகிக் கொண்டான்.

விராட்டுக்கு மதிய உணவு கொண்டு போய் கொடுப்பது நின்றது. அவன் வீடு வந்து சாப்பிட்டுப் போக ஆரம்பித்தான்.

"ஏங்க இப்படி வீட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அநாவசியமா அலையறீங்க! சாப்பாடுதான் காலைலயே ரெடியாயிடுதுல்ல! எடுத்துகிட்டு போங்கப்பா!" என்று அக்கறையோடு சொன்ன ஆனந்தியை அணைத்துக் கொண்டு கூறினான்.

"ஏய்! லஞ்ச் சாப்பிட்டு போற சாக்கில உன்னக் கொஞ்ச வந்தா நீ வேணாங்கறியே!" என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

"அது சரிதான்! ஆனா லஞ்ச்ல கொஞ்சினா அவசர அவசரமா கொஞ்சமாதான் கொஞ்ச முடியும்! இதுவே வேலை முடிஞ்சி வந்தா நிறைய நேரம் ஆற அமர அவசரமில்லாம நிறைய கொஞ்சலாமேன்னு சொன்னேன்!" அவனை ஓரக்கண்ணால் பார்க்காமல் பார்ப்பது போல பார்த்து தலையை ஒரு பக்கமாய் சரித்து குறும்புடன் கூறினாள்.

"அப்டீங்கற!"

"அட ஆமாங்கறேன்!"

"அப்ப சரி! நீ சொன்னா சரியாதான் இருக்கும்! நாளைலேர்ந்து லஞ்ச் பேக் பண்ணிக் குடுத்துடு!" என்று சொல்லி அவளை முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.

'அப்டி வாங்க வழிக்கு! இப்டி சொன்னாதானே அலைய மாட்டீங்க! சும்மா சும்மா அலைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்!' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். மறுநாளில் இருந்து விராட்டும் செல்வியைப் போலவே மதிய உணவு எடுத்துப் போகத் தொடங்கினான்.

ஒரு நாள் ஆனந்தியின் கைப்பேசிக்கு ஆனந்தன் போன் செய்தான். ஆனந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். தீபிகாவுக்கு தேர்வு நேரம். அவள் படித்துக் கொண்டிருந்தாள். ஆனந்திக்கு கைப்பேசி சத்தம் கேட்கவில்லை! அவள் மசக்கையினால் ஏற்பட்ட மயக்கத்தில்தானே உறங்குகிறாள். எனவே ஆனந்தன் வீட்டு தொலைப்பேசிக்கு அழைத்தான். தீபிகா அந்த அழைப்பை எடுத்தாள்.

"ஹலோ!"

"நான் ஆனந்த் பேசறேன்! ஆனந்தி இருக்காளா?"

"பாபி தூங்கறாங்க!"

"ஓகே! ஓகே! நான் அப்றம் பண்றேன்!"

"ஆனந்த்! ஒரு நிமிஷம்!"

அவன் வைத்தே விட்டான்.

'இவன் ஏன் இப்டி பண்றான்!' நினைத்தாளே ஒழிய அவனுடைய கைப்பேசிக்கு அழைக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை!

இன்னொரு நாள் ஆனந்தியின் கைப்பேசிக்கு அவன் அழைக்கும் போது ஆனந்தி குளித்துக் கொண்டிருந்தாள். தீபிகா குரல் கொடுத்தாள்.

"பாபி! உங்கண்ணன் கூப்பிடறார்!"

"குளிக்கறேன்னு சொல்லிடு சுட்கி! நானே வந்து கால் பண்றேன்னு சொல்லிடு!"

"சரி பாபி!" சொல்லிவிட்டு அந்த அழைப்பை எடுத்துப் பேசினாள்.

"ஹலோ ஆனந்தி!"

"பாபி குளிக்கறாங்க! குளிச்சிட்டு வந்து அவங்களே கால் பண்றேன்னு சொன்னாங்க!"

"ஓகே!" வைத்துவிட்டான்.

'அடப்பாவி! ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேச மாட்டியா? இருடா! உனக்கு ஒரு நாள் நானே கால் பண்றேன்! கால் பண்ணி உன்ன என் கூட பேச வெக்கறேன்!' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

இப்படியே நாட்கள் மெதுவாக நகர, விராட் ஆனந்தி முதல் திருமண நாள் வந்தது! எல்லாரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்! ஆனந்திக்கு தங்கத்தில் அழகான ஜிமிக்கி வாங்கிக் கொடுத்தான் விராட்! ஆனந்தி தன் கணவனுக்கு கைக்கடிகாரம் பரிசளித்தாள்!

கௌரியும் தீன்தயாளும் புத்தாடை வாங்கிக் கொடுத்து வாழ்த்தினார்கள்!

சூரஜும் செல்வியும் சேர்ந்து இருவருக்கும் தங்கத்தில் ப்ரேஸ்லெட் பரிசளித்தார்கள்!

தீபிகா தன் அண்ணனுக்கு கூலர்ஸும் அண்ணிக்கு பெரிய சைஸ் ட்ராயிங் ஸ்டான்டும் பரிசளித்தாள்!

ஆனந்தனும் அதே பரிசுகளையே தன் தங்கைக்கும் தங்கை கணவனுக்கும் அனுப்பியிருந்தான். அதே கூலர்ஸ்! அதே ட்ராயிங் ஸ்டான்ட்!

சூரஜின் முதல் திருமண நாளுக்கு அவளும் ஆனந்தனும் ஒரே பரிசை அனுப்பியிருந்தனர் என்று அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது!

'அடப்பாவி! நான் என்ன நெனக்கிறேனோ அதையே நீயும் நெனக்கிறியே!' என்று நினைத்து நினைத்து மகிழ்ந்தாள்!

'அவன் கிட்ட எப்டியாச்சும் பேசிடனும்..' என்று நினைத்தாள்!

ஆனந்திக்கு ஐந்தாம் மாதம் மசக்கை நின்றுவிட்டது. விராட் அவளுடைய மன மகிழ்ச்சிக்காக அவள் ஆசைப்பட்டபடி அவளை திருச்சிக்கு அனுப்பி வைத்தான். அதனால் திருச்சிக்கு சென்று அம்மாவின் கையால் ஆசைப்பட்டது சாப்பிட்டு அம்மாவுடன் சீராடிவிட்டு வந்தாள்.

தீபிகாவின் மனதில் ஆனந்துக்கான பெருங்காதலைத் தவிர எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் வாழ்க்கை எல்லாருக்கும் சீராகச் சென்று கொண்டிருந்தது.




சூலுற்ற அழகுப் பெண்ணவளைப்
புகுந்த வீட்டுப் பெரியோரும்
கண்ணுக்குள் மணியாக வைத்து
கனிவோடு சீராட்டி மகிழ்ந்தனரே!

அன்பு வெள்ளத்தில் அவளும்
தனை மறந்து மூழ்கி நின்றாள்!
மன்னவனும் அலுவலின் ஊடே
அவளோடு நேரம் கழித்தான்!

முன்னே காலம் உருண்டோடிட
முதலாம் திருமணநாள் வந்ததுவே!
உற்சாக விதைகளை இந்நாள் தூவிட
உள்ளங்களில் உல்லாசம் பொங்கியதே!

இல்லத்தில் மகிழ்ச்சித் தோரணம்!
இதயங்களில் கொண்டாட்ட அதிர்வெடி! இல்லத்தில் இனிமை பரவி நிற்க
நெஞ்சங்களில் நேசம் சதிராடியதே!

தீபிகாவும் ஆனந்தனும் பரிசுகளை
ஒன்றுபோல் அளித்திட்ட செயலதுவும்
உறவினருக்கு உண்மை ஒன்றை
உணர்த்தியதும் கடவுளின் செயலோ!


- C. புவனா.


- காதலின் மொழி என்ன?
 
Top