Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 33
மறுநாள் காலை சூரஜும் விராட்டும் ஜிம் போயிருந்தார்கள். செல்விக்கு இன்று யோகா செய்ய முடியாமல் தலை சுற்றியது. இரண்டு நாட்களாகவே இப்படிதான் இருக்கிறது. எத்தனை யோசித்தும் ஏன் என்று புரியவில்லை. இது போல எப்போதாவது நடப்பதுதான் என்று விட்டுவிட்டாள். வீட்டில் இன்னும் யாரும் எழுந்து கொள்ளவில்லை. தேநீர் கலந்தாள். குடிக்க ஆரம்பிக்கும் போது விராட் வரும் சத்தம் கேட்டது.
விராட் மட்டும் தனியே வந்தான்! சூரஜ் இன்னும் வரவில்லை! ஜிம் போய் வந்த கொழுந்தனுக்கு தேநீர் கொடுத்துவிட்டு திரும்பினாள் செல்வி! அவளுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது! தடுமாறி விழப் போனவளை கையைப் பிடித்து உட்கார வைத்தான் விராட்!
"பாபி! ஆர் யூ ஆல்ரைட்!"
"யா! யா! அப்சொல்யூட்லி ஆல்ரைட்! ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன்! அங்க என்னோட டீ இருக்கு! கேன் யூ ப்ளீஸ் கெட் மீ?"
"யா! டெஃபனட்லி!" எடுத்து வந்து கொடுத்தான். நன்றி சொல்லி வாங்கி குடித்தாள்!
'ஐய! என்ன இன்னிக்கு டீ நல்லாவேல்ல!' என்று நினைத்தபடி குடித்து முடித்தாள். அவளுக்கு வாந்தி வரும் போல இருந்தது!
'சே! இன்னிக்கு என்ன இவ்ளோ கேவலமா டீ போட்ருக்கேன்! உவ்வே!' என்று நினைத்துக் கொண்டாள்.
"என்னாச்சு பாபி! திடீர்னு!" டீயைக் குடித்தபடி கேட்டான்.
"தெரில!" எழுந்தவள் இப்போது மயங்கிச் சரிந்தே விட்டாள். சரிந்தவளை கீழே விழாமல் பிடித்து சோபாவில் படுக்க வைத்துவிட்டு அவசரமாக மாடியேறி வந்து தங்கையை எழுப்பினான்.
"சுட்கி! ஜல்தி ஆவோ!"
பதறி எழுந்தவள் விராட் சொன்னதைக் கேட்டு தன் ஸ்டெத்தெஸ்கோப்பை எடுத்துக் கொண்டு கீழே ஓடி வந்தாள்.
ஜிம் போய்விட்டு வந்த சூரஜ் ஓடி வரும் தங்கையையும் தம்பியையும் பார்த்து கலவரமடைந்து,
"ஹே! க்யா ஹுவா?" என்றான்.
"பாபி.." விராட்டால் பேச முடியவில்லை! அவசர அவசரமாக மாடியேறி இறங்கியதால் மூச்சு வாங்கியது.
கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு நடந்ததைக் கூறினான். சூரஜுக்கும் அவனுடைய பதற்றம் தொற்றிக் கொண்டது.
அதற்குள் தீபிகா செல்வியை பரிசோதித்து அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.
"ஹே! சூரஜ்! சூப்பர்டா! நம்ம வீட்டுக்கு ரெண்டாவது புது மெம்பர் வரப்போறாங்க! ஹேய்! ஹா! ஹா!"
விராட் அண்ணனைக் தூக்கிக்கொண்டு சுற்றினான். விராட்டின் சிரிப்புச் சத்தம் கேட்டு விழித்த செல்வியை தீபிகா சந்தோஷமாக கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"என்ன சுட்கி? எல்லாரும் இவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க?" அப்பாவியாய் கேட்ட செல்வியை கட்டிக்கொண்டு தீபிகா விஷயத்தைக் கூறினாள்!
"பாபி! ஆப் மா பன்னேவாலி ஹைன்!"
'ஓ! அதுதானா? ரெண்டு நாளா தலை சுத்தற மாதிரியே இருந்தது! நான் இப்டி ஒண்ணுன்னு யோசிக்கவேயில்லையே!' என்று மனதுக்குள் நினைத்தாள்.
தீபிகாவிடம் ரகசியம் பேசினாள்!
"நான் சொன்னேன்ல! நீதான் எனக்கும் நல்ல செய்தி சொல்லப் போறன்னு!"
"ஆமா பாபி! ரொம்ப சந்தோஷமா இருக்கு! இருங்க சக்கரை கொண்டு வரேன்!" எழுந்து போனாள்.
விராட், "கங்க்ராட்ஸ் பாபி!" என்று செல்வியின் கையைப் பிடித்து குலுக்கினான்.
"தேங்க்ஸ் விராட்!"
சூரஜ் அவளருகில் வந்து அமர்ந்து கொண்டான்!
"தமிழ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!"
அவள் கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டு அதில் முத்தமிட்டான். செல்வி அவனுடைய தோளிலேயே சாய்ந்து கொண்டாள். விராட்டுக்கு இந்தக் காட்சியைக் காணக் காண தெவிட்டவில்லை!
'இவங்க இப்டிதான் இருக்கணும்னு நான் எவ்ளோ நாளா ஏங்கினேன்! கடவுள் இப்பதான் கண்ணத் தொறந்திருக்கார்.' என்று நினைத்துக் கொண்டான்.
தீபிகா சக்கரை எடுத்து வந்து எல்லாருக்கும் தர அதை அனைவரும் வாயில் போட்டுக் கொண்டார்கள்.
செல்வி எழுந்து உள்ளே செல்ல முயல, மீண்டும் தள்ளாடி விழப் போனாள்.
"பாபி! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க! மானிங் சிக்னெஸ் இருக்கும்!" என்று கூறி செல்வியை உள்ளே அனுப்பினாள் தீபிகா.
"வா தமிழ்!" என்று சூரஜ் அவள் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.
விராட்டும் தீபிகாவும் பேசிக்கொண்டே மாடியேறினர்.
"தமிழ்! காலைலயே ரொம்ப சந்தோஷமான செய்தி சொல்லியிருக்க! தேங்க்யூ சோ மச்!"
"நான் இப்டின்னு யோசிக்கவே இல்ல! ரெண்டு நாளா ஒரு மாதிரிதான் இருந்தது!"
"இஸ் இட்! என்கிட்ட சொல்லவேயில்ல?"
"ஸ்கூல்ல கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியா இருந்தது! அதனாலதான்னு நெனச்சேன்! சரியாய்டும்னு நெனச்சேன்!"
"இன்னிக்கு லீவ் போட்டுடு.. வேலைக்கு கூட முடிஞ்சா போ.. இல்லன்னா விட்டுடு.. உன் ஹெல்த் ரொம்ப முக்கியம் தமிழ்."
"ம். டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு டிசைட் பண்ணிக்கலாம்ங்க." என்றாள்.
"ம்! சரி" என்றான் சூரஜ்.
விராட் தீபிகாவுடன் மாடியேறியபடி சொன்னான்!
"ரொம்ப சந்தோஷமா இருக்குல்ல சுட்கி!
"ஆமாண்ணா! இது நடக்கணும்னு எவ்ளோ நாள் வெயிட் பண்ணினோம்ல!"
"ம்! நான் போய் ஆனந்தி கிட்ட சொல்றேன்! நீ அம்மா அப்பா எழுந்ததும் அவங்க கிட்ட சொல்லு!"
விராட் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான். ஆனந்தி தூக்கம் கலைந்து கண் விழித்தாள். அவளை மெதுவாக எழுப்பி அமர வைத்தான்.
"உன்கிட்ட ஒரு நல்ல செய்தி சொல்லவா?" கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தான்.
"ம்! என்னங்க!" அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"நீ இதக் கேட்டன்னா எழுந்து குதிக்கவே ஆரம்பிச்சுடுவ!"
"அப்டியா! என்ன விஷயம் விராட்!"
"நம்ம செல்வி பாபி.." நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்தான்.
"செல்வி பாபி..?" என்ன என்பது போல பார்த்தாள்.
"செல்வி பாபி கன்சீவ் ஆகியிருக்காங்க!" அவன் கண்கள் முகம் எல்லாம் மலர்ந்து சிரித்தது.
"என்னது?! நெஜமாவா! வாவ்!" கண்கள் விரிய ஆச்சர்யமும் சந்தோஷமுமாய் விராட்டை கட்டிக் கொண்டாள்.
"ம்! மெதுவா வா! ப்ரஷ் பண்ணிட்டு வா! பாபிய பாக்க போகலாம்!" அழைத்தான்.
அவன் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். அவள் வயிற்றில் குழந்தை ஏகத்துக்கும் உதைத்தது. அப்படியே அமர்ந்தாள்.
"ஆ! அம்மா!" மெல்லிய குரலில் முனகினாள்.
"என்ன ஆச்சு!" கேட்டான்.
"நீங்க சொன்ன விஷயம் கேட்டு நான் குதிப்பேன்னு சொன்னீங்க! அம்மா நீ குதிக்காத! உனக்கும் சேர்த்து நான் குதிக்கறேன்னு உங்க குழந்தை பயங்கரமா குதிக்கறது!" என்றாள்.
ஆச்சர்யமாய் அவள் வயிற்றில் கையையும் காதையும் வைத்துக் கேட்டான். இன்னும் வேகமாய் துள்ளியது குழந்தை! சிலிர்த்தான்.
"நம்ம குழந்தை தன் கூட விளையாட ஒரு ஆள் வரப் போறதுன்னு தெரிஞ்சு தன்னனோட சந்தோஷத்த காட்டுதுல்ல!"
"ஆமாங்க!" சொல்லிக்கொண்டே மெதுவாக எழுந்து கொண்டாள்.
தீபிகா குளித்து தயாராகி வரவும் கௌரியும் தீன்தயாளும் எழுந்து வரவும் சரியாக இருந்தது. இருவரிடமும் நல்ல செய்தியை சொன்னாள். இருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் செல்வியின் அறைக்கு போனார்கள். பின்னாலேயே ஆனந்தியும் விராட்டும் தீபிகாவும் வந்தனர்.
பெரியவர்கள் இருவரும் வாழ்த்தினார்கள்.
"அக்கா! ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா! கங்க்ராட்ஸ்!" தங்கை அக்காவை கட்டிப் பிடித்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். செல்வி வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டாள்.
"ஹை! அக்கா உன்னப் பாத்தா இப்பதான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்த புதுப் பொண்ணு மாதிரியே இருக்கு! எவ்ளோ வெக்கம்! அடாடாடா!" செல்வியின் காதில் கிசுகிசுப்பாய் கூறினாள்.
"போடி!" செல்லமாய் சிணுங்கினாள்! அவள் முகம் இன்னும் சிவந்தது.
"கங்க்ராட்ஸ் மாமா!" சூரஜுக்கு கை கொடுத்தாள்.
"தேங்க்யூ ஆனந்தி!" பதிலுக்கு கை கொடுத்தான்.
கௌரி மருமகளுக்கு இனிப்பு செய்வதற்காகச் செல்ல தீன்தயாளும் அவளுடன் சென்றுவிட்டார். சூரஜும் விராட்டும் பேசியபடி ஹாலுக்குப் போனார்கள்.
"உனக்கு தெரியுமாக்கா! நீ கன்சீவ் ஆயிருக்கேன்னு சொன்னதுலேந்து உள்ள குழந்தை பயங்கரமா உதைக்கறது!"
"ரியலி?" தீபிகா ஆச்சர்யமாய் கேட்டாள்.
"நெஜாவாடி!" ஆச்சர்யமாய் கேட்டு அவளும் கையையும் காதையும் வைத்துக் கேட்க, தீபிகாவும் கேட்டாள். இருவரும் சிலிர்த்தனர்.
கௌரி மங்கைக்கும் லக்ஷ்மி பாட்டிக்கும் நல்ல செய்தியை கூறினாள். மங்கையும் கிரிதரனும் எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தார்கள். மங்கை அனைவரிடமும் நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டாள்.
அடுத்த வாரம் ஆனந்தியின் வளைகாப்புக்கு எல்லாரும் வர இருக்கிறார்கள்! அதனால் இம்முறை லக்ஷ்மி பாட்டி அடம் பிடிக்காமல் தன் பேத்தியிடம் போனில் பேசிவிட்டு,
"அடுத்த வாரம் வரேன்டி ராஜாத்தி!" என்று கூறினாள்.
"நானே சொல்லணும்னு நெனச்சேன் பாட்டி! நீங்களே சொல்லிட்டீங்க! அலைச்சல் வேண்டாம்! அடுத்த வாரமே வாங்க பாட்டி!" என்று அக்கறையுடன் கூறினாள் பேத்தி!
திருச்சிக்கும் தஞ்சைக்கும் விஷயம் போய் திருச்சியிலிருந்து யூஎஸ்ஸுக்கு விஷயம் சென்றது.
ஆனந்தன் செல்விக்கு அழைத்தான்! ஆனால் அதை சூரஜ் எடுத்துப் பேசினான்! வாழ்த்தியவனுக்கு நன்றியைச் சொன்னான். அக்காவிடம் பேச வேண்டும் என்றதும் தமிழிடம் கொடு என்று தீபிகாவிடம் கொடுத்தான் சூரஜ்!
"ஹலோ!"
"செல்வி அக்கா இல்லையா?" ஆனந்த் கடுகடுத்தான்.
"இருக்காங்களே! பாபி காடன்ல ஆனந்தி பாபியோட பேசிகிட்டு இருக்காங்க! நான் அங்கதான் போறேன்! அதுக்கு முன்னாடி என்கிட்ட பேசக்கூடாதா?" கேட்டாள்.
".."
"ஆனந்த்! என்கிட்ட பேசமாட்டீங்களா?" மனதில் எழுந்த கோபத்தை குரலில் காட்டாமல் கவனமாய் பேசினாள்.
"ஏங்க! நீங்க அக்காகிட்ட குடுக்கப் போறீங்களா இல்ல நான் கட் பண்ணவா?" காட்டமாகக் கேட்டான்.
"இருங்க! இருங்க! உங்க அக்கா கிட்டயே குடுக்கறேன்! நீங்க கோவப்படாதீங்க!" சமாதானமாகச் சொல்லிவிட்டு கைப்பேசியை செல்வியிடம் கொடுத்தாள்.
'ஏன் இவன் இவ்ளோ கோவப்படறான்! ஏண்டா இப்டி பண்ற!' மனதுக்குள் மருகினாள்!
அவனிடமே பேசி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவும் செய்து கொண்டாள். ரொம்ப யோசித்து இரண்டு மூன்று முறை பேசிப் பார்த்து, தன்னை தயார் செய்து கொண்டு அவன் எண்களை போட்டுவிட்டு கால் பட்டனை அழுத்தப் போனாள்.
'இல்ல இன்னிக்கு வேணாம்! இப்பதான் கோவமா பேசினான்! நாளைக்கு பண்லாம்!' கேன்ஸல் செய்துவிட்டாள். மறுநாளும் இப்படியே செய்தாள். மூன்றாவது நாள் அவளுக்கு பொறுமை இல்லை! கால் பட்டனை அழுத்தியே விட்டாள்.
சூலுற்ற பெண்ணுக்கு வளைசூட்ட
உற்றோரும் சுற்றோரும் நாள் குறித்து
நன்னாளை எதிர்நோக்கி வீட்டில்
மகிழ்வுடன் காத்து நின்றனரே!
வளைகாப்பு நாளை வரவேற்க
செல்வியும் கனிவோடு காத்திருந்தாள்!
மயங்கியே விழுந்தாள் செல்வி!
மகிழ்ச்சியூட்டும் செய்தி தந்தாள்!
ஆனந்தியின் ஆனந்தத்தில்
ஆர்ப்பரித்த சொந்த பந்தங்கள்
செல்வியின் செல்வத்தை வரவேற்க
சிலிர்ப்புடன் அகமகிழ்ந்தனரே! !
ஆனந்தனின் நினைவில் தீபிகாவோ
உளம் உருகி வாடி நின்றாள்!
மன்னவனிடம் தன் மனக்கிடக்கையை
வெளிப்படுத்த முடிவு செய்தாள்!
மன்னவனும் மங்கையும் அன்பால்
சேர்ந்திடும் நாள் வந்திடுமோ?
இதயங்கள் இணையும் நாளை
இறைவனும் தந்திடுவானோ?
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?