Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 34
தீபிகா ஆனந்தனுக்கு அழைத்தாள். தெரியாத எண்ணாக இருக்கிறதே என்று நினைத்தபடி கைப்பேசியை காதுக்குக் கொடுத்தான்.
"ஹலோ! ஆனந்த் ஹியர்!"
"ஹலோ! ஐம் தீபிகா!"
"ம்!"
இருவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள்.
"ஏன் ஆனந்த்! என்கிட்ட பேச மாட்றீங்க!"
".."
"நான் உங்கள ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்னு நெனக்கிறேன்! ஸாரி ஆனந்த்!"
"நோ! நத்திங் லைக் தட்!"
"அப்ப ஏன் பேசமாட்றீங்க?"
".."
"நம்ம ரெண்டு பேரும் யாரோ இல்லையே! ரிலேஷன்தானே!"
"அதனாலதான் போன கட் பண்ணாம இருக்கேன்!" கடுகடுவென்று கூறினான்.
"ஸாரி! ஆனந்த்! நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு என்கிட்ட பேச வேணாம்! இவ்ளோ நாள் நீங்க என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்ததுக்கு தேங்க்ஸ்! இனிமே நானும் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! பை!" கண் கலங்கயபடியே அழைப்பை வைத்துவிட்டாள்.
ஆனந்தனுக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. அவள் கண் கலங்குவதை அவளுடைய குரலின் மாறுபாட்டால் அறிந்து கொண்டான். அவனுடைய தேவதை கண் கலங்குகிறாள். அதற்கு அவனே காரணம் ஆவதா? அவளை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவளே பேசு பேசு என்று கெஞ்சும்போது நான் ஏன் பேசாமல் இருக்க வேண்டும்? உடனே அவளுடைய நம்பரை அழுத்திவிட்டு காத்திருந்தான்.
"ஹலோ!"
"ஹலோ! தீபிகா!"
"ம்!"
"ஸாரி! ஐம் ரியலி ஸாரி!"
".."
"பேச மாட்டிங்களா! இன்னும் என் மேல கோபமா!" என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க,
"நீங்கதான் பேசாம இருந்தீங்க! உங்களுக்குதான் என் மேல கோபம்!" என்று அவள் தமிழில் பதில் கூறினாள்.
'தமிழ்ல பேசறாளே!' என்று வியந்தபடி அவனும் தமிழில் பேசினான்.
"இல்ல! இல்ல! எனக்கு உங்க மேல கோபம் எல்லாம் இல்லங்க!"
"அப்ப ஏன் பேசாம இருந்தீங்க?"
"அது.. அது வந்து.."
"ஆனந்த்! உங்களுக்கு என்னப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்!"
"அது அப்போ! இப்ப இல்ல!" வேண்டுமென்றே பொய் சொன்னான்.
"எங்க செல்வி பாபியோட தம்பிக்கு யார் மேலயும் பொய்யா அன்பு வெக்கத் தெரியாதுன்னு எனக்கு தெரியும்! உண்மையான அன்பு வெச்சப்புறம் அத மறக்காம இருப்பாங்கன்னும் தெரியும்!"
".." 'அடிப்பாவி! கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாளே!'
"தெரியும் ஆனந்த்! நீங்க இன்னும் என்ன மறக்கலன்னு எனக்கு நல்லா தெரியும்! நீங்களும் நானும் ஒரே மாதிரிதான் திங்க் பண்றோம்! நீங்க என்ன நெனக்கறீங்களோ அததான் நானும் நெனக்கறேன். நான் என்ன நெனக்கறனோ அததான் நீங்களும் நெனக்கிறீங்க!"
"அப்டீன்னு நீங்களா நெனச்சுகிட்டா எனக்கு ஒண்ணுமில்ல!" கடுப்பாகக் கூறினான்.
"நானா நெனச்சுக்கல! நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் நெனக்கிறோம்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும்!"
"எப்டி ப்ரூவ் பண்ணுவீங்க?!" சங்தேகமாகக் கேட்டான்.
அவள் சொன்னாள். தன்னுடைய இரு அண்ணன்களின் முதல் வருட திருமண நாள் பரிசாக இருவருமே ஒரே பரிசைதான் அனுப்பியிருந்தோம் என்று சொன்னாள். அவனுக்கு வியப்போ வியப்பு.
"ஆனந்த்! ஸாரி ஆனந்த்! உங்கள ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்!"
"ஹேய்! கமான் யா! அதெல்லாம் ஒண்ணுமில்ல! ப்ளீஸ்! சும்மா சும்மா ஸாரி சொல்லாதீங்க!"
"அப்ப இனிமே என்கிட்ட பேசுவீங்கதானே?"
"அட ராமா! பேசுவேங்க! போதுமா?"
"ஹா! ஹா!" வாய்விட்டு சிரித்தாள். கூடச் சேர்ந்து சிரித்தான். பிறகு கேட்டான்.
"எப்பலேர்ந்து தமிழ் கத்துக்கறீங்க?"
"ஆனந்தி பாபி கன்சீவ் ஆனதுலேர்ந்து!"
"ஓ! அப்டீன்னா அப்பலேர்ந்தே என்ன நெனக்க ஆரம்பிச்சுட்டீங்களா!"
"ஆக்சுவலா அதுக்கு முன்னாடியே.. ஆனந்தி பாபி எங்க வீட்ல உங்க வீடு மாதிரியே அலங்காரம் பண்ணி தோட்டம் எல்லாம் வெச்சிருக்காங்க! அதப் பாத்து பாத்து உங்க முகம் திரும்பத் திரும்ப எனக்கு மனசில வந்திச்சு! லக்ஷ்மி பாட்டி, செல்வி பாபி, ஆனந்தி பாபி மூணு பேரும் உங்களப் பத்தி பேசிப் பேசி நான் உங்களையே நெனக்க ஆரம்பிச்சுட்டேன்! கொஞ்சம் கொஞ்சமா நீங்க மனசுக்குள்ள வந்துட்டீங்க!"
"அப்ப கூட எங்க அக்கா, தங்கை, பாட்டி எல்லாரும் என்னப் பத்தி பேசினதுனாலதான் உங்களுக்கு என்ன பிடிச்சுது! இல்லையா?" குற்றம் சாட்டும் குரலில் கூறினான்.
"ஐம் ஸாரி! இதுக்கு என்னால ஆமாம்னுதான் பதில் சொல்ல முடியும்! ஏன்னா அதுதான் உண்மை!"
"ஆனா இத எப்டி என்னால ஏத்துக்க முடியும்!"
"ஆனா நீங்கதான் என் மனசில வந்துட்டீங்களே! நீங்க சொல்லி வந்தா என்ன? உங்க வீட்டு ஆளுங்க சொல்லி வந்தா என்ன?"
"ஓ! அப்டி ஒண்ணு இருக்கோ?"
"ம்! இருக்கு! நீங்க மனசில வந்துட்டீங்க! ஆனா போன் லைன்ல வராம இருந்தீங்க! அதான் தமிழ்ல பேசினா ஒருவேள என்னப் பிடிக்குமோன்னு தமிழ் கத்துகிட்டேன்!" நீளமாகப் பேசினாள். அவள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தமிழில் அவனுக்கு உள்ளம் இனித்தது.
"உங்கள எனக்கு எப்பவுமே பிடிக்கும்ங்க! போன்ல உங்ககிட்ட பேசாம இருந்ததுக்கு ரொம்ப வருத்தப்படுவேங்க! வருத்தப்பட்டு என்ன நானே பனிஷ் பண்ணிக்குவேன்!"
"ஹையோ! என்ன பனிஷ்மென்ட்?" கலவரமாய்க் கேட்டாள்.
"வேறென்ன! சாப்பிடாம பட்டினி கிடப்பேன்!"
"அப்டியெல்லாம் பட்னி இருக்காதீங்க ஆனந்த்!"
"இனிமே பட்டினி இருக்க மாட்டேன்!"
"நீங்க தனியா இருந்தாதானே இப்டியெல்லாம் செய்வீங்க? மொதல்ல சொல்லுங்க! எப்ப இண்டியா வரப்போறீங்க?"
"எதுக்கு?"
"எதுக்கா? நான் ஒருத்தி உங்களுக்காக இங்க காத்துக்கிட்டு இருக்கேன்! எப்ப வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?"
"என்னமோ சொன்னீங்க! ஐ டோண் வான்ட் டு பீ எ டிபிக்கல் இண்டியன் வைஃப் அப்டீன்னு! இப்ப மட்டும் என்னாச்சு?" ஏளனமாகக் கேட்டான்.
"ஆமா! இப்பவும் சொல்றேன்! ஐ டோண் வான்ட் டு பீ எ டிபிக்கல் இண்டியன் வைஃப்! ஐ வில் பிகம் எ மாடன் இண்டியன் வைஃப்!"
"அப்டீன்னா?"
"அப்டீன்னா, உங்க மனைவியா உங்க குழந்தைகளுக்கு அம்மாவா இருப்பேன். அதே நேரத்தில தீபிகாங்கற என்னோட அடையாளம் தொலையாம ஒரு டாக்டராகவும் இருப்பேன். உங்களுக்கும் சேவை செய்வேன்! மக்களுக்கும் சேவை செய்வேன். நம்ம குழந்தைங்க ஸ்கூல் ப்ராஜெக்ட் பண்ணும் போது நானும் என்னோட தீஸிஸ்க்காக ப்ராஜெக்ட் பண்ணுவேன்! இப்ப சொல்லுங்க! நான் மாடன் இண்டியன் வைஃப்தானே!"
"நீங்க போன கட் பண்ணுங்களேன்!"
"ஏங்க?" அவசரமாய்க் கேட்டாள்.
"கட் பண்ணுங்க சொல்றேன்!"
"வேண்டாங்க!" என்ற அவள் குரல் காற்றில் பறந்தது. அவன் காலை கட் செய்தே விட்டான்.
தீபிகாவுக்கு அழுகையே வந்துவிட்டது!
'இவ்ளோ பேசிட்டோம். இன்னும் இவருக்கு என்ன ஏத்துக்க மனசு வரலியா? நான் அப்டி என்ன தப்பு செய்துட்டேன்! எனக்கு எப்ப லவ் வருதோ அப்பதானே அவர்கிட்ட லவ்வ சொல்ல முடியும்! இவர் என்ன வெறுத்துட்டாரே! இனிமே நான் எப்டி இருப்பேன்! ஹே பக்வான்! என் ஆனந்த் என்ன ஏத்துக்க வேற நல்ல வழி காட்டு! ப்ளீஸ்!' என்று கடவுளை மனமுருகி நினைக்கும் வேளையில் அவள் செல் சிணுங்கியது! ஆனந்தன் வீடியோ காலில் அழைத்தான்!
"ஹலோ!"
"இதுக்குதான் கட் பண்ணினீங்களா?" கண்ணைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள்.
"ம்! ஆமாங்க!" அவனும் சிரித்தான்.
"அப்ப ஏங்க இவ்ளோ நேரம் கழிச்சி கூப்டீங்க!" செல்லமாகக் கோபித்தாள்.
"இப்பதான் குளிச்சிட்டு வந்தேங்க! வெறும் டவலோட நின்னு பேசிகிட்டு இருந்தேன்! வீடியோல பேசும்போது நல்லா இருக்காதேன்னு ட்ரஸ் பண்ணிகிட்டு வந்தேங்க! அதான்!" வெட்கத்தோடு கூறினான்.
அவன் வெட்கப்படுவதை ரசித்தாள். ஆண்களுக்கும் வெட்கம் வருமா? தெரியாதே! அவள் வாய்விட்டு சிரித்தாள். அவள் சிரிப்பதை ஆவலாய்ப் பார்த்தான். எவ்வளவு அழகாயிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
"ஸாரி ஆனந்த்! நீங்க காலைக் கட் பண்ணினதும் இன்னும் என் மேல கோபமோன்னு நெனச்சேன்."
"உங்க மேல கோவமா? எப்பவுமே இருந்ததில்ல.."
"அப்ப எதுக்கு இன்னும் வாங்க போங்கன்னு பேசறீங்க! நான் உங்க தீபிகாதானே! நீன்னு கூப்டுங்க!" உரிமையோடு சொன்னாள்.
"சரிங்க.."
அவள் வாய்விட்டு சிரித்தாள். அவனும் சிரித்தான்.
"எப்ப இண்டியா வருவீங்க ஆனந்த்?"
"கூடிய சீக்ரம் வரேன்!"
"ஏன் ஆனந்தி பாபியோட வளைகாப்புக்கு வரலியா?"
"அது லேடீஸ் ஃபங்ஷன்! நான் வந்து என்ன பண்ணப்போறேன்?"
"செல்வி பாபிய பாக்க வேணாமா?"
"வேணும்தான்! ஆனா வேலையிருக்கே?"
"என்ன ஆனந்த்! நீங்க வருவீங்கன்னு நெனச்சேன்! உங்களப் பாக்கலாம்னு ஆசையா காத்திருந்தேன்! ம்ச்! சரி! விடுங்க! ஆனா சீக்ரமா வாங்க ஆனந்த்!" அவள் முகம் விழுந்துவிட்டது.
"சீக்ரமா வரேன்! சரியா!"
"நீங்க பையாகிட்ட பேசறீங்களா? சூரஜ் பையா இப்ப வீட்டுலதான் இருக்காரு.."
"நான் அப்பாகிட்ட பேசிட்டு சூரஜ் மாமாகிட்ட அப்பாவ பேச சொல்றேன்! சீக்கிரமா நம்ம கல்யாணம் நடக்கும்! சரியா!"
"தேங்க்யூ ஆனந்த்! ஆனா, நீங்க என்னோட படிப்புக்கு தடை போட மாட்டீங்கதானே?"
"நிச்சயமா மாட்டேன்! நீ எவ்ளோ படிக்கணுமோ படி! உனக்கு நான் எப்பவுமே ஃபுல் சப்போர்ட்டா இருப்பேன்!"
"ஸோ ஸ்வீட்! தேங்க்யூ!"
"ஆனா ஒரு டௌட்டு?"
"என்ன டௌட்?"
"பெரிய பெரிய ஃப்யூச்சர் ப்ளான் எல்லாம் என்கிட்ட கேக்காமயே போட்ருக்க!"
"என்ன ப்ளான்?" புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள்.
"அதான்! சொன்னியே! எனக்கு மனைவியா ஆகறது! அப்றம் என் குழந்தைகளுக்கு அம்மாவா ஆகறது! அப்டீன்னெல்லாம்! எத்தனை குழந்தைகள் தீபிகா!" அவள் முகத்தை ஆவலுடன் நோக்கினான்.
"ம்! நீங்க முதல்ல வந்து கல்யாணம் பண்ணிக்கோங்க! அப்றமா சொல்றேன்! எத்தனை குழந்தைகள்ன்னு!" அவள் துடுக்காக பதில் சொன்னாள்.
அவன் வாய்விட்டு சிரித்தான்.
"இது உன்னோட நம்பர்தானே! நான் சேவ் பண்ணிக்கறேன்!" என்று கேட்டான்.
"ஆமா! என்னோட நம்பர்தான்!"
"ஓகே! நான் சேவ் பண்ணிக்கறேன்!" பை!"
"பை!"
இருவரும் அழைப்பை துண்டித்தனர். இருவருக்கும் உள்ளம் முழுதும் வண்ண வண்ண பலூன்கள் பறப்பது போல இருந்தது. அவன் அவளுயை நம்பரை தீபூ என்று சேமித்துக் கொண்டான்.
மயங்கியே தயங்கி நின்ற மங்கை
மனதில் துணிவைக் கூட்டினாள்!
மன்னவனை அழைத்து விட்டாள்!
மனதையும் திறந்து விட்டாள்!
மன்னவனும் மனமிரங்கி வந்தான்!
நீ தானே என் மனதில் என்றும்
நிறைந்து நிற்கிறாய் என்றுரைக்க
மங்கையும் மகிழ்ந்து நின்றாள்!
கோபம் எனக்கு இல்லையென்றான்!
உன் நி
னைவில் வாடினேன் என்றான்!
பெரியோரிடம் பேசுகிறேன் என்று
பெருமையுடன் உரைத்தான் அவன்!
சந்தேகத் திரை விலகியது!
காதல் உள்ளங்கள் களித்தன!
மாலை சூடும் மணநாள் காண
மனதுக்குள் கனவுகள் மலர்ந்தன!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?