Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 37
விருந்து முடிந்ததும், ஆனந்தன் அனைவரையும் அழைத்தான். தீபிகாவையும் வரச் சொன்னான். அவளும் வந்து செல்வியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
"நான் ஒரு மாச லீவ்ல வந்திருக்கேன். இப்ப திருப்பியும் போனா யூஎஸ்லேந்து திரும்ப மூணு வருஷம் ஆகும். இன்னும் எனக்கு மூணு வருஷம் கான்ட்ராக்ட் இருக்கு! நான் அங்க குடுத்த டார்கெட் எல்லாம் ஒழுங்கா கம்ப்ளீட் பண்ணி குடுக்கறதுனால இப்ப நான் லீவ் கேட்டதும் குடுத்துட்டாங்க! அதனால எங்க கல்யாணத்த எவ்ளோ சீக்ரம் முடிக்க முடியுமோ அவ்ளோ சீக்ரம் முடிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன்! இல்லன்னா இன்னும் மூணு வருஷம் நான் வெயிட் பண்ணனும்! பெரியவங்க நீங்க என் நிலைமைய புரிஞ்சிக்கணும்!" கவனமாகப் பேசினான்.
"ஆனா, மாப்ள! இது எப்டி? நல்ல நாள் பாத்து சத்திரம் பாத்து இன்விடேஷன் பிரிண்ட் பண்ணி எல்லாரையும் இன்வைட் பண்ணி அப்றம் பர்சேஸ்.. எக்கசக்க வேலையிருக்கே!"
சூரஜ் கவலையோடு சொன்னான்.
"மாமா ப்ளீஸ்! மாப்ளன்னு கூப்பிட்டு என்ன அந்நியப்படுத்தாதீங்க! நான் எப்பவுமே உங்க ஆனந்த் தான்!"
"சரி ஆனந்த்! நான் ஒரே மாசத்ல எப்டி இது அத்தனையும் முடிக்க முடியும்?"
"சிம்பிள் மாமா! இதோ இன்னிக்கு மாதிரியே அடுத்த வாரத்தில வர ஒரு முகூர்த்த நாள் பாருங்க! நம்ம வீட்டுப் பெரியவங்க எல்லாரும் இங்கதானே இருக்கீங்க! எல்லார் முன்னாடியும் வெச்சு நான் தீபிகாவ கல்யாணம் பண்ணிக்கறேன்! திருச்சில ரிசப்ஷன் வெச்சு முடிச்சிடலாம். இப்ப செல்வி அக்காவும் ஆனந்தியும் இருக்கற நெலமைக்கு ரெண்டு பேராலயும் அலைய முடியாது! அவங்கள நம்ம அலைய வைக்கவும் கூடாது! அதனால கல்யாணத்துக்கு எல்லார்க்கும் ட்ரஸ் மட்டும் வாங்கிக்கலாம்! திருமாங்கல்யம் வாங்கிடலாம்! ஃபார்மாலிட்டீஸ் எதுவும் வேணாம் மாமா!" சூரஜிடம் சொல்லிவிட்டு,
"பெரியப்பா நீங்க என்ன சொல்றீங்க?" என்று தன் பெரியப்பாவிடம் கேட்டான்!
"இதுல நான் சொல்ல எதுவும் இல்ல. கீர்த்திதான் முடிவு செய்யணும்!" என்று சகலையிடம் சொன்னார்!
"என் மகனோட விருப்பம்தான் என் விருப்பம்!" என்று கூறிவிட்டு மனைவியின் முகம் பார்த்தார்.
"உங்க வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது! உங்க விருப்பம் என் விருப்பம்!" என்று பூங்குழலி சொல்லிவிட்டு தீபிகாவின் நெற்றியில் முத்தமிட்டாள். தீபிகாவின் முகம் குங்குமமாய் சிவந்தது.
அனைவரும் இதை மனமாற ஒப்புக் கொண்டனர்.
"கல்யாணம் முடிஞ்சதும் நான் தீபிகாவ கூட்டிட்டு போயிடறேன்!"
"ஆனா ஆனந்த்! அவ மேல படிக்கணும்னு.." இழுத்தான் விராட்!
"ஆமா மாப்ள! அவள அங்க இருக்கற பெரிய யூனிவர்ஸிட்டில சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்! அங்க போனதும் அவ காலேஜ் ஜாயின் பண்ணிடலாம்! அவ படிக்கட்டும்! நா அவள படிக்க வெக்கறேன்! அத விட எனக்கு வேற என்ன சந்தோஷம் இருக்கப் போறது?" என்றான்.
தீபிகா விழி விரிய ஆனந்தனைப் பார்த்தாள். முன்னெப்போதையும் விட ஆனந்தனை இந்த நொடி அவளுக்கு அதிகமாக பிடித்தது. இப்போதே அவனை அணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது.
ஆனந்தனும் அவளைப் பார்த்தான். அவள் கண்கள் நன்றி சொல்லின. நமக்குள் நன்றி எதுவும் வேண்டாம் என்று அவனும் கண்களாலயே பதில் சொன்னான்.
இவர்களின் இந்தப் பார்வை பரிமாற்றத்தைப் பார்த்த பெரியவர்கள் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது. இதற்காக எதை வேண்டுமானாலும் விட்டுத் தரலாமே! விட்டுக் கொடுத்தனர்.
பெரியவர்கள் அனைவரும் அவர்களை தோட்டத்தில் தனியே பேச விட்டு விட்டு எழுந்து சென்றனர்.
"தீபூ! ஆர் யூ ஹேப்பி நௌ?"
"யா! ஐம் ஹேப்பி! தேங்க்யூ சோ மச் நந்து!" முகம் மலர கூறினாள்.
அவளுடைய கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டான்.
"தீபூ, நம்ம மேரேஜ் முடிஞ்சதும் திருச்சில ரிசப்ஷன்! அது முடிஞ்சதும் உன்னோட விசா சமாச்சாரம் எல்லாம் முடிச்சுடனும்! அப்பதான் கிளம்ப கரெக்ட்டா இருக்கும்! அதனால உன் படிப்புக்குத் தேவையானதெல்லாம் இப்பவே பத்திரமா எடுத்து வெச்சுக்கோ!"
"ம்! டீக் ஹை!"
"உனக்கு வேற என்னென்ன வேணும்னு எனக்கு தெரியாது! அதையெல்லாம் கவனமா பேக் பண்ணிக்கோ!"
"ம்!"
"அங்க நம்ம குடித்தனம் நடத்த எல்லா வசதியோடயும் வாடகை வீடிருக்கு! இவ்ளோ நாள் பேச்சிலர் வாழ்க்கை! எல்லா வேலையும் நானே செஞ்சுகிட்டேன்! ஸெல்ஃப் குக்கிங்! இனிமே நீயும் நானும் சேந்து எல்லா வேலையையும் செய்வோம்! ஆனா நீ கவலையேபடாத! உன்னோட ஸ்டடீஸ் என்னால டிஸ்டர்ப் ஆகவே ஆகாது. ஓகேயா!"
"ஓகே!"
"மத்ததெல்லாம் யூஎஸ் போனப்றம் பாத்துக்கலாம்!"
"ம்!"
இருவரும் தங்களுடைய வாழ்க்கை பற்றி திட்டமிடத் தொடங்கினர்.
சூரஜ் ஐயரை அழைத்து அடுத்து வரும் முகூர்த்த நாளைப் பார்க்கச் சொன்னான். அடுத்து வரும் முகூர்த்த நாள் சரியாக அன்றிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து வந்தது.
வெள்ளிக்கிழமை! அன்றே திருமணத்தை நடத்த எல்லாரும் ஒப்புக் கொண்டனர். அதன்படி வேலைகளைத் தொடங்கினர்.
சூரஜும் விராட்டும் சுறுசுறுப்பாய் தங்கையின் திருமணத்துக்கு ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தனர். இன்னும் நான்கு நாட்கள்தானே உள்ளது.
கீர்த்திவாசனும் கிரிதரனும் மட்டும் திருச்சி சென்று அங்கு திருமண வரவேற்புக்கு அதாவது ரிசப்ஷனுக்கு மண்டபம் பார்த்து ஏற்பாடு செய்தனர். வரவேற்புக்கு எளிமையாக பத்திரிகை அடித்து முக்கியமானவர்களை நேரில் அழைத்தனர். தஞ்சை கிராமத்துக்குச் சென்று தங்கள் மாமியார் மாமனாரை அழைத்துக் கொண்டு மும்பை திரும்பினர்.
பூங்குழலியும் மங்கையும் சென்று திருமாங்கல்யம் ஆடர் செய்தனர். முகூர்த்தப் புடவை வாங்க கௌரியையும் தீபிகாவையும் ஆனந்தனையும் கூட அழைத்துச் சென்றனர். புடவை வாங்கி வரும்போது ஆடர் செய்த திருமாங்கல்யத்தையும் வாங்கி வந்து விட்டனர்.
செல்வியும் ஆனந்தியும் வீட்டிலேயே இருக்கிறோம் என்று கூறிவிட்டனர். இருவருக்கும் துணையாக பாட்டிதான் இருக்கிறாரே!
எல்லாம் தயாராகி அனைவரையும் அழைத்து அனைவரும் வந்து கௌரி தீன்தயாள் குடியிருக்கும் அந்தப் பெரிய வீட்டில் அவர்களின் செல்ல மகள் தீபிகாவுக்கு குறித்த முகூர்த்தத்தில் சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றது. தீபிகாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன் மனைவியாக ஏற்றான் ஆனந்தன்.
பெற்றவர்கள் பெரியவர்கள் மன நிறைய ஆசி வழங்கினர்.
விருந்து முடிந்து எல்லாரும் சற்று ஓய்வாக அமர்ந்தனர். பெரியவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் படுத்தனர். செல்வி மசக்கையில் மயங்கியிருந்தாள். ஆனந்தியும் சும்மா சும்மா மாடியேற வேண்டாம் என்று செல்வியின் பக்கத்திலேயே படுத்துவிட்டாள். தீபிகா அவளுடைய அறையில் பேக்கிங் செய்து கொண்டிருந்தாள்.
சூரஜும் விராட்டும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆனந்தன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான்.
"வாங்க மாப்ள!"
"மாமா ஆனந்த்னு கூப்டுங்க மாமா!"
"ஓகே! ஓகே! ஆன்ந்த்! ரொம்ப தேங்க்ஸ்! எதுக்குத் தெரியுமா? சுட்கியோட ஸ்டடீஸ்க்கு நீ தடை போடாம இருந்ததுக்கு!" என்றான் சூரஜ்!
"அவளுக்கு என்னவிட படிப்புதான் முக்கியம்னு எனக்கு தெரியும் மாமா!"
"என்ன இப்டி சொல்றீங்க?" விராட் கேட்டான்.
"அது ஒரு பெரிய கதை.. உங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சி எல்லாரும் கிளம்பி திருச்சி ஏர்போர்ட் வந்தீங்கல்ல! அப்ப தீபிகாவோட டெல்லி ஃப்ளைட் லேட்டாச்சுல்ல!"
"ஆமா!"
"அப்பவே அவ என்கிட்ட சொல்லிட்டா!"
ஆனந்தன் எல்லாவற்றையும் சொன்னான். தான் அவள் மேல் ஆசைப்பட்டது, அவளிடம் அதைக் கூற வரும்போது அவள் நீ என் பின்னால் வராதே என்று கூறியது, அவளை மறக்க யூஎஸ் ஓடியது, அங்கும் அவளை மறக்க முடியாமல் தவித்தது, அதன் பின் ஒரு வழியாக அவளுக்கு தன் மேல் காதல் வந்தது, தனக்கு போன் பேசிப் பேசி தன்னை கரைத்தது, ஆனாலும் படிப்பை விட மாட்டேன் என்று கண்டிஷன் போட்டது என்று எல்லாம் சொன்னான்.
"அம்மையார் என்ன நெனச்சதுக்குக் காரணமே பாட்டியும் செல்வி அக்காவும் ஆனந்தியும் அடிக்கடி என்னப் பத்தி பேசினதுனாலதான். இதுவே இவ பிஜிய டெல்லிலயே கன்டின்யூ பண்ணியிருந்தாள்னா என் மேல லவ்வே வந்திருக்காது! இப்பவும் என் மேல லவ் வந்துடுச்சுதான். ஆனா படிப்ப நிறுத்த மாட்டேன்னு சொல்லிட்டாளே! ஆனா ஒண்ணு மாமா! அவளோட ஆர்வத்த நான் மதிக்கறேன். அவ நிறைய படிச்சா எனக்குதானே பெருமை! என் மனைவி பெரிய படிப்பாளி! நான் எல்லார்கிட்டயும் பெருமையா சொல்வேன்!"
"ஆனந்த்! யூ ஆர் ரியலி க்ரேட்! நான் கூட என்னமோ லவ் பண்ண ஆரம்பிச்சவுடனே கல்யாணம் பண்ணிக்க ஓடி வந்துட்டன்னு நெனச்சேன்! ஆனா கிட்டதட்ட மூணு வருஷம் அவளுக்கு உன் மேல லவ் இருக்கா இல்லையான்னு தெரியாமலேயே தவிச்சிருக்கியேடா! ப்பா! நெஜமா ரொம்ப கஷ்டம்!" என்றான் விராட்!
"அதெல்லாம் ஒண்ணுமில்ல விராட்! முதல்ல நானும் இது அட்ராக்ஷனா இருக்குமோன்னுதான் நெனச்சேன்! ஆனா என் கூட வொர்க் பண்ணின ஒரு பொண்ணு என் கிட்ட வந்து நான் உங்கள லவ் பண்றேன்னு சொன்னப்பதான் இது ட்ரூ லவ்ன்னே எனக்கு புரிய ஆரம்பிச்சுது! செல்வி அக்கா எனக்கு சின்ன வயசிலயே சொல்லிக் குடுத்திருக்காங்க! எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணும்! ஒரு விதைக்கே டார்மன்ஸி பீரியட் இருக்கு! அப்ப நமக்கும் அது இல்லாம போய்டுமா? எல்லா நல்ல விஷயத்துக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணனும்னு சொல்லிக் குடுத்திருக்காங்க! நான் தீபிகாவோட மனசு கண்டிப்பா என் பக்கம் திரும்பும்னு வெயிட் பண்ணினேன். அதுவும் நான் நெனச்ச மாதிரியே திரும்பிடுச்சு!" மனம் நிறைய காதலுடன் கூறினான்.
சூரஜும் விராட்டும் செல்வியின் பெருமைகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டேயிருப்பது போல உணர்ந்தனர்.
"அப்ப உன்கிட்ட லவ் சொன்னவ சும்மாவா இருந்தா!" ஒரு மாதிரிக் குரலில் கேட்டான் விராட்.
"அவகிட்ட, அம்மா தாயே! எனக்கு என்னோட தேவதை இண்டியால படிச்சுகிட்டு இருக்கா! அவ படிச்சி முடிச்சதும் நான் போய் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவேன்! சும்மா சும்மா தொந்திரவு செய்யாத! அப்டீன்னு சொல்லிட்டேன்! சில சமயம் வந்து தொந்திரவு செய்வா! ஒரு நாள் உங்க கல்யாணத்தில எடுத்த க்ரூப் போட்டோல இருந்த தீபிகாவ எல்லார்கிட்டயும் காட்டினேன்! அதுக்கப்றம் அவ என்ன தொந்திரவு செய்யல!"
"ஆனந்தி, எனக்கு ஒரு நாள் போன் பண்ண லேட்டானதுக்கே நான் தவியா தவிச்சேன்! என்னால என்னை கன்ட்ரோலே பண்ண முடியாம அழுதேன்! செல்வி பாபி மேல கோவத்த காட்டினேன்! ஆனா நான் காட்டின கோவத்த கண்டுக்காம பாபிதான் என்னை சமாதானமே செய்தாங்க! அப்றம்தான் ஆனந்தி தஞ்சாவூருக்கு தாத்தா பாட்டிய பாக்கப் போயிருக்கான்னு தெரியும்! அங்க நெட்வொர்க் இல்ல! அதுனாலதான் கால் பண்ணலன்னு புரிஞ்சது! அந்த ஒரு நாளுக்கே நான் தவிச்சுப் போனேன்! மை காட்! நீ மூணு வருஷம் தவிச்சிருக்க! ஆனந்த்! எப்டிடா உன்னால முடிஞ்சுது!?" விராட் ஆச்சர்யமாய்க் கேட்டான்.
"தெரிலயே! சில சமயம் ரொம்ப கஷ்டமா இருக்கும்! தீபிகாவோட போட்டோவ எடுத்து பாத்துப்பேன்! மானசீகமா அவகிட்ட பேசுவேன்! ப்ளீஸ் என்கிட்ட வந்துடுன்னு சொல்வேன்! உன்ன என் கண்ணுக்குள்ள வெச்சு பத்திரமா பாத்துக்கறேன்னு சொல்வேன்! மனசுக்கு ஒரு மாதிரி பலம் வந்த மாதிரி இருக்கும்! ஆனா அவ போன்ல பேசும் போது பயமா இருந்தது! திரும்பியும் என்ன தொந்திரவு செய்யாதன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவேன்னு பேசாமலே இருந்தேன்! ஆனா அவ பேசிப் பேசி தன்னோட மனசத் தொறந்து சொல்லிட்டா! அதுக்கப்றம் அங்க இருந்து என்ன பண்ணப் போறேன்னுதான் கிளம்பி ஓடி வந்துட்டேன்!"
"நீ எங்க தங்கைய நல்லா வெச்சிக்குவன்னு எங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சு.. இது போதும்!" என்றான் சூரஜ்.
"தீபிகாவோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாதான் நடக்கும்! என்னைப் பொருத்தவரை அவ இன்னும் குழந்தைதான்! நான் சர்ப்ரைசா வந்ததையே அவளால ஹேன்டில் பண்ண முடிலன்னு அழுதுட்டா! எனக்கு அவளப் பாக்கவே பாவமா இருந்துச்சு! அதுக்கப்புறம் ஏதேதோ பேசி அவள ரிலாக்ஸ் பண்ணினேன்!"
"ஹா.. ஹா.. ஹா.." என்று அவர்கள் மூவரும் சிரித்தனர்.
திருமணம் வீட்டில் நடந்தததால் இரவு வைபவமும் வழக்கம் போல வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. தீபிகாவின் அறையை சகோதரர்கள் இருவரும் அலங்கரிக்க, தீபிகாவை சகோதரிகள் இருவரும் அலங்கரித்தனர்.
தீபிகா மனம் முழுதும் ஆனந்தனை நினைத்து நினைத்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. அவனை தன்னுடைய காதலினால் ஆராதிக்கக் காத்திருந்தாள். ஆனால் வெட்கமும் ஒரு புறம் அவளை ஆட்டிப் படைத்துக்கொண்டுதான் இருந்தது.
ஆனந்தனும் தன் மூன்றாண்டுத் தவிப்புக்கு முற்றுப்புள்ளியையும் தன் தெவிட்டாத காதலின் முதல் புள்ளியையும் வைத்துவிட ஆவலாகக் காத்திருந்தான்.
இருவரின் ஆவலும் எதிர்பார்ப்புகளும் ஒரே புள்ளியில் இணைந்து விட, காதலின் அழகிய சங்கமம் இனிதே நிகழ்ந்தது.
மாதம் முழுதும் விடுமுறை என்று
தாயகம் வந்த நாயகனும்
உடனே திருமணம் வேண்ட
பெரியோரும் திகைத்து நின்றனர்!
அண்ணன் இருவரும் மலைத்திட
மன்னவனோ ஆறுதல் தந்தான்!
எளிய திருமணம் போதும் என்று
எல்லோரையும் மகிழ்வித்தான்!
நன்னாளில் நல்லோர் கூடி
வாழ்த்திக் கொண்டாடி நிற்க
மங்கலநாணையும் சூட்டினான்!
மனங்கள் மகிழ்ந்து நெகிழ்ந்தன!
மலர்களைத் தூவி மக்கள் வாழ்த்த
இல்லறமும் நன்றே துவங்கியது!
உயிரும் மெய்யும் இணைந்திட
உயிர்மெய் உறவும் உதித்தது!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?