Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 39
ஆனந்தி தன் பிரசவத்துக்காக இப்போதிலிருந்தே திருச்சியில் இருந்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டனர். செல்வியும் தீபிகா யூஎஸ் கிளம்பும் வரை இங்கேயே ஆனந்தியுடனேயே பத்து நாட்கள் இருந்து விடுகிறேன் என்று இருந்துவிட்டாள்.
இவர்களுக்காக மங்கையும் பாட்டியும் திருச்சியிலேயே இருந்து விட்டனர். கிரிதரன் சென்னை சென்று விட்டார். தாத்தா பாட்டியும் தஞ்சைக்கு சென்று விட்டனர்.
சூரஜும் விராட்டும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தன் பெற்றோருடன் மும்பை கிளம்பவிருக்கிறார்கள்.
அன்று மாலை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாட்டியுடன் அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ஏதேதோ பேச்சு வந்து கடைசியில் உறவு முறை பற்றிப் பேச்சு வரவும், ஆனந்தி ஆனந்தனைப் பார்த்து,
"நான் இப்பதான் கவனிச்சேன்! ஆமா நீ என்ன அவர பேர் சொல்லிக் கூப்பிடற? ஒழுங்கா மரியாதையா மாப்ளன்னு கூப்டு!" என்றாள்!
"ஹேய் அவர்தான் என்ன பேர் சொல்லி கூப்பிட சொன்னார்!"
"அவர் சொன்னா நீ எப்டி பேர் சொல்லலாம்!"
"சரிடி! நான் அவர பேர் சொல்லி கூப்பிடல! நீயும் தீபிகாவ பேர் சொல்லி கூப்பிடக் கூடாது! அழகா அண்ணின்னு கூப்பிடு!"
"ஹே! அவ எங்க வீட்டு செல்லக் குட்டி! நாங்க எல்லாரும் அவள சுட்கின்னுதான் கூப்பிடுவோம்!"
"தோடா! இந்த சோட்டா பீம் கதையெல்லாம் இங்க வேணாம்! அவ உனக்கு அண்ணன் மனைவி, அண்ணிதான்! சுட்கியெல்லாம் முடிஞ்சி போச்சு! இனிமே அண்ணின்னு கூப்டு!"
"ஹ்க்கும்! விராட் பாருங்கப்பா! இவன் எப்டி சொல்றான்னு!"
"அவன் உன் அண்ணன்! அண்ணன் சொல்றதக் கேளும்மா!" விராட் சொன்னான்.
சூரஜ் ஆனந்தனின் காதில்,
"இனிமே பாரு வேடிக்கைய! சண்டைய ஆரம்பிச்சது உன்கிட்டதானே! உன்ன அப்டியே விட்ருவாங்க! அவங்க ரெண்டு பேரும் அப்டியே பேசிக்காமலே ஃபேஸ் எக்ஸ்பரஷன்லயே சண்ட போட்டுப்பாங்க! அப்டியே அது லவ்வா கன்வர்ட் ஆயிடும் பாரேன்!" என்றான்.
ஆனந்தனும் தீபிகாவும் அவர்களை ஆர்வமாய்ப் பார்த்தனர். செல்வி இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
"என்ன விராட்! நீங்களும் இப்டி சொல்றீங்க?"
"வேற எப்டி சொல்வாங்க?"
"ம்!" ஆனந்தி சிணுங்கினாள்.
"எதுக்கு இப்ப சிணுங்கற?"
"ப்பெ! வெவ்வ! வெவ்வ!"
சூரஜ் சொல்லியது போலவே ஆனந்தி விராட்டைப் பார்த்து பழிப்பு காட்ட, பதிலுக்கு அவனும் ஆனந்தியைப் பார்த்து பழிப்பு காட்டினான். இருவரும் மாறி மாறி பழிப்பு காட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் சண்டையாக இருந்த பழிப்புகள் மாறி காதல் ஜாடையாக மாறிவிட்டது.
இதைப் பார்த்த ஆனந்தனுக்கும் தீபிகாவுக்கும் சிரிப்பு வந்தது. இப்போது இவர்கள் இருவரும் ஜாடை பேசிக் கொண்டனர்.
செல்வி இதை சூரஜிடம் காட்ட இருவரும் சிரித்துக் கொண்டனர்.
திடீரென்று ஆனந்தியின் முக பாவங்கள் மாற ஆரம்பித்தன. அவள் முகம் வேதனையை பிரதிபலிக்கவும் விராட் பதறினான்.
"என்ன செய்யுது ஆனந்தி?"
"வலிக்கிதுங்க!" அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
"சுட்கி! பாரும்மா!" விராட் தங்கையை அழைத்தான்.
அதற்குள் ஆனந்தனும் தன் தங்கையின் முக பாவங்களை கவனித்து விட்டதால் தீபிகாவின் ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். தீபிகா அவளை செக்கப் செய்து பிரசவம் ஆகும் நேரம் நெருங்கிவிட்டதாகச் சொன்னாள்.
செல்வி அம்மாவையும் சித்தியையும் மாமியாரையும் அழைக்க, பாட்டி, பூங்குழலி எடுத்து வந்த தாயுமானவர் சுவாமி விபூதியை ஆனந்தியின் நெற்றியில் இட்டுவிட்டார்.
விராட், தீபிகா, ஆனந்தன் மற்றும் பூங்குழலி நால்வரும் ஆனந்தியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.
மருத்துவமனையில் விராட் நிலைகொள்ளாமல் தவித்தான். ஒருபுறம் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷம் மறுபுறம் ஆனந்தியின் வலி! இரண்டும் சேர்ந்து அவனை அலைக்கழித்தது. அவன் கண் முன்னே அவள் துடித்த துடிப்பு.. அவன் இதயத்தையே உலுக்கியது போல இருந்தது.
இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் ட்யூ டேட்டுக்கு இன்னும் முழுதாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் சுகப்பிரசவம் ஆகிவிட்டது. ஆனந்தி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
குழந்தை பிறந்ததும் விராட்டை வெளியே அனுப்பி விட்டனர். அவளைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வெளியேறினான்.
குழந்தை செக்கச் செவேலென அப்படியே விராட்டை உறித்து வைத்தது போல இருந்தது. விராட் குழந்தையை கையில் வாங்கிப் பார்த்தான். மெத்து மெத்தென்று பூப்பந்துபோல இருந்தது. குண்டு கன்னங்களுடன் கருகருவென்று தலை நிறைய முடியுடன் இருந்தது. குட்டிக் கைகால்களை உதைத்துக் கொண்டு அழுதது. பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருக்கும் பெண்குழந்தையின் பஞ்சு போன்ற பாதங்களை தொட்டுப் பார்த்தான். சிலிர்த்தான். அவன் கண்கள் குளமாக மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் குழந்தையை கண்குளிர கண்டு மகிழ்ந்தான்.
குழந்தையை தங்கையிடம் கொடுத்துவிட்டு ஆனந்தியைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தான். அவள் இன்னும் லேபர் வார்டிலிருந்து வரவில்லை! வந்தவுடன் பார்க்கலாம் என்று கூறினாள் தீபிகா!
ஆனந்த் வீட்டில் செல்விக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு சென்னையில் கிரிதரனுக்கும் தஞ்சை தாத்தா பாட்டிக்கும் சொன்னான்.
குழந்தை பிறந்த செய்து கேட்டதும் கீர்த்திவாசன், சூரஜ் மற்றும் செல்வியையும், கௌரி மற்றும் தீன்தயாளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்.
அனைவரும் குழந்தையைப் பார்த்துவிட்டு மனம் மகிழ்ந்தார்கள்.
செல்வி விராட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தாள்.
"கங்க்ராட்ஸ்! விராட்!"
"தேங்க்யூ பாபி!"
ஆனந்தி ஜெனரல் வார்டுக்கு வந்ததும் விராட் அவளைப் பார்க்க விரைந்தான்.
துவண்ட துணி போல கிடந்தாள். அவன் மனம் வேதனையடைந்தது. அவள் கண்விழித்து அவனை பார்த்து மிகவும் சிரமத்துடன் சிரித்துவிட்டு கண்மூடிக் கொண்டாள்.
அவளருகில் சென்று எப்போதும் செய்யும் வழக்கமாய் அவள் இதழ் நோக்கி குனிந்தவன் அப்படியே தேங்கி நின்றான். அவள் பிரசவ வலியை தாங்குவதற்காக தன் உதடுகளை கடித்துக் கொண்டிருந்தாள். அவை புண்ணாகி ரத்தம் கசிந்து வீங்கியிருந்தது. அவன் அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். கண் திறந்து அவனைப் பார்த்தாள்.
"ரொம்ப வலிச்சிடுச்சுல்ல!" மென்மையாய் அவள் தலையைக் கோதினான்.
"நீங்கதான் என் கைய பிடிச்சிகிட்டு என் கூடவே இருந்தீங்களே!" என்று சிரமத்துடன் சொன்னாள்.
"என் செல்ல ராட்சசி!" என்று அவளுடைய முகத்தைத் துடைத்து விட்டான். சிரமப்பட்டு சிரித்தாள். அதற்கு மேல் அவனால் அங்கு நின்று அவள் படும் வேதனையை பார்க்க முடியவில்லை. நகர முற்பட்டான்.
"குழந்தை எப்டி இருக்கா?" அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்க் கேட்டாள்.
"என் செல்ல ராட்சசி என்னை மாதிரியே ஒரு தேவதைய பெத்து குடுத்திருக்கியே!" அவள் கையை தட்டிக் கொடுத்தான். அவள் திரும்பவும் கண்களை மூடிக் கொண்டாள்.
அவளுடைய முகம் பிரசவ வலியைக் காட்டினாலும் அதையும் மீறி மகிழ்ச்சியை அதிகமாக பிரதிபலித்தது. இதுதான் பெண்மை! இதுதான் தாய்மை! என் குழந்தையை என்னிடம் பெற்றுக் கொடுத்துவிட்ட மகிழ்ச்சியை மன நிறைவை இவள் முகம் காட்டுகிறது. இவளையும் இவள் பெற்றெடுத்த என் செல்வத்தையும் என் கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற இறைவா நீதான் எனக்குத் துணையிருக்க வேண்டும். மனமாற இறைவனை வேண்டிக் கொண்டான்.
"ரெஸ்ட் எடுடா! நான் அப்றம் வரேன்!" வெளியேறினான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
"பையா! இது என்ன சின்ன குழந்தை மாதிரி!" தீபிகா அண்ணனின் கண்ணீரைப் பார்த்து கடிந்து கொண்டாள்.
"அவ.. அவ.. அவளால வலி தாங்க முடியாது சுட்கி!" சொல்லிவிட்டு கண்ணீர் சிந்தினான்.
செல்வி விராட்டின் கையைப் பிடித்து சமாதானம் செய்தாள்.
"பாபி! அவ பாவம்ல!" விராட் செல்வியைப் பார்த்து சொன்னான்.
"விராட்! சரியாய்டும் விராட்! வருத்தப்படாதீங்க! சில வலிகளை நாம தாங்கித்தான் ஆகணும். ஆனந்தியோட வலிய நீங்க புரிஞ்சுகிட்டதே அவ வலியெல்லாம் இந்நேரம் கம்மி பண்ணியிருக்கும்! பாருங்க! இன்னும் ரெண்டு மாசத்தில நல்ல ஹெல்த்தியாய்டுவா! இந்த வலியெல்லாம் உங்களையும் குழந்தையையும் பாத்ததும் பறந்து போய்டும்! இங்க பாருங்க… அப்டியே உங்களோட ஜெராக்ஸ் காப்பி உங்க பொண்ணு! ஆனா முடி மட்டும் ஆனந்தி மாதிரி! இல்ல சுட்கி!" தீபிகாவை பார்த்துக் கேட்டாள்.
"ஆமா பாபி! கலர் பையா மாதிரி! தலைமுடி அப்படியே ஆனந்தி பாபி மாதிரி!" என்றாள் தீபிகா.
ஆனந்தனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. புத்தம் புதிதாக பிறந்துள்ள தன் குழந்தையைப் பற்றி நினைக்காமல் மனைவியின் வலியையும் வேதனையையும் தன்னுடையதாக பாவித்து வருந்துகிறார் என்றால் இவருக்கு எவ்வளவு இளகிய மனம் இருக்க வேண்டும்! வெளியே ஒரு கடுமையான போலீஸ்காரர்! தன் வீரத்தால் பல ரௌடிகளை கைது செய்தவர். வேலையில் சேர்ந்த மூன்றாண்டுகளுக்குள்ளாகவே அஸிஸ்டன்ட் கமிஷ்னராக பதவி உயர்வு பெற்ற திறமைசாலி! ஆனால் மனைவி படும் வேதனையைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்.
ஆனந்தன் விராட்டைப்பற்றி நினைத்துக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து தீபிகா அவனருகில் வந்தாள்.
"நந்து! க்யா ஹுவா?"
"ஹூம்! குச் நஹி தீபூ! உங்கண்ணன், என் தங்கை ஆனந்தி மேல உயிரையே வெச்சிருக்கார்ல! கிரேட் லவ்! உங்கண்ணன் என் தங்கைய நல்லா வெச்சிருக்கார்! மனசு நிறைஞ்சு இருக்கு!" அவளுடைய கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டான். தீபிகா புன்னகை செய்தாள்.
இனிதே முடிந்தது திருமணம்!
இனிய கொண்டாட்டம் வீட்டில்
ஆனந்தியும் செல்வியும் தங்கினர்
ஆனந்தனை சுட்கியுடன் அனுப்பிட!
மூன்று ஜோடிக் கிளிகள் அங்கே
காதல் மொழிகளில் கூவின!
செல்லச் சண்டைகள் தினமும்!
சிணுங்கல்கள் செழித்துச் சிரித்தன!
கொண்டாட்டத்தின் உச்சமாக அங்கு
குழந்தையும் வந்தே குதித்தது!
ஆனந்தியும் தலைமகவை ஈன்று
அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தாள்!
தன்னவள் வலியுடன் துடிக்கையில்
மன்னவனும் மனதால் துடித்தான்!
தேவதையாக மண்ணில் உதித்த
மகவையும் கண்டு மகிழ்ந்தான்!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?