Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 40
ஆனந்தியும் விரட்டும் குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயரிட்டனர். குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா முடிந்ததும் ஆனந்தன் தீபிகாவை அழைத்துக் கொண்டு யூஎஸ் கிளம்பினான். அவனை வழியனுப்பிய கையோடு அனைவரும் மும்பை கிளம்பினர்.
ஆனந்தன் ஏற்பாடு செய்தபடி தீபிகா யூஎஸ் சென்றதும் கல்லூரியில் சேர்ந்தாள். கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டே ஆனந்தனுடன் காதல் வாழ்க்கை வாழவும் தொடங்கிவிட்டாள்.
ஆனந்தனுக்கு பாதி நேரம் வேலை மீதி நேரம் காதல் என்றால் தீபிகாவுக்கு பாதி நேரம் படிப்பு மீதி நேரம் காதல் என்று வாழ்க்கை மாறிவிட்டது.
ஆனந்தனிடம் காதல் சொன்ன பெண் தீபிகாவைக் கண்டதும் மலைத்துதான் போனாள். இப்படி ஒரு அழகு தேவதை இருக்கும்போது அவன் எப்படி என்னைத் திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு ஓடியே போனாள்.
நந்து நந்து என்று அவளின் கொஞ்சல்களும் தீபூ தீபூ என்று அவனின் கொஞ்சல்களும் அவர்களுடைய வீடு முழுதும் கேட்டபடியே இருந்தது.
ஆனந்தன் தான் சொன்னது போலவே தீபிகாவை கண்ணுக்குள் வைத்துப் பாதுகாத்தான். ஒருவருக்கொருவர் அத்தனை அன்பு பாராட்டினர்.
கணவன் மனைவி என்றால் இவர்கள்தான் என்று மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொண்டனர். அதற்காக அவர்கள் தங்கள் வேலையை விட்டுத் தரவில்லை!
இப்போதும் ஆனந்தன் தன் டார்கெட்டை சரியான நேரத்தில் நிறைவேற்றினான். தீபிகா தன் படிப்பில் எப்போதும் போலவே இப்போதும் கெட்டிதான் என்று நிரூபித்தாள்.
செல்வி தன் ஆசிரியப் பணியை விட்டுவிட்டாள். ட்யூஷனையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தாள்.
தன் யோகா ஆசிரியையையும் தன் மருத்துவரையும் கலந்தாலோசித்து கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய யோகப் பயிற்சிகளையும் மூச்சுப் பயிற்சிகளையும் முறைப்படி கற்றுக் கொண்டு அதை முழுமையாக முறையாக செய்து வந்தாள். அவளுக்கு மசக்கையின் உபாதை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கௌரியும் சூரஜும் அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள். அவளுக்கு இப்போது அதிகமான பசியும் தூக்கமும் வந்தது. சாதாரணமாக மத்தியான நேரத்தில் தூங்காதவள் இப்போது நன்றாகத் தூங்கினாள்.
சூரஜ் அவள் தூங்கும்போது அவளுக்குப் பிடித்த கர்நாடக இசையை அவர்களுடைய அறையில் மெல்லிய சத்தத்தில் ஒலிக்கச் செய்தான். அவன் வீட்டில் இல்லாத நேரத்திலும் அதை ஒலிக்க வைக்க அவனுடைய அம்மாவுக்கு அவன் கற்றுத் தந்தான்.
செல்விக்கு ஐந்தாம் மாதம் நடந்தது. அன்று சூரஜுக்கு ஆஃபீஸில் பெரிதாக வேலையில்லை! அதனால் அவன் பதினொரு மணிக்கே வந்துவிட்டான்.
மதிய உணவு சாப்பிட்டபின் ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவள், திடீரென்று சூரஜைப் பார்த்துக் கேட்டாள்.
"சூரஜ்! எனக்கு எலியாட்ஸ் பீச் போகணும் போல இருக்கு!"
"ஜுஹூ பீச் தெரியும்! எலியாட்ஸ் பீச் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு! ஆனா எங்கன்னு தெரிலயே?" குழம்பினான்.
"பெஸன்ட் நகர்ல!" குறும்பாய் கண் சிமிட்டினாள்.
சூரஜ் மென்மையாய் சிரித்தான்.
"அம்மாவப் பாக்கணும் போல இருக்கா? அத்தைய வந்து கூட்டிட்டு போக சொல்லவா?"
"ம்ஹூம்!"
"பின்ன? எலியாட்ஸ் பீச் போணும்னு சொன்ன?"
"ம்.. எனக்கு உங்க கூட பீச் போகணும்!"
"என் கூடவா?!?!"
"ம்! ஆமா! உங்க கையப் பிடிச்சிகிட்டு மெதுவா பீச் மண்ல பேசிகிட்டே நடக்கணும்!"
சூரஜுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எப்படி இவள் என் மேல் இத்தனை பிரியம் வைத்திருக்கிறாள்? மசக்கையின் போது எல்லாப் பெண்களுக்கும் அம்மாவுடன் இருக்கத்தானே விருப்பம் வரும்?!
"உங்களுக்கு லீவ் கிடைக்காதுல்ல?"
கருவுற்றிருக்கும் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது கணவனின் தலையாய கடமையல்லவா! என்று நினைத்தவன், மறுநாளே அனைவரிடமும் சொல்லிவிட்டு செல்வியை அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பிவிட்டான்.
செல்வியின் அம்மா வீட்டில் இருந்தபடி பகலில் தன் மடிக்கணிணியில் அலுவலக வேலையை செய்தான்.
மாலை வேளைகளில் அவளுடன் பேசியபடியே எலியாட்ஸ் பீச்சில் மெதுவாய் நடந்து அவள் ஆசையை நிறைவேற்றினான். ஒரு வாரம் அவளுடன் சென்னையில் இருந்துவிட்டு அவன் மும்பை கிளம்பினான்.
"தமிழ்! உனக்காக நான் சென்னை வந்த மாதிரி உங்கம்மாவுக்காக நீ இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கணும்! அவங்க ஆசைய நீ நிறைவேத்துவியா?"
"அப்ப நீங்க?"
"நான் மும்பை கிளம்பறேன்!"
"உங்கள விட்டுட்டு எப்டி?"
"ஜஸ்ட் ஃப்யூ டேஸ்!"
"ம்.. சரி!" தயக்கத்துடன் கூறினாள்.
"இல்ல! என் தமிழ் இப்டி இருக்கவே மாட்டா! எதுக்கும் சிணுங்கவே மாட்டா!"
"ஆமாங்க! ஆனா உங்கள விட்டுட்டு இருக்க மட்டும் மனசு வரமாட்டேங்குது!"
"ஹேய்! கமான் தமிழ்! சீர் அப்! இதோ இங்க இருக்கற மும்பைலதான் நான் இருக்கப் போறேன்! கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள நாட்கள் ஓடியே போய்டும்! அத்தைக்கும் ஆசையா இருக்கும்ல!" என்றான்.
"ம்!"
"ஒரு நாள் உன்னோட ஸ்கூல் குழந்தைங்களையும் மிஸஸ் நாராயணியையும் பாத்துட்டு வா! உனக்கு உற்சாகமா இருக்கும்!"
"சரிங்க!"
"முடிஞ்சா நம்ம காபி ஷாப் பையனக் கூட பாத்துட்டு வா! அவன் ஃபிகரை உசார் பண்ணின கதையெல்லாம் சொல்வான்!" கண்ணில் சிரிப்புடன் கூறினான்.
அவளும் சிரித்தாள்.
"ஆனா எங்க போனாலும் ரொம்ப கேர்ஃபுல்லா போய்ட்டு கேர்ஃபுல்லா வரணும்! சரியா?"
"சரிங்க!"
சூரஜ் அவளை சென்னையில் விட்டுவிட்டு மும்பை கிளம்பினான்.
அவன் சொன்னது போல செல்வி தன் அம்மா வீட்டில் பதினைந்து நாட்கள் நன்றாக சீராடிவிட்டு வந்தாள். மங்கையும் கிரிதரனும் பாட்டியும் மனமகிழ்ந்து போனார்கள். கிரிதரனும் மங்கையும் செல்வியை மும்பை கொண்டு வந்து விட்டுப் போனார்கள்.
குழந்தை தந்தது உற்சாகம்!
கோலாகலமாய்க் கொண்டாட்டம்!
ஆனந்தன், தீபிகா கிளம்பினர்
ஆனந்த வாழ்வைத் தொடங்கிடவே!
செல்வியும் மும்பை திரும்பினாள்!
செல்வத்தை வரவேற்க ஏங்கினாள்!
பள்ளி வேலையைத் துறந்தாள்!
பயிற்சிகளில் தனை மறந்தாள்!
ஐந்தாம் மாதமும் தொடர்ந்தது!
அவள் மனதில் துளிர்த்தது ஆசை!
சென்னைக் கடற்கரைக்குச் சென்று
மன்னனுடன் நடைபயிலும் ஏக்கம்!
அற்புதமாக ஏக்கத்தைப் போக்கி
ஆரணங்கை மகிழ்வித்த மன்னவன்
பிறந்த வீட்டில் சீராடி வாவென்று
பெண்ணவளை விட்டுச் சென்றான்!
அன்னை, தந்தையுடன் அவளும்
அன்போடு நாட்களைக் கழித்த பின்னர்
மன்னவனைச் சேர்ந்திட வந்தாள்!
தன்னவனே தஞ்சம் என்று நின்றாள் !
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?