Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 43
செல்வியின் பெற்றோர் பிரசவத்துக்காக செல்வியை அழைத்துக் கொண்டு மறுநாள் காலை சென்னை செல்லவிருந்தனர். அன்று மாலை முதல் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. மும்பையிலிருந்து கிளம்பும் அனைத்து ரயில்களும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. மும்பைக்கும் எந்த ரயில்களும் விமானங்களும் வரவில்லை.
இரண்டு நாட்கள் மழை விடிய விடியப் பெய்து மும்பையை தண்ணீரில் தத்தளிக்கச் செய்துவிட்டு மெது மெதுவாய் குறையத் தொடங்கியது. ஆனால் முழுதாய் விடவில்லை.
கிரிதரனுக்கும் கீர்த்திவாசனுக்கும் வேலைக்குப் போக வேண்டும்! ஆனால் செல்வியை இந்த சீதோஷ்ண நிலையில் எப்படி அழைத்துச் செல்வது? அதனால் செல்வியை மழை நன்றாக விட்டபின் தானே கொண்டு வந்து விடுவதாய் கூறினான் சூரஜ். அது முறையில்லையே என்று கிரிதரன் கூற, அதனால் என்ன? நாங்கள் இருவரும் மருமகளுடன் வந்து அவளை உங்கள் வீட்டில் விடுகிறோம் என்று கௌரியும் தீன்தயாளும் கூற மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, கிரிதரன், மங்கை, லக்ஷ்மி பாட்டி, கீர்த்திவாசன், பூங்குழலி எல்லாரும் சென்னை கிளம்பினர். செல்விக்கு பெரிதாக வருத்தம் எதுவும் இல்லை! சொல்லப் போனால் மகிழ்ச்சிதான் ஏற்பட்டது! மேலும் சில தினங்கள் சூரஜுடன் இருக்கலாமே என்றுதான் தோன்றியது!
ஐஷுக்குட்டியுடனும் மேலும் சில தினங்கள் சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றும் தோன்றியது. அவள் மும்பையில் மழையை அனுபவித்துக் கொண்டு குழந்தையுடன் நேரத்தை செலவழித்தாள்.
அன்று இரவு சூரஜ் செல்வியிடம்,
"தமிழ்! அம்மா கூட போகலையேன்னு வருத்தமா இருக்கா?" சூரஜ் கேட்டான்.
"வருத்தமா? எனக்கா? இல்லையே! சொல்லப் போனா சந்தோஷமா இருக்கேன்!"
"சந்தோஷமாவா?"
"ம்! இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட இருக்கலாமேன்னுதான்!" என்று சிரித்தபடி கூறினாள்.
"தமிழ்! மை லவ்!" அவளை அணைத்து முத்தமிட்டான்.
"பயங்கர ரொமான்டிக்காதான் இருக்கீங்க!"
"பின்ன! என் தமிழ்! என்றும் இளமை மாறாத செம்மொழியாளாச்சே!"
"அடாடாடா! என்ன ஒரு தமிழ் பற்று!"
"என் தமிழ் மேல எனக்கு பற்று இருக்காதா!" மீண்டும் முத்தமிட்டான்.
"நான் எந்தத் தமிழப் பத்தி பேசறேன்! நீங்க எந்தத் தமிழப் பத்தி பேசறீங்க?!" செல்லமாய் கடிந்து கொண்டாள்.
"எனக்கு ரெண்டும் ஒண்ணுதான்!" என்று சொன்னவனைப் பார்த்து அவள் சிரிக்க கூடச் சேர்ந்து அவனும் சிரித்தான்.
விராட்டை விட சூரஜ் ஐஷுவை அதிகம் கொண்டாடினான். குழந்தையும் விராட்டின் கையில் அதிகமாக விளையாடி சூரஜின் கையில் அமைதியாகத் தூங்கியது. அதில் விராட்டுக்கு அலாதி சந்தோஷம்! ஏனெனில் அவன் குழந்தையுடன் நன்றாக விளையாடிவிட்டு சூரஜிடம் கொடுத்துவிட்டு ட்யூட்டிக்குப் போவான். சூரஜ் விளையாடிய குழந்தையை தூங்க வைத்து ஆனந்தியிடம் கொடுத்து விடுவான். இருவருக்கும் அவரவருக்குப் பிடித்ததை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறதல்லவா? குழந்தை இருவரிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டது.
செல்விக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து அவளை சென்னை அழைத்துச் செல்ல வேண்டும்.
அன்று சூரஜுக்கு மிக முக்கியமான வேலை இருந்தது என்று அவன் அலுவலகத்திலேயே இருந்தான். இரண்டு நாட்கள் கழித்து செல்வியை அழைத்துக் கொண்டு சென்னை செல்ல வேண்டுமென்பதால் இங்கு முடிக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது. அதனால் அவன் வீட்டுக்கு வரவில்லை.
விராட்டுக்கும் அன்று இரவுப் பணி இருந்ததால் அவனும் அன்றிரவு வீடு வரவில்லை.
வெளியே மழை தூறிக் கொண்டிருக்க வீட்டில் நால்வரும் சாப்பிட்டு முடித்தபின் படுக்க ஆயத்தமாகினர்.
தீன்தயாள் ஹால் சோபாவில் அமர்ந்திருக்க, செல்வியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு ஆனந்தியும் கௌரியும் வேலைகளை முடித்துக் கொண்டிருந்தனர்.
செல்வி தன்னுடைய அறையில் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.
வெளியே மழை தூறிக் கொண்டிருந்ததால் எல்லா ஜன்னல்களையும் சரியாக சாத்துவதற்காக ஆனந்தி மாடிக்குப் போனாள்.
கௌரி கீழிருக்கும் ஜன்னல்களை கொக்கி போட்டு சரியாக மூடிவிட்டு கணவரை அறையில் சென்று படுக்க சொன்னாள். அவரோ மருமகள் மாடியிலிருந்து இன்னும் வரவில்லை என்று சொல்ல, கௌரி மாடியைப் பார்த்து,
"ஆனந்தி! க்யா ஹுவா? என்று குரல் கொடுத்தாள்.
பதிலில்லை!
"ஆனந்தி!" கௌரி மீண்டும் குரல் கொடுக்க, இப்போதும் பதிலில்லை.
அதற்குள் கௌரியின் சத்தம் கேட்டு குழந்தையைத் தூங்க வைத்துக் கொண்டிருந்த செல்வி எழுந்து வந்தாள்.
"என்னாச்சு அத்த?"
"ஜன்னல் சாத்த ஆனந்தி மாடிக்கு போனா.. இவ்ளோ நேரமாச்சு.. இன்னும் காணல.." என்றாள் கௌரி.
"ஆனந்தி! என்னடீ ஆச்சு?" என்று செல்வி உரக்கக் கத்தினாள்.
"ம்.. ம்.." என்று முனகல் சத்தம் கேட்டது.
"என்னாச்சு.. இவ ஏன் என்னமோ மாதிரி சத்தம் குடுக்கறா.." என்று கேட்டுக் கொண்டே செல்வி மாடியேறப் போக, அவளைத் தடுத்து கௌரி மாடிக்கு ஓடினாள்.
ஆனால் மாடிக்குப் போன கௌரியும் திரும்பி வராமல் போக, செல்வி மாடியேற எத்தனிக்க, அப்போது மாடிலிருந்த ஆனந்தியின் அறையில் மின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது.
தீன்தயாளுக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்து செல்வியைத் தடுத்துவிட்டு அவர் மாடிக்கு ஓடினார்.
ஏதோ பொருட்களை போட்டு உடைக்கும் சத்தம் கேட்டது. கூடவே,
"ஆ.. அம்மாஆஆஆஆ!" என்று கௌரியின் அலறலும் கேட்க, மாடியிலிருந்து ஏதோ பெரிய பொருள் கீழே வந்து விழுந்தது.
செல்வி அதிர்ந்து போய் பார்க்கும்போதே ஒருவன் அவள் முன்னே வந்து குதித்தான்.
"ஹே! லடுக்கி! தும் ஹீ ஹோ நா?" என்று ஹிந்தியில் ஏதோ கேட்டபடி அவளை நெருங்கினான்.
"கௌன் ஹோ தும்?" என்று கோபமாகச் சீறினாள் செல்வி.
அவன் ஏதோ சொல்லிக் கொண்டே அவள் கழுத்தருகே தன் கையிலிருந்த கத்தியை கொண்டு வந்து அதைக் குத்தப் போக, சரியாக அவன் மேல் ஏதோ ஒரு பொருள் வந்து விழுந்து அவனுடைய கையைத் தட்டி விட்டது.
செல்வியும் அவனும் மாடியை நிமிர்ந்து பார்க்க, தீன்தயாள் நின்றிருந்தார்.
"அக்கா! குழந்தை.. அத கொல்லப் போறதா சொல்றாங்க.. குழந்தையப் பாருக்கா" என்று ஆனந்தி அவர் பின்னாலிருந்து அலறினாள்.
செல்வி அவசரமாக அவனைத் தள்ளி விட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு ஓடினாள்.
கீழே விழுந்த அவனும் அவசரமாக எழுந்து அவள் பின்னாலேயே ஓடி வந்தான்.
செல்வி அவசர அவசரமாக கதவைச் சாத்த முயல, அதற்குள் அவன் ஓடி வந்து அவள் முயற்சியைத் தடுத்து அறைக்குள் நுழைந்துவிட்டான்.
செல்வி குழந்தையின் அருகில் அவன் சென்று விடாதபடி தடுத்து அவனை மீண்டும் தள்ளி விட்டாள்.
அவன் கீழே விழுந்து கதவில் இடித்துக் கொண்டான்.
கதவில் இடித்துக் கொண்ட வேகத்தில் அவனுக்கு நெற்றியில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்க, அவன் மிகுந்த கோபத்துடன் செல்வியைத் தாக்க ஓடி வந்தான்.
செல்வி அதற்குள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு ஓட முயன்றாள்.
ஆனால் அவனைக் கடந்து ஓடுவதற்குள் அவன் சுதாரித்து எழுந்து கத்தியை செல்வியின் வயிற்றில் ஆழமாகச் செருகி விட்டான்.
ஆயினும் செல்வி குழந்தையைக் கீழே விட்டுவிடாமல் அறைக்கு வெளியே ஓடினாள்.
அவன் பின்னாலேயே ஓடி வந்து செல்வியை தாக்க முயல, அவள் வீட்டின் வாசல் நோக்கி ஓடினாள்.
செல்வி குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறையிலிருந்து ஓடி வருவதையும் அவள் வயிற்றுப் பகுதியிலிருந்து ரத்தம் வழிவதையும் பார்த்துக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்த ஆனந்திக்கு எங்கிருந்துதான் அத்தனை வெறி வந்ததோ! அவனைத் தன் பலம் கொண்ட மட்டும் காலால் எட்டி உதைத்து அவனைக் கீழே தள்ளி விட்டு கண்மண் தெரியாமல் மிதிக்கத் தொடங்கினாள்.
"யாரடா டார்கெட் பண்றீங்க? எம்புருஷனையா? அவர் யார் தெரியுமா? விராட் ராத்தோட்! வீராதி வீரன்டா! பொம்பளங்க கிட்ட வீரத்தை காட்ட வந்துடீங்களே! நீங்கல்லாம் உருப்படுவீங்களா!" தமிழில் கேட்டபடியே அவனைத் தாக்கினாள். தலை முதுகு கழுத்து கை கால் என எல்லா இடங்களிலும் மிதித்து நசுக்கித் தீர்த்தாள்.
தீனதயாள் ஓடிவந்து செல்வியைப் பிடித்துக் கொண்டு, குழந்தையை வாங்கிக் கொண்டார். செல்வி மயங்கி விழுந்தாள்.
கௌரியின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.. ஆயினும் அவள் சுதாரித்தபடி ஓடி வந்து வாசல் கதவைத் திறக்கவும் விராட் வீட்டு வாசல் முன் தன் ஜீப்பில் வந்து இறங்கி அவசர அவசரமாக ஓடி வரவும் சரியாக இருந்தது. அவன் பின்னே வேனில் காவலர்களும் வந்தனர்.
ஏற்கனவே ஆனந்தி தன் கைப்பேசியின் மூலம் அவனுக்கு ஆபத்து என்ற சமிக்ஞையை அனுப்பியிருந்தாள். அதனால்தான் அவனால் இத்தனை சீக்கிரம் ஓடி வர முடிந்தது.
காளியின் மறு அவதாரம் போல ஆனந்தி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி வந்த விராட் அதிர்ந்தான்.
'என் கோபத்தைப் பார்த்து பயந்து காய்ச்சலில் விழுந்தவள் இவள்தானா? இவளுக்குள் இத்தனை ஆக்ரோஷமா?'
அந்த ரௌடியை கைது செய்தான். அவனுடன் வந்த காவலர்கள் மாடியில் ஏற்கனவே தீன்தயாள் அடித்துப் போட்டிருந்த மேலும் சிலரை கைது செய்தனர்.
அதற்குள் கௌரி ஆம்புலன்சுக்கு அழைக்க, செல்வியின் நிலையைப் பார்த்தவன் அதிர்ந்தே போனான்.
"பாபி! பாபி! க்யா ஹுவா? ம்மா! ஆப்கோ க்யா ஹுவா?" என்று கதறினான்.
சில நிமிடங்களில் வந்த ஆம்புலன்சில் அவளையும் கௌரியையும் ஏற்றி, துணைக்கு தீன்தயாளையும் அனுப்பிவிட்டு வீட்டை காவலர்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி பணித்துவிட்டு, பின்னாலேயே தன் மனைவியையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
மருத்துவமனையில் கௌரிக்கும் செல்விக்கும் சிகிச்சை ஆரம்பமானது. கௌரிக்கு தலையில்தான் காயம் என்றாலும் அதிக ஆழமில்லாததால் ஆபத்து எதுவும் இல்லை என்று கூறிவிட்டனர்.
செல்வியைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்த தீன்தயாளை கௌரியின் அருகில் அமரச் சொல்லியிருந்தான் விராட். அவரோ ஏதோ விபரீதம் என்பதை ஊகித்தவராய் மருத்துவமனை வாசலில் இருந்த பிள்ளையார் சிலையருகே கண்ணீருடன் தொழுது கொண்டிருந்தார்.
அவர் ஊகித்தபடியே செல்வி மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தாள்.
"என்னாச்சு ஆனந்தி?"
"நா மழையா இருக்கேன்னு ஜன்னல்லாம் சாத்த மாடிக்கு வந்தேன்.. அப்ப சுட்கி ரூம்ல ஏதோ சத்தம் கேட்டுச்சு.. என்னன்னு பாக்க போறப்ப பேச்சு குரல் கேட்டுச்சு.. அதனால அந்த ரூமை நா வெளிய இருந்து சாத்திட்டு நம்ம ரூம்குள்ள போய் உங்களுக்கு மெசேஜ் பண்ணினேன்..
அதுக்குள்ள அவங்க அந்த ரூம் கதவை உடைச்சிகிட்டு வெளிய வந்துட்டாங்க..
நான் இன்னும் கீழ வரலயேன்னு என்னை தேடி அத்த மாடிக்கு வந்தாங்க.. அவனுங்க அத்தைய அடிக்க வந்தானுங்க.. பின்னாலயே மாமா வந்தாரு… நானும் மாமாவும் சேர்ந்து அத்தைய காப்பாத்தினோம்..
அப்டியும் அத்த தலைமேல ஒருத்தன் அடிச்சிட்டான்.. அத பாத்துட்டு எல்லாரையும் மாமா அடிச்சி போட்டாரு.. ஒருத்தன் மட்டும் தப்பிச்சி கீழ அக்கா முன்னால குதிச்சான்..
அவன் எதோ சொல்லிகிட்டே அக்கா கழுத்தில கத்திய வெச்சான்.. மாமா மேலருந்து எதையோ அவன் மேல தூக்கியடிச்சி அவன் கைய தட்டி விட்டாரு.. நா குழந்தைய பாருக்கான்னு குரல் குடுத்தேன்..
அக்கா நம்ம குழந்தைய காப்பாத்தற போராட்டத்தில கத்திக் குத்து வாங்கிகிட்டாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. அவங்க வயித்தில இருக்கற குழந்தை.." என்று கூறிக் கொண்டே வந்தவள் மேற்கொண்டு பேச முடியாமல் அழுதாள்.
அதற்குள் சூரஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவன் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
"தமிழ்! தமிழுக்கு என்னாச்சு? என் தமிழுக்கு என்னாச்சு?" என்று கேட்டபடி வந்தவனின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள் ஆனந்தி.
மருத்துவர் அவர்கள் முன்னே வந்தார்.
"செல்வியும் ஆபத்தான கட்டத்தில.. உள்ள இருக்கற குழந்தையும்.. ரெண்டில எதாவது ஒரு உயிரைதான்.." என்று தயங்கினார்.
"என்ன சொல்றீங்க டாக்டர்?" அனைவரும் பதறினர்!
"கடவுளை வேண்டிக்கோங்க!" என்று கூறிவிட்டுச் சென்றார்.
நர்ஸ் வந்து சூரஜிடம் சில காகிதங்களில் கையொப்பம் வாங்கிக் கொண்டு சென்றாள்.
'கடவுளே! இதென்ன சோதனை! இருந்திருந்து இப்போதுதான் அண்ணி உண்டாகியிருக்கிறாள்! அதுவும் இன்னும் ஒரு வாரம் பத்து நாள்ல பிரசவம் ஆகப்போகும் வேளையில் அண்ணிக்கும் அந்த பிஞ்சுக் குழந்தைக்கும் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது ஆண்டவா! ரெண்டு பேரையும் காப்பாத்து!' விராட் கலங்கினான்.
நர்ஸ் காட்டிய காகிதங்களில் கையொப்பமிட்ட சூரஜ் பிரமை பிடித்தது போல அப்படியே அமர்ந்துவிட்டான்.
'குடும்பத்துக்காக குழந்தைய தள்ளிப் போட்டேன்.. இப்ப என் குழந்தை நா வேணாம்னு என்னை தள்ளிப் போடப் போகுதா?' என்ற எண்ணம் வந்து அவனை அலைக்கழித்தது.
'எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.. பாழாப் போன அந்த ஆஃபீஸுக்கு உழைச்சி கொட்டி உழைச்சி கொட்டி என் தமிழை நா சரியா கவனிச்சிக்காம விட்டுட்டேன்..' அவனுடைய உள்ளம் தவியாய் தவித்தது.
மருத்துவர்கள் செல்வியின் வயிற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற பெரிதும் முயன்று கொண்டிருந்தனர்.
வெளியே, திடீரென்று ஐஷுக்குட்டி பசியில் அழ அரம்பித்தது. அழுதபடியிருந்த ஆனந்தி குழந்தைக்கு பாலூட்ட மறைவிடம் தேடிச் செல்ல, நர்ஸ் ஓடி வந்தாள்.
"அந்த குழந்தை சத்தம் கேட்டு அவங்க கிட்ட அசைவு தெரியுது.. அந்தக் குழந்தைய குடுங்க!"
சூரஜ் விராட்டும் பரபரப்படைந்தனர். குழந்தையை நர்ஸிடம் கொடுத்துவிட்டு அவள் பின்னாலேயே ஓடினார்கள்.
ஆனால் குழந்தையை செல்வியின் அருகில் படுக்க வைத்த பின்னரும் செல்வியிடம் எந்த அசைவும் தெரியவில்லை.
ஐஷுகுட்டி பசியில் வீறிட்டுக் கத்தத் தொடங்கியது. ஆனந்திக்கும் விராட்டுக்கும் அடி வயிறு கலங்கியது.
சூரஜுக்கு மனம் விட்டுப் போயிற்று.
"தமிழ்! என்ன விட்டு போயிடாத.. நீயும் நம்ம குழந்தையும் எனக்கு வேணும்.. ப்ளீஸ்.. ரெண்டு பேரும் என் கிட்ட வந்துடுங்க.." என்று வாய் விட்டு புலம்பினான்.
ஆனந்திக்கு குழந்தையின் பசியால் தாய்ப்பால் ஊறி அவள் ஆடையை நனைக்கத் தொடங்கியது. அவள் கலங்கிய கண்களுடன் துப்பட்டாவினால் போர்த்திக் கொண்டாள். விராட் செய்வதறியாது கலங்கி நின்றான்.
இதைப் பார்த்த நர்ஸ் வேறு வழியின்றி ஆனந்தியிடம் குழந்தையை கொடுத்தாள். பக்கத்தில் இருந்த மற்றொரு அறையை உபயோகிக்க மருத்துவர் அனுமதித்தார். குழந்தை பசியாறிய பின் குழந்தையை தூக்கி வருமாறு சொல்லி அவர்களை அனுப்பினார்.
சில நிமிடங்களில் ஐஷுவின் அழுகை நின்றது. ஆனந்தி குழந்தையை நர்ஸிடம் கொடுத்தாள்.
ஐஷு பசியடங்கிவிட்டதால் கைகால்களை உதைத்துக் கொண்டு சிரித்து விளையாடத் தொடங்கியது. நர்ஸ் ஐஷுவை செல்வியின் அருகில் படுக்க வைத்தாள். ஐஷு செல்வியை உதைத்து உதைத்து விளையாட மயங்கிய நிலையிலிருந்த செல்வியின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.
குழந்தையை ஆனந்தியிடம் கொடுத்துவிட்டுப் போனாள் அந்த நர்ஸ்.
மருத்துவக் குழு செல்வியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தபடி இருந்தனர்.
செல்வியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருக்க, அவளுக்கு அறுவை சிகிச்சையை ஆரம்பித்தனர்.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்ததும் அழாமல் இருக்க, மற்றொரு மருத்துவக் குழு குழந்தையை பரிசோதிக்கத் தொடங்கியது.
ஆண் குழந்தை பிறந்துள்ளது; ஆனால் குழந்தை இன்னும் அழவில்லை, அதனால் குழந்தையை இங்க்குபேட்டரில் வைத்து கண்காணிக்கின்றனர் என்ற செய்தி சூரஜுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் தெரிவிக்கப்பட, அவர்கள் தவியாய் தவித்தனர்.
யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று இறைவனிடம் விடாமல் பிரார்த்தனை செய்தபடியே இருந்தனர்.
இறைவன் அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவானா?
பிறந்த வீடு அழைத்துச் செல்லப்
பெற்றோரும் வந்தனர் மும்பைக்கு!
மணாளனைப் பிரிந்து செல்ல மங்கையவள் தயங்கி நின்றாள்!
இயற்கையின் பெரும் சீற்றம்!
இடியோடு பெருமழை கொட்ட
அன்றாட வாழ்வில் மும்பை மக்கள்
திண்டாடியே மலைத்து நின்றனர்!
மழையில் பயணம் கடினமென்று
மங்கையைப் பெற்றோர் விட்டுச்செல்ல
நாயகனுடன் நானிருப்பேன் என்றுமந்த
நாயகியும் மனதில் மகிழ்ந்திருந்தாள்!
நள்ளிரவில் வந்தான் நயவஞ்சகன்!
நங்கையைத் தாக்கினான் வயிற்றில்!
அடிவயிற்றில் செல்விக்குக் கத்திக்குத்து
அவசரமாய் சிகிச்சையும் ஆரம்பம்!
நாயகனும் துடிதுடித்து நின்றான்!
நங்கையும் சேயும் பிழைத்திடவே
இறைவனிடம் வேண்டி நின்றான்!
இறையோனே அருள் புரிந்திடுவாய்!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?