கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

6.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

Shaliha ali

Moderator
Staff member
6.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே





மலர் நின்றிருந்த நிலையை கண்ட சங்கர் "மலர் சொம்பை போய் உள்ளே வைம்மா" என்று சொல்ல...

அவளோ யோசனையில் நிற்க... "மலர்" என்று அழுத்தப்பட அழைக்க... "என்ன சித்தப்பா?"

" என்னாச்சு மலர் ஏதோ யோசனையில் இருக்க போல"


"இ....ல்லை இல்..லை சித்தப்பா ஒன்றுமில்லை" என்று சொம்பை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவள் 'அவன் கூப்பிட்டு போகமா இருந்தால் எதாவது செய்திடுவிடுவானோ'என்று யோசித்தவள்
ஏதோ நினைவு வர "அம்மா முக்கியமான ஒரு வேளை இருக்கு அதை செய்ய மறந்துட்டேன்,இப்போ கொஞ்ச வெளியே போய்ட்டு வரேன்" என்றாள்.


"மலர் எதுவாக இருந்தாலும் அப்புறமாக பார்த்துக்கலாம் முதல்ல வந்து சமையலுக்கு எனக்கு உதவி செய்" என்றாள் காமாட்சி.

"இப்ப என்ன உங்களுக்கு உதவிக்கு ஆளு வேணும் அதானே வினோ ... வினோ" என்றழைக்க...

"என்ன அக்கா ?"

"அம்மாக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு வினோ எனக்கு கொஞ்சம் வெளியிலே முக்கியமான வேலை இருக்கு"


"சரி அக்கா நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னாள்.


சரி என்றவள் தனது அறைக்கு சென்று உடைகளை மாற்றிக் கொண்டு சென்றாள்.


இதைக் கண்ட சுந்தரி "எங்க போற மலர்?"


"போறப்போ எங்கே போறேன்னு அபசகுனமா கேட்ட போற வேலை எப்படி? நல்லபடியா முடியும் சித்தி"என்றாள்.


"ஏய் என்ன ?என்னை அபசகுனம் உள்ளவன்னு சொல்லுறியா?"

"நான் அப்படி சொல்லவே இல்லை சித்தி எங்கே போறேன்னு கேட்காதீங்கன்னு தான் சொன்னேன்" என்றாள்.


"பொம்பளை பிள்ளை வெளியே போறதா இருந்தா எங்கே போறேன்னு கேட்கத்தான் செய்வாங்க"


"ம்ம்ம் அதுவும் உண்மை தான் சித்தி. இப்போ எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு.அதான் வெளியே போறேன்" என்று சொல்ல...

"எங்கே போறேன்னு கேட்டால் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா?" என்று சுந்தரி கேட்டதற்கு பதில் சொல்ல அவள் அங்கு இருந்தால் தானே சுந்தரி பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் வீட்டை விட்டு கிளம்பி விட்டாள் மலர்.


'எல்லாம் இந்த கதிரால் வந்தது.அவன் பாட்டுக்கு கிளம்பி வந்துடு சொல்லிட்டு போய்ட்டான்.வீட்ல உள்ள எல்லோரையும் சமாளிச்சுட்டு வர்றதுக்கு உள்ள நான் ஒரு வழியாயிடுவேன்,இந்த கதிர் மட்டும் இப்போ கைல மாட்டுனான் சட்னி தான் நீ இன்னைக்கு' என்று அவனை மனதிற்குள் திட்டிவிட்டு தேவிக்கு போன் செய்தாள்.



தேவி போன் செய்ய அவள் எடுக்கவே இல்லை. திரும்ப திரும்ப அழைக்க போனை எடுத்த தேவியிடம் "ஏய் என்னடி பண்ற போனை எடுக்காம"

"ஒரு சின்ன வேலையா இருந்தேன் என்ன விஷயம்?"

"சரி அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம் முதல்ல நாம ஸ்கூல் போற வழி இருக்குல்ல அங்கே வா"

"என்னால வர முடியாது?"

"ஏன்?"

"அதெல்லாம் சொல்ல முடியாது மலர் நான் இன்னைக்கு லீவ்"

"ஏய் தேவி என்னை கடுப்பேத்தாத ?"

"ஏய் நீதான் என்னை கடுப்பு ஏத்துறே எங்க அம்மா அதிரசம் சுட்டுட்டு இருக்காங்க நான் சூடாக சாப்பிட போற நேரத்துல ஏன்டீ தொல்லை பண்ற?"

"ஏய் உனக்கு உன் பிரண்ட விட அதிரசம் தான் முக்கியமா போச்சா இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?இங்கே என் உயிரு ஊசலாடிட்டு இருக்கு"

"எ...ன்ன?" என்று தேவி அதிர்ச்சியோடு கேட்க... மலர் நடந்தவைகளை சுருக்கமாக சொல்ல அவளோ மலரை வசைபாட தொடங்கினாள்.



"நான் அன்னைக்கே சொன்னேன் கேட்டியா நீ? இப்போ பாரு வீடு வரைக்கும் வந்துட்டாங்க" என்றாள்.

"ஏய் அதெல்லாம் தெரியும் நீ முதல்ல நான் சொன்ன இடத்துக்கு கிளம்பி வா" என்றாள்.

"ஏன் என்னையும் பிரச்சினைல மாட்டி விடவா"

"ஏய் என்ன தேவி ? இப்படி உன்னையும் என்னையும் பிரிச்சு பேசிட்டே, நாம அப்படியா ஒன்னா வளர்ந்தோம், உனக்கு எதாவது என்றால் நானும் எனக்கு எதாவது என்றால் நீயும் அப்படி தானே இருந்தோம் இப்போ என்னன்னா என்னை யாருன்னே தெரியாத மாதிரி பேசுற"என்று வராத கண்ணீரை வந்த படி பேச...


"ஆமாம் மலரு நீ சொல்வது உண்மை தான் ஆனா ஒரு சின்ன திருத்தம் உனக்கு எதாவது ஆச்சுன்னா மாட்டுறது நான் மட்டும் தான்,நீ இல்லை நான் செய்யாததையும் நீ செய்து என்னை பிரச்சினைல மாட்டி விடுறதே உனக்கு வழக்கமா போச்சு "


"சரி சரி பழைய விஷயத்தை பேசாதே இப்போ நீ எனக்கு துணைக்கு வருவியா? வர மாட்டியா?"


"வரேன் வரேன் உன்னை நண்பியா ஏத்துக்கிட்டதுக்கு நான் இன்னும் என்னலாம் அனுபவிக்க போறேனோ தெரியலை,நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன்"என்று
போனை வைத்து விட்டாள்.


மலர் ஓட்டமும் நடையுமாக கதிர் சொன்ன இடத்துக்கு செல்ல அங்கே பக்கத்தில் இருந்த பூங்காவில் உட்கார்ந்து கொண்டிருந்தான் கதிர்.மலர் வருவதை பார்த்தவன் பார்க்காத மாதிரி போனை பார்த்துக் கொண்டிருக்க மூச்சு வாங்க அவன் முன்னாடி நின்றவள் "இப்போ எதுக்கு என்னை அவசரமா வரச் சொன்னீங்க?" என்றதும் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டியவன் "முதல்ல தண்ணீயை குடி அப்புறம் பேசு" என்று சொல்ல ...

"எனக்கு வேண்டாம் எதுக்காக என்னை வரச் சொன்னீங்க? அதை முதல்ல சொல்லுங்க "என்றாள்.



"ம்ம்ம்ம் ... சொல்ல முடியாது நான் சொன்னதை முதல்ல கேளு அப்புறம் தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும்" என்று அவளை உற்றுப் பார்க்க மலருக்கு மனதிலோ ' என்னை விட பிடிவாதக்காரனா இருப்பான் போல' என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை குடித்து முடித்தாள் மலர்.


"ம்ம்.... இது தான் நல்ல பொண்ணுக்கு அடையாளம் இல்லை உனக்கு அதுதான் தெரியாதே" என்று நக்கலாக சொன்னவன் "ம்ம்ம் .... முதல்ல போட்டு இருந்த டிரெஸ்ல ரொம்ப அழகா இருந்தே ஏன் மாத்திட்டே? " என்று கேட்க ...அவன் கேட்ட கேள்வியில் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு முகத்தை கடுமையாகிக் கொண்டே "இங்க பாருங்க மிஸ்டர் கதிர் தேவையில்லாத விஷயத்தை பற்றி கேட்ட என்னோட பதில் வேற மாதிரி இருக்கும்" என்றதும்


"ஓகே பேபி கூல் கூல் ... ஏன் டென்ஷன் ஆகுற? சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் உன் பேரு மலரு தானே எதுக்கு என்கிட்ட பொய் சொன்னே? "


"இல்லை என் பேரு கலையும் தான்"

"அப்படியா! உனக்கு என்ன ரெண்டு பெயரா? இல்லை என்னோட பெயரு கலைமலர் அதான் உங்ககிட்ட கலை மட்டும் சொன்னேன் என்றதும் அவளை கூர்ந்து கவனித்துக் கொண்டே மேலேயும் கீழேயும் பார்க்க அவளோ அவனை நேர்க்கொண்ட பார்வை பார்த்தாள்.


"இதுக்கு தான் அவசரமா வரச் சொன்னீங்களா?"


"இல்லை இன்னும் நான் முக்கியமான விஷயத்தை பேசவே இல்லையே"


"சரி தான் நீங்க கேட்ட உடனே நான் பதில் சொல்லனும்னு அவசியமில்லை நான் போறேன்" என்று திரும்பியவளை பார்த்து


"உனக்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்றால் பரவாயில்லை,நான் யார்கிட்ட நியாயத்தை கேட்கனுமோ அவங்ககிட்ட நான் பேசிக்கிறேன் நீ போம்மா" என்றான் கதிர்.


உடனே அவன் சொல்வது புரிந்து அவன் புறம் திரும்பி "என்ன சொல்லனும்னு சொல்லுங்க?"


"எனக்கு கிடைக்க வேண்டிய பதில் இன்னும் கிடைக்கலையே"என்றான்.


"சரி உண்மையை ஒத்துக்கிறேன் நான் தான் உங்க மேல வண்டியை இடிச்சேன் என்னை மன்னிச்சிடுங்க அதற்கு பிறகு நீங்க எனக்கு பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி" என்று கையை கூம்பிட்டு சொல்ல "போதுமா? இப்போதாவது நான் போகவா?" என்றாள்.


"இல்லை இது எனக்கு பத்தாது இன்னும் இதே மாதிரி நூறு தடவை சொல்லி என்கிட்ட மன்னிப்பு கேளு "என்றதும் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டவள் "நூறு தடவை தானே!" ஆமாம் என்று தலையாட்ட "ம்ம்ம் நூறு தடவை சாரி நூறு தடவை தாங்ஸ்" என்றாள் மலர்.

அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன் "இப்படி கூட சொல்லலாமோ?என்று உன்கிட்ட தான் கலை கேட்டு தெரிஞ்சக்க வேண்டி இருக்கு ".என்றான்.


"அதெல்லாம் ஓகே நான் எனக்கு இது தாமதமா கிடைச்ச நானா ஒரு சின்ன தண்டனை இருக்கு,நான் எப்பொழுது எல்லாம் பார்க்கிறேனோ,அப்பொழுது எல்லாம் என்னை பார்த்து தோப்புக்கரணம் போடனும்" என்றான்.


"அதெல்லாம் முடியாதுன்னா உங்க வீட்ல போய் நியாயத்தை கேட்டுக்கிறேன்" என்று எழுந்தவனை "இல்லை ... இல்லை ... உட்காருங்க நான் தோப்புக்கரணம் தானே போடனும் இதோ போடுறேன்" என்று காதை பிடித்தவள் "எத்தனை தடவை?"என்றதற்கு

"நான் சொல்றேன் நீ போடு முதல்ல" என்றான்.மனதினுள் 'இரு இரு ஒருநாள் இல்லை ஒருநாள் உன்னை என்ன செய்றேன்னு பாரு" என்று தன்னுள் புலம்பிக் கொண்டே எண்ணத் தொடங்கினாள் மலர்.ஒன்று... இரண்டு.... என்று ஆரம்பிக்க அங்கு வந்தாள் தேவி.அவள் நின்றிருந்த நிலையை கண்டு சிரிப்பதா? அழுவதா என்று அமைதியாய் இருக்க ... தேவியை அங்கே கண்டதும் கதிர் "என்ன சீடரைக் காணோம்னு நினைச்சேன். கரெக்டா வந்துட்டே. சரி குரு தோப்புக்கரணம் போட போட சீடர் என்ன ஆரம்பிங்க"


மலரின் நிலைமையைக் கண்ட தேவி கதிரிடம் "சார் யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க சொல்லுங்க,அதுவும் இல்லாமல் அவ ஒரு டீச்சர் சார்.பசங்க பார்த்தா என்னாவது?" என்று தோழிக்கு பரிந்துரை செய்தாள் தேவி

"ஏய் தேவி கேளூடி நீ. அவர் என்னை பார்க்க போது எல்லாம் தோப்புக்கரணம் போட சொல்லுறாரு அதெப்படி முடியும்னு சொல்லு" என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்" என்று கேட்க மலரோ முட்டிப் போட்டு கைகள் இரண்டையும் சேர்த்து மடக்கி ப்ளீஸ் என கெஞ்ச அதைப் பார்த்து சிரிப்பை அடக்கி கொண்டவன்" சரி சரி யோசிக்கிறேன், அது அப்போ என்ன சிட்டிவேஷனோ அதப் பொருத்து இருக்கு,ஒழுங்கா இப்போ பத்து தடவை தோப்புக்கரணம் போட்டு திரும்பி பார்க்காம ரெண்டுபேரும் போங்க" என்றதும் வேகமாக வேகமாக அங்கிருந்து சென்றனர் இருவரும்.



போகும் வழியினில் மலர் தேவியிடம் "சீக்கிரமா வருவேன் பார்த்தா இவ்வளவு லேட்டா வறே.வீட்ல காரணத்தை சொல்லிட்டோ கிளம்ப வேண்டாம் அதுதான் லேட்டு"

"முதல்ல என்னாச்சுன்னு சொல்லு" என்றதும் நடந்ததை சொன்னாள் மலர்.

"ஏய் மலர் ஒன்னே ஒன்னும் மட்டும் நல்லா புரியுது. இனிமேல் நீயே விலகனும்னு நினைத்தாலும் அவன் விட மாட்டான் என்று தான் எனக்கு தோனுது."

"அதெல்லாம் ஒன்றுமில்லை சும்மா என்னை கலாய்க்க வேண்டும் என்று நினைக்கிறான் போல கொஞ்சநாள்ல அவனே ஒதுங்கி விடுவான்" என்றாள் மலர்.அவர்கள் இருவரும் சென்றதும் மலரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் கதிர்.அவன் என்ன தான் விலகிச் செல்ல நினைத்தாலும் மனம் ஏனோ அவள் அருகில் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தை போல் கேட்க இதோ அவள் முன்னே நிற்கிறான்.அவளை பற்றி முழுதும் அறிந்துக் கொண்டு இருக்கிறான்.இதுவரை தான் பழகிய பெண்கள் அனைவரும் அவனிடம் இருக்கும் பணத்தை எதிர்ப்பார்த்தனர்.இல்லை தங்களிடம் உள்ள பெருமையை காட்டினர்.ஆனால் இந்த கலை மட்டுமே விளையாட்டு தனத்தோடு மனமகிழ்வை தரும் அவளது செயல்பாடுகள் அவனை அவளிடம் இன்னும் ஈர்க்க செய்தன.




மறுநாள் காலை எதிர் வீட்டில் கதிர் எழுந்து வெளியே வருவதை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவள் அவன் நிற்கும் போது அவன் கண்ணில் படுவதை தவிர்த்து தனது வேலைகளைச் செய்துக் கொண்டாள்.தன்னை முன்னரே தயார் செய்துக் கொண்டு அங்கிருந்து சென்று தேவி வீட்டுக்கு சென்றாள் மலர்."தேவி ஏய் எப்பவும் நான் தானே வருவேன் இன்னைக்கு நீ வந்துட்டே?"

"எல்லாம் அந்த கதிர் கிட்ட கண்ணுல படாம இருக்கத்தான் இனிமேல் ஸ்கூல் விட்டு வந்ததோட வீட்ல இருக்க வேண்டும். அப்போ தான் அவன் கண்ணுல படாம தப்பிக்க முடியும் "என்றாள் மலர்.

"சரி எப்படியோ ஸ்கூல்ல போயாவது அவனோட தொல்லை இல்லாம இருக்கனும்" என்று இருவரும் சென்றனர்.அங்கே சென்றதும் ஸ்கூலே பரபரப்பாக இருந்தது. மலரை அழைத்த தலைமை ஆசிரியரிடம் சென்றாள் மலர்."அங்கிள் வரச் சொன்னீங்க என்ன விஷயம்?"


"அது இன்னைக்கு நம்ம ஸ்கூல்லுக்கு ஹெட் ஆபிஸ்ல இருந்து புது ஆபிஸர் வர்றாங்க.இனிமேல் அவர் கூட சேர்ந்து தான் வொர்க் பண்ணனும் அதனால அவர்கிட்ட பார்த்து நடந்துக்கோ சரியா?" என்று சொல்ல...

"சரி அங்கிள் நான் பார்த்துக்கிறேன்"என்று தலையாட்ட...

"உன்னை பற்றி எல்லாம் ஏற்கனவே பேசிட்டேன் அதனால பிரச்சனை எதுவும் இல்லை எல்லா டீச்சர்ஸ்ஸயும் வரச்சொல்லு" என்றார்.


இவளும் சரி என்று சென்றாள்.மலருடைய அப்பாவுடைய நெருங்கிய தோழரான தலைமை ஆசிரியர் மலர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவளுக்கு இந்த பள்ளியில் வேலைக்கு அமர்த்தினார்.எந்த வேலை இன்றி அனைத்து வேலைகளையும் சரியாக செய்வாள்.எந்த ஆசிரியர் விடுமுறை எடுக்கிறார்களோ அவர்களுக்கான வேலை செய்வது வழக்கம்.இது எதுவும் இல்லை என்றாள் ஆபிஸ் வொர்க் செய்வாள் மலர்.அதை தான் பேசிவிட்டதாக கூறினார்.அனைத்து ஆசிரியர்களுள் ஒருவளாய் நிற்க. வர வேண்டிய புது ஆபிஸர் உள்ளே நுழைய எல்லோரின் கண்களும் அவனைக் காண்பதில் ஆர்வம் காட்ட அதே ஆர்வத்தோடு தேவியும் மலரும் பார்க்க அங்கே வந்தவன் ஷர்ட்டை இன் செய்து கொண்டு பளிச்சென்று புன்னகையோடு வந்தவனை கண்டதும் இருவரின் கண்களும் அதிர்ச்சியில் தானாக விரிய வந்தவனோ அவர்கள் அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை சிந்தினான்.


அது வேற யாரும் இல்லீங்க நம்ம கதிர்நிலவன் தான்.


(தொடரும்)
 
Top