ஸ்வாதியின் பிறந்தநாளின்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. நான் செல்வா. ஸ்வாதி என் ஸ்வீட் அரக்கி. காலேஜ் தேர்ட் இயர் பிஸிக்ஸ்.
சென்ற மாதம் என் பிறந்தநாளில் அவளது பாக்கட் மணியிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்ராய்ட் ஃபோன் பரிசளித்தாள். எனக்கு அதேபோல் கொடுக்க விருப்பமில்லை, தவிர அவளுக்கு இதுபோன்ற பரிசுகள் ஆர்வமூட்டுவதில்லை. சென்ற ஆண்டு நாங்கள் பழகிய முதல் பிறந்த நாளின்போது அவளது ஃபோட்டோவை அழகிய பென்ஸில் ட்ராயிங் ஆக ஒரு ஆப்..ல் டிசைன் செய்து ப்ரேம் போட்டு பரிசளித்தபோது அவ்வளவு மகிழ்ச்சியடைந்தாள். என் நண்பன் ரவிசங்கரிடம் கேட்டபோது அவனது லேப்டாப் கொடுத்தான். அதில் ஃபோட்டோஷாப், மார்ஃபிங்க் போன்ற பலவிதமான டிசைனிங் சாஃப்ட்வேர்களை நிறுவியிருந்தான். ஓரளவுக்கு எனக்கு அதில் பரிட்சயம் இருந்ததால் வேலையை ஆரம்பித்தேன்.
அவளது முகம் ஃபோட்டோவில் அழகாக இருந்தாலும், டிசைன் செய்யும்போது எனக்கு முழு திருப்தி வரவேயில்லை. இரவு நெடுநேரம் சென்றபின் திடீரென்று அந்த ஐடியா தோன்றியது. என் முகம் மெதுவாக அவள் முகமாய் மாறுவதாய் வடிவமைத்தேன். அதை திரும்ப திரும்ப போட்டு ரசித்துக்கொண்டிருந்தபோது, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் இதுபோல் முகம் வருமா என்று தோன்றியது. என் முகத்திலிருந்து ஸ்வாதியின் முகம் மாறிவரும் நடுப்பகுதியில் நிறுத்திப்பார்த்தேன். நான் மீசை இல்லாமல் இருப்பதாலும், இருவருக்கும் சற்று சதுரவடிவ முகம் என்பதாலும், மிகச்சரியாக பாதியில் தோன்றிய முகம் அட்டகாசமாக ஒரு புதிய முகத்தைக் காட்டியது. எங்கள் இருவரின் கண்களும், உதடும், நெற்றியும், மூக்கும் மிகச்சரியாக பொருந்தி வந்த அந்த முகம், சட்டென்று பார்க்கும்போது எங்களை விட்டுவிலகி வேறு ஒரு நபராகவே காட்சியளித்தது. இது நான் சொன்னால் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதுவே அவளுக்கு சரியான பரிசாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டேன்.
அன்றிரவே அவளுக்கு ஃபோன் செய்து முதல் வாழ்த்தை பகிர்ந்து கொண்டபோது அவள்,
“ என்னடா கிஃப்ட் செய்திருக்க.... “ என்றாள்.
“ டைம் இல்லப்பா... நாளைக்குதான் ரெடி பண்ணனும் “ என்றேன்.
“ போடாங்… பொய் புழுகி…. சரியான கள்ளாட்டை…. “ என்றாள்.
செல்லமாக பேசும்போது புதுப்புது வார்த்தைகளாக கற்றுத்தருவாள். இன்று கள்ளாட்டை. கள்ள ஆட்டமோ..
மறுநாள் நாங்கள் எப்போதும் காலையில் பார்த்துக்கொள்ளும் மரத்தடியில் காத்திருந்தேன். அவளுக்கு பிடித்த இளநீல நிற சட்டையும் காக்கியும். கடந்து சென்ற நண்பர்கள் “ ஸ்வாதிய க்ளாஸ்ல பாத்துக்கலாம் வாடா “ என்றதை தலையசைத்து புன்னகைத்தேன்.
தூரத்தே அவள் வருவது தெரிந்தது.
ஜில்லென்றிருந்தது. லேசான கருமை பூசிய அடர் நீலவண்ண சுடிதார். அழகு. அவள் பக்கத்தில் யாரோடோ பேசிக்கொண்டு வந்தாள். அருகில் வர அதிர்ந்துபோனேன்.
பக்கத்தில் வந்தவுடன் ,
“ ஹாய்… பப்பி…. எப்படா வந்த.. “ என்றாள்.
எனக்கு அவளுடன் வந்த நபரை பார்த்தவுடன் தலை சுற்றி கீழே விழும் உபாதை ஏற்பட்டது. களிமண் நிலத்தில் நிற்க வைத்து, கீழே தண்ணீர் ஊற்றி கால்களை உள்ளுக்குள் இழுப்பதுபோன்று கால்கள் நழுவின.
“ யேய்… என்னாச்சுப்பா.. “
“ வந்து … ஹேப்பி பர்த்டே சொன்னதுக்கு தாங்க்ஸ்…” என்று உளறினேன்.
“ லூசாடா நீ…. நாந்தாண்டா சொல்லணும்…”
“ நீ வேற .. நா வேறயா…. “
“ டயலாக் உனக்கு செட்டாவுல…”
“ இது ….. ? “
“ ஓ .. இவனா.. பஸ்ல பேக் வச்சிட்டு தடுமாறிட்டு இருந்தான். நான் சீட்ல இருந்தேனா… பேக் வாங்கி ஹெல்ப் பண்ணினேன். நம்ம காலேஜ் ஸ்டாப்பிங்க் சொல்லத்தெரில… டிக்கட் வாங்கிகொடுத்தேன்.. நார்த்ல இருந்து ஏதோ ட்ரான்ஸ்பர்ல வந்திருக்காங்கலாம். நேத்துதான் ஜாய்ன் பண்ணிருக்கான். நம்ம க்ளாஸ்… ஆச்சரியமாயிடுச்சு… “
“ வாங்க … நானும் உங்க க்ளாஸ்தான். செல்வா, ….. செல்வகுமார்… உங்க பேரு..? “ என்றேன்.
“ செல்வா, அவனுக்கு தமிழ் தெரியாது. ஹிந்தி, இங்லீஷ் தான். “ என்றாள் ஸ்வாதி.
“ ஹாய்… ஸெல்வா… ஐ’ம் ராகுல் “ என்றான் அவன்.
நான் கைகொடுத்தேன். என் கை நிஜமாகவே ஜில்லிட்டது.
“ எங்கடா கிஃப்ட்.. ? “என்றாள் ஸ்வாதி.
“ சொன்னேனே… இன்னும் வாங்கலடீ… “ என்றேன். நம்பாமல் என்னை உறுத்துப்பார்த்தவள், “ நீ இன்னிக்கு சரியில்ல.. சம்திங்க் ராங்… ” என்றவாறு வகுப்பறைக்குப் போவதாக கையசைத்துவிட்டுச் சென்றாள்.
நான் அவர்கள் போவதை வெறித்துப் பார்த்துக்கொண்டே என் பேக்கில் வைத்திருந்த அந்த படத்தை எடுத்துப்பார்த்தேன். அதில் ராகுல் முகம் தெரிந்தது. அதே கண்கள், மூக்கு, சிரிப்பு. அப்படியே மரத்தடியில் உட்கார்ந்தேன். எவ்வளவு நேரமென்று எனக்கே தெரியவில்லை.
************************
அதன் பின் சில மாதங்கள் எனக்கும் ஸ்வாதிக்கும் நெருக்கம் குறைந்து போனது. அவளுக்கும் ஹிந்தி சுமாராய் தெரியுமாதலால் ராகுலுடன் மிக அதிக நேரம் செலவிட ஆரம்பித்தாள். என்னோடு பேசுவதை அவள் தவிர்த்தது எனக்கு மிகப்பெரும் மனவேதனையை அளித்தது. எனினும், எப்போதும் போல காலேஜ் செல்வதும் வந்து படிப்பதை கவனமாக செய்வதுமாய் இருந்தேன்.
ஆனால் நான் கவனிக்காத நேரத்தில் ஸ்வாதி என்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும், சில நேரங்களில் என்னைப்பற்றி என் நண்பர்களிடம் விசாரிப்பதையும் கேள்விபட சில நேரங்களில் தனிமையில் அழகூட நேரிட்டது. ஆனால் அவளை நெருங்கி பேச முற்பட முனையும்போதெல்லாம் எங்கிருந்தோ வரும் ராகுல் அவளிடம் ஒட்டிக்கொள்வான். நான் விலகிவிடுவேன்.
அப்படித்தான் ஒருநாள் அவள் லீவாய் இருக்கும் ஒரு சமயத்தில் ராகுல் என் அருகில் வந்து அவளைப்பற்றி ஹிந்தியில் விசாரித்தான். எனக்கு எப்படித்தான் அவ்வளவு கோபம் வந்ததோ …” போடாப்…. பேய்ப்பயலே… “ என்று சத்தமிட்டுவிட்டேன். அவன் சட்டென்று அதிர்ந்து பின் தூரச்சென்று என்னைப்பார்த்து லேசாக புன்னகைத்தவாறு செல்வதாய் தோன்றியது.
அதன்பின் மிக சாதாரணமாய் எப்போதும் போல் நடந்துகொள்ளும் அவன், நான் பார்க்கும் சமயங்களில் மட்டும் ஒரு மர்மப்புன்னகை புரிவதாகவே தோன்றியது. அதுவும் அவன் ஸ்வாதியுடன் இருக்கும் சமயங்களில் நான் பார்க்க, வேண்டுமென்றே நெருக்கம் காட்ட ஆரம்பித்தான்.
சக நண்பர்களுக்கு ஸ்வாதியை நன்கு தெரியுமாதலால், அவள் பிறரிடம் பழகுவதோ, ராகுலுடன் பழகுவதோ வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால், எனக்கும் அவளுக்கும் இடையே ஊடல் இருப்பதை ஜாடைமாடையாக பேச ஆரம்பித்தார்கள். என்முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம், அல்லது ஸ்வாதியின் ஃபோட்டோவை பார்த்தால்கூட அவற்றைமீறி அவன் முகம் முன்வந்து சிரித்தது. எங்கிருந்து எப்படி வந்தான், ஏன் வந்தான் என என் மனம் முழுதும் ஆக்ரமிக்க ஆரம்பித்தது. இப்படியே சிலநாட்கள் இருந்தேனெனில் நிஜமாகவே முழு பைத்தியம் ஆகிவிடுவேனென தோன்றியது. அந்த டிசைனை நான் உருவாக்கியிருக்கக் கூடாதெனவும், அல்லது ஸ்வாதியிடம் காட்டியிருக்கவேண்டும் எனவும் பலவாறு என்னையே குழப்பிக்கொண்டேன்.
ஆனால் இதற்கு முடிவு எப்படி, என்னவென்று புரியாத சூழலில் என்.ஸி.ஸி ல் பத்துநாள் கேம்ப் க்காக பீகார் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
************************
முதல் நாளிரவு வீட்டில் என் பொருட்களை பேக் செய்துகொண்டிருந்தேன்.
“ டேய்… ஸ்வாதி வந்திருக்காடா… என்னம்மா கொஞ்ச நாளா ஆளயே காணோம்..? “ என்ற அம்மாவின் குரல் கேட்டது.
“ இல்ல ஆண்ட்டி, கொஞ்சம் வீட்ல வேலை அதிகமாச்சு… அதான் “ ஸ்வாதியின் குரல்.
எனக்கு முதல் தடவையாக அவளிடம் பேசுவது போன்ற நடுக்கம், ஏற்பட்டது.
“ வா ஸ்வாதி… உட்கார்… “ என்றேன்.
“ கெஸ்ட் மாதிரி ஆயிட்டேன்.. இல்லடா… ” என்றாள். அதை சொல்லும்போது அவளின் குரல் உடைந்ததை கவனித்தேன்.
உள்ளே வந்த அம்மா, “ சரி பேசிட்டிருங்க… நான் போய் பால் வாங்கிட்டு வரேன்… “ என்றவாறு வெளியே கிளம்பினார்.
“ சொல்… “ என்றாள்.
“ என்ன சொல்ல… “ என்றேன்.
“ லூசாடா… பைத்தியக்காரா… பத்து நாள் வெளியூர் போற… எங்கிட்ட சொல்லத்தோணலயா… தனியா நான் என்னடா பண்ணுவேன்… “
“ இத்தனை நாள் பேசிட்டா இருந்த… ? “
“ அது…... சொல்லக்கூடாதுன்னு பாக்கறேன்.. உங்க அக்கா ஊர்பூரா சொல்லியிருக்கா… என்னாலதான் நீ படிக்காம இருக்கியாம்… இல்லாட்டி… கோல்டு மெடல் புடுங்கிடுவியாம்… அங்க போய் கேளு… வந்திட்டான் “
“ என்னடி புதுசா சொல்ற… அட கிறுக்கி, அதனாலதான் பேசாம இருந்தியா… “
“ வேறென்ன… கள்ளகாதலன் வச்சிருக்கேன்னு நெனச்சியாடா பேமானி..? “
“ ச்சீ… வாய மூடு.. சரி காலைல கிளம்பறேன் “
“ இரும்மா டீ போட்டுத்தரேன்.. ” அம்மாவின் குரல் கேட்டது.
“ நான் குனிந்தவாறே , இந்த ராகுல் பய வர்லயா…” என்றேன்.
“ இல்லடா… அவங்கூட பேச யாருமில்லயா… நொய் நொய்னு என்னையே சுத்தி சுத்தி வரான். அவனை பாத்தா பாவமாவும் இருக்கு, சில நேரம் உன்னை மாதிரியே இருக்கான்னு அவனை பாத்து பேசிட்டிருப்பேன். நீதான் பேசறதில்லயே… என்னை என்ன பண்ணச்சொல்றே… “ என்றாள்.
நிமிர்ந்தேன், சட்டென்று என் அருகில் வந்தவள் எதிர்பாரா ஒரு முத்தத்தை என் கன்னத்தில் கொடுத்துவிட்டு, " ஆண்ட்டி, தோ… நான் வந்து ஹெல்ப் பண்றேன்..” என்றபடி வெளியேறினாள்.
அன்றிரவு, பன்னிரண்டு மணியளவில் பஸ் ஏறினேன். ரயில்வே க்ராஸிங் தாண்டும்போது பேக்ல் கையில் தட்டுபட்ட அந்த மார்ஃபிங் புகைப்படத்தை இரண்டாக கிழித்தெறிந்தேன். பத்து நாட்கள் மிகக்கடுமையாகவே போனது. போனால் ராகுலிடம் பேச சில ஹிந்தி வார்த்தைகளையும் கற்றுக்கொண்டேன். பத்து நாள் கேம்ப் முடிந்து வீட்டுக்கு ஒரு சாயந்திர வேளையில் வந்து சேர்ந்தேன்.
ஸ்வாதி என் வீட்டில்தான் இருந்தாள். என்னை பார்த்த அவளின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். தனியே மாட்டினால் கட்டிப்பிடித்து அழுதுவிடுவாள் போல தோன்றியது. ஒருமணி நேரம் பேசிவிட்டு கிளம்பும்போது சொன்னாள்,
“அந்த ராகுல் இறந்துட்டான்பா….கேள்விபட்டியா ? “
அதிர்ந்துபோனேன்..
“ என்ன ஸ்வாதி சொல்ற… எப்படி ? “
“ நீ கேம்ப் கிளம்பின இல்ல…. அன்னிக்கு ராத்திரி… நம்ம ரயில்வே க்ராஸிங்….. ல தாண்டியிருக்கான். ரயில் வந்தத கவனிக்கல.. சரியா பன்னண்டு மணியிருக்கும்… ரெண்டா போயிட்டான்… ஸ்… கொடூரம் “ என்றாள்.