கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

6.என்னில் தன்னை இணைத்தவன்

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன் அத்தியாயம்-6



அத்வதா அமைதியாய் இருக்க தவரூபன் பேச்சை தொடர்ந்தான்.


"நீ உன் குடும்பத்தோட கொடைக்கானலுக்கு வந்து இருந்தியே அங்கே தான் உன்னையும் உன்னோடு இருக்கிறவங்களையும் பார்த்தேன்.எப்படி உன்னால் இந்த மாதிரி எல்லாம் இருக்க முடியுது?"


"தவரூபன் இது என்னோட தனிப்பட்ட விஷயம் இதுல நீங்க வராமல் இருக்கிறது நல்லது"


"புரியுது மரியாதை கொடுக்க மாட்டே அதானே!"


"ப்ளீஸ் நான் மானவிக்காகத் தான் நீங்க பேசுறதை பொறுமையாக கேட்டுட்டு இருக்கேன்.அவளுக்கு என்னாச்சுன்னு எனக்குத் தெரியனும்"


"இல்லைன்னா எப்பவும் நீ தானே பேசுவே மற்றவங்க பேசுறதை கேட்கமாட்டியே!"


அவன் மறுபடியும் அவளை வாரி விடுவதிலேயே இருக்க… இவளோ அவனை பார்த்து முறைக்க…


"இங்கே பாரு அத்வதா உன்னோட முறைப்புக்கு பயந்து நான் சொல்லலை"


அவளோ விட்டால் அவனை அடித்து விடுவது போல் பார்க்க… "சரி சரி சொல்றேன்" என்று பேச்சை தொடர்ந்தான்.


"கொடைக்கானல்ல உன்னை ஏதேச்சையாக பார்த்தேன்,பார்த்த பிறகு உன்னை நானாக வந்து பார்க்கிறதை விட நீ என்னை சந்திக்க வரனும்னு நான் நினைச்சேன்.ஏன்னா நீ என்கிட்ட போட்ட சவாலே அதானே"


"அதனால உன்னை வரவைக்கிறதுக்கு நான் போட்ட நாடகம் தான் அன்னைக்கு நீ கொடைக்கானல்ல இருந்து சென்னைக்கு நீ கார்ல வரும்பொழுது நடந்தது எல்லாம்.ஆனால் நீ வருவேன்னு பார்த்தால் மானவி வந்தாள்.நான் அங்கிருந்து போய்ட்டேன்"


அத்வதா அவசரமாய் "அந்த கோபத்துல தான் மானவியை"என்று அவள் நிறுத்த…


அவனோ அவளை பதிலுக்கு முறைத்தவன் "நான் இன்னும் சொல்லி முடிக்கலை உன்னை அங்கே எல்லோரும் தேடிட்டு இருக்கும் பொழுது என் கண்ணுல பட்டால் விடுவேனா? அதான் உன்னையும் உங்கூட இருக்கிறவங்களையும் பாலோ பண்ண ஆட்கள் ஏற்பாடு பண்ணேன்"


"அப்போத் தான் மானவி யாரையோ காதலிக்கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது அவளை ரொம்ப கவனமா பாலோ பண்ணச் சொன்னேன் பார்த்தால் ஒருவாரமா உனக்கே தெரியாமல் ஒரே வெளியே சுத்தப் போயிட்டாள்.அவகூட படிக்கிற பொண்ணுங்களும் சேர்ந்து தான் இதைச் செய்றாங்க,அப்போத் தான் எப்பவும் காலேஜ் போய்ட்டு வந்துட்டு வெளியே போறவங்க இன்னைக்கு காலையிலேயே வெளியே போக முடிவெடுத்தாங்க அதோடு அவளோடு சுத்துற பசங்களைப் பற்றி விசாரிச்சேன் எல்லோரும் போதை மருந்து பயன்படுத்துவதோடு அதை விற்கவும் செய்றாங்கன்னும் எனக்கு தெரிய வந்துச்சு உனக்கு இதைப் பத்தி தெரிய வைக்கலாம்னு பார்த்தால் எந்த வழியும் இல்லை"


"என்ன பண்ணலாம்னு யோசனை செய்தேன்? சரி இன்னைக்கு போட்டோ எடுத்து உன் நம்பருக்கு அனுப்பலாம்னு இருந்தேன்.அதுக்குள்ளாக இவனுங்க வந்த பொண்ணுங்களையே தனக்கு சாதகமாக யூஸ் பண்ண வெளியே தெரியாமல் நடக்கிற விபாச்சார விடுதிக்கு அழைச்சிட்டு போக முடிவு செய்தாங்க இது தெரிஞ்ச மானவி வர மாட்டேன்னு அடம் பிடித்ததால் அவளுக்கு கட்டாயப் படுத்தி போதை மருந்துக் கொடுத்து அவளை மயக்கம் அடைய வைத்தான் அவளோட காதலன்"


இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அத்வதாவிற்கு தலை சுற்றாத குறை தான்.அப்படியே அதிர்ச்சி குறையாமல் நின்றாள்.


"நான் மானவியை அப்பவே காப்பாத்தி இருப்பேன்.ஆனால் யாரோ அவங்களை பாலோ பண்ணுறாங்கன்னு தெரிந்து எங்களுக்கு தெரியாமல் எப்படியோ எஸ்கேப் ஆயிட்டாங்க, கடைசில நாங்க கண்டுபிடிச்சு போகும் போது அது ஒரு விபாச்சாரம் நடக்கிற இடம்.அங்கே தான் அவ அரைமயக்கத்துல அவ நம்பி காதலிச்சவனோட போராடிட்டு இருந்தாள்."



"என்னோட ஆட்கள் அவளைக் காப்பாற்றி அவனை அடிச்சு அறையில பூட்டி வைச்சு இருக்கோம்,மற்ற பொண்ணுங்களையும் பிடிச்சு அவங்க கிட்ட இருந்து அவங்களோட பெற்றவங்க நம்பர் வாங்கி தகவல் அனுப்பி வைச்சோம் எல்லோரும் வந்துட்டாங்க எல்லா விஷயத்தையும் பேசி முடிச்சாச்சு.அங்கிருந்தவங்களையும் வெளியே அனுப்பிட்டேன்.நீ வரும் பொழுது யாரும் அந்த வீட்டில் இருக்கக் கூடாது.அதுக்கு பிறகு தான் உனக்கு நான் தகவல் பண்ணச் சொன்னேன் ஏன்னு உனக்கு காரணம் சொல்ல வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன் என்ன நடந்தாலும் நீ நம்ப குடும்பத்து பொண்ணு இல்லைங்கிறது ஆகாதுல்ல அதோட மானவியோட போதை தன்மை இறங்கிறதுக்காகவும் தான்"


"நீ ஹாஸ்பிட்டல் போகும் போது தேவையில்லாத பிரச்சினை வராமல் இருக்கும் அதுக்காகவும் தான்.இது தான் நடந்த உண்மை இதை இனிமேல் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உன்னோட விருப்பம்"


தவரூபன் மூச்சு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்தவன் அவளிடமே அவளுடைய விருப்பத்தை முடிவு செய்யச் சொன்னான்.


அத்வதாவிற்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.தவரூபனை முழுவதுமாக நம்பவும் அவள் தயாராக இல்லை.ஏனென்றால் அவனை அவள் இது மாதிரி எல்லாம் பார்த்தது இல்லை.ஆனால் அவனை தவிர நம்புவதற்கு வேறு யாரும் இல்லை. முக்கியமாக அவன் தற்போது வகிக்கும் பொறுப்பு இவ்வாறாக மாற்றி இருக்குமோ? என்பது போன்ற பலவித எண்ணங்கள் மனதில் தோன்ற யோசனையாக தலையில் கை வைத்து சிலையாய் அமைதியாக நின்றாள்.


அவள் அருகில் கொஞ்ச கொஞ்சமே நெருங்கி வந்தவன் அவள் காதோரமாய் "அத்வதா இவன் எப்போ நல்லவன் ஆனான்னு தானே மனசுல யோசிச்சிட்டு இருக்கே" என்றதும் சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்க்க… நேராய் அவளது கண்களுக்கு அருகே நெருக்கமாய் அவனைப் பார்க்க அவனும் கண் இமைக்காமல் அவளை பார்த்தான்.அவனது பார்வையின் பதில் அர்த்தம் புரியாமல் தவித்தவள் சட்டென்று தன்னை சுதாகரித்துக் கொண்டு அவனிடம்



"எப்போ நீ இப்படி மாறினே?"

அவளது ஒருமையான அழைப்பில் சிரித்தவனாய் "புரியலை என்ன சொன்னே? "


"அ...து எப்போ நீங்க இ...ப்படி? "


"ஓ...அதுவா எல்லாம் பொறுப்பு கடமைங்கிறதாலே"


"என்ன பொறுப்பு?"என்று அவள் யோசனையாய் கேட்க…


"எல்லாம் கல்யாணம் என்கிற பொறுப்புனாலத் தான் சொன்னேன்"


அவன் சொன்ன வார்த்தைக் கேட்டு கோபமும் அதிர்ச்சியோடும் மனதில் தோன்றிய 'உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?' என்ற வார்த்தையை மூடி மறைத்து "எப்படியோ நீங்க மாறுனது சந்தோஷம் தான்" என்றாள்.


அதைக் கேட்டு அவன் சிரித்தான்.
ஏதோ ஒன்று மனதை பிசைய அவளால் நிற்க முடியவில்லை.


"நான் இங்கிருந்து போறேன். நேரமாகுது"

"ம்ம்ம்… கிளம்பு நீயும் சீக்கிரமா போய் மானவியை பார்க்கனும்ல"

ஆமாம் என்று தலையசைத்தவள் வேகமாக கிளம்பி வாசலுக்கு அருகே சென்று கதவை திறக்கச் சென்றவள் அவன் பக்கமாய் திரும்பி "ரொம்ப தாங்ஸ் தவரூபன்.மானவியோட உயிரையும் கற்பையும் காப்பாத்தி இருக்கீங்க தாத்தாவோட வளர்ப்பும் அப்பாவோட கணிப்பும் சரியாக போகலைன்னு நிரூபிச்சீட்டீங்க"

அதைக் கேட்ட அவனோ "மிஸ் ஆயிடுச்சேன்னு வருத்தப்படுறியா?"


அவளோ அவன் சொன்ன பதிலைக் கேட்டு முறைத்தவள் "கண்டிப்பா இல்லை இது என்னோட முடிவு" என்று உறுதியாய் பதில் அளித்து அவன் புறம் திரும்பிப் பார்க்காமல் வேகமாய் நடந்தவள் சற்று நின்று கையை உயர்த்தி "இரண்டு நாள்ல நான் திரும்ப சந்திக்க வருவேன்.மானவியை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவனை பார்க்கனும் அவனை நான் சும்மா விட மாட்டேன்"என்று பாய் என்பது போல் கையசைத்து விட்டு நடந்தாள்.அதுவரை அவன் உன் பாதுகாப்பில் வைத்திடு என்று சொல்லாமல் சொல்லி செல்பவளைப் பார்த்து சிரித்தவன்


"என் திமிரு இன்னும் குறையலைன்னு எனக்கே காட்டிட்டு போறியா அத்வதா.உன்னை உனக்கே புரிய வைப்பேன் நான்" என்று சொல்லி சிரித்தான் அவன்.


அவனிடம் எதையும் வெளிக்காட்டாமல் வெளியே வந்து விட்டாள்.ஆனால் அவளே அவள் அறியாமல் அவள் கண்கள் முழுவதும் கண்ணீர் நிரப்பிக் கொண்டது.தாத்தாவைப் பற்றிச் சொன்னதும் பழைய நினைவுகளும் அப்பாவைப் பற்றி சொன்னதும் அன்று தான் செய்து விட்டு வந்த செயலின் வீரியத்தை சட்டென்று நினைத்தவளின் கண்முன்னே மொத்த குடும்பமும் தோன்ற அதே நினைவோடு ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.


தவரூபன் யாரைப் பற்றியும் எந்த தகவலும் சொல்லாமல் இருந்தது அவளுக்கு வருத்தத்தை தரத் தான் செய்தது.அவளாவது தன் குடும்பத்தைப் பற்றி கேட்டிருக்கலாமோ? என்ற எண்ணமும் வரத் தான் செய்தது.



ஆனால் இதுவரை அத்வதாவிற்கு இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்ததே இல்லை.இன்று ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்ச்சிகளின் விளைவால் இருக்கும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொள்ள கண்களை இறுக்க மூடிக் கொண்டவள் தாத்தாவின் நினைவு வர தனது கைப்பையில் ஒளித்து வைத்திருக்கும் அந்த போட்டோவை எடுத்துப் பார்த்தாள் அவள்.



தலையில் தலைப்பாகை கெட்டி சின்னதாய் முறுக்கு மீசையோடு அதில் புன்னகை முகமாய் இருக்கும் தாத்தாவையும் அதற்கு அருகில் அவருக்கு இணையாய் அமர்ந்திருந்த பாட்டியையும் கண்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளிக் கொண்டு வந்து அவளைப் பற்றி அவளே நினைக்கத் தொடங்கினாள்.



அவள் பிறந்து வளர்ந்த நாட்களை எண்ணத் தொடங்கினாள் அத்வதா.


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவின் இரண்டாவது பெரிய நகரமான மைசூர்.மைசூரில் வாடியர் அதாவது உடையார் வம்சத்தைச் சேர்ந்த அரசகுலத்தவர்கள் மைசூரை ஆண்டனர்.அப்படி பரம்பரையாக வாழ்ந்தனர். அதில் இன்றும் இராஜ வம்சத்தை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.



இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு மன்னர் ஆட்சி இல்லாமல் போனாலும் அவர்களது வம்சத்தைச் சேர்ந்த அரசகுலத்தவர்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.பிரிட்டிஷ் ஆட்சிப் பிறகு இந்தியா பிரிவினைப் பின்னர் மைசூர் அரசு அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டப்படி 1950 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இணைக்கப்பட்டது.அதன்பிறகு இந்திய அரசால் உடையார் வம்சித்தில் உள்ள மன்னர்களை மைசூர் மகாராஜா என்றே இந்திய அரசால் அழைக்கப்பட்டனர்.



அவர்களை மதிக்கும் பொருட்டு அவர்களுக்கு கௌரவ அரசஉடையார்கள் என்றும் பட்டமளிக்கப்பட்டது.மேலும் ஆயிரக்கணக்கான குடும்பச் சொத்துக்கள்,பரம்பரை தொழில்கள் மற்றும் பல அரண்மனைகளும் அரசர்களின் கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரப்படும்.


அந்த இடத்தில் 1950 பிறகு மன்னராக பொறுப்பெடுத்தவர் அத்வதாவின் தாத்தா கிருஷ்ண உடையார்.


சுதந்திரத்தைக் காண இந்திய பட்ட இன்னல்களை நேரில் கண்டு வளர்ந்தவரானதால் அவர் முற்போக்கு சிந்தனையுடைவராக இருந்தார்.யாரையும் அடக்கி ஆட்டுவிப்பதில் அவருக்கு துளி அளவும் விருப்பம் இல்லை.


அவர் அரசவம்சத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் யாரிடமும் அதிகாரமாய் பேசாமல் அன்பாய் பேசக் கூடியவர்.உதவி என்று யார் வந்து அவரிடம் கேட்ட பொழுதிலும் தயங்காமல் அதை அவர் செய்திடுவார்.இவரது இந்த எளிமையான வாழ்க்கை அரசகுடும்பத்தைச் சார்ந்த அவருடைய குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை.


இருந்தாலும் கிருஷ்ண உடையார் அதைப் பற்றி எல்லாம் கவலைக் கொள்ளாமல் தன் கொள்கையே பெரிதென வாழ்ந்தார்.அவர் பதிவியில் இருக்கும் போதே அடுத்து அந்தப் பதவியில் வகிக்கும் போவது யாரென்று அறிவிக்க வேண்டும்.


அரசவம்சத்தைப் பொறுத்தைவரையில் யார் பதவியில் இருக்கிறார்களோ? அவர்களுக்கு அடுத்து அவர்களது ஆண் வாரிசுகள் அந்தப் பதவியில் வகிப்பர்.ஆனால் மைசூர் அரண்மனைக்கு ஏற்ப்பட்ட சாபத்தினால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் போனது.


ஒவ்வொரு ராஜ்ஜியம் சரிந்து மற்றொரு ராஜ்ஜியம் உருவாகும் பொழுது பிரயோகப்படுத்தும் தந்திரோபாயங்கள்,யுக்திகள் அதைச் சார்ந்த சர்ச்சைகள் எப்பொழுதும் வரலாற்று ஏடுகள் சுமந்துக் கொண்டிருக்கும் அவற்றுள் சில பக்கங்கள்.


இந்தியாவின் பிரம்மாண்டமான ராஜ வம்சத்தில் ஒன்று உடையார் இராஜ வம்சம்.


ஒவ்வொரு நதிக்கரைக்கும் ஒரு மண்வாசனை ஒரு நாகரீகம் தொன்று தொட்டு நம்மில் தொடர்ந்து கொண்டிருப்பது இயற்கை வளங்களில் ஒன்று.தமிழ்நாட்டின் வரலாற்றில் தாமிரபரணி பூம்புகார் நாகரிகத்தைப் போல நாகரீகத்தில் தனக்கென ஒரு உயர்ந்த மதிப்பைக் கொண்டது தலக்காடு மக்களின் நாகரீகம்.



கர்நாடகத்தின் வடக்கில் பெல்லாரி மாவட்டத்தின் நகரங்களில் ஒன்று விஜயநகரமும் ஒன்று.சரிவடைந்த விஜயநகரப் பேரரசின் சரித்திரப் புகழ் மிக்க தலைநகரம் இந்த விஜயநகரம்.இந்த விஜயநகரப் பேரரசின் எல்லை சிறகுகள் மைசூர் , திருச்சிராப்பள்ளி, பாண்டிச்சேரி,செங்கல்பட்டு என்று காஞ்சிபுரம் வரை பரந்து விரிந்து வியாப்பித்திருந்தது.



அந்தந்தப் பகுதி பாளையகாரர்கள் அந்த பகுதியை ஆண்டு விஜயநகரத்திற்கு கப்பம் கட்டி வந்தனர்.காவிரியின் வழித்தடங்களில் மைசூரின் கீழ்ப்பரப்பில் அமைந்துள்ள இடம் தலக்காடு.இது ஸ்ரீரங்கப்பட்டினத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இடம்.


1610 ல் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆண்டு வந்தவர் திருமலை ராஜா.இவர் விஜயநகரப் பேரரசின் நேரடிப் பிரதிநிதியாவார்.இவருக்கு கீழ் கப்பம் கட்டும் பாளையகாரர்களில் ஒருவராக மைசூரை ஆண்டு வந்த ராஜ வம்ச உடையார் வம்சமும் இருந்தது.இந்திய வரலாற்றில் பெரும்பாலும் குறுநில மன்னர்களும் கப்பம் கட்டும் ஆட்சியாளர்களும் பேரரசுகள் மீது ஒரு கண் வைத்து தக்க சமயம் வரும் வரை காத்திருப்பர்.



தகுந்த நேரத்தில் தங்கள் பலத்தையும்,தந்திரங்களையும் பயன்படுத்தி தங்களுக்குமேல் உள்ள இராஜ்ஜியத்தை தங்கள் வசமாக்கி அரியணை ஏறிவிடுவர்.இதில் சிலநேரங்களில் இரு பேரரசுக்கு போர் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகளே ஆளத்துவங்கி விடுவர்.


இந்த எழுதப்படாத நடைமுறைகளில் மைசூர் ராஜ உடையாரும் விதி விளக்கல்ல.அவரின் பார்வை எப்பொழுதும் கப்பம் கட்டி வந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மேலே
இருந்தது.



திருமலை ராஜா நோய்வாய்ப்பட்டு இருந்த தருணம் அது.திருமலை ராஜா தன் இரண்டாவது மனைவியான அலமேலம்மாவை சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு தன் முதல் மனைவியோடு தலக்காட்டில் உள்ள வைதீஸ்வரன் கோவிலை நோக்கிச் செல்கிறார்.வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோயாக இருந்ததால் இறைவனை நாடிச் செல்கிறார்.


நாட்கள் உருண்டோடின.அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.மாறாக கவலைக்கிடமான நிலைமையில் அலமேலம்மாவிற்கு தகவல் சொல்லப்படுகிறது.


அலமேலம்மா தலக்காடு சென்றடையும் போது கணவரின் உயிர் பிரிந்தது.பருந்து பார்வையுடன் காத்திருந்த மைசூர் ராஜ உடையாய் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த தன் படை பரிவாரங்களுடன் சென்று ஸ்ரீரங்கப்பட்டினத்தைக் கைப்பற்றினார்.



மீண்டும் தன் இராஜ்யத்திற்குச் செல்ல முடியாத காரணத்தினால் அலமேலம்மா காவிரி கரையின் மற்றொரு கரையில் அமைந்துள்ள ஊரான மலாங்கியில் தங்கி விடுகிறார்.மைசூர் மன்னர்களின் இராஜ்ஜியம் அன்றிலிருந்து தொடங்கியது.


அலமேலம்மா செல்லும் பொழுது எப்பொழுதும் தன் உடன் அரச குடும்பத்தின் நகைகளையும் எடுத்துச் செல்கிறார்.ராணியான அவர் வாரத்தின் ஓரிரு நாட்கள் கடவுளுக்கு அணிவித்து வழிபடுவார்.ராஜ்ஜியத்தில் நகைகள் இல்லாததைக் கண்ட இராஜ உடையார் ஒருசில வீரர்களை அனுப்பி நகைகளை பெற்று வருமாறு கட்டளையிட்டு அனுப்ப அதற்கு அலமேலம்மா மறுப்பு தெரிவிக்கிறார்.



இராஜ உடையார் திரும்பவும் வீரர்களை அனுப்பி கட்டாயமாக நகைகளோடு வர வீரர்களுக்கு ஆணை பிறப்பித்தார்.இம்முறை நகைகளோடு அலமேலம்மா ஓட மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து வீரர்கள் அவரை துரத்தினர்.அலமேலம்மா காவிரியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்.



அலமேலம்மா ஆற்றில் விழும் முன் தலக்காடு மண்lல் மேடாகட்டும். இராஜ உடையார் வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்து மறைந்து விடுகிறார்.


அவர் கூறியது போலவே பல அழகிய கட்டிடங்களைக் கொண்ட தலக்காடு மணல் மேடானது.ஆண்டாண்டு ஆற்றங்கரையின் மண் சில அடி உயர்ந்து தலக்காடு பாலைவனம் போல் ஆனது.அதுமட்டுமில்லாமல் உடையார் குடும்பத்தையும் அலமேலம்மா சாபம் தொடர்ந்து வந்தது.இதுவரை பட்டத்து இளவரசர்களுக்கு ஆண் வாரிசுகள் பிறக்கவே இல்லை.தங்கள் உறவுகளுக்குள் தத்தெடுத்து பட்டத்து இளவரசர்களாக முடிச்சூட்டிக் கொண்டு பின்னர் மன்னர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தற்போது கிருஷ்ண உடையார் தனக்கு அடுத்து இளவரசரை நியமனம் செய்ய முடிவெடுத்தார்.அவருக்கு இரண்டுபெண் குழந்தைகள் இருந்தனர்.அதில் முதலில் பிறந்த பெண் பிள்ளை மாதேவிக்கு தன்னுடன் பிறந்த சகோதரியின் மகனான ரதனுக்கு மணமுடித்து வைத்தார்.


தன் மருமகனுக்கே அடுத்த பட்டத்து இளவரசாக பொறுப்பெடுத்து தன் மகள் மாதேவியை ராணியாக்கினார்
கிருஷ்ண உடையார்.



(தொடரும்)
 

Mohanapriya M

Well-known member
Ena sister takkunu cut pani thodarum nu potutinga nan romba aruvama padichute vanthen 🙄 but paravala arambame nalla irunthuchu nanum thavarooban ah thappa ninachuten 🤦🏻 ena oru nalla manusan ah irukaru 🤩 avaru pesuratha patha athvadha tan etho thappa purinjurupalonu thonuthu 🤔 adutha epi kaga waiting.....
 
Top