8.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
மலர் கதிரை முறைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட தேவியை எண்ணச் சொன்னான்.அந்த இரண்டு பணிகளையும் இருவரும் செவ்வனே செய்ய... கதிர் மலருடைய டிபன் பாக்ஸை திறந்தவன் அதில் இருந்த சாம்பார் சாதத்தையும் பொறியலையும் எடுத்து ஒரு வாய் சாப்பிட்டவன் கண்களை மூடி "ம்ம்ம் நல்லா இருக்கு கலை,ஆனால் நீ பிரியாணி கொண்டு வருவேன்னு பார்த்தா இப்படி சிம்பிளா சாம்பார் சாதம் கொண்டு வந்திருக்க!" என்றதும் "சார் நீங்க சாப்பிடுவீங்கன்னு தெரிந்திருந்தால் பெரிய விருந்தே போட்டு இருக்கலாம்" என்றாள் மலர்.
மனதினுள் 'ஆமாம் என் சாப்பாட சாப்பிடுவேன்னு தெரிந்து இருந்தால் உப்பையும் காரத்தையும் மனதார போட்டு இருப்பேன்' என்று நினைத்தாள்.
'அப்படியா.... பரவாயில்லை உனக்கு ரொம்ப பெரிய மனசு தான் கலை அதனால என்ன நாளைக்கு மாமனுக்கு விருந்த வைச்சு மனசை படிச்சிடனும்" என்றதம்
"எ...ன்ன?" என்று இருவரும் கோராசாக கேட்க... "அ...தாவது .... இந்த சாருக்கு சாப்பாட்டை போட்டு வயிறையும் மனசையும் திருப்தி படுத்தனும்னு சொன்னேன்" என்று பேச்சை மாற்றி சாப்பிட ஆரம்பித்தான் தன்னை எண்ணி சிரித்தவாறே.
மலர் அவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே தோப்புக்கரணம் போட மனதினுள் 'ஐயோ பசிக்குதே என் சாப்பாட்டை எப்படி முழுங்குறான்னு பாரு ஐயோ ரொம்ப பசிக்குதே காலையிலிருந்து இவன் கூட சுத்தி ரொம்ப சோர்வாகிட்டேன் இதுல என்னை தோப்புக்கரணம் போட சொல்றான்'என்று எண்ணியபடி...
"சா...ர் சார் ... "என்றழைக்க... "ம்ம்ம்... என்ன?" என்று கண்களால் கேள்வி கேட்க...
"சார் ஐம்பது தடவை தோப்புக்கரணம் போட்டுட்டேன் சார் ப்ளீஸ் யாராவது வந்து பார்த்துட்டாங்கன்னா ரொம்ப அசிங்கமாயிடும் ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டுங்களேன்" என்றதும்
அவன் யோசிப்பது போல் பாவனைச் செய்ய ...
"ஏய் தேவி என்ன வாயை மூடிட்டு இருக்க சொல்லு நீயும் சொல்லு" என்று அவள் அதட்ட "சார் ரொம்ப பசிக்குது சார் பசங்ககிட்ட கத்திட்டு வந்தது வேற சார் ரொம்ப முடியலை,அதுவும் இல்லாமல் என் பிரெண்டு பசி தாங்க மாட்டாள் அதனால பெரிய மனசு பண்ணி விட்டுட்டீங்கன்னா நல்லா இருக்கும்" என்று தேவி கெஞ்ச...
அவளோ மனதினுள் 'ஐயோ ! ஐ..யோ! என் மைண்ட் வாய்ஸ்ஸ கேட்சப் பண்ணி பேசுது பாரு மத்த நேரத்துல சொன்னா புரியாது இப்போ மட்டும் கரெக்டா பேசுவா எனக்கு பசிக்குதுன்னு தெரிந்தால் இன்னும் லேட் பண்ணுவானே"என்று ம்ம்ம்... என முனகியவாறே தேவியை முறைக்க...
கதிர் "அப்படியா! சரி நீங்க சாப்பிடுங்க நான் பிறகு வரேன்' என்று தேவி பக்கம் திரும்பி "இன்றைக்கு உன்னாலே குரு தப்பிச்சுச்சு இல்லை அவ்வளவு தான்" என்று மிரட்டி விட்டு தண்ணீரை குடித்து விட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் வெளியே சென்று விட்டான் என்று தெரிந்ததும் "தேவி இவ்வளவு நேரம் உயிரை வாங்குனது பத்தாதுன்னு திரும்ப வந்து மிச்சம் இருக்கிற உயிரையும் அப்புறமா வந்து எடுக்கிறேன்னு சிம்பாளிக்கா சொல்லுறான் வந்த ஒரு நாள்ல என் பாதி உயிரு போச்சு இதுல தினமும் அவன் கூட வேலை செய்தால்.... கிழவியாகி செத்து போய்டுவேன் போல" என்று மலர் சொல்ல...
அதற்கு தேவி "அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது மலர் வா சாப்பிடலாம்" என்றழைக்க...
"தேவி எனக்கு ஒன்றும் வேண்டாம் கதிர் வைச்சுட்டு போன சாப்பாட்டை சாப்பிட சொல்லுறீயா? எனக்கு வேண்டாம்"என்று முகத்தை திருப்பிக் கொள்ள...
"சரி அந்த சாப்பாடு வேண்டாம்னா விடு நான் கொண்டு வந்த சாப்பாட்டை ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்" என்றாள்.
"வேண்டாம் தேவி நீ சாப்பிடு"
"இல்லை மலர் சொன்னா கேளு நீ சாப்பிடலைன்னா எனக்கும் வேண்டாம்" என்று தேவி தன் டிபன்பாக்ஸை மூடி வைக்க...
அதைக் கண்ட மலர் "வேண்டாம் தேவி நீயும் சாப்பிடு நானும் சாப்பிடுகிறேன்"என்று கதிர் மீதி வைத்த சாப்பாட்டை சாப்பிட துவங்கினாள் மலர்.
அவள் சாப்பிடுவதைப் பார்த்த தேவி "வேண்டாம்னு சொன்னே? "
"இல்லை தேவி அம்மா கஷ்டப்பட்டு செய்ததை தூக்கி போட மனசில்லை அதான்" என்று மலர் சொல்ல இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
அங்கு நடந்த அனைத்தையும் வெளியே செல்லாமல் கதவருகே ஓரமாக நின்றுக் கவனித்துக் கொண்டிருந்த கதிர் மனதினுள் "என்னவளின் பாதியாக போகிறவள் எப்படி தான் சாப்பிட்டதை மறுப்பாள் கண்டிப்பாக சாப்பிடுவாள் "என்று அவன் நினைத்த எண்ணம் ஈடேறியதை எண்ணி சிரித்தபடி சென்றான் கதிர்.
பள்ளி விடும் நேரம் வர வாயிலில் காத்திருந்த கதிர் மலர் வந்ததும் அவளைப் பார்த்து "தினமும் காலையில ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி தோப்புக்கரணம் போட்டு தான் வரனும் சரியா?" என்று சொல்ல...
"ஹ்ஹா முடியாது" என்க
"அப்..படின்னா நான்..."என்று அவன் இழுக்க "சரி சரி பண்றேன்" என்று அவனை பார்த்து தன் உதட்டை சுழித்துக் கொண்டு சென்றாள் மலர்.
தேவி மலரிடம் "என்ன பண்ண போற?மலரர் கதிர் உன்னை விடமாட்டாரு போல இருக்கு"
"அது அப்புறமா பார்த்துக்கலாம்" என்றவள் "நல்ல வசமா மாட்டிக்கிட்டேன்" என்றாள்.
மறுநாள் ... காலை ஸ்கூலுக்கு ரெடியாகி மலர் தன் வாசலுக்கு வெளியே வந்தவதும் எதிரே தனது குறுஞ்சிரிப்புடன் தரிசனம் தந்தான் கதிர்.
அவனைக் கண்டதும் 'இன்னைக்கு இவன் முகத்திலயா முழித்தேன் இன்னைக்கு புல்லா இவனுக்கு சேவகம் செய்தே ஒழிந்தேன் என்ன விதியோ?' என்று நொந்தவள் அவனை பார்த்து சிறு புன்னகை சிந்தினாள்.அவனோ கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு சுவற்றில் லேசாக சாய்ந்த படி நிற்க அவளுக்கு புரிந்து விட்டது அவன் எதற்காக காத்திருக்கிறான் என்று வானத்தை பார்த்து "கடவுளே" என்று கும்பிடு போட்டவள் தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கும் பொழுது அங்கே வந்த சுந்தரி அவள் நின்றிருந்த நிலைமையைக் கண்டு...
"மலரு என்னடி நீ இது வாசல்ல நின்னு வானத்தை பார்த்து தோப்புக்கரணம் போடுற?" என்று கேட்க...
"அதுவா சித்தி? இதுவும் ஒரு உடற்பயிற்சி தான் சித்தி இப்ப இது தான் டிரெண்ட் சித்தி இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரிய போகுது? "என்று பேசிக் கொண்டே தோப்புக்கரணம் போட கதிர் ம்ம்ம் என்று தலையை ஆட்டி விட்டு அவன் செல்ல...
அங்கே வந்த தேவி "என்ன மலரு? முடிந்ததா?" என்று கேட்க...
"ம்ம்ம் "என்று தலையசைத்தவள் "சித்தி இத நீங்களும் செய்து பாருங்க நூறு ஆயுசு வாழலாம் பை" என்று சொல்ல... சுந்தரி சித்தி உண்மையா இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.
வண்டியில் அமர்ந்தவள் தேவியிடம்"தேவி எத்தனை நாளா இது நடக்கும்னு தெரியலை பார்ப்போம்" என்று வண்டியில் ஏறி பள்ளிக்கு சென்றாள்.
அன்று மதியஇடைவேளை நேரத்தில் அவனுடைய அறைக்கு சென்றவள் "சார் சாப்பாடு உங்களுக்கு தனியாகவே எடுத்துட்டு வந்துட்டேன்" என்று நீட்ட...கதிர் அவளை சந்தேகத்தோடு பார்க்க... 'இல்லை சார் சாப்பாட்டுல
ஒன்னுமே கலக்கல" என்று சொல்ல...
அவனோ சிரித்தப்படி "நான் கேட்கவே இல்லை நீயே சொல்ற அப்போ என்னவோ கலந்து இருக்குற நான் இனிமேல் சாப்பிடவே கூடாது" என்று எழுந்து அவளருகே வர அவளோ அவனை பார்த்து கண்களை உருட்டி "இல்லை" என்று தலையாட்ட "நான் எப்படி நம்புவது"என்று கேட்க...
"இப்போ என்ன? நீங்க நம்பலை அதானே பிரச்சினை நானே சாப்பிடுறேன் பாருங்க" என்று டிபனை திறந்து ஒருவாய் சாப்பிட்டாள் மலர்.
"பாருங்க சார் நானே சாப்பிட்டேன் ஒன்னும் ஆகலை இப்போ நீங்க தைரியமா சாப்பிடலாம் "என்றாள்.
"ம்ம்ம் அதெல்லாம் நம்ம முடியாது எனக்கு ஒரு வாய் ஊட்டி விடு"என்று சொல்ல...
"என்ன?" என்று தன் கண்கள் விரிய பார்த்தவள் "நீங்க சாப்பிடவே வேண்டாம்"" என்று டிபனை டேபிள் மேல் வைத்து விட்டு திரும்ப அவனோ அவளிடம் "இங்கேயே உன்னை அவ்வளவு சாப்பாட்டையும் மூச்சு விடாம சாப்பிட வைக்கட்டுமா?" என்று கேட்க.."என்னால முடியாது"என்று வேகமாக அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
அவளுடைய உறுதியை நினைத்து சிரித்தவன் அவள் வைத்த சாப்பாட்டை எடுத்து முழுதாக சாப்பிட்டு முடித்தான்.தேவியிடம் சென்று "கதிர் பண்ணுறது எனக்கு சரியாக படலை "என்று நடந்ததை சொன்னவளுக்கு தேவி அவளிடம் "யாரையும் தப்பாக எண்ணாதே!" என்று அவளுக்கு அறிவுரை தந்தாள் தேவி.
"நீ சொன்னா கரெக்டா இருக்கும்" என்று சொன்னாள் மலர் .அப்பொழுது இடைவேளை முடியும் நேரத்தில் வந்தான் கதிர்.அவனைக் கண்டு முகத்தை மலர் முகத்தை திருப்பிக் கொள்ள டிபனை தேவியிடம் கொடுத்தவன் "சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு தாங்க்ஸ்" என்று சொன்னவன் "தினமும் இதே மாதிரி எடுத்து வரச்சொல்லு அதற்காக ஒரு சின்ன சலுகை இனிமேல் தோப்புக்கரணம் போட சொல்ல மாட்டேன்.நாம இனிமேல் பிரெண்ட்ஸ்" என்று சொல்ல அவளிடம் பதில் இல்லை.
தேவி "ஓகே சார் நாம எல்லோரும் ஒன்னா வொர்க் பண்ணுறோம் இனிமேல் நாம நல்ல நண்பர்களாக இருக்கலாம்" என்று சொல்ல...
"நீ சொல்ற தேவி ஆனா உங்க பிரெண்ட் சொல்ல மாட்டேங்குறாங்க "என்றான் கதிர்.
"நான் சொன்னால் என் மலரும் சொன்ன மாதிரி தான் என்ன நான் சொல்றது" என்று அவளிடம் கேட்க மலர் "ம்ம்ம்" என்று பதில் தந்தாள்.கதிர் எப்போதும் அதே புன்னகையோடு செல்ல திரும்பி இருந்தவள் தேவி "ஏய்..... தப்பிச்சேன் "என்று கத்த தேவி "இவ்வளவு நேரமா ரொம்ப கோபமா இருக்கேன்னு நினைச்சேன் "
"நானாவது கோபப்படுவதாவது எங்கே மனசு மாத்திடப்போறான்னு நினைத்தேன்" என்று சொல்ல அவனோ அதை கேட்டு விட்டு சென்றான்.
நாட்கள் செல்ல கதிரும், மலரும் நல்ல நண்பர்களாக மாறத் துவங்கினர்.இடையில் அவள் செய்யும் குறும்புதனத்தை ரசிக்கவும் தவறுவதில்லை.பள்ளியில் மலர் சில வகுப்பு செல்லாத மாணவர்கள் தன்னை வாழ்த்தாமல் சென்றால் அவர்களை பிடித்து "ஏய் பசங்களாக மிஸ்க்கு ஒழுங்கா விஷ் பண்ணுங்க" என்று கிடைக்காத மரியாதை தானே வாங்கி கொள்வதில் அவளுக்கு வழக்கமான ஒன்றானது.
அதைக் கண்ட கதிர் ஒருநாள் வெளியே வழியில் மலரை எதிரே சந்திக்கும் போது குட் மார்னிங் மிஸ் "என்று சொல்ல...
இவளோ பசங்க தான் சொல்றாங்க என்று முன்னே செல்ல யோசித்து திரும்பி பார்க்க... அவன் சிரித்துக் கொண்டு நிற்க "என்ன சார் நீங்க? "என்று கேட்க இல்லை "பசங்களை மிரட்டுற அதான் எனக்கும் சேர்த்தோ என்று நினைச்சேன்" என்று சொல்ல...'''போங்க சார் பழைய படி கிண்டல் பண்ணுறீங்க "என்று சொல்ல "இல்லை நான் சும்மா தான் சொன்னேன் என்று சொன்னவன் இப்பொழுது தான் நம்ம ரெண்டு பேருக்கு உள்ள நல்ல புரிதல் இருக்கே நீ என்னை கதிர் என்று சொல்லேன்" என்று கேட்க... அவளோ யோசித்து விட்டு'' டான்னு சொல்லவா ''என்று விளையாட்டாக கேட்டாள் மலர்.
(தொடரும்)