கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!- அத்தியாயம்-2

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-2

இராமேஸ்வரத்துக்குப் போய் வந்த மாதத்திலேயே மாலினி கர்ப்பமாக இருப்பது தெரியவர, முத்துராக்கம்மாள் தென்திசை நோக்கி இருகைகளையும் தூக்கி,

"அப்பா இராமநாதா, கேட்டவரம் கொடுத்துட்ட... ரொம்ப நன்றியப்பா… நல்லபடியா குழந்தை பிறக்கட்டும்... குழந்தை பிறந்தபிறகு உன் கோயிலுக்குக் கூட்டிட்டு வர்றேன்." என்று அடுத்த கோரிக்கையை வைத்தவரைப் பார்த்து சிரித்தார் அவரது கணவரான சுப்பையாபிள்ளை.

"ஏன் சிரிக்கிறீங்க?" என்ற முத்துராக்கம்மாவிடம்,

"பின்னே என்ன? செல்வராஜுக்குக் கல்யாணம் ஆனவுடனே கோயிலுக்குக் கூட்டிட்டு போய், பிள்ளை வேணும்னு கேட்ட, இப்ப நல்லபடியா குழந்தை பிறந்தா கோயிலுக்குக் கூட்டிட்டு வர்றேன்னு சொல்ற… ஹஹ்ஹஹ்ஹா உனக்கு அந்தக் கோயிலுக்குப் போகனும்னு தோணுச்சுன்னா தாராளமா போயிட்டு வாயேன்… அதற்கெதற்கு அடுத்தடுத்து வேண்டுதல் வைக்கிற… ஹஹ்ஹ்ஹா"

"சாமி விஷயத்துல இந்த மாதிரி பேசாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்" என்று மிகவும் பாந்தமான குரலில் கண்டிப்பை மறைத்துக் கூறினார் முத்துராக்கம்மாள்.

"நான் ஒன்னும் சாமிய கிண்டல் பண்ணல... உன்னைதான் கிண்டல் பண்றேன். இது கூடப் புரியாம ஹஹ்ஹஹ்ஹா"
'இவருக்குப் பொழுது போகல... எனக்கு நிறைய வேலை கிடக்கு, நான் போறேன்…" என்று முணுமுணுத்தபடி சமையலறையை நோக்கி நடந்தார்.

மாலினி கர்ப்பமாக இருக்கிறாள் என்று மருத்துவர் கூறிய
நிமிடத்திலிருந்து அவள் குடும்பத்தினர் மாலினியை தலைமேல் வைத்துத்தான் தாங்கவில்லை…

தூக்கம் கலைந்து வழக்கம்போல் தன்னருகில் உறங்கும்
செல்வராஜைப் பார்த்த மாலினி, படுக்கையில் செல்வராஜைக் காணாததும் வாரிச் சுருட்டி எழுந்தாள்.

"அத்தான்!" என்று அறைக்கு வெளியே கேட்காத குரலில் அழைத்துப்
பார்த்தவள், ஐன்னல் வழியாகச் சூரியக் கதிர்கள் அறைக்குள் வந்துவிட்டதைக் கவனித்து,

'விடிந்து ரொம்ப நேரமாச்சு போலிருக்கே? விடியுறதுக்குள்ள
வாசல்ல கோலம் போடனும்னு அத்தை சொல்வாங்களே!" என்று எண்ணியபடியே அவிழ்ந்த கூந்தலை கொண்டையிட்டு முடிந்தவாறே, வாசல் பெருக்கும் விளக்குமாறு எடுக்க, அடுப்படியைத் தாண்டிச் சென்றாள்.

"எழுந்திருச்சிட்டியா மாலினி? வா சூடா பால் குடி!" என்று
செல்வராஜின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

அடுப்படியில் முத்துராக்கம்மாள் தோசை வார்த்துத்தர சாப்பிட்டுக்
கொண்டிருந்தான் செல்வராஜ்.

"அச்சச்சோ ஸ்கூலுக்குப் போக லேட்டாயிடுச்சோ? என்னை எழுப்பி
விட்டு இருக்கலாமே?" என்று கேட்டபடி வேகமாக முகத்தையும் கைகளையும் அலம்பிக்கொண்டு சமையலறைக்குள் வந்தாள் மாலினி.

"அவன் சாப்பிட்டுட்டான்... நீ போய்ப் பல்லு விளக்கிக் குளிச்சிட்டு
வா. சாப்பிடலாம்!" என்று புன்னகை ததும்பக் கூறினார் முத்துராக்கம்மாள்.

"பாரவாயில்ல அத்தை! நான் இவருக்குத் தோசை சுட்டுத் தாரேன்."
என்ற மாலினியிடம்,

"கடிகாரத்த பாரு! மணி ஏழாகுது வயித்துப்பிள்ளக்காரி வெறும்
வயித்தோட இருக்கக் கூடாது. போ! போய்ப் பல் விளக்கிட்டு வா!" என்றதும் இதுநாள்வரை மாமியாரிடம் பதில் பேசியறியாத மாலினி, வீட்டின் பின்பக்கமிருந்த கொள்ளைப்புறத்திற்குச் சென்றாள்.

செல்வராஜை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, காலை உணவு முடிந்ததும்,
மதிய உணவு தயாரிக்கத் தேவையான காய்கறிகளை ஒரு முறத்திலும், காய்கறி கட் பண்ணும் பலகையையும் எடுத்துக் கொண்டு டைனிங்டேபிளில் அமர்ந்தாள்.

"நான் சமச்சுக்கிறேன். உனக்கு இனி சமைக்கிற வாடை பிடிக்காது
வாந்தி வரும்… ஊடமாட வேலைக்குச் சுசீலாவ வரச்சொல்லிருக்கேன். இப்ப வந்துடுவா… நீ போய் வேற எதாவது செய்!" என்று முத்துராக்கம்மாள் அனுப்பிவிட,

'என்ன செய்வது?' என்று யோசித்தபடியே சமையலறைக்கு
சென்றாள்…

நிஜமாகவே வயிற்றைப் புரட்டியதா? அல்லது முத்துராக்கம்மாள்
சொன்னதால் அப்படித் தோன்றியதோ தெரியவில்லை… மாலினி சமையலறக்குள் சென்றதுமே வயிறு புரட்டிக் கொண்டு வந்தது…

'அடுப்படி சுத்தமில்லாம இருக்கிறதாலதான் இப்படிப் பண்ணுதோ'
என்று எண்ணிய மாலினி, கூட்டித்தள்ளுவதற்காக விளக்குமாறு எடுத்துக்கொண்டு செல்ல,

"வீடு பெருக்கவும், பாத்திரம் கழுவுறதுக்கும்தான் வேணி
இருக்காளே நீ போய் ஏதாவது டீவில பாரு!" என்று விளக்குமாறை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தார்.

"ஏதாவது வேலை பண்றேன் அத்தை… சும்மா இருந்தா எனக்கு
ரொம்பப் போர் அடிக்கும்!"

"டீவி பாரு. இல்ல, கதை புத்தகத்த படி… நீ இப்ப பிள்ளதாச்சி, ஏழு
மாசம் ஆகுற வரை பொத்துனாப்புல இருந்துக்க… ஏழு மாசம் முடிஞ்சுட்டா குனிஞ்சு நிமிர்ந்து சின்னச் சின்ன வேலை பார்த்துக்கலாம்…" என்று கூறிவிட்டு முத்துராக்கம்மாள் சமையலறையை நோக்கிச் செல்லவும்,

பிரபல கிரைம் எழுத்தாளரின் கதை புத்தகத்தை எடுத்துக்
கொண்டு, மாலினி ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தாள்.

இரண்டு பக்கம்கூட வாசித்திருக்கமாட்டாள். தனது அறையில்
இருந்து வெளிவந்த சுப்பையாபிள்ளை, மாலினி உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தற்செயலாக, அது என்ன புத்தகம்? என்று கவனித்தவர், புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்த்துவிட்டு, மாலினியின் அருகில் சென்று,

"அம்மா நீ இப்போது ஒரு உயிர் இல்லை. இரண்டு உயிர். அதுமட்டுமில்ல, இப்போ நீ என்னமாதிரி விசயத்தக் கேட்கிறியோ அததான் குழந்தையும் கேட்கும். நீ பார்க்கிறதைத்தான் அதுவும் உணரும். நீ படிப்பதை, உன் குழந்தையும் புரிந்து கொள்ளும். அதனால முடிஞ்சவரை குழந்தை பிறக்கும் வரைக்கும், இந்த மாதிரி புத்தகமெல்லாம் படிக்கவேண்டாம்மா... அதுக்காகக் கம்ப ராமாயணம், மகாபாரதம்னு படிக்கச் சொல்லல. அத படிச்சா நல்லது. ரொம்ப நல்லது. ஆனாலும் முடிஞ்சவரைக்கும் நல்ல புத்தகங்கள் நல்ல கருத்துள்ள சினிமா… சுருக்கமா சொன்னா நேர்மறை சிந்தனையுள்ள விஷயங்களை மட்டுமே பாரு... நீயும் சந்தோசமா இரு... அப்பத்தான் பிள்ளையும் சந்தோஷமா இருக்கும்…" என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட,

சிறிது நேரம் புத்தகத்தை மூடி விட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தாள். பிறகு டிவியை ஆன் செய்தாள்.

டீவியில் 'தசாவதாரம்' என்ற பக்திபடம் ஓடிக்கொண்டிருக்க,
இயல்பிலேயே கடவுள் பக்தி உள்ள மாலினிக்கு, சுப்பையா பிள்ளை சொன்ன விசயங்களும் சேர்ந்து, 'பக்தி படமே பார்ப்போம்!" என்று முடிவுக்கு வந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

ராமாவதாரம் திரையில் ஓடி முடிந்து, கிருஷ்ணாவதாரம்
வந்ததுமே மாலினிக்கு மீண்டும் வயிறு புரட்டிக் கொண்டு வந்தது… ஒரு கட்டத்துக்குமேல் படம் பார்க்க முடியாத அளவிற்கு வயிறு புரட்ட, டீவியை அணைத்துவிட்டுக் கொள்ளைப்புரத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராக்கம்மாள் தனக்குத்
தெரிந்த நல்ல கதைகளைக் கூறினார்...

மாலினிக்கு கரு உருவாகி ஏழு மாதங்கள் ஆனதும் அவளுடைய
பெற்றோர் மாலினியின் வீட்டிற்கு வந்து, உற்றார் உறவினரை அழைத்து வைளைகாப்பு வைபவம் நடத்தினர்.

வளைகாப்பு முடிந்ததும் மதுரைக்கு மாலினியை அழைத்துச்
சென்றுவிடுவார்களே! என்று செல்வராஜுக்கும் முத்துராக்கம்மாளுக்கும் வருத்தமாக இருந்தாலும் வளைகாப்பை சிறப்பாக நடத்தினர்.

வளைகாப்பு முடிந்ததும் மதுரைக்குச் செல்ல மாலினிக்கு சிறிதும் விருப்பமில்லை. படுக்கை அறைக்குள் சென்று, சுருண்டு படுத்துக் கொண்டாள்.

மாலினிக்கு மதுரை செல்லப் பிரியமில்லை எனத்தெரிந்ததும் மாலினியின் அம்மாவிற்கு முகம் சுருங்கிவிட்டது. அதைக் கவனித்துவிட்ட முத்துராக்கம்மாள் செல்வராஜை அழைத்து,

“மாலினியை எப்படியாவது சமாதானம் பண்ணி, அவ பெத்தவங்களொட மதுரைக்கு அனுப்பி வை ய்யா.” என்று கூறி மகனை மருமகளிடம் அனுப்பினார்.

விருப்பம் இல்லாமல் மாலினி மதுரை சென்று ஒரு மாதமாகியது. ஒவ்வொரு நிமிசமும் மாலினியின் பெற்றொர்களிடமிருந்து வரப்பொகும் நல்லசெய்திக்காகக் காத்திருந்தன மூன்று இதயங்கள்.

மாலினிக்கு பிரசவவலி வந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாலினியுடைய பெற்றோர். சுப்பையா பிள்ளை, முத்துராக்கு, செல்வராஜ் மூவருக்கும் தகவல் அனுப்பினார்கள்.

தகவல் அறிந்து மூவரும் மருத்துவமனைக்குச் சென்றனர். காலையில் அனுமதிக்கப்பட்டு மாலைவரை அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லோருக்கும் ஆண் குழந்தையே பிறந்தது.

அதைப் பார்த்த முத்துராக்ம்மாள், சுப்பையாபிள்ளையிடம்,

"அப்போ நமக்கும் பேரன்தான் பிறக்கப்போகிறான் போலங்க…" என்று சற்றே வருத்தமாகக் கூற,

"இருக்கலாம்…" என்றார்.

"நமக்குதான் பொம்பளப்பிள்ளை பிறக்கல… பேத்தியாவது பிறந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்... ம்ஹும் என்ன செய்ய? எனக்குக் குடுத்துவைக்கல…" என்று புலம்பும் முத்துராக்கம்மாளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் சுப்பையாபிள்ளை.

அவருக்குமே பேத்தி பிறந்தால் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று ஒரு கற்பனை இருந்தது. ஆனால் ஏமாற்றத்தை வெளியே காட்டாமல் அமைதியாக இருந்தார் சுப்பையாபிள்ளை.

மாலினிக்கும் ஆண்குழந்தை தான் பிறக்கப்போகிறது என்று எல்லோரும் நம்பியநேரத்தில்,

அடுத்தப் படுக்கையில் இருந்த பெண்ணுக்கும் ஆண் குழந்தை
பிறந்ததாக அக்குடும்பபத்தினர் குதூகலித்தனர்…

இரவு பத்துமணியைக் கடந்தும் மாலினிக்கு தொடர்ந்து
வலியெடுக்காமல் விட்டுவிட்டு வலிக்கவே,

"குழந்தை நாளைக்குத்தான் பிறக்கும் போல அத்தாச்சி! நீங்க
மூணுபேரும் வீட்டுக்குக் கிளம்புங்க…" என்று தயங்கந்துடன் மாலினியின் அம்மா, முத்துராக்கம்மாவிடம் கூறினார்.

"இன்னும் ஒரு மணிநேரம் பார்ப்போம்" என்று விட்டிற்குச் செல்ல
மனமில்லாமல் முத்துராக்கம்மாள் கூறினார்.

மாலினிக்குப் பிறகு இடுப்புவலி எடுத்து வந்த
பெண்களுக்கெல்லாம் குழந்தை பிறந்துவிட, இரவு ஆகியும் தனக்குத் தொடர்ந்து வலியெடுக்காமல் விட்டு விட்டு வலி எடுத்ததால் மாலினிக்கு பயம் வந்து அருகில் அமர்ந்திருந்த செல்வராஜின் கையைப் பிடித்தாள்.

மாலினியின் பயத்தை உணர்ந்த செல்வராஜ், இதமான புன்னகை சிந்தி, “பயப்பாஅதே நான் உன் அருகிலேயே தானே இருக்கிறேன்.” என்று கூறிவிட்டு, அவளதுகவனத்தைத் திருப்புவதற்காக, தன்னுடைய பாக்கெட் ரேடியோவை ஆன் செய்து மாலினிக்கு மட்டும் கேட்கும்வகையில் ஒலிஅளவைக் குறைத்து, மாலினியின் காதருகே செல்வராஜ் பிடித்துக் கொள்ள அதில்,

"கண்ணன் ஒரு கைக்குழந்தை…
கண்கள் சொல்லும் பூங்கவிதை…

என்ற பாடல், பாடி முடித்ததும்,

"சின்னக்கண்ணன் அழைக்கிறான்…
ராதையைப் பூங்கோதையை
அவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்..."

என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்ததுமே வயிற்றில் இருந்த குழந்தை
ஓங்கி ஒரு உதைவிட்டது. அப்பொழுது ஆரம்பித்த இடுப்புவலி தொடர்ந்து எடுக்க, பாடலின் பல்லவி முடிந்த சமயத்திலேயே மாலினியை லேபர்வார்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

பிரசவஅறைக்கு அழைத்துச் சென்ற அரைமணிநேரத்தில் குழந்தையின் அழுகுரல் தேனினும் இனிமையாக அனைவரின் காதில் விழுந்தது.

அதுவரை, `ஆண்குழந்தை தான் பிறக்கப்போகிறது!` என்ற வருத்தத்தில் இருந்தவர்களும் சந்தோஷசத்தில் எழுந்து பிரசவஅறையின் வாசலையே பார்த்திருக்க, சிறிதுநேரத்தில் நர்ஸ் ஒரு பூக்குவியலை கொண்டு வந்து முத்துராக்கம்மாளின் கரங்களில் கொடுத்தார்.

தங்கள் குல தெய்வத்துக்கும், இராமேஸ்வரத்து இராமனாதருக்கும் நன்றி கூறி, கண்களில் கண்ணீர் பெருக குழந்தையை வாங்கிய முத்துராக்கம்மாளிடம்,

"பார்த்தீர்களாம்மா! உங்க வார்டு முழுதும் இன்னைக்குப் பையன் தான் பொறந்தாங்க… ஆனா பாருங்க உங்களுக்குப் பேத்தி பிறந்திருக்கிறாள்!" என்று நர்ஸ் சிரித்தபடி சொன்னதுதான் தாமதம்,

“என்னது பேத்தியா?!!" என்று ஆனந்த அதிர்ச்சியில் கையிலிருந்த குழந்தையை முத்துராக்கம்மாள் பார்த்தார்.

நல்ல மாநிறத்தில், தலைகொள்ளா முடியும், சிறு பிறை நெற்றியும், எள்ளுப்பூ போன்ற சிறு நாசியும், சிரிப்பது போன்ற மலர்ந்த இதழ்களும், பிஞ்சுக் கை, கால்களுமாகப் பெண்குழந்தை அனைவர் மனதையும் கொள்ளை கொண்டது.

குழந்தை, யார் முகத்தையும் குறிப்பாகப் பார்க்காவிட்டாலும், கண்களும் முகமும் மலர்ந்து சிரிப்பதைப் போன்ற முக அமைப்பைப் பார்த்த சுப்பையாபிள்ளை,

"குழந்தை எப்போதும் சிரித்தமுகமாய் இருப்பாள்!" என்று ஆருடம் கூறினார்.

அவருக்குத் தன் பேத்தியைப் பார்க்கப் பார்க்கத் தன் வாழ்நாளில்
தனக்குக் கிடைத்த அமிர்தமாகத் தோன்றியது… பிறந்த குழந்தையைத் தூக்க சுப்பையாபிள்ளைக்கு ஆசையாக இருந்தாலும், அந்தப் பிஞ்சு மனுஷியை சரியான முறையில் தூக்கிவிட முடியுமா? என்ற தயக்கத்தில், தன் மனைவி கையில் இருந்த குழந்தையின் பட்டுக்கரத்தைத் தொட்டார். அவர் கை பட்டதும் குழந்தை சட்டென்று தாத்தாவின் விரலை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

அதைப் பார்த்த முத்துராக்கம்மாவிற்கு, 'தனக்குப் பெண்குழந்தை பிறக்காத குறையைத்தீர்க்க வந்த தேவதையாகத் தெரிந்தாள் குழந்தை.'

குழந்தை தன் தாத்தாவின் விரலைப் பிடித்த நொடியில் இராமேஸ்வரத்திற்கு சென்றபொழுது செல்வராஜனையும், மாலினியையும் ஆசீர்வாதம் செய்த சிவனடியார் எழுந்து ராமநாதர் சன்னதிக்கு விரைந்தார்.

"அய்யனே குழந்தை பிறந்துவிட்டாள்…" என்றதும் இராமநாதர் ஒளிமயமாகி,

"சிவராமா! நீ உடனடியாக மதுரை சென்று, குழந்தையை ஆசீர்வதித்து, மீனாட்சியம்மனின் பெயரையும், நடராஜரின் பெயரையும் இணைக்கும் "மீரஜா" என்று நாமம் வைக்கச்சொல்! பின் அங்கிருந்து திருவண்ணாமலை சென்று விடு…

சில காலம் கழித்து மீரஜா திவண்ணாமலைக்கு வருவாள்.
அப்பொழுது நீ அவளுக்குத் தரிசனம் கொடு. அதோடு அவளுடைய நாயகன் யார் என்பதனையும் தெரியப்படுத்து. போய் வா!" என்று அசிரீரி ஒலிக்க, கண்கலங்கி ராமநாதரின் பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தவர், சன்னதியைவிட்டு வெளியேறி, சேது மாதவன் சன்னதி தாண்டிச் செல்லுகையில்,

"நில் சிவராமா!" என்று குரல் வந்ததும், தன்னை அழைத்த சேதுமாதவனைக் கண்ட சிவனடியார் சிவராமன்,

“மாதவா!” என்று பக்திப் பெருக்குடன் சிவனையார் வணங்கினார்.

“என்னைக்கூட கவனிக்காமல் அப்படியெங்கே அவசரமாக செல்கிறாய்?”

"மாதவா! புன்னைவனத்தில் இருக்கும் செல்வராஜுக்குப் பெண் குழந்தை பிறந்து விட்டது… சர்வேஸ்வரினின் ஆணைப்படி பெயர் சூட்டச் செல்கின்றேன்." என்றதும்,

"அவளது நாமம் மீரா வா சிவராமா?" என்று புன்னகை ததும்ப மாதவன் கேட்ட நொடியில்,

"மாதவா! அவள் எனது மீரா!" என்று குடைவரையிலிருந்து குரல் வந்தது.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1201

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼


 

Jenitha d krish

Well-known member
அருமையான எபி.. சூப்பர்.. மாலினிக்கு குழந்தை பொறந்துடுச்சு.. அதுக்கு முன்னாடி பேமிலி அவளை கவனிசிகிட்டது செம கியூட்.. மீரஜாவா பேரே செமையா இருக்குது.. அது யாருப்பா.. மீராவுக்கு சொந்தம் கொண்டாடுறது
 

Chitra Balaji

Well-known member
Oooooooo ithu enna rendu சாமி yum இப்படி adichikiraanga அந்த kutty மீரா வுக்காக..... பெண் kuzhanthai puranthudicha avangaluku.... Avanga ethir paaththaa மாறியே பெத்தி தான் piranthu இருக்கு... அந்த kuzhanthai பிறப்பு ரகசியம் என்ன. ........ Super Super maa. Semma semma episode
 

Shailaputri R

Well-known member
மீராஜா அழகான பெயர்.. நீங்க ரெண்டு பேரும் சாமி தனா அப்பறம் ஏன் இப்போ பிறந்த குழந்தைக்கு சண்ட போடுறீங்க.. அவ வளர்ந்து ஆளாகட்டுமே.. இப்போவே மச்சான் சண்டைய ஆரம்பிக்காதிங்க
 
Top