கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-20

aas2022-writer

Well-known member

AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-20

"என்ன மீரா நிஜமாவே என்னை மறந்துட்டியா?" என்று நந்தன் சற்று வருத்தத்துடன் கேட்க,

"நீ… நீ… எப்படி?" என்று மீரஜா திக்கவும்,

"நான் யார்னு தெரியலையா?"

"இல்லல்ல… நந்தன். எப்ப இங்க வந்த?"

"நான் இங்கதான் இருக்கேன்…”

“அப்படியா? நான் பார்க்கவே இல்லையே?”


“என்னைய எங்க பார்த்த? நீ அமிர்தாக்கா கூட வருவியா… அதனால உங்கிட்ட வராம, தினமும் உன்னைத் தூரத்துலருந்து பார்ப்பேன்… கொஞ்ச தூரம் கேப் விட்டுப் பின்தொடர்ந்து வருவேன்… அப்புறம் திரும்பிப் போயிடுவேன்…" என்ற நந்தனை புருவங்கள் நெறிபடப் பார்த்து,

"சும்மா சொல்லாத… நாலு வருசமாச்சு நாம பார்த்து… நாலு வருசமாவா தினமும் வந்த?"

"நம்பினா நம்பு… இல்லைனா…" என்று நந்தன் பேசும்போதே,

"சரி வா மீரா… ஸ்கூல்ல ப்ரேயர் ஆரம்பிச்சுடும்… கேட் ஐ பூட்டித் தொலைச்சுடப் போறாங்க…" என்று மீரஜாவின் கையை டாலி செல்சியா பிடிக்க,

'இத்தன வருசங் கழிச்சு இன்னைக்குத்தான் இவனப் பார்க்கவே முடிஞ்சிருக்கு… நாளைக்குப் பார்த்தாலும் பேச முடியுமா? இப்ப என்ன பண்றது?' என்று தயங்கிய மீரஜாவிற்கு ஒரு யோசனை எழ,

"எங்க கூட இப்போ, ஸ்கூல் இருக்கிற சந்து வரை, வர்றியா?…" என்று நந்தனிடம் கேட்டாள்.

மீரஜாவிற்கும் தன்னைப் பிரிய இஷ்டமில்லாதது புரிந்த நந்தன், "சரி" என்று தலையாட்டினான்.

"நம்ம கூட இவன் வர்றதை யாராவது பார்த்தா தப்பாயிடும் மீரா." என்று டாலி செல்சியா தயங்கவே,

"என்ன தப்பாகும்?" என்று கேட்டாள் மீரஜா.

'இந்தப் பையனை வச்சுக்கிட்டு, இவளுக்கு எப்படிப் புரியவைக்கிறது?' என்று யோசித்த டாலி செல்சியா, நந்தனிடம்,

"நீங்க, மீரா வீட்டுக்குப் போங்க… சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்துடுவா." என்றாள்.

"அது எனக்கும் தெரியும் டோலி..."

"டோலி இல்ல டாலி?"

"நான் தோழின்னு சொன்னேன்."

"தோழிய இப்படிதான் சொல்வாங்களா?"

"வேற எப்டி சொல்றது?" என்ற நந்தனை முறைத்து விட்டு, 'இவனுடன் வழக்காட நேரமில்லை' என்று நினைத்த டாலி செல்சியா,

"மீரா நாம இவனோடு சேர்ந்து நடக்கிறது சரியில்ல…" என்று மீரஜாவிடம் கூறினாள்.

"உனக்கு என் கூடப் பேசப் பிடிக்கலையா டோலி?" என்று கண்களில் பாசக் கொடியைப் பறக்க விட்டபடி கேட்டான் நந்தன்.

"இப்ப அதில்ல விசயம்" என்று இழுத்த டாலி செல்சியாவிடம்,

"அப்போ கவலப்படாம வா… யாராவது கேட்டா நான் சமாளிக்கிறேன்." என்றான் நந்தன்.

"எப்படி?" என்று டாலி செல்சியா தான் நின்ற இடத்திலிருந்து நகராமல் கேட்க,

"முதல்ல யாராவது வந்து கேட்கட்டுமே டொலி…" என்று சிரித்தான்.

"ஐய்யே! நீ முதல்ல இந்த டோலி ய விடு… டாலின்னே கூப்பிடு."

"டாலி?!!!… நான் வேணும்னா உன்னை ராதான்னு கூப்பிடவா?"

"ரா...தா வா? நீ என் பேர ஒழுங்காவே சொல்ல மாட்டியா?"

"இதுதான் உன் பேரு டோலி."

"ஆமா எங்க தாத்தா இவரு… பேர் வைக்க வந்துட்டாரு."

"இது நான், உனக்கு வச்ச பேர் இல்ல டோலி… உங்க அப்பா, அம்மா வச்ச பேரு…"

"அடேங்கப்பா… என் பேரு எனக்கேத் தெரியாது பாரு."

"நீ போய் உங்கம்மாட்ட கேளு டோலி… ‘இல்லை’ன்னு சொன்னாங்கன்னா, நீ என்ன கேட்டாலும் நான் வாங்கித் தாரேன்… ‘ஆமா’ன்னு சொல்லிட்டாங்கன்னா, நான் கேட்கிறத நீ வாங்கித் தரனும். சரியா?" என்று குறுநகை நகையுடன் வினவிய நந்தனிடம்,

"நாளைக்கு வரும்போது உங்கப்பாவோட பர்ஸையே அடிச்சுட்டு வந்துடு தம்பி…" என்று சிரித்தாள் டாலி செல்சியா.

"அத நீ செய் டோலி! எனக்குத் தேவையிருக்காது." என்று நந்தன் சிரிக்க,

'இவர்களை எப்படிச் சமாளிப்பது? ஸ்கூலுக்கு வேற நேரமாச்சு… இங்கேயே நின்னுகிட்டு ரெண்டும் பேச்ச நிறுத்த மாட்டேங்குதுகளே?' என்று அதுவரை நந்தனும், டாலியும் பேசுவதைக் கவனித்த மீரஜா,

"உனக்கு ஏதாவது வேணும்னா எங்கிட்டயே கேட்கலாம் நந்தா…" என்றதும், மீரஜாவைப் பார்த்து அன்பு பொங்கச் சிரித்தவன்,

"நிஜமா?"

"ம்ம்"

"தேவைப்படும்போது கேட்கிறேன்."

"ஏன் இப்ப எதுவும் தேவையில்லையோ?" என்ற டாலி செல்சியாவைக் கண்களால் காட்டி,

"இந்த வாயாடியை எப்டி சமாளிக்கிற மீரா."

"ஏன் உனக்கு மட்டும்தான் காதுவர வாய் நீளனுமா?" என்று டாலி செல்சியாவும்,

"உன்கிட்ட நான் அப்டி சொல்வேனா?" என்று நந்தனும், மீண்டும் ஆரம்பிக்கவும்,

தவையில் கைவைத்துக்கொண்டு, அருகிலிருந்த திண்டில் அமர்ந்துவிட்டாள் மீரஜா.

அதைப் பார்த்ததும், பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவனாய், "நடந்துகிட்டே பேசுவோமே?" என்று நந்தன் பொதுவாகக் கூற,

"வா மீரா!" என்று கூறியபடி நடக்க ஆரம்பித்தவர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டான் நந்தன்.

விளையாட்டாகப் பேசியபடி மூவரும் நடந்தனர்.

“நாளைக்கும் வர்றாயா நந்தா?" என்ற மீரஜாவிடம்,

"நான் வருவேன்… ஆனா நீங்க காருல போயிடுவீங்களே?" என்றான் நந்தன்.

"ஆமால்ல?" என்று சற்றே முகம் சுணங்கியவளைப் பார்த்த நந்தன்,

"ஒரு ஐடியா! உங்க ஸ்கூல் லைப்ரரிக்குப் பின்னாடி, குட்டியா ஒரு சுவர் இருக்கும்… அதத் தாண்டினா ஆஞ்சனேயர் கோயில் இருக்கு… லன்ச் டைமுக்கு அங்க வர்றீங்களா? சாப்பிடும் வரை பேசலாம்." என்று ஆர்வமுடன் கேட்டாவனிடம்

"அப்படியா? நாங்க தாண்டிக் குதிக்கிற அளவுக்கு, சின்னச் சுவரா லைப்ரரி பின்னாடி இருக்கு?" என்று மீரா கண்கள் விரித்துக் கேட்க,

"ஆமா!" என்று கூறிய நந்தனிடம்,

"உனக்கு எப்படித் தெரியும்?" என்று யோசனையுடன் கேட்டாள் டாலி செல்சியா.

"நாந்தான் சொன்னேனே… மீராவ பார்க்க வருவேன்னு. அப்பப் பார்த்தேன்… ஆனா அங்கிருந்து பார்த்தா ஸ்கூலுக்குள்ள எதுவுமே தெரியாது… லைப்ரரி பில்டிங் மறைக்கும்."

"ம்ம்ம்… மீராவ பார்க்கப் பெரிய ஆராய்ச்சியே நடந்திருக்கு போல… ஆனா எனக்கு ஒரு சந்தேகம்... கேட்டா, ரெண்டு பேருமே என்னைத் திட்டக் கூடாது." என்ற டாலி செல்சியாவிடம்,

"அது நீ கேட்கிற விசயத்தப் பொருத்தது." என்று மீராவும்,

"உன்னைத் திட்டுவனா?" என்று நந்தனும் கேட்டார்கள்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த டாலி செல்சியா,

"நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிறதுல என்ன பிரச்சனை? மீரா இப்பதானே பெரியவ ஆனா… இத்தன நாளா எங்கோளடலாம் விட்டுக்கு வெளியதானே விளையாடினா? ஆத்துக்குள்ளேலாம் ஆட்டம் போடுவோமே!" என்றதும்,

நந்தன் மீரஜாவைப் பார்க்க,

"உண்மையிலேயே இதுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியல டாலி. நாங்க ஐஞ்சாங்கிளாஸ் படிக்கிறவரை, இப்பமாதிரி எங்கூடவே நடந்துவருவான்… லஞ்ச் டைம்ல வருவான்... இல்லைனா கேம்ஸ் பீரியட்ல வருவான்… அப்புறம்… ஆறாவது படிக்கிறதுக்கு இந்த ஸ்கூலுக்கு வந்த பின்னாடி, அமிர்தாக்கா கூட என்னை ஸ்கூல்க்கு அனுப்பினாங்க… சோ… பார்க்கத் தோது இல்ல… மத்தபடி, பிரச்சனைனு எதுவும் இல்ல…" என்ற மீராவின் கண்ணுக்குள் நந்தன் பார்க்க,

‘மீரா உண்மைதான் சொல்றான்னு அவ முகமே காட்டுது… ஆனா?... இவனோட கண்ணு வேற சொல்லுதே?' என்று நினைத்தபடி நடந்தாள் டாலி செல்சியா.

"சரி நாம இன்னைக்கு லன்ச் டைமுக்கு ஆஞ்சனேயர் கோயில்ல பார்ப்போமா?" என்ற நந்தனிடம்,

"அதான் இவ்ளோ நேரம் பேசிட்டோம்ல? நாளைக்கு லன்ச் டைமுக்கு வர்றோம்." என்ற டாலி செல்சியா,

"நானும் மீரா கூட வரலாம்ல?" என்று இருவரிடமும் கேட்க,

இருவரும் சிரித்துக்கொண்டே, "வரலாம்" என்பது போல் தலையசைத்தனர்.

பள்ளிக்கூடக் கட்டிடம் கண்களுக்குத் தென்பட்டது.

"சரி! ஸ்கூல் வந்துடுச்சு…" என்று கூறி மூவரும் விடைபெற்றனர்.

மதிய உணவு இடைவேளைக்கான மணி அடிக்கவும், தோழிகளுடன் சாப்பிடுவதற்காகக் கிளம்பிய மீரஜாவிடம்,

"நாம இன்னைக்கே லைப்ரரி பின்னாடி இருக்கிற ஆஞ்சநேயர் கோயில்ல போய்ச் சாப்பிடுவோமா?" என்று டாலி செல்சியா கேட்டாள்.

"லூசா நீ? இன்னைக்கு வரவேணாம்னு நந்தன்ட நீதான சொன்ன?"

"ஆமா… ஆனா… லைப்ரரிக்குப் பின்னாடி அப்படி ஒரு வழி இருக்குன்னு நந்தன் சொன்னதுலருந்து, போய்ப் பார்ப்போமான்னு மனசு அடிச்சுக்குது மீரா."

"அதான் நாளைக்குப் போறோம்ல?"

"இன்னைக்குப் போய்ப் பார்ப்போம் மீரா… ஒருவேளை அந்தச் சுவர, நம்மால தாண்ட முடியலைனா? நாளைக்குக் கலையிலயே நந்தன்ட சொல்லிடலாம்ல?"

"நீ ஏன் இவ்வளவு குழப்புற டாலி? நாளைக்கு லன்ச் டைம்ல கோயில்ல பார்ப்போம்னு நாமதான நந்தன்ட்ட சொன்னோம்… பின்ன எப்படிக் காவையில வருவான்?" என்று கேட்டாள் மீரஜா.

"ஆமால்ல?... சரி… நான் இவ்ளோ தூரம் சொல்றேன்ல? இன்னைக்குதான் வாயேன்… எப்படி இருக்குனு போய்ப் பார்க்கலாம்."

"அதுசரி! ஆனா நந்தன் இன்னைக்கு வரமாட்டானே?"

"ஏன் நந்தனத்தான் பார்க்கனுமா? சுவர் மேல ஏறிக்குதிச்சு ஆஞ்சநேயரப் பார்க்கக் கூடாதா?" என்ற டாலி செல்சியாவை,

'உனக்கு என்னாச்சு?' என்பதுபோல் பார்த்து விட்டு,

"நீ எப்போதிருந்து ஆஞ்சநேயரக் கும்பிட ஆரம்பிச்ச?" என்று கேட்ட மீரஜாவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு, பள்ளி நூலகக் கட்டிடத்தை நோக்கிச் சென்றாள் டாலி செல்சியா.

"ஏய் என்ன பண்ற?" என்ற மீரஜாவிடம்,

"தாயே உனக்குப் புரியவச்சு நான் சுவரத்தாண்டுறதுக்குள்ள எனக்கு வயசாயிடும்… அட்லீஸ்ட் லன்ச் டைமாவது முடிஞ்சிடும்… சோ உன்னைக் கடத்திட்டுப் போறதா முடிவு பண்ணிட்டேன்."

"சரி! சரி! கைய விடு… நானே வர்றேன்" என்று மீரஜா கூறியதும்,

தோழிகள் இருவரும் நூலகக் கட்டிடச் சுவரைத் தாண்டி, ஆஞ்சநேயர் கோயிலின் பின் புறத்திற்குச் சென்றனர்.

"பார்த்தியா மீரா… நாமும் அஞ்சு வருசமா இந்த ஸ்கூல்ல படிக்கிறோம்… இப்படி ஒரு வழி இருக்கிறது நமக்குத் தெரிஞ்சுச்சா? இனி நாம காலைல லேட்டா வரும்போது, ஸ்கூல் கேட்டை மூடிட்டாலும், இந்த வழியா ஸ்கூலுக்குள்ள போயிடலாம்... சூப்பர் ல?" என்று டாலி செல்சியா சிரிக்க,
"ஏன்? கொஞ்சம் சீக்கிரம் ஸ்கூலுக்கு வரலாம்னு யோசிக்கக் கூடாதா?" என்று மீரஜா மீண்டும் கிண்டலடிக்க,

"அத நீ செய்…" என்று கூறிய டாலி செல்சியா, "உட்கார்ந்து சாப்பிட நல்ல இடமா பாரு மீரா." என்று கூறிபடி கோயில் மண்டபத்தை நோக்கி நடந்தாள்.

"கோயில் சன்னதி பக்கத்துல எப்படிச் சாப்பிடுறது? அதோ அந்தக் குழாய்க்குப் பக்கத்துல இருக்கிற வேப்பமரத் திண்டுல உட்கார்ந்து சாப்பிடலாம் வா!" என்று கூறி அந்த இடத்தை நோக்கி நடந்தாள் மீரஜா.

இருவரும் அமர்ந்து, டிபன் பாக்ஸ்சைத் திறந்ததும்,

"எனக்குச் சாப்பாடு கிடையாதா?" என்ற நந்தனின் குரல்கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க,

நந்தன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

"நீ எப்படி இங்க?" என்று சந்தோசமாகக் கேட்ட டாலி செல்சியாவிடம்,

"என்ன டோலி? நான்தானே இந்த இடத்தைப் பத்தி உங்களுக்குச் சொன்னேன்."

"அதில்ல, நாளைக்குத்தானே நாம இங்க பார்த்துக்கிறதா பேசிவச்சோம்‌."

"ஆமா … ஆனா, நீங்க எப்படி இங்க வந்தீங்க? அதுமாதிரி தான் நானும் வந்தேன் டோலி."

"அடேங்கப்பா பெரிய மாயக்கண்ணன்தான்." என்று டாலி செல்சியா சிரிக்க,

“அதிருக்கட்டும்... உன் தோழி ஏன் எங்கூடப் பேசுறதில்ல?" என்று மீரஜாவைப் பார்த்தபடி டாலி செல்சியாவிடம் கேட்டான்.

‘தன்னைத்தான் நந்தன் கூறுகிறான்’ என்று தெரிந்து, மீரஜா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மறுபடியும் டாலி செல்சியாவைப் பார்த்துவிட்டு, “எங்கடா பேசவிட்டீங்க? நீங்க எப்ப நிறுத்துனீங்க, நான் பேசுறதுக்கு? நானும் பார்க்கிறேன், மாத்தி மாத்தி நீங்க ரெண்டு பேரும் பேசும்போது, நான் எங்க இருந்து பேசுறது?” என்று கூறவும் டாலி செல்சியாவும் நந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.

'யார் இவன்? அதற்குள் என் தோழியிடம் நெருங்கி விட்டானே?' என்று நினைத்தபடி நந்தனை மீரஜா பார்க்க,

"இன்னும் குழப்பத்திலேயே தான் ஓடிட்டு இருக்கு வண்டி. அப்படித்தானே?" என்று குறும்பாகக் கேட்டபடி சிரித்தான் நந்தன்.

"ஹேய்! நான் மனசுக்குள்ள நினைக்கிறது உனக்கு எப்படித் தெரிஞ்சது?" என்று மீரஜா அதிச்சியாகக் கேட்க,

"ரொம்பக் கஷ்டம் பாரு! உன் முகமே சொல்லுதே, நீ என்ன நினைக்கிறேன்னு. ஆனாலும் நீ மனசுக்குள்ள என்ன நினைக்கிறேங்கிறத, உன் முகத்துல இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டாத!" என்று கொஞ்சம் சீரியஸாகவே நந்தன் கூற,

"ஆமாம் நந்தா! எப்பொழுதுமே மீரஜாவின் முகத்தை வச்சே, அவ என்ன நினைக்கிறான்னு, நாம கண்டுபிடிச்சிட முடியும்." என்று டாலி செல்சியாவும் நந்தனுக்கு ஒத்து ஊதினாள்.

"என்ன ரெண்டு பேரும் சேர்ந்து என்னைக் கலாய்க்கிறீங்களா?" என்று மீரா சிரித்தாள்.

இவ்வாறு ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு, மதிய உணவை மூவரும் பங்கிட்டு உண்டு முடித்து, தோழிகள் பள்ளிக்கும், நந்தன் சன்னதி நோக்கியும் சென்றனர்.

மாலை வீடுதிரும்பும்போது, திடீரென்று மனதிற்குள் சந்தோசம் பரவியதை உணர்ந்த டாலி செல்சியா,

"என்னன்னே தெரியல மனசுக்குள்ள குளுகுளுன்னு இருக்கு" என்று மீராவிடம் கூறினாள்.

அதே சந்தோசத்துடன் வீட்டிற்குச் சென்ற டாலி செல்சியாவற்குக் காலையில் நந்தன் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. ‘ராதா’ ன்ற பேர்தான் என்னோட பேர்ன்னானே? அம்மாவிடம் கேட்டுப் பார்ப்போமா?' என்று தோன்ற, தனது தாயிடம் சென்று, அவரருகில் அமர்ந்ததும்,

"என்ன? ஸ்கூல் விட்டு வந்ததும், டீவி முன்னாடி உட்கார்ந்து கிட்டு, ஜம்பமா காபி கேட்கிறவ, அதிசயமா எம் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்க?" என்று டாலி செல்சியாவின் அம்மா கேட்டார்.

"அது… வந்துமா… என் ஃபிரண்ட்ஸ் எல்லாரையும், அவங்க வீட்டுல செல்லப் பேரு வச்சு கூப்பிடுறாங்க… எனக்கு அந்த மாதிரி, வேற பேர் ஏதாவது..‌."

"பேர்ல என்ன, செல்லம் வேண்டிக்கிடக்கு… இருக்கிறதே நல்லாதான் இருக்கு…" என்று கூறியபடி டாலி செல்சியாவிற்குக் காபி கலக்க எழுந்த அம்மாவின் கையைப் பற்றிய டாலி செல்சியா,

"அம்மா… எனக்கு டாலி செல்சியான்ற பேரத்தவிர வேற பேர் வைக்கலையா?" என்று கேட்டவளைக் கூர்ந்து பார்த்த டாலி செல்சியாவின் அம்மா,

"இப்ப அது எதுக்கு?"

"சும்மா தெரிஞ்சுக்கத்தான்‌."

"சரி வா! அடுப்படில காபி கலந்துக்கிட்டே சொல்றேன்.”

"அப்படினா, எனக்கு இன்னோரு பேரு இருக்காம்மா?" என்று தன் தாயைப் பற்றி நிறுத்திய டாலி செல்சியாவிடம்,

"ஆமாம்!" என்றார் சிறு யோசனையுடன்.

"அது என்ன பேரு ம்மா?” ஆர்வமாகக் கேட்க,

"ராதா!"

வார்த்தைகளின் எண்ணிக்கை -1332


கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
இந்த பசங்களுக்கு இதே வேலை தான் லவ் பண்ற பொண்ண விட்டுட்டு பிரண்ட்ட கரெக்ட் பண்ணறது.. ராதா நல்ல பேரு..
 

aas2022-writer

Well-known member
இந்த பசங்களுக்கு இதே வேலை தான் லவ் பண்ற பொண்ண விட்டுட்டு பிரண்ட்ட கரெக்ட் பண்ணறது.. ராதா நல்ல பேரு..
அப்டீங்கிறீங்க?
 

Sspriya

Well-known member
🙄🙄🙄இது என்னடா நம்ம மீராவுக்கு வந்த சோதனை... ரெண்டு பேருக்கும் நடவுல மாட்டிகிட்டதும் இல்லாம... அவளை பேசவே விடாம கொடுமை படுத்துறாங்க 😂😂😂so cute💞💞💞
 

Aathisakthi

Well-known member
இஇராதாவா.. என்னடா நடக்குது இங்க🙄🙄🙄🙄🙄🙄....அப்ப தினமும் மதிலேறி குதிப்பாங்கள😳😳😳😳
 
Top