கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24,சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-6

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-6

மதுரையில் நடைபெரும் சித்திரை திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, செல்வராஜ், மாலினியும் சந்தோஷியுடன் தாமரைக்குளத்துக்கு வந்தனர்.

மீரஜாவிற்கு விளையாட நிறைய ஆட்கள் கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம்…

அடுத்தநாள் பிள்ளைகளையும் மனைவியையும், மதுரையில் இருக்கும் மாலினியின் அப்பா வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டுத் தாமரைக்குளத்திற்குத் திரும்பினான் செல்வராஜ்.

புதிய இடம் புதிய மனிதர்களைக் கண்ட மீரஜாவிற்குச் சந்தோஷம் தாழவில்லை… மீரஜா ஒரு நிமிடம் கூடச் சும்மா இல்லாமல் துறுதுறுவென எதையாவது செய்தபடியே இருந்தாள். இதனால், ஒன்று... ஏதேனும் பொருள் உடைந்தது அல்லது மீரஜாவே விழுந்து முட்டியைப் பெயர்த்துக் கொண்டாள்.

அதனால் அவளுடன் எப்போதும் ஒருவர் இருக்க நேர்ந்ததில், பொறுமையிழந்த மாலினி, அவளைக் கோபமாகத் திட்டியும், அடிக்கவும் செய்தாள்.

இதுநாள்வரை கடிந்து ஒரு வார்த்தைக் கேட்டறியாத மீரஜாவிற்கு, மாலினியின் கோபம் புதிகாக இருந்தது… ‘ஏன் தன்னைத் திட்டுறாங்க? அடிக்கிறாங்க?’ என்ற காரணம் அந்தப் பிஞ்சு மனதிற்குப் புரியவில்லை…

ஏனென்றால் தவறு செய்தால், அவள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளைச் சொல்லித் திருத்தும் வழிமுறையில் வளர்பவள்.

அதனால் எதுவுமே கூறாமல், “செய்வாயா? அதை எடுப்பாயா? ஒரு இடத்தில் இருக்க மாட்டாயா?” என்று மட்டும் கூறி திட்டும் பொழுது மீரஜாவிற்கு திட்டுவதின் காரணம் புரியவில்லை.

ஒரே நாளில் மூன்று முறை அடிவாங்கியதில் குழந்தைக்குப் பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது…

காய்ச்சல் தந்த வேதனையைவிட, ஓரே இடத்தில் எதுவும் செய்யாமல் அமர்ந்திருப்பதும், அதை மீறினால் திட்டும், அடியும் வாங்குவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது… விளைவு,

"நான் அப்பத்தா, தாத்தா கிட்ட போறேன்!" என்று மீரஜா அடம்பிடித்து அழ,

"அம்மா! மீராவுக்குக் காய்ச்சல் அடிக்குதும்மா!" என்று மாலினி மனோகரியிடம் முறையிட்டாள்.

"அப்பாட்ட சொல்லி ராஜாராம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் ஒரு ஊசி போடு சரியாயிடும்!" என்று மனோகரி கூறினார்.

"நான் வசூலுக்குப் போகனும்… மீராவ தம்பி கதிர் கூட ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்க் காட்டிட்டு, உன் அத்தை வீட்ல கொண்டு போய் விடச்சொல்லு… இங்க இருந்தா மீராவுக்குக் காய்ச்சல் அதிகமாகுமே தவிர, குறையாது." என்று கோபமாகப் பேசிவிட்டு கிளப்பினார் மாலினியின் அப்பா சுப்பிரமணியன்"

தனது அப்பா ஏன் அப்படிச் சொல்கிறார் என்பது சரியாகப் புரியாவிட்டாலும், மீரஜாவை ஆஸ்பத்திரிக்கு தம்பி கதிருடன் அழைத்துச் சென்று, காட்டினாள் மாலினி,

டாக்டர் பரிசோதித்து ஊசி குத்தும்வரை வேடிக்கை பார்த்த மீரஜா, ஊசியில் மருந்தை ஏற்றியதும் எழுந்து ஓடிவிட்டாள்.

"ஊசி குத்திக்கிட்டா சாக்லேட் தருவேன்!" என்று டாக்டர் கூறியதும் நின்று திரும்பிப் பார்த்த மீரஜா, தலையைச் சிலுப்பிவிட்டு மறுபடியும் எதிர்திசையில் ஓடினாள்

மீரஜாவை பிடித்து வர ஓடிய கதிரால், அவளைப் பிடிக்கவே முடியவில்லை…

ஆஸ்பத்திரி பென்ஜ்சுக்கு இந்தப்பக்கம் மீரஜா, அந்தப் பக்கம் மீரஜாவை விடப் பத்து வயது பெரியவனான கதிர்… அந்தப் பெஞ்சையே சுற்றி வந்தானே தவிர மீரஜாவைப் பிடிப்பது போல் தெரியவில்லை…

சிறிது நேரம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆஜானுபாகுவான ஒருவர், சுண்டெலிபோல் சுறு சுறு சுறுவென ஓடிக்கொண்டிருந்த மீரஜாவை அலேக்காகத் தூக்கிச் சென்று மாலினியின் அருகில் விட, மீண்டும் ஓடப் போனவளை அவரே பிடித்தார்.

"தப்பா எடுத்துக்காம இவள கொஞ்சம் பிடிச்சுக்கோங்க அண்ணே! டாக்டர் ஊசி குத்தட்டும்" என்று மாலினி கெஞ்சும் பாவனையில் கேட்டதும், அப்படியே டாக்டரிடம் தூக்கிச் சென்று, மீரஜா திமிர திமிர ஊசி குத்திய பிறகே கீழே இறக்கி விட்டார்.

"இந்தாம்மா சாக்லெட்" என்று டாக்டர் மீண்டும் எடுத்துக் கொடுத்தார்.

"வேணாம் போ தாத்தா!" என்று சிலுப்பிவிட்டு வெளியே சென்று நின்று கொண்டாள்.

"யாரு கதிரு இந்தப் பாப்பா?" என்று டாக்டர் மாலினியின் தம்பி கதரிடம் கேட்க,

"அக்கா பொண்ணு டாக்டர்" என்றான் கதிர்.

"யப்பா… ஒரு நிமிசத்துல ஆஸ்பத்திரியவே ரெண்டாக்கிடுச்சுப்பா…" என்று கெக்கலி கொட்டி சிரித்தார்.

வீட்டிற்கு வந்ததும் தம்பியுடன் மீரஜாவை, தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் மாலினி.

"இது சரியில்லை மாலினி… சின்னவளைப் பார்! எவ்வளவு அமைதியாக ஒரே இடத்தில் சேட்டை பண்ணாம இருக்கா… மீராவுக்குச் செல்லம் கொடுத்து, கெடுத்து வச்சிருக்காங்க… அதோட உன்மேல் மீராவுக்குப் பயமும் இல்லை… இப்படியே விட்டா மீரா பெரியவள் ஆனதும் உன்மேல் பாசமில்லாதவளாகி விடுவாள், உன் பேச்சையும் கேட்கமாட்டாள்… மீராவை உன்னுடன் ஊருக்குக் கூட்டிட்டுப் போய்க் கண்டிச்சு வள!" என்று மாலினியின் அம்மா கொளுத்திப் போட, மாலினியின் மனதில் முதன்முறையாக மீராவின் மேல் கோபம் வந்தது.

தீபாவளி கொண்டாட தாமரைக்குளம் சென்ற மாலினி, தீபாவளி முடிந்து புன்னைவனம் செல்வதற்கு முன் சொல்லிவிட்டு கிளம்புவதற்காக மீண்டும் அப்பா வீட்டிற்கு வந்த மாலினியிடம்,

"மீராவை ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போகிறாய் தானே?' என்று மனோகரி கேட்க,

அதற்கு மாலினி, "இல்லம்மா! மீராவப் பார்த்துக்கிறது கொஞ்சம் சிரமம்! சந்தோஷி இன்னும் கொஞ்சம் பெரியவளாகட்டும். அதன்பிறகு மீராவை கூப்பிட்டுக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறினாள்.

அதற்கு மனோகரி "அவளுக்கு விவரம் தெரிவதற்கு முன்னாடியே, உன்கூட கூட்டிப் போயிடு.‌‌ அப்புறம் ரொம்பக் கஷ்டப்படுவ." என்று மீண்டும் ஓதிவிட்டார்.

இதைக் கேட்டுகொண்டிருந்த அவளது அப்பா சுப்ரமணியன், மாலினியை தாமரைக்குளம் செல்லும் பஸ்ஸில் ஏற்றி விடச் செல்லும்போது,

"மாலினி நீ பெரிய பொண்ணு! உன் குடும்பத்த காப்பத்துற பொறுப்புடையவ… உன் வீட்ல யார்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு நீதான் முடிவெடுக்கனும்… உன் குடும்ப விவகாரத்தில் நானோ, அம்மாவோ தலையிடக் கூடாது."

"ஏன்ப்பா இப்படிச் சொல்றீங்க?"

அப்பா உன் நல்லதுக்குத் தான் சொல்றேன். உன் அம்மா சொல்றத இதோட மறந்துடு… உன் பிள்ளை மீரா இங்கே அத்தை, மாமா கிட்ட நல்லபடியா வளரட்டும். நீயும் ரெண்டு பிள்ளைகள வச்சுக்கிட்டு வளக்கிறது கஷ்டம். சந்தோஷி பெரியவளாகட்டும்… அதுவரைக்கும் மீரா, அத்தைகிட்டயே இருக்கட்டும்" என்று கூற,

"எனக்கும் நீங்க சொல்றதுதான் சரின்னு தோணுது ப்பா… ஆனா அம்மா…" என்று நிறுத்தியவளிடம்,

"அவ சொல்றத காதுல வாங்கிக்காதம்மா" என்ற அப்பாவை, புருவம் சுருக்கிப் பார்த்த மாலினியிடம்,

"உன்னோட அம்மா நல்லவதான். ஆனா முத்துராக்கு என் தங்கச்சி… உன் அம்மாவுக்கு நாத்தனார்… சோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்… அது மட்டுமில்ல. உனக்குத் தெரியாதத நா சொல்லல. உன்னை, தன்னோட அண்ணன் பையனுக்குக் கொடுக்க நெனச்சா உங்கம்மா… அவங்க இன்னும் நம்மகிட்ட உதவி வாங்குற நிலையில இருக்காங்க… அங்க உன்னக் கட்டிக் குடுத்தா நீ ஃபினான்சியலா கஷ்டப்படுவேன்னு நினைச்சேன்… ஒரு பொண்ணப் பெத்த தகப்பனா, என் பொண்ணு எதுக்காகவும் யாரையும் நம்பி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்… அதனால, உன் தாய்மாமன் வீட்டுல நீ போய் வாழுறதவிட, என் தங்கச்சி வசதியான குடும்பம், என் தங்கச்சி, உன் மாமியார் அவ்வளவா சூதுவாது தெரியாதவ… தங்கச்சி மாப்பிள்ளை ரொம்ப நல்ல மனுசன் நேர்மையான துணிச்சல்காரர்… செல்வராஜு அவங்க அப்பாம்மா பேச்சக் கேட்டு நடக்கிற பிள்ளை… அதனால அங்க நீ சந்தோசமா இருப்பேன்னு நெனைச்சுதான் செல்வராஜுக்கு கட்டிக் குடுத்தேன்… நான் சொல்றது புரியுதா?" என்று தன் மகளைப் பார்த்துக் கேட்டார் சுப்பிரமணியம்.

"புரியுது ப்பா!" என்ற தன் மகளின் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தவர்,

"யார் என்ன சொன்னாலும் உன் மனசுக்கு எது சரின்னு படுதோ, உன்னை நம்பி இருக்கிற உன் குடும்பத்துக்கு நல்லது எதுவோ அத செய்..." என்று கூறிவிட்டுத் தாமரைக்குளம் செல்லும் பஸ்சில் அனுப்பி வைத்தார்.

அன்று மதியம் மாலினியும் சொல்வராஜும் சந்தோஷியுடன் புன்னைவனம் செல்வதால், செல்வராஜுக்கு பிடித்த மீன் குழம்பு செய்தார் முத்துராக்கு. முத்துராக்கம்மாவின் கைமணத்தில் சமைத்த மீன் குழம்பின் வாசனையை முகர்ந்து பார்த்தே பசியாறிவிடுவான் செல்வராஜ்.

மாலினி மீன்குழம்பில் தேங்காய், சோம்பு, கசகசா ஆகியவற்றை அரைத்துச் சேர்ப்பதால் சற்றே மீன் குழம்பு வாசனையை மிஸ் பண்ணினான். அதனால் தாமரைக்குளம் வந்ததுமே தன் அம்மாவிடம் மீன் குழம்பு வைத்துத் தரச் சொன்னான்.

இது வேறுவிதமாக மாலினியின் மனதில் பதிந்தது.

'என்னிடம் இந்த மாதிரி இவர் ஆசையாகக் கேட்டு, ருசித்துச் சாப்பிடுவதில்லையே?… ' என்று யோசித்தவளுக்கு,

தன் கணவன், தன்னுடைய சமையலைக் குறை கூறுவதற்கு சங்கடப்படுகிறார் என்பதையோ, ‘அவனது அம்மாவுக்குச் சமையலில் இருக்கும் எக்ஸ்பீரியன்ஸ், இப்பொழுதுதான் சமைக்கப் பழகியிருக்கும் மாலினியிடம் எதிர்பார்க்க முடியாது’ என்ற செல்வராஜின் புரிதலையோ உணராமல்,

அப்பா வீட்டில் தன் தாயிடம் பேசியது மாலினியின் நினைவுக்கு வந்தது…

கணவர், பிள்ளைகளை வேலைக்கு அனுப்பிவிட்டு, மாலினியிடம் வந்து அமர்ந்த மனோகரி,
"அங்க எப்டி இருக்க மாலினி?" என்று கேட்டார்.

"ம்ம் எனக்கென்ன நல்லா இருக்கேன் ம்மா… என்ன அவ்வளவு பெரிய வீட்ல, அத்தான் ஸ்கூலுக்குப் போனபிறகு தனியா இருக்கிறதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கு. அத்தானுக்குப் புன்னைவனத்தில் வேலை இல்லைனா நானும் தாமரைக் குளத்துக்கே வந்துடுவேன்" என்று சந்தோசமாகக் கூறிய மகளைப் பார்த்த மனோகரி,

"லூசு மாதிரி பேசாத மாலினி. தானா தனிக்குடித்தனம் நடத்துற சந்தர்ப்பம் உனக்கு வாய்ச்சிருக்கேன்னு நான் சந்தோசப்படுறேன்… நீ என்னடான்னா தாமரைக்குளத்துக்கு வந்துடுவேன்ற?" என்று கேட்டார்.

"போங்கம்மா… புன்னைவனத்துல நான் மட்டும்தான் சமையலையும் பார்த்து, பிள்ளையையும் பார்த்துக்கனும்… இங்கேன்னா அத்தை, என்னைக் குழந்தைகள பார்த்துக்கச் சொல்லிட்டு சமையல் அவங்களே செஞ்சுடுவாங்க…" என்று மாலினி வருத்தமாக் கூற,

"புன்னைவனத்துல வீடு கூட்ட, பாத்திரம் விளக்க, துணி துவைக்கெல்லாம் ஆள் இருக்குல்ல? அப்புறம் என்ன?" என்ற தன் அம்மாவைப் பார்த்த மாலினி,

"உங்களுக்குப் புரியல ம்மா… அத்தை இருந்தபோது வேலையும் கம்மி அதோட அத்தை என்னோட பேசிக்கிட்டே வேலை செய்றதால அலுப்பு இருக்காது."

"நீ இவ்வளவு லூசா இருப்பேன்னு நான் நினைக்கல. அடுப்பங்கரையில் தன் ஆட்சியை உனக்கு விட்டுத்தர உன் அத்தைக்கு மனசில்ல."

"புரியலம்மா!"

"வீட்டு ஆம்பளையோட நாக்கை ஜெயிச்ச பொம்பள வச்சதுதான், அந்த வீட்டுல சட்டமாகும்… அதாவது, ஆம்பளைகளால வாய்க்கு ருசியா சமைச்சு போடுறவங்கள விட்டுட்டு இருக்க முடியாது."

"நீங்க என்ன சொல்ல வர்றீங்க?"

"இவ்வளவு அசடாவா இருப்ப? உன் மாமியா பேச்ச தான் உன் மாமனாரும், உன் புருசனும் கேட்கனும்னு நினைக்கிறாங்க. நீ நினைக்கிற மாதிரி மருமகளுக்கு ரோம்ப வேலை குடுக்கவேணாம்ன்ற எண்ணமெல்லாம் இல்ல."

"போங்கம்மா அத்தை அப்படிலாம் இல்ல." என்று தன் தாயிடம் வாதாடியது ஞாபகத்திற்கு வந்தது.

'அம்மா சொன்னது போல, அத்தை, என்மேல் உள்ள பிரியத்தாலதான் சமையல் செய்யச் சொல்றதில்லைன்னு நெனைச்சது தப்போ?' என்று தோன்றியது.

செல்வராஜும், மாலினியும் ஊருக்குச் சென்றபிறகு,

சாயங்காலம் வாசல் கூட்டி, பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு அமர்ந்த முத்துராக்கம்மாள் விளையாடிக்கொண்டிருந்த மீரஜாவிடம்,

"மீராக்குட்டி, வறுத்த மீன் எடுத்து வரவா?" என்று கேட்டதுதான் தாமதம், பொம்மைகள் அதனதன் இடத்திற்குச் சென்றது. மீரஜா டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள்.

ஒரு தட்டில் வறுத்த மீன் இரண்டை எடுத்து வருவதற்குள் சுப்பையாபிள்ளையும் வந்துவிட, அவருக்கும் ஒரு தட்டில் வறுத்த மீனை எடுத்துக் கொடுத்துவிட்டு, அப்பத்தா மீரஜாவிற்கு மீனில் உள்ள முள்ளை எடுத்து வைக்க, தாத்தாவுடன் கதையளந்த படியே சாப்பிட்டாள் மீரஜா.

தாத்தாவுடன் பேசியதில் கவனக் குறைவாக முள் எடுக்காத மீன் துண்டை எடுத்து வாயில் போட்ட மீரஜாவின் தொண்டையில் முள் சிக்கிக்கொண்டது…"

"முள்ளு முள்ளு" என்று தன் தொண்டையைக் காட்டி மீரஜா அழ,

பதறிய அப்பத்தா தண்ணீரையும், தாத்தா வாழைப்பழத்தையும் எடுத்து ஊட்டியும் முள் உள்ளே போகவில்லை..‌.

மீரஜாவின் கண்களில் கண்ணீர் வர,

இராமேஸ்வர மாதவனும், குடைவரையிலிருக்கும் யோகியும் மீரஜாவைப் பார்த்தனர்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1120

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼



 
Last edited:

Chitra Balaji

Well-known member
நல்லா poikitu irukara குடும்பத்துல ethuku intha manokari கும்மி அடிக்க paakuthu..... இந்த மாலினி yum ava அம்மா solrathai நம்புறாங்க... Ava அப்பா avvallavu solliyum avanga manasula oru vithai vizhunthudichi..... மீரா semma சுட்டி avala சமாளிக்கத் முடியல ava அம்மா vuku.... Super Super maa
 

Shailaputri R

Well-known member
இந்த நாத்தனாக் காரி சண்டை எப்போதும் முடியாது போலவே.. Mr. மாதவன் அந்த குட்டி பாப்பா மீராதான் ஊசி வேண்டாம்ன்னு அழாறல.. அவளை அப்பத்தா கிட்ட விட்டா சரி ஆகிட போகுது.. அவளை ஏன் புடிச்சிங்க.. பாவம் கை வலிக்கும்ல.. மீரா வளரும் முறை ரொம்ப கரெக்ட்.. ஆனா மாலினிக்கு அந்த பொறுமை இல்ல.. அதோட அவ அம்மா பேச்சை கேட்டா... இதுனால பாதிக்க போறது அவ வாழ்க்கையும் அவ பொண்ணு வாழ்க்கையும் தான்.. மீன் முள்ளுக்கு எல்லாமாடா முழிச்சு பார்ப்பாங்க..
 

Mohanapriya Ayyappan

Active member
நிறைய அம்மா இப்படி தான் இருக்காங்க .
குடும்பத்துல கும்மியடிக்க வேண்டியது😤
சூப்பர் கோயிங் ❤️😍👏
 

Aathisakthi

Well-known member
வளர்க்கும் விதம் ...ஒரு குழந்தையின் மனதை எந்த அளவு பாதிக்கும் என்பதை விளக்கியதும்...வளர்ப்பின் வித்தியாசத்தை சுட்டி காட்டியது அருமை❣️❣️❣️❣️

மாய கண்ணன் என்ன செய்ய போகிறான் காத்திருக்க றேன்🌹🌹🌹🌹
 
Top