கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-7

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-7

தாத்தாவுடன் பேசியதில் கவனக் குறைவாக முள் எடுக்காத மீன் துண்டை எடுத்து வாயில் போட்ட மீரஜாவின் தொண்டையில் முள் சிக்கிக்கொண்டது…"

பதறிய அப்பத்தா தண்ணீரையும், தாத்தா வாழைப்பழத்தையும் எடுத்து ஊட்டியும் முள் உள்ளே போகவில்லை..‌.

"முள்ளு முள்ளு" என்று தன் தொண்டையைக் காட்டி மீரஜா அழ,

"ஆஸ்பத்திரிக்கு போவோம் முத்துரா சீக்கிரமே கிளம்பு." என்று கூறிவிட்டு, தாத்தா தனது அறையை நோக்கி விரைந்தார்.

தாத்தாவும், அப்பத்தாவும் ஆஸ்பத்திரிக்குப் புறப்படத் தேவையானவைகளை எடுக்கச் சென்றனர்.

அப்பொழுது, இருமுறை மீரஜாவிடம் பேசிய சிறுவன் வந்து, கார்பனேட்டேடு பானம் அதாவது சோடா வைக் கொடுத்து, “குடி!" என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்…

சோடாவில் உள்ள வாயு தொண்டையில் சிக்கிய முள்ளுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, முள்ளைத் தொண்டையிலிருந்து விலக்கி வயிற்றுக்குள் தள்ளியது.

அதற்குள் தாத்தாவும் அப்பத்தாவும் வந்து மீரஜாவுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர்.

முதல் தெருவில் உள்ள திருப்பத்தில் திரும்பும்போது, அங்கே இருந்த மிக்ஸர் கடையைப் பார்த்த மீரஜா,

"தாத்தா எனக்கு ஜிலேபி வேணும்" என்றாள்.

"மொதல்ல ஆஸ்பத்திரிக்கு போயி தொண்டைல சிக்கின முள்ள எடுப்போம்… வரும்போது ஜிலேபி வாங்கலாம்." என்று அப்பத்தா கூறினார்.
"எனக்காகவா ஆஸ்பத்திரிக்கு போறோம்?"

"முள்ளு உன் தொண்டைலதான சிக்கீருக்கு?"

"ஆஸ்பத்திரிக்கு வேணாம் தாத்தா. ஊசி குத்துவாங்க."

"இதுக்கெல்லாம் ஊசி குத்தமாட்டாங்க மீராக்குட்டி." என்று தாத்தா சிரிக்க,

"நா வரல" என்று முகத்தைச் சுண்டியபடி அருகில் இருந்த வீட்டின் படியில் மீராஜா அமர்ந்து கொண்டாள்.

"சரி வா! ஜிலேபி வாங்கித் தரேன். அப்புறம் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்." என்று தாத்தா கூறவும், வேகமாகத் தலையாட்டியபடி மீரஜா எழுந்து சென்றாள்...

ஆனால் ஜிலேபி வாங்கியதும் மீரஜா, "வீட்டுக்குப் போவோம்…" என்றதும்,

"மீராக்குட்டிக்கு தொண்ட வலிக்கும் டா!" என்று தாத்தா கூறினார்.

"முள்ளு காணாம்... வாங்க வீட்டுக்குப் போகலாம்." என்று தத்தாவின் கையைப் பிடித்து இழுக்க,

தாத்தா, அப்பத்தா இருவரும் சேர்ந்து, “உனக்கு இதுவரை எப்பவாவது ஊசி போட விட்டிருக்கோமா? இனியும் செய்யமாட்டோம்." என்று கெஞ்சிக் கூத்தாடி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்க,

"தொண்டையில் முள்ளு இல்லை. வாழைப்பழம் கொடுத்ததா சொன்னீங்கள்ல, முள் உள்ளே இறங்கியிருக்கும்... இனி பயமில்லை. முள்ளு வயித்துக்குள்ள போயிட்டா செமிச்சுடும்..." என்று டாக்டர் கூறியதும், நிம்மதி அடைந்த தம்பதிகள், எவ்வாறு முள் இறங்கியது என்று ஆராயவில்லை.

அடுத்தநாள் மீரஜா தன் ஸ்கூலுக்குப் போயிருந்தபோது, இன்டர்வெல் பீரியடில் வகுப்பறையில் அமர்ந்து, மீரஜா, அப்பத்தா கொடுத்துவிட்ட பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது, அங்கே வந்த அதே சிறுவன் மீரஜாவிடம் சென்று, "வா! வெளிய போய் விளையாடலாம்!" என்று அழைக்க,

"தாத்தா, தெரியாதவங்க கூட வெளிய போகக் கூடாது ன்னு சொல்லிருக்காங்க."

"என்னை உனக்குத் தெரியாதா?" என்று சிரித்தவாறு சிறுவன் கேட்டதும்,

"தெரியும்!"

"அப்புறம் என்ன? வா! நாம வெளிய போகவேணாம். ஸ்கூல்க்குள்ளேயே விளையாடலாம்." என்று கூறிவிட்டு அந்தப் பையன் முன்னால் ஓட, மீரஜா பின்தொடர்ந்ததாள்.

கொஞ்ச நேரம் ஒளிந்து பிடித்து விளையாடினர்… பிறகு ஆளுக்கொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடினர்.

ஸ்கூல் பெல் அடிக்கவும், ஊஞ்சலிலிருந்து இறங்கி, மீரஜாவின் வகுப்பறைவரை சென்ற பையன்,

"சரி! நான் போயிட்டு நாளைக்கு வர்றேன்" என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

வகுப்பறைக்குள் செல்ல எத்தனித்த மீரஜா "உன் பேர் என்ன?" என்று அந்தப் பையனிடம் கேட்க,

“உன் பேர் என்ன?” என்று திருப்பிக் கேட்டான்.

“எம் பேரு மீரஜா”

“உன்ன எல்லாரும் எப்டி கூப்பிடுவாங்க?”

“ஸ்கூல்ல மீரஜா ன்னுதான் கூப்பிடுவாங்க”

“வீட்ல?”

“மீராக்குட்டி னு அப்பத்தாவும், தாத்தாவும் செல்லமா கூப்பிடுவாங்க.”
“அப்போ, நானும் செல்லமா உன்னை மீராக்குட்டினு கூப்பிடுறேன்.” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

மீராஜாவும், அந்தப் பையனின் பெயரை, தான் கேட்டதையே மறந்து வகுப்பறைக்குள் சென்று விட்டாள்.

இதுவே தினமும் தொடர்ந்தது.

தினமும் மீரஜா இன்ட்ர்வல் பீரியடில் வகுப்புக்கு வெளியே சென்று விளையாடுவதைப் பார்த்த வகுப்பு ஆசிரியை பூங்குழலி,

“மீரஜா! நீ ஏன் நம்ம வகுப்பு பிள்ளைகளோட விளையாட மாட்டேங்குற?” என்று கேட்க,

ஓருமுறை தன் அருகில் அமர்ந்திருந்த பெண் குழந்தையிலிருந்து, வகுப்பு முழுவதும் பார்வையை ஓட விட்ட மீரஜா, தன் வகுப்பு ஆசிரியையைப் பார்த்து,

“யாருமே வெளிய விளையாட வர்றதில்லை மேம்...” என்றாள்.

“ஏன்?” மாணவ மாணவியரைப் பார்த்துக் கேட்டார்.

“எல்லாருக்கும் டாய்லெட் போகவும், ஸ்னாக்ஸ் சாப்பிடவும் தான் டைம் சரியா இருக்கு மேம்” என்று அனைத்துக் குழந்தைகளும் ஒரே குரலில் கோரஸ் பாடினர்.

அதைக் கேட்டுச் சிரித்த ஆசிரியை, “மீரஜா உங்க பிரண்ட் தானே? அவளோட உங்கள்ல யாராவது ஒருத்தராவது விளையாடலாமே… இனி மீரஜாவோட விளையாடுறவங்களுக்கு ஸ்னாக்ஸ் சாப்பிட டைம் குடுக்கிறேன்.” என்றதும்,

அனைத்துக் குழந்தைகளுமே “ஓகே” என்று ஒத்துக்கொண்டனர்.

ஆசிரியைக்குக் கொஞ்சம் நிம்மதியானது… ‘ஏற்கனவே மீரஜாவிற்குப் பள்ளிக்கூடத்தில் ஐஸ்க்ரீம் கொடுத்தது யாரென்று தெரியவில்லை… பள்ளிக்கூடத்தின் மேல் தவறான அபிப்ராயம் வந்துவிடக் கூடாதென்று, அதெல்லாம் மீரஜாவின் கற்பனை என்று சொல்லித் தாத்தாவை சமாளித்தாகிவிட்டது. இந்த லட்சணத்தில் இவளைத் தனியே விளையாட விடக் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.’ என்று நினைத்தார் ஆசிரியை.

அடுத்தநாள் மீரஜா விளையாடச் செல்லும்பொழுது, ‘யாரை அவளுக்குத் துணையாக அனுப்பலாம்?’ என்று ஆசிரியை யோசித்தபடி வகுப்பறக்கு சென்று பார்க்க, அங்கே வகுப்பறை காலியாக இருந்தது.

மாணவ, மாணவியர் அனைவருமே பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தை கூட வகுப்பறையில் இல்லை!!!…

‘எல்லாக் குழந்தைகளுக்குமே வெளியே சென்று விளையாடத்தான் ஆசையிருக்கிறது’ என்று நினைத்த ஆசிரியை, அன்றிலிருந்து தினமும் தனது வகுப்புக் குழந்தைகளுக்கு இன்டர்வல் பீரியடில் விளையாடவும், அடுத்த பீரியட் டில் ஸ்னாக்ஸ் சாப்பிடவும் அனுமதி கொடுத்தார்.

ஒரு வாரம் கழித்து, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கவனித்த ஆசிரியை பூங்குழலியின் பார்வையில் வித்தியாசமான காட்சி படவே, புருவங்கள் சுழித்து, கூர்ந்து பார்த்தார்.

அங்கே, மீரஜா ஒடிப்போய் ஒழிவதும், அவளாகவே வெளியே வந்து, சிணுங்குவதும், பிறகு அவளே எதையோ தேடுவதும், பிறகு கை தட்டிச் சிரிப்பதுமாக இருந்தாள்.

வேறு யாருடனும் விளையாடாமல், அவள் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள்.

தனக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, பூங்குழலி மேம் அழைத்து, “மீரஜாவைக் கூப்பிடு!” என்றதும்,

மீரஜா ஆசிரியையிடம் வந்தாள்.

“நீ ஏன் மா தனியா விளையாடுற?” என்று பூங்குழலி மேம் கேட்க,

“நான் தனியா விளையடலயே… அதோ அந்தப் பையனோடதான் விளையாடுறேன்.” என்று மீரஜா சுட்டிக்காட்டிய இடத்தில் மூன்று சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

“அங்கே யார் கூட விளையாடின டா?”

“அதோ அந்தப் பையனோட தான்.”

“அந்தப் பையனுக்குப் பெர் இல்லையா ம்மா?”

“அவன் பேர் எனக்குத் தெரியாது மேம்.”

“சரி! அவனக் கூட்டிட்டு வா!” என்று ஆசிரியை கூறியதும், மீரஜா சென்று அந்தச் சிறுவனிடம்,

“மேம் உன்னைக் கூப்பிட்டாங்க வா!” என்றதும்,

“நான் யார்னு கேட்டா என்ன சொல்லுவ?” என்று சிறுவன் கேட்டான்.

“ஃபிரண்டுன்னு சொல்வேன். ஆமா, உன் பேர் என்ன?”

“அத அப்புறம் பாத்துக்கலாம். இப்பொ இந்தப் பையனை உன் மேம் கிட்ட கூட்டிடுப் போ!” என்றதும், சற்று யோசித்தாலும், மீரஜாவும் அதையே செய்தாள்.

மீரஜா ஒரு மாணவனுடன் வருவதைப் பார்த்தவர், 'இவனுடனா விளையாடினாள்? எனக்கு அப்படித் தெரியவில்லையே?’ என்று யோசிக்கும் பொழுதே இருவரும் ஆசிரியையை நெருங்கினர்.

“உன் பேர் என்னடா கண்ணா?” என்று ஆசிரியை, அந்த மாண்வனிடம் கேட்டதும்,

“விஷாகன்” என்றான்.

“நீ அங்க என்ன பண்ணிட்டிருந்த?”

“மீரஜாவோட விளையாடிட்டு இருக்கேன் மேம்!” என்று விஷாகன் கூறியதும் ஆசிரியை மட்டுமல்ல மீரஜாவுமே அதிர்ந்து போனாள். சட்டென்று திரும்பி அவளுடன் விளையாடிய பையனைப் பார்த்த மீரஜா, மீண்டும் விஷாகனைப் பார்த்து,

“நான் உன்னோடவா விளையாண்டேன்?” என்று கேட்பதற்காக வாயைத் திறந்தவளின் தொண்டையில் தூசி உறுத்தவும் இரும ஆரம்பித்தாள்.

ஆசிரியை தண்ணீர் எடுத்துவரச் சொல்லவும் விஷாகன் ஒடிவிட்டான். அருகில் நின்றிருந்த குழந்தை தண்ணீர் கொடுக்க, குடித்துவிட்டு "தேங்க் யூ!" என்று கூறிவிட்டு மீரஜாவும் அந்தச் சிறுவனை நோக்கி ஓட,

ஆசிரியைக்குக் குழப்பம் அதிகமாகியது. ‘ஒருவேளை விஷாகனை நான் பார்க்கவில்லையோ?’ என்று எண்ணியவர் வகுப்பறையை நோக்கிச் சென்றார்.

அடுத்த நாளும் இதே மாதிரி நடக்க, ஆசிரியை பூங்குழலி தொடர்ந்து மூன்று நாட்களாகக் கவனித்தார். அவருக்கு மிகவும் தெளிவாகப் புரிந்தது, ‘மீரஜா தனியாக விளையாடுகிறாள், ஆனால் விஷாகன் ஏன் தன்னுடன் விளையாடியதாகப் பொய் கூறுகிறான்?’ என்று தோன்றியதும்,

இந்த விசயத்தை, சக ஆசிரியையான பவித்ராவிடம் பூங்குழலி பகிர, ”நீங்கள் மீரஜாவையே அனுப்பி, விஷகனை அழைச்சுட்டு வரச்சொன்னது தப்பு பூங்குழலி மேம். மீரஜா சொல்லிக்கொடுத்து கூட்டிட்டு வந்திருப்பா. இப்ப பாருங்க. நான் என்ன நடந்துச்சுன்னு அவர்கள் மூலமாவே வரவைக்கிறேன்” என்று கூறி வகுப்பறைக்குச் சென்றார்.

மீரஜாவின் வகுப்பில் அனைத்து மாணவ, மாணவிகளும் அமர்ந்திருந்தனர்.

“என்ன குட்டீஸ் விளையாடியாச்சா?” என்று பவித்ரா மேம் கேட்டதும்,

“யெஸ் மேம்”

“யார் யார் என்னென்ன விளையாட்டு விளையாடினீங்க? வரிசையா எழுந்து சொல்லுங்க கேட்போம்.” என்றதும்

முதல் வரிசையில் இருந்த குழந்தை எழுந்து, “நாங்க ஹைட் அண்ட் சீக் விளையாடினோம்” என்றாள்.

“நாங்க ன்னா யார் யார்?”

“அந்தக் குழந்தை தன்னுடன் விளையாடிய குழந்தைகளின் பெயரைச் சொன்னதும்”

அந்தக்குழந்தையுடன் விளையாடிய குழந்தைகளையும் எழுப்பி, “நீங்கள்லாம் ‘பறவைகள்’ குரூப். தனியா வந்து நில்லுங்க.” என்று ஒவ்வொரு குரூப் பிற்கும் பெயரிட்டு தனியே நிறுத்தினார்.

இறுதியாக மீரஜாவுடன், விஷாகனையும் சேர்த்து, ஐந்து குழந்தைகள் நின்றிருந்தனர்.

இப்பொழுது, மீரஜாவிற்கு முன்னால் உட்கார்ந்திருந்த லோகேஷ் ஐ எழுப்பி,

‘’நீ என்ன விளையாடின கண்ணா?” என்றதும்,

“நாங்க ஒடிப்பிடிச்சு விளையாடினோம்.”

“ஓகே! யாரோட விளையாடினீங்க?”

அந்தப் பையன் ஒவ்வொருவரின் பெயராகச் சொல்லிக் கொண்டு வந்தவன், விஷாகன் பெயரையும் சொல்ல, பவித்ரா மேம், அர்த்தப் புன்னகை ஒன்றை பூங்குழலி மேம், மீது வீசிவிட்டு, அந்தப் பையனைக் கவனிக்க, அவன் மற்றொரு குழந்தையின் பெயரைச் சொல்லிவிட்டு இறுதியாக, "மீரஜா:" என்றான்.

அதிர்ந்துபோன பூங்குழலி மேம், “லோகேஷ் நன்றாக யோசித்துச் சொல்லு, உன்னுடன் மீரஜா விளையாடினாளா?” என்று கேட்கவும்,

லோகேஷ் மாட்டுமல்ல அந்தக் குரூப்பில் இருந்த குழந்தைகள் ஐவருமே ஒரே குரலில், “ஆமா மேம்! மீரஜாவும் எங்களோட தான் விளையாடினா” என்றதும் பூங்குழலிக்கு மயக்கம் வராத குறைதான்.

பவித்ரா மேம் யோசனையுடன் தன்னைப் பார்ப்பதைக் கண்டு ஒன்றும் கூறமுடியாமல் பூங்குழலி விழித்தாள்.

ஆனால் அடுத்து வந்த நாட்களில் பவித்ரா மேம் ஐயும் அழைத்து வந்து, மீரஜா தனியாக விளையாடியதைக் காட்டினார் பூங்குழலி மேம்.

இருவருக்குமே நடப்பதை நம்பமுடியவில்லை. மறுபடியும் குழந்தைகளிடம் வேறு முறையில் விசாரிக்க, அப்பொழுதும் மீரஜா தங்களுடன் விளையாடியதாகக் குழந்தைகள் கூறினர்.

வேறு வழி இல்லாமல், ஆசிரியை இருவரும் மீரஜாவின் தாத்தாவிடம் விஷயத்தைக் கூறிவிடுவதென்ற முடிவுக்கு வந்தனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த குடைவரையிலிருந்தவர், சிரிக்க. சேது மாதவரோ முறைத்தார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1073

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 
Last edited:

Chitra Balaji

Well-known member
இதுனால மீரா vuku எதாவது பிரச்சனை ஆயிட poguthu..... Ava யாரோ da விளையாடுற.... Per yum solla maatengiraan அந்த kutty...ava தாத்தா kita solla போறாங்க.... Enna aaga pooguthoo.. Super Super maa. .. Semma episode
 

Sspriya

Well-known member
கண்ணன் ஓட திருவிளையாடல்னு யாரு கண்டுபிடிப்பாங்க.... மீராவை நல்லா பாத்துக்குறாரு பா👌🏻👌🏻💞💞💞... பப்பி லவ் so cute 💞💞💞...
 

Sspriya

Well-known member
Todays punch 💞💞💞

மீரா கண்ணன் கூட விளையாடினா கண்ணாமூச்சி ஆட்டம்

சிறுவனோட திருவிளையாடல் புரியாம தாத்தாவிடம் மீராவின் நடத்தை பற்றி சொல்ல ஆசிரியர் ஓடினாங்க ஒரே ஓட்டம்
 

Shailaputri R

Well-known member
உங்க பஞ்சாயத்துல ஏன்டா மீராவ கோர்த்து விடுறிங்க.. பாவம் அவளுக்கு டக்குன்னு பதிலோ பொய்யோ கூட சொல்ல வராது.. இந்த கண்ணனுக்கு தான் என்ன குறும்பு 😍
 
Top