ksk2022-writer
Well-known member
KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம் -5
தன் அறையில் சென்று தாழிட்டுக் கொண்ட ஆஸ்மின் சத்தமில்லாமல் மெதுவாக தன்னுள்ளே அழத் தொடங்கினாள்.அவள் வடித்த கண்ணீர் மட்டும் நிக்கவே இல்லாமல் சிந்திக் கொண்டிருந்தது.
சிறுவயதில் இருந்தே யாரிடமும் எந்த பிரச்சினைக்கும் போகமால் அமைதியாக இருப்பவள் இன்று எல்லோருடைய வாய்க்கும் இவளின் வாழ்க்கை அவல் போல் பேச்சுப் பொருளாக மெல்லப்படுவதை நினைத்து தன்னுள்ளே வருந்திக் கொண்டாள்.
மனதிலோ 'ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது,எந்த ஒரு வாழ்க்கை என் வாழ்நாள் முழுக்க சந்தோஷத்தைத் தரும்னு எனக்கு அமைந்தது அந்த வாழ்க்கையே இன்னைக்கு ஒவ்வொரு நொடியும் அவமானத்தையும்,வேதனையையும் தந்து என்னை அணுஅணுவா சித்திரவதை செய்யுதோ இறைவா! என்னை இந்த பேச்சிலிருந்தும் கொடுமையிலிருந்தும் காப்பாற்று.என்னால முடியலை பெற்ற பாவத்திற்காக என் தாயையும் சேர்த்து நான் நோகடிக்க விரும்பலை எப்படியாவது என்னை விட்டு இந்த பந்தத்தை எங்கேயாவது தூக்கி தூரமாகக் கொண்டு போயிடு எனக்கு வேண்டாம் இந்த நிக்காஹ் (திருமணம்) வேண்டாம் வேண்டாம்" என்று கண்ணீர் மல்க இறைவனிடம் பெரிய வேண்டுக்கோள் ஒன்றை இ
வைத்தாள்.
அவளுக்கு இருந்த மனஉளைச்சலில் வீட்டை விட்டு எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா? என்று கூடத் தோன்றியது.ஆனால் அடுத்த நிமிடமே தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை நினைத்தும் அது அவளுக்கு வைக்கப் போகும் பெயரையும் நினைத்து பயந்தாள்.இல்லை செத்துப் போனாலாவது தன்னைச் சுற்றி இருப்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று நினைத்த வேளையில் இறைவனும் அவனுடைய தூதரும் தற்கொலையை வெறுக்கிறார்கள் என்பதை அன்று படித்தது அவள் நினைவில் வந்ததோடு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த தன் மகளைக் கண்டவள் இந்த சமூகத்தீல் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன் கண்ணே என்று தன் பெண்குழந்தையை நினைத்தும் பயந்தாள்.
அவள் நினைத்த எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தன் நிலையை நினைத்து வருந்தியபடியே அப்படியே தன்னை இன்னும் இன்னுமாய் சுருக்கிக் கொண்டு அப்படியே சாய்ந்து தூங்கிப் போனாள்.
சிறிது நேரத்திற்கு பின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கண்களைத் திறந்துப் பார்த்தாள்.திரும்பவும் சத்தம் வர எழுந்துச் சென்று கதவை திறந்தாள்.அங்கே ஆமினாவும் காதரும் நின்றுக் கொண்டிருந்தனர்.
அவளது முகத்தைக் கண்ட இருவரும் "அழுதுகிட்டே தூங்கிட்டியாமா?" என்று தலையை வருடியபடி ஆமினா கேட்டார்.
ஆஸ்மின் ஒன்றும் சொல்லவில்லை அமைதியாக இருந்தாள்.ஆமினா "போம்மா போய் முகத்தை கழுவிட்டு வா" என்றதும் அவள் எந்த தர்க்கமும் செய்யாமல் தன் அம்மாச் சொன்னதைச் செய்தாள்.
ஆஸ்மின் இப்பொழுது மனதளவிலும்,உடலளவிலும் ரொம்ப சோர்ந்துப் போய் விட்டாள்.அதனால் அவள் எதுவுமே பேசவில்லை.அவள் வந்ததும் காதர் "வா இங்கே வந்து உட்காரு" என்று கட்டிலைக் காட்டினான்.அவள் வந்து அமர்ந்ததும் ஒரு தும்பாவில் தண்ணீரை ஊற்றி "தண்ணீரைக் குடிம்மா"
"வேண்டாம் அண்ணே எனக்கு ரொம்ப முடியலை நான் வேணும்னா படுக்கப் போகட்டுமா?"
"படுக்கத் தானே போகலாம் முதல்ல தண்ணியைக் குடி" என்று தும்பாவை அவள் வாய்க்கு அருகில் கொண்டு போய் நீரைப் புகட்டி விட்டான்.ஆமினா ஒரு தட்டில் சாப்பாடுக் கொண்டு வந்து ஆஸ்மினுக்கு ஊட்டி விட வாய்க்கு அருகில் கொண்டு செல்லும் போது ஆஸ்மின் "ம்மா எனக்கு சாப்பாடு ஒன்னும் வேண்டாம்மா பசியே இல்லை"
"பரவாயில்லை ம்மாக்காக சாப்பிடு"
அவளோ திரும்பவும் மறுக்கவும் காதர் "நாளைக்கு வேலைக்கு போகனும்லே தெம்பா இருந்தால் தான் லீவு போடாமல் போக முடியும் இப்படி சாப்பிட மாட்டேன்னு சொன்னால் ஒழுங்க போக முடியுமா? சொல்லு" என்றான்.
காதர் சொன்னதைக் கேட்டதும் ஆஸ்மின் மனதினுள் 'ஆமாம் உண்மைதான் நான் வேலைக்கு போகனும் இப்போ எனக்கு கிடைச்சி இருக்கிற ஒரு வாய்ப்பு அது தான்,அதனால அந்த வேலையை நான் விடக்கூடாது' என்று யோசித்தவள் "சரி கொடுங்கம்மா அண்ணே சொல்றதும் சரிதான் நாளைக்கு தான் முதல் நாள் அதனால நான் போகனும்ல" என்று சொல்லி தன்னைத் தானே கட்டாயப்படுத்தி கொஞ்சமாக சாப்பிட்டவள் "போதும்மா இதுக்கு மேல சாப்பிட முடியாது தலையில் ஏதோ சுத்துற மாதிரி இருக்கு" என்றாள்.
ஆமினாவும் காதரும் அதற்கு மேல் ஆஸ்மினைக் கட்டாயப்படுத்தவில்லை.ஆமினா "இன்னைக்கு இந்த மாத்திரை போடும்மா இல்லைன்னா பழையபடி முடியாமல் ஆகிடப் போகுது" என்று மருந்தைக் கொடுத்தார் ஆமினா.அதை மறுக்காமல் வாங்கி சாப்பிட்டாள்.
ஆமினா "ஆஸ்மின் அம்மா மடியில சாய்ந்து படுத்துக்கோம்மா கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்திடும்" என்று மகளை தன் மடியின் மேல் படுக்க வைத்தார்.
ஆஸ்மின் எதைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்காமல் சொல்வதை அப்படியே செய்து அமைதியாக இருந்தாள்.அவளின் இந்த செயலைப் பார்த்து ஆமினா பயந்தபடி காதரைப் பார்த்தார்.காதரோ கண்களாலேயே "அமைதியாக இருங்க" என்பது போல் சைகைச் செய்தான்.
அப்பொழுது ஆஸ்மின் "அண்ணே நாளைக்கு நான் வேலைக்கு போவேன்ல"
"போகலாம் ஆஸ்மின் அண்ணனே நாளைக்கு கொண்டு போய் ஆபிஸ்ல விடுறேன் சரியா" என்று தலையை வருடி விட்டான்.
"அப்படியா!எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று சிரித்துப் பேசினாள்.அவள் இதுவரை இருந்த நிலைமை மாறி அப்படியே தன்னை மாற்றிக் கொண்டு பேசினாள்.
காதர் மெதுவாய் "பேசாமல் கண்ணை மூடித் தூங்கனும் சரியா? கொஞ்ச நேரம் கழிச்சு அண்ணே வந்து ஆஸ்மின் என்னச் செய்றான்னு பார்ப்பேன் சரியா?" என்றதும் "ம்ம்…" என்று தலையசைத்தாள் ஆஸ்மின்.
சிறிது நேரத்தில் கண்களை மூடித் தூங்கி போனாள்.
மறுநாள்….
எப்பொழுதும் சீக்கிரமாக உறக்கத்திலிருந்து எழுபவள் அன்றைக்கு தாமதாக எழுந்தாள்.எழுந்தவள் சமையலறைக்குச் செல்ல அங்கே எல்லா வேலைகளும் முடிக்கப்பட்டு இவளுக்கும் ஸஹானானவிற்கும் உணவுப் பெட்டியில் உணவு வைக்கப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்த ஆஸ்மினுக்கு ஆச்சரியமாக இருந்தது.நேராக பானுவின் அறைக்குச் சென்று "மைனி மைனி" என்றழைத்ததும் அறையில் வெளியே வந்தாள் பானு.
அவளிடம் "மைனி நீங்களே எல்லா வேலையையும் முடிச்சிட்டீங்களா?'
"ஆமாம் ஆஸ்மின் நானே எல்லா வேலையையும் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்,நீ ஆபிஸ் போகனும்னுல்ல அதான் நானே எல்லா வேலையையும் முடிச்சிட்டேன்" என்றாள்.
"அப்படியா! மைனி நாளையிலிருந்து நானும் சீக்கிரமா எழுந்து வந்து உங்களுக்கு ஹெல்ப் செய்றேன்.இப்போ நான் ஸாஹானாவை ஸ்கூல்ல விட்டுட்டு நானும் ஆபிஸ் போறேன்" என்று பானுவிடமும் ஆமினாவிடம் சொல்லி விட்டு வாசலுக்கு வந்தாள்.
நேற்று நடந்த விஷயம் எதைப் பற்றிய எண்ணமும் இல்லாமல் எல்லோரிடமும் பழையபடி பேசிச் சென்றாள்.
வாசலில் நின்றிருந்த காதர் "வா ஆஸ்மின் நானே உன்னை ஆபிஸ்ல போய் விடுறேன்"
"எதுக்கு அண்ணே உனக்கு இந்த தேவையில்லாத சிரமம் நானே போவேனே"
"எந்த சிரமமும் இல்லை ஆஸ்மின்.ஆபிஸ் எங்க இருக்குன்னு எனக்கு தெரிந்தால் தானே எதாவது அவசரம்னா உன்னை சீக்கிரமா உடனே பார்க்க முடியும் தேட வேண்டிய அவசியம் இருக்காதுல்ல அதுக்கு தான்"
"அப்படியா அண்ணே நீங்க சொல்றதும் சரி தான் வாங்க போகலாம்" என்று காதரின் மோட்டார் வண்டியில் ஏறி அமர்ந்தாள் ஆஸ்மின்.
முதலில் ஸஹனாவை பள்ளியில் இறக்கி விட்டு அடுத்து அவளது அலுவலகத்திற்கு செல்வதற்கான வழியை தனது அண்ணனிடம் சொல்ல காதர் கடைசியாக அவளை அலுவலகத்தின் வாயிலில் இறக்கி விட்டான்.
ஆஸ்மின் உள்ளே போகும் போது "ஆஸ்மின் கொஞ்ச நில்லும்மா"
"என்ன அண்ணே?"
"இந்தாம்மா" என்று பேனாவை எடுத்து அவளுக்கு பரிசளித்தான்.
"உனக்குத் தான் ஆஸ்மின் புது வேலை கிடைச்சிக்குல்ல அதுக்குத் தான் ஒரு சின்ன கிப்ட்" என்றான்.
அதை வாங்கி திருப்பித் திருப்பி பார்த்தவள் "ரொம்ப தாங்ஸ் அண்ணே,சின்ன வயசில் இருந்து நான் எந்த போட்டியில் கலந்து வெற்றி பெற்றாலும் அதுக்கு ஒரு கிப்ட் தருவீங்கல்ல அதை இன்னும் ஞாபகம் வைச்சு எனக்கு இப்போ தந்து இருக்கீங்கல்ல ரொம்ப தாங்ஸ் அண்ணே" என்றாள் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிரப்பிக் கொண்டு…
"உனக்கு சந்தோஷம் தானே அப்போ எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்" என்றான்.
காதர் சொன்னதைக் கேட்டு ஆஸ்மின் மகிழ்ச்சியாய் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள்.
இன்று ஆஸ்மின் வருவதற்கு முன்னாலேயே கயல் அலுவலகத்திற்கு வந்து இருந்தாள். கயலைக் கண்டதும் ஆஸ்மின் "ஹாய்" என்றாள்.
அவளும் பதிலுக்கு "ஹாய்" என்று சொல்லி சிரித்தாள்.
"என்ன கயல் இன்னைக்கு எந்த அட்வெஞ்சரும் செய்யலையா? சீக்கிரமா ஆபிஸ்க்கு வந்துட்டீங்க?"
அவளோ முகத்தை கவலையாய் வைத்துக் கொண்டு "என்னச் செய்ய இன்னைக்கு என்னோடு அன்வெஞ்சர் செய்ய ஆள் கிடைக்கலை தாங்கள் வேண்டுமானாலும் என்னோடு சேர்ந்துக் கொள்ளலாம்"
அவளின் பதிலைக் கேட்ட ஆஸ்மின் பயந்தபடி "ஐய்யயோ இதற்கெல்லாம் சரிபட்டு வர்ற ஆள் நான் கிடையாது என்னை விட்டுவிடுங்கள்" என்றாள்.
இப்படியே இருவரும் தங்களுக்குள் விளையாட்டாய் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.சிறிது நேரத்தில் கம்பெனியின் மேலாளர் வந்து புதிதாக வந்திருந்த நான்கு பணியாளர்களுக்கும் வேலைகளைக் கொடுத்தார்.அதில் ஆஸ்மினுக்கும் கயலுக்கும் ஒரே வேலையாகத் தான் இருந்தது.அதனால் இருவரும் பிரியாமல் வேலை ஆரம்பித்தனர்.
அவர்கள் சேர்ந்திருந்த நிறுவனம் பொருட்களை தயாரிக்கும் இடத்திலிருந்து மொத்தமாகக் கொண்டு வந்து அதை அந்தந்த டீலர்ஸ்க்கு சரியாக கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைப்பது.இதில் ஆஸ்மினுக்கும் கயலுக்கும் டெலிவரி செய்ய வேண்டிய பொருட்களின் கணக்குகளை சரி வர எழுதி வைக்க வேண்டிய பணி.
சில நேரங்களில் பொருட்கள் செல்ல வேண்டிய இடத்திற்கும் சென்று கண்காணிக்க வேண்டியதும் இருந்தது.இன்றைக்கு முதல் நாள் என்பதால் வேலையைப் பற்றிய விவரங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.அதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவே மதியம் உணவு இடைவேளை வரை வந்து விட்டது.
அதோடு எல்லோரும் சாப்பிடச் செல்லவும் இவர்களும் சாப்பிடுவதற்காக ஒன்றாக அமர்ந்தனர்.அதுவரை வேலையில் ஆர்வமாக இருந்ததால் கேலிப்பேச்சிற்கு நேரம் இல்லாமல் போனது.முதலில் கயல் "இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ஆஸ்மின் பிரியாணி தானே"
உடனே ஆஸ்மின் "என்னப்பா இது நாங்க சாப்பிட்டால் உடனே பிரியாணியான்னு கேட்கிறீங்க?வேற சாப்பாடே சாப்பிட மாட்டோமா என்ன?"
"வேற பாய் என்றாலே பிரியாணி தானே அதனால சொன்னேன்" என்றாள் கயல்.
ஆஸ்மின் தனது உணவுப் பெட்டியைத் திறக்க அதில் பிரியாணி இருந்தது.அதைப் பார்த்த கயல் வாயைப் பொத்திக் கொண்டு "அடிப்பாவி பிரியாணியான்னு கேட்டதுக்கு வேற சாப்பாடே சாப்பிட மாட்டோமான்னு வீர வசனம் பேசுன?இப்போ பாரு பிரியாணி கையில் வைச்சு இருக்கே,நட்பா? பிரியாணியா? அப்படின்னு கேட்டால் பிரியாணின்னு செலக்ட் செய்ற ஆளு போல சரிதான் உன்னைப் போய் என் உயிர் நட்புன்னு நினைச்சேன் பாரு என்னை சொல்லனும்" என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் கயல்.
கயல் பேசியதைப் பார்த்து ஆஸ்மினுக்கு அழுகையாய் வந்து கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.தலையில் அடித்துக் கொண்டவள் நிமிர்ந்து ஆஸ்மினைப் பார்க்க அவள் முகம் மாறி இருப்பதைப் பார்த்து "ஹேய் கயல் என்னாச்சு? ஏன் அழுகிறே?"
ஆஸ்மின் கம்மிய குரலோடு "என்னை இப்படி பேசுட்டே கயல் ரொம்ப வருத்தமா இருக்கு" என்றாள் கொஞ்சம் தயங்கியபடி…
கயலுக்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை.அவளருகில் போய் உட்கார்ந்து ஆஸ்மினின் கையைப் பிடித்து தன் கைகோர்த்து அழுத்திப் பிடித்தவள் "ஆஸ்மின் நான் சும்மா விளையாட்டுக்கு கேலியாகச் சொன்னதை ஏன்ப்பா இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற? நான் கிண்டல் செய்தால் பதிலுக்கு நீ கிண்டல் செய்வேன்னு நான் எதிர்ப்பார்த்தால் சட்டுன்னு அழுதுட்டே,எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு இனிமேல் இந்த மாதிரி சட்டுன்னு எமோஷ்னல் ஆகாதே சரியா?"என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி அவள் நாடிப் பிடித்து தன் கைகளால் ஆஸ்மினின் கண்களை அழுந்தத் துடைத்து விட்டாள்.
ஆஸ்மினுக்கு இந்த அனுபவம் புதியதாய் இருந்தது.இதுவரை அவளுடைய தாய்,தந்தை,உடன்பிறப்பு தவிர அவள் கண்ணீரை இதுவரை துடைத்து விட்டதாக அவளுக்கு நினைவு வந்தவரை யாரும் இல்லை.ஆனால் கயல் அவளுடையவள் போல் செயல் பட்டது வியப்பாக இருந்தது.
ஆஸ்மின் கயலைப் பார்த்துக் கொண்டிருக்க… கயல் தன்னை ஒருமுறை குனிந்துப் பார்த்தபடி… "என்ன என் முகத்துல எதாவது ஒட்டி இருக்குதா? இப்படி கண்ணை இமைக்காமல் பார்க்குறே?"
அவளோ "அ...து" என்று திணற…
"ஓஓ… எனக்கு புரிஞ்சுப்போச்சு என் அழகுல அப்படியே மயங்கி பேச முடியாமல் திணறுறே அதானே" என்றதும் ஆஸ்மினுக்கு சட்டென்று சிரிப்பு வந்து விட்டது.
"ப்ப்ச்… என் அழகைப் பத்தி பேசுன உடனே சிரிப்பை பாரு என்னை அழகுன்னு சொன்னால் பொறுக்காதே" என்று திருப்பிக் கொண்டாள்.
உடனே அவள் நாடிப் பிடித்து திருப்பிய ஆஸ்மின் "கயல் நீ யார் கண்ணுக்கு நீ அழகா தெரியுறோ? இல்லையோ? அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை ஆனால் எனக்கு எப்பவும் பேரழகி நீ தான்" என்று கட்டிக் கொண்டாள் ஆஸ்மின்.கயலோ அன்பாய் தழுவை ஏற்றுக் கொண்டாள்.
அங்கே அவர்கள் இருவரின் நட்பும் கொஞ்சம் கொஞ்சமாய் ஆழமாக ஆரம்பித்தது.
"சரி வா சாப்பிடலாம் ஆஸ்மின் இப்படியே இரண்டுபேரும் நட்புல கரைந்தோம்னு வை வேலையை யார் பார்ப்பாங்கன்னு கம்பெனி விட்டு துரத்திடுவாங்க" என்று இருவரும் வேகமாய் சாப்பிட ஆரம்பித்தனர்.
இங்கே ஆஸ்மினின் வீட்டில் பானு "என்னங்க இது நீங்களே சமையல் எல்லா வேலையையும் பார்க்குறீங்க?"
"பானு என்னால உன்னை திருத்த முடியலை,என் தங்கச்சியையும் கஷ்டப்படுறதையும் பார்க்க முடியலை அதான் நானே எல்லா வேலையையும் பார்த்தால் அவ கொஞ்சம் ஓய்வு எடுப்பால்ல அதான் வேலையிலிருந்து சீக்கிரமா வந்துட்டேன்" என்றான் காதர்.
"என்னங்க இது பெரிய முட்டாள்தனமா இருக்கு?"
"உனக்கு எப்படி தெரிந்தாலும் அதைப் பற்றி கவலை எல்லாம் எனக்கில்லை பானு ,ஆஸ்மின் பழைய நிலைமைக்கே மாறிட்டான்னா என்னால தாங்க முடியாது அவ நேற்று நீ பேசுன பேச்சிலேயே கொஞ்சமே கொஞ்சம் அவளுடைய பழைய தன்மை தெரிய ஆரம்பிச்சது பானு,அவ உனக்கு வேண்டுமானால் ஆஸ்மின் பாரமாக தெரியலாம் ஆனால் எனக்கு உடன் பிறந்த சகோதரி நான் இருக்கேன் செய்றேன்" என்று காலையில் எல்லா சமையலையும் செய்து முடித்தது போல் மாலையில் ஆஸ்மின் வீட்டிற்கு வருவதற்கு முன்னால் வீட்டு வேலைகளை காதர் செய்யத் தொடங்கினான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பானுவால் தன் கணவன் வேலைச் செய்வதை பார்த்து தாங்க முடியவில்லை.அதனால் அவனோடு சேர்ந்து வேகமாய் வீட்டு வேலைகளைச் செய்தவள் மனதினுள் 'இப்பொழுது நடப்பதை எப்படியாவது தடுக்க அடுத்த யோசனைச் செய்ய வேண்டும்' என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.
(தொடரும்)