கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

manjam 7

Manjam 7


ஜாக்போட் என்னவென்றால், வினய் நடாலிக்கு ரிப்போர்ட் செய்தாக வேண்டும். அவன் கண்களின் ரசனையும் நடாலியை போதை கொள்ள செய்தது. இந்தியர்களுக்குண்டான நிறம், அவன் அழகு, எடுப்பான மீசை, என்று அவனிடம் மிகுந்து காணப்பட்ட ஆண் மகனுக்கான தோற்றம் அவளை உள்ளூர நொறுங்க செய்தது.அவன் நெருக்கம் தேடியது அவள் மனம். கிரேஸ் அட் ஃபஸ்ட் சைட்.அதை அவனுக்கு காட்டாமல் இருப்பது பெரும் பாடாக இருந்தது நடாலிக்கு. அவனை பொறுத்தவரை நடாலியின் பாதிப்பு அவனிடம் குறைவே. இன்னும் முழுவதும் அவள் தாக்குதல் அவனிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கு முக்கிய காரணம் நடாலி வினயனைவிட மூன்று நெடும் வருஷங்கள் பெரியவள். (? )


ஹாஹாஹா... இது மட்டும் காரணம் இல்லை. அவனுக்கு இன்னும் அந்நிய பெண்களிடம் வரைமுறை கொண்டு பழகுவது மாறவில்லை.


ஒரு வழியாக கலிபோர்னியா மாகாணத்தில் ப்ராஜெக்ட் முடிந்து வினய் கிளம்ப ஒரு வாரமே மீதம்.

நடாலி எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும் வினயனுக்கு அடுத்த ப்ராஜெக்ட் சியாடேல் அலுவகத்தில்தான் என்றது நிர்வாகம்.


சியாடேல் வீட்டில்,


வினய் வருவது உறுதியானதும், வீட்டிற்கு அழைத்து பேசலாம் என முடிவு செய்தவளாக வித்தியாவிற்கு அழைத்தாள் அதிதி. இந்நேரம் அப்பா அலுவலகம் சென்றிருப்பார். இங்கு நன்றாக இருட்டி விட்டது.


சாதாரணமாக அம்மாவும் பெண்ணும் பேசிக்கொண்டார்கள். 'தனிமை கஷ்டமா இருக்கும்மா, பைத்தியம் பிடிக்கும் போல் இருக்கு. இவ்ளோ பெரிய வீட்ல நா மட்டும், நினைச்சு பாரு. எவ்ளோ பயமா இருக்கு தெரியுமா? வீட்ல என் ரூம் தவிர எல்லாத்தையும் பூட்டி வச்சிட்டேன். அவர் வர சமயம் மட்டும் திறக்கறேன்.

என்னை எதுக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் செஞ்சு குடுத்தீங்க? ' இதை இத்துடன் ஓராயிரம் முறை கேட்டிருப்பாள் பெண்.


ஏற்கனவே, அதிகம் யாருடனும் பழகும் சுபாவம் இல்லாத அதிதி, தன்னை இன்னும் சுருக்கி கொண்டது ஒரு புறம், ஆனால், இந்த தனிமை தாங்க முடியவில்லை என்று அவளே வருந்தும் அளவுக்கா தனிமை? இந்நிலை வித்யாவை கலக்கியது.
தவறு செய்து விட்டோமோ என்று அவளை வருந்த செய்யும் நிகழ்வு.

இன்னும் கொஞ்ச நாளுல வினய் இங்கேயே வராரு..என்றவள் குரலில் ஆசுவாசம் மட்டும். வித்யா வெகுவாக குழம்பினாள். மகள் குரலில் காதல், பிரிவு துயரம், நேசம் போன்ற உணர்வுகளை பிரித்து அறிய முடியவில்லை. ஒரு நிம்மதி உணர்வு மட்டுமே.

அதிதி வீட்டு அருகில் இந்தியர் யாரும் இல்லை. அது வேறு வித்யாவை பதற செய்தது.


இன்று உடம்பு சரி இல்லை என விஸ்வா அலுவலகம் செல்லவில்லை. அவருக்கு மகள் அருகில் இல்லை எனும் ஏக்கம். நீரு பெங்களூரு சென்று ஐந்து மாதங்கள் ஆயிற்று. வாரம் ஒரு முறை அழைப்பான். மற்றபடி சற்று விலகியே இருக்கிறான். அதிதி திருமணத்தில் ஆரம்பித்த நெருடல். தன் அலுவலகம் வந்து சேர விஸ்வம் கேட்டும் மறுத்து சென்றுவிட்டான். தன் வாரிசாக அவனை கொணர விஸ்வம் நினைக்கிறார். அகில இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றவனுக்கு வேலை சுலபமாகவே கிடைத்தது.

அவன் மறுக்க காரணம் உண்டு. அது அவருக்கும் தெரியும். அவன் அம்மா இங்குதான் கணவருடன், மூத்த மகன் சுகுமாரன் குடும்பத்துடன் இருக்கிறார். இவன் எவ்வளவு அழைத்தும் கணவரை விட்டு வர மாட்டேன் என்றுவிட்டார். அவர் மனதில் என்ன என தெரியாது. நிரஞ்சன் சி ஏ முடிக்க காரணம் வித்யா, அதிதி இருவர் மட்டும் தான். ஆனால், அதை வைத்து நிரஞ்சன் இங்கு இருக்க வேண்டும் என விஸ்வம் விரும்பவில்லை.


மகன் -மகள் இருவரும் அருகில் இல்லாது போன்ற நிலையில் அவர். அவரே எழுதிக் கொண்டது.


வினய் இன்று சியாடேல் வருகிறான். அவனிடம் ஏனோ மனைவியுடன் இனிய நாட்கள் என்று தோன்றவில்லை.


அன்றைய இரவு இருவரும் உறங்கவில்லை. இல்லை இல்லை... அவளை உறங்க அவன் அனுமதிக்க வில்லை. ' கூடல் முடிந்து சற்றே விலகி படுத்தவன், இன்னும் நீ எதையும் கத்துக்கல... 'என்றான். அவனிடம் கூடலின் திருப்திக்கு பதிலாக, எரிச்சல்.


மாயை, மயக்கம் விலகியவள், விலுக்கென நிமிர்ந்து அமர்ந்தவள் முகம் வெளிறி, கண்கள் கரை உடைந்தது. கண் நீரின் பளபளப்பில் தன்னை சமன் செய்தவன் அவளை வேகமாய் இழுத்து அணைத்து மீண்டும் தேவையை தீர்த்துக் கொண்டு தூங்கிவிட்டான். உள்ளூர தன்னை தாசியாய் உணர்ந்தவள் கண்கள் தூக்கத்தை தொலைத்தது.


காலையில் சிவந்திருந்த அவள் கண்கள் அவனுக்குள் வருத்தம் - சந்தோஷம் இரண்டையும் கொடுத்தது.


அந்த வார இறுதியில் இருவரும் குரோசெரி ஷாப், சினிமா பார்க்க தியேட்டர் என்று சென்று வந்தார்கள். பகல் வேளை சுகமாக... இரவு அவளுக்கு சுமையானது.


' நா குடுத்த சிடி'ஸ் பாத்தியா?'என்றவன் அவள் முகத்திலிருந்து விடை புரிந்து கொண்டான். ஆனால், ஒன்றும் சொல்லவில்லை.


முதல் வருஷம் திருமண நாளை இருவரும் கொண்டாடினார்கள். வீட்டு பெரியவர்கள் வாழ்த்துக்கள் சொல்ல, கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்டு, செல்ஃபீ எடுத்து முகநூலில் பதிவிட்டு, இக்காலத்து எல்லா ஸம்ப்ரதாய நிகழ்வுகளும் அரங்கேற,

நிரஞ்சனுக்கு இவற்றை மெயில் செய்தவள் 'என் மனசு ஒட்ட மாட்டேங்குது நீரு ' என்று முடித்திருந்தாள்.


இதை கண்ட நிரஞ்சனால் தன்னை அடக்க முடியவில்லை. அவளை நிரந்தரமாக இழந்து விட்டு இனி வருந்தி என்ன? என்று தன்னை தேற்றியவன் டேக் கேர் என்று அதிதிக்கு பதில் அனுப்பினான். அவன் மனம் நிலை இன்றி தவித்தது. அவளுக்காக கண்ணீர் சிந்தியது.


அந்த வார இறுதியில், மாலை நேரம் அதிதியை தன் மடியில் அமர செய்த வினய், சிடி ஒன்றை தன் லேப்டாப்பில் ஓட விட்டான். அந்த படத்தின்

காட்சிகளை காண காண வினய் கண்கள் மயங்கின. மனைவியின் உடன்பாடு இன்றி அவற்றை அவளிடம் சோதனை செய்ய வினய் முற்பட, அவன் மனைவியோ அதிர்ச்சி, அருவருப்பு போன்ற விவரிக்க இயலா உணர்வால் சமைந்திருந்தாள். அவன் அத்து மீறல்கள் அவளுக்குள் பூகம்பமாய் இறங்கியது.


அவன் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு வழக்கம் போல் அவளிடம் கிடைக்காமல் போக, அதற்குமேல் முக சுழிப்புடன் அவள் திணற, சில்லென குளிர் நீரை முகத்தில் ஊற்றிய உணர்ச்சியில், ' மரக்கட்டை ஜென்மம் ' என்று திட்டியவாறே வெளியே சென்றவன் ஞாயிறு விடிகாலையில் வீடு சேர்ந்தான் முழு போதையுடன்!


அதற்கு பின்னர் வந்த நாட்கள் அவளுக்கு குத்தல் வார்த்தைகளும், உதாசீனங்களும், முட்க்ரீடம் அணிந்த ராணியாய் வலம் வந்த நாட்கள்.


திரும்ப போய்விடலாம்தான். அப்பாவின் உடல்நிலை சரி இல்லை. அம்மா பாவம். இப்படி அடுக்கடுக்காய் அதிதி மனம் காரணங்கள் அடுக்கினாலும், வினயனுடன் இந்த கல்யாண பந்தத்தை தக்க வைக்க அவள் மனம் விரும்பியது. இருவரும் இன்னும் கொஞ்சம் பக்குவபட்டால் நிலைமை சரியாகும் என்று அதிதி நம்பினாள்.


திடீரென ஒருநாள், 'உன்கிட்ட நிரஞ்சன் லவ் சொல்லி இருக்கானா?'என்றான் அதிதியிடம் வினய்.


இல்ல.. நாங்க ரொம்ப ஆழமான நண்பர்கள்., என்றவளின் கண்கள் நிரஞ்சன் நினைவில் பூக்க, அதில் வெறுப்பு கொண்டவனாய், 'ஏன், நீ அசமஞ்சம்னு ஒருவேளை அவனுக்கு தெரியுமோ? ' 'அதனால நண்பனாவே இருந்துட்டான் போல' என்றுவிட்டு பெரிய ஹாஸ்யம் கேட்டது போல் சிரித்த வினய், இல்லாட்டி இவ்ளோ அழகு கொண்ட பொண்ணை பிரண்ட்னு சொல்ல முடியுமா... என்று இவள் காதுப்படவே முணுமுணுத்தான். அவன் கண்கள் வஞ்சம் தீர்த்த சந்தோஷதில் மின்ன, தன்னுள் சுய ஆராய்ச்சியில் இறங்கினாள் அதிதி.


சண்டை போட்டு, அதிர்ந்து பேசி பழக்கம் இல்லாதவளுக்கு, ஒரு கணவன் தன் மனைவி பற்றி அவளிடமே இப்படி பேசுவானா எனும் வியப்பு ஒரு புறமும், நீரு தன்னிடம் ஏன் காதல் சொன்னதில்லை எனும் எண்ணம் இன்னோர் புறமுமாய் அவளை வதைத்தது. நிரஞ்சன் தன் காதலை ஓருவேளை சொல்லியிருந்தால், தான் எப்படி நடந்து கொண்டிருப்போம் எனும் தெளிவு அவளிடம் இல்லை. ஒரு வேளை நிரஞ்சனுக்கு என்னை காதலிக்க தோன்றாமல் இருந்திருக்கலாம். நான் மட்டும் என்ன அவனை காதலித்தேனா... என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் மனதுக்குள்


வினய் அவளது இரவுகளை அவனது உடைமை ஆக்கிக்கொண்டான். அவன் காம உணர்வு எல்லை கடந்து சென்றது.


அவளின் சக்தி முழுவதும் உறிந்து எடுப்பது போல் அவள் உணர்ந்தாள். எப்போதும் சோர்வு ஆட்கொள்ள, எங்காவது சென்று வர முடிந்தால் ஒரு இடைவெளி கிடைத்தால் பரவாயில்லை என்று அவள் மனம் ஆசை கொண்டது.


திருமண உறவு தொடங்கி இரு வருஷங்கள் முடியப்போகிறது. காமம் அவளுக்கு சுகம் தரவில்லை. சுமையானது. அமுதமாய் இனிக்க வேண்டிய தாம்பத்திய சுகம் விஷம் போல் அவளை வதைத்தது. விநயனது தரம் தாழ்ந்த வார்த்தைகள், செய்கைகள் அவளை கிழித்து எறிந்தது.


அவள் வாழ்க்கையை புரட்டி போடும் நிகழ்வுகள் ஆரம்பம்.


அவள்,' அதிதி எதிர்பார்த்த அந்த இடைவெளி கிடைத்தது. அவளது ஒன்று விட்ட மாமனின் மகள் கனடாவில் திருமணம் முடித்திருந்தவளுக்கு அடுத்த மாதம் வளைகாப்பு என மாமனின் குடும்பம் அங்கு வந்திருந்தது. அதிதி திருமணம் முடிந்து சரியாக ஆறுமாத இடைவெளியில் அப்பெண்ணுக்கு திருமணம். அவள் நிறைய முறை அழைத்தும் அதிதி நிலைமை அங்கு செல்ல கூடியதாய் இல்லை. ஆனால், இப்போது அவ்வாறு தவிர்க்கவியலாது. அதில் அதிதிக்கு உடன்பாடும் இல்லை. அருமையான வாய்ப்பும் கூட.


அமெரிக்கா வந்து இத்தனை மாதங்களுக்கு பின்னும், இன்னமும் அவள் நாட்டை.. ம்ஹும் அவள் இருப்பிடம் சுற்றியுள்ள இடங்களை கூட சுற்றி பார்த்ததில்லை.


கணவனுடன் ஒரு முறையாவது நயாகரா சென்று பார்த்துவிட்டு வரவேண்டும் என்று அவளுக்கு ஆசை உண்டு. ஆனால்...


ஒருவாறு மாமனிடம்

'நீங்களே அவரை போன் போட்டு கூப்பிடுங்க மாமா ' என்றவளின் குரலில் தெரிந்த ஏக்கம் அவருக்கு ஏதோ ஒன்றை சொல்ல,அவரும் மறுக்காது விநயனுக்கு அழைத்தார். அவரிடம் 'தான் வரவியலாது', ஆனால், அதிதி நிச்சயம் வருவாள் என்றவனிடம் ஒரு மாதம் அதிதி அங்கு தங்க அவள் மாமன் கேட்க,பற்களை கடித்து கொண்டே ம்ம்ம்... சரி என்றவனது கோவம் கணிக்கும்படிக்கு இல்லை.


அதிதியிடம் அவள் மாமாவின் உரையாடலை சொல்லி ஒரு மாதம் தங்கி வர சொல்லும் சமயம் அவள் கண்களில் மின்னல்.


அவள் சமையல் அறையில் இருக்கும் நேரம் அவளது அலைபேசியை எடுத்து பார்க்க, அவள் தன் மாமாவுடன் நீண்ட நேரம் பேசியதை கண்டுகொண்டான் வினய்.


'என்னிடமே உன் கண்ணாமூச்சி ஆட்டத்தை காண்பிக்கிறாயா அதிதி?

கட்டியவனுடன் இருக்க கசக்கிறது. அவனை விட்டு இருப்பது இனிக்கிறது. உறவினர் மூலம் நான் உன்னை அடிமை போல் நடந்துகிறேன் என்று காண்பிக்க விழைகிறாய் தானே?

ஒருவேளை நிரஞ்சன் என் இடத்தில் இருந்தால் அவனை விட்டு நகர்வாயா...

இனி, என் ஆட்டத்தை பார் என்று மனதில் வன்மம் கொண்டான் வினய்.

கண்ணுக்குத் தெரியாத நிரஞ்சன் மீதும் ஏனோ அவனுக்கு வன்மம்... இவையெல்லாம் சிலரின் பிறவி குணம் மாறாது!
 
Top