கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

V.R.S. - சிறுகதை

Rajasree Murali

Moderator
Staff member
V.R.S.

மொபைலில் அலாரம் அடிக்கவே கண் விழித்த துர்கா, ஆஹா நாளை முதல் இந்த அலாரம் வைக்க கூடாது. சின்ன குழந்தைகள் ஸ்கூல் லீவ் விட்டால் எப்படி சந்தோஷமாக இருப்பார்களோ, அந்த மன நிலையில் தான் துர்கா இருந்தாள். அதுவும் இவளுக்கு இனிமேல் நிரந்தர லீவ் தான். ஆமாம், அவளுக்கு V.R.S. கிடைத்து விட்டது. இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் இருக்கையில், வேலைக்கு போனது போதும் என்று முடிவெடுத்து V.R.S.க்கு அப்ளை செய்தாள். மூன்று மாதங்கள் கழித்து கிடைத்து விட்டது.

இனி வரும் நாட்களை எப்படி கழிப்பது, அனுபவிப்பது என்று யோசித்து யோசித்து ப்ளான் போட்டாள். முதலில் காலை 5 மணிக்கு அலாரம் அதற்கு நோ

அவசர அவசரமாக வாக்கிங் அதற்கு நோ

வேக வேகமான சமையல் நோ

டிபன் பாக்ஸில் போட்ட மிச்சம் வாயில் நோ

கையில் கிடைத்த புடவையை கட்டிக்கொண்டு நோ

ஆபீஸ் கிளம்பும் போது டி வியில் அவளுக்கு பிடித்த பாடல் பார்க்க முடியாமல் ஓடும் போது நோ

இப்படி நிறைய விஷயங்கள்.

நிதானமாக எழுந்து ரிலாக்ஸான வாக்கிங், ஆற அமர உட்கார்ந்து பெரிய டம்ளர் நிறைய ஸ்ட்ராங் காஃபி குடித்தபடி பேப்பர் படித்துவிட்டு பொறுமையாக குளித்து பிடித்தமான புடவை, ஒரு நாள் சுடிதார், அணிந்து கொண்டு அவருக்கும், பையனுக்கும், தனக்கும் பிடித்தமான டிபன் முடித்து, ரிலாக்ஸாக கையில் ரிமோட்டுடன் டிவியில் பழைய படங்கள், பாடல்கள் பார்த்தபடியே சமையல், லஞ்ச் முடிந்த பிறகு ஒரு குட்டி தூக்கம், ஈவினிங் சின்ன ஷாப்பிங், கோயில், அருகில் உள்ள உறவுகளின் வீடுகளுக்கு ஒரு விசிட், மாதம் ஒரு முறை காரை எடுத்துக்கொண்டு அவருடன் இஷ்டப்பட்ட கோயில்கள் அனைத்திற்கும் போக வேண்டும். மொத்தத்தில் நோ டென்ஷன். 33 வருடங்கள் ஓடியது போதும். இனி நான் விரும்பும் வகையில் என்னுடைய வாழ்க்கை. இப்படி யோசித்தபடியே படுக்கையை விட்டு எழுந்தவள், நினைத்து பார்க்கும் போதே பரம ஆனந்தமா இருக்கே என்று மனதிற்குள் சிரித்தபடியே சந்தோஷமாக சமயலறைக்குள் நுழைந்தாள். வாக்கிங் நாளை முதல், இன்னைக்கு முதலில் காஃபி. தனக்கும் அவருக்கும் கலந்து கொண்டு ஹாலுக்கு வந்தவளை பார்த்து கணவன் "குட்மார்னிங்", என்ன துர்கா முகத்தில் ஒரு சந்தோஷம் தெரியுது என்றவனிடம், V.R.S.க்கு பிறகு வாழ்க்கை தான் போட்ட பிளானை அவரிடம் சொல்லியபடியே காஃபியை குடிக்க ஆரம்பித்தாள்.

மொபைல் அடிக்கவே கல்யாணம் ஆகி கலிஃபோர்னியாவில் இருக்கும் மகள் வர்ஷாவின் வீடியோ கால். மகளை பார்த்தவுடன் இருவரும் சந்தோஷமாக, ஹாய் வர்ஷா டார்லிங், எப்படி இருக்கே? மாப்பிள்ளை எப்படி இருக்கார்? என்று இவர்கள் முடிக்கும் முன்பே, அம்மா அப்பா உங்க இரண்டு பேருக்கும் ஒரு குட் நியூஸ். இன்னும் 7 மாசத்தில் உங்களுக்கு தாத்தா பாட்டியாக ப்ரமோஷன் கொடுக்க போகிறோம். இதை கேட்டவுடன், இருவரும் சந்தோஷத்தில், ஹே வர்ஷா கங்கிராட்ஸ், மாப்பிள்ளையிடம் எங்களின் மகிழ்ச்சியை சொல்லு. டேக் கேர் என்று துர்கா சொல்லி முடிப்பதற்குள், என்னது டேக் கேரா. நீயும், அப்பாவும் உடனே கிளம்பி இங்கே வரணும்.டாக்டர் என்னை கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்க சொல்லியிருக்கார். நீங்க வரும் வரை இவர் லீவு போட்டுட்டு பார்த்துப்பார். நீதான் V.R.S. வாங்கிட்டே இல்லம்மா. அப்பா ரிடையர் ஆயாச்சு. தம்பி ராம் அவனை அவனே பார்த்துப்பான். அதனாலே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கிளம்பி வாங்க. நான் திரும்பவும் நாளைக்கு கூப்பிடுறேன் என்று மொபைல் இணைப்பை துண்டித்தாள்.

துர்காவுக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும், நாம போட்ட ப்ளான்படி முதல் டோஸ் காஃபியை கூட நிதானமாக குடிக்க முடியலையே என்றபடி, ஒரே வாயில் குடித்து முடித்து, என்னங்க எப்ப கிளம்பனும், என்னவெல்லாம் வாங்கணும்னு ஒரு லிஸ்ட் போடுங்க, டைமே இல்லை என்று எழுந்து உள்ளே போனவளை பார்த்து, இந்த பெண்களால் மட்டும் எப்படி தனக்காக வாழாமல் கடைசி வரை தன் கணவர் குழந்தைகளுக்காகவே வாழ முடிகிறது என்று ஆச்சரியப்பட்டார்.
 
Vedha Vishal

நடப்பு
 
Kothaisuresh

Well-known member
நிதர்சனம் இதுதான். பெண்களுக்கு ரிட்டயர்மென்ட் ஏது
 
Top