கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே.... அத்தியாயம் - 5

Kodhai Nappinnai

Moderator
Staff member
என்னை மயக்கிய கார்குழலே!!!!

அத்தியாயம் - 5

‘அடக்கடவுளே! லிப்ட் நின்றது கூடத் தெரியாத அளவிற்கா இவனை வெறித்துப் பார்த்தோம்?’ என்ற உண்மை உறைக்க, அவமானத்தால் முகம் குப்பென்று கன்றிச் சிவந்தது.

அதே சமயம், இவன் என்னவோ தான் அவனுடன் நின்று பேசுவதற்காக ஒற்றைக் காலில் தவம் கிடப்பது போல் பேசுகிறான். அவனின் நக்கலை கூடப் போய்த் தொலைக்கிறது என்று விட்டுவிடலாம். ஆனால் அவளைப் பார்த்த பத்தாவது நிமிடத்தில் ‘ஸ்பிரிங் முடி’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்க, எவ்வளவு அகம்பாவம் இருக்க வேண்டும்? இதை அப்படியே விட்டால் அவள் குழலி அல்லவே!

“ஓ... சரியான மடச்சி நான்!” என்று உதட்டை காது வரை இளித்தபடி தலையில் லேசாகத் தட்டிக் கொண்டவள், “மிருகக்காட்சி சாலைக்குப் போகும்போது விசித்திரமான ஜந்துகளைப் பார்க்க நேர்ந்தால்... இப்படித்தான் நேரம் காலம் தெரியாமல் பார்த்துக்கொண்டே நிற்பேன்! அந்தப் பழக்கத்தோஷத்தில்... இங்கே நின்று விட்டேன்!’’ என்று அழகாகப் பதிலளித்தவள், அவன் அதன் பொருள் உணரும் முன் விருட்டென்று வெளியேறினாள்.

தலையைக் காய வைக்க கீழே போனவள், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீடு திரும்பியதைக் கண்ணுற்ற மஞ்சு, “என்னடி ஆச்சு?” என்றாள் அக்கறையாக.

“யாருடி அவன்?” என்றாள் மொட்டையாக.

“எவன்... அவன்?” என்றாள் மஞ்சு தலையும் புரியாது, வாலும் புரியாது.

“அதான் டி... அந்த ஆடி காரில் வந்து இறங்கியவன்!” என்றாள் குழலி அதே கொதிப்புடன்.

“நம்ம அப்பார்ட்மெண்ட்டில் ஆடி...ன்னா...” என்று இழுத்தவள், “ஆமாம்... ஆள் பார்க்க எப்படி இருந்தான்?” என்று வினவினாள்.

“எங்க ஊர் ராப்பிச்சைக்காரன் மாதிரி... கிழிந்து போன சட்டை, நின்ற நெடுமாறனாய் உயரம், கத்திரியே பார்க்காத ஜடா முடி!”

“ஹா... ஹா...”

அடக்கமாட்டாமல் வெடித்துச் சிரித்த மஞ்சுவைப் பார்த்து, தன் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, அவளை முறைத்தாள் குழலி.

“ஏன்டி என்னை முறைக்கிறாய்? நீ சொன்னதைக் கேட்டுச் சிரிக்காமல், பின்ன என்ன பண்ண சொல்ற? இருந்தாலும்... நீ எஸ்.பியை இவ்வளவு கேவலமா பேசக்கூடாது! ஐய்யையோ, இதைக் கேட்க இந்த நேரம் பார்த்து ப்ரியா இல்லையே!” என்று தன் கையை உதறியபடி பரபரத்தாள் மஞ்சு.

“என்னது... அவன் எஸ்.பியா? எந்த ஊருக்குடி... அவன் எஸ்.பி? ப்ரியாவிற்கும் அவனுக்கும் என்னடி சம்மந்தம்?”

“ஏன்டி எஸ்.பின்னா... சூப்பரின்டண்ட் ஆப் போலீஸா மட்டும் தான் இருக்கணுமா?”

“எஸ்.பியில் என்ன வெரைட்டி இருக்கு? ஊருக்கு ஊர் எஸ்.பின்ற பேரு மாறுமா என்ன?” எனப் பொறுமையிழந்து கேட்டாள் குழலி.

“விட்டால்... மியூஸிக் டைரக்டர் டி.எஸ்.பி. எந்த ஊருக்கு டி.எஸ்.பின்னு கேட்ப போல? சரி தான் போடி!” என்று சிரித்தபடி மொழிந்தவள், “அவர் பெயர் சூர்யபிரகாஷ்... அதைத்தான் சுருக்கமாக எல்லோரும் எஸ்.பின்னு சொல்லுவாங்க. போதுமா? அவர்தான் இந்த அப்பார்ட்மெண்ட்டைக் கட்டியதே!” என்றாள் விவரமாக.

“என்னடா... அவனைப் பார்த்தா போலீஸ் மாதிரி இல்லையேன்னு இப்பத்தான் நினைத்தேன். கடைசியில் அவன் கொத்தனாரா? நான்கூட, அவனை கார் டிரைவருன்னு தப்பா நினைச்சிட்டேன்!”

“வீடு கட்டறவன் எல்லாரும் கொத்தனாரா? நீ சொல்வதைப் பார்த்தா... காதல் பண்ணும் போது காதலின்னா... அப்போ கல்யாணம் பண்ணிக்கும் போது கல்யாணியா?”

“ஏய்... ஏன்டி இப்படிக் கடிக்கிற? நான் மட்டும் இல்லைடி... அந்த ஆள் போட்டுக் கொண்டிருந்த கிழிந்து போன பேண்ட்டையும், கசங்கிய சட்டையும், எண்ணெய் வைக்காத பரட்டை முடியையும்...”

அவள் பேச்சைக் கேட்டு மீண்டும், “ஹா... ஹா...” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் மஞ்சு.

“நான் என்ன கலக்க போவது யாருன்னு காமெடி ஷோவா நடத்துறேன்? இப்படிச் சிரியோ சிரியின்னு சிரிக்கிற?”

ஒருவழியாகச் சிரித்து முடித்த மஞ்சு, கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி “பின்ன? நீ இத்தனை நேரம்... டிரைவர், கொத்தனார்ன்னு வாய்க்கு வந்தபடி பேசினீயே... அவர் வெறும் சூர்யபிரகாஷ் இல்ல... ‘சூர்யா குருப்ஸ்’ஸின் சேர்மேன்! இந்த இடமே அவருடையது தான்! சும்மா காலியா இருந்த இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டி, கீழேயிருக்கும் ப்ளாட்ஸ் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, மேல் ப்ளோர் மட்டும் தனக்காக எடுத்துக்கொண்டார்! இந்த மாதிரி ஏகப்பட்ட அப்பார்ட்மெண்ட்ஸ், ஷாப்பிங் மால்ஸ்ன்னு சிட்டிக்குள்ளே இருக்கு! அவரோட பிரதான தொழில் கட்டுமானமாக இருந்தாலும் கூட... ஏகப்பட்ட பிஸினஸ் செய்வதாக அப்பா சொல்லுவார்! அப்படிப்பட்டவரைப் போய்... சித்தாள், கொத்தனாருன்னு சொன்னா... சிரிக்காமல் என்னடி பண்ண சொல்ற?” என்று விளக்கினாள்.

“ஸ்... ஓ... அதனால் தான் மேலே போனானா? ஆனா நான் வந்த நாளிலிருந்து ஒரு தடவை கூட அவனைப் பார்த்ததே இல்லையே?”

“அடியேய் மக்கு மடச் சாம்பிராணி! அவர் ப்ளாட்டுன்னு தானே சொன்னேன்... இங்கேயே வசிக்கிறார்னா சொன்னேன்? அவரோட பங்களா மகாபலிபுர ரோட்டில் இருக்காம்... இது ஊருக்கு உள்ள இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி! எப்பவாவது வருவார்... இல்ல, எஸ்.பியோட பாட்டி வந்து தங்குவாங்க!”

“இப்படிக் கஞ்ச கருமியா இருப்பதால் தான் ஊரெல்லாம் பில்டிங் கட்டிக் குவிக்கிறாரா?” என்றாள் குழலி யோசனையோடு.

“என்னது... கஞ்ச கருமியா?” என்று அவள் ஏதோ வேற்றுமொழி பேசியது போல் விழித்தாள் மஞ்சு.

“பின்ன என்னடி? அப்பேற்பட்ட மாகானுபாவர் கிழிந்து போன பேண்ட்டும், கசங்கிய சட்டையும் போட்டுக்கொண்டு திரிந்தால்... கஞ்ச பிரபுன்னு சொல்லாமல்... கடையேழு வள்ளல்களில் இவனையும் சேர்த்துக்கங்கன்னு சொல்லுவியா?”

“உலக அதிசயங்கள் ஏழுன்னு தெரியும். அது யார்டி கடை ஏழு வள்ளல்?”

“அடிப்பாவி... நீயெல்லாம் என்னடி தமிழ் படிச்ச?” என்று பொங்கினாள் குழலி.

“நான் பிரெஞ்ச் படிச்ச தமிழச்சி!” என்றாள் மஞ்சு பெருமையாக.

“ஆமாம் ஒத்துக்கிறேன்... அதுக்காக முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும், மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனையும் எப்படித் தெரியாமல் இருப்ப?”

“அம்மா தாயே போதும்... தமிழ் க்ளாஸ் எடுக்காதே! ஏற்கனவே பசி மயக்கத்தில் இருக்கேன்... அப்புறம் மயங்கி விழுந்துடுவேன்! இப்ப ப்ரியா வருவா... அவளிடம் இதையெல்லாம் வைத்துக்கோ. என்னை விட்டுடுடி!” என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டாள் மஞ்சு.

“அடிப்பாவி!” என்று குழலி கூறியதைக் காதிலேயே விழாதது போல,

“அந்தக் கிழிந்த டிசைனர் பேண்ட் தான் இப்போதைய பேஷனே! அதோட விலை... குறைந்த பட்சம் இருபதில் இருந்து முப்பதாயிரமாவது இருக்கும் தெரியுமா?” என்று பேச்சை மாற்றினாள் மஞ்சு, இல்லையென்றால் தமிழ் கிளாஸ் எடுக்காமல் விட மாட்டாளே என்ற பயம் அவளுக்கு.

“கடவுளே! காசு கொடுத்து நல்ல துணி வாங்கி அப்புறமா கிழிப்போம்... இவன் என்னடி ஏற்கனவே கிழிந்த உடையைக் காசு கொடுத்து வாங்குறான்? முதல்ல, எங்க ஊரில் டிரஸ் கிழிந்து உடுத்தினா தரித்திரம்னு சொல்லி... அதைத் தூக்கிக்கொண்டு போய் சாமான்காரனுக்குப் போட்டு வெங்காயம் வாங்குவோம்! ஆனா இங்க என்னடி புதுவிதமா... கிழிந்த கண்றாவியை... இவ்வளவு விலை கொடுத்து வாங்குறாங்க?” என்று கண்களை உருட்டி அதிசயித்தாள் குழலி.

“அடியே கிருஷ்ணாவரத்துக்காரி! இது சென்னைடி... இங்க இப்படித்தான் இருப்பாங்க... கண்டுக்காதே! சிலருக்கு அறிவிருந்தா... அழகிருக்காது, அழகிருந்தா... அறிவிருக்காது! ஆனா எஸ்.பிக்கு இந்த இரண்டும் அளவிற்கு அதிகமாகவே உண்டு... அதனாலேயே...”

“அவரோட ஆறடிக்கு, இரட்டிப்பாகத் திமிரும் உண்டு என்றுதானே சொல்ல வர?” என்று அவள் ஆரம்பித்து வைத்ததை, கச்சிதமாக முடித்து வைத்தாள் குழலி.

“என்னடி குழலி... திடீரென்று தீர்க்கத்தரிசியாகிட்ட!” என்று சிரித்தபடி பாராட்டியவள், “இங்க வந்த புதிதில்... அவரைப் பற்றி எதுவும் தெரியாது, சும்மா ப்ரெண்ட்லியா ஒரு ஹாய் சொன்னேன்! என்னோட பேசப் பிடிக்கவில்லை என்றால்... நான் சொன்னது காதிலேயே விழாதது போலயோ... இல்லை, என்னைப் பார்க்காதது மாதிரியோ போக வேண்டியது தானே? அதை விட்டுட்டு, என்னை ஒரு பார்வை பார்த்தாரு பாரு... என்னமோ அசிங்கத்தை மிதித்த செருப்பைப் பார்ப்பது போல ஒரு பார்வை... அந்து லுக்கு இந்த ஜென்மத்திற்கும் மறக்காதுடி குழலி!” என்று ஆமோதித்தாள்.

“ச்சீ அவனும் ஒரு மனுஷனா?” என்று மஞ்சு சொன்னதை ஜீரணிக்க முடியாது பொருமியவள், “போயும்... போயும்... அந்த ஆளை ஏன்டி... அவர் இவர்ன்னு இவ்வளவு மரியாதையா கூப்பிடுற? மரியாதை தெரியாதவனுக்கு எல்லாம்... எதுக்குடி மரியாதை தரணும்? அவன் உன்னிடம் இப்படி நடந்துகிட்டது முன்னையே தெரிந்திருந்தால்... அவனை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன்! ஏதோ அவன் நல்லநேரம்... தப்பித்து விட்டான்!” என்று சீனிப்பட்டாசாய் பொறிய தொடங்கினாள்.

“எஸ்.பியோட ஜபர்தஸ்தான தோற்றமோ, இல்லை அந்த மிடுக்கோ... எதுன்னு குறிப்பிட்டுச் சொல்லத் தெரியலை. ஆனா அவரிடம் இருக்கும் ஏதோ ஒண்ணு மரியாதைக்குறைவா பேச விடலைடி!” என்று மறுத்து மொழிந்தவள், “இதற்கே இப்படித் தையா தக்கான்னு குதிக்கிறாயே... ப்ரியாவின் கதை இதைவிட மோசம் தெரியுமா?” என்று பீடிகையிட்டாள்.

“ஆமாம்... முன்னாடியே ப்ரியாவைப் பற்றி என்னமோ ஆரம்பித்தாய் இல்லை?”

“ம்ம்ம்... எங்கேயோ அவசரமா வெளியே கிளம்பும் போது அவளுடைய ஸ்கூட்டி பஞ்சராயிடுச்சாம்... அப்போ பார்க்கிங்கிலிருந்து தன் காரை வெளியே எடுத்திருந்த எஸ்.பியிடம் கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரைக்கும் ட்ராப் பண்ண சொல்லி லிப்ட் கேட்டிருக்கா... அதுக்கு அவரு, ‘என் கார் ஒண்ணும் ஷேர் ஆட்டோ இல்லை’ன்னு ரூடா பதில் சொல்லிட்டு, விர்ருன்னு கிளம்பியிருக்கார்!”

“அடப்பாவி! அவனை...”

“பொறு மகளே... கொஞ்சம் பொறு! அப்பேற்பட்ட அரகண்ட் எஸ்.பியையே ரொம்ப நல்லவர் ஆக்கிவிடுவார்கள்... அவரோட பாட்டி கமலம்மா! எஸ்.பியாவது நாமாகப் போய்ப் பேசினால் தான் திமிரா நடந்துப்பார். ஆனா அவங்க பாட்டி இருக்கே... எப்பா... நாம சும்மா அவங்க போகும்போது அந்த வழியா க்ராஸ் செய்தால் விடுவாங்களே ஒரு லுக்கு! ப்பா... நம்மையும் அறியாமல் கால் தானா நின்றுவிடும்! அப்படி ஒரு ஜபர்தஸ்தா இருப்பாங்கடி... அதனாலேயே அவங்களுக்கு ‘நீலாம்பரி’ன்னு பட்டப்பேரு! இந்த அப்பார்ட்மெண்ட்டில் இவங்களோட தப்பித் தவறி கூட யாரும் பேச்சு கொடுக்க மாட்டோம். ஆமாம் இவ்வளவு கேட்கிறீயே... உன்னை என்னடி சொன்னார்?” என்று மஞ்சு கேட்க, திக்கென்றது குழலிக்கு.

‘அவனை கார் டிரைவர் என்று எண்ணி உளறிக்கொட்டி கிளறி மூடியது போதாதென்று, இலவச அட்வைஸ் வேறு தந்ததை இப்பொழுது சொன்னால்... அடுத்த அரை நிமிஷத்தில் ஊர் உலகத்துக்கே செய்தி பரப்பிவிடும் இந்த பி.பி.சி!’ என்று நினைத்தவள், உஷாராய் “அது... அது ஒன்றுமில்லைடி! காரைக் கொண்டு வந்து ரொம்ப வேகமாக ஒடித்து நிறுத்தினானா... அதான் விவரம் கேட்டேன்!” என்று சமாளித்தாள்.

“நிஜமாவா?” என்ற மஞ்சு மேலும் குடைய ஆரம்பிக்க... அந்த நேரம் சமய சஞ்ஜீவியாக காமாட்சியின் குரல் அவர்களை இருவரையும் சாப்பிட அழைக்கவும், அந்தப் பேச்சு அத்தோடு நின்றது.

மூன்று மணியளவில் பெரியம்மாவும், மஞ்சுவும் உண்ட களைப்பில் படுத்ததும் உறங்கி விட, தூக்கம் வராது புரண்டு படுத்தவளுக்கு மஞ்சு அவனைப் பற்றிச் சொன்னதெல்லாம் திரைப்படமாக ஓட... எங்கேயோ நெருடியது!

‘ப்ரியாவிடமும் மஞ்சுவிடமும் உம்மனாமூஞ்சியாக இருந்தவன், என்னிடம் மட்டும் எப்படிப் பதிலுக்குப் பதில் சரளமாய்ப் பேசினான்? அதுவும் தன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே... பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு?’ என யோசிக்க யோசிக்க மேலும் குழப்பியது தான் மிச்சமே தவிர, உருப்படியான விளக்கம் ஒன்றும் கிடைத்தபாடில்லை.

எத்தனை நேரம் தான் தூக்கம் வராது சும்மா படுத்துக் கிடப்பது என்று எரிச்சல்பட்டவள், சரி மொட்டைமாடியில் காயப்போட்டிருந்த துணியையாவது எடுத்து வந்து மடிக்கலாம் என்று மேலே சென்றாள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு படி வழியாக இறங்கியவளுக்கு, மலை போலிருந்த உலர்ந்த துணி கண்களை மறைக்க, நேராக சென்று யார் மீதோ முட்டிக்கொண்டாள்.

“என்ன ஸ்ப்ரிங் முடி... எனக்குக் கண் தெரியுமான்னு கேட்டுவிட்டு... இப்போ நீயே கண் தெரியாமல் என்மீது மோதுற?” என்ற சூர்யபிரகாஷின் ஆழ்ந்த குரல், அவளது செவிப்பறையில் விழுந்தது.

“இதோ பாருங்க... மிஸ்டர் ஸ்...ஸ்...ஸ்...” என்று தொடங்கி நெற்றியடியாகப் பதில் பேச யத்தனித்தவள், சன் கிளாஸ் அணியாத அவனின் தேன் நிறக் கண்களை முதன்முறையாகக் கண்ணுற்றவளுக்கு.... அவள் சொல்ல வந்தது, சொல்லிக் கொண்டிருந்தது என எல்லாம் மறந்து போய்... அதுகாறும் பேசிக்கொண்டிருந்த தாய்மொழியாம் தமிழ்மொழி மறந்து, பேச்சிழந்து, கையிலிருந்த துணிகள் எல்லாம் கீழே விழுந்தது கூட உணராது... சொக்கிப்போய் நின்றாள் கார்குழலி.

அந்தக் கண்களின் நிறத்தை என்னவென்று சொல்வது? தேனின் நிறமென்றால்... மொத்தமாக தேனைப் பாத்திரத்தில் கொட்டினால் தெரியும் அந்த அடர்ந்த சிவப்பு அல்ல... மரத்தில் இருக்கும் படர்ந்த தேனடையில் தேன் நிரம்பியவுடன், அந்தத் தேனடையின் கீழே வழியும் ஒவ்வொரு சொட்டும்... அதிகாலை செங்கதிரோனின் பொன்னிறக் கிரணங்கள் அதன்மீது வீச, தேனின் அடர்த்தியால் ஒளிவெள்ளம் உள்ளே நுழைய முடியாது, அந்தத் தேன்துளி மீது ஒரு மெருகைப் பூச... அந்த நொடி அந்தத் தேன்துளியானது, தகதகவென்று தங்கம் கலந்த வெளிர் சிவப்பில் மின்னி மிளிருமே... அது போன்றதொரு தேனின் நிறம்!

“மரத்தில் ஏறாதே!” என்று பாட்டி திட்டுவதைக் காதிலேயே வாங்காமல், அதிகாலை சூரிய ஒளியில் ஜொலிக்கும் தேனைப் பார்த்து மணிக்கணக்காக ரசித்திருக்கிறாள். அந்த நிறத்தில் ஒருவரின் கண்கள் இருக்கக் கூடும் என அவள் இது நாள் வரை கனவில் கூட நினத்ததில்லை.

ஒருவித மலைப்போடு, நம்பமுடியாத தன்மையோடு அன்று இரண்டாம் முறையாக அவனைப் பார்த்துக்கொண்டே, தன்னை மறந்து நின்றாள் கார்குழலி.

அவளுடைய மலைப்பை வேறுவிதமாக அர்த்தம் செய்துகொண்டவன், முகம் இறுக “நான் யார் என்று தெரிந்தவுடன்... உனக்கு சாரி சொல்ல நாக்கு துடிக்குமே?” என்றான், “நீயும் இவ்வளவு தானா?” என்பது போன்றதொரு அலட்சியக் குரலில்.

அவனின் பேச்சும், குரலிலிருந்த அலட்சியமும் அவளைச் சிலிர்த்து எழச் செய்தது.

‘இவன் கண்கள்... இவ்வளவு அழகாக இருந்து என்ன பயன்? வார்த்தைகள் அழகாக இல்லையே!’ என்று பெருமூச்சு ஒன்றை அவன் அறியாமல் விட்டவள், தன் மயக்கத்தை மூட்டைக் கட்டி ஓரம் போட்டாள்.

‘கொக்கு என்று நினைத்தாயோ... கொங்கணவா’ என நினைத்தவள், “நான் எதுக்கு சாரி கேட்கணும்?” என்று யோசனையாக இழுத்தவள், “ஸ்...ஸ்...ஓ உங்களை டிரைவர் என்று எண்ணியதற்காகவா... இல்லை கண்ணு தெரியாதவருன்னு கேலி பேசியதற்காகவா? ஏதோ நானாக இருக்க போய்... உங்களை டீசண்டாக நினைத்தேன்! இது மட்டும் எங்க கிருஷ்ணாவரமாக இருந்திருந்தால்... இப்படிக் கிழிந்து போன டிரஸ்ஸை போட்டுக்கொண்டு நின்றதற்கு, உங்களை ராப்பிச்சைக்காரன்னு நினைத்திருப்பார்கள் தெரியுமா?” என்றாள் ஏளனமாக.

அவள் பேசப் பேச, அந்தத் தேன் நிற விழிகளில் எண்ணிலடங்கா பாவங்கள் வந்து நர்த்தனம் ஆட... அதில் குழலி மிகவும் ரசித்தது அவனின் அதிர்ச்சியைத் தான்!

அந்த அதிர்ச்சி விலகாது, “எந்தப் பெண்ணும் என்னிடம் இப்படிப் பேசியதில்லை!” என்று முணுமுணுப்பாக அவன் சொன்னது, அவளது காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது.

முகத்தில் வெற்றிக்களிப்புடன் “ஓ! அப்போ இதுவரை நீங்க எந்த ரோஷமுள்ள பெண்ணையும் பார்த்தது இல்லையா?” என்று இழுத்தாள்.

“நீ ரொம்பப் பேசுகிறாய் கார்குழலி!”

“என்னது... நான் ரொம்பப் பேசுகிறேனா?” என்று நக்கலாகச் சிரித்தவள், “நான் இன்னும் முன்னுரை கூட ஆரம்பிக்கவில்லை. நீங்க அதற்குள் முடிவுரைக்கே போயிட்டீங்களே!” என்று அநியாயத்திற்கு ஆச்சர்யப்பட்டாள் குழலி.

“நீ யாரோடு பேசிக்கொண்டு இருக்கிறாய் தெரியுமா? சூர்யா குருப்ஸ் சேர்மேனுடன் பேசிக்கொண்டு இருக்கிறாய்... அதை மறந்துவிடாதே!” என்றான் எச்சரிக்கும் குரலில்.

“சூர்யா குரூப்ஸ் சேர்மேனுக்கும்... எனக்கும் என்ன பேச்சு வேண்டியிருக்கு? நான் பேசுவது... என் பெரியம்மா வீட்டின் மாடியில் இருக்கும் மிஸ்டர் சூர்யபிரகாஷிடம் தான்! இப்ப புரியுதா... உங்க பிரச்சனை என்னன்னு?”

‘தன்னை சேர்மேன் அல்லாது அடுத்த வீட்டுகாரனாகக் கூட ஒரு பெண்ணால் பார்க்க முடிகிறதா?’ என்ற மலைப்பு மாறுவதற்குள், அவள் அசால்ட்டாக அடுத்தக் குண்டை வீச...

“வாட்? எனக்குப் பிரச்சனையா?” என்றான் நம்பமாட்டாத குரலில்.

கொஞ்சமும் அசராமல் “சாட்சாத்... உங்களுக்கே தான்!” என்றாள் குழலி அழுத்தம் திருத்தமாக.

தன் திகைப்பிலிருந்து சுதாரித்துக் கொண்டவன் “அப்படி இதுநாள் வரை எனக்கே தெரியாத பிரச்சனையை என்னவென்று... என்னிடத்தில் பேசிய இந்த ஐந்து நிமிடத்தில் கண்டுபிடித்துவிட்டாய்?’’ என்றான் சலித்த குரலில்.

“உங்களோட பிரச்சனையே... உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரியாதது தான்!” என்றாள் கைத்தேர்ந்த சைக்கிரியாடிஸ்ட் போல.

சப்பு கொட்டியபடி தன் பரந்த மார்பின் குறுக்கே, தன் நீண்ட கைகளைக் கட்டியவன் “நீ இன்னமும்... எனக்கே தெரியாத பிரச்சனை என்னன்னு சொல்லவில்லை ஸ்பிரிங் முடி!” என்றான் அமர்த்த குரலில்.

பற்களை நறநறவென்று கடித்தபடி “என் பெயர் கார்குழலி!” என்றாள்.

“ம்... அப்படியா ஸ்ப்ரிங் முடி?” என்று வினவிய போது, அவனது கண்கள் மின்னின.

ஒரு நிமிஷம் அவனிடம் மல்லுக்கட்ட விழைந்தவள், மறுகணம் அந்தக் கண்களின் மினுமினுப்பு மூளையில் எங்கோ ‘கிளிங்’கென்று மணியடிக்க, அவளுள் ஒரு தெளிவு பிறந்தது.

“என்னைத் திசை திருப்பத்தானே இப்படிப் பேசினீங்க?” என்று இளக்காரமாகச் சிரித்தவள், “இந்த குழலியை ரொம்பக் குறைவா மதிப்பிட்டுட்டுட்டீங்களே... அப்படி எல்லாம் என்னை எளிதில் திசை திருப்ப முடியாது மிஸ்டர் சூர்யபிரகாஷ்! அடுத்த முறை, இன்னும் நல்லா யோசித்து முயற்சி செய்யுங்க... சரியா? ஆங்... இப்ப உங்க பிரச்சனை பற்றித்தானே பேசிக்கொண்டு இருந்தோம்? அது என்னன்னா... நீங்க எப்பொழுதும் உங்களை ‘சேர்மேன் சூர்யபிரகாஷ்... தி கிரேட்’டாகவே நினைத்துக்கொண்டு திரிவது தான்! இப்படியே இருப்பத்தி நாலு மணிநேரமும் விரைப்பாக, கஞ்சி போட்டவர் மாதிரி இருந்தீங்கன்னா... அப்புறம் அறுவது வயதில் வர வேண்டிய எல்லா வியாதியும், முப்பது வயதிலேயே வந்துவிடும்! அதனால கொஞ்சம் அடுத்து வீட்டு சூர்யபிரகாஷாகவும் நடக்க, பழக முயற்சி பண்ணுங்க!” என்று நீளமாகப் பேசி முடித்தாள்.

தன் காதுகளையே நம்பமுடியாது, வாழ்க்கையில் முதன்முறையாகப் பேச்சிழந்து, தன் எதிரில் சுருள்முடியுடன் ஐந்தரை அடியில் நின்ற ஜீவனை வெறித்தான் சூர்யபிரகாஷ்.

‘இதுக்கே வாயடைச்சுட்டா எப்படி?’ என்று மனதிற்குள்ளேயே கறுவிக் கொண்டவள், அவனின் அதிர்ந்த தோற்றத்தைக் கண்டுகொள்ளாமல் “நான் சாரி கேட்க வேண்டும் என்று சொன்னீங்களே, நியாயப்படி பார்த்தால்... நீங்க தான் என்னிடம் சாரி கேட்க வேண்டும் தெரியுமா?” என்றாள் கண்களை உருட்டி.

“வாட்? வாட்... நானா? உன்னிடம் நான் சாரி கேட்க ஒரு ரீஸன்... ஒரே ஒரு வேலிட் ரீஸன்சொல்லு பார்ப்போம்?” என்று சவால்விட்டான்.

“ஒண்ணு என்ன... ஒன்பது சொல்லுவேன்!” என்றபடி அவனின் சவாலைச் சாதாரணமாக ஏற்றவள், விரல்களை அவன் முகத்தின் முன் நீட்டி “ஒன்று!” என்றபடி தன் சுண்டுவிரலை மடக்கி, “காம்பௌண்டிற்குள் எண்பது கிலோமீட்டர் ஸ்பீடில் காரை ஓட்டியது! இரண்டு... என் மேல் உராய்ந்தது! மூன்று... மோதிவிட்டு ஒரு சாரி கூடச் சொல்லாமல் போனது! நான்கு... நான் உங்களை டிரைவர்ன்னு தப்பா நினைத்துப் பேசி வைக்க, உண்மையைச் சொல்லாமல் மறைத்தது! ஐந்து... கொஞ்சம் கூட மட்டு மரியாதையே இல்லாமல் என்னை உங்க வீட்டு வேலைக்காரி மாதிரி... நீ, வா, போன்னு ஏக வசனத்தில் அழைத்தது! ஆறு... என்னைப் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிட்டது! ஏழு...” என்று சொல்லிக் கொண்டே சென்றாள்.

அதற்குமேல் கேட்க சகிக்காமல், “பஸ்... பஸ்!” என்று அவன் இரண்டு கைகளையும் ஆட்டினான்.

“நீங்க பெரிய லார்ட் லபக்குதாஸா இருக்கலாம். ஆனா அதுக்காக மொட்டை மாடியிலிருந்து ‘பஸ்’ன்னு கூப்பிட்டால்... ரோட்டில் போற பஸ் நின்று விடுமா என்ன?”

அவள் சொல்வது எதுவும் விளங்காது ஓரிரு நிமிடம் விழித்தவன், பின் குபீரென்று வெடித்துக் குலுங்கி சிரித்தான்.

அந்த உல்லாசச் சிரிப்பில்... அவனுடைய கண்களில் சொல்லொன்னாத ஹாசியம் மின்னி, இருண்ட வானம் போலிருந்த முகத்தில்... அந்தச் சிரிப்பின் ஒளிக்கீற்றால், அவன் பேருக்கு ஏற்றபடி சூர்யபிரகாஷமாய் மாறி... அவனுக்கென ஒரு தனி வசீகரத்தை தோற்றுவித்தது!

அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியாவிட்டாலும் கூட, அந்த உல்லாசச் சிரிப்பு பொங்கி வரும் புதுப் புனலின் சுழல் போல தாக்கி, அவளைத் திக்குமுக்காட செய்ய... எவ்வளவோ விடுபட முயன்றும் அந்த உணர்வு மங்காததால், அந்தத் தேன் நிறக் கண்களில் சிக்கி, தன் மனமும் அதிவேகமாகச் சுழலுவதைப் போன்றதொரு மாயை அவளை ஆட்கொண்டது.

தொடரும்...

அடுத்த பதிவு - திங்கள் கிழமை.

DEAR READERS....

உங்கள் கருத்துக்களை இங்கேயே பதிவிடலாம்...
 
Chitra Balaji

Well-known member
Super Super maa... Nice episode.... அவன Zoo உள்ள jeeva raasi nu sollitu vanthutaa..... அவன் தான் அந்த apartment ke owner ah.... Congratulations கம்பெனி vechi இருக்கான் ah avanuku mela போல அவன் பாட்டி.... யாரு kitayum pesaathavan iva kita matum eppadi avvallavu iyalba பேசுறான்..... Avanodaya கண்ணு super.... வாய் ku வாய் பேசுறா அவன் kita... Super Super maa
 
Mehala Devi

New member

Super epi dear. Story romba interesting ga pooguthu. Waiting for next epi early. Tq.
 
Mehala Devi

New member
ரொம்ப நல்லா இருக்கு கதை. அடுத்து என்ன நடக்கப் போகுதுனு ஒரே இகர இருக்கு. Super. Carry on. Tq.
 
Top