கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே!!!.... அத்தியாயம் - 10

Kodhai Nappinnai

Moderator
Staff member
அத்தியாயம் - 10

நிரல்யாவின் சீக்ரெட் செம்பராக இருப்பேன் என்று சொன்னவனிடம் “எப்படி மறப்பது?” என்ற கேள்வியின் மூலம் அவளின் சீக்கிரட் செம்பரை அவனிடத்து திறந்துக்காட்ட… ஊர் உலகமே போற்றி தலையில் வைத்து கொண்டாடும் அந்த ஞாபகம் சக்கியின் மறுபக்கம் அத்தனை உவப்பானதாக இல்லை என்பதை அன்று தான் ஐய்யம் திரிபுர அறிந்தான்!!!

அவன் இதுவரை பழகிய நண்பர்கள் முதல் குடும்ப அங்கத்தினர் வரை சொல்லி காதில் கேட்டு புளித்து போன ஒரு பதம் உண்டெனில் “ஜய்யோ மறந்து விட்டேன்” என்பது தான்.

இந்த சூத்திரத்தை எப்படி ஞாபகத்தில் வைத்துக்கொள்வது?? எத்தனை தடவை படித்தாலும் மறந்து போகிறது என்று ஆரம்பித்து விதவிதமாக “மறந்து போவதை” வயது வித்தியாசம் இல்லாது சொல்லி கேட்டு தான் இதுவரை அவனுக்கு பழக்கம்.

முதல் முறையாக எப்படி மறப்பது என்று நிரல்யா கேட்க எப்பயும் போல் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

அன்று அவன் யூகித்த மாதிரி இவள் பள்ளியில் சக தோழிகளுடன் பேசி பழகினாள் நார்மலாக இருப்பாள் இப்படி விசித்திரமாக கேள்வி கேட்க மாட்டாள் என்று நினைத்தது எத்தனை தவறு என்று அந்த சஷனத்தில் உண்மை தீயாய் உரைத்தது.

அதை விட “நார்மலான” உலகத்திற்கு அவளை கொண்டு வருவது தன் சிறகை விரித்து கண்டம் விட்டு கண்டம் தாண்டி பறக்க கூடிய திறன் படைத்த பறவையின் சிறகை பார்வைக்கு வித்தியாசமாக இருப்பதாக நினைத்து வெட்டி விடுவது போல் ஆகிவிடும். கண்களால் கண்டதையும், காதால் கேட்டதையும் இம்மி அளவு கூட மறக்க முடியாத அவளின் உலகம் முற்றிலும் வேறு... அதனால் வரும் எண்ணங்கள் வேறு… அந்த எண்ணங்களால் விளையும் சங்கடங்கள்.. அந்த சங்கடத்தினால் அவள் சந்திக்கும் பிரச்சனைகளின் ஆழத்தை கண்டவனுக்கு அடியும் முடியும் இல்லாத ஒரு அதள பாதளத்தில் விழுவது போல் இருந்தது!!!

இதனால் தான் நிரல்யா எல்லோரிடமும் சகஜமாக பேசி, சிரிப்பது இல்லையோ?? உடலில் ஒரு கிருமி நுழைந்தால் தானாகவே உடம்பில் உள்ள அணுக்கள் அதை எதிர்க்குமே இது போல் தேவையற்று சேமிக்கப்படும் எண்ணற்ற அலைகளில் இருந்து தப்பிக்க தான் அவளே அறியாது எல்லோரிடமும் தள்ளியே இருக்கிறாளோ??

இதை உணர்ந்து தான் அவளின் தந்தை பள்ளியில் சேர்க்காது வீட்டில் இருந்தப்படியே தனித்து படிக்க வைத்தாரா?? நாம் தான் பிரச்சனையின் தீவிரம் தெரியாது இடக்காக பேசி விட்டோமோ என்று மனது குற்ற உணர்ச்சியில் உழன்றது!!!

அதை விட விசித்திரமாக மனிதர்களுக்கு மறதி என்பது எத்தனை பெரிய வரம் என்பதை அறிவு பூர்வமாக அறிந்ததும் அன்று தான். மறதி என்னும் அருமருந்து மட்டும் மனிதகர்களுக்கு வாய்கவில்லை என்றால் இன்நேரம் மனித குலமே தாங்க முடியாத துயர சம்பங்களையும் மட்டுமே நினைந்து மனநோயாளியாக தான் திரிந்திப்பார்கள்.

இப்படியாக நாலா புறத்திலும் இருந்து கேள்விகள் அவனை சுழன்று அடிக்க எதற்கும் பதில் தெரியாது அவன் திக்கு முக்கு ஆட… அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நிரல்யாவிடம் இருந்து “தண்ணீர்” என்று ஈனசுரத்தில் காதில் விழ அவசரமாக அங்கே இருந்த சுடு தண்ணீரை கப்பில் ஊற்றி எடுத்து வர அவள் சிரம்பட்டு கையை நீட்டினாள்.

“பயப்படாதே… உன் மேல் ஊத்திட மாட்டேன்.. இது மாதிரி ஓராயிரம் தடவை சங்கி மங்கிக்கு வாயில் ஊற்றி இருக்கிறேன்” என்று சொன்னதோடு நில்லாது அந்த எலட்டிரிக் படுக்கையை நிமிர்த்தி மிக லாவகமாக தண்ணீர் புகட்டிவிட்டு மீண்டும் படுக்க வைத்தான்.

“அப்பாவிற்கு அவர்களின் அம்மாவின் மீது அதிதீத பாசம் என்பதால் உனக்கு பாட்டியை ரொம்ப பிடிக்கும் அப்படி தானே??” என்றான் அவள் கேட்ட எப்படி மறப்பது என்ற கேள்வியை முற்றிலும் மறந்தவனாக.

“இல்லை… என் அம்மாவிற்கு ரொம்பவே உடம்பு முடியாமல் போனதால் என்னை முதன் முதலில் தூங்கியதே என் பாட்டி தானாம்… எனக்கு நிரல்யான்னு பெயர் வைத்தவங்க கூட அவங்க தான். அவங்களுக்கு தன் ஓரே மகன் மேல் ரொம்ப பிரியம்… அதை சொல்லி சொல்லி வளர்த்த்தால் எனக்கு அப்பா என்றால் உயிர்” என்றாள் லேசாக சிரிக்க முயன்று.

“சொ நீ இப்படி அப்பா பைத்தியமாக திரிவதற்கு முழுமுதற் காரணம் உன் பாட்டி தானா?”

“கடைசியாக இந்த அறையில் என் பாட்டி இருந்த போது என்னிடம் நிறைய பேசினாங்க அதில் அவங்க முக்கியமாக கூறியது “அப்பா எது செய்தாலும் உன் நல்லதுக்கு தான் செய்வார்… உன் அப்பாவை குறை சொல்லாதே.. இது இப்ப புரியாது பின்னால் புரியும் போது இந்த வார்த்தையை ஞாபகத்தில் நினைவுப்படுத்திக்கொள் என்று மீண்டும் மீண்டும் சொல்லியப்படியே இருந்தாங்க" என்றாள் தொண்டை அடைக்க.

பேச்சு பாட்டியின் கடைசி நாட்களுக்கு செல்வதை விரும்பாதவன் அந்த பேச்சை வளர்க்காது “உன் பாட்டிதான் பழைய ஆளே தவிர பெயர் ரொம்பவே டிரண்டியாக நிரல்யான்னு பெயர் வைத்திருக்காங்க சங்கி மங்கி உன்னை நிறு என்று அழைக்க நிருப்பாவோ இல்லை நிர்மலாவோ ஏதோ இருக்குன்னு நினைத்தேன் ஆனால் நிரல்யான்னு ரொம்ப வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை”

“நிரல்யாவும் பழைய பெயர் தான்… ரொம்பவே பழைய பெயர்… சொல்ல போன சங்க கால தமிழ் பெயர்”

“என்னது?? சங்க கால பெயரா ஆனால் நான் இப்பதான் முதல் முறையாக கேட்கிறேன்” என்றான் அதிர்ச்சியாக.

“சங்க இலங்கியத்தில் சோழன் கரிகால் வளவனை முடத்தமாக கண்ணியார் பாட்டுடைத்தலைவனாக கொண்டு இயற்றிய நூலான பொருநராற்றுப்படையில் “நிரல்” என்ற சொல்லிற்கு குறைப்பாடுகள் அல்லாத என்ற பொருள் படும்படியாக கூறி இருக்கிறார். அணி இலக்கணத்தில் “நிரல்நிறை அணி” என்று பதத்தில் வரும் “நிரல்” என்ற சொல்லிற்கு “வரிசை” என்று பொருளும் உண்டு… அடிக்கடி நாம் நிகழ்ச்சி நிரல், செய்தி நிரல் என்று கேட்போமே அதற்கு வரிசை என்ற மற்றொரு பொருள். ஒரு பதத்திற்கு இரண்டு பொருள் இருந்தாலும்… என் பாட்டி “குறைப்பாடு இல்லாதவள்” என்னும் பொருளைக்கொண்டு “நிரல்யா” என்று வைத்தார்களாம்” என்று விரிவாக அவளின் பெயருக்கு பின்னால் இருந்த விளக்கத்தை கேட்டவனுக்கு அந்த பெயர் முன்பை விட இப்பொழுதும் மிகவும் அழகாக இருப்பது போல் தோன்றியது!!!

“வாவ்.. உன் பாட்டி இத்தனை படிப்பாளியா??” என்றான் ஆச்சரியமாக.

“அவர்களின் பெயரில் பள்ளியே இருக்கும் போது அவர் படிப்பு அறிவு இல்லாதவராக இருக்க முடியும்??”

“அதுவும் சரிதான்.. ஆனால் இந்த ரசகுல்லா எடுக்க போன சங்கியை இன்னும் காணவில்லையே??” என்று அவன் யோசனையாக கதவை பார்க்கும் போதே…

தோழியை பற்றி நன்கு உணர்ந்தவள்.. “திக்கு தெரியாது தொலைந்து போய் இருப்பாள் தேடி பிடித்து வந்து விடுவாள்” என்றாள் நிரல்யா மிக சரியாக.

சங்கிக்கு சிறுவயதில் இருந்தே திக்கு தெரியாது அடிக்கடி தொலைந்து விடும் வழக்கத்தை கொண்டவள். ஆனால் அந்த குறையை ஈடு கட்டும் விதமாக வாய் இருப்பதால் வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பதற்கு இணங்க எப்படியோ கேட்டு தெரிந்துக்கொண்டு வந்து விடுவாள்.

“சங்கி சொன்னாள் நீங்க தாத்தா பாட்டிக்கு துணையாக வந்திங்கன்னு..??”

“இது எங்கள் மருத்துவமணை என்று உனக்கு தெரியும் தானே?? இங்க வருவதற்கு பாட்டி ஏன் என்னை துணைக்கு அழைக்க வேண்டும்??”

“அப்படின்னா??”

“என் பாட்டியின் லாஜிக்கை பற்றி கேட்காதே.. உன் அறிவிற்கு என் அறிவிற்கும் அப்பாற் பட்டவங்க அவங்க… இங்கே கிளம்பி வரும் போதே நிச்சயமாக நான் உன்னை பார்ப்பேன் என்று தெரியும் ஆனால் இப்படி அட்மிட் ஆகி இருப்பாய் என்று உணரவில்லை” என்றான் வருத்தமாக.

" ம்ம்.." என்று தலையை ஆட்டியவள் “எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போல் இருக்கு” என்றாள் முணுமுணுப்பாக.

“போச்சுடா…” பெருமூச்சு ஒன்றை விட்டவன், “வரச் சொல்கிறேன்... இப்ப கொஞ்சம் நேரம் நீ தூங்கு” என்று கூறிவிட்டு சங்கி பிடித்திருந்த அதே விரல்களை மெல்ல பற்றி தடவிக் கொடுக்க அவன் சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் நித்திரையில் ஆழ்ந்தாள் நிரல்யா!!!

சங்கி தன் ரசகுல்லா டின்னை தூங்கிக்கொண்டு வேர்க்க விருவிருக்க கதவை திறந்துக்கொண்டு வந்தவள் தன் தோழி நித்திரையில் முழுகியதை கண்டு அங்கேயே வைத்து விட்டு அண்ணணுக்கு அருகில் அவளும் அமைதியாக நிற்க… வேலை ஆட்கள் வந்த பிறகு இருவரும் வெளி சென்றனர்.

அன்று இரவு தூக்கம் வராது தன் அண்ணன் அறைக்கு சென்று படுத்தவன் “அவங்க அப்பா ஊரில் இருந்து வரும் வரை நான் அவளை பார்க்க மருத்துவமணை போக ஏற்பாடு பண்ணு அண்ணா” என்று கூறி விட்டு தான் கேட்டால் அண்ணன் செய்வான் என்று நம்பிக்கையில் தூங்கி விட்ட ஆரிக்கு தான் என்ன சொல்லி அவனை மருத்துவமணைக்கு அனுப்புவது என்று புரியாது தவித்து போனான்.

மறுநாள் முதல் பள்ளி முடிந்தவுடன் சங்கி மங்கி கார்த்திக் வந்த கார் நேராக வீட்டிற்கு வராது மருத்துவ மணைக்கு சென்று அங்கே ஒரு மணி நேரம் நிரல்யாவுடன் கழித்த பின் தான் வீட்டிற்கு வரும் படி எப்படியோ ஆரி ஏற்பாடு செய்தான்.

அவர்கள் வந்து போகும் நாள் எல்லாம் அவள் நன்றாக தூக்கினாள் என்று அவள் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது இன்னும் கேட்க போனால் அவள் தூங்கி விட்டாள் என்று தெரிந்த பின்னர் தான் மூவரும் திரும்பி வருவார்கள்!!!

அவசரப்பட்டு பாண்டியனை தப்பாக நினைத்து பேசி விட்டோமோ என்ற கார்த்திக்கின் குற்ற உணர்ச்சியை போக்கும் விதமாக அவள் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த நாட்கள் பாண்டியன் ஊர் திரும்பவும் இல்லை குறைந்த பட்சம் உடம்பு முடியாது படுத்து கிடக்கும் மகளுக்கு போன செய்து பேச கூட நேரம் இல்லாது போனது அந்த பாச மிகுந்த தந்தையாருக்கு!!!

அன்று இருந்து அதே பழக்கம் தான்... அவனின் அருகாமையை உணர்ந்தால் எத்தனை பிரச்சனை இருந்தாலும் அவளால் நிம்மதியாக அயர்ந்து தூங்க முடியும்!!!

தூங்கியபின் அவன் மேல் உரிமையுடன் அயர்ந்து உறங்கும் இவளே தான் விழித்து இருக்கும் நேரத்தில் அவனின் அருகில் கூட வரமாட்டாள் என்பது வேறு விஷயம்!!!

இந்த லட்சணத்தில் எங்கே இருந்து ஹானிமூன் கொண்டாடுவது?!? என்று பெருமூச்சு விட்டபடி மழையை வெறித்தான்.

நிரல்யா அவனை விலகிப் போவதே அவன் செய்த காரியம் தான் என்னும்போது அவள்மேல் கோபம் கூடக் கொள்ள முடியவில்லை என்பது தான் இன்னும் கொடுமை!!!

ஐந்து வருடமாக அவளின் விலகலும் வெளியே சொல்ல முடியாத அவனின் இந்த கொந்தளிப்பும் எதுவும் இல்லாமல் இருந்திருக்கும் அவன் மட்டும் அன்று நிரல்யாவின் கழுத்தில் தாலி கட்டாது இருந்திருந்தால்!!!

ஆனால் அதுவுமே அவன் கழுத்தில் யாரும் கத்தியை வைத்துக் கட்ட சொல்லவில்லை தான் என்ற போதிலும் அதை வேறு வழியாக கையாள நிரல்யாவின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் விருப்பம் இல்லாத போதும் அவள் கழுத்தில் தாலியைக் கட்ட வேண்டிய சூழ்நிலை!!! அன்றைய சூழ்நிலையைச் சரியாக எதிர்கொள்ளாததால் இன்று அதற்கான பரிசைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறான்!!!

இவனின் கொந்தளிப்பான எண்ண அலைகளின் தாக்கமோ இல்லை அவன் இல்லாததை உணர்ந்தாலோ
என்னவோ நிம்மதியான நித்திரையில் இருந்த நிரல்யாவிடம் அசைவு தெரிந்தது.

கண் விழித்து விட்டால் அவனின் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விடுவாள் என்பதால் அவசரமாக மெத்தையில் அவளுக்கு அருகில் படுத்தவன் படர்ந்து விரிந்து படுக்கை முழுவதும் தனதே என்று சொந்தம் கொண்டாடிய கார் கூந்தலை ஒருபுறமாக ஒதுக்கிவிட்டு அதன் மேல் இருந்த கையை எடுக்க மனம் வராது பஞ்சு போல் மெத்தென்று இருந்த கூந்தல் இழையை ஆசையாக வருடினான்!!!

எப்பொழுதும் போல் தூக்கத்தில் அவனைத் தேடியவள் கார்த்திகை உணர்ந்ததும் அவன்மேல் கையைப் போட்டு “கார்த்திக் தூங்கு” என்று தூக்கத்திலேயே மிழற்றியவளின் குரலை கேட்டு கார்த்திக்கின் முகத்தில் தோன்றிய புன் முறுவலை காணாது மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தாள்!!!

எங்கோ அலாரம் அடிக்க, கண் விழித்தவனுக்கு அடித்தது அலராம் இல்லை போன் என்று மசமசப்பாக புரிய... கண்கள் மூடியபடி அதைத் தேடி கண்டுபிடித்து காதில் வைத்தவனுக்கு பாட்டியின் குரல் கேட்டது.

“எப்படி பாட்டி இருக்கிங்க? அங்க விடிந்து விட்டதா?” என்றான் தூக்கக் கலக்கத்திலிருந்து இன்னும்
முழுமையாக விடுபடாதவன்.

அவன் குரலையும், கேட்ட கேள்வியையும் வைத்தே விஷயத்தைக் கிரகித்த பாட்டி...

“நான் நல்லா இருக்கேன் நீ இப்ப எந்த நாட்டில் இருக்க?” என்றார் வியாக்கியானமாக.

“ஜெர்மனி” என்றான் மீண்டும் கவிழ்ந்துப் படுத்தபடி.

“இன்னும் பதினைந்து நிமிஷத்தில் ஜெர்மனியிலிருந்து நம் வீட்டு டைனிங் டேபிளில் கிராஷ் லேண்டிங்
ஆகவில்லை என்றால் உன் அப்பா உன்னை விட்டு ஆபிஸ் கிளம்பி விடுவார்”என்றார் பாட்டி நக்கலாக.

பாட்டியின் வார்த்தைகளைக் கேட்டு முகத்தில் தண்ணீர் தெளித்ததுப் போல் திடுக்கிட்டு விழித்தவன்...

“என்ன?? என்று அலறியபடி எழுந்தவனுக்கு அப்பொழுது தான்.. தன் வீட்டில் படுத்திருப்பது புரிய...

நேற்றிரவு தொழில் முறையாக முக்கியமான மீட்டிங் இருப்பதால் காலை இருவரும் சேர்ந்தே போகலாம் என்று அப்பா சொன்னது நினைவிற்கு வர“ஐய்யோ..” என்று அலறியவன்.. தான் போனில் வைத்திருந்த அலராத்தை யார் அதை நிறுத்தி இருக்கக்கூடும் என்று புரிய... அவளை மனதால் திட்டியபடி “எப்படியாவது அரை மணி நேரம் தாமதம் பண்ணுங்க... பாட்டி, அதற்குள் நான் கீழே வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு பாட்டியின் பதிலை எதிர்பார்க்காது போனை எறிந்துவிட்டு தாவிக் குதித்து எழுந்து பாத்ரூம்மை நோக்கி ஓடினான் அன்று வரிசையாக காத்திருக்கும் பிரச்சனைகளின் தீவிரம் உணராது!!!

சொன்னது போல் அரை மணி நேரத்திற்குள்ளாகவே குளித்து முடித்து அப்பாவுடன் மீட்டிங்கிற்கு ஃபார்மலான உடை உடுத்தி தன் சட்டை கையின் பட்டனை போட்டபடி புயல் வேகத்தில் படியில் இறங்கி வந்தவன் பாட்டி சொன்னபடி கிட்டதட்ட கிராஷ் லேண்டிங் தான் ஆனான்.

அவசரமாக தலை குளித்துவிட்டு வந்ததன் காரணமாக அவனின் அடர்ந்த சுருண்ட ஈர முடி நெற்றியில்
வந்து கொத்தாக விழுந்து தண்ணீர் வடிய... அதைத் துடைத்து விட்டபடி தன் மனைவியின் புறம் வந்தான்.

விடியற்காலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகி கீழே வந்தவள் முன் தினம் மாதிரி தலை விரி கோலமாக ஆபிஸ் போக விரும்பாது மட்டுமல்ல, தன் வேலைக்கு அது இடையூறாக இருக்கும் என்று உணர்ந்தபடியால் இருபுறம் முடி எடுத்து உச்சந்தலையில் பின்னலிட்டு பின் அது அவிழாமல் இருக்க இரண்டு க்ளச்சை ஒன்றன் பின் ஒன்றாக மாட்டி பின் நான்கு கால் பின்னல் பின்னி இருந்தாள். அவளின் அடர்ந்த நீண்ட கூந்தலை மூன்று கால் எடுத்துப் பின்னிக்கொள்வது என்பது வெகுசிரமம் என்றால் எப்பொழுதுமே நான்கு கால் பின்னல் தான் வழக்கம்!!!

சுவாதீனமாக அவளின் நீண்ட பின்னலிலிருந்து முடிந்திருந்த ரப்பர் பேன்ட்டை உருவியவன் முகத்தில் நீர் வடிந்துக்கொண்டு இருந்த தன் சுருட்டை முடியைத் தூக்கி உச்சந்தலையில் சின்ன குடுமியைப் போட்டான்!!!

எத்தனை பேர் பெண்ணின் ரப்பர் பேண்ட்டை சர்வ சாதாரணமாக உச்சியில் குமுடி போட்டுக்கொள்வார்கள் என்று தெரியாது... அப்படியே போட்டுக்கொண்டாலும் அவனின் தாடிக்கும்... எயிட் பேக் ஜிம் பாடிக்கும்.. போட்டோ ஷூட்டிற்கும் தயாராக இருக்கும் மாடல் போல் காட்சி தருவார்களா என்பது சந்தேகமே!!!

“வந்தும் வராததுமாக ஆரம்பித்துவிட்டாயா?” என்று அம்மா முறைக்கும் போதே...

“இதை எல்லாம் முடித்துக் கொடுன்னு என்னிடம் ஒரு முழத்திற்கு லிஸ்டே கொடுத்து விட்டுப் போன உனக்காக இரவு இரண்டு மணிவரை கண் விழித்து முடித்த நான் சீக்கிரமாக தயாராகி இங்க வந்து உட்கார்ந்திருந்தால்.... இன்று ஊருக்குக் கிளம்பும் ஆள்... ஆடி அசைந்து கீழே வர்றயா?? ஏதோ டிபன் தாமதம் ஆனதால் தப்பித்தாய் இல்லை நானும் அப்பாவும் உன்னை விட்டு விட்டு எப்பயோ ஆபிஸ் கிளம்பி இருப்போம்” என்று எரிந்து விழுந்தான் அண்ணன் காரன்.

தாமதத்திற்கான காரணத்தைப் புரிந்த கார்த்திக் பாட்டியின் புறம் திரும்பி சத்தம் வராது நன்றி கூறியவன் தனக்கு தேவையானதைத் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு நிரல்யாவின் பக்கத்தில் அமர்ந்தவன் சாவதானமாக “உன்னை யார் கண் விழித்து வேலையை முடிக்க சொன்னது?? நான் தான் ஜெர்மனி போகவில்லையே” என்றான் அதிரடியாக.

அந்த பதில் இரவு எல்லாம் கண் விழித்து வேண்டும் என்ற டாக்குமென்ட்டை தயார் செய்த அண்ணனுக்கு மட்டும் இல்லை... கட்டிய மனைவிக்கு உள்படச் செய்திதான் என்று மிக தெளிவாகவே புரிந்தது!!

அவன் பயணம் செய்யவில்லை என்பதை அறிந்தவுடன் தாதா முதல் நிரல்யா வரை ஒருவித உணர்வை வெளிப்படுத்த... அதில் சற்றும் அதிர்ச்சி
அடையாதவர் பாட்டி மட்டும் தான்!!!

“நேற்று இதே நேரம்... ஜெர்மனி போயே தீருவேன்னு சொன்ன.... இருபத்தி நான்கு மணி நேரம் கூட முடியவில்லை அதற்குள் போகவில்லை என்கிறாய்??” என்றான் காட்டமாக பத்ரி.

“என்னடா இப்படி சொல்ற?? உன் முன்னால் தானே அப்பா நேற்றிரவு முதலில் இன்ஜினியரிங் டீம்மை அனுப்பிப் பார்க்க சொல்லுவோம் அவர்கள் எல்லாம் சரி என்றால் பின்னால் போகலாம் என்று சொன்னார் நீ கேட்கவில்லை?? ஒ.. நீ யூ.எஸ்சிலிருந்து போன் வந்தது என்று பேசிக்கொண்டு
இருந்தப்ப சொன்னாரோ?” என்றான் வந்த சிரிப்பை விழுங்கியபடி.

வேண்டும் என்றே நேற்று இரவு சொல்லாமல் விட்டு பத்ரியை இரவு வேலை வாங்கி இருக்கிறான் என்று
பட்டவர்த்தனமாகப் புரிய... “உன்னை…” என்று அண்ணங்காரன் திட்ட வாய் எடுக்கும் போதே...

“விடுடா... இங்க இருக்கேன்னு சொல்றதே பெரிய விஷயம்..” என்று அவனை அடக்கினார் அம்மா.

“என்மேல் தப்பு இல்லை.. எல்லாம் இவளால் வந்தது...” என்று தன் மனைவியைக் கையைக் காட்டியவன் “நான் ஊருக்குப் போகவில்லை என்ற விஷயத்தை நேரில் சொல்லத்தான் காலையிலேயே எழுவதற்கு அலாரம் வைத்தேன்... ஆனால் இவளோ ரொம்பவே பொறுப்பாக அடித்த அலாரத்தை நிறுத்தவிட்டுப் போய்விட்டாள்” என்று முடித்தான்.

“இரவு அவளிடம் சண்டைப் போட்டு இருப்ப... காலையில் எழுந்தவுடன் உன் முகத்தில் ஏன் விழிப்பானேன்னு நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்திருப்பாள்??” என்றார் தாத்தா.

தாத்தாவின் இந்த கேள்வியே தான் வீட்டிலிருந்த அனைவரின் கண்களுக்கும் மின்னியதோடு அவனைக் குற்றம் சாட்டும் பார்வையுடன் ஈட்டியாகப் பாய்ந்தது.

தன் வீட்டு ஆட்களைப் பார்த்து கண்களைச் சுழற்றியவன்…

“நீங்க பார்ப்பது எப்படி இருக்கு தெரியுமா?? இவள் எனக்கு தாலி கட்டி வீட்டோடு மாப்பிள்ளையாக இவள் வீட்டிற்கு என்னை அழைத்து வந்த மாதிரி இருக்கு....” என்று குறைப்பட்டவன் “அவளிடம் என்ன நடந்தது என்பதற்கு மேல் அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை” என்றான் ஆயாசமாக.

அவன் தன் வீட்டு ஆட்களைக் குறைப்பட்ட போதும் நிஜமாகவே அவன் குரலில் சிறு வருத்தமோ, கோபமோ இருக்கவில்லை என்பதை அந்தக் குரலே காட்டிக்கொடுத்தது!!!

ஆரியா தவிர மற்ற எல்லோரும் நிரல்யாவை தான் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள் என்பது
கார்த்திக்கு நன்றாகவே தெரியும்!!!

அவன் பேச்சைக் கேட்டு வீட்டு ஆட்கள் நிம்மதி பெருமூச்சு விட... அவர்களின் செய்கையைக் கண்டவன்... “ப்பா... உங்களுக்கு என்மேல் இருக்கும் நம்பிக்கை பார்த்து புல் அரிக்கிறது” என்றான் விட்டேற்றியாக.

“ஒன்றும் மட்டும் புரியவே இல்லை.. வீட்டிற்கும் சொல்லி விடுங்கன்னு நிரல்யா சொன்ன பிறகும் எப்படி செக்ரட்டரியிடமிருந்து நமக்கு விபரம் வரவில்லை??” என்றார் தாத்தா.

“உன் செக்ரட்டரி ரவி சொன்ன வேலையை அப்படியே செய்வானாச்சே... பாதிநேரம் உன்னுடைய போனில் பேசுவதற்குப் பதில் அவனுடன் தான் பேசி இருக்கிறேன். ஆப்ரேஷனான கால், எப்படி இருக்கானாம்?? எப்ப ஆபிஸ் வந்தான்??” என்றார் பாட்டி விளக்கமாக.

“ரவி இல்ல... பாட்டி... அவன் இருந்திருந்தால் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வந்தே இருக்காதே... கால் முறிவுக்காக மேலும் லீவு எடுத்து இருக்கான் பாட்டி. அனேகமாக அடுத்த மாதம் வந்து விடுவான் என்று நினைக்கிறேன். இப்ப தற்காலிகமாக அவனிடத்தில் யாரோ பொண்ணு வந்திருக்கா... ஆபிஸ் போய் என்னாச்சுன்னு விசாரித்துச் சொல்கிறேன்” என்றான் மிகுந்த கடுப்புடன்.

அவன் குரலிலிருந்த வித்தியாசமே ஆபிஸ் சென்றவுடன் நேற்று நடந்த சம்பவத்திற்கு யார் மேல்
பாயப்போகிறான் என்று புரிந்து விட்ட பத்ரிக்கு.

“அதைப் பற்றி நான் விசாரித்துக்கொள்கிறேன்” என்றான் முடிவாக.

“உனக்கே தலைமேல் ஆயிரம் வேலை இருக்கு... இதில் அவனுடைய செயலாளரைப் பற்றி நீ ஏன்டா
விசாரிக்கணும்??” என்றார் பாட்டி.

“இப்ப சும்மா தற்காலிகமான்னு சொன்னானே... கடந்த நான்கு மாதத்தில் இதுவரை எத்தனை செக்ரட்டிரி வேலையை விட்டு மாறி இருக்காங்கன்னு கணக்கே இல்லை பாட்டி” என்றான் பத்ரி அழாத குறையாக.

“நம் கம்பெனிக்கு உருப்படியாக ஒரு செயலாளர் கூடவா வேலைக்கு அமர்த்த முடியவில்லை??” என்று திடுக்கிட்டுக் கேட்டார் தாத்தா.

“தப்பு நம்ம ஹெச். ஆர் மேல் இல்லை... உங்கள் பேராண்டி மேல்...” என்றான் காட்டமாக.

பொங்கி எழுந்த கார்த்திக் “கொடுக்கும் சம்பளத்திற்கு சொல்ற வேலையை ஒழுங்காகச் செய் என்றால்
அது தப்பா?”

“கொடுக்கும் சம்பளமா?? சொல்ற வேலையா?? அடேய் பரதேசி... உன்னுடன் எவனும் வேலை செய்ய வரமாட்டேன் என்றான் என்பதற்காகவே மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்ததே!!! நேற்று ஜெர்மனி போறன்னு சொன்னா அப்ப ஒரு ப்ளான்... இன்று போகவில்லை என்று சொன்னவுடன் அடுத்த ப்ளான்னு.... உன்னுடைய கிரேசி ஷேடியூலை நிமிடத்திற்கு ஒரு தரம் மாற்றுவாய். அதில் சின்ன தடை வந்தாலும் உன்னிடமும் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும் மறுபுறம் நம் கஸ்டமரிடமும் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும்... இரவு பகல் பாராது உன் வேகத்திற்கு ஈடுகொடுத்து பேய் மாதிரி உழைத்தாலும், நல்ல பெயர் சம்பாதிக்க முடியாது என்னும் போது உன்னிடம் யார் வேலைக்கு வருவார்கள் ?!?” என்றான் பத்ரி.

“செயலாளரின் வேலையே அது தானேடா?”

“என்னது வேலையா?? அந்த முப்பதைந்து வயது மதிக்கத்தக்க ஆண் என்னை கார் பார்க்கிங்கில் சந்தித்து..எல்லோரும் இந்த வேலைக்குப் போகாதே... போகாதேன்னு சொன்னப்ப குடும்ப சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்தேன். ஆனால்... இப்படி வேலையில் தொடர்ந்து நீடித்தால் எந்த குடும்பத்திற்காக நான் வேலைக்கு சேர்ந்தேனோ அந்த குடும்பமே இல்லாது போய் விடும் போல இருக்கு சார் என்று கதறி அழுதார்” என்றான் விரக்தியாக.

“என்னடா சொல்ற??” என்றார் புரியாது தாத்தா.

“இதே மாதிரி தான் நானும் புரியாது என்னாச்சுன்னு கேட்டேன்??.. அதற்கு அவர்...மூன்று வாரம் இவனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பசி தூக்கம் இல்லாது வேலை செய்துகொண்டு இருக்க... அன்று அதிசயமாக ஏதோ இரவு வேலை எல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டு எட்டு மணிக்கு வீடு திரும்பியவருக்கு... தன் வீட்டு அருகில் இருக்கும் பார்க்கில் அவருடைய இரண்டு வயது குழந்தை தனியாக இருப்பதைக் கண்டு பதறிப் போய் “ஏன்டா தனியாக நிக்கிற? அம்மா எங்கே??” என்று கேட்டபடி தூக்க.... இவரைப் பார்த்தும் கதறி கூப்பாடு போட்டு வீல் வீல் என்று அழுது இருக்கான்”

பத்ரியின் பேச்சை இடை மறித்த கார்த்திக்... “என்ன சினிமாத்தனமாக இல்லை...?? இவர் தினமும் வீட்டிற்குத் தாமதமாக போனதால் அப்பாவுடைய முகத்தையே அந்த சிறுவன் மறந்து விடுவானாம்??” என்றான் இடக்காக.

அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாது முறைத்த பத்ரி... “அழுத குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு அவசரமாக நுழைந்தால்... அங்கே அவரின் மனைவி இடுப்பில் வேறு ஒரு குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்...” என்று முடித்தான்.

இதைக் கேட்ட தாத்தாவிற்கு... வாயிலிருந்த உணவு புரை ஏற, வீட்டிலிருந்த அனைவரின் முகத்திலும் சொல்ல முடியாத கலவையான உணர்ச்சிகள்!!!

“அப்படின்னா??” என்று அலக்நந்தா புரியாது கேட்டாள்.

“அப்படின்னா... அந்தக் குழந்தை அப்பாவின் முகத்தை மறக்கவில்லை... அப்பங்காரன் தான் பெற்ற மகனின் முகத்தை மறந்து விட்டு ரோட்டில் தேமேன்னு பராக்கு பார்த்துக்கொண்டு இருந்த வேற யாருடைய குழந்தையையோ புள்ளைப் பிடிக்கிறவன் மாதிரி தூக்கிக்கொண்டு வந்திருக்கிறான். நல்லவேளை போலீஸ் கேஸ்.. எதுவும் ஆகவில்லை?!?” என்று பத்ரி சீரியாக சொல்ல ஆரம்பித்த விஷயத்தைக் காமெடியாக பாட்டி சொல்லி வைக்க... அதற்கு மேல் அடக்க முடியாது வெடித்துச் சிரித்தனர் குடும்ப அங்கத்தினர்!!!

“இது காரணம் சொல்லி விட்டு ஓடியவனின் கதை. மீதிப் பேர் எந்த காரணமுமின்றி ஊரை விட்டு ஓடியவர்களைப் பற்றி நான் கணக்கு சொல்ல முடியாது. சரி ஆண்கள் தான் இப்படி என்று பெண்களை வைத்தால்.... உன்னுடைய வேகத்திற்கும்... வேலை பளுவிற்கும்... தாங்க முடியாது ஒரு நாளுக்கு ஒருத்தர் என்று தலை தெறிக்க ஓட..”

“சரி கல்யாணமான பெண்களை வைத்தால் பொறுமையா, பொறுப்பாக இருப்பாங்களேன்னு நினைத்து.... வேலைக்கு நியமித்தால்... வேலை விஷயமாக போன் பேசியபடி தன் கணவன் மாதிரியே ஹெல்மட் மாட்டிக்கொண்டு இருந்த வேறு ஒருத்தனின் பைகில் ஏறிப் பறந்திருக்கிறாள்... அதுவும் அவள் கணவன் முன்னாடியே...” என்று ஒரு பாட்டம் அழுது முடித்தான் பத்ரி.

பத்ரி கூறி கதையில் முழ்கி இருந்த தாத்தா... “அப்புறம் என்னாச்சு??” என்றார் ஆர்வம் மின்ன.

“கதையின் முடிவு நல்லா இருந்தால்... நாமும் இந்த மாதிரி ஹெல்மட் மாட்டிக்கொண்டு பிக் அப் பண்ணலாம் என்று ப்ளான் பண்றிங்களா தாத்தா?” என்றான் கார்த்திக் சிரிப்புடன் பிக் அப் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்துக் கேட்டான்.

“அந்த மாதிரி “பிக் அப்” திறமை உன் தாத்தாவிற்கு வந்து விட்டாலும்…?!?” என்று இளித்துக் காட்டினார்
பாட்டி மட்டுவார் குழலி.

“நான் எந்த விஷயத்தைப் பற்றிக் குமுறிக்கொண்டு இருக்கிறேன்... நீங்க என்ன மாதிரி பேசறிங்க??”
என்றான் பத்ரி அலுப்புடன்.

“விடுடா.. விடுடா..” என்று அம்மா மகனுக்குச் சமாதானப்படுத்தினார்.

“இப்ப தானம்மா... ஒரு பொண்ணு கிட்டதட்ட மூன்று மாசமாக இவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேலை செய்யுது... அதையும் ஏதாவது பேசிக் விட்டால் அப்புறம் இவனுடைய பழைய ஆள் ரவி வரும் வரை நித்தமும் ஒரு சினிமா கதை கேட்க முடியாதும்மா...” என்றான் பத்ரி.

பத்ரி சொன்ன விதத்திலேயே வீட்டு ஆட்களுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வர... உரக்க நகைத்தனர்.

“சரி சரி நீயே கேள், நான் ஒன்னும் கேட்க மாட்டேன் போதுமா” என்று அண்ணனுக்காக விட்டுக் கொடுப்பது போல் சொன்னாலும் சர்வ நிச்சயமாக அங்கே வெடிக்க போகிறான் என்று எல்லோருக்கும் தெரியத்தான் செய்தது.

குடும்பம் என்று வந்து விட்டால் கார்த்திக்கைப் போல் பாதுகாக்க யாராலும் முடியாது. இல்லை என்றால் மேகியின் கணவனான ரஃபிக்கை அதுவும் மணமுடித்து புது மாப்பிள்ளையைத் தங்கையிடம் சரியாக நடந்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் வீட்டிலேயே அடிக்கப் போவானா??

“வேலை பிடித்திருக்கிறதா நிரல்யா?” என்றார் அதிகம் பேசாத சிவசச்சிதேவ் மருமகளைப் பார்த்துக்கேட்டார்.

அனைவரின் கவனமும் அவள் பதிலுக்குத் திரும்ப...

“என் குழுவில் தான் ரொம்ப கடுமையான வேலை இருக்கும் என்று மெம்பர்ஸ் சொன்னாங்க. ப்ராஜெக்ட் பற்றி இன்னும் முழுமையாக உட்கார்ந்து படிக்கவில்லை மாமா... கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று
நினைக்கிறேன்” என்று நேர்மையான பதிலைச் சொன்னாள் நிரல்யா!!!

“உனக்கு மட்டும் இல்லை... புதிதாக சேர்ந்த எல்லோருக்கும் அப்படி தான் மலைப்பாக இருக்கும். ஒரு வாரத்தில் பழகி விடும்” என்று சமாதானப் படுத்திய பத்ரியை முறையோ முறை என்று முறைத்தான் தம்பிக்காரன்.

“என்னடா??”

“வானத்தில் ஹாயா பறந்துக்கொண்டு இருந்தவனைக் கீழே இறக்கி... தரதரவென்று இங்கே இழுத்து வந்து ஜெட் லாகிலிருந்து கண் கூட சரியா விழிக்காத என்னிடம் இரண்டு ஃபைலை கொடுத்து நாளைக்கு காலை இதைக் குறித்துத் தான் போர்ட் மீட்டிங்கில் முக்கியமான முடிவு எடுக்கப் போறாங்க... யார் எந்தக் கேள்வி கேட்டாலும் நீ தான் பதில் சொல்லணும் என்று என்னிடம் சொன்ன அதே வாய் தானா இது என்று பார்க்கிறேன்?!?” என்றான் இளவல்.

“அப்படி சொன்னதற்குத் தான் நேற்று இரவே என்னிடம் ஊருக்குப் போவதைச் சொல்லாது பழி வாங்கினாயாக்கும்?!?” என்றான் பத்ரி அவன் கேட்ட கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாது..

“பின்ன புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் என்னைப் படுத்தின பாட்டிற்கு ஆயுசு முழுசும் பழி
தீர்த்தாலும் பத்தாது” என்றான் கார்த்திக்.

இந்தப் பேச்சைச் சுத்தமாக விரும்பாத மல்லிகா “டேய்... உங்களுக்கு சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்றால் அதோ...” என்று ஹாலின் சுவற்றில் பெரிய கேடையுமும் இரண்டு வாலும் சொருகி வைத்திருந்ததைக் காட்டி “அதை எடுத்து நம் பார்க்கில் போய் அமைதியாக சண்டைப் போட்டுக்கொள்ளுங்க சாப்பிடும் இடத்தில் இல்லை” என்றார் அம்மா அழுத்தமாக.

அவரின் அந்தப் பேச்சிற்குப் பதில் பேசாது மகன்கள் இருவரும் உண்ணத் தொடங்க...

“எப்பம்மா இன்று ஆபிஸ் முடித்துவிட்டு வருகிறாய்?” என்றார் பாட்டி நிரல்யாவிடம்.

“இப்ப நான் எந்த ப்ராஜெக்ட்டிலும் முனைப்பாக ஈடுபடவில்லை என்பதால் மாலை ஆறு மணிக்கு
கிளம்பிடலாம்” என்றாள் நிரல்யா.

“அப்படின்னா?”

“எடுக்கும் ப்ராஜெக்ட்டை பொருத்து வேலைக்குச் செல்ல வேண்டிய நேரமும் காலமும் மாறும்.. பாட்டி... சில சமயம் செடியில் தெரியும்
மாற்றத்தை ஒரு வாரத்திற்கு ஒரு தரம் குறிப்பு எடுப்பதில் ஆரம்பித்து... நாற்பத்து எட்டு மணி நேரத்திற்கு... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் கண்காணிக்க வேண்டி வரும். அதனால் ஆராய்ச்சி கூடத்தில் இருப்பவர்கள் சில சமயம் அங்கேயே தங்க வேண்டிய சமயம் கூட வரும்” என்றாள் முடிந்தளவு விளக்கி.

“ஏன் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று வழுக்கையுடன் இருக்கிறார்கள் இல்லை நீண்ட தாடி மீசையுடன் வனவாச்சில் இருந்த மாதிரி இருக்கிறார்கள் என்று இப்ப புரியுது” என்று சிரியாமல் சொன்னவர் தொடர்ந்து “உன் வேலை எப்போ முடியுதோ போன் பண்ணும்மா.. நானும் உன் அத்தையும் ஆபிஸ் வந்து விடுகிறோம் எல்லோரும் சேர்ந்து ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றார்.

நிரல்யா பதில் சொல்வதற்கு முன்... "நீங்க யாரும் வர வேண்டாம் ஆபிஸ் முடிந்தவுடன் நானும் அவளும் மட்டும் போய் பார்த்து விட்டு வரோம்” என்றான் கார்த்திக் பல்லைக் கடித்தபடி.

“நீ போவது பற்றி ஒன்றும் இல்லை. ஏற்கனவே குழந்தைக்கு உடம்பிற்கு முடியாது கஷ்டத்தில் இருப்பவர்களிடம் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டாமல் ஏதாவது சொல்லி வைத்தாய் என்றால் நல்லா இருக்காது” என்றார் பாட்டி அவனின் குணத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர்.

பாசத்துடன் ஏன் நாட் நாட் செவன் போன் செய்து கீழே வரவழைத்ததும்... தனக்காக காலை உணவைத் தாமதப்படுத்தினார் என்ற காரணமும் தாமதமாக கார்த்திக்கு அப்பொழுது தான் புரிந்தது...


தொடரும்…..


அடுத்த பதிவு - வெள்ளி.

DEAR READERS...


கதையின் தலைப்பை வைப்பதற்கும், நாயகி நாயகனின் பெயர் வைப்பதற்குள் நான் படும் அவஸ்தை இருக்கே... ஐய்யோ.....யோ... போதும்டா சாமி என்று ஆகி விடுகிறது...
முழுவதுமாக 3 நாள் தேவைப்பட்டது நிரல்யா என்ற பெயரை தேர்வு செய்வதற்கு...
என்னால் கதையின் பெயரையும் நாயன் நாயகி பெயரும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இல்லை என்றால் ஒரு வார்த்தை கூட கதை எழுத முடியாது...

இத்தனை கஷ்டப்பட்டு எழுதும் போதும் நீங்களும் படித்துவிட்டு அப்படியே போகாது எப்படி இருக்கிறது என்ற உங்களின் கருத்தை கீழே போஸ்ட் செய்யலாமே!!!
 

Mehala Devi

New member
மிகவும் அருமை. நிரூ ஏன் கார்த்திக் இட‌ம் கோபம் காட்டுகிறாள்.flashback இருக்க. I like karthik roll very much. Very concerning character. Lovely epi. Tq kohhai.
 

Dra ananth

New member
Nice epi ka 🤗 ...
Ama ama .... இந்த சங்கி காட்டுல/தீவுல கூட எங்க போறது னு தெரியாம சித் ஆ அவள தேட வைச்சா...
கார்த்திக் அது பாசம் இல்ல டா... நீ hospital போய் எதுனா சம்பவம் பண்ணாம தடுக்க போட்ட plan da.... plan...
 
Top