அப்பாவின் தனிமை
-ஸ்ரீஷா
பரபரத்துக் கிளம்பிக் கொண்டிருந்த நடேசன் காதில் தன் மனைவி, மக்களின் வார்த்தை மிகத் தெளிவாகக் கேட்டிருந்தது.
“ஏன்மா ...நான் ஒரு பவர் பேங் கேட்டிருந்தேன்ல ,
எப்போ மா வாங்கித் தருவீங்க ?”
“சுருதி...! இருக்கதை வச்சு வாழ பாரு.
அப்பாக்கு சம்பளமே இன்னும் போடலை '– இதான மா சொல்ல போறீங்க”
என்று இளைய மகன் ரகு,அன்னை போல் பேசிக் காட்ட,அதில் சிரித்த அவர்களது அன்னை கோகிலா,
“ அடி வாலுங்களா ! உங்களைத் தேவைக்குப் பொருள் வாங்குங்கனு சொன்னா ,
என்னையே கிண்டல் பண்றீங்களா ?
மொபைலே இப்போதான் வாங்கினோம் அதுக்குள்ள உனக்கு எதுக்குப் பவர் பேங்..,சும்மா கேம் ஆடி,கேம் ஆடி சார்ஜ் போக்க வேண்டியது.அப்புறம் அது வாங்கித் தாங்க,இது வாங்கித் தாங்கனு மூக்கை உறிஞ்ச வேண்டியது.ஒன்னும் கிடையாது.
நானே இன்னும் உங்க அப்பாக்கு இன்னும் சம்பளம் போடலை,எப்படி அடுத்த ஐஞ்சு நாளை ஓற்றதுனு
அல்லாடிகிட்டு இருக்கேன்.இதுல உங்களுக்குப் பவர் பேங் கேட்குதா ..? ”
என்ற பேச்சில் ,சுருதி இன்னும் வாடிய குரலில்,
“நான் ஒன்னும் கேம் போகலை.
ஆன்லைன் கிளாஸ் தான் இப்போ
நடக்குது.கிளாஸ் முடிஞ்சு கொஞ்சம்
ரிலாக்ஸாக
பிரெண்ட்ஸ்ட பேசணும்னு நினைக்கும் போது செல்லுல சார்ஜ் இருக்க மாட்டிக்குது.”
என்றிட,அதில் அவளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட ரகு, தனக்கும் அதே கவலையென்று ஒப்பித்திருந்தான்.
அந்நேரம் அங்கு வந்த நடேசனின் வரவில் அவர்களது பேச்சுத் தடைபெற்றது.
குறிப்புச் செய்தியாக நடேசன் நேரத்தைப் பார்க்க,கோகிலாவோ விறுவிறுவென அனைவருக்கும் உணவு எடுத்து வைத்திருந்தார்.நடேசன் அமர்ந்த நொடி,அவருடன் பிள்ளைகளும் அமர,அதோடு கோகிலாவும் அமர்ந்து கொண்டார்.அவரவருக்கு அவரவரே பரிமாறி உண்ண,முதலில் உண்டு எழுந்த நடேசன் தன்னைப் போல் பணிக்குக் கிளம்பிச் சென்று விட்டார்.
அவர் வீட்டின் வாசலைத் தாண்டியதும்,பெருமூச்சு விட்ட ரகு,
“ ஊப்..என்னமா இப்படி ! சாப்பிடக் கூட இவளோ ரூல்ஸா.எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடனுமா.?அப்புறம்
எங்களுக்கு நாங்களே தான் பரிமாறிகணுமா.ஏன் இப்படி ?”
என்று அங்கலாய்க்க ,சுருதியோ ஏக்கம் நிறைந்த குரலில்,
“எங்களுக்கும் நீங்க பரிமாறி நாங்க
சாப்பிடனும்னு ஆசை இருக்கும் தான மா!அதைவிட எங்களுக்குப் பசிச்சா தான நாங்க சாப்பிட முடியும்.அது என்ன டைம்மானா தட்டையெடுத்துட்டு
உட்கார்றது ,நாங்கெல்லாம் என்ன சிறை கைதியா ?”
என்று சிடுசிடுக்க, பிள்ளைகளின் தலையைத் கோதி விட்ட கோகிலா,
“அப்பா என்ன சொன்னாலும் உங்க நல்லதுக்குத்
தானடா சொல்லுவாங்க ”
என்ற நொடி,கோபத்தில் பட்டென அவரது கரத்தைத் தட்டி விட்ட ரகு,
“சும்மா சும்மா எங்களையே சமாளிக்காதீங்க மா.ஒரு
பதினைஞ்சு வயசு பையனுக்கோ இல்லை ஒரு பதினெட்டு வயசு பொண்ணுக்கோ எப்போ சாப்பிடனும் ,அவங்களுக்கு எப்போ பசிக்கும்னு தெரியாதா.?
ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க ”
என்று வெடிக்க,பிள்ளைகளை எப்படி உடனடியாகத் தணிக்க என்று தெரியாது தவித்த கோகிலா,பேச்சை மாற்றும் விதத்தில் உரையாடத் துவங்கியிருந்தார்.
“யாரோ ரெண்டு பேர் ரொம்பக் கோபமா இருக்காங்களாம்.அவங்க
அம்மா சொல்றதை கேட்கவே
மாட்டாங்களாம்.அவங்க அம்மா கொடைக்கானல் டூர் கூட்டிட்டு
போறேன்னு சொன்னா கூடச் சமாதானம் ஆக மாட்டாங்களாமாம்..!”
என்றவர் பேச்சோடே உண்டு முடித்து நகர,வேகமாகக் குதூகலித்து அவர் கரம் பற்றிய பிள்ளைகள்,
“ஹே ! ஜாலி.. நிஜமாவாமா ?”என்று துள்ள,அதில் மலர்ந்து சிரித்த கோகிலா,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோச்சுகிட்டவங்களைப்
பார்த்தீங்களா ?”
என்று தேடுவது போல் பாவம் காட்ட,அதில் “அம்மா ! அம்மா” என்று சிணுங்கிய சுருதி மற்றும் ரகு,
“அம்மா ..! நிஜம்மா போறோமா மா ?” என்று கேள்வியில் ,அடுக்களையை ஒதுக்கிக் கொண்டிருந்தவர் , வேலையோடே மக்களிடம் பேசியிருந்தார்.
“ நிஜம்மானுலாம் எனக்குத் தெரியாது.உங்க அத்தை தான் உங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டு
இருந்தாங்க.உங்க அப்பா வரேன்னும்
சொல்லல..வர மாட்டேன்னும் சொல்லல.
எனக்கு என்னமோ கூட்டிட்டு போவாருனு
தோணுது ”
என்று முடித்ததில் சோர்வுடன் முகம் வைத்த பிள்ளைகள்,
“ உச் போங்க மா..நாங்க கூட ஒரு நிமிஷம் ரொம்பச் சந்தோஷப்பட்டுடோம்.எப்படியும் அவர் எங்களை விட மாட்டாரு ”
என்று முகம் தூக்க,அதில் கோகிலா பரிவுடன் பேசியிருந்தார்.
“சாதாரண விஷயத்துக்கு எல்லாம் மூஞ்சியைத் தூக்கக் கூடாது.கூட்டிட்டுப் போனா சந்தோசம்.
இல்லையா இங்கையே சந்தோசமா இருக்கக் கத்துகணும்.நான் உங்க
அத்தைகிட்ட பேசிப் பார்க்கிறேன்.அவங்க சொன்னா உங்க
அப்பா கேட்பாரு.நான் வரலைன்னாலும் உங்களை அனுப்ப முயற்சி பண்ணுறேன் .ஆனா, நடக்கலனா அதுக்காக முகத்தைக் காட்டக் கூடாது ”
என்றதில் மகிழ்ச்சியாக இருவரும் தலையாட்ட,கோகிலாவோ அவரது அண்ணியிடம் பிள்ளைகளை எப்படியாவது இந்த முறை விடுப்புக்கு அவர்களுடன் கொடைக்கானல் அழைத்துச் செல்ல வேண்டியவர்,அதன்பின்னும் சிறிது நேரம் பேசி வைத்திருந்தார்.
இங்குச் சுருதி,ரகுக்கோ முகமெல்லாம் அத்தனை பிரகாசமாக மின்னியது.காரணம், சுருதி மற்றும் அவளது அத்தை மகள் கீர்த்தியும் அத்தனை நெருக்கம்.அவளுடன் செல்லப்
போகிறோம் என்ற ஆவலில் துள்ளிக் குதித்தவள் முதல் வேலையாக அவளுக்கு அழைத்திருந்தாள்.
‘எப்பொழுது சுற்றுலா ? எப்படிப் போகப் போகிறோம் ?யாரெல்லாம்
வருகிறார்கள் ?எத்தனை நாள் ! நீயும் நானும் ஒன்று போல் உடை
அணியலாமா ?செலவுக்குக் காசு எவ்வளவு வேண்டும் !அங்கு இப்பொழுது குளிர் காலமா ?' என்று திணறத் திணற கேள்வி கேட்ட சுருதி,அனைத்திற்கும் பதில் பெற்ற பிறகே அலைபேசியைத் துண்டித்திருந்தாள்.
சற்று யோசனையோடு மகளைப் பார்த்த கோகிலா,
“பாப்பா முதல்ல அப்பா விடுறேன்
சொல்லட்டும்.சும்மா கனவுல கோட்டை கட்டாத !”
என்று எச்சரிக்க, அசட்டையாகக் கேட்டுக் கொண்ட சுருதி,
“எல்லாம் பார்த்துக்கலாம் மா.எனக்கு என்னமோ இந்தத் தடவை நம்மளும் போவோம்னு
நம்பிக்கை இருக்கு ”
என்று தம்பியுடன் கைக்குலுக்கிச்
சிரித்தவள் ,சுற்றுலா தினத்தில் தனது அடுத்தடுத்த கொண்டாட்டத்திற்குத் திட்டமிடலானாள்.
தனியார் பேருந்தில் நடத்துனாராகப் பணிபுரியும் நடேசன்,8 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலைப் பார்த்துக் களைத்து வீடு திரும்ப,எப்பொழுதும் போல் அவர் வருகையில் வீடு ஆழ்ந்த அமைதியில் இருந்தது.பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டிருக்க,கோகிலா இரவுணவு சமைத்துக் கொண்டிருக்க,செய்தி சேனலை
ஒலி(ளி)க்க விட்ட நடேசன்,சற்று நேரம் அதனில் ஆழ்ந்து போனார்.
எப்பொழுதும் போல் இரவும் அனைவரும் சேர்ந்தமர்ந்து ,அவரவருக்கு அவரே பரிமாறி உண்ண,நடேசன் நிறைவாய் மனைவி,மக்களைப் பார்த்திருந்தார்.அவர் எத்தனை மணி நேரம் நின்று வந்தாலும்,இப்படி அனைவருடனும் இணைந்து உண்பதில் அவருக்கு அத்தனை நிம்மதி.அவர் காலத்தில் அனுபவித்த தனிமையை மனைவி மக்களுடன் இருக்கையில் போக்கிக் கொண்டார்.
அனைவரும் உண்டு முடிக்கையில், மெல்ல தன் குரலை ஒலிக்கச் செய்த கோகிலா தன் கணவர் முகம் பார்த்துப் பேசியிருந்தார்.
“சுருதி பா ...அண்ணி பேசினாங்க.இந்த தடவை டூர் கொடைக்கானல்
போட்டிருக்காங்களாம்.உங்ககிட்ட கூடச் சொன்னதா சொன்னாங்க. நம்மளும் போறோமா பா ?
என்றவர் எதிர்பார்ப்பாய் கணவன் முகம் பார்க்க,அனைவர் முகத்தையும் ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்த நடேசன்,
“இல்லை கோகி.அவங்களோட நம்ம
போக வேண்டாம்.கொஞ்ச நாள் போகட்டும் நானே உங்களைக் கூட்டிட்டுப் போறேன்”
என்றவர் முடிக்கும் நொடி,சுருதி கண்களிலிருந்து நீர் சொட்டு சொட்டாக இறங்கியிருந்தது.அதனைக் கண்டு மறுபடியும் கோகிலா,
“ பிள்ளைங்க ஆசைப்படுது .அதுங்க மட்டும் கூட போயிட்டு வரட்டுமே “
என்று அவர் முடித்த நொடி,சற்று அதட்டும் குரலில் நடேசன் பேசியிருந்தார்.
“ நான் தான் சொல்றேன்ல அவங்ககூட
வேண்டாம்னு ,புரிஞ்சுக்க மாட்டியா ?
இப்போ என்ன நம்ம எங்கையும் போகாமலா இருக்கோம்.”
என்றவர் தொடர்ந்து சீற,சுருதி கண்கள் நிறைந்த நீரோடு சாப்பிட்டு முடித்தது போல் எழுந்து சென்று விட்டாள்.அவள் பின்னே ரகுவும் செல்ல,கணவரது கோபத்திலும் மகளின் அழுகையிலும் காயப்பட்ட கோகிலா ,தானும் மனம் நிறைந்த கோபத்தோடு அங்கிருந்து விலகிச் சென்றிருந்தார்.
கதவு சாற்றப்பட்ட மகளின் அறைக்குள் போராடி உள்ளே சென்றவர் மகளைத் தேற்ற,அவளோ அழுது கதறியிருந்தாள்.
“அம்மா..எனக்கு இந்த அப்பாவைப் பிடிக்கவேயில்லை மா. ஏன்மா இவரு இப்படியிருக்கார்.
பிரெண்ட்ஸ் கூட வெளிய போகக் கூடாது சொன்னாரு ஓகே.!
பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட ரொம்பப் பேசக் கூடாதுனு சொன்னாரு .. ஓகே .!
இப்போ அத்தை கூடப் போறதுல
என்னம்மா ?அவரோட அக்காதான. எப்படிமா யாரையும் அண்டாம, நம்மளையும்
அண்ட விடாம இப்படி இருக்காரு.!”
என்றவள் விடாது தேம்ப, மகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாது தவித்த கோகிலா,மகளை அணைத்துப் பரிவாகத் தலை கோதி சமன் செய்ய முயல,அவர்களோடு ரகுவும் இணைந்து கொண்டான்.
வெளியே தனி ஒருவனாக நடேசன் தனது தமக்கையிடம் கத்திக் கொண்டிருந்தார்.
“அக்கா .. போன தடவை போகும் போது சுருதியை நீங்க ஏதோ சொன்னீங்க தான.”
“....”
“ஆமா கா !என்கிட்ட காசில்லை தான்.அதுக்காக நான் டூருக்குத்
தரவேண்டிய காசைத் தராம இருந்தேன்னா ! நீங்க
பாட்டுக்கு ஜாடைப் பேசுறீங்க.அதனால் தான் இந்தத் தடவை யோசிச்சு சொல்றேன்னு
சொன்னேன்.எப்படியும் வேண்டாம்னு
தான் சொல்லியிருப்பேன்.எம் பிள்ளைங்க
அறியா பிள்ளைங்க கா.நீ ஜாடைப் பேசுறது கூடத் தெரியாம தான்,
‘ அத்தை அத்தை’ -னு உன் பின்னாடி வருதுங்க.இந்தத் தடவையும் அப்படி அசிங்கப்பட வேண்டாம்னு தான் நான் சொல்லல.இனி நீயும் கேட்காத..!நம்ம உறவை எட்ட நிற்கிற உறவாவே வச்சிபோம்.காசு,
பணம்னு வந்தா எல்லாத் தகுதி பார்க்கிறீங்க தான...! ”
என்று குரலுடைந்து அழைப்பைத்
துண்டித்தவர் மனமெல்லாம் மகள் அழுது சென்ற காட்சியே தெரிய,உடனடியாகச் சுற்றுலா தான் செல்ல முடியவில்லை,மகள் கேட்டபடி, ‘ஒரு வாரம் ஓவர் டைம் வேலைப் பார்த்தாவது மகளுக்கு நல்ல பவர் பேங் வாங்கித் தர வேண்டும் ' என்று மனதோடு குறித்துக் கொண்டார்.
அதன் பின்னும் பிள்ளைகளின் துடிப்பில் ஆறாத மனம்,பாசத்தில் தவிக்க அவர்களைத் தேடித் சென்றவர் கண்ணில் கோகிலா,சுருதி,ரகு மூவரும் குடும்பமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கும் காட்சி தெரிய,தனித்து நின்றாலும் தனிமை கொன்றாலும் குடும்பத்தின் நலனில் நிறைவாய் நகர்ந்து சென்றிருந்தார் நடேசன்.
அப்பாக்களின் தனிமை,
பிள்ளைகளால் கண்டிப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
அப்பாக்களின் தனிமை,
பிள்ளைகளால் முசுடு என்று இனங்காணப்படுகிறது.
அப்பாக்களின் தனிமை,
பிள்ளைகளுக்கு வெறுப்பை அள்ளித் தருகிறது.
தள்ளி நின்றும்,தன்னையே
தனிமைப் படுத்தியும்
நிறைவு காணும் அற்புத ஜீவன்- அப்பா.

Last edited: