கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் உருகும் சத்தம் - 4

இன்னும் பத்தே நிமிடங்கள்.. காவ்யாவின் மனம் பட்டாம்பூச்சியாக பறந்தது.

அரவிந்தை பார்த்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது.

வெட்கமும் பரபரப்பும் சேர்ந்து கொள்ள அவள் மனம் படபடவென அடித்துக்கொண்டது. முதன்முதலில் அவன் அமெரிக்கா சென்ற அந்த நாளை நினைத்து பார்த்தாள்.

யூனிவெர்சிடியில் இருந்து ஈமெயில் வந்ததும் எல்லாம் விறுவிறுவென நடந்தது. இரண்டே வாரங்களில் விசா கிடைத்தது.. அவனுக்கு தேவையான பொருட்களை வாங்குவது பேக்கிங் செய்வது என குடும்பத்தில் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.

அவன் கிளம்பிய அன்று மொத்த குடும்பமும் அரவிந்தன் வீட்டில் ஆஜர் ஆகியிருந்தது. அங்கிருந்து அனைவரும் கிளம்பி திருச்சி ஏர்போர்ட்டில் அவனை வழி அனுப்புவதாக ஏற்பாடு. அவனோடு அவனது நெருங்கிய நண்பன் பாலாஜியும் சென்றதால் வசந்தாவுக்கு கொஞ்சம் நிம்மதி. கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க வசந்தாவும் அமிர்தம் அம்மாவும் கண்கள் கலங்க மற்ற அனைவரும் சிரிப்பும் கும்மாளமுமாக அவனை வழியனுப்பி வைத்தனர்.

"பத்திரமா இருப்பா.. அடிக்கடி போன் பண்ணுப்பா" என்று தாத்தா அறிவுறுத்த,

"நல்லா சாப்பிடு கண்ணு. வெளியில போறப்போ வரப்போ பாத்து போப்பா" என்று பாட்டி சொல்ல, அரவிந்தன் சிரித்தபடியே.."பாட்டி.. ஒண்ணும் பயப்படாதீங்க.. என்னோட காலேஜ் சீனியர்ஸ் நெறய பேர் அங்க இருக்காங்க.. இதோ பாலாஜியும் எங்கூடத்தான் இருக்க போறான்.. நீங்களும் தாத்தாவும் பத்திரமா இருங்க.. அம்மா அப்பாவ பார்த்துக்கோங்க.. ரெண்டே வருஷத்துல ஓடி வந்துடுவேன்" என்றான்.

ஒரு வழியாக அனைவருக்கும் விடை கொடுத்து விட்டு அவன் கண்கள் காவ்யாவை தேடின.. எப்போது தன்னை பார்ப்பான் என்று மௌனமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் கண்கள் பார்க்கும்போது அவளையறியாமல் சிந்திய ஒரு துளி கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தோடியது. ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத காதலை ஒரு துளி கண்ணீர் சொல்லியதுபோல் இருந்தது அவனுக்கு.

"ஹே காவ்யா.. மித்ரா .. ப்ரவீண் எல்லாரும் நல்லா படிக்கணும் சரியா?" என்று பொதுவாய் சொல்லிவிட்டு கண்களாலேயே அவளுக்கு விடை கொடுத்தான். சுற்றி அனைவரும் இருந்ததால் எதுவும் பேச முடியாமல் இருவரும் தவித்தது இருவருக்கும் புரிந்தது.

அடுத்த இரண்டு வருடங்கள் அவன் இல்லாத குறையே தெரியாமல் வசந்தா எப்போது வந்தாலும் மகனை பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். காவ்யாவும் படிப்பு ப்ராஜெக்ட் என்று பிஸியாகியிருந்தாள். எப்போவாவது தாத்தா பாட்டியிடமோ அப்பா மற்றும் சித்தப்பாவிடமோ அரவிந்த் போனில் பேசும்போது காவ்யாவும் பேச நேரிடும். அப்போதெல்லாம் பொதுவாக பேசிவிட்டு வைத்துவிடுவாள். தன் வெட்கத்தையும் காதலையும் மறைத்துகொண்டு அனைவர் முன்னும் பேசுவது அவளுக்கு பெரும்பாடு. ஆனால் நாளுக்குநாள் அரவிந்த் மீதிருந்த காதல் மட்டும் கூடிக்கொண்டே இருந்தது.

அவளது தோழிகள் கூட அவளை கலாய்ப்பதுண்டு. "எந்த காலத்துல இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்? வீட்டுல எல்லாருக்கும் ஓகே .. உங்களுக்கும் பிடிச்சிருக்கு.. ஆனா ஒரு மெசேஜ் இல்ல.. ஒரு போன் இல்லைன்னா நம்புறமாதிரி இல்லையே?" என்பார்கள்.

அவர்களை சிரித்தே சமாளித்துவிடுவாள். இருந்தாலும் அரவிந்த் ஏன் தனக்கு தனியாக போன் செய்வதில்லை என்று யோசிப்பதுண்டு. அவளுக்கு தெரியாது அரவிந்தனுக்கும் அதே நிலைதான் என்று. என்னதான் மாமன் மகள் என்றாலும் அவளை தனியாக அழைத்து பேச அவனுக்கும் கொஞ்சம் பயம்தான். எந்த நேரமும் வீட்டில் ஆட்கள் அதிகம். மித்ரா வேறு எப்போதும் காவ்யாவுடன் ஒட்டிக்கொண்டிருப்பாள். காவ்யாவே எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று பலவிதமாக யோசித்துவிட்டு பின்னர் அவள் படிப்பு முடியட்டும் என்று அமைதியாய் இருந்தான்.

அவன் படிப்பு முடிந்து இந்தியா வந்த கையோடு சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையிலும் சேர்ந்தான். அவளும் பி.இ முடித்திருந்தாள். அந்த வருட பொங்கல் விடுமுறையின் போது அரவிந்த் ஒரு வாரம் லீவில் வந்திருந்தான்.

அந்த ஒரு வாரமும் அவளுக்கு சொர்க்கமாய் இனித்தது. வீடே அரவிந்தால் களை கட்டியிருந்தது. பெரியவர்கள் இல்லாமல், அரவிந்த், காவ்யா, மித்ரா, ப்ரவீண் நால்வரும் கேரம் விளையாடிய பொழுதுகள், தஞ்சாவூருக்கு சினிமா பார்க்க சென்ற பொழுதுகள், தோட்டத்தில் பம்ப் செட்டில் ஆட்டம் போட்ட தருணங்கள் என்று அவள் வாழ்க்கை முழுதும் நினைத்து ரசிக்க ஏகப்பட்ட நினைவுகள். அவை அனைத்திலும் அரவிந்தின் காதலும் பரிவும் அக்கறையும் கலந்திருந்தது அவளுக்கு தெரியாமலில்லை.

லீவு முடிந்து அவன் செல்லும்போது ஏனோ அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவனை பார்த்தால் அழுது விடுவோமோ என்று தன் அறையை விட்டு கீழே வரவேயில்லை. யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க எழுந்து வந்து திறந்தாள். மித்ராதான் தட்டியிருந்தாள்.

"அக்கா என்ன பண்ற? மாமா அத்தை எல்லாம் கெளம்புறாங்க.. பெரியம்மா உன்ன கீழ வர சொன்னாங்க" என்றாள்.

"நான் வரல போடி" என்றவளின் குரல் வித்தியாசமாய் தோன்ற அக்காவை தன் பக்கம் திருப்பிய மித்ரா " அக்கா அழறியா?" என்றாள்.

அவள் கேட்டதும் சட்டென்று உடைந்தவள் "என்னால ..அத்தான் ஊருக்கு போறத பார்க்க முடியல. ப்ளீஸ் நீ எதாவது சொல்லி சமாளிச்சிடு " என்று திரும்பி கொண்டாள்.

"இந்த ஒரு தடவை தான்.. அதுக்கு அப்பறம் இந்த அத்தான் எங்க போனாலும் கூடவே காவ்யா செல்லமும் வருவாளாம்.. ஓகே வா?" மிக அருகில் அரவிந்தின் குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினாள். அழகாய் சிரித்தபடியே அவளை உற்று பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்த். " வந்து .. அத்தான் .. மித்ரா .." என்று இழுத்தாள்.

"மித்ரா அப்பவே போய்ட்டா.. நீ சொல்லு. உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?" கண்கள் சிமிட்டியபடி அவன் கேட்க.. வெட்கத்தில் தலை குனிந்தபடி வார்த்தை வராமல் தடுமாறினாள்.

"நீ வெட்கப்படறப்போ ரொம்ப அழகா இருக்க.. நானும் உன்ன மாதிரிதான்.. எப்பவும் நீ என் பக்கத்திலேயே இருக்கணும்னு தோணுது.. உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. எல்லாம் கொஞ்ச நாள்தான் .. நான் அம்மா அப்பாகிட்ட பேசுறேன். அவங்கள மாமா அத்தைகிட்டயும் தாத்தா பாட்டிகிட்டயும் பேச சொல்றேன்.. அதுவரைக்கும் என் நினைவா இதை வச்சிக்கோ " என்றவன் சட்டென்று அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அதை சற்றும் எதிர்பார்க்காதவள் காதலும் சந்தோஷமும் கலந்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட அவன் நெஞ்சில் சாய்ந்தாள். பரிவோடு அவளின் தலையை வருடிக்கொடுத்தவன்.. "காவ்யா.. நீ எதைப்பத்தியும் கவலைப்படாம சந்தோசமா இரு.. நா பாத்துக்கிறேன்" என்றான்.

அதற்குள் கீழேயிருந்து வசந்தா கூப்பிட இருவரும் விலகி நின்றனர். "முகத்தை கழுவிட்டு கீழவா.. நான் முன்னாடி போறேன்" என்று விட்டு நகர்ந்தான். அன்றுதான் அவள் அவனை கடைசியாய் பார்த்தது.

ஆறு மாதம் கழித்து அவனை அமெரிக்கா அனுப்பியது அவனது கம்பெனி. வசந்தாவும் சுகுமாரனும் இவர்கள் வீட்டிலிருந்து மணிமாறனும் சிவகாமியும் மட்டும் சென்னைக்கு சென்று அவனை வழியனுப்பி வைத்தனர்.

அதுவரை அக்கறையாய் சில விசாரிப்புகள், அன்பாய் சில போன் கால்ஸ் என்றிருந்தவன் இந்த இரண்டு வருடங்களாய் பட்டும் படாமலும் இருக்கிறான். இவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அனுப்பிய சில வாட்ஸாப்ப் மெசஜ்க்கும் ஒற்றை வரியில் " சாரி டா.. வேலைல பிசியா இருந்தேன்" என்று மழுப்பலாக பதில் அனுப்பியிருந்தான்.

அவனது நடவடிக்கை சற்றே பயத்தை தந்தாலும் அவன் மீதுள்ள காதலால் காவ்யா தன்னை தானே சமாதானம் படுத்திக்கொள்ளுவாள். பாவம் அத்தான். நிஜமாகவே நிறைய வேலை போல என்று..

அவள் மனம் முழுதும் அறிந்தவள் மித்ரா மட்டுமே. " அக்கா, அத்தான் ரொம்ப டீசெண்டான ஆளு.. என்ன தான் நீ அவரோட முறை பொண்ணுன்னாலும் லவ் அது இதுன்னு உன் படிப்பை கெடுக்க கூடாதுன்னு தான் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றாரு. ஆனா அவருக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும். நீ வேண்ணா பாரு.. கூடிய சீக்கிரமே கெட்டிமேளம்தான் " என்று இவள் கலங்கும்போதெல்லாம் இவளை சமாதானப்படுத்துவாள்.

பாட்டியும் அத்தையும் இவர்கள் திருமணம் பற்றி பேசுவதையும் அவ்வவ்போது கேட்டுருக்கிறாள். வசந்தா அம்மாவிடம் அலுத்துக்கொள்வாள். “என்ன வேலையோம்மா.. கல்யாணம்னு பேச்சை எடுத்தாலே மீட்டிங் அது இது ன்னு சொல்லிட்டு போன வச்சிடறான்”.

பாட்டி தான் மகளை தேற்றுவாள். "வசந்தா.. பாவம் அவன் .. யாருமில்லாம தனியா இருக்கான். அவனே சமைச்சி அவனே எல்லா வேலையும் பண்ணிட்டு ஆஃபீஸிக்கு போறான்.. இங்க வரட்டும். எல்லாம் பேசி நல்லபடியா முடிச்சிடலாம். காவ்யா படிப்பும் இன்னும் ஒரு வருஷம் போகணும்ல" பாட்டியின் பேச்சு இவளுக்கும் நம்பிக்கையை கொடுக்கும்.

இதோ அந்த நாள் வந்தே விட்டது. அவனை பார்க்கும் அந்த நொடிக்காக காத்திருந்தாள் காவ்யா.

கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்து கொண்டாள். புடவையில் மிகவும் அழகாய் தெரிந்தாள். இந்த கலர் அவள் அத்தானுக்கு மிகவும் பிடித்தது. ஒருமுறை அனைவரும் திருச்சியில் அவனது நண்பன் பாலாஜியின் அண்ணன் திருமணத்திற்க்கு சென்றபோது இதே மயில் கழுத்து நிற பட்டு சல்வாரில் வந்திருந்தாள். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் காரில் ஏறும்போது மெதுவாக அவள் காதுகளில் கிசுகிசுத்தான். "இந்த கலர் உனக்கு ரொம்ப நல்லா சூட் ஆகுது. யு லுக் கார்ஜியஸ்" என்று வெட்கப்பட வைத்தான். இன்று அதே கலரில் புடவை. என்ன சொல்வானோ என்று நினைப்பே அவளுக்கு சுகத்தை தந்தது.

காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் கடக்க, தனது போனில் ரகசியமாய் வைத்திருந்த அவன் புகைப்படத்தை எடுத்து அவனது கள்ளமில்லா சிரிப்பை கண்டு ரசித்துக்கொண்டிருந்தாள் காவ்யா அடுத்து வரும் நாட்கள் அவளுக்கு பேரிடியாய் வருமென்பது தெரியாமலே.
 
Akila vaikundam

Moderator
Staff member

Super ka
 
Top