கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-11

Nilaa

Moderator
Staff member
11
அரிதாரம் பூசிய
என் நெஞ்சம்!
என்றும் உன் சொந்தம்!
ஏற்பாயோ?
மறுப்பாயோ?

“மதி,வா ராஜா.எங்கப்பா
போயிட்டே?அப்பா உன்னை
எத்தனை தடவை கேட்டார்
தெரியுமா”வேகமாக மகன்
அருகில் சென்றார் சாரதா.

“சாரிம்மா”

அதற்கு மேல் என்ன
சொல்வதென்று தெரியாமல்
தங்கையையும்,தம்பியையும்
பார்த்தான் மதிவதனன்.

“மயூ,முகி ஆபிஸ் போயிட்டு
வந்துட்டீங்களா”

“ஆமாம்ணா”

அண்ணன் குரலில் சுதாரித்து,
தன் பார்வையை வசந்தனிடம்
இருந்து விலக்கிய மயூரி,
அங்கிருந்து நகர்ந்து
உள்ளறைக்குள் சென்று
மறைந்தாள்.

இந்த மயூவுக்கு என்னவானது
எனப் புரியாமல்,மயூரியைத்
தொடர்ந்து சென்றான் முகிலன்.

“ராஜா,ஏன்பா ஒரு மாதிரி
இருக்கே?உடம்பு எதுவும்
சரியில்லையா?”

“அம்மா...பைக்கில இருந்து
கீழ விழுந்துட்டேன்மா.கால்ல
லேசா அடி பட்டுடுச்சு.ரோட்டில
கண்ணாடி கிடந்திருக்கு,
கையில குத்திடுச்சு.டாக்டர்
கிட்டக் காட்டிட்டு வர்றேன்மா”

“ஐயோ!!!கண்ணாடியா?எங்கே
கையைக் காட்டு!”சாரதா
மகனின் இரு கைகளையும்
தொட்டுத் தொட்டுப் பார்க்க,
தாயின் கை பிடித்துத்
தடுத்தான் மதிவதனன்.

“நீங்க பயப்படற மாதிரி
எதுவும் இல்லைம்மா.சின்னக்
காயம் தான்.நாலு நாள்ல
சரியாயிடும்.கவலைப்
படாதீங்க.அப்பா கிட்ட
சொல்ல வேண்டாம்மா”

“பொய் சொல்லாதே மதி.
முகம் வாடிக் கிடக்குது.
எத்தனை ரத்தம் போச்சோ?
உனக்கு எதுக்கு ராஜா
பைக்கெல்லாம்?வா,வந்து
உட்காரு.கால் வலிக்கப்
போகுது.இனி நீ பைக்கையே
தொடக் கூடாது.புரிஞ்சுதா?”

“நான் தான் ஆன்ட்டி
பைக்கில போகலாம்னு
சொன்னேன்”

வசந்தன் பேசியதும் தான்
அங்கு ஒருவன் இருப்பதையே
கவனித்தார் சாரதா.

“வாங்க தம்பி,மதி...இவர்...”

“அம்மா,இவர் வசந்த்.
மதுவோட பிரெண்ட்.அப்படியே
எனக்கும் பிரெண்ட்
ஆயிட்டார்.ரொம்ப நாளா
வீட்டுக்குக் கூப்பிட்டு
இருக்கேன்.இன்னைக்குத்
தான் வந்திருக்கார்”

“உங்களுக்கு எதுவும் அடி
பட்டிருக்கா தம்பி”

“இல்லை ஆன்ட்டி.எனக்கு
அடி படலை.என்னால
மதிக்குத்தான் அடி
பட்டுடுச்சு”

“ஏதோ கெட்ட நேரம்.
விடுங்க தம்பி”

“அம்மா,வசந்த் ஒரு
வாரத்துக்கு நம்ம வீட்டில
தான் தங்குவார்.என்
ரூம்முக்குப் பக்கத்து ரூம்மை
ரெடி பண்ணிடுங்கம்மா”

“சரிப்பா.நீ சாப்பிட்டியா
கண்ணா”

மதிவதனன் இல்லையெனத்
தலையசைக்க,“என்ன மதி இது?
மணி நாலாகப் போகுது.
வாங்க தம்பி,வா மதி”என
மகனின் கை பற்றினார்
சாரதா.

எனக்கு சாப்பிடத்
தோன்றவில்லை.சாப்பிடாமல்
அம்மா விட மாட்டார்கள்.
வசந்தன் வேறு இன்னும்
சாப்பிடவில்லை.நான்
மறுத்தால் இவனும் உண்ண
மாட்டான்.

“சாப்பாட்டை என் ரூம்முக்கு
அனுப்பறீங்களாம்மா?
மெதுவா சாப்பிடறோம்”

“சரிப்பா”

மதிவதனன் அறைக்குச்
சென்ற சில நிமிடங்களிலேயே
உணவு வர,மதிவதனனும்,
வசந்தனும் மௌனமாக
உண்டு முடித்தனர்.

“ரெஸ்ட் எடுங்க வசந்த்.
வெளியில போகணும்னா
என்கிட்ட சொல்லிட்டுப் போங்க”

“சரி மதி”

தனக்கு அளித்திருந்த அறைக்குச்
சென்ற வசந்தன்,உடனே தன்
மடிகணினியை எடுத்து வைத்து
உயிர்ப்பித்தான்.

அவன் வேலைகளை முடித்து
எழும் போது மாலை ஆறரை
ஆகி இருந்தது.

மதுவைக் காணச் செல்லலாமா?
வேண்டாம்.மது அம்மாவிற்குச்
சந்தேகம் வந்து விடும்.

மதிவதனன் அறைக்குச் சென்று
பார்த்த வசந்தன்,அவன் நன்கு
உறங்குவது கண்டு கவலையுடன்
அவனைப் பார்த்தபடியே நின்றான்.

மதி சரியாக சாப்பிடவில்லை,
கொறித்துக் கொண்டிருந்தான்.
பேசவும் இல்லை,யோசனையில்
மூழ்கி இருந்தான்.மாத்திரையின்
விளைவால் உறங்குகிறான்.

மதி மனதில் ஏகப்பட்ட
கேள்விகள்,குழப்பங்கள்
இருக்கும்.அதற்கான
பதிலை மது தான் சொல்ல
வேண்டும்.

ரெஜீஸ் உடன் மது காதல்
நாடகம் ஆடியது,மதிக்குத்
தெரிந்து விட்டது.இனி மதி
மனதில் மதுவிற்கான இடம்
என்னவாக இருக்கும்?மதுவைப்
பழையபடி நேசிப்பானா
இல்லை ஒதுக்கி விடுவானா?

இல்லை.மதி அவ்வாறு செய்ய
மாட்டான்.நானும் அவ்வாறு
நடக்க விட மாட்டேன்.

தனக்கு அளித்திருந்த
அறைக்குத் திரும்பிச்
சென்ற வசந்தன்,
கைபேசியை எடுத்துத்
தனது நண்பன் தினேஷை
அழைத்தான்.

தினேஷிடம் பேசி விட்டு,அவன்
தெரிவித்த விபரங்களை
மதுராவிற்குத் தெரிவித்து
விட்டு,மனதில் தோன்றிய
நிம்மதியுடன் கண்களை
மூடினான் வசந்தன்.

நன்றி கடவுளே!நாங்கள்
எடுத்த வேலையை நல்லபடியாக
முடித்து விட்டோம்.நடுவில்
எதாவது சிறு பிழை
நேர்ந்திருந்தாலும்,எங்கள்
திட்டம் தோல்வியைத் தழுவி
இருக்கும்.அதன் பின் என்றுமே
எங்களால் ரெஜீஸ்ஸை
நெருங்கியிருக்க முடியாது.

மதுவிற்குத் தான் இதில்
ஆபத்து அதிகம்.மதுவால்
தன்னைக் காத்துக் கொள்ள
முடியும்.இருந்தாலும்,மது
பற்றிய கவலை உள்ளுக்குள்
இருந்து கொண்டே இருந்தது.
இப்போது தான் நிம்மதியாக
இருக்கிறது.

நடந்த அனைத்தையும்
ஒவ்வொன்றாக நினைத்துப்
பார்த்தபடியே நேரத்தைக்
கடத்தினான் வசந்தன்.

ரவு வந்திருந்தது.

விழிகள் உறங்க மறுத்திருக்க,
மதுரா மனது மதிவதனனையே
சுற்றி வந்து கொண்டிருந்தது.

வசந்தன் மதி தூங்குகிறான்
என்று சொன்னான்.நாளை
தான் என் மதியிடம்
பேச முடியுமா?

அத்தனை காலையில்...எதற்கு
என்னை அழைத்திருப்பான்?
அம்மாவை வேறு அழைத்துக்
கேட்டிருக்கிறான்.

பெரும்பாலும் இரவு நேரத்தில்
தான் மதி என்னிடம் பேசுவான்.
பகலில் அவனுக்கு வேலையே
தீராது.

இன்று பார்த்தே ஆக வேண்டும்
என்றானே.ஒரு வேளை...மதி
என்னிடம் தன் காதலைச்
சொல்ல நினைத்து...
கேட்டிருந்தால்... ச்சே!
நான் ஒரு துரதிஷ்டசாலி!

எப்படி என்னைத் தொடர்ந்து
வந்தான்?அவன் வீட்டைக் கடந்து
செல்கையில் பார்த்துப் பின்
தொடர்ந்திருப்பான்.கார் கூட
வெளியில் தான் நின்றிருந்தது.
என்னை ரெஜீஸ் உடன் பார்த்து
மனமுடைந்து போயிருப்பான்.
ரெஜீஸ்ஸின் திருட்டு முழியைப்
பார்த்து சந்தேகப்பட்டு,
தொடர்ந்து வந்திருக்க
வேண்டும்.

அங்கேயே இருந்து கொண்டு
என் மதியை அடி வாங்க
விட்டிருக்கிறேன்.நான் பாவி!
எனக்கு மன்னிப்பே கிடையாது.

உன்னருகில் இருந்து உன்னைப்
பார்த்துக் கொள்ள வேண்டுமென்று
நினைக்கிறேன் மதி.
அதற்காகவே உன்னை இந்த
நொடியே மணந்து கொள்ள
வேண்டுமென்று துடிக்கிறேன்.
ஆனால்,இனி உன் காதல்
எனக்குக் கிடைக்குமா?

ரெஜீஸ் உடன் பழகியதை
நாடகம் தான் என்று ஒதுக்கி,
என்னை ஏற்றுக் கொள்வாயா?

இல்லை...காதலிப்பது போல்
நடிக்கும் அளவிற்குத்
துணிந்திருக்கிறாள் என்று
வெறுத்து விடுவாயா?

மதுராவின் சிந்தனை ஓட்டத்தைத்
தடை செய்தது அந்த சத்தம்!

யாரோ மதிற்சுவர் ஏறி
குதிக்கும் சத்தம்,ஜன்னல்
திறந்திருந்ததால்,மதுராவிற்குத்
தெளிவாகவே கேட்டது.

படுக்கையில் எழுந்து அமர்ந்த
மதுராவின் காதுகள் கூர்மை
பெற்றது.

மீண்டும் அதே சத்தம் கேட்க,
படுக்கையில் இருந்து
இறங்கினாள் மதுரா.

மணி பத்தாகிறது.யார் இந்த
நேரத்தில்?திருடனா இல்லை...
ரெஜீஸ்ஸா?

ரெஜீஸ்ஸால் எப்படி வர
முடியும் மது?வேறு யாராக
இருக்கும்?

இரண்டு பேர் இருக்கிறார்கள்.
யாரென்று பார்க்கிறேன்.
சரியான பாடம்
புகட்டுகிறேன்.

தன் வாட்ரோபைத் திறந்து
உடைகளுக்கு நடுவில் மறைத்து
வைத்திருந்த துப்பாக்கியை
எடுத்துக் கொண்டு இறங்கிச்
சென்ற மதுரா,சட்டென்று
நின்று தாய்தந்தை உறங்கும்
அறையை வெளிப் பக்கமாகத்
தாழிட்டாள்.

முன்கதவை ஒட்டித்
துப்பாக்கியோடு தயாராக
நின்ற மதுரா,வெளி
நடமாட்டத்தைக் கூர்ந்து
கவனித்தாள்.

இருவர் பேசும் சத்தம்
தெளிவாகக் கேட்க,துணிவு
தொலைந்து,பதற்றம்
தொற்றிக் கொண்டது மதுராவை!

தித்திக்கும்❤️❤️❤️



ஹாய் பிரெண்ட்ஸ்,

அத்தியாயம்-11 பதிந்து விட்டேன்.
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருப்பேன்.
நன்றி🙏🙏

அன்புடன்,
நித்திலா:)
 
Top