19
உனைக் காத்திட
வந்தேன்!
நீ எனைக் காத்திட
உயிர் கொண்டேன்!
என்னுயிர் உனக்கென
நாளும் காதல் சொல்வேன்!
உனைக் காத்திட
வந்தேன்!
நீ எனைக் காத்திட
உயிர் கொண்டேன்!
என்னுயிர் உனக்கென
நாளும் காதல் சொல்வேன்!
இருள் கவியத் தொடங்கி
இருந்தது.
சிந்தனை வயப்பட்டு
அமர்ந்திருந்த மதிவதனன்,
காலடி ஓசையில் நிமிர்ந்தான்.
“எங்கடா போனே”
“வீட்டுக்குப் போயிருந்தேன்
மதி”என்றாள் அவனருகில்
அமர்ந்து.
“என்ன பேப்பர் இது”அவள்
கையில் இருந்த பேப்பரைப்
பார்த்து மதிவதனன் கேட்க.
ஒரு பக்கத்தை மடித்து
அவனிடம் கொடுத்தாள் மதுரா.
அந்தப் பக்கத்தில் இருந்த
புகைப்படத்தைப் பார்த்த
மதிவதனன் கைகள்,
பேப்பரை இறுக்கிப் பிடிக்க
அவன் கண்கள்
அப்புகைப்படத்தை உற்று
உற்றுப் பார்த்து உறுதிப்
படுத்திக் கொண்டது.
“ரெஜீஸ்...”எழுந்து
நின்றிருந்த மதிவதனன்
அருகில் நின்று,அவன் முகம்
காட்டும் பாவனைகளைப்
பார்த்திருந்தாள் மதுரா.
இது ரெஜீஸ்சும்,அவனுடைய
நண்பர்களும் தான்.இவர்கள்
உயிருடன் தான்
இருக்கிறார்களா?அவசரமாகப்
புகைப்படத்திற்குக் கீழே
பார்வையை ஓட்டினான்
மதிவதனன்.
“போதை மருந்து
விற்பனையில் கைது
செய்யப் பட்டுள்ள
ரெஜீஸ்(நடுவில்), சுமன்
(இடது),லோகு(வலது)”
புகைப்படத்தை அடுத்திருந்த
செய்தி,“காரில் போதை மருந்து
பதுக்கல்!பெரும் தீ விபத்து,
பொருட்கள் நாசம்!”என்று
தலைப்பிடப் பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு
முந்தைய பேப்பர்!
வாசித்தேனே…இந்தச்
செய்தியை எப்படி
கவனிக்காமல் விட்டேன்?
இல்லையில்லை.எனக்கிருந்த
பயத்தில்,பேப்பரை நான்
சரியாகப் படிக்கவில்லை.
வெறுமனே புரட்டிப்
பார்த்து விட்டு வைத்து
விட்டேன்.
துரிதமாய்ச் செய்தியை
வாசித்து,பேப்பரைப்
போட்டு விட்டு,மதுரா
முகத்தைப் பார்த்த
மதிவதனன் முகத்தில்
தான் எத்தனை எத்தனை
உணர்ச்சிகள்!
மனதை அழுத்திக்
கொண்டிருந்த பெருஞ்சுமை
அகன்றதில்,லேசான
மனதுடன்,முகம்
கொள்ளாச் சிரிப்புடன்
அருகிருந்த மதுராவைத்
தூக்கிய மதிவதனன்,
வலியில் முகம் சுளித்து
அவளை இறக்கி விட்டான்.
“மதீ...ரொம்ப வலிக்குதா”
என்றவள் பதற.
“இல்லைடா.லேசா...எனக்கு...
அப்படியே உன்னைத்
தூக்கிட்டுப் பறக்கணும்
போலிருக்கு மது”
“பறந்துட்டா போச்சு.ஆனா
கை சரியானதுக்கு அப்புறம்”
“மூணு நாளா பயந்து
பயந்து,என்ன பண்ணலாம்னு
யோசிச்சு யோசிச்சு...”
கண் மூடி சோபாவில்
சாய்ந்த மதிவதனன்,
தன்னை எண்ணி,தன்
பயத்தை எண்ணி வாய்
விட்டுச் சிரித்தான்.
அவன் சிரிப்பதை இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.
நீ சரியான லூசு மதி!என்னமா
கற்பனை பண்ணி இருக்கே?
மீண்டும் மீண்டும் சிரித்த
மதிவதனன்,ஒரு கட்டத்தில்
தானாகவே சிரிப்பை நிறுத்திக்
கொண்டான்.
“என்னை மன்னிச்சுடு மதூ..
நான்...நான் உன்னை அப்படி
நினைச்சிருக்கக் கூடாது.
நீ துப்பாக்கி வைச்சிருந்தது...
அவனை மிரட்டினது...இழுத்துட்டுப்
போனது...நீங்க அவ்வளவு நேரம்
காருக்கு வராம இருந்தது...”
“........”
“எல்லாத்தை விடவும்,நீ சின்ன
வயசுலயே யாராவது தப்பு
செஞ்சா,ரொம்பக் கோபப்
படுவே.அதான்...நான்...அவன்
பண்ண பாவத்துக்கு தண்டனை
கொடுத்துட்டேன்னு நினைச்சு...
உன் மதியை மன்னிச்சுடு
மது.நான்...நானே என் மது
மேல...எவ்வளவு பெரிய
குற்றத்தைச் சுமத்தி
இருக்கேன்?நான் ஒரு
முட்டாள்.சாரிடா மதூ...”
“சூழ்நிலைகள் அப்படி
நினைக்க வைச்சுடுச்சு
மதி.விடு.நீ சாரி சொல்ல
வேண்டிய அவசியமே இல்லை”
“நான் உன்னைத் தப்பா
நினைச்சதுக்கு...
உனக்குக் கோபம்
இல்லையா மதூ...”
“எனக்கு உன் மேல
கொஞ்சக் கோபம் கூட
இல்லை.நீ இப்படி சாரி
கேட்டினா...கண்டிப்பா
கோபம் வரும்.நிறையக்
கோபம் வரும்”
இவள் நான் பழகிய மது
இல்லை.என் மது இப்போது
பெரிய பெண்ணாகி
விட்டாள்.அப்போது இருந்த
குறும்பு,பிடிவாதம், முன்கோபம்,
பேச்சு எதுவுமே இப்போது
இல்லை.நிதானம்,அளவான
பேச்சு,அளவான
சிரிப்பென்று நிறையவே
மாறி விட்டாள்.
“மதி”மதுரா அவன்
தோள் தொட,அவள்
மடியில் சாய்ந்து
கொண்டான் மதிவதனன்.
கடந்து மூன்று நாட்களாக
இவன் எத்தனை
துடித்திருப்பான்?
எனக்காகத்தான்
திருமணத்தை ஒரே
மாதத்தில் முடிக்க
வேண்டுமென்று கூறியிருக்கிறான்.
தன் குடும்பத்தை,தன்
தொழிலை,தன் நாட்டை,
இறுதியாகத் தன்னையும்
தியாகம் செய்யத்
தீர்மானித்திருக்கிறான்!
மதுரா வாஞ்சையுடன்
அவன் தலை கோத,
இதமான மனதுடன்
கண்களை மூடினான்
மதிவதனன்.
நெடு நேரத்திற்கு அங்கு
மௌனமே பேசியது.
“அன்னைக்கு எதுக்காக
என்னை பாலோ பண்ணே
மதி”
விழி திறந்த மதிவதனன்,
“மதூ..அந்த ரெஜீஸ்
உன்னைப் பார்த்த விதமே
சரியில்லை.ஆனா நீ
அவன்கிட்ட சிரிச்சு சிரிச்சுப்
பேசினே.அவன் கார்லயும்
ஏறினே.எனக்கு என்னவோ
தப்பா பட்டுச்சு.ஏதோ
சரியில்லைன்னு என் மனசு
சொல்லுச்சு.நான் உன்னை
பாலோ பண்ண ஆரம்பிச்சேன்.
உன்னை பாலோ பண்றது
தப்புன்னு தெரிஞ்சாலும்,
மனசு கேட்காமத் தொடர்ந்து
வந்தேன்.அவன் யாரு,எங்க
போறே,ஏன் பொய்
சொல்லணும்,நிறைய
கேள்விகளோட ஹோட்டலுக்கு
வந்தப்ப...அங்க அவன்
பேசினதைக் கேட்டதும்...”
என்று கூறி நிறுத்தினான்.
“சாரி மதீ...நான் உன்
மனசை உடைச்சுட்டேன்...”
தன் தலைகோதிய கையைப்
பிடித்துத் தன் நெஞ்சின் மீது
வைத்துக் கொண்டான்
மதிவதனன்.
“அவன் பேச்சைக் கேட்டதுக்கு
அப்புறமும்,எப்படி என்னைத்
தொடர்ந்து வந்தே மதி?”
“நீ என்னை விரும்பலைனாலும்,
நான் உன்னை விரும்பறனே
மது.“அவனைப் பார்த்தா
நல்லவனா தெரியலை.உன்
மதுவை அவன் கிட்ட விட்டுட்டுப்
போறயேன்னு”என் மனசு
என்னை உலுக்குச்சு.என்னால
கிளம்ப முடியலை”
என் நலன் கருதியே இவன்
என்னை நிழலாகத்
தொடர்ந்திருக்கிறான்.என்
நிழல் எனை நீங்கி எப்படிச்
செல்லும்?
“உன்னைத் தொடர்ந்து
வந்து அந்த வீட்டுக்குள்ள
நுழைஞ்சேன்.போர்டிகோவில
இருந்த பெரிய செடிகளுக்குப்
பின்னால மறைஞ்சுக்கிட்டு,
என்ன நடக்குதுன்னு
பார்த்தப்ப தான்,அந்த
பிராடுக குடிச்சுட்டுப்
பேசிட்டு இருந்ததைக்
கேட்டேன் மது.நீ எவ்வளவு
பெரிய ஆபத்துல சிக்கி
இருக்கேன்னு…நான்
அப்படியே உறைஞ்சு
போயிட்டேன் மது”
“அப்ப இன்னொருத்தனும்
வந்தான்.அவன் கதவை
சாத்தினனால,அவங்க
பேசறதை தொடர்ந்து
கேட்க முடியலை.நீ உள்ள
என்ன பண்றே?இவங்க
பேசறதைக் கேட்டிருப்பியா?
எப்படி உள்ள வர்றது?உன்னை
எப்படி காப்பாத்தறது?எனக்கு
ஒண்ணுமே புரியலை.
வீட்டுக்குள்ள போக முடியுமா,
எதாவது வழி இருக்குமான்னு
பார்த்தப்ப,பிரென்ச் வின்டோ
கண்ணுல பட்டு,எனக்கு
நம்பிக்கை வந்துச்சு.அதை
உடைச்சு உள்ள வந்து,
உன்னைக் காப்பாத்தி,
காருக்குக் கூப்பிட்டுப்
போயிடலாம்னு நினைச்சேன்”
“நான் பதுங்கிப் பதுங்கி
பிரென்ச் வின்டோ பக்கத்தில
வந்து,கதவுக்கு அடியில
தெரிஞ்ச சந்துல படுத்துட்டுப்
பார்த்தப்ப...நீ பெட்டில
இருந்தே...எனக்கு...எனக்கு
இதயமே நின்னு போச்சு மது.
உனக்கு அந்த ராஸ்கல்
என்னவோ கொடுத்துட்டான்.
நீ மயக்கமாயிட்டே...என்
மதுவை எப்படியாவது
காப்பாத்தணும்,அவளுக்கு
எதுவும் ஆகக் கூடாதுன்னு..
நான்...எனக்கு...நான்
ரொம்ப பயந்துட்டேன் மதூ..”
மதிவதனன் உடல்
அப்போதும் நடுங்க,அவன்
தலையைத் தன் வயிற்றோடு
அணைத்துக் கொண்டாள் மதுரா.
எனக்கு எதுவும் விபரீதம்
நேர்ந்து விடுமோ என்று
அஞ்சி என் மதியின்
சித்தம் கலங்கி இருக்கும்!
“அவனுக பேசினதை வைச்சு...
பொண்ணுகளைக் காதலிக்கிறதா
சொல்லி..ஏமாத்தி வர வைச்சு,
மயக்க மருந்து கொடுத்து
போட்டோ எடுக்கிறது தான்
அவனுகளோட தொழில்னு
எனக்குப் புரிஞ்சுது மது.
அவனுக சாதாரணமானவங்க
இல்லை...கிரிமினல்கள்னு
தெளிவா தெரிஞ்சதும்...அவனுக...
எல்லாத்துக்கும் தயாரா
இருப்பாங்க...என்னைத் தாக்கி...
எனக்கு எதாவது ஆயிட்டா...
உன்னை யார் காப்பாத்தறதுன்னு...
நான்...நான்...ரொம்ப பயந்துட்டேன்
மது.சத்தமில்லாம அந்த
பிராடுகளைத் தாக்கிட்டு,
உன்னைத் தூக்கிட்டு
ஓடிடணும்னு முடிவு
பண்ணேன் மதூ..”
மதிவதனனின் பயம்
அப்போதும் அவன் குரலில்
வெளிப்பட,அவன் தலையை
ஆதரவாக வருடினாள் மதுரா.
“தோட்டம் முழுக்கத் தேடி
நல்ல மரக்கட்டை ஒண்ணை
எடுத்துட்டு வந்தேன் மது.
ஒரே ஒரு அடிதான்
அடிக்கணும்கிற முடிவோட
வந்தேன்.கதவை எப்படி
சத்தம் வராம திறக்கிறதுன்னு
நான் யோசிச்சப்ப,கதவு நான்
லேசா தொட்டதுமே
திறந்துடுச்சு.ஆனா,நீ பெட்ல
இல்லை.அப்ப யாரோ வர்ற
சத்தம் கேட்டுச்சு.நீ பெட்ல
இல்லைன்னு தெரிஞ்சா
சுதாரிச்சுடுவாங்கன்னு நான்
அவசரமா ஒரு பில்லோவை
வைச்சுப் போர்த்தி விட்டேன்.
அவன் வந்ததும் அவனை
அடிச்சு மயக்கமாக்கினேன்.
நீ உள்ளயும் இல்லை,
வெளியிலயும் இல்லைன்னு
நான் குழம்பி நின்னப்ப,என்
போன் என்னைக் காட்டிக்
கொடுத்துடுச்சு மது”
அன்று நடந்தவற்றை
மதிவதனன் விவரிக்க,
மௌனமாகக் கேட்டுக்
கொண்டிருந்தாள் மதுரா.
“நீ எப்படியோ அந்த
அயோக்கியனைப் பத்தித்
தெரிஞ்சு தப்பிச்சுட்டேன்னு
புரிஞ்ச அந்த நிமிஷம்...இனி
அவன் அடிச்சாலும்,
கொன்னாலும் பரவாயில்லை.
என் மதுவுக்கு ஆபத்தில்லை.
எனக்கு அது போதும்,ஆண்டவன்
என் பிரார்த்தனையை
நிறைவேத்திட்டான்னு என்
மனசு அமைதி ஆயிடுச்சு
மது.நீ தப்பிச்சுப் போனதை
அவனால தாங்கிக்க முடியலை.
உன்னை வர வைக்கணும்னு
நினைச்சான்”
மதுரா அவன் தோளை
மென்மையாக வருடிக்
கொடுக்க,“என் கையிலயும்,
கால்லயும் வலி தாங்க
முடியலை.ஆனா,உன்னை
அவன் நெருங்கக்
கூடாதுங்கிற எண்ணம்...
என்னை எழுந்து நிற்க
வைச்சுச்சு.அவனை அடிக்க
சக்தியையும் கொடுத்துச்சு”
எழுந்து அமர்ந்து அவள்
முகத்தைக் கைகளில் ஏந்திய
மதிவதனன்,அவள் இரு
கன்னத்திலும் முத்தமிட்டான்.
“நீ என் காரைப் பார்த்திருப்பே.
எதாவது ஒரு வகையில எனக்கு
உதவி பண்ணுவேன்னு எனக்கு
நம்பிக்கை இருந்துச்சு மது.
ஆனா...நீயே வந்து என்னைக்
காப்பாத்துவேன்னு...நான்
நினைக்கலை மது”
மதிவதனன் பேச்சில்
வெளிப்பட்ட மகிழ்ச்சியையும்,
உற்சாகத்தையும்,
பரவசத்தையும் புன்னகையுடன்
பார்த்தாள் மதுரா.
“துப்பாக்கியோட வந்து
நின்னயே...நான் எதிர்பார்க்கவே
இல்லை மது.கடந்த மூணு நாள்ல
லட்சம் தடவையாவது நினைச்சுப்
பார்த்திருப்பேன்.என் மது,
ஜான்சி ராணி மாதிரி வந்து
என்னைக் காப்பாத்தினான்னு
நினைச்சு நினைச்சுப்
பரவசப் பட்டேன் மது”
ஒவ்வொரு நொடியும் அவன்
மனதை அரித்த வேதனை
மாயமானதில்,வாட்டம்
மறைந்து முழு நிலவாக
ஒளிர்ந்தது மதிவதனனின் முகம்.
இனி இவன் கனவுகள் திகில்
கொள்ளாது காதலால்
தித்தித்திருக்கும்!
தித்திக்கும்