கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-5

Nilaa

Moderator
Staff member
5
உனக்காய்
உதிரம் சிந்துவது
சுகம் அன்பே!
உனக்காய்
உயிரைத் தருவது
வரம் அன்பே!

நிசப்தத்தில் உறைந்து
நொடிகள் நகர்ந்து
கொண்டிருந்தது.

மதுராவின் நெற்றியில்
அரும்பியிருந்த வியர்வை
இறங்கி, அவள் காதோர
முடிகளை நனைத்தது.
பாதி திறந்திருந்த அவள்
விழிகளுக்குள் கருமணிகள்
உருண்டது.படுக்கை
விரிப்பைக் கொத்தாய்ப்
பற்றிக் கசக்கிக்
கொண்டிருந்தது அவள்
கரங்கள்.

“என்ன டார்லிங்,உனக்கு
இப்படி வேர்க்குது”என
அவள் கன்னத்தைத்
தடவினான் மகேந்திரன்.

“நான் இது வரைக்கும்
காதலிச்சதுலயே,நீ தான்
பேரழகி தெரியுமா?அதே
மாதிரி பணத்திலயும்,நீ
தான் எல்லாரை விடவும்
டாப்.இந்த டபுள்
அதிர்ஷ்டத்தைக்
கொண்டாடிட்டு வர்றேன்”

கையிலிருந்த ஸ்டோலை
வீசி விட்டு,மதுரா
அருகிலிருந்து எழுந்த
மகேந்திரன் ஹாலிற்குச்
செல்ல,கேக் அகற்றப்பட்டு,
மது பாட்டில்கள் பரப்பி
வைக்கப் பட்டிருந்தது.

“எனக்கு ஒரு கிளாஸ்
ஊத்து சுமன்”

“ரூம் கதவை சாத்திட்டு
வா ரெஜீ.நாம பேசறதைக்
கேட்டு, தப்பிச்சுப் போயிடப்
போறா”

“என்னடா”என்று சலித்துக்
கொண்டாலும்,எழுந்து
சென்று மதுரா இருந்த
அறையின் கதவைச்
சாத்தி விட்டு வந்தான்
ரெஜீஸ்.

மகேந்திரனும்,ரவியும்
தங்கள் உண்மையான
பெயரிலேயே பேசிக்
கொள்ளத் தொடங்கினர்.

“அந்தப் பூஜா பொண்ணு
தப்பிச்சுப் போனதுல
இருந்தே,எனக்குப்
பயமாயிருக்கு ரெஜீ.
நாம எப்பவும்
எச்சரிக்கையா இருக்கணும்.
இந்தப் பொண்ணு பெரிய
இடம்னு சொன்னே.
பிரச்சனை வந்துடாதே”

“நாம தான் அவளை
போட்டோ எடுக்கப்
போறமே சுமன்.எதுக்குப்
பிரச்சனை வருது?
அவ வாயே திறக்க
மாட்டா.நல்ல மூடுல
இருக்கேன்.தயவு
செஞ்சு கெடுத்துடாதே”

“என்னடா,என்னை
விட்டுட்டு ஆரம்பிச்சுட்டீங்க”

மூன்றாமவனும் வந்து சேர,
உயர்ரக மதுவைக்
குடித்தபடியே மூவரும்
பேசலாயினர்.

“நீ தான் அங்கயே
குடிச்சுட்டு வந்திருப்பியே
லோகு”

“வெளியில போய் குடிக்க
வேண்டாம்னு சொன்னா,
கேட்க மாட்டீங்கறான்
ரெஜீ.இவன் குடிச்சுட்டு...
எதாவது உளறி...
போலீஸ்ல மாட்டிக்கிட்டா...
எனக்குப் பயமாயிருக்கு
ரெஜீ”

“சுமன் சொல்றதைத்தான்
கேளேன் லோகு”

“சரிசரி.அந்தப் பொண்ணு
வந்துடுச்சா”

“வந்துட்டா.ஆப்பிள்
மாதிரி இருக்கா லோகு.நீ
பார்த்தா மயங்கியே
விழுந்துடுவே”

“அவ்ளோ அழகா?ரெஜீ...”

“போடா.எதுக்கு இழுக்கறே”

“தேங்க்ஸ் ரெஜீ”எனக்
குழறியவன்,ஒரு பாட்டிலைக்
காலி செய்து விட்டு
எழுந்தான்.

ரெஜீஸ்சும்,சுமனும்
குடிப்பதைத் தொடர,
மதுரா இருந்த அறைக்குச்
சென்ற லோகுவின்
நடையில் தள்ளாட்டம்
தெரிந்தது.

அறையின் கதவைத்
திறந்து உள்ளே சென்ற
லோகுவின் கை பட்டு
கதவு படாரென்று சாத்திக்
கொள்ள,தன் போதை
ஏறிய கண்களால்
படுக்கையைப் பார்த்த
லோகுவின் கால்கள்
வேகமாகப் படுக்கையை
நெருங்கியது.

“புதுசா எதுக்குப்
போர்த்தி எல்லாம்
விட்டிருக்கான்”

லோகு படுக்கையில்
அமர்ந்த மறுநொடி,
அவன் தலையில் இடி
என இறங்கிய அடி
மதிவதனன் உடையது.

“அம்...”அவன் சத்தம்
வெளி வரும் முன்,
மதிவதனன் அவன் வாய்
பொத்த,சத்தமின்றி
சாய்ந்தான் லோகு.

மயங்கி விட்டானா என
அவனைத் திருப்பிப்
பார்த்த மதிவதனன்,
உன்னை எல்லாம்
உயிரோடு எரிக்க
வேண்டும் என
நினைத்தவனாய்,அவசர
அவசரமாக அவன்
சட்டையைக் கழட்டி,
இரு கைகளையும்
சேர்த்து,அச்சட்டையைக்
கொண்டே பிணைத்தான்.

என் மதுவை நான்
காப்பாற்றி விடுவேன்
என உறுதி
கொண்டவனாய்,
லோகுவை அடித்த
மரக்கட்டையை எடுத்துக்
கொண்டு அறையினுள்
சுற்றி வந்த
மதிவதனனுக்குக்
குழப்பமே எஞ்சியது.

என் மது எங்கே?இங்கு
தானே மயங்கிக்
கிடந்தாள்?நான்
வருவதற்குள் எங்கு
மாயமானாள்?வேறு
அறைக்குக் கொண்டு
சென்று விட்டார்களா?
ம்ஹூம்!அப்படி
இருந்தால்,இவன் இங்கு
வந்திருக்க மாட்டான்.

மதுவிற்குக் கொஞ்சம்
சுயநினைவு இருந்து...
தப்ப நினைத்து...
வெளியேறி இருந்தால்...
ஆம்!இந்த பிரென்ச்
வின்டோ நான்
தொட்டவுடன் திறந்து
கொண்டதே!ஆனால்...
தோட்டத்தில் இருந்து
தானே நான் இந்த
மரக்கட்டையை எடுத்து
வந்தேன்.மது எங்கும்
தென்படவில்லையே!
எங்காவது
மறைந்திருப்பாளா?

இல்லை.மறைந்திருந்தால்
நிச்சயம் என் கண்ணில்
பட்டிருப்பாள்.அவளும்
என்னை அழைத்திருப்பாள்.

மது அறையில் இல்லை.
அதே போல வெளியிலும்
இல்லை.கடவுளே!

மதுவிற்குப் போன்
பண்ணலாமா?அதனால்
அவளுக்கு எதுவும்
ஆபத்து வந்து விட்டால்...
என்ன செய்வது?

மதிவதனன்
செய்வதறியாது
யோசித்தபடியே அறை
நடுவே நின்ற
அந்நேரத்தில்,நிசப்தத்தைக்
கிழித்துக் கொண்டு
வீறிட்டு அலறியது அவன்
கைபேசி.

“ஐயோ!வைப்பிரேஷனில்
வைக்காமல்...”அவசரமாகக்
கைபேசியை அணைத்து
சட்டைப்பையில் வைத்தான்
மதிவதனன்.

“சபாஷ்!!”பலமான
கைதட்டலோடு,
விகாரமாகச் சிரித்தான்
ரெஜீஸ்.

அசையாது நின்ற
மதிவதனனின் விழிகளில்
எரிமலையின் சீற்றம்!

“யாரு ரெஜீ இவன்?எப்படி
உள்ள வந்தான்?”

“இவர் தான் இந்தக்
கதையோட ஹீரோ!
ஹீரோயினைக் காப்பாத்த
வந்திருக்கார் சுமன்.
பிரென்ச் வின்டோ
வழியா வந்திருக்கார்”

படுக்கையைப் பார்த்த
சுமன்,லோகு மயங்கிக்
கிடப்பதை ரெஜீஸ்ஸின்
தோள் தொட்டுக்
காட்டினான்.

“அவனால நம்ம கிட்ட
இருந்து தப்பிக்க
முடியாது சுமன்.டென்சன்
ஆகாதே”என்றான்
உள்ளடக்கிய சினத்துடன்.

“ச்சீ!நீயெல்லாம் ஒரு
மனுஷனா?உன்னை
இன்னைக்கு உயிரோட
விட மாட்டேன்டா.
உனக்கெல்லாம்
காதல்னா என்னன்னு
தெரியுமா?நம்பி வந்த
பொண்ணை...”

மதிவதனன் நிதானம்
பறக்க,மரக்கட்டையைக்
கை விட்டு,ஆவேசம்
கொண்டு பாய்ந்து
சென்று ரெஜீஸ்ஸின்
கழுத்தைப் பிடித்தான்.

“உனக்கெல்லாம்
மனசாட்சி இல்லை?நீ
தான் மனுசனே
கிடையாதே!எங்கிருந்து
மனசாட்சி இருக்கும்?”

ரெஜீஸ் அவன் கையை
விலக்க முயற்சிக்க,
அசைக்கவும்
முடியவில்லை.

உணர்ச்சி வேகத்தில்
இன்னொருவன்
இருப்பதை மறந்து
பெருந்தவறு செய்தான்
மதிவதனன்.

“ஏய்!விடு...விடுடா...”
விலக்க முயன்று
முடியாமல்,கீழே
கிடந்த மரக்கட்டையை
எடுத்து மதிவதனன்
கையில் அடித்தான்
சுமன்.

மதிவதனன் அதற்கும்
அசையவில்லை.அடி
வாங்கிய போதும்,
அவன் கை
ரெஜீஸ்ஸின்
கழுத்தை விடவில்லை.

“என் மதுவுக்கு நீ
செய்ய நினைச்ச
கொடுமைக்கு,
உன்னை சும்மா
விட மா...”மதிவதனன்
கரம்,ரெஜீஸ்ஸின்
கழுத்தில் இருந்து
இறங்கியது.

உடைந்த பாட்டிலின்
முனை கொண்டு,
மதிவதனன் தோளில்
குத்தி இருந்தான்
சுமன்.

மதிவதனன்
தோளிலிருந்து
செங்குருதி பீறிட்டது.
காதலுலகம் அவனுக்காய்
கண்ணீர் விட்டது.

தித்திக்கும்❤️❤️❤️



ஹாய் பிரெண்ட்ஸ்,

ஐந்தாம் அத்தியாயம்
பதிந்து விட்டேன்.
வாசிப்பதோடு உங்கள்
கருத்தையும் பகிர்ந்து
கொள்ளுங்கள்
தோழமைகளே.உங்கள்
வார்த்தைகளே என்னை
நிறைவு கொள்ளச் செய்யும்.
நன்றி🙏🙏

அன்புடன்,
நித்திலா:)
 
Top