26
உன்னோடு வாழும்
நாளுக்காய்
வஞ்சி நெஞ்சம்
ஏங்குகின்றது!
காத்திருப்பிலே
உயிர் தேய்கின்றது!
உன்னோடு வாழும்
நாளுக்காய்
வஞ்சி நெஞ்சம்
ஏங்குகின்றது!
காத்திருப்பிலே
உயிர் தேய்கின்றது!
நேரம் நகர்ந்து
கொண்டிருப்பதை,
மதிவதனன் உணரா
விட்டாலும்,மதுரா
அறிந்தே இருந்தாள்.
“ரொம்ப நேரம்
ஆயிடுச்சு.நீ கிளம்பு மதி”
“நான் இன்னைக்கு
எல்லா விஷயத்தையும்
பேசி முடிச்சுட்டுத்தான்
போவேன் மது”
“நாம நாளைக்குப்
பேசலாம் மதி.அம்மா
வந்துட்டாங்கன்னா...எனக்குத்
திட்டு விழுந்தா பரவாயில்லை.
உன்னைப் பத்தி அவங்க
ரொம்ப உயர்வா நினைச்சுட்டு
இருக்காங்க.நீ இப்படி
ரகசியமா வீட்டுக்குள்ள வந்து,
நடுராத்திரில என்கிட்டப்
பேசிட்டு இருக்கிறதைப்
பார்த்தாங்கன்னா...
அவ்வளவு தான் மதி.உன்
மேல இருக்கிற மரியாதை
எப்பவும் குறையக் கூடாது மதி”
“சரி.பத்தே பத்து நிமிஷம்,
போயிடறேன்”
“சமர்த்து.உனக்கு என்ன
தெரிஞ்சுக்கணும் மதி”
“ரெஜீஸ் பத்தின
உண்மைகளை எப்படித்
தெரிஞ்சுக்கிட்டீங்க மது”
“புஷ்பா மேம் பொண்ணு,
ரெஜீஸ்ஸைப் பார்க்கப் போன
வீட்டை,தினு கிட்ட அடையாளம்
காட்டினா மதி.அங்க ரெண்டு
காலேஜ் பசங்க தங்கி
இருந்திருக்காங்க.அவங்க
நடவடிக்கை ஒண்ணும்
சரியில்லை,ட்ரக்ஸ் பழக்கம்
இருக்கிறது தெரிஞ்சு காலி
பண்ண சொல்லிட்டதா அந்த
வீட்டு ஓனர் சொன்னார் மதி.
அடிக்கடி அவர் வீட்டுக்கு
வந்து போன ஒரு ஆளைப்
பத்தியும் சொன்னார்.அவர்
சொன்ன அடையாளத்தை
வைச்சு,புஷ்பா மேம் பொண்ணு
சொன்ன அடையாளத்தையும்
வைச்சு,அது ரெஜீஸ் தான்னு
தெரிஞ்சுக்கிட்டோம் மதி”
“படிக்க வேண்டியப்
பசங்களை போதைப்
பழக்கத்துக்கு அடிமையாக்கி
இருக்கான்.இவனை எல்லாம்
வெளியிலயே விடக் கூடாது
மது”
“ஆமாம் மதி.அந்த ஏரியாவுக்கு
ரெஜீஸ் தான் ட்ரக்ஸ் சப்ளை
பண்ணிட்டு இருந்திருக்கான்”
“அந்தக் காலேஜ் பசங்களைப்
பிடிச்சு,உண்மையைத்
தெரிஞ்சுகிட்டீங்களா”
“இல்லை மதி.அந்தக் காலேஜ்
பசங்ககிட்ட வசந்த் ஒரு ட்ரக்
அடிக்ட்டா நடிச்சு,பழகி,
பிரெண்ட்ஷிப் வளர்த்து
உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டான்
மதி.ரெஜீஸ்ஸோட பேரே
எங்களுக்கு அப்பத் தான்
தெரிஞ்சுது மதி.
எப்பவும் அவன் கூடவே
இருக்கிற ரெண்டு
தடியனுகளைப் பத்தியும்
தெரிஞ்சுது.ரெண்டு
பிரெண்ட்ஸ்ஸை இன்வைட்
பண்ணி இருக்கேன்னு ரெஜீஸ்
சொன்னதுமே,அவனுக தான்,
தனியா இவங்களைத் தேட
வேண்டியதில்லைன்னு...”
“என் செல்லம் ஹேப்பி
ஆயிட்டாங்களா”
“ஆமாம் மதி.ஒரே அம்புல
மூணு தலைன்னு மது ஹேப்பி
ஆயிட்டாங்க”
மதுராவின் பேச்சை ரசித்து,
சிரிப்புடன் அவள் கன்னத்தை
வருடினான் மதிவதனன்.
“நேரடியா விசாரிச்சா
ரெஜீஸ்சுக்குத் தெரிஞ்சுடும்னு
வசந்த்தும் நாடகம் ஆடியிருக்கான்”
“நாங்க பாதி கேஸை,வேஷம்
போட்டுத்தான் கண்டு
பிடிச்சிருக்கோம் மதி”
“உனக்கு எல்லா வேஷமுமே
பொருத்தமா தான் இருக்கும் மது”
என்று புன்னகைத்தான் மதிவதனன்.
“நீ ஒரு பக்கம் ரெஜீஸ் கிட்டப்
பேசிட்டு இருந்திருக்கே.வசந்த்
ஒரு பக்கம் அவனைப் பத்தின
உண்மைகளைத் தெரிஞ்சுக்கிட்டு
இருந்திருக்கான்”
“ஆமாம் மதி”
“சிடியைப் பத்தி உங்கனால
சொல்ல முடியாதனால,ட்ரக்ஸ்ஸை
வைச்சு அவனை மாட்டி விடப்
பிளான் பண்ணிட்டீங்க”
“உண்மை தான் மதி”
வசந்தன் மிகவும் சிரமப்
பட்டிருக்கிறான்.
ரெஜீஸ் பற்றிய உண்மை
அனைத்தையும் வெளிக்
கொணர்ந்திருக்கிறான்.
“ரெஜீஸ் என்கிட்டப் பேச
ஆரம்பிச்சு,அஞ்சு மாசம்
ஆகியிருந்தப்ப,என்னைக்
காதலிக்கிறதா சொன்னான்
மதி.என்னைப் பார்க்கணும்னு
சொன்னான்.எனக்கு அடுத்த
மாசம் பர்த்டே,அப்ப பார்க்கலாம்னு
அவன் சொன்னதும்,நாங்க
எதிர்பார்த்த நேரம்
வந்துடுச்சுன்னு சந்தோஷப்
பட்டோம்.வசந்த்தும்,தினுவும்
நான் தனியா போகக் கூடாதுன்னு,
அவன் பர்த்டேன்னு சொன்ன
நாள்ல இருந்து ஒரு வாரத்துக்கு
முன்னாடியே இங்க கிளம்பி
வந்துட்டாங்க மதி”
“வசந்த் சரியா தான் சொல்லி
இருக்கான் மது.அந்த ரெஜீஸ்
மாதிரி ஒரு மோசமானவனோட
இடத்துக்கு நீ தனியா போகக்
கூடாது.நீ சிடியைத் தேடி
எடுக்கிற வரைக்கும் வசந்த்
உனக்குப் பாதுகாப்பா
இருப்பான் இல்லே மது”
“ஆமாம் மதி.வசந்த்தும்,
தினுவும் நான் ரெஜீஸ்
இடத்துக்குத் தனியா
போகக் கூடாதுன்னு
உறுதியா இருந்தாங்க.ரெஜீஸ்
என்கிட்டப் பேசிட்டு
இருந்தனால,அவன்
மொபைல்லை வைச்சு
சுலபமா அவன் இருக்கிற
இடத்தைத் தெரிஞ்சுக்கிட்டோம்.
எங்க பாஸ் அந்த ஏரியா
இன்ஸ்பெக்டர் கிட்டப்
பேசினார்.அவரும் எங்களுக்கு
உதவி பண்ண சம்மதிச்சார்”
“ரெஜீஸ் என்னை அந்தக்
காட்டுக்குத் தான் கூப்பிடுவான்னு
நினைச்சோம்.நாங்க நினைச்ச
மாதிரியே அந்தக் காட்டுக்கு
என்னைக் கூப்பிட்டுப்
போனான் மதி.நாங்க பேசினபடி
வசந்த்தும்,தினுவும் என்னைத்
தொடர்ந்து வந்தப்ப,ஒரு
இடத்தில பஸ் டிரைவர்களுக்கு
நடுவுல சண்டை வந்து ரோடு
பிளாக் ஆயிடுச்சு மதி”
என் மது வேலையின் போது
தான் இந்த இடையூறெல்லாம்
ஏற்பட வேண்டுமா?
“நான் குணமாகி கொஞ்ச
நாள் தான் ஆகி இருந்தனால,
எதாவது குழப்பம் வந்துட்டா,
தனியா என்னால சமாளிக்க
முடியாதோன்னு வசந்த்
ரொம்பவே பயந்து
போயிட்டான் மதி.
நான் வர லேட்டாகும்,எதாவது
காரணம் சொல்லி காரை
நிறுத்து மது.நான்
சொன்னவுடனே கிளம்புன்னு
மெசேஜ் பண்ணினான் மதி”
ஓ!வசந்த் வருவதற்காகத்
தான் மது அன்று அந்த
ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறாள்.
ரெஜீஸ்ஸை அங்கேயே
இருக்கச் செய்திருக்கிறாள்.
“நாங்க ரெஜீஸ்சுக்கு ரெண்டு
பிளான் வைச்சிருந்தோம் மதி
.ரெஜீஸ் வீட்டில சிடி இருந்தா,
சிடியை எடுத்துட்டு,ட்ரக்ஸ்
விக்கிறதா போலீஸ்சுக்கு
இன்பார்ம் பண்ணிட்டுக்
கிளம்பறது.சிடி இல்லைன்னா,
ரெஜீஸ் வீட்டில கேமரா
பிக்ஸ் பண்ணிட்டுக் கிளம்பறது”
“மதூ...ரெஜீஸ் இருக்கறப்ப
நீ எப்படி சிடியை எடுப்பே”
“ரெஜீஸ் தான் பர்த்டேன்னு
என்கிட்ட ஒரு ரீல் விட்டிருந்தானே
மதி.நான் அவனுக்குப் பர்த்டே
கிப்ட்டா,பெர்ப்பியூம்
வாங்கி இருந்தேன் மதி.
அதை ஸ்மெல் பண்ணா,
அவன் மயங்கிடுவான்.
அவன் பிரெண்ட்ஸ்சுக்கும்
அதே நிலைமை தான்.
நாங்க சிடியை
எடுத்துட்டுக் கிளம்பிடுவோம்.
அவங்களுக்கு மயக்கம்
தெளியறப்ப,போலீஸ்
வந்திருக்கும்.
ஒரு வேளை அந்த வீட்டில
சிடி இல்லைன்னு தெரிஞ்சா,
ரெஜீஸ்சுக்கு பர்த்டே கிப்ட்டா
சிகரெட் ஆஷ்ட்ரேவைக்
கொடுத்து வாழ்த்து சொல்லிட்டு,
கேமரா பிக்ஸ் பண்ணிட்டுக்
கிளம்பி வந்திருப்பேன் மதி”
தெளிவான திட்டம் தான்.
ரெஜீஸ் மயக்கத்தில் இருக்கும்
போது சிடியை எடுக்கலாம்.
சிடி இல்லை என்றாலும்,
கண்ணுக்குத் தெரியாத
இன்றைய நவீன கேமராவை
மது சுலபமாக எங்காவது
பொருத்தி இருப்பாள். ரெஜீஸ்
நண்பர்களுடன் பேசுவதைக்
கேட்டு,சிடி இருக்கும்
இடத்தைக் கண்டறிந்து
இருப்பார்கள்.ஆனால்...
“அவ்வளவு சுலபமா
உன்னை அவன் கிளம்ப
விட மாட்டான் மது”
“கிளம்ப விடலைன்னா...
ஆக்ஷன்ல இறங்கிட
வேண்டியது தான் மதி”
மதுரா சிரிக்க,
மதிவதனன் முகத்தில்
சிரிப்பில்லை.
“என்ன மதி,நாங்க மூணு
பேர் இருக்கோம்.
எங்கனால அவனை
சமாளிக்க முடியாதா?
அநாவசியமா கற்பனை
பண்ணிட்டு,கவலைப் படறப்
பழக்கத்தை விடுன்னு
எவ்வளவு தடவை சொல்லிட்டேன்”
“சரி சொல்லு.நான் கவலைப்
படலை”
“ரெஜீஸ் வீட்டுக்குள்ளப்
போனதுமே,அங்க தான் சிடி
இருக்குன்னு என் உள்மனசு
சொல்லுச்சு மதி.வீட்டை
சுத்திப் பார்த்தப்ப,ஒரு ரூம்
மட்டும் பூட்டி இருந்துச்சு.நான்
அந்த ரூம் பக்கம் போனவுடனே,
ரெஜீஸ் பதட்டமானான்.
அங்க சிடி இருக்கலாம்,
இல்லாமயும் போகலாம்.எப்படி
இருந்தாலும் அந்த ரூம்குள்ள
போய்ப் பார்த்துடணும்னு
முடிவுப் பண்ணினேன் மதி.
நான் பண்ண ஒரே தப்பு
என்னன்னா..”
“தப்பா?”
“ஆமாம் மதி.நான்
வீட்டுக்குள்ளப் போனவுடனே
ரெஜீஸ்கிட்ட என் கிப்ட்டைக்
கொடுத்திருக்கணும்.நான்
பெர்ப்பியூம்மைக் கொடுக்கிறதுக்கு
முன்னாடி,அவன் எனக்கு
ஜூஸ்ஸைக் கொடுத்துட்டான்.
வேண்டாம்னு சொன்னாலும்,
குடிக்காமயே வைச்சிருந்தாலும்,
ரெஜீஸ்சுக்கு சந்தேகம் வந்துடும்.
எப்படியும் நான் ஜூஸ் குடிக்கிற
வரைக்கும் அவன் விட மாட்டான்”
“ம்”
“நான் ஜூஸ் குடிச்சு மயங்கி
விழுகிற மாதிரி நடிக்க
வேண்டியதாயிடுச்சு மதி.கை
நீட்டினா பிஸ்டலை எடுத்து
அவன் நெத்தியில வைச்சுடலாம்னு
நினைச்சேன்.அவன் என்னை
ஏமாத்தின சந்தோஷத்தைக்
கொண்டாடப் போறேன்னு
சொல்லித் தப்பிச்சுட்டான்”
அவனுக்கு நல்ல நேரம் தான்.
அந்த அயோக்கியன் என் மதுவை
நெருங்காமல் சென்று விட்டான்.
குண்டு பாய்ந்து உதிரம்
சிந்தாமல் உயிரை விடாமல்
தப்பி விட்டான்.
“சத்தமில்லாம எங்க
வேலையை முடிச்சுட்டுப்
போயிடணும்னு நினைச்சேன்.
ஆனா இனி அது முடியாதுன்னு
புரிஞ்சுது.ரெஜீஸ்ஸோ,அவன்
பிரெண்ட்ஸ்ஸோ எப்ப
வேணாலும் ரூம்குள்ள
வரலாம்கிற நிலைமையில,
நான் அந்தப் பூட்டியிருந்த
ரூம்குள்ள போய்ப் பார்த்தப்ப,
அங்க கம்ப்யூட்டர்,லேப்டாப்,
மொபைல்,கேமரான்னு கடை
மாதிரி இருந்துச்சு மதி.நான்
இவ்வளவு இருக்கும்னு
நினைக்கலை மதி”
“சிடியைத் தேடணும்,
கம்ப்யூட்டர்,லேப்டாப்,
கேமரா எல்லாத்தையும் செக்
பண்ணனும்னா,
அதிக நேரம் தேவைப் படும்.
அவ்வளவு நேரம் ரெஜீஸ்
என்னைத் தேடி வராம இருக்க
மாட்டான்.ரெஜீஸ் வந்தா வசந்த்
சமாளிக்கட்டும்னு வசந்த்தை
வீட்டுக்கு வர சொல்லி மெசேஜ்
அனுப்பிட்டு,பிரென்ச் வின்டோவைத்
திறந்து வைச்சுட்டுப் போய்,
நான் சிடியைத் தேட
ஆரம்பிச்சேன் மதி”
“அந்த ரூம்ல எதுவும்
இல்லைன்னா என்ன
பண்ணியிருப்பே மது”
“முதல்ல சொன்னது தான்
மதி.கேமரா பிக்ஸ் பண்ணிட்டுக்
கிளம்பி இருப்பேன்.ரெஜீஸ் நான்
தப்பிச்சுப் போயிட்டதா
நினைச்சிருப்பான்”
“ம்.வசந்த்துக்குப் பதிலா
நான் வந்துட்டேன்.
வசந்த்தா இருந்தா
சமாளிச்சிருப்பான்.நான்
சொதப்பிட்டேன்”
“இல்லை மதி.நீ கொஞ்சம்
உணர்ச்சி வசப்பட்டாலும்,நீ
தானே எல்லாத்தையும்
பிளாட் ஆக்கினே.எங்களுக்கு
வேலையே இல்லாமப்
பண்ணினே?எதுக்கு இப்படி
முகத்தை உம்முன்னு
வைச்சிருக்கே?சிரி மதி”
“ம்ம்,வசந்த் ஏன் உடனே
வரலை மது”
“வசந்த்தும்,தினுவும் மெயின்
ரோட்டிலயே பைக்கை நிறுத்தி
இருந்தாங்க மதி.நான்
கூப்பிட்டதும்,தினுவை விட்டுட்டு
வசந்த் மட்டும்,அந்தக்
காட்டுக்குள்ள வந்தான் மதி.
நடந்து வந்திருக்கான்.அப்படி
வரும் போது தான் வசந்த் உன்
காரைப் பார்த்து,நீ வந்திருக்கிறதை
சொன்னான்.நான் பதறி
வெளியில வந்தப்ப தான்...
சாரி மதி.அது ஏசி
ரூம்கிறனால எனக்கு
எதுவுமே கேட்கலை”
“பரவாயில்லைடா”என்ற
மதிவதனன்,அவள் முக
வாட்டம் கண்டு, அப்பேச்சை
முடிக்க முனைந்தான்.
“அப்ப வசந்த் தான் என்
உயிரைக் காப்பாத்தி இருக்கார்”
“ஆமாம் மதி.வசந்த் தான்
என் உயிரைக் காப்பாத்தி இருக்கான்”
“மதூ...”அவள் முகத்தைக்
கைகளில் ஏந்தினான் மதிவதனன்.
“இந்தக் கண்கள்ல வலியைப்
பார்க்கிற சக்தி,உன் மதிக்கு
இல்லை.எனக்கு சின்னக்
காயம் தான்.நீ அதையே
நினைச்சுட்டு உன்னை
வருத்திக்காதே.ப்ளீஸ்டா”
மதுராவின் வருத்தத்தைக்
கண்ணாடியாய்ப் பிரதிபலித்தது
மதிவதனன் முகம்.
“நான் வருத்தப் படலை.நீயும்
வருத்தப் படாதே.நாம இனிமே
இந்த விஷயத்தைப் பத்தி
எப்பவும் பேச வேண்டாம்.
நாம சந்தோஷமா வேற
எதாவது பேசலாம் மதி”
“இது தான் என் மதுவுக்கு
அழகு”என அவள் நெற்றியில்
முத்தமிட்டான் மதிவதனன்.
மனதில் இருந்தவற்றை எல்லாம்
சொல்லி விட்ட நிம்மதியுடன்
அவன் தோள்களில் சாய்ந்து
கொண்டாள் மதுரா.
“இதை நீ மனசுல பதிய
வைச்சுக்கோ மதி.உன் மது
அவ கடமையை மட்டும்
தான் செய்வா.
யாரையும் தண்டிக்க மாட்டா.
தப்பு செய்யறவங்க சட்டத்தை
ஏமாத்த முடியும்.ஆனா மேல
இருக்கிறவன் பார்வையில
இருந்து,தண்டனையில இருந்து
தப்பிக்க முடியாதுன்னு உன் மதுவுக்கு
நிறையவே நம்பிக்கை இருக்கு.
அதனால இனி நீ எப்பவும்
இந்த மாதிரி யோசிச்சு
உன்னைக் கஷ்டப்
படுத்திக்கக் கூடாது”
“சரிடா”என்றான் அவளை
அணைத்தவனாய்.
நிதானமாக இருக்கும் நான்
கூட அன்று உணர்ச்சி வசப்பட்டு
அவன் கழுத்தைப் பிடித்தேன்.
கொல்லவும் துடித்தேன்.ஆனால்,
என் மது தன் கடமையை மட்டுமே
செய்திருக்கிறாள்.கோபம் கொண்டு
தன் நெஞ்சில் பொங்கும்
கனலைக் கட்டுப் படுத்தக்
கற்று விட்டாள்.
“ஏன் மதி அமைதியாயிட்டே”
“என் மது குட்டி ரொம்பவே
மாறிட்டாங்களேன்னு
யோசிச்சேன் மது.பட்டு
பட்டுன்னு வர்ற கோபம்
எங்க போச்சு”
“அது எப்பவோ காணாமப்
போயிடுச்சு”என்று சிரித்தாள் மதுரா.
“பவிக்கு ரெஜீஸ் பத்தி
எதுவும் தெரியாதா மது”
“தெரியாது மதி.நான் பவி
கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்.
ஆனா,ரெஜீஸ் கேஸைப் பத்தி
சொல்லலை.என்னை நினைச்சுக்
கவலைப்பட ஆரம்பிச்சுடுவான்.
சும்மா ஒரு சிடியைத் தேடறதா
மட்டும் சொன்னேன்”
“ம்”
பவிக்கு அக்காவின் மீது
மிகுந்த அன்புள்ளது.
எப்போதும் அக்காவிற்குத்
துணையாக இருக்கிறான்.
“மதூ..பிரச்சனை எதுவும்
இல்லைன்னு ஆயிடுச்சு.நாம...
நம்ம கல்யாணத்தைத்
தள்ளிப் போட்டுடலாமா”
“வேண்டாம் வேண்டாம்”பதறி
நிமிர்ந்து அவசரமாக மறுத்த
மதுரா,“அம்மா வருத்தப்
படுவாங்க.நானும்...”என்றாள்
தலைகுனிந்தபடி.
“உனக்கு என்ன வருத்தம் மது”
அவள் தாடை தொட்டு முகம்
நிமிர்த்தினான் மதிவதனன்.
“இந்த மதி முகத்தைப்
பக்கத்தில இருந்து பார்க்க
முடியாத வருத்தம் தான்
மதி”என்று விட்டு அவன்
மார்பில் முகத்தை
மறைத்துக் கொண்டாள் மதுரா.
அன்பே!
உன் மதி முகம் காண
காத்திருந்த நாட்கள் போதும்!
என் மடி மீது உந்தன்
மதி முகம் காணும்
நாள் வர வேண்டும்!
தித்திக்கும்