திருநங்கை முழுமங்கை ஆகமுடியுமா? – சுசி கிருஷ்ணமூர்த்தி
அன்று ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய தினம். ‘விலாஸ்’ ஆக இருந்து ‘விலாஸினி’ ஆக மாறியவள் மகிழ்ச்சியுடன் தன்னை கண்ணாடியில் பார்த்துகொண்டாள். எவ்வளவு நாளத்திய ஆசை “.இந்த மாதிரி புடவை கட்டிக் கொண்டு ஒயிலாக தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று” என்றா நினைப்பில் இந்தியாவிலிருந்து வரும்பொழுதே ஞ்யாபகமாக கொண்டு வந்த தன் அக்கா புடவையை ஆசையுடன் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அவள் நினவுகள் விலாஸாக இருந்த தனிமையில் தவித்த துன்ப நாட்களை நோக்கி சென்றது.
பெரிய மில் ஓனர் ரத்தினசபாபதியின் மகனாக பிறந்தவன் விலாஸ். முதலில் ஒரு பெண் அதன் பிறகு மூன்று கருச்சிதைவு என்று ஆனபிறகு மிகுந்த எதிர்பார்ப்பில் பிறந்தவன் விலாஸ். நிஜமாகவே தங்கத்தட்டில் சாப்பிட்டவன் அவன், .தன் சொத்துக்கெல்லாம் எதிர்கால வாரிசு என்பதால் பெற்றோர் பார்த்து பார்த்து வளர்த்தனர். அந்த நகரத்திலேயே உயர்ந்த பள்ளியான ஸெயின்ட் ஜோஸஃப் கான்வென்டில் அவனை பெரும்பாடு பட்டு சேர்த்தார் அவன் தந்தை. அந்த பள்ளியில் படிக்க பெற்றோரில் ஒருவராவது கல்லூரி டிகிரி வாங்கி இருக்க வேண்டும் அதுவும் தவிர ஆங்கிலம் பேச படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மில் ஓனராக கோடியில் புழங்கினாலும் அவன் தந்தை கல்லூரி வாசல் மட்டும் கூட சென்றவரில்லை. தாயோ நாலாம் கிளாஸ். எப்படியாவது தன் மகனாவது தன்னைபோல் இல்லாமல் ஆங்கிலம் படித்து பெரிய படிப்பு எல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவன் தந்தை அந்த பள்ளிக்கு ஒரு பெரிய டொனேஷனும் கொடுத்து அந்த ஊர் தலைவரையும் விட்டு பேச்ச் சொல்லி எப்படியோ அவனுக்கு அட்மிஷன் வாங்கி விட்டார். அதுவும் தவிர அவனை டென்னிஸ் / பாட்மின்டன் என்றும் சேர்த்து விட்டனர். ஆனால் விலாஸுக்கு எந்த விளயாட்டிலும் ஆர்வமில்லை. தன் தமக்கை உமாவுடன் சேர்ந்து பல்லாங்குழி , பாண்டி என்று ஆடுவதில்தான் ஆர்வம் காட்டினான். சின்னபையன் , அக்கா கூட விளையாடுகிறான் என்று முதலில் விட்டு விட்டனர் அவன் பெற்றோர். ஆனால் வயதான பிறகும் கூட அவன் தன் வயது பையன்களுடன் விளையாட தயக்கம் காட்டி விளையாடும் நேரத்தில் கால் வலிக்கிறது கை வலிக்கிறது என்று ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பது அவர்களுக்கு வருத்தம் அளித்தாலும் ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. அதனால் வயதாக ஆக விலாஸின் மனதிலும் உடலிலும் நடக்கும் குழப்பத்தை அவர்களால் அறியக் கூட முயலவில்லை என்பதுதான் வருத்தத்குறிய விஷயம்.விலாஸுக்கும் தன் நிலை புரியவில்லை ஆனால் அவனால் தன் வயதை ஒத்த ஆண் நண்பர்களுடன் இயலபாக பழக இயலவில்லை. அவன் தமக்கைக்கும் திருமணமாகி வேறு ஊருக்கு சென்று விட்டதால் அவனுக்கு கூட பழக யாருமே இல்லை என்று ஆகிவிட்டது. அதனால் மிகுந்த நேரம் தன் அறையில் தனிமையே தனக்கு துணை என்று ஆகிவிட்டது.
படிப்பு நன்றாக வந்தாலும் பள்ளிக்குப் போவதைக் கூட அவன் வெறுக்க ஆரம்பித்தான். ஏனென்றால் சக நண்பர்கள் அவன் நடை உடை பாவனையை பார்த்து கேலி பண்ண ஆரம்பித்ததுதான். தன் பெற்றோர்களிடம் கூட அவனால் சகஜமாக தன் நிலமையைப் பற்றி பேச முடியவில்லை. பேசினாலும் அவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். தங்கள் மகன் யாரிடமும் பழகாமல் தன் அறையிலேயே தனிமையில் இருப்பதை அவர்கள் அவனுக்கு படிப்பில் உள்ள ஆர்வமாக நினைத்துக் கொண்டனர். ஆனால் விலாஸ் தன் அறையில் கதவை மூடிக் கொண்டு சில சமயம் தன் தமக்கையின் உடைகளை அணிந்து அழகு பார்ப்பது அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவர்களால் தாங்கி இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்,
ஆனால் அவன் அதிருஷ்டம் அவன் ஸ்கூல் ஃபைனல் படிக்கும்பொழுது அவன் பள்ளியில் புதிதாக சேர்ந்த ஃபாதர் ஃப்ரான்ஸிஸ் அவனிடம் அன்பை காட்டியதுதான். சக மாணவர்கள் அவன் நடையையும் பாவனையையும் கேலி செய்தபொழுது அவர் அவனை அரவணைத்தார், பள்ளி வளாகத்திலேயெ இருந்த மாதா தேவாலயத்திற்கு அவனை கூட்டிச்சென்று அவனிடம் பேசி அவன் மனதில் ஓடும் குழப்பங்களை எல்லாம் அறிந்து கொண்டார். இது சிலருக்கு இயல்பே என்பதையும் அவனுக்கு எடுத்துக் கூறி புரிய வைத்தார். ஆனால் அவன் பெற்றோர்களுக்கு புரிய வைப்பதுதான் அவருக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.. ஃபாதர் ஃப்ரான்ஸிஸ் அவன் பெற்றொரிடம் அரவணைப்பாக பேசி விலாஸ் ஒரு திருநங்கை என்ற விஷயத்தை அவர்கள் ஏற்க வைத்தார். இது ஒன்றும் நடக்கக் கூடாத விஷயம் அல்ல என்றும் புரிய வைத்தார். அவர்களுக்கு முதலில் பெரிய ஷாக் ஆக இருந்தாலும் விலாஸின் மேல் உள்ள அதீதமான அன்பால் அவர் பேச்சை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களுக்கு புரிய வைத்த பின்பு எல்லாமே வேகமாக நடந்தது.
இந்த விஷயம் அவன் தமக்கை உமாவின் புத்தகத்துக்கு தெரிந்தால் அவள் நிலமை புத்தகத்தில் மோசமாகி விடும் என்பதால் ஃபாதர் ஃப்ரான்ஸிஸ் அறிவுரையின் பேரில் விலாஸை மேல்படிப்பு படிக்க செல்லும் பெயரில் அமெரிக்கா அனுப்பி வைத்தனர். பணத்துக்கு பஞ்சம் இல்லாததால் ஃபாதர் ஃப்ரான்ஸிஸ்யையும் அவனுடன் கூட அனுப்பி வைத்தனர்.
ஆயிற்று – ஆபரேஷன் முடிந்து விலாஸ், விலாஸினி ஆயாச்சு. எல்லா சம்பிராதாயங்களும் முடிந்து இந்தியா திரும்ப வேண்டியது தான் பாக்கி. இந்தியா திரும்பியதும் மும்பை சென்று அங்கு காலேஜ் படிப்பை தொடருவதாக ஏற்பாடு, .ஃபாதர் ஃபிரான்ஸிஸ் மேல்னாட்டிலேயே விலாஸ் இல்லை விலாஸினி படிக்க தான் ஏற்பாடு செய்வதாக கூறியதை அவன் பெற்றோர் ஏற்கவில்லை . அவனை பிரிந்து இருப்பது முடியாத காரியம் என்பது மட்டுமில்லை அதுவும் தவிர அவன் மில் விவரங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் தந்தை விரும்பியதால் இருவருமே சிகிச்சை முடிந்த பிறகு இந்தியா திரும்புவதாக ஏற்பாடு.
பாஸ்போர்டில் பெயர், பெண் என்ற விவரம் மாற்றினால் மட்டுமே அவன் இந்தியா திரும்ப முடியும். அமெரிக்கா என்பதால் ஆஸ்பத்திரி கொடுக்கும் சான்றிதழ் வைத்தே எல்லாம் முடிந்து விடும் என்று ஃபாதர் ஃப்ரான்ஸிஸ் சொல்லி இருந்தார். அன்று ஆஸ்பத்திரி சென்று சர்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு அங்கிருக்கும் வால்மார்ட் அதாவது அமேரிக்க டிபார்ட்மென்ட் ஸ்டோர் சென்று பெண்களுக்கான உடையணிகள் வாங்க வெண்டுமென்று பிளான். அதே மாதிரி சர்டிஃபிகேட் வாங்கிக் கொண்டு வால்மார்ட் சென்றார்கள். விலாசினி பெண்கள் ஆடைகள் அலங்கார உபகரணங்கள் எல்லாம் ஆசை ஆசையாக வாங்கிக் கொண்டு திரும்ப நினைக்கும் பொழுது “ஹாய் ! ஃப்ரான்ஸிஸ் “ என்று ஒரு குரல் கேட்க திரும்பினால் ஒரு அழகான இத்தாலிய பெண். கை குலுக்கிய ஃபாதர் ஃப்ரான்ஸிஸ் விலாஸினியையும் அறிமுகப் படுத்தி வைத்தார்.. அந்த இத்தாலிய பெண்ணை தன்னுடைய முன்னாள் காதலி என்றும் அறிமுகப் படுத்தினார். அவள் அந்த மாலில் ஒரு கைப்பைகள் விற்கும் கடை வைத்திருந்ததால், விலாஸினிக்கு ஒரு அருமையான் இத்தாலிய கைப்பை பரிசாக தந்தாள்.
பெண்கள் உடை, முக ஒப்பனை , இத்தாலிய கைப்பை என்று ஒயிலாக நடந்து பாஸ்போர்ட் ஆபிஸர் முன்பு நின்ற விலாஸினியை யாராவது பார்த்தால் முந்தைய விலாஸ் என்று நம்பக்கூட மாட்டார்கள். பாஸ்பொர்ட் ஆபிஸர் ‘மேம், ! மேம்! ‘ என்று கூப்பிட்டபொழுது விலாசினி தன்னை ஒரு முழு மங்கையாகவே நினைக்கத் தொடங்கினாள். ஆண்கள் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்து நடக்கும் பொழுது அவள் ஆகாயத்தில் பறப்பது போல் உணர்ந்தாள். இனி தான் தனிமையில் கிடந்து உளைய வேண்டாம் – தனக்குப் பிடித்த நண்பர்களிடம் கேலி செய்வார்களோ என்ற பயம் இல்லாமல் பழகலாம் என்று மனதில் ஃபாதர் ஃபிரான்ஸிஸ்க்கு ஒரு பெரிய நன்றி கூறினாள். ஆனால் ! பாவம் ! அவளுக்குத் தெரியுமா – அவள் கனவுகள் எல்லாம் இந்தியாவில் அப்படியே கலைந்துவிடும் என்று.
அவள் பெண்ணாக மாறிய விஷயம் உறவினர்களிடையே உடனே தெரிய வேண்டாம் என்பதால் வேறு ஊரில் ஒரு வீடு வாங்கி அங்கேயே காலேஜில் சேரலாம் என்று ஃபாதர் ஃபிரான்ஃசிஸ் கூறிய யோஜனையின் படி சென்னை விமான நிலையத்தில் அவன் வந்து இறங்குமுன் எல்லாமே தயாராக இருந்தது கல்லூரி வாழ்க்கை பற்றி ஆயிரம் கனவுகளுடன் அவன் அந்த நகரத்தில் அவன் தந்தை அட்மிஷன் வாங்கி வைத்திருந்த பெரிய கல்லூரியில் நுழைந்தாள் .இரண்டு மூன்று மாணவர்கள் அவளை பார்த்து ஒரு சின்ன விசில் அடித்த பொழுது அதை பெரிய விஷயமாக நினைத்து தனக்குள்ளேயே சிரித்து கொண்டாள். . இந்த நினைப்போடு பிரின்ஸிபால் அறையில் நுழைந்தாள் ஆனால் அங்கேதான் அவள் கனவுகள் சுக்கு நூறாகப் போகப் போகிறது என்பது மட்டும் அவளுக்கு தெரிந்திருந்தால் உள்ளேயே நுழைந்திருக்க மாட்டோளா என்னவோ?
பிரின்ஸிபால் அறையின் உள்ளே நுழைந்தவுடன் அவளை அமரச் சொன்ன பிரின்ஸிபால் அவள் ஸ்கூல் ஃபைனல் சான்றிதழை கேட்டார். அவளும் கொடுக்க அவர் கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு ‘அம்மா – இதில் விலாஸ் ன்னு பெயர் தப்பா போட்டிருக்கே – அதுவும் தவிர ‘ஆண்’ என்று தப்பா போட்டிருக்கே - இதை சரி செய்தால் தான் நீ காலேஜில் சேர முடியும் –உடனே போய் சரி பண்ணிண்டு வந்துடு. இதை யாருமே பார்க்கலையா இத்தனை நாளும்” என்று சொல்ல அப்படியே நிலை குலைந்தாள் விலாஸினி. இந்த விஷயம் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. சரி செய்ய போனால் அவள் விலாசினி ஆன விவரம் எல்லோருக்கும் தெரிந்துவிடும். அப்புறம் திரும்பவும் கேலி, தனிமை எல்லாம் தான். அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை ஸ்கூல் சான்றிதழில் இருக்கும் விலாஸ் என்ற பெயரினால் அவளுக்கு இவ்வளவு மனக் கஷ்டம் வரும் என்று?
இந்திய அரசாங்கம் என்ன சட்டம் இயற்றினால் என்ன – “திருநங்கை ஆணா ? பெண்ணா? எந்த கழிப்பகம் உபயோகிப்பது?” என்ற கேள்விக்கு மக்களிடையே என்றுமே ஒரு தீர்வு கிடைக்காது என்பது மட்டும் தான் உண்மை. எந்த வகையிலும் சமூகம் அவளை பெண்ணாகவும் ஏற்காது ஆணாகவும் அவளால் இயங்க முடியாது, ஒரு விஷயம் மட்டுமே உண்மை ‘திருநங்கை’ என்று எல்லா நேரமும் முத்திரை குத்தி தனிமைப் படுத்தும் என்பதுதான்.
(சுசி கிருஷ்ணமூர்த்தி)
MOBILE: 9445121654 / 9080803842