கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ (ழி)லி-5

Akila vaikundam

Moderator
Staff member
5

முறைத்த மீனாவை பார்த்து "என்ன மேடம் காலையிலேயே பார்வையில அனல் அடிக்குது "என்று கிண்டல் செய்தான் செல்வா


"ஏன் பேச மாட்டீங்க உங்க தம்பி பேசுறதெல்லாம் கேட்டுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே



அப்புறம் உங்களை பார்த்து ஆனல் அடிக்கற மாதிரி பாக்காம பனி மழையா பொழியும்" என்றாள்



கோச்சிக்காத மீனா அவன் சின்ன பையன் அவனுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே


நீ ரொம்ப சின்ன பொண்ணுனு அவன் மைண்ட்ல செட் ஆயிடுச்சு அதனால மரியாதை வாயிலிருந்து வர மாட்டேங்குது


அவன் மரியாதை கொடுக்கலனாலும் நீ அவனுக்கு அண்ணி இல்லனு ஆயிடுமா என்ன?


மரியாதை மனசுல இருந்தா போதும் அவன் மனசுல அது நிறையவே இருக்கு போக போக நீயே புரிஞ்சுக்குவ


இன்னும் என்ன புரிஞ்சுக்கனும் வந்த மறுநாளே தெரியுதே... எந்த வீட்டில் இப்படி அண்ணனோட மனைவியை


அவ இவனு ஏக வசனத்தில பேசுறாங்க எல்லாம் இந்த வீட்டில தான் நடக்குது…


மீனா நீ நேத்து தான் இந்த வீட்டுக்கு வந்து இருக்க இன்னும் இந்த வீட்டோட நடைமுறை கூட என்னன்னு உனக்கு தெரியாது


அதனால என்ன ஏதுன்னு யோசிக்காம வார்த்தையை விடாத முதல்ல போய் குளிச்சிட்டு கிளம்பு வீட்டில் இருந்து உங்க அம்மா அப்பா எல்லாம் வராங்களாம்


கோயில் போகணும் நான் வெளி பாத்ரூம்ல குளிச்சுட்டு வரேன் என்று ஒரு துண்டை எடுத்துக் கொண்டு அவன் வெளியே செல்ல


செல்லும் அவனையே கோபமாக முறைத்த மீனா எத்தனை நாள் ஆனா என்ன ஒருத்தர் புத்தியை தெரிஞ்சுக்க ஒரு நிமிஷம் போதும்


ஆயுசு புல்லா பழகனும்னு அவசியமில்லை தம்பி பாசம் கண்ணை மறைக்குது அது தான் எது பண்ணாலும் தப்பா தெரியல



கூடிய சீக்கிரம் புரிய வைக்கிறேன் அப்படி இல்லன்னா என் பேரு மீனாவே இல்லை என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள்




பிறகு அவள் அன்று உடுத்தும் ஆடைகளை தேர்வு செய்வதற்காக பெட்டியை திறந்து வைத்தாள்


இங்கு ஒரு ராஜாத்தி விரைவிலேயே சமையலை முடித்து உறவினர்களுக்கு எல்லாம் கொடுத்து மீண்டும் ஊருக்கு செல்ல விருப்பம் இருப்பவர்களை அனுப்பி வைத்தவர்


கணவனின் வரவுக்காய் காத்திருந்தார் சற்று நேரத்திற்கெல்லாம் கேசவன் வர அவரையும் கிளம்ப வைத்தவள் இளையவனான விஜயை தேட

அவனோ குளித்து ஆடை மாற்றியவன் காலையிலேயே நண்பனை பார்க்க சென்று விட்டான்


இங்கு மீனாவின் வீட்டிலிருந்து அனைவருமே வந்திறங்கினர் பிறகு கோவில் செல்வதற்காக வேறு ஒரு பெரிய வாகனத்தை தயார் செய்ய அனைவரும் ஏறி அமர்ந்தாகிவிட்டது



விஜய் மட்டும் வரவே இல்லை அவன் தாயார் பலமுறை அழைத்துப் பார்த்தும் பதிலில்லை உடனே பெரியவனான செல்வா ஃபோன் செய்து அவனை அழைக்க



விஜயோ பிடிவாதமாக மறுத்து விட்டான் இருந்தும் மனம் கேட்காமல் அனைவரும் அவனுக்காக சில நேரம் காத்திருந்து பிறகு வாகனத்தை எடுத்தனர் அவன் வராதது மீனாவின் குடும்பத்திற்கு வருத்தத்தை கொடுத்தது என்றால் மீனாவிற்கு மேலும் கோபத்தை வரவைத்தது…



இது உன்னுடைய டர்ன் அதனால நீ ஆடு எனக்கான நேரம் வரும் போது நான் உன்னை கவனிச்சுக்கறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.


கோவிலில் அனைவருமே திருப்தியாக சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அடிவாரத்திலேயே மதிய உணவு உண்டனர்

எல்லோருமே சந்தோஷமாக இருக்க ராஜாத்தியின் மனதில் மட்டும் விஜய் வரவில்லையே என்ற கவலை நிறையவே இருந்தது.

அதனால் அவரால் மற்றவருடன் இயல்பாக இருக்க முடியவில்லை.

சம்பந்தியின் குடும்பம் அவரின் மற்ற இரு மகள்கள் மகன் என அவர்கள் வழி சொந்தம் இரண்டு பேர் இங்கே இவர்கள் வழியிலும் உறவினர்கள் ஒரு ஐந்து பேர் என்று குடும்பம் சூழ ஒற்றுமையாக இருக்கும் பொழுது ராஜாத்தியின் கவலை எல்லோரையும் பாதித்தது…


மீனா செல்வாவை தனிமையில் அழைத்து எல்லாருமே சந்தோஷமா இருக்கும் போது உங்க அம்மா மட்டும் இங்கு வந்ததே பிடிக்காதது மாதிரி தனியா இருக்காங்க


இது எங்க அம்மாக்கு ரொம்ப கவலை குடுக்குது ஏன் நாங்க வந்தது அவங்களுக்கு பிடிக்கலையானு கேட்கறாங்க
நான் என்ன செய்யுறது


உங்க தம்பி வரலைன்னா உங்க அம்மா வேற யாரு கூடயும் சந்தோஷமா இருக்க மாட்டாங்களா உங்க அம்மாவை நம்பித்தானே எல்லாரும் வந்து இருக்காங்க இப்படி உங்க அம்மா முகத்தை காமிச்சா எங்க வீட்டு ஆளுக எப்படி அடுத்த முறை வருவாங்க என்று அவளின் பிறந்த வீட்டிற்காக பேசினாள்.


மீனா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ நீ நேத்துதான் எங்க வீட்டுக்கு வந்துருக்க ஒரே நாள்ல எல்லாத்தையும் மாத்தணும் நினைச்சா அது முடியாது


நான் அவங்களோட மூத்த பையன் ஆனா அவன் அவங்களோட கடைக்குட்டி எனக்கும் அவனுக்கும் எட்டு வயசு வித்தியாசம் புரிஞ்சுதா என்னதான் என தூக்கி வைச்சு கொண்டாடினாலும் அவனோட இடத்தை யாராலயும் ஃபுல் ஃபில் பண்ண முடியாது


உன்னோட தம்பி, தங்கச்சிக விளையாடும்போது இந்த இடத்துல நம்மளோட சின்ன பிள்ளை இல்லையே என ஆதங்கப்படறது ஒரு தாயோட இயல்பு அதை புரிஞ்சுக்கோ தயவுசெய்து இந்த மாதிரி உப்புச்சப்பில்லாத காரணத்துக்காக எல்லாம் என்கிட்ட வந்து நொய் நொய்னு நிக்காத என்று எரிந்து விழுந்தான்.


அவன் முகச் சுளிப்பை பார்த்து கண்கலங்கிய மீனா கல்யாணம் ஆகி இன்னும் முழுசா ரெண்டு நாள் கூட ஆகல ஆனா அதுக்குள்ள உங்க தம்பி என்னை மரியாதை இல்லாம பேசுறாரு

உங்க குடும்பத்தில் இருந்தே என்னை ஒதுக்கி வைக்க நினைக்கிறாரு ஆனா அதை புரிஞ்சுக்காம நீங்க அவருக்கு சப்போர்ட் பண்றீங்க


உங்களுக்கு தம்பி தான் முக்கியம்னா என்னை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க என்று கேட்க…

லூசு மாதிரி உளராத மீனா எனக்கு அவனும் முக்கியம் நீயும் முக்கியம் உண்மைய சொல்லப் போனா அவனுக்கு உன்னை பிடிக்கவே இல்ல தெரியுமா நான் தான் பொண்ணு பாக்க வந்துட்டு உன்ன வேணாம்னு சொல்லி உன் மனச காயப்படுத்த கூடாதுனு சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் ஆனால் நீ இந்த அளவுக்கு வாய் பேசுவனு தெரியாது


வந்த ரெண்டாவது நாளே குடும்பத்தில் இருந்து அவனை பிரிக்கனும்னு நினைக்கற பாரு இந்த குணம் முதல்லேயே தெரிஞ்சிருந்தா சத்தியமா உன் கழுத்துல தாலி கட்டி இருக்கவே மாட்டேன்


என்ன சொன்னிங்க குடும்பத்திலிருந்து நானா அவரை பிரிக்கறேன் நல்லா இருக்குங்க கதை இப்பத்தானே தெரியுது என்னை பிடிச்சு போய் தான் கல்யாணம் பண்ணறீங்கனு நினைச்சேன் ஆனா ஐயோ பாவம்னு வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசுறீங்க,


நான் வர்ற இடத்துக்கு அவர் வரமாட்டேனு இன்டைரக்ட்டா சொல்லறாரு அதை புரிஞ்சிக்க தெரில என்னை குறை சொல்லறீங்க
இதுதான் உங்க புத்தினு தெரிஞ்சிருந்தா நீங்க என்ன என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லறது நான் உங்களை திரும்பி கூட பாத்திருக்க மாட்டேன்

எல்லாம் என் விதி எந்த விதத்திலும் ஒத்துவராத ஒருத்தரை கல்யாணம் பண்ணி என்னை இப்படி மறுநாளே அழவைக்குது...என்று அழ ஆரம்பிக்க


மீனா ப்ளீஸ் அழாத... இங்க நீயும் நானும் மட்டும் தனியாக வரல


உன் சொந்தக்காரங்க என் சொந்தக்காரங்க உன் அம்மா அப்பா,என் அம்மா, அப்பா எல்லாரும் வந்திருக்காங்க கல்யாணம் ஆன மறுநாளே இப்படி நீ கண்ணை கசக்கினா பாக்கறவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க


ம்ம்...கட்டிட்டு வந்த மறுநாளே பொண்டாட்டியை சரியா பாத்துக்க தெரில இவனெல்லாம் என்ன மனுஷன்னு நினைப்பாங்க ….


ஏய்….என்ன சொன்ன
என்று இவன் திரும்பிப் பார்ப்பதற்குள் கோபமாக விடுவிடுவென்று சென்று அவளின் தாய் அருகில் அமர்ந்து கொண்டாள்


ஏனோ அவளுக்கு இப்பொழுது இங்கு இருக்கவே பிடிக்கவில்லை ஆகாதவர்கள் எதைத் தொட்டாலும் குறை என்று கூறுவது போல் அவள் இங்கு நடந்த பிரச்சனைக்கு எல்லாம் விஜய் மட்டுமே காரணம் என்று எண்ணிக்கொண்டவள் கோயிலில் வைத்து அவனை சபிக்க ஆரம்பித்தாள்



என் நிம்மதியைக் கெடுக்கிறதுக்காகவே இந்த வீட்ல வந்து உட்கார்ந்துட்டு இருக்கு இதெல்லாம் பாத்துட்டு நீ சும்மா கல்லு மாதிரி இரு என்று விஜயுடன் சேர்த்து கடவுளையும் திட்டி தீர்த்தாள்.


அதன்பிறகு எல்லாருமே கோவிலில் இருந்து கிளம்ப மீனா தனது தாயின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள் செல்வாவின் பக்கம் திரும்பவே இல்லை,


எல்லாவற்றையும் கவனித்த ராஜாத்தி யின் மனமோ எந்த வீட்டிலேயுமே திருமணமான மறுநாளே தம்பதியினர் சண்டையிட்டதாக சரித்திரமே இருக்காது ஆனால் இவர்கள் என்ன திருமணமான மறுநாளே இப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள் இருவருக்கும் ஏதோ ஒன்று சரியில்லை என்று நினைத்து மிகவும் கவலை கொண்டார் .


மீனாவின் தாயாருக்கோ வேதனை பலமடங்கு மகளை தவறான இடத்திற்கு திருமணம் செய்து வைத்து விட்டோம் இனி தனது மகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா என்ற பெருத்த கேள்வி… உறவினர்கள் அனைவருக்குமே ஏதோ ஒன்று புதுமண தம்பதியருக்குள் சரியில்லை என்று புரிகிறது ஆனால் காரணம் தெரியவில்லை... அதனால் யாரும் அவர்கள் இருவருக்கும் நடுவில் தலையிடவும் இல்லை

அனைவரும் வீடு வரும் போது விஜயின் வாகனம் வாசலில் நின்றது அதைப் பார்த்ததுமே முதலில் இறங்கிய மீனா வண்டிக்கு ஒரு உதை விட அனைவருக்கும் புரியாமல் புரிந்தது கணவன் மனைவிக்குள் இருக்கும் பிணக்கு விஜயால் ஏற்பட்டது என்று.

வீட்டின் சாவி தன் கைவசம் இல்லாததால் வீட்டுக்கு வந்த விஜய் வாகனத்தை நிறுத்திவிட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான்

கீழே வாகனச் சத்தம் கேட்கவும் அனைவரும் வந்து விட்டனர் என்று மொட்டை மாடியில் நின்று பார்க்க கீழே மீனா வண்டியை உதைப்பதை பார்த்தான்


பார்த்தவனுக்கு உடனடியாக கோபம் வந்துவிட்டது என்னவோ அவள் ஒற்றை காலை தூக்கி உதைக்கும் பொழுது தன்னையே உதைப்பது போல் அவனுக்கு தோன்றியது வந்த கோபத்தை உள்ளங்கையை மடக்கி கட்டுப்படுத்திக் கொண்டவன் நொடி நேரத்தில் முகத்தை சமன் செய்து விட்டு கீழே வந்தான்.

எதுவுமே தெரியாதது போல் முன்னறைக்கு வர மீனாவின் குடும்பத்தினரோ உடனடியாகவே கிளம்பிவிட்டனர் உறவினர்களும் வேறு ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு இரவு ஊருக்கு செல்ல வேண்டும் என்று அவர்களின் பெட்டியை தயார் செய்யத படி கிளம்பிவிட கேசவன் பால் வாங்கி வர சென்று விட மீனா படுக்கையறைக்குள் புகுந்தவள் உள்ளே தாள் போட்டுக்கொண்டாள்


வெளியே மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க செல்வா தான் அறையின் கதவை மெல்ல தட்டியபடி மீனா எல்லாருமே டிரஸ் சேஞ்ச் பண்ணனும் உள்ள தான் பீரோ இருக்கு கதவை திற என்று தன்மையாக கேட்க


உள்ளிருந்த மீனா
புடவை மாத்தணும் என்று மட்டும் குரல் கொடுக்க அதற்கு மேல் என்ன பேசுவது என்று ராஜாத்தியும் விஜயும் சோபாவில் சென்று அமர அவர்கள் அருகில் வந்து செல்வாவும் அமர்ந்து கொண்டானா.


ஐந்து நிமிடம் என்பது அரைமணிநேரம் ஆனது அதுவரை கதவை திறக்கவில்லை செல்வார் தான் மிகவும் தர்மசங்கடமாகி விட்டது ராஜாத்திக்கு அதைவிட ஏனென்றால் ஆரம்பத்தில் செல்வா, விஜய் இருவருமே இப்பெண்ணை வேண்டாம் என்று தான் கூறினார்கள் ராஜாத்தி தான் பிடிவாதமாக திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார் ஆனாள் வந்த மறுநாளே இவ்வளவு கெடுபிடி என்றால் எப்படி மருமகளுடன் காலம் முழுவதும் காலம் ஒட்டுவது என்று கவலை வந்தது

விஜய்யோ அவனுடைய ஒட்டுமொத்த கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக தலைகுனிந்த வண்ணம் உட்கார்ந்து இருந்தான்


சிறிது நேரம் கழித்து செல்வா மீண்டும் கதவைத் தட்டி மீனா இன்னுமா டிரஸ் மாத்துற கதவத்தொற எங்க அம்மா ரொம்ப நேரமா துணி மாத்தாம வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்று கூற பட்டென்று கதவை திறந்தவள் வெளியே வரவும் கேசவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது


அவரின் கையில் இருந்த பால் பாக்கெட்டை வாங்கி காபி வைப்பதற்காக அவள் சமையல்கட்டில் உள்ளே செல்லவும் மூஞ்சியே இல்லாமல் ராஜாத்தி உள் சென்று புடவை மாற்றும் வரை பொறுமை காத்த விஜய் அதன் பிறகு படுக்கை அறை சென்றவன்


அங்கு இருந்த அவனுடைய ஒட்டுமொத்த பொருட்களையும் வெளியே எடுத்து வந்தான் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வா என்னடா பண்ணிட்டு இருக்க என்று கேட்க

நானா இந்த விட்டு வீட்டை விட்டு வெளியே போகவும் மாட்டேன் உன்னையும் போக விட மாட்டேன் ஆனா அதுக்காக அண்ணி பண்ணறதை பாத்துட்டு சும்மாவும் இருக்க மாட்டேன்


ஆனா நா இங்க தான் இருந்து ஆகனும் அதனால இனிமேல் என் திங்க்ஸ் எல்லாம் ஹால்ல தான் இருக்கும் என்று கூறியவன் மீண்டும் உள்ளே சென்று அவன் ஆடைகள் இருந்த பீரோவை தனி ஒருவனாக வெளியே இழுந்து வந்தவன்

அதை ஒரு இடம் பார்த்து வைக்க செய்வதறியாது செல்வா திகைத்து நின்றான்


ராஜாத்தியோ கண்கள் கலங்கியபடி பின்னால் சென்று படிக்கட்டில் அமர்ந்து கொண்டார்


கேசவனும் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது ஆனால் என்ன செய்வது எதை பேசினாலும் உடனே குடும்பம் உடையும்
அதனால் எப்பொழுதும் போல வாசலில் போட்டிருந்த சேரில் சென்று அமர்ந்து கொண்டார்


சற்று நேரத்தில் அனைவருக்கும் காபி எடுத்து வந்த மீனா முதலில் மாமனாருக்கு மாமியார் கொடுத்த பின் தரையில் அமர்ந்து அவன் போருட்களை அடுக்கிக் கொண்டிருந்த விஜயை பார்த்தபடியே அவனுக்கான ஃகாபியை டீப்பாயின் மேல் வைத்துவிட்டு அவளது கணவருக்கு வந்து கொடுக்க அவனோ அவளை அடக்க முடியாத இயலாமையில் அவளையே பார்க்க


வேணுமா ?...வேண்டாமா??? என்று வெட்டு தெரித்தது போல் கேட்டாள் வேண்டாம் என்று தலையசைக்க சரி என்றவள் அவளின் ஃகாபி எடுத்து கொண்டு படுக்கை அறைக்குள் செல்லும் முன் பொதுவாக எல்லோருக்கும் சுற்றிப் பார்த்து தொண்டையை செருமியபடி



என்னாளயும் இந்த வீடும் குடும்பமும் பிரியாது நானும் இங்கிருந்து போக மாட்டேன் யாராவது இங்கிருந்து போகனும்னு ஆசைபட்டா அதையும் நான் தடுக்க மாட்டேன் என்று கூறி விட்டு படுக்கை அறையில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.


வெளியிருந்து கேட்டுக்கொண்டிருந்த ராஜாத்தி ஃகாபி டம்ளரைக் கீழே வைத்து விட்டு அப்படியே சுவற்றில் சாய்ந்து மௌனமாக அழுது கொண்டிருக்க


கேசவனோ இயலாமையில் தலையில் கை வைத்த படி அமர


மறைமுகமாக விஜயை அவள் வெளியே போகச் சொன்னதை புரிந்த விஜய் சற்றென்று எழ அருகில் ஒடி வந்த செல்வா டேய் தம்பி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதடா அவ நேத்து வந்தவடா அவளுக்காக என் தம்பி எங்கேயும் போகக் கூடாது

அண்ணனுக்கு ஒரு வாரம் டைம் குடுடா அவளை சரிப்படுத்தறேன் அப்படி இல்லையா நான் வேணா இங்கிருந்து போறேன் நீ எதும் தப்பா முடிவெடுத்திடாத என்று அவன் கையை பிடித்து கெஞ்ச


அதற்குள்ளாகவே வெளியே இருந்த ராஜாத்தி கேசவனும் உள்ளே வந்தனர்
என்னடா பெரியவனே இந்த வீட்ல நடக்குது நாம எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு தான் கஷ்டப்பட்டாலும் பரவால்ல அந்த வீட்டிலிருந்து பொண்ணு எடுத்தது


வந்த ரெண்டாவது நாளே இந்த குடும்ப உடையவா வந்த வரனெல்லாம் விட்டோம் உன்னை தனியா அனுப்பறதுன்னா என்னைக்கோ உனக்கு கல்யாணம் பண்ணிருக்கலாமே... இதையெல்லாம் பார்க்க வா உனக்கு வேகமா கல்யாணத்தை பண்ணினேன் என்று அவர் சங்கடப்பட்டவர்

விஜயைப் பார்த்து அம்மா நான் இங்கே இருக்கற வரை யாரு என்ன சொன்னாலும் என்னை
கேட்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது அத மட்டும் மனசுல வச்சிக்கோ



நீ படிச்சிட்டி இருக்கற அதை பத்தி மட்டும் யோசி நல்லபடியா உன் படிப்பு முடிஞ்சி வேலை தேடிக்கோ அதுக்கப்புறம் நீ எங்க போகணும்னு ஆசை பட்டாலும் போய்க்கோ


அதுக்கு முன்னாடி அவ சொன்னானு உன் முடிவை மாத்தாத அப்படி நீ போற மாதிரி இருந்தா இந்த அம்மாவையும் கூட்டிட்டு போயிடு


அம்மா என்று அதிர்ச்சி அடைந்த செல்வாவிடம்
உனக்கு ஒருத்தி வந்துட்டா ஆனால் என் சின்ன பிள்ளையை பாத்துக்க நான் தானே இருக்கேன் அவனுக்கு ஒரு நல்ல காரியம் பண்ற வரைக்கும் நான் அவன் கூட தான் இருக்கணும் என்றவர்




விஜய்யை பார்த்து தயவு செஞ்சு இந்த அம்மாவை விட்டு போயிடாத டா என்று கெஞ்ச அவன் அம்மா ப்ளீஸ் நீங்க அழாதீங்க நீங்க இப்படி அழறதுக்காகவா நான் இவ்ளோ அவமானதையும் தாங்கி நின்னுகிட்டு இருக்கேன் சொல்லுங்க


நீங்க எதுக்காக அண்ணியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்களோ அந்த சந்தோஷம் என்னைக்குமே என்னால போகாது


நான் உங்களுக்கு சத்தியம் செஞ்சு தரேன் என்னால என்னைக்குமே இந்த குடும்பத்தோட சந்தோஷம் குலையாது.

நீங்க தைரியமா இருக்கலாம் நான் இப்ப கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்...என்று கிளம்ப


எங்கடா போற என்று பயந்தபடி ராஜாத்தி மும்,செல்வாவும் ஒரு சேர கேட்க கண்டிப்பா

திரும்பி வருவேன்மா நேத்து வந்த அண்ணிக்காக என்னை பெத்து வளர்த்தின அம்மாவையும் அப்பாவையும்,பாசம் காட்டற அண்ணனையும் விட்டுட்டு போக நான் ஒன்னும் முட்டாளில்லை என்று கூறியவன் வெளியே வந்து மீனாவின் மேல் இருந்த அத்தனை கோபத்தையும் அவனுடைய வண்டியின் ஹிக்கரில் காண்பித்தான்.


வீட்டில் இருந்து கிளம்பிய விஜய் நேராக சென்றது உடன் படிக்கும் நண்பன் ஒருவனை சந்திக்க அவனின் பெயர் கார்த்தி

அவனிடம் ஏதாவது பகுதி நேர வேலை கிடைக்குமா என்று விசாரிக்க அவனும் தனது தந்தையின் நண்பர் நடத்தும் ஒரு கம்பெனியில் பார்ட் டைம் ஜாப் இருக்கிறது என்று கூற நண்பனை அழைத்துக் கொண்டு அங்கே சென்று விசாரித்தான்…

ஆனால் அவரோ இங்கே வேலை காலி இருக்கறது உண்மைதான் ஆனால் நான் ஷேர் மார்க்கெட்டில் ஸ்டாக்கிஸ்ட்டா இருக்கேன்


ரெகுரலா ஷேர் மார்க்கெட்டிங் பத்தி கிளாஸும் நடத்திட்டு இருக்கேன் இப்போ ஷேர் மார்க்கெட்டில வருமானம் இல்ல அதனால
பெருசா சம்பளம் தர முடியாது ஆனால் என்னோடு நீ இருந்தா ஷேர் மார்க்கெட்டிங் பற்றி உனக்கு ஒரு அவர்னஸ் கிடைக்கும்


இரண்டாவது அதைப் பத்தின ஒரு புரிதலும் கிடைக்கும் என்று கூற அவனுக்கும் இப்போதைக்கு வீட்டில் இருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் மீனாவின் முகத்தை பார்த்து சண்டை இடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்ற உடனே தலையை ஆட்டி வைத்தான்.


உடன் இருந்த நண்பனோ டேய் விஜய் எனக்காக எல்லாம் நீ ஒத்துக்க வேணாம் அவர் பெருசா சம்பளம் இல்லைனு சொல்லுறாரு என்று காதை கடித்தான்



அதற்கு அவனும் டே மைண்ட் ரிலாக்ஸா இருக்க தான் இப்போ வேலையே தேடுறேன் அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல கொஞ்ச நாள் கழிச்சு நல்ல வேலையா பார்க்கலாம் என்று இவனும் அவனிடம் கிசுகிசுத்தான்



யோசனையாக பார்த்தவரை பார்த்து ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர்


நண்பனோ வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு ஆனாலும் நீ உடனே ஒத்திருக்க வேணாம் டா


நீ கொஞ்சம் பந்தா பண்ணிருந்தா அவர் நல்ல சம்பளத்தோடவே வேலைக்கு எடுத்து இருப்பாரு


இப்போ பாரு பெருசா சம்பளம் இல்லைன்னு ஒரு பிட்ட போட்டுட்டாரு பின்னாடி ஒண்ணுமே கொடுக்காம இருக்க போறாரு


சாரி டா மச்சி தெரியாம இந்த ஆளு கிட்ட கிட்ட கூட்டிட்டு வந்துட்டேன் என்று ஒரு நல்ல நண்பனாய் அவனிடம் கூறினான்

பரவால்ல விடு கொஞ்ச நாள் இங்க வேலைக்கு வந்து கிட்டே வெளியே வேலை தேடலாம் அதுக்குள்ள இவர் ஷேர் மார்க்கெட்டிங் பத்தி அப்படி என்னதான் சொல்லித்தராருனு பார்க்கலாமே என்று சிரித்தபடி கூறியவன்


சரி டா மச்சி உன் வீட்ல தான விடனும் என்று விஜய் கேட்டான்



இல்லடா உன் வீட்டுக்கு போ நேத்து உன் அண்ணன் கல்யாணத்துக்கு வர முடியல ரிசப்ஷனுக்கும் வர முடியல பெரிய சாரி அம்மா ஏற்கனவே சொல்லிட்டு இருந்தாங்க போய் பாத்துட்டு வா அப்படின்னு



இப்போ கிப்ட் ஒன்னும் வாங்கல ஆனாலும் உன் அண்ணாவையும் அண்ணியையும் பார்த்து விஷ் பண்ணிகறேன் என்று கூற


திருமணம்…. அண்ணன், அண்ணி என்று கூறியதுமே விஜய்யின் சந்தோஷம் நொடியில் காணாமல் போனது


அதை வெளி காட்டாதவன் அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல டா நான் அண்ணன் கிட்ட சொல்லுகிறேன் என்று இவன் தடுக்க


ஏண்டா உன் வீட்டுக்கு வர வேண்டாம்னு இன்டைரக்டா சொல்றியா என்று இவன் திருப்பி எதிர்க்கேள்வி கேட்க


அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கார்த்தி வீட்ல சொல்லாம வர்றியேனு தான் சரி வா என்று வாய் தான் சொல்லியது மனதிற்குள் சிறு பயம் தொற்றிக்கொண்டது நண்பனிடம் அண்ணி எப்படி நடந்து கொள்வாளோ என்று


தன்னையே அவளுக்கு பிடிக்காது தன்னுடைய நண்பனை எப்படி பிடிக்கும் நண்பனை ஏதேனும் சொல்லி அவமானப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று எப்படியெல்லாமோ நண்பனிடம் சொல்லி தடுத்து நிறுத்த பார்த்தான் ஆனால் நண்பனும் பிடிவாதமாக உனது அண்ணனையும் அண்ணியையும் சந்தித்தே தீருவேன் என்று கூற வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றான்


ராஜாத்தியோ கார்த்தியை நன்றாகவே கவனித்தார்.

நண்பனிடம் இதான் அண்ணி என்று பயந்தபடியே அறிமுகப்படுத்த
மீனா‌ எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக பேசினாள்

விஜயின் நண்பனை நன்றாக உபசரிக்கவும் செய்தாள்,

உட்கார்ந்த நண்பன் அவனின் வீட்டை தான் பார்த்தான் விஜயின் பொருட்கள் எல்லாம் ஹாலிலேயே அடைந்து கிடக்க அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது விஜயின் அப்போதைய நிலைமையும் அவனுக்குப் புரிந்தது அந்த ஹாலிலேயே அவனின் படிப்பு தூக்கம் எல்லாமும் என்றால் அவனுடைய பிரைவஸி பாதிக்குமே என்று சற்று கவலையும் கொண்டான்
வீட்டை சுற்றிப் பார்த்தபடி சரிடா கிளம்பலாம் என்று விடைபெற மீனா சிரித்த முகமாய் வழியனுப்பி வைத்தாள்.


வெளியே வந்த கார்த்தியிடம் விஜய் இப்போவாவது உன் வீட்டுக்கு போலாமா என்று கேட்டான் உடனே அவனும் போலாம் டா என்றவன்

நீ ரொம்ப லக்கி விஜய் உன் அண்ணி எவ்வளவு அழகா சிரிச்சு பேசுறாங்க அடிக்கடி விஜயோட இங்க வந்துட்டு போனு கூட சொல்லி அனுப்புறாங்க என்று மீனாவை பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டு வர


வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த விஜய்க்கு தலையை கொண்டு போய் எங்காவது முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது இருந்தாலும் மீனாவை மனதிற்குள் மெஞ்சிக் கொண்டான்

பரவாயில்லை தங்களுடைய சண்டையை தங்களுக்குள்ளாகவே வைத்துக் கொண்டாள் தன்னுடைய நண்பனிடம் எதையுமே அவள் காட்டிக் கொள்ளவில்லை அந்த வகையில் அவரைப் பாராட்டலாம் என்ற ஒரு நல்ல அபிப்பிராயமும் வந்தது அவளின் மீது.


பின்னால் உட்கார்ந்திருந்த கார்த்திக் அவன் தோளில் தட்டி விஜய் என்ன நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்க என்று கேட்க


வீட்டை பற்றி நினைத்துக் கொண்டிருந்ததால் கார்த்தியின் பேச்சை கவனிக்காதது அப்போதுதான் உணர்ந்தான்

ஹான் என்ன கார்த்தி சொன்ன சரியா கவனிக்கல என்று கேட்க


இல்லடா அந்த ஹால்ல எப்படி உன்னால படிக்க முடியும்னு கேட்டுட்டு வந்தேன்…


ஓஓஓ அதா... அது ஒன்னும் பிரச்சனை இல்ல கார்த்தி நா மெசேஜ் பண்ணிப்பேன்


அதாண்டா எப்படி உங்க வீடு சிங்கிள் பெட்ரூம் அங்க உன் அண்ணா ,அண்ணி ஸ்டே பண்ணுவாங்க நீ குளிச்சிட்டு டிரஸ் மாத்தறது, சாப்பிடறது, தூங்கறது எல்லாமே அந்த ஹால்னா... உனக்குன்னு ஒரு பிரைவசி வேண்டாமா?

கார்த்தி என்ன மாதிரி லோயர் மிடில் கிளாஸ் ல பிறந்த பசங்களுக்கு பிரைவசி பற்றி எல்லாம் யோசிக்க கூட தகுதி கிடையாது புரிஞ்சுதா


இப்போதைக்கு இன்னும் ஒரு வருஷம் எந்த அரியர்ஸூம் இல்லாமல் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணனும் அது மட்டும் தான் என்னோட ஒரே கோல் வேற எதுவுமே இல்லை


அதுவரைக்கும் இப்படி கஷ்டப்பட வேண்டியதுதான் அதுக்கப்புறம் மேலே படிக்க வசதி இருந்தா படிக்க வேண்டியது தான் அப்படி இல்லையா ஏதாவது ஒரு வேலைக்கு போயி செட்டில் ஆனதுக்கப்புறம் என்னோட பிரைவசி பற்றி யோசிக்கலாம்


சரி நீயேன் வந்ததிலிருந்து சும்மா என்னோட பிரைவசி பிரைவசினு பேசிட்டு இருக்க என்று கேட்க


எல்லாம் காரணமா தாண்டா எங்க வீட்டு மாடில ஒரு செட் போட்டிருகே ஞாபகம் இருக்கா என்று விஜய்யை பார்த்து கார்த்தி கேட்டான்


ம்ம்...ஆமா ஞாபகம் இருக்கு அதுக்கு என்ன இப்போ?


அது ஒன்னும் இல்ல என் அக்காவோட டான்ஸ் கிளாஸ்க்காக அப்பா போட்டு கொடுத்தாங்க இப்போ அவ கல்யாணம் ஆகி யூஎஸ் ல செட்டில் ஆயிட்டா


அப்பா அந்த செட்டை பாக்கும் போதெல்லாம் ரொம்ப பீல் பண்றாங்க அக்காவ ரொம்ப மிஸ் பண்றாங்க


அன்னைக்கு அம்மா கிட்ட பொலம்பிட்டு இருந்தாங்க இத பாத்தாலே பாப்பா நியாபகம் வருது அவ இங்க இருந்தவரை எள்ளோ அழகா மெயின்டன் பண்ணினா இப்போ ஒட்டடை எல்லாம் சேர்ந்து ஏதோ போல கிடக்குது


பாக்கவே சகிக்கல இதை யாரையாவது வந்து பிரிச்சி எடுத்துட்டு போக சொல்லுனு
ரொம்ப பீல் பண்ணி பேசிட்டு இருந்தாங்க


அம்மாவும் அப்போதிலிருந்து ஒரே நச்சு யாரையாவது கூட்டிட்டு வந்து இதை பிரிச்சு எடுத்துட்டு போக சொல்லு... இன்னும் உனக்கு ஆள் கிடைக்கலையா…
ஆள் கிடைக்கலையானு டெய்லி பிச்சி திங்கறாங்க இப்போ உன் வீட்டை பார்க்கவும் எனக்கு சட்டுனு ஒரு ஐடியா தோணிச்சி…


அதையேன் பிரிச்சிட்டு வந்து உங்க வீட்டு மாடியிலே செட் போட்டு உனக்கு ரூம் மாதிரி அரேஞ்ச் பண்ணிக்க கூடாது,பிரிக்கறது,உன் வீட்டுக்கு எடுத்துட்டு வர்ற டிரான்ஸ்போர்ட் செலவு,அப்புறம் இங்க செட் போடனு ஒரு மூன்றாயிரம் வரலாம் அது மட்டும் ரெடி பண்ணறியா என்று கேட்க


விஜய்யோ சந்தோஷத்தில் வண்டியை சடன் பிரேக் போட்டவன் நிஜமாவா சொல்ற அந்த மெட்டீரியல்ஸ் எல்லாத்தையும் எனக்கு தர்றியா,ஆனா ஃபீரியா வாங்க ஒரு மாதிரி இருக்குடா


இதுல என்னடா இருக்கு அதை கழட்டி ஏதாவது பழைய இரும்பு கடையில் போடப்போறேன் மீறி போனா என்ன குடுக்க போறான் ஆயிரமோ ரெண்டாயிரமோ கொடுக்கப் போறான்


உனக்கு ஒரு வேளை சும்மா வாங்கிக்க ஒரு மாதிரி இருந்தா அந்த காசை தனியா என்கிட்ட குடு
நான் எல்லாருக்கும் சரக்கு வாங்கி தரேன் என்று கேலி செய்ய…


சரிடா அப்படின்னா நான் இன்னிக்கு ஈவினிங் அம்மா கிட்ட பேசி பணம் வாங்கி குடுத்துட்டு பிரிக்க ஆள் தேடலாம் என்றவனுக்கு நண்பனை வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வரும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது



நண்பனின் தாயாரிடமும் அதைப்பற்றிப் பேச அவரும் முழுமனதாக சம்மதித்தார் கார்த்தி சொன்னது போல் ஃபீரியாக வாங்கிக்கொள்ள சங்கடம் இருந்தால் அதற்கான ஒரு தொகையை உன் நண்பனின் கையில் கொடுத்து விடு என்றும் கூறிவிட்டார்


நேராக வீட்டுக்கு வந்தவன் சந்தோஷமாக தாயிடம் சொல்ல தாயோ உடனடியாக அவன் கேட்ட பணத்தை எடுத்து கையில் கொடுத்தார் அடுத்த இரண்டு நாட்களில் நண்பனின் கையில் அப்பணத்தை கொடுத்தவன் ஆட்களைப் பிடித்து அந்த வார இறுதியிலேயே அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் அந்த செட்டினை மாற்றினர்


கார்த்தியின் வீட்டில் இருந்ததை போல் பெரிதாக போடாமல் இவனுக்கு அளவாக சற்று சிறியதாகவே போட்டனர்
செல்வாவும் மீனாவும் அதற்கு மிகவும் உதவினர்.


விஜய்க்கு சற்று ஆச்சரியம் முதல் இரண்டு நாளில் மீனா அவ்வளவு பேசியவள் எப்படி உடனே இந்த அளவு மாற்றம் என்று சற்று யோசித்து இருந்ததாலே புரிந்திருக்கும் மீனாவின் மனமாற்றத்திற்கு அவனின் அண்ணன் முக்கிய காரணம் என்று விஜய்க்கு புரிய வில்லை



விஜய்க்காக பார்த்து பார்த்து வேலை செய்து கொண்டிருந்த மீனாவிடம் வந்தவன்


தேங்க்ஸ் என்று மொட்டையாக கூறினான்


அவன் சொன்னதைக் கேட்டதும் நெற்றி சுருக்கி அவனைப்பார்த்து எதுக்கு தேங்க்ஸ் என்று கேட்டாள்

ஒரு வாரம் கழித்து இன்றுதான் விஜய் அவளிடம் பேசி இருக்கிறான்
அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தைப் பார்க்க


இல்ல அன்னைக்கு என் பிரண்டு வந்திருக்கும்போது ரொம்ப பயந்து தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் நீங்க அவன் கிட்ட ஏதாவது வித்தியாசமா நடந்துப்பீங்களோனு

அதாவது எங்கிட்ட கோபமா நடந்துக்கிட்ட மாதிரி ஆனா நீங்க ரொம்ப ஸ்வீட் அவன் கிட்ட ரொம்ப நல்லா நடந்துகிட்டீங்க


அவன் இந்த ஒரு வாரமாகவே உங்களைப் பத்திதான் பேசிட்டு இருக்கான் நீங்க எப்படிங்கறது எனக்கு தெரியும் ஆனாலும் என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி உங்களுக்கு நல்ல பேரு எல்லாரும் உங்கள பத்தி என் கிட்ட நல்ல விதமா சொல்லும் போது அது எனக்கு பெருமை தானே?


ம்ம்... அப்போ நான் உன் ஃபிரண்டை சரியாக உபசரிக்கலனா இப்போ நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லி இருக்க மாட்ட அப்படித்தான
என்று கேட்க


உன்கிட்ட வந்து தேங்க்ஸ் சொல்ல வந்தேன் பாரு என்பது போல் முகத்தை அஷ்ட கோணலாக வைத்தபடி மீனாவைப் பார்த்தான் விஜய்


அவன் முகம் போவதை பார்த்த களுக்கென்று சிரித்து மீனா
சரி மறுபடியும் கோபப்படாத பாஸ்ட் இஸ் பாஸ்ட் ஓகே,


முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சிக்கோ நம்ம வீட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் நீயும் நானும் எவ்ளோ வேணா அடிச்சிக்கலாம்

நீ என்ன மரியாதை இல்லாம திட்டலாம் நான் உன்னை மரியாதை இல்லாம திட்டலாம் அது எல்லாமே நம்ம குடும்ப விஷயம் அதை அடுத்த முன்னாடி வெளிச்சம் போட்டு காட்டக்கூடாது புரியுதா…



அப்புறம் நீ நிஜமாவே தேங்க்ஸ் சொல்லனும் னா உன் அண்ணனுக்கு தான் சொல்லணும்
அவர் அன்னைக்கு நைட்டு வந்து என்கிட்ட எவ்ளோ பீல் பண்ணினார் தெரியுமா


நிச்சயமா என்ன ரெண்டு அடி அடிச்சி இருந்தாலோ இல்லனா ரெண்டு திட்டு திட்டி இருந்தாலோ போடா ன்னு சொல்லிட்டு என் காதிலயே போட்டுக்காம நான் எப்போவும் போலதான் இருந்திருப்பேன்

ஆனா அவரு ரொம்ப செண்டிமெண்டா பேசினார் சின்ன வயசுல நீங்க பட்ட கஷ்டத்தை எல்லாம் சொன்னாரு நீ அவரு மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கனு சொன்னாரு


உன் அம்மா அப்பா இதுவரைக்கும் உன்னை அழ வச்சதே இல்லயாம் ஆனா நான் வந்து தான் உங்க வீட்ல இருக்குற எல்லாரையுமே அழ வச்சிட்டேனு சொன்னாரு...


அது மட்டும் இல்ல கொஞ்சம் பக்கத்துல வாயேன் என்று விஜயை அருகில் அழைக்க

விஜய் சுற்று முற்றும் பார்த்தாள் அவனின் தாய் செல்வா கேசவன் மூவரும் இவர்கள் இருவரும் குசுகுசுவென பேசுவதை தான் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள் இவனை பார்த்ததால் சங்கோஜ பட்ட விஜய்

தலையை மட்டும் அவளின் பக்கம் நகர்த்த அவளும் அவனின் காது பக்கமாய் வந்து மெதுவாக அன்னைக்கி நான் இறங்கி வரலனா
என் கால்ல விழுந்து கெஞ்சி இருப்பாரு நான்தான் பொழச்சி பொங்கனு பெரிய மனசு பண்ணி விட்டேன் இல்லைன்னு அன்னைக்கு நைட்டு புல்லா என் காலைப் புடிச்சி கதறிகிட்டு இருப்பாரு என்று சொல்ல தனது அண்ணனை நக்கல் செய்வதை ஒத்துக் கொள்ளாதவன் அவனையும் அறியாமல் கைகளை எடுத்து அவளின் தலையில் தட்டி விட்டான் லூஸூ எங்க அண்ணனை இந்த பாடு படுத்தறியா என்று அடித்த பின்தான் அதிர்ச்சியில்
அவளை பார்க்க


அவளோ இதுக்குத்தான் உன்கிட்ட நான் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றது…

முதல்நாள் என்னமோ உங்க அண்ணனை மயக்க வந்த மாதிரி மாயாஜாலக்காரின்ன அப்புறம் இன்னிக்கு லூசு பட்டம் அப்புறம் இலவச இணைப்பா அடி வேற தாயில்லாத பிள்ளையாடா நான் தலையில் அடிக்கற என்று திருப்பி அவனின் கையில் பட்டென்று ஒரு அடி வைத்தவள்


எப்பவும் என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு அதுதான் உனக்கு நல்லது என்று கோபமாக எழுந்து சென்று விட்டாள் விஜய்யோ இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது போல் அமர்ந்திருக்க செல்வா தான் அவன் அருகில் வந்து அமர்ந்தவன்


டேய் அவ சின்ன குழந்தை மாதிரிடா எல்லாத்துக்குமே அவளை எல்லாரும் தாங்கனும்னு நினைக்கிறா

அன்னைக்கு எல்லாருமே கோயிலுக்கு போகனும்னு ரொம்ப ஆசைப் பட்டுட்டிருக்கா , அவங்க குடும்பத்தோட நம்ம குடும்பமும் சேர்ந்து அன்னைக்கு ஃபுல்லா ஜாலியா இருக்கணும் னு நினைச்சு இருக்கா, நீ எங்கேயோ வெளியே கிளம்பி போயிட்டியா எல்லாரும் உனக்காக ரொம்ப நேரம் காத்திருக்க வேற செஞ்சோம் நீ வருவனு ரொம்ப ஏதிர் பாத்திருக்கா நீ வேற வரலையா, அந்த ஏமாற்றத்தை அவளால தாங்கிக்க முடியலடா

அதான் அந்த கோபத்தை எப்படி காண்பிக்கிறதுனு தெரியாம என்கிட்ட கோவில்ல வச்சு சண்டை போட்டுக்கிட்டா அந்த கோவத்தோட வீட்டுக்கு வந்தவ உன்னை பார்த்ததும் இன்னும் ஜாஸ்தி ஆயிடுச்சு யாருமே இல்லாத வீட்ல மொட்டை மாடியில் தனியா இருக்கறவரு நம்மளோட கோயிலுக்கு வந்தா என்னனு கோபம் வேற


அதான் ஏதேதோ பேசி எப்படியோ நடந்துகிட்டா அதை நைட் சொல்லி அழும் போது என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது நீயும் கொஞ்சம் அவளை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு டா என்று கூற




விஜய்யோ அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து இரண்டடி தள்ளி அமர்ந்தவன் அண்ணி வேற என்னமோ சொன்னாங்க ரூமுக்குள்ளபோயி அவங்க காலை பிடித்து கெஞ்சினனு

நீ என்னவோ வேற மாதிரி சொல்லற இப்ப நீ சொல்றத நம்பனுமா இல்ல அண்ணி சொல்லறத நம்பனுமா என்று கேலி செய்ய


ஏதோ அண்ணி கையால அடி வாங்கிட்டு உக்காந்து இருக்கியேனு சமாதானப்படுத்த வந்தேன் பாரு என்ன சொல்லணும் என்று அவன் தலையில் அவனே தட்டியபடி செல்வா கீழே இறங்கிச் செல்ல


ராஜாத்தி கேசவனை பார்த்து என்னங்க இது திடீர்னு திடீர்னு சிரிச்சுக்கறாங்க,இப்போ மாத்தி,மாத்தி அடிச்சிக்கறாங்க என்னங்க இது என்றவரிடம் கேசவன்


ராஜாத்தி நீ அவங்க மூணு பேரோட பிரச்சினைக்கும் உள்ள போகாத சமைச்சோமா எல்லாருக்கும் குடுத்தமா சாப்பிட்டோமா மா தூங்கினோமானு இரு இவங்க பிரச்சினைக்கு உள்ளேயும் போகாத சந்தோஷத்துக்கு உள்ளேயும் போகாத அதுதான் உனக்கு நல்லது இல்ல இல்ல நமக்கு நல்லது என்று கூறி முடித்தார்…

தொடரும்...
 
Top