9
மறுநாள் காலையில் வீட்டின் ஆண்கள் வேலைக்கு கிளம்ப தொடங்கினர்,கேசவன் தற்பொழுது ஒரு கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்கிறார் அவரின் கை செலவுக்கு அளவாக சம்பளம் வருகிறது,வேலை நேரம் மிகக் குறைவு, ராஜாத்தி சமையல் வேலையையை முடித்து விட்டார் ஆனால் மீனா வெளியே வந்த மாதிரியே தெரியவில்லை
செல்வா நேரமாகவே ஆபீஸ் கிளம்பியவன் விஜய்யை அழைத்து மீனாவை அவளது ஆபீஸில் விட்டு விடும்படி பணிந்து விட்டுச் சென்றான்
இங்கு மணி ஒன்பது மணிக்கு மேலாகவும் நேரம் பார்த்த விஜய் மீனாவை அழைத்தான்.
என்ன பண்ணிட்டு இருக்க மீனா எனக்கு நேரம் ஆச்சி சீக்கிரம் வா என்று விஜய் கத்த
உள்ளிருந்து எந்த சத்தத்தையும் காணோம் ராஜாத்தியோ வழக்கம் போல அப்பொழுதுதான் வெளியில் எங்கோ அரட்டை அடிக்க சென்றிருக்கிறார்
அதனால் தாயை அழைத்தும் மீனா என்ன செய்கிறாள் என்று பார்க்க சொல்ல முடியாது.
இவனுக்கும் நேரமாகிவிட்டது அதை மனதில் வைத்து கதவை தட்ட கதவு திறந்துதான் இருந்தது ஆனால் உள்ளே மீனாவோ பதில் கூறவில்லை
கதவை மெதுவாக திறந்து பார்க்க கட்டிலின் மூலையில் தனது தனது இரு கால்களையும் இருக்க அணைத்து சுவற்றின் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்
மீண்டும் மெதுவாக இரு முறை கதவை தட்டியும் பதில் வராததால் நன்றாக கதவை திறந்தான்.
அங்கு மீனா அமர்ந்திருந்ததைக் பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது
என்னாச்சு மீனா என்று கேட்ட படி உள்ளே சென்றான்.
அவள் ஒன்றும் இல்லை என்பது போல் அவனின் முகத்தைப் பார்க்காமலே தலையை ஆட்ட
முதல்ல என்னான்னு சொல்லு எனக்கு ஆபீசுக்கு டைம் ஆச்சு
உனக்கும் லேட் ஆச்சி ஏதாவது பர்மிஷன் போட்டிருக்கியா என்ன ?
எனக்கு ஏற்கனவே அரை மணி நேரம் லேட் இன்னும் அரை மணி நேரத்துல ஆபீஸ் போகணும் நீ ஆபீஸ் வரியா இல்ல ….நான் போகவா என்று அவன் கேட்க
இவளோ நான் ஆபீஸ் வரல நீ போ என்று கூறவும் சரி என்று கூறிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவன் அப்பொழுதுதான் மீனாவை கவனித்தான்.
மீனாவின் முகத்தில் ஏதோ ஒரு பயம் ஒன்று இருக்கிறது அழுதிருக்கிறாள்?ஏன் அண்ணனுடன் சண்டையோ என்று யோசித்தவன் ... ஏதாவது சிறிய அளவிலான பிரச்சினை என்றால் அவளுக்கு ஆறுதல் கூறலாம் என்ற நினைத்தவன்
அவளின் அருகில் போய்
என்ன பிரச்சனை நேத்து இருந்தே நீ சரியில்ல நான் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன் ஏதாவது பிரச்சினையா,அண்ணன் கூட ஏதும் சண்டையா? இல்ல அம்மா ஏதும் சொன்னாங்களா ஏதாவது இருந்தா என்கிட்ட சொல்லு மீனா என்று கேட்க
அப்பொழுது சரியாக டேபிள் மேல் இருந்த அவளுடைய மொபைல் போன் அடித்தது அதை எட்டிப் பார்த்தவள் நம்பரை பார்த்ததும் பயந்தபடி விஜய்யை பார்க்க
விஜய்யும் ஃமோபைலை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்
அப்படியே அவளுடைய பயத்தையும் பதட்டத்தையும் கவனிக்கத் தவறவில்லை.
மீனாவோ எங்கே ஃபோனை விஜய் எடுத்து விடுவானோ என்று பயந்து வேகமாக ஃபோனை எடுப்பதற்க்குள்
விஜய் வேகமாக அந்த ஃபோனை எடுத்து ஃகாலை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.
இவள் பயந்த படி விஜயைப் பார்த்துக்கொண்டே ஹலோ என்று கூறி முடிக்கும் முன்னே எதிர்முனையில் இருந்து மிரட்டும் குரல் ஒன்று கேட்டது
என்ன மீனா ஆபிஸ் வராம தப்பிக்கலாம்னு நினைக்கிறியா இன்னும் ஒரு மணி நேரத்துல நீ இங்க இருக்கனும் அப்படியில்ல... நீ நினைத்து பார்க்காத அளவுக்கு பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று கூற விஜய்யோ கோபமாக அந்த மிரட்டும் குரலுக்கு பதில் கொடுக்கும் முன் ஃகால் கட் செய்யப் பட்டது.
மீனாவைப் பார்த்து கோபமாக மொபைலை காட்டியபடி என்ன இது மீனா என்ன நடந்துட்டு இருக்கு
யார் இது எதுக்காக இன்னும் ஒரு மணி நேரத்தில ஆபிஸ்ல இருக்கணும்னு மிரட்டறாங்க
சொல்லு
என்ன பண்ணி வச்சிட்டு வந்து இருக்க ஏதாவது தப்பு பண்ணியா என்று அவளிடம் கேள்வி மேல் கேட்க அவளோ இல்லை என்பதுபோல் கண்களில் நீருடன் தலையாட்டினாள்
உடனே விஜய் அப்புறம் எதற்காக இந்த மாதிரி பேசுறாங்க இவன் யார் உன்னை இப்படி எல்லாம் பேசுறதுக்கு இவனுக்காக தான் நீ இன்னைக்கு ஆபீஸ் போகாம பயந்துட்டு இருக்கிறியா இவன் உன்னை மிரட்டற விஷயம் அண்ணனுக்கு தெரியுமா என்று அவளிடம் கேட்க அவள் இல்லை என்பது போல் தலையசைத்தார்
சரி என்ன நடக்குதுன்னு சொல்லு மீனா என்றவள் அவனுடைய ஆபீசுக்கு போன் செய்து அரை நாள் விடுப்பை சொல்லி வைத்தான்.
யாரிடமாவது சொன்னால் தன்னுடைய மனது சாந்தமாகும்... யாரிடம் சொல்வது என்று சில நாட்களாக அவள் அனுபவித்து வந்த வேதனைகளை அவனிடம் அழுதபடியே கூறத் தொடங்கினாள்.
அவளை இப்பொழுது மிரட்டியது அவள் வேலை செய்யும் இடத்தின் முதலாளியான பிரசாந்து தான் ஆரம்பத்தில் அவளிடத்தில் மிகவும் அன்பாகவும் கண்ணியமாகவும் தான் நடந்து வந்தான் ஆனால் நாள் போக்கில் அவருடைய நடவடிக்கைகளில் சில மாற்றம் வர ஆரம்பித்தது.
அவ்வப்போது இவர்களின் வீட்டு விஷயத்தை நாசுக்காக கேட்பது அதாவது இவளுக்கு எந்த ஆண்டு திருமணம், எத்தனை குழந்தைகள்,செல்வாவின் வேலை எப்படி செல்கிறது இதுபோல் விசாரிக்கும் பொழுது
கணவரும் பிரசாந்தும் நண்பர்கள் தானே என அவனின் விஷயங்கள் விஜய்யின் வேலை விஷயங்கள் வீட்டு நிலவரங்களை அவ்வப்போது தோழமை தனத்துடன் பகிர்ந்து வந்துள்ளாள்.
ஆனால் அதை அவன் அட்வான்டேஜ் ஆக எடுத்துக் கொண்டான்.சில நாட்களுக்கு முன்பு மீனாவும் அவளுடைய கணவனும் ஹனிமூன் சென்று வந்தது அவள் மூலமாக தெரிந்து கொண்டவன்
ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்து ஹனிமூன் என்று விசாரிக்க அவளும் எதார்த்தமாக தாங்கள் குடும்ப நலனுக்காக சில ஆண்டுகள் குழந்தை வேண்டாம் என தள்ளி வைத்திருந்தோம் இப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருப்பதால் அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம் என்று கூறிவிட
இதையெல்லாம் தன்னிடம் ஏன் சொல்கிறார் அப்படி என்றால் தன் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது என தவறாக புரிந்து கொண்டவன் அவளிடம் அவ்வப்போது சிறிது சிறிதாக அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளான்.
வேண்டுமென்றே அவள் தோளில் கை வைப்பது அவனுக்கே தெரியாதது போல் இடிப்பது இவ்வாறாக இதை அவள் ஏதோ தெரியாமல் நடக்கிறது என்று விட்டுவிட …
அடுத்த கட்டமாக அவனுடைய மனைவி இடத்திலிருந்து அவனுக்கு எந்த சுகங்களும் கிடைப்பதில்லை, வாழ்க்கையில் நான் மிகவும் தூர்பாக்கியசாலி உன்னைப் போல் ஒரு பெண் என்னுடைய வாழ்க்கையில் வந்திருந்தாள் செல்வாவைப் போல் என்னுடைய வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கும் என்று அவனது மனைவியை மட்டம் தட்டி இவளை புகழ்ந்து பேசுவது இப்படியே அவனின் பேச்சுக்கள் தொடரவும் இவளுக்கு சற்று சலிப்பு தட்ட கவனிக்காதது போல் கடந்து சென்று இருக்கிறாள்.
ஆனால் அவன் விடாமல் அதற்கு அடுத்த கட்டமாக அவனுடைய வீட்டில் குளித்துவிட்டு வெறும் துண்டை மட்டும் அணிந்த படி அவள் முன்னே வருவது மிகவும் சிறிய ரக ஷார்ட்ஸை போட்டுக் கொண்டு அவள் எதிரில் அமர்வது என இதுபோல் அடுத்த கட்டத்திற்கு அவன் செல்லவும் இவள் அதை கண்டிக்க
உடனே அவன் ரொம்ப நல்லவ மாதிரி ஏன் நடிக்கிற இதெல்லாம் நீ என்கிட்ட எதிர்பார்த்தது தானே உன் குடும்ப விஷயங்களை பகிர்ந்ததும்,குழந்தை இல்லையென என்னிடம் புலம்பியதையும் என்ன கணக்கில் சேர்ப்பது என்று அவன் இவளிடத்தில் எகிற
இவளோ நட்பாக பேசியதை உனக்கு சாதமானதாக எடுத்துக்கொள்ளலாமா?
இதுபோல் அடுத்த முறை நடந்தால் தன்னுடைய கணவரிடம் சொல்லி விடுவேன் என்று இவள் மிரட்ட
நேற்று அவளிடம் எல்லை மீறியதும் இல்லாமல் நான் சொல்கிறபடி என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் குடோனில் இருந்து சில பொருட்களை திருடி விட்டாய் என போலீசில் கம்ப்ளைன்ட் செய்து உன்னை காவல் நிலையம் ஏற வைத்து விடுவேன் என்று மிரட்ட இவளோ உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று அவனிடம் இருந்து தப்பி வந்து விட்டால்.
ஆனால் அவனோ இவள் வந்த நேரத்தில் இருந்து ஃபோன் செய்தும் மேஸேஜ் செய்து மிரட்டிக்கொண்டே இருக்கிறான் இன்று காலை அவள் கண்டிப்பாக வேலைக்கு வரவேண்டும் என்று
இவளுக்கு அவள் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் சொல்ல பயம், இப்போது தான் சில நாட்களாக வேலை சம்பளம் என அவளுடைய வாழ்க்கை அவளுக்கு பிடித்ததாக மாறியிருக்கிறது
குழந்தை இல்லாத ஏக்கத்திற்கு இந்த வேலை அவளுக்கு மிகப்பெரிய ஒரு ஆறுதலாக இருக்கிறது அதற்குள்ளாகவே இவன் நடந்து கொள்ளும் நிலைக்கு இனி அவள் மீண்டும் சமையற்கட்டுக்குள்ளே ஒளிந்து கொள்ளப் போகிறாள்.
அவளுக்கு வேலைக்கும் செல்ல வேண்டும் ஆனால் பிரசாந்த் போன்ற ஆண்களை சமாளிக்கவும் வேண்டும் அதனால் என்ன செய்வது என்று பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறாள்.
அவள் சொல்லி முடிக்கவும் விஜய் கோபத்தில் உள்ளங்கையை மடித்து கோபத்தை அடக்கியவன்
இதை ஏன் இவ்ளோ நாளா என்கிட்ட நீ சொல்லல நீ தொடர்ந்து வேலைக்கு போகனும்னு ஆசைப்பட்டா சொல்ல வேண்டியதுதானே
தாராளமா போனு வேற எங்காவது வேலைக்கு அனுப்பி வைச்சிருப்போம்ல அதை விட்டுட்டு எதற்காக இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு அங்க வேலைக்கு போன?
அண்ணன் கிட்ட தான் சொல்ல பயம் அட்லீஸ்ட் நீ என்கிட்ட இதை சொல்லி இருக்கலாம்ல
நான் உன் பிரண்டு தானே என்று கூறியவன்
சரி இப்ப நீ என்னோட கிளம்பு என்று அவளின் கையைப் பிடித்து தூக்கினாள் அவளோ எங்க என்று கேட்க அந்தப் பணங்கொட்டை தலையனை என்னனு கேட்டுட்டு வரலாம் என்று கூற
இல்ல வேணாம் எதுக்கு பிரச்சனை
உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா இனி எங்கயுமே அனுப்ப மாட்டாங்க என்று கெஞ்சினாள்.
அதுக்காக இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் மறைக்கலாமா... சரி அண்ணனுக்கு தெரியாதமாதிரி இந்தப் பிரச்சினையை நான் ஹேண்டில் பண்றேன் நீ முதல்ல இப்போ என்னோட கிளம்பி வா
என்று அவளின் கைகளை பிடித்து இழுத்தான்…
பிரச்சினையே வேணாம் இப்படியே விட்டிடலாம் அவன் போலிஸ் ஸ்டேஷன்லாம் போக மாட்டான்
அவன் சும்மா பயமுறுத்து பாக்குறான் நான் அவன் கிட்ட பேசி பாக்குறேன் விஜய் நீ முதல்ல ஆபீஸ் கிளம்பு என்று கூறினாள்
அப்படியே விட்டதா அவன் உன்னை வர சொல்லி மிரட்டி கிட்டு இருக்கான்… ஆமா என்ன அவன் கிட்ட பேசி பாக்க போற சொல்லு இன்னைக்கு எனக்கு இந்த விஷயம் தெரியலனா என்ன மீனா பண்ணியிருப்ப
வேலைக்கு போகனும்ங்கறதுக்காக அவனோட மிரட்டலுக்கு பயந்து அவன் கூப்பிட்ட... என்று சொல்லி முடிக்கும் முன் கோபத்தில் விஜய் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தாள் மீனா
என்ன பேசுற நீ இவ்ளோ தானா என்னை நீ பத்தி புரிஞ்சி வச்சிருக்க அவன் கூப்பிட்டா நான் போயிடுவேனா
ஒருவேளை அப்படி அவன் கிட்ட போற ஒரு சிச்சுவேஷன் வந்தா என்னை நானே அழிச்சிகிட்டு இருந்திருப்பேன்
எனக்கு வேலைக்கு போக பிடிச்சுருக்கு தான் அதுக்காக இந்த மாதிரி எல்லாம் காம்ப்ரமைஸ் பண்ணி தான் வேலைக்கு போகனும்னு அவசியம் எனக்கு கிடையாது முதல்ல நீ வெளியே போ இனிமே என்னோட பேசாதே என்று அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.
சரி சாரி கோவத்துல ஏதோ தெரியாம பேசிட்டேன்
எனக்கு ஒரு இது விஷயத்துக்கு பதில் சொல்லு இப்போ இன்னைக்கு எனக்கு தெரிஞ்சதால இப்போ நாம இத பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்
ஒருவேளை எனக்கு தெரியாம இருந்திருந்தா அவனோட டார்ச்சர் தாங்காம நீ என்ன பண்ணி இருப்ப எனக்கு அதுக்கு மட்டும் பதில் சொல்லு மீனா நான் வெளியே போறேன் என்று அவளின் கண்களை பார்த்து கோபமாக கேட்க
அவளோ கொஞ்சம் கூட யோசிக்காமல் தற்கொலை பண்ணியிருப்பேன்...விஜய்... கண்டிப்பா தற்கொலை பண்ணியிருப்பேன் அதுக்காக அவனோட மிரட்டலுக்கு என்னைக்குமே அடிபணிந்து இருக்க மாட்டேன்…. உங்க கிட்ட மட்டுமில்ல உன் அண்ணா,ஏன் வேற யார் கிட்டயும் சொல்லி இருக்க மாட்டேன் என்று முகத்தை மூடியபடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுவதைப் பார்த்தவன் சோர்வாக அவளின் தலையை வருடி விட்டபடி இல்ல மீனா இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நாம சாதாரணமா விடக்கூடாது
இப்போ பிரச்சினை வேணாம்னு நீ அங்க போக மாட்ட ….அப்படியில்லையா அவன் டார்ச்சர் தாங்காம தற்கொலையே பண்ணிக்கறனு வசாசிக்கோ... அதோட அவன் ஆட்டம் முடியும்னு நினைக்கறியா சொல்லு…
முன்ன விட அதிகமாக ஆட்டம் போட ஆரம்பிப்பான் ….அவனுக்கு பயம் சுத்தமா போயிடும்... வேலைக்கு வர்ற பொண்ணுங்களை என்ன பண்ணினாலும் அவங்க வீட்டில சொல்ல மாட்டாங்க அதுக்கு பதிலா வேலையை விட்டு போவாங்க இல்லனா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போவாங்கனு நெனச்சு
அடுத்தடுத்து பொண்ணுகிட்ட அவனோட திமிர் தனத்தை காமிச்சுக்கிட்டே இருப்பான்
இப்போ நீ அங்க வரலனா நாளைக்கு அதே இடத்துக்கு வேற ஒரு பொண்ணு வேலைக்கு வருவா அவகிட்டயும் அவன் இதே போல வாலாட்டுவான்
எப்படி மீனா அடுத்தடுத்த பொண்ணுங்களும் உன்ன மாதிரியே பாதிக்கப்படனும்னு நினைக்கிறாயா சொல்லு, இப்ப நீ அங்க வந்து தைரியமா அவனை பேஸ் பண்ணினா அவனுக்கு ஒரு பயம் இருக்கும்
பொண்ணுங்க கிட்ட வால் ஆட்டினானா அவங்க வால ஓட்ட நறுக்கிடுவாங்கனு பயப்படனும்
அது மட்டும் இல்ல வீட்ல சொல்லுவாங்க வீட்டிலிருந்து அவ புருஷனோ இல்லனா அவ கொழுந்தனோ வந்து வெளித்து விட்டுட்டு போவாங்கனு தெரியனும் எதுவும் பேசாம இப்ப என்னோட கிளம்பி வா என்று அவள் கைகளைப் பிடித்து வெளியே இழுத்து வந்தவன் அவள் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
அலுவலகத்தில் பிரசாந்த் மீனாவின் வரவிற்காக உடல் முழுவதும் உயர் ரக வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தான்
அப்பொழுது வாசலில் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த விஜய் வாகனத்தை அணைத்துவிட்டு சைடு ஸ்டாண்ட் போட்டவன் மீனா இறங்கி விட்டளா இல்லையா என்று கூட பார்க்காமல் நேராக அந்த வீட்டின் உள்ளே வந்தான்…
வீட்டின் முகம் புறத்தை முழுவதுமாக அலுவலகம் போல் செட் செய்து இருக்க சைடு புறமாக இருந்த வாசலின் வழியே வெளியே சென்று பார்க்கும் பொழுது அங்கே முழுவதுமாக குடோன் போல் பொருட்கள் அடைந்து கிடந்தது
ஒரு டெம்போ லாரியில் சில பொருட்களை ஆட்கள் ஏற்றிக் கொண்டிருக்க அங்கே பக்கத்தில் இருந்த படி லோடிங் அன்லோடிங் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் பிரசாந்த்
நேராக உள்ளே வந்த விஜய் என்ன ஏது என்று எந்தக் காரணத்தையும் சொல்லாமல் பிரசாத்தின் சட்டையை கொத்தாக பிடித்தவன் இடைவெளி இல்லாமல் முகத்தில் மாறி மாறி குத்தத் தொடங்கினான் வேலை செய்தவர்கள் அனைவருமே தடுக்க ஓடிவர அனைவருமே பிடித்து தள்ளி விட்டவன் மீண்டும் கீழே கிடந்த பிரசாந்தை அடிப்பதற்க்காக தூக்கினான்.
அவனோ நீ எதுக்காக என்னை இப்படி அடிக்கிற என்று வாயிலும் முக்கிலும் ரத்தம் ஒழுகியபடி கேட்க அப்பொழுது வேகமாக உள்ளே வந்த மீனாவை பார்த்த பிரசாந்த் அவளைப்பார்த்ததும் சற்று பயப்பட ஆரம்பித்தான்.
பிறகு விஜய்யை பார்த்து பிரசாந்த் இங்க பாரு அவ சரி கிடையாது,அவ என்ன பாக்கறது,பேசறது எதுமே சரியில்ல, என் ஒய்ஃப் ஊர்ல எல்லாம் தெரிஞ்சுகிட்டு என்கிட்ட வரம்பு மீறி பழகறா... அவள பத்தி நானே உங்க அண்ணன் கிட்ட கொஞ்சம் பேசணும் னு நினைச்சிட்டு இருந்தேன்
ஆனா அவ முந்தி கிட்டு என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி உன்னை கூட்டிட்டு வந்திருக்கா ஒரு ரெண்டு நிமிஷம் டைம் கொடு அவ எப்படிப்பட்டவனு நான் உன் கிட்ட சொல்றேன்...என்று பழியை அப்படியே திருப்பி மீனாவின் மேல் போட
மீனாவோ அதிர்ச்சியில் அய்யோ...என்று கத்தியபடி வாயை பொத்திக் கொண்டாள்.
விஜய்யோ கோபத்தில் மீண்டும் அவன் வாயின் மீது ஒரு அடி வைத்தவன் பாத்தியா மீனா இவன நீ சும்மா விட சொல்ற எப்படி பேசறானு பாத்தியா…
உன்னைப் பத்தி என் கிட்டயே தப்பா பேசுறான் இவனை என்ன பண்ணினா சரியா வரும் என்று மீண்டும் அவனை வாயிலேயே குத்து விட்டவன்
அண்ணன் கிட்ட சொல்ல போறியா என்னடா சொல்லுவ சொல்லு... என்ன சொல்லுவ இப்ப நாங்க வந்திருக்கோம் எங்க முன்னாடியே சொல்லு என்று கூறி அடித்தவன்
ஏண்டா பொண்ணுங்க வேலைக்கு வந்தா நீ அவங்க முன்னாடி துண்டு கட்டி வருவியா, குட்டி ஷாட்ஸ் போட்டுட்டு வர்றதுக்கு இது ஆஃபிஸா இல்லனா உன் வீட்டு பாத்ரூமாடா…
பொண்ணுங்களுக்கு தான் மரியாதை கொடுக்க தெரியல அட்லீஸ்ட் உனக்கு சாப்பாடு போடற வேலைக்குக் கூட மரியாதை கொடுக்கணும் தோணல இல்ல ரொம்ப சிம்பிள் வேலை செய்யுற இடத்திலேயே உன்னோட வீடு இருக்கிறதாலதான் பெட்ரூம்னு நினைச்சுட்டு ஆபீஸ் ரூம் குடோன்னு பொண்ணுங்க வேலை செய்யறதை கூட மறந்துட்டு டவலோடயும், ஷார்ட்ஸ் ஒடவும் சுத்திக்கிட்டு இருக்க
அதை சரி பண்ணிட்டேனு வெச்சுக்கோ உன் திமிரு கொழுப்பு எல்லாமே அடங்கும் ஜஸ்ட் எ மினிட் என்றவன் உடனடியாக அவனுடைய நண்பர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவிற்கு யாராவது காவல்துறை அதிகாரி வட்டத்திலும் பொல்யூஷன் கண்ட்ரோல், மற்றும் அரசுத் துறைகளிலும் வேலையில் இருக்கிறார்களா என்று விசாரிக்க
அவனின் நண்பர்களின் ஒருசிலர் அவர்களின் தந்தை , மற்றும் உறவினர்கள் வேலையில் இருப்பதை உறுதிப்படுத்த உடனே விஜய் அந்த வீட்டின் முன்புறம் குடோன் மற்றும் ஆபீஸ் ரூம், பிரசாத் தங்கியிருக்கும் அறை என அனைத்தையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து குழுவிற்கு பார்வர்டு செய்தான்
சட்டவிரோதமாக ஒருவன் வீட்டில் எந்த ஒரு முன் பாதுகாப்பும் இல்லாமல் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான் அதை தடுத்து நிறுத்த என்ன வழி என்று கேட்க
அடுத்த ஐந்தாவது நிமிடம்த்திலேயே குழுவிலிருந்து ரிப்ளே மெசேஜ் வரத்தொடங்கியது
இன்னும் பத்து நிமிடத்தில் அந்த இடத்தின் எல்லைக்குட்பட்ட காவல் துறை அதிகாரி மற்றும் வருவாய் துறையினர், சுற்றுப்புற பாதுகாப்பு ஆர்வலர்கள்,மற்றும் மாநகராட்சி ஆட்கள் வருவார்கள் முறையாக அவனிடம் லைசென்ஸ் இல்லாத பட்சத்தில் அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்படும் என்று நண்பர்கள் கூற
பொதுவாக இதுபோல் அரசுத்துறை சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்திற்கும் முறையாக கம்ப்ளைன்ட் செய்து அதில் மூலாதாரம் இருந்தால் மட்டுமே
அவர்கள் அந்த கம்ப்ளைன்டின் மீது ஆக்ஷன் எடுப்பார்கள் ஆனால் இங்கு விஜய்யின் நண்பர்கள் அனைவருமே அவர்கள் வீட்டு ஆட்களிடம் இதுபற்றிக் கூற அவர்கள் விஜய்க்காக அப்பொழுதே அந்த வேலையை எடுத்து நடத்த தொடங்கியிருந்தனர்
பிரசாத்தோ பயந்து விஜயின் காலில் விழுந்து கெஞ்சத் தொடங்கினாள்
நான் மீனா கிட்ட நடந்துகிட்ட தப்புதான் மன்னிச்சிடுங்க தயவுசெஞ்சு என்னோடு தொழிலை முடக்கிடாதீங்க அது ஒண்ணு தான் என்னோட வாழ்வாதாரம் ,அது இல்லனா என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டா என்று கேட்கிறான்
அப்போ அதுக்கேத்த மாதிரி நீ நடந்து இருக்கனும்,தெரிஞ்சவன் பலகினவன்னு நினைச்சு தானே வீட்டு பொண்ணுகளை உன்ன மாதிரி ஆளுக கிட்ட வேலைக்கு அனுப்பறோம்
நீங்களே இப்படி தரம் கெட்டு போய் நடந்துக்கிட்டா நாங்க யாரை நம்பி பொண்ணுகள வேலைக்கு அனுப்பறது இதுல மிரட்டல் வேற...
என்றவன் மீனாவை பார்த்து
உன் கிட்ட தப்பா நடந்திருக்கான் இப்போ உன் முன்னாடியே உன்னை தப்பா பேசிருக்கான்
கண்டிப்பா உங்ககிட்ட இருந்து அதற்கான பதிலை நான் எதிர்பார்க்கிறேன் என்ன பண்ண போறே என்று கேட்க விஜய் சொன்னதில் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு மீனா
நேராக வந்து பிரசாத்தின் கன்னத்தில் மாறி மாறி இரண்டு அறைகள் கொடுத்தவள்
ச்சீ…..நீ எல்லாம் ஓரு மனுஷன் ஃப்ரண்ட்லியா தான வேலை செய்யற இடந்துல உங்க கிட்ட எங்களோட பர்சனலை ஷேர் பண்ணறோம்...உடனே அது உங்களுக்கு க்ரீன் சிக்கல் இல்லையா...என்று கூற
ச்சீ….என்ற அந்த ஒற்றை வார்த்தையே பிரசாந்திற்கு பெருத்த அவமானமாக இருக்க கண்ணை மூடிக்கொண்டு தலையை குனிந்து கொண்டான்
சற்று நேரத்திற்கெல்லாம் அரசு அதிகாரிகள் அங்கு வர
விஜய்யும் மீனாவும் அங்கிருந்து கிளம்பினர்.
அரசு அதிகாரிகள் சோதனை செய்ததில் பிரசாந்திடம் முறையாக எந்த ஒரு ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் அவனை கைது செய்ததுடன் அந்த வீட்டையும் பூட்டி சீல் வைத்தனர்.
வீட்டிற்கு வந்த மீனா விஜயிடம் அவனை மிரட்டி விட்டிருக்கலாம்ல எதுக்காக போலீஸ் ஸ்டேஷன் அனுப்பின அதோட இல்லாம வீட்டையும் சீல் பண்ண வச்சிட்டியே அவனோட எதிர்காலம் என்ன ஆகறது…
அவனுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்காங்களே…என்று மீனா பிரசாந்திற்காய் பரிதாப பட்டாள்.
அந்த பயம் அவனுக்குல்ல இருந்திருக்கணும் முறையாக எதுக்குமே லைசன்ஸ் இல்லாம வேலை செஞ்சுகிட்டு இருந்திருக்கான்
அந்த பயமே இல்லாம உன்ன மாதிரி வேலைக்கு வந்த பொண்ணு கிட்ட வால் ஆட்டினானா அவன் விஷயத்தில் எல்லாம் நாம பாவம் பார்க்கவே கூடாது மீனா….
ரெண்டாவது நீ பயப்படுற மாதிரி எல்லாம் அவனுடைய எதிர்காலம் எல்லாம் ஸ்பாயில் ஆகாது
அவனை முறையா லைசென்ஸ் இல்ல,தொழில் வரி கட்டல,இன்சுரன்ஸ் இல்ல, அரசாங்கத்துக்கு தெரிய படுத்தாம மறைமுகமாக வேலை செஞ்சதுக்காக தான் கைது பண்ணிட்டு போய் இருக்கிறதா என் நண்பன் சொன்னான்
அதனால அவனுக்கு எதிர்கால வாழ்வாதார பிரச்சனை வராது...அவங்க கேட்டதெல்லாம் கொடுத்துட்டா கோர்ட் மூலமா ஈஸியா குடோன் ஓபன் பண்ணிடலாம்
அவனுக்கும் இன்னைக்கோ இல்ல நாளைக்கோ கூட ஜாமீனும் கொடுத்துடுவாங்க என்ன குடோன் ஓபன் பண்றது கொஞ்சம் அலையனும் அவ்வளவு தான்
ஆனா அந்த அலைச்சல் தான் அவனுக்கு சரியான தண்டனை இனிமே முறையா எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிறதோட இல்லாம வேலைக்கு வர்ற பொண்ணுங்க கிட்டயும் கொஞ்சம் அடக்கி வாசிப்பான்.
இனிமேல் அவன் கிட்ட வேலைக்கு வர்ற பொண்ணுக சேப் பா இருக்க வாய்ப்பிருக்கு…
அப்படியே வாலாட்டினாலும் அவ வீட்டுல இருந்து யாராவது வந்து வெளித்து விடுவாங்க என்கிற பயம் இருக்கும்
சரி மீனா இனிமே அவன் பேச்சி நமக்கு வேணாம் ஆனால் நீ இனிமேலாவது ஏதாவது ஒரு பிரச்சனைனா
உடனே வீட்ல யார்கிட்டயாவது தெரியப்படுத்து இப்படி மனசுக்குள்ளேயே வைச்சி கஷ்டப்பட்டுட்டு இருக்காத
இன்னைக்கு மட்டும் இந்த விஷயம் எனக்கு தெரியலனா என்ன ஆயிருக்கும் நினைக்கவே எனக்கு பயமா இருக்குது உன்னை இந்த குடும்பம் இழக்க தயாரா இல்ல மீனா..
உனக்கு தெரியல நீ எங்களுக்கு எவ்ளோ முக்கியம்னு அது புரிஞ்சிருந்தா லுஸூ மாதிரி தற்கொலை அது,இதுனு உளறிருக்க மாட்ட…
இனி என்றைக்கும் அதுபோல பேசாத அதுபோல நினைப்பையும் மனசுக்குள்ள கொண்டு வராத இன்னைக்கு நீ அப்படி பேசும்போது எனக்கு அவ்வளவு கோபம் அப்படி உன் கன்னத்துல ரெண்டு அறை வைக்கணும்னு, ஏதோ பயத்துல உளர்றனு விட்டு வச்சிருக்கேன்
உனக்கு தெரியல மீனா இந்த வீட்ல நீ ரெண்டு நாள் இல்லன்னா கூட இந்த வீடு அப்படியே ஸ்தம்பித்து விடும் என்று கூறியவன் சரி நீ உள்ள போய் பத்திரமா இரு நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன், சாயங்காலம் அண்ணன் வந்ததும் மீதி பேசிக்கலாம் என்று கூறிவிட்டு விஜய் கிளம்பி சென்றான்.
மீனா வீட்டிற்கு உள்ளே வரும்பொழுது ராஜாத்தி சமையல்கட்டில் நின்று கொண்டு இருந்தார்,இவள் உள்ளே வரவும்மே விஜயின் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.
பார்த்தியா காலையில் அவ்வளவு தூரம் சொல்லிட்டு தான வெளிய போனேன் யாரு கடைசியா வெளிய போனாலும் வீட்டை பூட்டிட்டு தான் போகனும்னு அதான் எல்லார் கையிலும் ஒரு சாவி இருக்கே, இன்னைக்கு கடைசியா விஜய் தான வெளிய போனான் வீட்டை பூட்டாமலே போயிருக்கான்… வந்து பாக்கறேன் அப்படியே திறந்து கிடக்கு ஏதாவது திருடன் உள்ள புந்திருந்தா என்னத்துக்கு ஆவறது... வரட்டும் இன்னைக்கு அவன்...என்று விஜய்யை திட்ட மீனா பதில் பேசவில்லை…
காலையில் செல்லும் அவசரத்தில் இருவருமே வீட்டை பூட்ட மறந்து இருக்கின்றனர் இப்பொழுது மாமியாரிடம் சொன்னால் அவருக்கு எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டியதிருக்கும் என்று மௌனம் காத்தாள்…
ஆமா நீ என்ன இந்த நேரத்துல வந்திருக்க….யாரோட வந்த….ஏன் வேலை என்னாச்சி என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டார் ராஜாத்தி...
இவள் பிரச்சினை எதையும் சொல்லாமல் வேலை செய்யற ஆஃபிஸ் ல எதுவுமே முறையா இல்லன்னு சொல்லி கவர்மெண்ட் வந்து சீல் வச்சிட்டு போயிட்டாங்க அத்தை என்று மட்டும் கூற
அவரோ ஓஒ.. அப்படியா அப்போ உனக்கு இனி அங்க வேலை இல்லையா….
ம்ம்….எல்லாம் சரி ஆக ஆறு மாசத்துக்கு மேல ஆகும்னாங்க அதனால இனி அங்க வேலை இல்ல அந்த….
மீனாவின் பதிலைக் கேட்ட அவருக்கு இப்பொழுது சற்று நிம்மதியும் கூட அவருக்கு சமீபகாலமாக மீனா வேலைக்குச் செல்வது உடன்பாடு கிடையாது
அவள் கூடிய விரைவில் பேரனோ பேத்தியோ பெற்றுக்கொடுக்க வேண்டும் அது மட்டும் தான் அவரின் எண்ணமாக இருந்தது
ஆனால் முதலில் மாதிரி மீனாவிடம் கடினமாக நடந்து கொள்ளவதில்லை அவளின் தியாகம் அவளின் குணம் எல்லாம் புரிந்து கொண்டவருக்கு அவளை முகத்தில் அடித்தது போல் குழந்தையை பற்றி சொல்லவும் முடியவில்லை
அவளுக்கு பிடித்த எதுவோ அதையே செய்யட்டும் என்று விட்டு விட இன்று அவளின் இந்த பதில் ராஜாத்தியின் மனதை சாந்தப்படுத்தியது
மருமகள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் கூடிய விரைவில் பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுப்பாள் என்று சந்தோஷத்துடன் சரி நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு செய்து கொடுக்கிறேன் என்று கூற
வேணாம் அத்த வேணும்னா நானே செஞ்சிக்கறேன் நீங்களும் ரெஸ்ட் எடுங்க வேலைகளை அப்புறமா ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சிகலாம் என்று கூறியபடி அவள் அறையில் சென்று படுத்துக் கொண்டாள்
மாலை செல்வா வேலையை விட்டு வரவும் அவனைத் தனியாக அழைத்த விஜய் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.
விசயத்தை கேட்டதும் செல்வாவிற்கு அவ்வளவு கோபம் பிரசாந்தின் மீதும் மீனாவின் மீதும் இவ்வளவு நடந்திருக்கிறது தனது மனைவி ஒரு வார்த்தை கூட தன்னிடம் கூறவில்லை அப்படி என்றால் அவளின் பார்வையில் தான் யார் என்ற கேள்வி வர உடனே கோபத்துடன் இரு இப்பவே நான் போய் மீனாகிட்ட என்னன்னு கேட்கிறேன் என்று நகர போனவனை
கையை பிடித்து தடுத்த விஜய் அண்ணா நீ இப்படி கோவப்படுவனு பயந்துதான் அண்ணி உன் கிட்ட சொல்லாம மறைச்சாங்க
இப்ப நீ அவங்க மறைத்ததை சரிங்கற மாதிரி நடந்துக்கிட்டா அவங்க இதுக்கு அப்புறம் எந்த பிரச்சனை வந்தாலும் உன்கிட்ட சொல்ல போறதே கிடையாது
முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ அவளுக்கு நீ இருக்கிறங்கற நம்பிக்கையை குடு எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு நான் பாத்துக்கறேனு நீ அவங்களுக்கு புரிய வச்சாலே இனிமே இது போல விஷயத்தை உன்கிட்ட மறைக்கவே மாட்டாங்க
அதனால கொஞ்சம் கனிவா நடந்துக்கோ இப்போ அவங்க கிட்ட நீ போய் சொல்லக்கூடிய வார்த்தை என்னனா நீ பயப்படாத உனக்கு நான் இருக்கேன் நீ வேலைக்கு போக விருப்பபட்டா வேற ஒரு வேலை தேடலாம் அப்படி இல்லன்னா உனக்கு வேற எதுலயாவது இன்ட்ரஸ்ட் இருந்தா சொல்லு அதுக்கு அனுப்பி வைக்கிறேன்னு தைரியத்தை குடு அதை விட்டுட்டு ஏற்கனவே பயந்து இருக்கற அவங்களை உன் பங்கிற்கு பேசி சங்கடப்படுத்தாத என்று அண்ணனுக்கு தம்பி அறிவுரை கூறி அனுப்பி வைத்தான்.
செல்வாவும் விஜய் சொல்வது நியாயம் தான் என்று பட மீனாவிடம் வந்து மிகவும் கனிவாக நடந்துகொண்டான்.
அந்த விஷயத்தை கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம் மீனா உனக்கு எங்காவது வேலைக்கு போகணும்னு பிரிய பட்டா கொஞ்ச நாள் வீட்டில் ரெஸ்ட் எடு அதுக்கு அப்புறமா ஒரு நல்ல வேலையை பாத்து தர்றேன்
அப்படி இல்லன்னா நீ வேணா எதாவது படியேன் எனக்கு கணவனாய் அவளுக்கு ஆலோசனை வழங்க அவளும் சரிங்க யோசிச்சு சொல்றேன் என்று கூறியபடி அதோடு விட்டு விட்டாள்.
இப்படியாக இருக்க அவர்களின் திருமண நாளும் வந்தது ஐந்து ஆண்டுகள் முடிந்து ஆறாவது ஆண்டுகள் தொடங்கியது திரும்பிப் பார்ப்பதற்குள் இத்தனை நாட்கள் ஓடி விட்டதா என்று பிரமிப்பாக இருந்தது இப்பொழுது நிஜமாகவே மீனாவிற்கும் செல்வாவிற்கும் தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற என்ற ஏக்கம் வர தொடங்கியிருந்தன,
அதற்காக பல மருத்துவமனைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் எங்கு சென்றாலும் ஒரே பதில்தான் வந்தது உங்களுக்கு உடல் நிலையில் எந்த ஒரு குறையும் இல்லை நீங்களாக குழந்தை பேற்றை தள்ளி வைக்கிறேன் என்று நீங்களாக ஏதேதோ செய்து குழந்தை பிறப்பதை நிரந்தரமாக தள்ளி வைத்து விட்டிர்கள் அதை சரிசெய்ய கொஞ்ச நாட்கள் ஆகும் அதுவரை மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் மாத்திரை மருந்துகளையும் அள்ளி கொடுத்தனர் பணத்தை கட்டு கட்டாக வாங்கினர் பலனோ பூஜ்யமாக இருந்தது.
ஓராண்டுகள் மருத்துவமனைக்கு அலைந்ததது தான் மிச்சம் பணம் ஒரு பக்கம் செலவாகிறது...உடல்நிலையில் சிகிச்சை என்ற பெயரில் செய்யும் வலியையும் தாங்கிக் கொள்ளாத மீனா இதை இப்படியே விட்டு விடலாமா என்று தனது கணவரிடம் கெஞ்ச தொடங்கியிருந்தாள்.
இப்போது மீனாவின் பெரிய தங்கைக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்து ஆகிவிட்டது அவளின் இளைய தங்கைக்கு திருமணம் என்று கூறியிருக்கின்றனர் தம்பியோ கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருக்கிறான்
இங்கு விஜய் சிறிது சிறிதாக ஷேர் மார்க்கெட்டில் போட்ட பணம் இப்பொழுது நல்ல லாபத்தைக் கொடுக்க தொடங்கி இருக்கிறது லட்சங்களில் பார்த்த வருவாய் இப்பொழுது கோடிகளையும் எட்ட தொடங்கியிருக்கிறது
பணப்புழக்கம் மிகவும் அதிகம் அதனால் இவர்களின் குழந்தை பிறப்பிற்கான மருத்துவ செலவிற்காக அவன் செய்யும் பணம் கணக்கு வழக்கு இல்லாமல் இருந்தது
மீனாவுக்கும் செல்வத்திற்கும் தான் தர்மசங்கடம் இவர்கள் அவனின் படிப்பு செலவிற்காக மட்டும்தான் செலவு செய்தார்கள் ஆனால் அவனோ இவர்களின் குழந்தைக்காக பல லட்சங்களை இவரை கொடுத்திருக்கிறான்
ஒவ்வொரு முறையும் ஏதாவது சிகிச்சைகள் செய்து கொண்டே இருக்கிறார்கள் இப்பொழுது திருமணமாகி ஆறு வருடங்கள் முடிந்து ஏழு வருட தொடக்கத்தில் இருக்கிறார்கள் இப்பொழுது விஜய்க்கு இருபத்தி ஏழு வயது ஆகி விட்டது திருமணம் செய்யலாம் என அவனுக்கு பெண் தேட ஆரம்பித்துவிட்டனர்.
செல்வாவிற்கு மீனாவிற்கு ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா என்று மனம் மாறத் தொடங்கி இருக்கிறது ஆனால் ராஜாத்தியோ இந்த ஒரு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்
தான் பேரன் பேத்தி என்று கொஞ்ச வேண்டுமானால் அது உங்களின் நேரடி வாரிசாக மட்டும் தான் இருக்க வேண்டும் உங்களுக்கு தான் வயது இருக்கிறதே மீனாவிற்கு இப்பொழுதுதான் இருபத்தி ஐந்து வயதே ஆகிறது உனக்கு இப்பொழுதுதான் முப்பத்தி நான்கு அதனால் கண்டிப்பாக இன்னும் இரண்டு ஆண்டுகள் என்ன நான்கு ஆண்டுகள் வேண்டுமானாலும் நான் காத்திருக்கிறேன் ஆனால் இந்த வீட்டிற்கு ஒரு தத்து எடுக்கப்பட்ட குழந்தை வரவே கூடாது என்று உறுதியாக கூறிவிட்டார்.
தொடரும்...

Last edited: