கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 7

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 7

சுதாகரின் பேச்சிலும் அவன் ரகசியமாய் கண்ணடித்ததிலும் சந்தியா அதிர்ந்து குழம்பி போய் நிற்க கல்பனா அவனை திட்ட ஆரம்பித்துவிட்டாள்.

"உங்களுக்கு என்ன ஆச்சு மாமா? வர வர எல்லாரோடவும் எரிஞ்சு விழுந்துட்டு இருக்கீங்க. யாரோ பண்ணினத்துக்கு ஏன் இவங்களை திட்டறிங்க?" கல்பனா கேட்க, இருவரையும் முறைத்தவன் உள்ளே சென்றுவிட்டான்.

கல்பனா சந்தியாவை சமாதானம் செய்ய, ஒரு குழப்பத்தினூடே கிளம்பி வந்துவிட்டாள் அவள்.

அவள் வந்த சில நிமிடங்களில் கல்பனா அறியாமல் மாடி எறிய சுதாகரும் யுவா வாசலில் நின்று சந்தியாவை அழைக்க, ஒரு முறைப்போடே வெளிவந்தாள் அவள்.

"கொஞ்சம் மேலே வாயேன். பேசணும்" என்றவன் அவள் பதில் எதிர்பார்க்காமல் மேலே சென்றுவிட ஒன்றும் புரியாமல் இவளும் மேலே சென்றாள்.

"ஃபர்ஸ்ட் உன்னை திட்டினதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன். ஐம் வெரி சாரி" அவன் உணர்ந்தே கூறினான்.

"திட்டும் போது உங்களுக்கு ஆள் வேணும். சாரி மட்டும் தனியா கேட்பிங்களா?" கோபத்தோடே அவள் கேட்க,

"ஹாஹா! பார்றா கோபமா? ஹ்ம்ம் நிஜமாவே சாரி சந்தியா. கொஞ்சம் குழப்பம். அதான் அப்படி பேசிட்டேன். சரி நான் ஒன்னு கேட்குறேன் உண்மையான பதில் சொல்லுவியா?"

"நானும் யுவாவும் யாருன்ற உண்மையையே உங்ககிட்ட உளறி வச்சுட்டேன். இதுக்கு மேலே பொய் சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்லை. கேளுங்க தெரிஞ்சதை சொல்றேன்"

'ஏன் எல்லாமே தப்பு தப்பா நடக்குது? இங்கே வந்ததுல இருந்து எதுவுமே சரி இல்லை' மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவன் என்ன கேட்கப் போகிறான் என சலிப்புடன் அவள் பார்த்தாள்.

"யுவாவை உனக்கு எப்படி தெரியும்? அண்ட் யுவா பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"ஏன் கேக்குறீங்க?" கண்களை சுருக்கி அவள் கேட்க,

"சொல்லு சந்தியா! சம்திங் ராங்னு எனக்கு தோணுது. சோ உனக்கு தெரிஞ்சதை சொல்லு. இனி யாருக்கும் எந்த ப்ரோப்லமும் வரக் கூடாதுன்னு தான் கேட்குறேன்" அவ்வளவு தீவிரமாய் அவன் கேட்க, இவளும் பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

"அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் பிரண்ட்ஸ். அவங்க மூலம் தான் யுவாவை தெரியும். யூ க்நொவ் யுவாவை இங்கே வர்றதுக்கு முன்னாடி ஒரே ஒரு டைம் தான் பாத்திருக்கேன்!" அதிசயம் போல அவள் சொல்ல, நிஜமாகவே சுதாகருக்கு அதிர்ச்சி தான்.

"வாட்? நிஜமாவா?"

"அட ஆமா லாயர் சார்! 2 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது.. அப்புறம் இப்ப தான் பாக்குறேன்"

"சந்தியா ஆர் யூ சீரியஸ்? அப்புறம் எப்படி.. என்னனு இவனை நம்பி இவ்வளவு தூரம் தனியா வந்த?"

"ஹெலோ! நான் என்னை நம்பி தான் வந்தேன். ஒன்னும் அவனை நம்பி வரல"

"இந்த வாயி தான். ஏதோ அவன் நல்லவன்ற போய் நீ இப்படி இருக்குற"

"என்ன நீங்க அவனையே நல்லவன் நல்லவன்னு சொல்லிட்டு இருக்கீங்க. அவன் நல்லவன் தான் ஆனால் ரொம்ப நல்லவன்லாம் இல்ல"

"ஏன் அப்படி சொல்ற?"

"பின்ன! இந்த யுவா இருக்கானே அவங்க அம்மா பண்ணின துரோகம் தெரிஞ்சும் அமைதியா இருக்கான். நானும் அவங்க அம்மாகிட்ட நல்லா பேசுவேன் தான். ஆனால் அவங்க புத்தி எனக்கும் நல்லாவே தெரியும். யுவாக்கும் தெரியும். அவனுக்கு லெட்டர் போட்டதே நான் தான். ஆனாலும் இதுவரை அவங்களை எதிர்த்து இவன் பேசல. அவங்களோடவும் பேசல தான். ஆனாலும் தனியா தானே இருக்கான். அப்ப அவங்க அம்மா சொல்றதை நம்புறான்னு தானே அர்த்தம்?"

"ஏய்! என்ன நீ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேசிட்டு இருக்குற. அவங்க அம்மா என்ன பண்ணினாங்க? இவன் ஏன் அவங்ககிட்ட பேச மாட்டான்?" சுதாகர் முழு விவரமும் அறிந்துவிடும் ஆர்வத்தில் கேட்க,

"எல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முன்னால நடந்தது அப்படி. இவனை ஒரு ஆளுன்னு இவனை தவிர எவனுக்கும் என்னை கட்டி குடுக்க மாட்டேன்னு எங்கம்மா என்னை வச்சுட்டு இருக்காங்க. இவன் அவ்வளவு நல்லவனா இருந்திருந்தா இந்நேரம் அவன் பொண்டாட்டிய தேடி கண்டுபுடிச்சிருக்கனும்ல? அதான் சொல்றேன் இவன் அவ்வளவு நல்லவன் இல்ல"

"வாட்? சொல்லு சொல்லு.. என்ன சொன்ன?" ஒரு பரபரப்பு அவனை தொற்றிக் கொண்டதோ?

"என்ன?"

"ப்ச்! ஏய் அவனுக்கு... கல்யாணம்.. ஆயிடுச்சா?" தான் நினைத்தது சரி தான் என்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷமும் இல்லை வருத்தமும் இல்லை. ஆனால் பதட்டமாய் இருந்தது. அருகில் வைத்துக் கொண்டு எப்படி இருவரும் இப்படி இருக்கிறார்கள் என்ற பதட்டம்.

"அதெல்லாம் அப்பவே ரெண்டு வருஷத்துக்கு முன்னவே ஆச்சு. அவன்..." என்று ஏதோ சொல்ல வர,

"சந்தியா" என்ற அழுத்தமான அழைப்பில் அதிர்ந்து தான் திரும்பினாள் அவள்.

அவனே தான். "ஆத்தாடி கேட்டிருப்பானோ?" என பயந்தவளிடம் "உங்க அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க. போனை கீழ வச்சுட்டு இங்கே என்ன பண்ற?" என்றவன் பார்வை சுதாகரை தொட்டு மீண்டது.

"இல்ல... நான்.." என்று தடுமாறியவளுக்கு அவன் எதையும் கேட்கவில்லை என்று நிம்மதியாக இருந்தாலும் அடுத்து இவனிடம் பேசியதற்கு என்ன சொல்வானோ என்ற பயமும் வந்தது.

"கீழ போ" என்றவனுக்கு மறுவார்த்தை பேசாமல் அவள் ஓடிவிட, சுதாகர், யுவராஜ் ஒருவரை ஒருவர் எதிரேதிராய் பார்த்து நின்றாலும் இருவர் முகத்திலும் மருந்திற்க்கு கூட புன்னகை இல்லை.

நீ யாரோ என்ற பார்வை யுவாவுடையது எனில் நீ தான் அவனா என்ற பார்வை சுதாகருடையது.

யுவா இறங்கி சென்ற சில நிமிடங்கள் அங்கேயே தான் நின்றான் சுதாகர்.

அதிகம் யோசிக்க வேண்டியதில்லாமல் சந்தியா கூறியதில் சில உண்மைகள் தெரிந்தாலும் பல உண்மைகள் மர்மமாய் தான் இருந்தது.

அதன்பின் தான் ஜீவியின் ஞாபகமே வந்தது. 'அவனுக்கு யுவராஜை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே!' என்று நினைத்தவன் அடுத்ததாய் ஜீவியைத் தான் பிடித்தான்.

வீட்டிற்கு வந்த ஜீவி இன்று நடந்ததை கல்பனாவிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தான்.

தன்னால் நல்லது நடக்காவிட்டாலும் எந்த கெடுதலும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்ததால் தான் அவனுக்கு இவ்வளவு யோசனையும்.

தனக்கு மேல் வேலை பார்க்கிறான் என்று யுவாவை கல்பனாவிடம் கூறினால் அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்பதைவிட அவள் நினைக்காமல் இருக்கும் பழைய விஷயங்கள் நம்மால் தோண்டப்பட வேண்டுமா? என்பது தான் அவன் கேள்வியே!

வேலையை விட்டுவிடவும் முடியாது. இனிமேல் வேலை தேடி இப்படி ஒரு கம்பெனியில் வேலை கிடைப்பது என்பது சாத்தியமா என்றால் அதுவும் சந்தேகம் தான்.

என்னால் எந்த பிரச்சனையும் வர வேண்டாம் நினைத்துக் கொண்டவன் கம்பெனி பற்றி மறந்தும் வீட்டில் பேசிவிடவில்லை.

நீண்ட நாட்களா வருடங்களா என்று பிரிக்க முடியாத இடைவெளிக்கு பின் இன்று கல்பனாவின் அடி மனதில் சில எண்ணங்கள் மேலோங்கி இருந்தது.

இன்று ஜூன் 21.. இரண்டு வருடங்களாக நினைக்காமல் இருந்த தினம். இன்று அவன் அருகில் இருக்கும்போது அவளால் அந்த தினத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"கல்கோனா! லேட் ஆச்சு டி" டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு சத்தமிட்டான் யுவராஜ்.

"ஏன்டா கத்துற? அவ தான் சமையல் பண்ணிட்டு இருக்கிறா. இந்தா சாப்பிடு" அவனுக்கு தேவையான டிபனை அன்னையே கொண்டு வந்து வைத்தார்.

"வேலைக்கார பொண்ணுக்கு உடம்பு சரி இல்லை. ஹோட்டல்ல சொல்லிக்கலாம்னா நானே பன்றேன்னு சொல்லிட்டா" கூறிக்கொண்டே ஜானகி பரிமாற யுவா அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லையோ!

"மேடம் அவ்வளவு பிஸியா?" முணுமுணுத்தவன் அன்னை நகர்ந்ததும் மீண்டும் அழைத்தான்.

"கல்கோனா! சட்னி ப்ளீஸ்" வேகமாய் சட்னியோடு ஓடி வந்தவள் நெற்றி முழுக்க வியர்வை பூக்கள்.

"ஏய்! என்ன இப்படி வியர்த்திருக்கு? உள்ள என்னடி பண்ற?" எழுந்து தன் கைக்குட்டையால் அவள் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் கேட்க, முறைப்புடன் வந்துவிட்டார் ஜானகி.

உடனே விலகப் போனவளை அவ்வளவு எளிதில் விடும் அளவுக்கு அவன் பிடி இல்லை.

அவர் வருகை அறிந்தும் யுவா அவளை விட்டுவிடவில்லை. "ஏம்மா! அந்த பொண்ணு வரலைனா வேற ஏதாச்சும் ஏற்பாடு பண்ண வேண்டியது தானே?" என்றவன் அவளுக்கு பயத்தில் மீண்டும் உற்பத்தி ஆகிக் கொண்டிருந்த வியர்வைகளை தான் துடைத்துக் கொண்டிருந்தான்.

"கல்பனா போய் அந்த கேசரியை எடுத்துட்டு வா" ஜானகி அழுத்தமாய் சொல்ல,

"ஒன்னும் இல்லை விடுங்க" என்று அவனை தள்ளி நிறுத்தி ஓடினாள்.

"ஹ்ம்ம்! நீங்க சொன்னாலும் இவ கேட்க மாட்டா. இல்லம்மா" தானே பதில் தேடிக் கொண்டு சிரிப்புடன் அவன் அமர, கேசரியை பரிமாறினாள் கல்பனா.

"எப்படி டா இருக்கு? நானே உனக்காக பண்ணினேன்" அன்னை அவன் அருகே அமர்ந்து சொல்ல, நிமிர்ந்து அவளைத் தான் பார்த்தான்.

"ஹ்ம்ம் நைஸ் மா" என்றவன் வெளியே சென்று ஷூவை மாட்டிக் கொண்டே மீண்டும் அழைத்தான்.

"கல்கோனா.."

தன் அத்தையை பார்த்துவிட்டே தயங்கி தயங்கி ஓடினாள் அவன் அருகில்.

ஒருமுறை எட்டி அன்னையை பார்த்தவன் அவர் இவர்களுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருக்கவும் மனைவியை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

"தேங்க் யூ சோ மச் டி. ரொம்பவே ஸ்வீட்டா இருந்துச்சு. அண்ட் அது நீ தான் பண்ணினன்னு எனக்கு தெரியும். அம்மா செஞ்சு ஆல்ரெடி சாப்பிட்ருக்கேன். அவங்க சொல்றதை பெருசா எடுத்துக்காத"

கணவனுக்காய் செய்ததை சொல்ல நா துடித்த போதும் அத்தையின் பார்வைக்கு கட்டுப்பட்டு இருந்தவள் மனம் முழுதும் வலியில் துடித்திருக்க இந்த ஜென்மத்திற்கு இது போதும் என்பதை போல இருந்தது யுவாவின் இந்த ஒற்றை சொல்.

அவசரமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர நினைத்தவன் உதடுகளில் கண்ணீர் பட்டிருக்க அவள் முகத்தை நிமிர்த்தினான்.

"உனக்கு ஏன்டா அடிக்கடி அழுகை வருது?" கண்ணீரை துடைத்து அவன் சொல்ல, அவனை பார்த்து அழகாய் புன்னகைத்தாள்.

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவா" கண் சிமிட்டி அவள் சொல்ல,

"அதான் நைட்டே சொல்லிட்டியே!" என்று குறும்பாய் சொன்னவன் அவள் கண்ணச்சிவப்பை ரசித்து தான் பார்த்திருந்தான்.

"தட்ஸ் மை கேர்ள்" என்றவன் ஆதரவாய் தோள் தட்டி கிளம்பிச் சென்றான்.

அதன்பின் அவளிடம் அவன் அம்மாவின் சுடுசொற்கள் எல்லாம் அவன் அறியாதது.

சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் கல்கோனா என்று தான் அழைப்பான். "வீட்டு வேலைக்காரங்க முன்னாடி என்ன பேரு டா இது?" அன்னை சொல்ல,

"சோ வாட் மா?" என்ற ஒற்றை சொல்லில் வாயடைக்க வைத்துவிடுவான்.

"அம்மா" என்று கட்டிக் கொண்ட குழந்தையின் சிரிப்பில் நினைவுக்கு வந்தாள் கல்பனா.

காதல் தொடரும்..
 
Top