அத்தியாயம் 9
"இப்ப சொல்லு என்ன பண்ணலாம்?" முழுதாய் அவனுக்கு தெரிந்ததை சொல்லி முடித்து கைக்கட்டி சுதாகர் சந்தியாவை மட்டுமே பார்த்து அமர்ந்திருக்க, சந்தியா விரித்த கண்களை மூடாமல் அவனை பார்த்திருந்தாள்.
அதற்கு முன்பே சந்தியா மூலம் அறிந்ததை ஜீவிக்கும் சுதாகர் சொல்லியிருக்க அவனும் சிலையாய் தான் அமர்ந்திருந்தான்.
"ஹேய்! சொல்லு" லேசாய் அவள் தோள்களை அவன் தட்ட, "ஹான்" என்றவள் அவனையே பார்த்திருந்தாள்.
"கல்பனா அக்கா யுவா வைஃபா?" என்றவள் கண்கள் இன்னும் விரிந்து தான் இருந்தது.
"என்ன நான் சொன்னதையே திருப்பி சொல்ற?" அவன் கேட்க,
"யோவ்! எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு அதை டைஜெஸ்ட் பண்ண கூட டைம் கொடுக்காமல் பச்ச குழந்தைகிட்ட போய் என்ன என்னன்னு கேட்குறீயே! உன்னையெல்லாம்..." என்றவள் தலையில் கைவைத்து டேபிளில் சாய்ந்தாள்.
"ஹைய்யோ! கல்பனா அக்கா சாரிக்கா! இது தெரியாமல் நான் வேற அடிக்கடி லூசு மாதிரி பேசி.." என்று பேசிக் கொண்டே வந்தவள் சட்டென நிறுத்தி சுதாகரை பார்த்தாள்.
"அச்சோ! லாயர், நான் யுவா வைஃப் இல்லைனு கல்பனா அக்காக்கு தெரியுமா" என்று பதட்டமாய் கேட்க, இல்லை என தலையாட்டினான் அவன்.
"அய்யோ ஏன் சொல்லல? அவங்க என்ன நினைச்சுருப்பாங்க?"
"இனி நனைக்கவோ காயப்பபோடவோ எதுவுமே இல்லை சந்தியா. அதான் ரெண்டு பேரும் வேணாம்னு தெளிவா இருக்காங்களே?"
"அதுக்காக அப்படியே அத்து விடலாம்னு சொல்றிங்களா?"
"பார்றா! இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இப்ப மட்டும் ஏனாம்?" கிண்டலில் கேட்க, பாவமாய் பார்த்தாள் அவள்.
"நீ என்ன டா சொல்ற?" ஜீவியிடம் கேட்டான்.
"தெரியல அண்ணா.. ஆனால் நீங்க ரெண்டு பேரும் சொல்றது வச்சு பார்த்தால் அவங்க நல்லவங்கனு தான் தோணுது"
"நிஜமா எனக்குள்ள ஒரு கில்ட்டி பீல் இருக்கு.. நான் இல்லைனா கல்பனா அக்காக்கு இந்த நிலைமை வந்திருக்காதோன்னு.. அவங்க யாருன்னு தெரியாத வரை நான் பெருசா எடுத்துக்கல.. ஆனால் சத்தியமா இப்ப வரை இல்லை இல்லை இனிமேலும் யுவாவை கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு சுத்தமா கிடையாது.. ப்ளீஸ் எதாவது பண்ணுங்க லாயர்" சந்தியா சொல்ல,
"யுவா ஏன் கல்பனா மேலே கோபமா இருக்கான்? அப்படி அவங்க அம்மா என்ன சொன்னாங்க? கல்பனா ஏன் அவளுக்கு பிரச்சனைனதும் யுவாவை தேடி போகாமல் சொந்த ஊருக்கு திரும்பி வந்தா? இந்த கேள்விகள்ல எதுக்காவது உன்கிட்ட அன்ஸர் இருக்கா?" சுதாகர் சந்தியாவை கேட்க,
"அய்யோ லாயர்! யுவா அவங்க அம்மா பேச்சை கேட்குறதா இருந்திருந்தால் அவன் ஏன் அவங்க அம்மாகிட்டு பேசாமல் இருக்க போறான்? இப்ப கூட ஒன் மன்ந்த் காண்ட்ராக்ட்ட மாத்தி ஒன் இயர் வாங்கி இருக்கான்"
"இது எப்ப நடந்துச்சு?" சுதாகர்.
"யாருக்கு தெரியும்? என்கிட்ட சொல்லிட்டா பண்றான்.. கேட்டால் ஏற்கனவே செவத்த மூஞ்சி இன்னும் செவந்திடும். அதை யாரு பார்க்க?" அவள் சொல்லில் இருவருமே சிரித்தனர்.
"ஆனாலும்... ப்ரெக்னன்ட்டா இருந்த அக்காவை பார்க்க ஒருமுறை கூட அவங்க முயற்சி பண்ணல.. அப்புறம் எப்படி அவங்க மேலே முழு தப்பு இல்லைனு சொல்ல முடியும்?" ஜீவி கேட்க,
"வாட்?" என எழுந்துவிட்ட சந்தியாவிற்கு அத்தனை அதிர்ச்சி.
"என்ன தெரியாத மாதிரி கேட்குறீங்க?"
"சத்.தி.ய.மா தெரி.. யாது.. அப்ப குழந்தை?" எவ்வளவு முயற்சித்தும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.
"ஜீவா" அவன் சொல்ல, சுதாகரை பார்த்தாள் சந்தியா. அவன் அது தன் குழந்தை என்று தானே சொல்லி இருந்தான்.
"கல்பனாக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணும்.. அதுக்கு ஜீவா எப்பவும் தடையா இருக்க கூடாது. அதான் ஜீவாவை நானே பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணினேன். இப்படி ஒரு டர்னிங் வரும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல" சுதாகர் சொல்ல,
"ஆஹான்! நீங்க அவ்வளவு நல்லவருன்னு இந்த இடத்துல சொல்லியே ஆகணும் அப்படித்தானே?" சொன்னவளை அவன் முறைக்க,
"சும்மா" என்று கண் சுருக்கி சைகை செய்தாள் சந்தியா.
"சோ! தப்பே செய்யாமல் ரெண்டு பேரும் தண்டனை அனுபவிக்குறாங்க இல்ல?" சுதாகர்.
"லாயர் லாயர் தான் பா... கரெக்ட்டா பாயிண்ட்டை புடிக்குறாரு பாரேன்"
"இப்ப என்ன பண்லாம் நீயே சொல்லேன்" அவன் கேட்க,
"இதென்ன கேள்வி! அந்த சிரிக்க தெரியாதவனை சரி கட்டணும்.. கல்பனா அக்காவை சமாளிக்கணும்.. ஜீவாக்கு அவனோட அம்மா அப்பாவை திருப்பி கொடுக்கணும்" சந்தியா சொல்ல,
"வெரி குட். அண்ட் இதெல்லாம் பண்ண போறது யாரு?" சுதாகர் கேட்ட விதமே அவன் எண்ணம் ஓரளவு புரிந்த ஜீவி சிரிக்க,
"அதையாவது நீங்க சொல்லுங்க வக்கீல் சார்" என்றவளை பார்த்து அதிகமாய் சிரித்தான் சுதாகர்.
"இந்த சிரிப்பே சரியில்லையே! சந்தியா அலர்ட் ஆகிக்கோ" எனும்போதே
"உன்னை தவிர இந்த செயலை யாராலயும் செய்ய முடியாது சந்தியா. நீ எவ்வளவு போல்ட்? எவ்வளவு ஸ்வீட்? உன்னால முடியாததுன்னு ஒன்னு இருக்குமா?" என்று பல பிட்டுகளை அவன் அடுக்க,
"தோ பாரு வக்கீலு! இந்த ஊரை விட்டு கூட ஓட சொல்லு. என் அப்பா ஜெயிலுக்குள்ள போய் உட்காந்துக்குவேன். ஆல்ரெடி இவன் என்னை வச்சு செய்யுறது பத்தாதுன்னு இவன் தங்கச்சி அங்கே இருந்தே என்னை எடுபுடி ஆக்குறா.. இவனுக்கு மட்டும் நாம பிளான் பண்றது தெரிஞ்சுச்சு கன்ஃபார்ம் அன்னைக்கு எனக்கு திவசம் தான்"
அவள் சொல்லிய விதத்தில் ஜீவிக்கு நிஜமாய் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்படி சிரிக்க, சுதாகர் அவன் முடிவில் உறுதியாய் இருந்தான்.
'தேவை தான் தியா உனக்கு! நீ எங்கே எப்படி இருக்க வேண்டியவ? இவனை நம்பி வந்தேன்ல எனக்கு தேவை தான்' தனக்கு தானே சொல்லியவள்
"ஆல்ரெடி லேட்.. நான் கிளம்புறேன்.. உங்ககிட்ட ஒரு கூல் ட்ரிங்க்ஸ் குடிச்ச பாவம்... என்னை எங்கே கொண்டு போய் விட போகுதோ! என்ன பிளான்னு மெசேஜ் பண்ணுங்க" என்றவள் கேக் உடன் கிளம்ப போக,
அப்பொழுதே அவன் முதல் பிளானை அவளிடம் சொல்லி அவளின் நூற்றி அறுபதாம் புலம்பலையும் வாங்கிக் கொண்டு வெற்றி நாமத்தையும் பூசியே அனுப்பி விட்டான் சுதாகர்.
வீட்டிற்கு வந்த சந்தியா கையோடு ஜீவாவையும் தூக்கிக் கொண்டே மேலே சென்றாள்.
குழந்தையுடன் வந்தவளை பார்த்த யுவா எதுவும் சொல்லாமல் தன் வேலைகளை கவனிக்கவும் இவளும் ஹாலில் டேபிள் செட் செய்து கேக்கை வைத்தவள் உடனே வீடியோ காலில் சூர்யாவை அழைத்தாள்.
"ரெடியா அண்ணி?" சூர்யா கேட்க,
"மசூதி, சர்ச் தாண்டி இமயமலை பாபா வரை வேண்டிக்கிட்டு எல்லாம் ரெடி பண்ணிட்டேன் டி" என்று அதை காட்டியவள்,
"உன் அண்ணாவை நீயே கூப்பிடு" என்று சொல்லி போனை அணைக்க, அடுத்து யுவா போனிற்கு வந்தாள் சூர்யா.
"சொல்லு டா"
"அண்ணா! உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" சூர்யா சொல்ல,
"என்ன? சந்தியாவை மிரட்டி எதாவது பண்ண வச்சுருப்ப. அதானே" என்றவனை போனிலேயே முறைத்தாள் தங்கை.
"ஏன் இப்படி பண்ற?"
"எனக்காக ணா ப்ளீஸ். ஹாலுக்கு வாங்க" என்று சொல்ல, தங்கை சொல்லை என்றும் போல கேட்டு நடந்தான்.
அங்கே கேக் கேட்டு ஜீவா அழுது கொண்டிருக்க, "இரு டா நிலவரம் புரியாமல் கலவரம் பண்ணாத" யுவாவை கவனிக்காமல் அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள் சந்தியா.
"என்ன இது?" கேக்கை பார்த்து போனில் தங்கையை முறைக்க, சந்தியாவும் அவனைக் கண்டாள்.
"சூர்யா என்ன பண்ணி வச்சிருக்க? இதெல்லாம் தான் எனக்கு இப்ப தேவையா?" என்றவனுக்குள்ளும் இரண்டு வருடங்களுக்கு முன்னான பழைய நினைவுகள் இல்லாமல் இல்லை.
"ஒரு ஸ்வீட் கூட செஞ்சு தர முடியாத தூரத்துல இருக்கோம். ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா. ப்ளீஸ் எதுவும் சொல்லாதீங்களேன்" சூர்யாவின் ஒரு ப்ளீஸ் தன் வேலையை செய்ய, அமைதியாய் கேக் முன் நின்றவனை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி தான் சந்தியாவிற்கும்.
அவன் மொபைலை வாங்கி கேக் தெரியும் தூரத்தில் வைத்த சந்தியா ஜீவாவுடன் யுவா அருகில் நிற்க, மனமே இல்லாமல் கேக்கை யுவா கட் செய்ய போகும் நேரம்,
"வெயிட்... வெயிட்... வெயிட்" என தடுத்தாள் சந்தியா.
"ஏய் அண்ணி! இப்ப என்ன உனக்கு?" சூர்யா கத்த,
"நீ அடங்கு டி" என்றவள் "யுவா! ஒரு குழந்தை அழுதுட்டு இருக்கேன்னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா? நீ பாட்டுக்கு கட் பண்ண போற? இந்தா ஜீவாவை கட் பண்ண சொல்லு" என ஜீவாவை அவனிடம் நீட்ட அவளை தீயென முறைத்தான் யுவா.
குழந்தை தானே என நினைத்த சூர்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். அவள் மட்டும் இங்கே இருந்திருந்தால் இருக்கும் பிரச்சனையை தீராத பிரச்சனையாய் மாற்றி இருப்பாள் என்பது யுவா மட்டுமே அறிந்த உண்மை.
"சீக்கிரம்.. அழுறான் பாரு" சூர்யா இருக்கும் தைரியத்தில் சுதாகர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்து கொண்டிருந்தாள் சந்தியா.
யுவாவிற்கு அன்று ஜீவாவை கையில் ஏந்திய தினம் ஞாபகம் வந்தது.
அவனை கையில் தூக்கியதும் தனக்குள் ஏதோ புதுவித ரத்தம் பாய்வது போல தோன்ற, அது அவளின் குழந்தை என்ற எண்ணத்தினால் என்று நினைத்துக் கொண்டவன் ஜீவாவின் முகத்தில் தொலைந்து போனது என்னவோ உண்மை தான்.
அப்படியே கல்பனாவின் முகத்தை உரித்து வைத்திருக்கும் ஜீவாவை பார்க்க பார்க்க இவனுக்குள் என்னென்னவோ உணர்வுகள். அதையெல்லாம் இவன் தவறாக அல்லவா புரிந்து வைத்திருக்கிறான்.
இப்போது கூட ஜீவாவை பார்க்காமலே கண்களை சுற்றவிட்டுக் கொண்டிருந்தவன் சந்தியாவின் வார்த்தைகளில் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாய் வந்து போனதோ?
"என்ன ண்ணா இவ்வளவு யோசிக்குறிங்க? குழந்தை தானே!" என்ற சூர்யாவின் வார்த்தைகளில் ஜீவாவை பார்க்க, அவன் பார்த்தால் மட்டும் போதும் என்றிருந்த ஜீவா உடனே அவனிடம் தாவிவிட தன்னையும் மீறி யுவா கைகள் அவனை தாங்கிக் கொண்டது.
அதன்பின் நடந்தது எல்லாம் யுவா தன்னையும் அறியாமல் நடந்தவை தான். ஜீவாவின் பிஞ்சுக் கரங்களை தன் கைகள் கொண்டு கேக்கை கட் செய்ய, ஏதோ உணர்வுக் குவியலுக்குள் இருந்தது போல தான் தோன்றியது பார்திருந்த இருவருக்கும். தாடிக்குள் இருந்த முகத்தில் புன்னகை கூட வெளியே தெரிய சிரித்துக் கொண்டாள் சந்தியா.
சந்தியா தனது மொபைல் மூலம் அதை புகைப்படம் எடுக்க, சூர்யா கைத்தட்டி ஆர்ப்பரிக்க ஜீவா முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
அதை பார்த்துக் கொண்டே தான் கைகள் தன் வேலையை செய்தது யுவாவிற்கு.
"ஃபர்ஸ்ட் மிஸ்ஸன் சக்ஸஸ்" சந்தியா மனதிற்குள் வெற்றிக்குறி இட்டுக் கொண்டாள்
ஆசை தொடரும்...