கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமையே வரமாக....புவனா சந்திரசேகரன்

Praveena Thangaraj

Moderator
Staff member
தனிமையே வரமாக!

ஈஸ்வரன் அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்ததில் லஞ்ச் டயம் நெருங்கியதைக் கூட உணரவில்லை. அவனுடைய நண்பன் முகிலன் வந்து எதிரே நின்றதைக் கூட கவனிக்காமல், விரித்து வைத்திருந்த ஃபைலில் மூழ்கிக் கிடந்தான். கொஞ்ச நேரம் கைகளைக் கட்டிக் கொண்டு நின்ற முகிலன் பொறுக்க முடியாமல் டேபிளை ஓங்கித் தட்ட, ஈஸ்வர் திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தான்.

" என்ன ஈஸ்வர்? பசிக்கலையா? ஃபைலை மூடிட்டு எழுந்து வா. சாப்பிட்டு முடித்துக் காலாறப் பத்து நிமிஷம் காரிடாரில் நடந்துட்டு வந்து வேலையைத் தொடரலாம்"

என்று சொன்னபோது தான் பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்ததே அவனுக்குப் புரிந்தது. ஈஸ்வர் தனது பையைத் திறந்து லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டான். முகிலனின் தோளில் கைபோட்டுக் கொண்டு அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தான். இரண்டு பேரும் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். இந்த மத்திய அரசு அலுவலகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை பத்து வருடங்களாகத் தொடரும் நட்பு.

" என்ன ஈஸ்வர்? சங்கீதா ஸிஸ்டர் இப்ப எப்படி இருக்காங்க? உடம்பு பரவாயில்லையா? வேலையில் ஜாயின் பண்ணிட்டாங்களா? இல்லை லீவில தான் இருக்காங்களா? குழந்தை ஜனனியை மேனேஜ் பண்ணிடறாங்களா?" என்று அக்கறையுடன் விசாரித்தான்.

"அதெல்லாம் இப்பப் பிரச்சினை இல்லை. எல்லாமே பிரமாதமாப் போகுது இப்போ. கடவுளாப் பாத்து ஒரு தேவதையை எங்களோட உதவிக்காகவே அனுப்பி வச்சிருக்காரே!" என்றான்.

" அப்படியா. யார் அந்த தேவதை?" என்று கேட்டுக் கொண்டே, உணவை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் முகிலன் .

முகிலனுக்கு நண்பனின் குடும்பத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். ஈஸ்வரும், சங்கீதாவும் காதல் திருமணம். கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்தவர்கள்.

இரண்டு வீட்டினரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் இரண்டு பக்க உறவுகளோடும் பேச்சு வார்த்தை இல்லை. இப்போது இரண்டு பக்கத்திலும் பெற்றோர்கள் உயிரோடு இல்லை. தலைப்பிரசவத்தின் போது கூட நண்பர்கள் தான் உதவி செய்தார்கள். முகிலனின் மனைவி மந்திரா தான் ஹாஸ்பிடலில் சங்கீதா கூடத் தங்கித் தன்னுடைய கூடப் பிறந்த சகோதரி மாதிரி கவனித்துக் கொண்டாள். நல்லபடியாக ஜனனி பிறந்ததும் முகிலனின் அம்மா சங்கீதாவுடன் அவர்களுடைய வீட்டில் தங்கி சங்கீதாவையும், ஜனனியையும் பார்த்துக் கொண்டாள். ஜனனிக்கு இப்போது எட்டு வயது. நல்ல ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கிறாள். சங்கீதா பாங்கில் வேலை பார்க்கிறாள்

சங்கீதா இரண்டாம் முறை கர்ப்பமாகி இருந்தாள். சென்ற வாரம் ஒரு நாள் மாலையில், ஆஃபிஸில் இருந்து வந்து கொண்டிருந்த போது வழியில் விபத்துக்குள்ளாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்தாள். கருவும் கலைந்து நிறைய இரத்தசேதம் ஆகியிருந்தது.

முகிலனின் அம்மாவிற்கும் இப்போது வயதாகி விட்டது. உடம்பு தள்ளவில்லை. முகிலனின் மனைவி மந்திராவும் தங்கைக்குக் கல்யாணம் என்று வெளியூர் போயிருந்தாள். உதவிக்கு ஆள் இல்லாமல் ஈஸ்வர் தவித்துப் போய்விட்டான்.‌முகிலனும் குடும்பத்தோடு அந்த சமயத்தில் கல்யாண வீட்டில் இருந்ததால் உதவி செய்ய முடியவில்லை. ஈஸ்வரும் அவனைத் தொந்தரவு செய்யவில்லை. கல்யாணம் முடிந்து திரும்பி வந்ததும் முகிலன் விஷயம் தெரிந்து ரொம்ப வருத்தப் பட்டான். இத்தனை அமர்க்களமும் முடிந்து, நேற்றுத் தான் ஈஸ்வர் ஆஃபிஸ் வந்தான்.‌முகிலனும் இப்போது லஞ்ச் டயத்தில் அதைப் பற்றித் தான் விசாரித்துக் கொண்டிருந்தான்.

" அவங்க யார்? அவங்க பேரென்ன? எந்த ஊர்? என்று ஒன்றுமே தெரியாது. ஆனால் தெய்வமாகப் பார்த்து எங்களுக்குக்காகவே அனுப்பியது போல எங்களிடம் வந்து சேந்தாங்க"

என்று தங்கள் வீட்டு தேவதை பற்றி ஈஸ்வர் சொல்ல, முகிலன் ஆர்வத்துடன் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தார்கள். இந்த டாபிக்கைத் தொடர்ந்து பேசுவதற்குள் தலைமை அதிகாரி கூப்பிடுவதாக ஈஸ்வருக்குத் தகவல் வர, அவசர அவசரமாக் கிளம்பிப் போனான்.

அடுத்த நாளில் இருந்து ஆஃபிஸில் ஆடிட் வேலைகள் ஆரம்பிக்க, அதில் எல்லோரும் பிஸியாகிப் போனார்கள். அடுத்தடுத்து நடந்த விஷயங்களால், இந்த டாபிக்கை அவர்களால் தொடர முடியாத சூழ்நிலை. முகிலனின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனதில் அவன் லீவில் இருந்தான். ஈஸ்வர் மட்டும் மருத்துவமனைக்குப் போய் முகிலனின் அமமாவைப் பார்த்து விட்டு வந்தான்.

ஈஸ்வரும், சங்கீதாவிற்குக் கொஞ்சம் உடம்பு சரியானதும் ஒரு மாறுதலுக்காகக் குடும்பத்தோடு வெளியூர் சுற்றுப்பயணம் போய் வந்தான். ஏதோ சில காரணங்களால் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து அரட்டை அடிப்பது நடக்காமலே தள்ளிப் போனது.

மூன்று, நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் லஞ்சில் இரண்டு பேரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த போது முகிலனுக்குத் திடீரென்று ஞாபகம் வந்தது. உடனே ஈஸ்வரிடம் கேட்டான்.

" அன்னைக்கு நாம பேசும் போது மாரோ தேவதை மாதிரி உதவிக்கு வந்தாங்கன்னு சொன்னயே. யார் அவங்க? உனக்கு அவங்களை எப்படித் தெரியும்?" என்று கேட்க, ஈஸ்வரும் சொல்ல ஆரம்பித்தான்.

" சங்கீதா ஹாஸ்பிடலில் இருக்கும் போது தான் அந்த வயசான அம்மாவை நான் முதலில் சந்திச்சேன். நான் கௌண்டரில் பணம் கட்டும் போது பக்கத்தில் சோகமாக நின்னுட்டு இருந்தாங்க. ரிசப்ஷனில் இருந்த பெண் அவங்களைப் பத்தித் தன் ஃப்ரண்ட் கிட்டப் பேசினது என் காதில விழுந்தது.

தெருவில் மயக்கம் போட்டுக் கிடந்தவங்களை யாரோ ஹாஸ்பிடலில் சேத்ததாகவும், அவங்களுக்குத் தன்னைப் பற்றிய எந்த விஷயமும் ஞாபகம் இல்லைன்னும் சொன்னாங்க. வயசானதனால மறதியா இல்லை தலையில் அடிபட்டதில் அம்னீஷியா ஆயிடுச்சான்னு தெரியலைன்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ தவிச்சுப் போயி நின்ன அந்தப் பெண்ணைப் பாத்ததும் எங்க அம்மா மாதிரி மனசுக்குத் தோணுச்சு. எங்க வீட்டுக்குக் கூட்டிப் போனேன். அவங்களுக்காகச் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து உதவி செய்ய நெனச்சபோது அவங்க தடுத்திட்டாங்க. உங்க வீட்டில தங்கி என்னால் முடிஞ்ச உதவி செய்யறேன். கொஞ்ச நாளில எனக்கு ஞாபகம் தானாகவே திரும்பிடும்னு அவங்க சொன்னதை என்னால தட்ட முடியலை. வீட்டுப் பொறுப்பைக் கையில எடுத்துக் கிட்டு, சங்கீதாவைத் தன் மகளைப் போலப் பாசத்தோடு கவனிச்சுக்கிட்டாங்க. ஜனனியும் பாட்டி, பாட்டின்னு அவங்களைச் சுத்தி வரா. அவங்க பேர் கூட எங்களுக்குத் தெரியாது. தேவதைன்னு மனசில நெனச்சேன். தேவிம்மான்னு கூப்பிடறோம்" என்று ஈஸ்வர் சொல்லி முடித்தான்.

ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்த முகிலன்,

" அவங்க ஃபோட்டோ எதாவது இருக்கா உன் கிட்ட?" என்று கேட்க ஈஸ்வரும் தன்னுடைய ஸெல்ஃபோனில் தேடினான்.

" இதோ, இது ஒண்ணு தான் இருக்கு. ஒரு நாள் ஜனனி கூட உக்காந்து பல்லாங்குழி விளையாட்டு சொல்லிக் கொடுத்திட்டிருந்தாங்க. நான் கொஞ்சம் தள்ளியிருந்து ஃபோட்டோ எடுத்தேன். அவங்களுக்குத் தெரியாது" என்று சொல்லி அந்த ஃபோட்டோவைக் காட்டினான்.

முகிலன் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ஏதோ சொல்ல வந்தான். அதற்குள் திடீர் மீட்டிங்கிற்காக ஈஸ்வரைத் தலைமை அதிகாரி கூப்பிட்டதால் உடனே போய் விட்டான்.

மாலை ஈஸ்வர் வீட்டுக்குக் கிளம்புவதற்குள் முகிலன் அவசரமாகக் கிளம்பிப் போய் விட்டான். ஈஸ்வர் மனதில் ஏதோ உறுத்தலாக இருந்தது. முகிலன் அந்த ஃபோட்டோவைப் பார்த்து, "ஏதோ சொல்ல வந்தானே! என்னவாக இருக்கும்? " என்று மனதிற்குள் குழப்பம்.

" அந்த தேவிம்மாவை நாம அதிகமா நம்பிட்டமோ? அவங்க பின்னணி என்னன்னு தெரியாம வீட்டில சேத்தது தப்போ?" என்று ஆயிரம் எண்ணங்கள் மனதில் ஓடின.

மனித மனமே விந்தையானது தான். இவ்வளவு நாட்களாக தேவதையாக நினைத்தவரை ஒரு நொடியில் தவறாக நினைக்கத் தூண்டி விடுகின்ற மனம் கிளைக்குக் கிளை தாவும் குரங்கு என்பது ஒன்றும் மிகையில்லை.

ஈஸ்வர் வீட்டில் நுழையும் போது முகிலன் தன் தங்கையின் குடும்பத்தோடு அங்கு வந்திருந்தான். சங்கீதா அவர்களுக்கு நடுவில் சோகமாக உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பதறிப் போன ஈஸ்வர் என்ன நடந்ததென்று விசாரித்தான். சங்கீதா அழுது கொண்டே சொன்னாள்.

" தேவிம்மா, திடீரென்று வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்ட்டாங்க. லெட்டர் எழுதி வச்சுட்டுச் சொல்லாமக் கொள்ளாமப் போயிட்டாங்க" என்று அழுது கொண்டே சொன்னாள். ஈஸ்வர் வீட்டிற்குள் போய்க் குழந்தை பத்திரமாக இருக்கிறாளா என்று பார்த்தான். சாமான்கள், பணம் எல்லாம் சரியா இருக்கா என்று செக் பண்ணினான். சங்கீதாவிற்குக் கோபம் வந்தது.

" என்ன நீங்க? அவங்களைப் போய் சந்தேகப்படறீங்களா? அவங்க அப்படிப் பட்டவங்க இல்லை. இதோ முகிலன் அண்ணா கிட்டக் கேளுங்க" என்றாள்.

" ஆமாம் ஈஸ்வர். நெஜமாகவே அவங்க தேவதை தான். உங்க வீட்டில தேவிம்மா. என் தங்கை வீட்டில தெய்வானைம்மா. இதே மாதிரி ஓர் இக்கட்டான சமயத்தில் அவளோட வீட்டிலயும் மூணு மாசம் தங்கி உதவி செஞ்சுட்டு ஒரு நாள் திடீர்னு கிளம்பிப் போய்ட்டாங்க. அப்போதிருந்து அவங்களைத் தேடிக்கிட்டிருந்தா. அதனால தான் நான் சீக்கிரமாக் கிளம்பிப் போய் அவளைக் கூட்டிட்டு இங்கே வந்தேன். அதுக்குள்ள கிளம்பிட்டாங்க" என்றான்.

அந்த லெட்டரில் திருவான்மியூரில் ஒரு முதியோர் இல்லத்திற்கு ஏதாவது பண உதவி செய்யச் சொல்லி எழுதியிருந்தார் தேவிம்மா.

யார் தான் அந்த தேவி இல்லைன்னா தெய்வானை?

உண்மையில் அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. சென்னைக்கு அருகில் மதுராந்தகத்தில் சொந்த வீடு, நிலபுலன் எல்லாம் இருக்கு. வசதிக்குக் குறைச்சலில்லை. இரண்டு மகன்கள். திருமணமாகிக் குடும்பத்தோடு வெளிநாட்டில் ஸெட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு தடவை வெளிநாடு போய் வந்த தேவகிக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. மகன்களுடைய வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரியாக இருக்க அவளுடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தனியாகச் சொந்த வீட்டில் வசித்தவளைத் தனிமை வாட்டியது. அன்புக்கு மனம் ஏங்கும் போது இந்த மாதிரி எங்கேயாவது போய் அன்பான ஒரு குடும்பத்தில் புதிய உறவுகளுடன் சில நாட்களைக் கழித்துவிட்டு ஊருக்குத் திரும்புவாள். அந்த சந்தோஷத்தை மனதில் அசை போட்டுக் கொண்டு மீதி நாட்களைத் தள்ளுவாள். போரடிக்கும் போது மீண்டும் கிளம்புவாள்.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள். திருச்சியில் பஸ் ஸ்டாண்டில் தவித்துப் போய் நின்ற அந்த முதியவள் மேல் இரக்கப்பட்டு மாதவன் தன் வீட்டுக்கு அவளைக் கூட்டிப் போக, மாதவனின் மகன் கண்ணனுக்குப் புதிய பாட்டி கிடைத்தாள்.

பாட்டியைக் கண்ணம்மாப் பாட்டி என்று கண்ணன் கூப்பிடுகிறான்.

தனிமையை வரமாக்கிக் கொண்ட தேவதை இவள். உடலில் தெம்பு இருக்கும் வரை தேவதையாகவே இருப்பாள்.

புவனா சந்திரசேகரன்,

10/09/2020.

இந்தக் கதை இந்தப் போட்டிக்காக என்னால் புதியதாக எழுதப்பட்டது. வேறு எந்தத் தளத்திலோ இதழிலோ வெளிவரவில்லை என்று உறுதி அளிக்கிறேன்.

புவனா சந்திரசேகரன்,

20/09/2020.

Different thinking ma. Nice
Ph: 9818457812.
 
Nice story sis
 
Top