தனிமை..... சங்கரி அப்பன்
ஓவியப் போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டு வந்தான் சிவா.
வகுப்பு மாணவர்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள்..
“சிவா.....நீ ஓவியப் போட்டிக்கு பெயர் கொடுத்திருக்கியா? என்று கேட்டான் மோகன்.
“ஆமா...”
“பிரேம் தான் ஜெயிக்கப் போறான். எதுக்கு வேஸ்ட்டா கலந்துக்கிற? சிவா?” என்று கிண்டல் செய்தான் ராம். மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். சிவாவுக்கு கோபம் வந்தது.
“நான் ஜெய்கிறதுக்காக போட்டியில் சேரலை. தேர்வுக்கு படிச்சு படிச்சு வெறுத்துப் போச்சு. ஒரு ரிலாக்சேஷனுக்காக சேர்ந்தேன்...”
“நீ வாத்து வரைஞ்சா...கோழி மாதிரி இருக்கும். நீ ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளக் கூட லாயக்கில்லை...யார் எது செய்யறதுன்னு இல்லையா?” மாணவர்கள் கேலி கொஞ்சம் அதிகப்படி தான். அங்கு வந்த பிரேம் சொன்னான்—
“ஏண்டா அவனை கிண்டல் பண்றீங்க? அவன் ஓவியப் போட்டியில் கலந்து கொள்வதில் உங்களுக்கு என்ன நஷ்டம்? இப்படி டிஸ்கரேஜ் பண்ணக் கூடாது....சிவா நீ தைரியமாக போட்டியில் கலந்துக் கொள்.”
“போதும்...நீ பேசாதே. கணக்கிலே நாப்பது. சையன்ஸ்லே நாப்பத்தி ரெண்டு....மத்த எல்லா சப்ஜெக்ட்லும் அம்பதுக்கு கீழே. நீ பெரிய ஹீரோ மாதிரி பேசறே? என்ன பெரிய ஓவியன் நீ? ஓவியம் வரையறது அவ்வளவு பெரிய கஷ்டமா என்ன? அப்படி இப்படி கோடு இழுத்து.....பிரஷ்ஷாலே கலர் கலரா தீட்டினா முடிஞ்சுது. நீ பெரிய ஆளுன்னு நிச்சசுக்காதே. நீ செய்றதை, நினச்சா நான் செய்துட முடியும். ஆனா நான் செஞ்சதை நீ செய்ய முடியுமா? எல்லா சப்ஜெக்டிலும் என்னை மாதிரி முதல் மார்க்க வாங்க முடியுமா?”
“முதல்லே ஓவியப் போட்டியிலே ஜெயிச்சு காட்டு பார்க்கலாம். உன்னாலே முடியாது. ஆனா நான் நினச்சா உன்னை மாதிரி மார்க் வாங்க முடியும்..” என்றான் பிரேம்.
“நான் ஒவியப் போட்டியில் ஜெய்ச்சு காட்றேண்டா...அது என்ன பிரமாதம்? தேர்வில் ஹை மார்க்க வாங்கற எனக்கு இது ஜுஜுப்பி.”
“பார்க்கலாம்...”
“பார்க்கத் தானே போறே. எழுதி வச்சுக்கோ. எனக்குத் தான் இந்த முறை ஃபர்ஸ்ட் ப்ரைஸ்.”
சவால் விட்டுவிட்டு சிவா வீட்டுக்கு வந்தான்.
சிவா அம்மாவிடம் கேட்டான்.
“அம்மா...நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மையா பதில் சொல்லணும்.”
“என்ன சொல்லு...நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே? ப்ளஸ் டூ பரீட்சை நெருங்குது. ஏதாவது நினச்சு மனசை குழப்பிக்காதே.”
“அம்மா....நாம் நினச்சா எது வேணா சாதிக்கலாமா?”
“கண்டிப்பா. மனசு வைச்சா எதை வேணா சாதிக்கலாம்.”
“ஹன்ட்ரெட் பர்சென்ட்....”
“ஹன்ட்ரெட் பர்சென்ட்....ஏன் கேக்றே?”
“ஜெயிச்சிட்டு வந்து சொல்றேன்...”
“குட்....தட்ஸ் த ஸ்பிரிட்.” என்று சொல்லி அம்மா அவனை அன்புடன் பார்த்தாள். டேய் பிரேம்....இந்த முறை ஓவியப் போட்டியில், நான் ஜெயிச்சு காட்றேண்டா....
பிரபல ஓவியன் அரவிந்த் வீரமணி கான்வாஸில் அற்புதமான ஓவியமொன்றை தீட்டிக் கொண்டிருந்தான்.
“சார்....உங்களைப் பார்க்க ஒரு பையன் வந்து நின்னிட்டு இருக்கான். எவ்வளவு சொல்லியும் போக மாட்டேங்கறான். உங்களை பார்த்தே தீரனுமாம். பதினாறு வயசு இருக்கும். பாவமா இருக்கு சார்...”
“சரி வரச் சொல்லு. ரெண்டு நிமிஷம் தான் டைம்னு சொல்லிடு.”
பத்து நிமிட இடைவெளிக்குப் பின் வாட்ச்மேன் கொண்டு வந்து விட்டப் பையனைப் பார்த்தான் அரவிந்த். வட்டக் கண்கள். கண் முழுக்க துருதுருப்பு. அரவிந்துக்கு ஸ்வாரஸ்யம் தட்டியது.
“தம்பி..உனக்கு என்ன வேணும்? ஆட்டோகிராஃப் தானே?”
“இல்லே....ஜெயிக்கணும்...”
“யாரை?”
“உங்களை என்று வைத்துக் கொள்ளுங்களேன். நான் ஓவியப் போட்டியில் முதல் பரிசு வாங்கணும். எனக்கு ஒரே நாளில் ட்ரைனிங் கொடுக்க முடியுமா? நான் ரொம்ப ஸ்மார்ட். உடனே பிடிச்சுக்குவேன்.”
அரவிந்த் பலமாக சிரித்தான்.
“உட்கார். என்ன சாப்பிடறே?”
“ஒன்னும் வேண்டாம். சார் இதப் பாருங்க. நான் வரைந்தது.”
அந்த நீள ஷீட்டை வாங்கிப் பார்த்தான் அரவிந்த். கப்பல் ஒன்று ராஜ கம்பீரத்துடன் கடலுக்குள் பிரயாணிக்கத் தயாராக...ஏற்பாடுகள் நிறைந்த முஸ்தீபுடன் அலைக்குள் சவாலாக இறங்குகிறது.
“சார்....இதுக்கு பரிசு கிடைக்குமா?”
“கிடைக்காது....”
“நீங்க பொய் சொல்றீங்க. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வரைஞ்சிருக்கேன் எவ்வளவு அழகா இருக்கு...”
“தம்பி...உன் பெயர் என்ன?”
“சிவா...”
“சிவா...இந்த ஓவியத்திலே நீ காட்டியிருப்பது இரவா பகலா?”
“தெரியலை. அது பத்தி நான் யோசிக்கலை...”
“கப்பல் நங்கூரம் விட்டுத்தான் கடலுக்குள் முன்னேறும். இப்படி படகு மாதிரி கரையிலிருந்து கடலுக்குள் போகாது. அடிப்படை விஷயங்கள் புரியாமல் படம் வரைந்தால் வீட்டில் வேணுமானால் வைத்து ரசிக்கலாம். போட்டியில் ஜெயிக்க முடியாது.”
சிவா பேசாமல் இருந்தான்.
“அப்படியும் இப்படியும் கோடு போட்டுட்டால் ஓவியம் வராது. அது ஒரு தவம்ப்பா. அதுக்கு தனிமை வேணும். உள்ளுக்குள் நீ ஒருமுகப்படுத்தி யோசிக்கணும். டி.வி பார்த்துகிட்டோ....பாட்டு கேட்டுக்கிட்டோ...யார் கூடவோ பேசிக்கிட்டோ படம் வரைமுடியாது. வெறும் ஓவியம் பொம்மை மாதிரி. அதுக்கு ஜீவனைக் கொடுக்கணும். விரல் வழியே அதுக்கு நீ வாழ்வு கொடுக்கணும். அது உன் கூட பேசணும்.....அதுக்கு நீ மனசை தனிமை படுத்திக்கணும். புரியுதா?”
சிவா பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். இதில் இவ்வளவு இருக்கா? சுலபம்னு நினைச்சேனே!
“எந்த ஒரு கலைக்கும் நாம் கொடுக்கும் மரியாதை என்ன தெரியுமா? அந்தக் கலையை ஆராதிக்கணும். பக்தன் தியானிப்பது போல் ஒரு முகப்படுத்தி வணக்கத்துடன் ஈடுபடனும்....வெறும் கோடுகள் இழுத்து, கொஞ்சம் கலர் கொடுத்திட்டாப் போதும்னு நினச்சுராதே..இது மனசும் புத்தியும் சம்பந்தபட்ட உன்னத விஷயம். யுத்தமில்லை. போட்டிக்காக இதை நீ ஆண்டுவிட முடியாது....”
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை....”
“உனக்கு புரியும்படி சொல்லணும்னா...மகாபாரதத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்றேன். அர்ஜுனன் வில் வித்தையில் சிறந்தவன். அவனைத் தான் உசத்தியாக குரு துரோனாசாரியார் கருதுகிறார், சலுகை தருகிறார் என்று குற்றம் சாட்டினான் துரியோதனன். அவர் ஒரு பரீட்சை வைத்தார். ஒரு மரத்தில் மரத்தால் ஆன பறவையை வைத்தார். அதன் கண்ணில் அம்பு எய்த வேண்டும் என்று சொன்னார். யுதிர்ஷடர் முதல் ஒவ்வொருவரும் இந்த பந்தயத்தில் பங்கு கொண்டனர். குரு ஒவ்வொருவரிடமும் உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கேட்டார். எல்லோரும் எனக்கு மரம், கிளை, மற்ற பறவைகள் எல்லாம் தெரிகிறது என்று சொன்னார்கள். அர்ஜுனனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார் துரோனாச்சாரியார். அவன் சொன்னான எனக்கு கண் மட்டும் தான் தெரிகிறது...அவன் தான் அந்த பறவையின் கண்ணைப் பார்த்து அம்பு எய்தினான். பறவை வீழ்ந்தது. அர்ஜுனனின் திறமையை மற்றவர் புரிய வைத்தார். இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது சிவா?”
“சுற்றி எல்லோரும் இருந்தாலும்...சுற்றி என்னவெல்லாம் இருந்தாலும் நம்மை தனிமைபடுத்திக் கொண்டு செயல்பட்டால் தான் வெற்றி பெறமுடியும்...”
“அவ்வளவு தான். திறமை உள்ளவர்கள் அதைத் தான் செய்கிறார்கள்.”
சிவா கண்களில் நீர் திரண்டது.
“என்னப்பா?”
“நிறைய புரிஞ்சுக்கிட்டேன் சார்...”
“ஓவியம் வரையறது பத்தியா?”
“இல்லே ஓவியன் பத்தி...”
“அப்ப ஜெயிக்க முடியுமா முடியாதான்னு நீயே புரிஞ்சிட்டு இருப்பே...குட்.” சிவாவின் தோளில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தான் அரவிந்த்.
மாலை நேரம். வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வீடு சென்று கொண்டிருந்தனர். பிரேம் புத்தக மூட்டையுடன் கிளம்பினான்.
“பிரேம்...”
காது கேட்காதது போல் பிரேம் சென்று கொண்டிருந்தான்.
“பிரேம்...கூப்பிடரேனே நில்லு.” என்றான் சிவா.
‘மார்க் கம்மியா வாங்கறவனோடு பேசினா அது உனக்கு கௌரவ குறைச்சல் ஆச்சே...கணக்கு பூகோளம், கெமிஸ்ட்ரி...எல்லாத்திலேயும் சென்ட் பெர்சென்ட் வாங்கற நீ எதுக்குப்பா இந்த முட்டாளோடு பேசணும்?”
“என்னை மன்னிச்சிடு பிரேம். கணக்கு பூகோளம் கெமிஸ்ட்ரி எல்லாம் பற்றி ஏற்கனவே அறிஞர்கள் கண்டுபிடிச்சு எழுதியிருப்பதை தான் நான் மனப்பாடம் பண்ணி தேர்வில் எழுதி முதல் மார்க் வாங்கறேன். இதில் என் திறமை என்ன இருக்கு?. கிரியேடிவ்வா நான் ஒன்னும் பண்ணலை. நீ என்ன பெரிசா வரையரைன்னு நினச்சிட்டேன்...”
“சிவா......நீ என்னை மட்டமா நினச்சா பரவாயில்லை. ஆனா நீ ஓவியக் கலையை அலட்சியமா நினச்சிட்டே. அதைத் தான் என்னால் தாங்க முடியலை. கலைகள் ஆத்மார்த்தமானவை. தனித்துவம் நிறைந்தவை. எந்தக் கலைக்கும் தனிமை தான் கிரியா ஊக்கி. அது ஒரு தனி உலகம். சூரியோதயத்தை வரையும் போது வேறு எதுவும் எனக்கு தெரியாது. படைக்கும் போது தனித் தீவுக்குள் இறங்கிவிட்டது போல் இருக்கும்....வரையும் போது நான் என்னையே மறந்திடுவேன்...”
“நீ புகழ் பெற்ற ஓவியனாய். இந்த உலகம் அறிந்து கொள்ளும் அளவு உயரணும் மனசார வாழ்த்தரேண்டா.....”
“தேங்க்ஸ் டா...”
இருவரும் கை கோத்துக் கொண்டு போவதை மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
சங்கரி அப்பன்.