முன்னுரை
“இன்னாருக்கு இன்னாரென்று எழுதி
வைத்தானே தேவன் அன்று..”
இரண்டு ஜோடிகள்.. எதிர்பாரா விதமாக நிச்சயக்கப்பட்ட திருமணம்.. ஜோடிகள் மாற வேண்டிய சூழ்னிலை.. மனப் பொருத்தமில்லா திருமணம்.. ஆனால் பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. விதியின் வசத்தால் இடம் மாறிய ஜோடிகள் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்களா?..
கயிற்றை தன் கையில் எடுத்துக் கொண்டவனோ இவர்களை ஆட்டுவிக்க.. ஆட வேண்டியவர்களோ முரண்பட..
வாழ்க்கை என்ற பொம்மலாட்டத்தில் வென்று சாதிக்கிறார்களா?.. இல்லை தங்களைத் தொலைத்து ஆட்டத்தை இழக்கிறார்களா?.. 'ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்'.. காதல் இருந்தால் எதுவுமே சாத்தியம் தான்..
அதே காதலால் தன் இணைக்காக மாறலாம் என்ற போக்கில் ஒத்த கருத்தில் இருவர் இருக்க.. மற்றவர்களுக்காக ஏன் மாற வேண்டும் என்ற மனநிலையில் மற்ற இருவர்.. யார் யாருடன் இணைந்தார்கள்?.. இவர்கள் எண்ணங்கள் நிறைவேறியதா?.. தங்கள் வாழ்க்கையை மீட்டார்களா?..
ஏற்கனவே புத்தகமாக வெளிவந்த கதைதான்.. இருந்தாலும், படிக்காத, மற்றும் மீண்டும் படிக்க இங்கே தளத்தில் பதிவிடுகிறோம். தினமும் அத்தியாயம்.. முடிந்தால் இரண்டு, மூன்று அத்தியாயங்களும் பதிவிடுகிறோம். வாருங்கள், பொம்மலாட்டத்தைப் படித்து மகிழுங்கள் வாசகர்களே.. உங்கள் தொடர் ஆதரவை என்றும் நாடுகிறோம்..
ஸ்ரீலக்ஷ்மி.