கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 8

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 8

அடுத்தச் சில நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு ஜெட் வேகத்தில் பறக்காத குறையாய்ப் பறந்தது..

இப்போது வேதாவுக்குப் பட்டணத்துப் பரபரப்பு வாழ்க்கை கொஞ்சம் பிடிபடும் போல் தோன்றியது.. காலையிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை அவரவர்க்கு அவரவர் அவசரங்கள், கவலைகள் தேவைகள்..

யாரும் யாரின் தேவையையும் எதிர்பார்த்தோ இல்லை கவலைப்படுவதோ அந்த வீட்டில் சுத்தமும் இல்லை.. ராஜேந்திரன் மட்டும் பாவம் சாப்பிட்டாயா நல்லா தூங்கினாயா என்ற பொதுப்படி விசாரிப்புகளை மருமகளிடம் நடத்துவார்.

மற்றபடி ருக்மணியோ இல்லை பிரகாஷோ அவளை ஒரு துரும்பளவு கூட லட்சியம் செய்யவில்லை.

ருக்மணிக்கு பொழுது விடிந்தால் காரில் எழுந்து பீச்சிற்குப் பக்கத்து வீட்டு ரேவதி சித்தியுடன் வாக்கிங்க் போய்விடுவாள்.. வரும் போதே மணி எட்டாகிவிடும்.. அதன் பின் அவள் குளித்து முடித்து மேஜைக்கு வரும் போது மணி ஒன்பதை நெருங்கும்.. சமையலுக்கு ஆள் மேற்பார்வைக்கு ஆள்.. கூட்ட மெழுக சுற்றுக் காரியங்களுக்கு வள்ளியும், தமிழரசியும்.. வேறு என்ன இருக்கிறது வீட்டில்?..

அதனால் சோஷியல் செர்விஸ் செய்கிறேன் என்ற பேரில் பக்கத்து லேடீஸ் கிளப்புக்குப் போனால் மதியம் உணவுக்குத் தான் திரும்புவாள்..

மாமனார் ராஜேந்திரனோ.. பாவம்.. வாக்கிங்க் வீட்டுத் தோட்டத்திலே செய்வார்.. செடிகளுக்குத் தோட்டக்காரனுடன் சேர்ந்து பைப்பில் நீர் ஊற்றுவார்.. மற்றபடி காலை உணவுக்குப் பிறகு அவர் போனால் மதியம் அவர் ஆஃபிசுக்கே சாப்பாடு போய்விடும்.. இரவு உணவுக்காகத்தான் திரும்புவது..

பிரகாஷும் அப்படித்தான் ஜிம், ஆஃபிஸ், சாயங்காலம் கிளப் இல்லை நண்பர்களுடன் சுற்றுவது.. இது தான் அவன் தினப்படி பழக்கம்..

யாரும் யாரையும் அனாவசியமாய்த் தொந்தரவு செய்வது இல்லை.. அதே போல் அவரவர் வேலையில் குறுக்கிடு செய்வதும் இல்லை..

வந்த இரண்டு மூன்று வாரத்துக்குள்ளாகவே வேதாவுக்கு அலுப்பு தட்டத் தொடங்கி விட்டது..

‘சே என்ன வாழ்க்கை.. உப்புச் சப்பில்லாமல்.. யாருக்கும் எதைப் பற்றியும் அக்கறை இல்லை.. இந்த வீட்டில் நான் ஒருத்தி இருக்கிறேனா இல்லையா என்பது கூடக் கவலையில்லை இவர்களுக்கு..

‘இதே சத்யாவை மணமுடித்திருந்தால் இப்படியா இருந்திருப்பான் இந்தப் பிரகாஷ் மாமா.. நான் ஒருத்தி இருப்பது கண்ணுக்குக் கூடத் தெரியவில்லை’.

‘இந்த லட்சணத்தில் அம்மா வேறு சீக்கிரமே குழந்தையோ குட்டியோ பெற்றுக் கொள்.. எதையும் தள்ளிப் போடாதே’, என்று வீணாக உபதேசம் செய்துவிட்டுப் போனார்..

'எதையாவது செய்யலாம் என்று கேட்டால்.. எல்லாவற்றிற்கும் ஆள் இருக்கும்மா.. நீ ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டார்கள்.. நான் என்ன படுத்த படுக்கையிலே நோய் வந்தா விழுந்து கிடக்கிறேன்.. ஓய்வு எடுப்பதற்கு.. இப்படி எந்த வித வெளி உலகச் சம்பந்தமும் இல்லாமல் கூண்டுக் கிளியாய் என்னை அடைத்துவிட்டார்களே..மொத்த வாழ்வும் இனி இப்படித்தானோ..', என்று எண்ணியவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது..

அன்றைக்கும் அப்படித்தான்.. எதையோ வீணாக எண்ணியவாறு தோட்டத்தில் சுற்றி அலைந்தவளுக்கு ராஜேந்திரன் ஒரு பென்ச்சில் சோர்ந்து உட்கார்ந்திருந்தது தென்பட்டது..

'ஐயோ என்னாச்சு மாமாவுக்கு.. இப்படி ஒரு மாதிரி உட்கார்ந்திருக்காங்க', என்று எண்ணியபடி அவரை நெருங்கினாள்..

வியர்வை ஆறாய் வழிய, மூச்சு வாங்க உட்கார்ந்திருந்தார் ராஜேந்திரன்..

அருகில் சென்று, "மாமா, மாமா என்னாச்சு.. ", என்று கேட்டவளைப் பார்த்து அசதியாய் நிமிர்ந்தவர்,

"ம்ம்.. வேதா.. ஒண்ணுமில்லேம்மா.. கொஞ்சம் படபடப்பாய் வந்துவிட்டது.. லோ சுகர் ஆகிவிட்டிருக்கும் போலே.. ஒண்ணுமில்லை.. வா போகலாம்..", என்று எழுந்திருக்கப் பார்த்தபடி தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்..

"இல்லை.. மாமா நீங்க கொஞ்சம் உக்காருங்க.. நிதானமா போகலாம்.. நான் வரேன்..", என்று அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர் மெல்ல சுதாரிப்பதற்காகக் காத்திருந்தாள்.

ஒரு சில நிமிடத்தில் இயல்புக்குத் திரும்பியவர், "வாம்மா போகலாம்..", என்று எழுந்து நடக்கத் தொடங்கினார்..

கூடவே நடந்தபடி, "ஏன் மாமா உங்களுக்கு இப்படி அடிக்கடி ஆகுமா.. ஏன் இப்படி?..", என்று கேட்ட மருமகளை அன்புடன் பார்த்தவர்..

"ம்ம்.. அப்பப்போ நடக்கும்.. எனக்குச் சர்க்கரை நோய் இருக்கு.. தவறாமல் மருந்து எடுத்துக் கொள்கிறேன்.. ஆனாலும் கூட ஒரு சில சமயங்களில் சில வகை உணவு ஒத்துக்கொள்வதில்லை.. போதாதற்கு.. கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் இப்படி லோ சுகர் ஆகிவிடுகிறது.. என்ன செய்ய நிறைய நேரங்களில் கஸ்டமர்களுடன் பேசும் போது நேரம் பார்க்க முடியாது இல்லையா.. அதான்.. நேற்றும் அப்படித்தான்..", என்று பெருமூச்சு விட்டவரைப் பரிதாபத்துடன் பார்த்தவள்..

"ஏன் மாமா அப்படிச் செய்யறீங்க.. சுவர் இருந்தா தானே சித்திரம்.. உங்க உடல் நலம் முக்கியமில்லையா.. இப்போத்தான் எல்லா இடத்திலும் நல்ல சத்தான உணவு வகைகள் சாப்பிடுங்க நேரத்துக்குச் சாப்பிடுங்கன்னு.. எல்லா டி.வீ.. சேனலிலும் காட்டுறாங்களே.. அப்படிக் கூட நீங்க இப்படி அலட்சியமா இருக்கலாமா?.. அத்தைக்குத் தெரியுமா?..", என்று படபடத்தவளைப் பார்த்து மென்னகை புரிந்தவர்..

“நிறுத்து நிறுத்து.. ம்ம்.. என்ன கேட்டாய் அத்தைக்குத் தெரியுமான்னு தானே.. ம்ம்.. நல்லாத் தெரியும்.. ரெண்டு வருஷங்களுக்கு முன்னால் தடபுடலா.. மெனு போட்டு என் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் திட்டத்தைத் தீட்டினாள் உன் அத்தை..

அவ்வளவுதான்.. கொஞ்ச நாள் ஆச்சு.. தீவிரமும் போச்சு..கழுதைத் தேய்ந்து கட்டெரும்பா மாறினாப் போலே.. எல்லாம் மெல்ல குறைஞ்சு போச்சு.. அவரவர்க்கு ஆயிரம் வேலை.. அதிலும் அத்தை லேடிஸ் கிளப் பிரெசிடெண்ட் ஆனதும்.. இன்னமும் பிசி.. என்ன செய்ய மணி என்ன சமைக்கிறாரோ அதான் நமக்கு அமிர்தம்..", என்று சிரித்தார்.

"போதும் நிறுத்துங்க மாமா.. இப்படிக் கூடவா உடம்பைப் பாழ் செய்து கொள்ளுவீங்க.. பிரகாஷ் மாமா எதுவும் சொல்ல மாட்டாரா உங்களை.. சே.. இதே எங்க ஊரா இருந்தாக்கா ஆயிரத்தெட்டுக் கை வைத்தியம் தடபுடல் படும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு..”

“நல்ல உழைப்பு நல்ல உணவுமுறை இருந்த இதெல்லாம் நம்மை நெருங்குமா?.. இனி உங்க சர்க்கரை நோயை கட்டுப்படுத்தறது என் கவலை.. நானும் இங்கே எனக்கு ஒரு வேலையும் இல்லையேன்னு நினைச்சேன்.. இப்போ வேலை வந்துடுச்சு..",என்றவள்..

வீட்டுக்குள் நுழைந்தது நேரே சமையல் கட்டுக்குள் போனவள் மாமாவுக்குச் சீக்கிரம் காலை உணவைத் தருமாறு மணி மாமாவிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

அங்கே சில பல சாமான்களை உருட்டியவளுக்குத் தட்டுப்பட்டது அது..

கல்யாணம் முடிந்த கையோடு அமெரிக்கா போவதாக இருந்ததால் நிறைய சமையல் குறிப்புப் புத்தகங்களை வாங்கி வைத்திருந்தாள்.. அமெரிக்கா மாப்பிள்ளைக்கு என்று வித விதமாய்ச் சமைத்துப் போட என்று பலவித வாங்கி வைத்திருந்ததில் சிறு தானிய சமையல் குறிப்பு புத்தகமும் இருந்தது..

அவர்கள் ஊரில் வரகு அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி என்று எல்லாம் வெகு சாதாரணமாய்ச் சுலபமாய்க் கிடைக்கும்.. இங்கே சென்னையில் எப்படியோ என்று யோசித்தவள்.. குளித்து முடித்துச் சட்டென்று தயாரானவள்.. கொஞ்சம் பணத்தைத் தன் மணி பர்சில் வைத்துக் கொண்டு வெளியே போகத் தயாரானாள்..

வெளியில் உணவு மேஜையில் யாரும் இல்லை.. தமிழ் அப்போது தான் வேலை முடிந்து போவதற்குத் தயாராய் இருந்தாள்..

"தமிழக்கா.. இங்க பக்கத்திலே மளிகை சாமானெல்லாம் எந்தக் கடையிலே இருக்கும்?", என்று கேட்டவளை வினோதமாகப் பார்த்த தமிழ்..

"எதுக்கு சின்னம்மா.. மாச மொதல்லே கடையிலேயிருந்து அவங்களே ஆள் விட்டனுப்பி இறக்கிடுவாக.. மத்தபடிக்கு எனக்குத் தெரியாதும்மா.. ஆனா பின்னாடித் தெருவிலே நிறையக் கடைங்க இருக்குது.. அங்கதான் ஆத்திர அவசரத்துக்கு நான் வாங்கி வருவேன்..

“இந்த ஏரியா பெரிய மனுசங்க இருக்கிற இடம் இல்லையா.. கடைகண்ணிங்க அவ்வளவா கிடையாது.. எல்லாம் பங்களா ஆளுங்க தான்.. ஆனா வாசப்பக்கம் போயி சோத்துக் கை பக்கம் போயி கடேசிலே திரும்பினே வச்சுக்கோ.. முளுக்கக் கடைவீதி தான்..", என்று சொல்லிவிட்டு விடை பெற்று சென்று மறைந்தாள்.

சிறிது நேரம் போவதா இல்லை வேண்டாமா.. மாமாகிட்ட சொல்லி வாங்கி வரச் சொல்லுவதா.. என்று யோசித்தவள் கடைசியில்.. ‘வாயிலே வார்த்தை இருக்கு.. இதுக்கென்ன பயம்?..', என்று நினைத்து போயே விட்டாள்.

முதலில் தமிழரசி சொன்ன மாதிரி தான் போனாள்.. ஆனாலும் அவள் தேடிய ஐட்டங்கள் இல்லாததால் வேறு ஏதோ ஒர் திசையில் இருந்த கடைக்கு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து போய்விட்டாள்.

பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அது.. நன்றாய் சுற்றி சுற்றிப் பார்த்து தனக்கு வேண்டிய ஐட்டங்களை சேகரித்தவள் மனதில் ஒரு சின்ன கேலி ஓடியது..

'நம்ம கிராமத்தில் காலங்காலமாய் இதைச் சாப்பிடறாங்க.. வெள்ளை அரிசி சோறு என்பது எப்போதாவது வாரம் ஒரு முறையோ இரு முறையோதான்..’ என்று அவள் அப்பத்தா சொல்லி கேள்வி..

‘அப்போது இந்தத் திணை, வரகு சாமை எல்லாம் ரொம்பக் கம்மி விலையில் இருந்தது.. காலத்தின் கோலம் இப்போது இந்த வரகையும் சாமையையும் அரிசியை விட விலை அதிகமாய்க் கொடுத்து வாங்க நம் மக்கள் தயார்..

இவற்றின் மருத்துவ குணங்களை முதலிலேயே எல்லோரும் ஏற்றுக் கொண்டு இருந்தால்.. இப்படி ஆகியிருக்குமா?', என்று யோசித்தபடி அனைத்தையும் வாங்கி முடித்தாள்.

இந்த சிறு தானியங்களை மில்லெட்ஸ் என்று ஸ்டைலாக விலை அதிகமாக விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. என்று எண்ணியபடி.. பில்லைக் கொடுத்துவிட்டு கடையை விட்டு வெளியே வந்தவளுக்கு அருகில் நல்ல ஜூஸ் கடையைப் பார்த்தவுடன் நா வரட்டியது..

நல்ல குளிர்ச்சியாய் தர்பூசணி ஜூசைப் பருகி முடித்தபின், 'சரி வீட்டுக்குப் போவோம்', என்று ஆட்டோவை கூப்பிடப் போனவளுக்கு அப்போது தான் உறைத்தது.. தனக்குத் தன் வீட்டின் அட்டெரஸே தெரியாது என்று..

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குத் தலையும்புரியவில்லை காலும் புரியவில்லை..

'இது எந்த இடம்.. நாம் எங்கிருந்து வந்தோம் என்று மூலையைக் கசக்கிப் பிழிந்து பார்த்தாள்... அப்போது ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை.. பக்கத்தில் பீச்..அது எங்கு இருக்கும்..

யாரைக் கேட்பது என்று யோசித்தபடி அருகிலிருந்த பூக்காரியிடம்,

"ஏங்கா பீச்சுக்கு எந்த வழியா போகணும்?..", என்று பொதுப்படையாகக் கேட்டாள்..

அவளை ஏற இறங்கப் பார்த்த பெண்மணி என்ன நினைத்தாரோ, "பீச்சுன்னா.. அது மகாபலிபுரம் வரைக்குந்தான் போகுது.. நீ எந்தப் பீச்சை சொல்லுறே?.. இங்கே மெரினாவா.. சாந்தோம் பீச்சா.. பெசண்ட் நகரா.. எதைச் சொல்லுறே?..", என்று கேட்டவுடன் நிஜமாகவே பயம்பிடித்துக் கொண்டுவிட்டது வேதாவுக்கு..

'ஐயோ இந்தம்மா விட்டா கன்னியாகுமரிக்கே நம்மை அனுப்பிடும் போலே', என்று நினைத்தவள்,

"இல்லேக்கா இங்கேர்ந்து எது பக்கத்திலே? இருக்கு?..", என்று இழுத்தாள்..

"ஏம்மா கேக்குறே.. நீ யாரு.. எங்கேயிருந்து வரே.. இங்க எங்க தங்கியிருக்க?.."

"இல்லக்கா இங்கத்தான் வீடு... சும்மா கடைக்கு வந்தேன்... இங்கே பக்கத்திலே சொந்தக்காரங்க இருக்காங்க அதான் கேட்டேன்..”

"ம்ம்.. பார்த்தா பெரிய இடத்துப் பொண்ணு மாதிரி தான் இருக்கிற.. ஏம்மா இந்த மாதிரி விலாசம் இல்லாமல் ஆளைத் தேடுறது ரொம்பக் கஸ்டம்மா.. இது பெரிய இடம் இல்ல.. நீ வூட்டுக்குப் போய் விலாசத்தோட போய்ப் பாரும்மா.. நேத்திக்குக் கூட இங்கே திருப்பத்திலே இப்படித்தான் ஒரு பொண்ணைத் தூக்கிட்டாங்க.. கவனமா இருந்துக்கோம்மா.. போ போய் நேரே வூடு போயி சேரு..", என்று சொல்லிவிட்டாள் அந்தப் பூக்காரி..

அவளுக்கு அவள் கவலை.. ‘இந்தப் பொண்ணு ஏதாவது ஏடாகூடமாகச் செஞ்சுக்கத்தான் பீச்சுக்கு வழி கேக்குதோ..', என்று..

அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தனக்கு அட்ரெஸ் தெரியாத விஷயம் யாருக்காவது வேண்டாதவர்களுக்குத் தெரிந்தால் விபரீதம் என்று திகிலாய் உணர்ந்தாள் வேதா..

மெல்ல அங்கிருந்து அகன்று நேராய் ரோடு முடியும் வரை போனவளுக்குக் குழப்பத்தில் தலை சுற்றத் தொடங்கியது.

‘எத்தனைத் தெருக்கள் குறுக்குச் சந்துகள்.. மட்டி மடைச்சி என்று நம்மைச் சொல்லுவது சரிதான் போலும்.. எந்தத் தைரியத்தில் கையில் விலாசம் இல்லாமல் படியிறங்கினேன்?..ஃபோனில் வேறு சார்ஜ் இல்லை..வீட்டிலேயே விட்டாகிவிட்டது எப்படி வழியைக் கண்டுபிடிப்பது..’ என்று யோசித்தவளுக்கு மண்டைக் குழம்பித்தான் போனது..

மெல்ல அங்கிருந்த சிறு பூங்காவினுள் நுழைந்து உட்காரலாமா என்று யோசித்தவளுக்குப் பார்த்த டீ.வி. சீரியல்களும் சினிமாக்களும் இந்த மாதிரி தனிப்பட்ட இடங்களில் நடக்கும் விபரீதங்களைக் காண்பித்தது வேறு தேவையில்லாமல் அவள் மூளையில் ஒரு மினி சீரியலையே ஓட்டிக் காண்பித்தது.. எவ்வளவு நேரம் தான் நடப்பது என்று அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் போய் நின்று கொண்டு யோசித்தாள்.

‘ஊருக்கு ஃபோன் போட்டுப் பேசினால் விலாசம் தானே தெரியப் போகிறது.. ஆனால் அவள் தன் சொந்த விலாசம் கூடத் தெரியாமல் ஏன் வெளியே வந்தாள் என்ற கேள்வியும் எழும் அல்லவா?.. அவள் அப்பா அம்மா பதறியடித்துக் கொண்டு வருவார்களே.. எப்படிச் சமாளிப்பது?..’

அடுத்துக் காவல் துறைக்குப் போகலாமா என்று நினைத்தவளுக்கு.. அதன் பின் வரும் குழப்பங்களை யார் சமாளிப்பது என்று திகிலாகியது.. இப்படியே மதியம் போய்ச் சாயங்காலமானது..

தெருக்களாய் சுற்றி சுற்றி அலைந்து கால் வலித்தது தான் மிச்சம்..

'புருஷனாம் புருஷன்.. தாலி கட்டினால் போச்சா.. பொண்டாட்டி வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்பது கூடத் தெரியாது.. மாமனாராவது மதிய உணவிற்கு வந்தால் நம்மைக் கேட்டிருப்பார்.. இல்லை என்றதும் எங்கே போனாள் என்று தேட மாட்டாரா..’ என்ற நப்பாசையிலும் மண்விழுந்தது..

கண்கள் நீரைக் கொட்டவா என்பது போல் துருத்தி நிற்க..

தெய்வம் போல் ஒரு குரல்,

"ஏம்மா....ஹாய்.."

திரும்பியவளுக்கு அவர்களைத் தெரியவில்லை..

யாரோ ஒரு பெரியவரும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியும் காரை அவள் பக்கம் நிறுத்தி அவளைக் கூப்பிட்டனர்..

"இந்தாம்மா.. நீ மிஸ்டர் ராஜேந்திரன் மருமகள்தானே..?"

அமுத கீதமாய் ஒலித்தது அவர்கள் குரல்..

"சொல்லும்மா"

"ஆமாம்.. சார்...."

"இங்கே என்னம்மா நிக்கிறே.. கார் ரிப்பேரா.. மெக்கானிக்கை அனுப்பட்டுமா?.."

"இல்லைங்க சார்.. நான் காரில் வரலை.. அப்படியே காலார நடந்து கடைக்கு வந்தேன்.. இப்போ திரும்பணும்.. அதான் பஸ்ஸுக்கு காத்திருக்கிறேன்.."

"ஓ..சரி....நாங்க டிராப் செய்யட்டுமா.. நாங்க எங்க வீட்டுக்குத் தான் போகிறோம்.. இல்லாட்டி நீ திரும்பியும் ஆறு கிலோமீட்டர் வாக் போகப்போறியா?"

'கேட்டதும் இதயமே நின்று விடும் போலானது.. ஆறு கிலோமீட்டரா வந்திருக்கிறாள்.. இதோ அதோ என்று விட்டால் ஊரை விட்டு சொந்த ஊருக்கே அனுப்பி விட்டிருப்பார்கள் பாவிகள்.... முதலில்.. இவர்களுடனேயே போய்விடலாம் இல்லாவிட்டால் எங்கே போவது..’ என்று எண்ணி

"இல்லை சார்.. நிறைய நடந்துவிட்டேன் இன்றைக்கு.. அதான் பஸ்ஸுக்கு நின்றேன்.. நீங்கள் என்னை வீட்டில் விட்டு விடுகிறீர்களா?..", என்று சொல்லிவிட்டு படக்கென்று பின் கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்து கொண்டாள்.. எங்கே இவர்கள் விட்டு விட்டுப் போய்விட்டால் அதோகதி தான் என்று.

அடுத்தப் பத்து நிமிஷங்களில்.. தொண தொண என்று எதையோ பேசியபடி அவளை வீட்டு வாசலில் இறக்கிவிட்டனர் அவர்கள்.

அத்துடன் முடியவில்லை அவள் கெட்ட நேரம்.. அவர்கள் இருவரும் அவளுடனேயே வீட்டுக்குள் நுழைந்தனர்.

"ம் வந்தது வந்தாச்சு.. மிசர்ஸ். ராஜேந்திரனைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு போகிறோம்..", என்று சொல்லி அவளுடன் கூடவே நடந்தார்கள்..

ஹாலில் போட்டிருந்த பெரிய சோஃபாவில் அமர்ந்திருந்தனர் ராஜேந்திரனும் ருக்மணியும்.. இவர்கள் மூவரும் வருவதைக் கண்டு ஒன்றும் புரியாமல் விழித்தார் ராஜேந்திரன்.

"ஹாய் ருக்கு.. ராஜ்.. எப்படி இருக்கீங்க.... வழியிலே உங்க மருமகளைப் பார்த்தோம் அதான் அவளை டிராப் செய்துட்டு போலாம்னு வந்தோம்.."

"வாங்க வாங்க.. சாந்தா.. ரொம்பத் தாங்க்ஸ்.. இவளை எப்படித் தெரியும் உங்களுக்கு.. இன்னமும் நாங்க ரிசப்ஷன் கூடக் குடுக்கலை..", என்று கேட்ட ருக்மணியிடம்..

"அதான் காலையில் வாக் போகும் போது உங்க மருமக கோலம் போடுகிறதை பார்க்கிறோமே.. அவ வேணா எங்களை இதுவரை பார்த்ததில்லை.. பேசியதில்லை.. எங்களுக்குத் தினமும் பார்ப்பதால் அடையாளம் தெரிந்தது.. பாவம் ஏதோ திருவிழாவில் தொலைந்து போனா மாதிரி பஸ் ஸ்டாண்டில் தனியாய் நின்று கொண்டிருந்தாள்.." என்றார் அந்தச் சாந்தா..

ராஜேந்திரன் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய்த் தெரிந்தது..

"பஸ் ஸ்டாண்டிலா?..", அவள் வீட்டுக்குள் இருக்கிறாள் என்று எண்ணியவருக்கு அவள் வெளியே எங்கேயோ போயிருப்பதே தெரியாது.. இதில் யாரோ கொண்டு விடுகிறார்கள்..

"ஏம்மா கார் எடுத்துப் போகலை.. ரிப்பெரா.. ஒரு ஃபோன் செஞ்சிருக்கலாமே..", என்று அவளைக் கேட்க..

தர்மசங்கடமாய் அவரைப் பார்த்த வேதா..

"மாமா.. நானே போய்ப் பார்க்கலாம்னு போனேன்.. எங்கிட்ட ஃபோனெல்லாம் இல்லை மாமா.. இல்லை..அதில் சார்ஜ் இல்லை..அதான் எடுத்துகிட்டு போகலை. அட்ரெஸ் வேறு மறந்துடுச்சா.. பயந்து போயிட்டேன்.. நல்ல வேளையா சாருரும் மேடமும் என்னைத் தெரிந்து கூப்பிட்டாங்க.. அதான் அவங்க கூட வந்தேன்..", என்று வெளிப்படையாய் தன் முட்டாள் தனத்தை உரைத்தாள் வேதா.

அவளுக்கே அவள் செய்த காரியத்தை நினைத்து ஆத்திரம் வந்தது.. எப்படிக் கிளம்பினோம் ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் என்று குறுகிப் போய் நின்றாள்.

"பதட்டம் குறையாமல், "நல்ல வேளை ராமன் உங்க கண்ணிலே பட்டிருக்கா.. இல்லாட்டி என்னாயிருக்கும்.. ருக்கு மருமக என்ன செய்யறான்னு கூடப் பார்க்காமல் என்ன நடக்குது இங்கே..?", என்று மனைவியிடம் பாய்ந்தார்..

வந்திருந்த வசந்தாவோ சாந்தாவோ அவருக்கு ருக்குமணியைப் பிடிக்காது போலும்,

"ஏன் ராஜ் கோவிச்சுக்கிறீங்க ருக்குவுக்குக் கிளப்பிலே சோஷியல் சர்வீஸ் ஆயிரம் வேலை இருக்கு.. பாவம் அவங்களுக்கு எப்படித் தெரியும்.. அந்தோ பரிதாபம் உங்க மருமகளுக்கு வீட்டு அட்ரெஸ் கூடச் சரியாத் தெரியாதுன்னு அவங்களுக்குத் தெரியுமா என்னா..", என்று மெல்ல வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினாள்..

"சரி சாந்தா நாம கிளம்பலாம்", என்று அவர் கணவர் தன் மனைவியின் குணமறிந்து அவளைக் கிளப்பிச் செல்வதில் முனைப்பானார்..

"சரி..சரி.. போகலாம்.. சரி ருக்கு ராஜ்.. சீ யூ லேடர்..", என்று விடை பெற்று சென்றனர் தம்பதியர்..

‘சீ யூ.. நெவர்..' என்று மனதில் சொல்லிக் கொண்டு கடுப்பாய் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய மருமகளை முறைத்தாள் ருக்குமணி..

அவர்கள் சென்று மறையும் வரை சும்மாயிருந்த ராஜேந்திரன்..

மெல்லத் திரும்பினார் தன் மனைவி பக்கம்..

'அய்யோ ஐயனார் திரும்புறார்.. நாம செத்தோம்.. ஆடித் தள்ளிடுவார்..', என்று நினைத்துப் பயந்தபடி.. நைசாக அவரைக் கவனியாதது போல்

வாசல் பக்கம் பார்த்து..

"பிரகாஷ் பிரகாஷ்.. என்னங்க பிரகாஷ் வந்தா மாதிரி இருக்கு.. இருங்க இதோ கார்டனில் பார்த்துட்டு வரேன்..", என்று நைசாய் தப்பி ஓடினாள் ருக்மணி.

ராஜேந்திரன் மருமகளைப் பார்த்து சற்று கோபத்துடன் ,"இதோ பார் வேதா.. இது தான் முதலும் கடைசியுமாய் இருக்கணும்.. நீ எங்கே போறே எதுக்குப் போறேன்னு யார் கிட்டயாவது சொல்லாமல் போகக் கூடாது..

“அப்புறம்.. நளைக்கு உனக்கு ஒரு புது செல்ஃபோனுக்கு ஏற்பாடு செய்யறேன்.. இனிமேல்.. எங்கே போகணும்னாலும் காரை எடுத்துட்டு டிரைவர் துணையோடு போம்மா.. ஏதாவது ஒன்னுன்னா நானில்லை என் தங்கைக்கும் மச்சானுக்கும் பதில் சொல்லணும்.. சரியா..", என்று சொல்லிவிட்டு அவரும் அங்கிருந்து சென்றார்..

‘அப்பாடி.. தப்பிச்சேன்.. இவங்க ஆளாளுக்கு ஆட்டி வைக்க நான் என்ன பொம்மையா.. இப்படி செய் அப்படி செய்னு கண்டிஷன்.. நல்லதுக்கா இருந்தாக் கூட.. சில சமயம் நமக்கென்று ஒரு மனசு இருக்குன்னு பார்க்கலை பார்..', என்று நினைத்தபடி சமையலறைக்கு அருகில் இருந்த ஸ்டோர் ரூமில் தான் வாங்கிய அனைத்தையும் எடுத்து வைக்கத் தொடங்கினாள் வேதா...

**************************************************************************
 
Kothaisuresh

Well-known member
பாவம் வேதா, ராஜேந்திரனும் நல்லதுக்குதான் சொல்றார்
 
VPR

Member
நடந்ததை எல்லாம் அறியும் போது பிரகாஷ், வேதாவை கோபிப்பானா அல்லது கண்டுக்காமல் விட்டுடுவானா?
 
Mohanapriya M

Vedha va ninacha konjam kastama tan iruku epudi ivangala elam samalika porale nallavelai mamanarathu aruthala irukaru 🙄
 
Chellam

Well-known member
இது தெரிந்தால் பிரகாஷ் ஒரு ஆட்டம் ஆடுவாரே.
 
Top