கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 9

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 9

நாட்கள் வேகமாகக் கடந்தன.. சத்யாவின் வாழ்க்கையில் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லை.

காலையில் கதிர் கிளம்பிப் போனால் வருவதற்கு இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிடும்.. விடியற்காலை நான்கு மணிக்கே எழும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் கதிர்.

கோழி கூவும் முன்னரே வயல்வெளிகளைப் பார்க்க அவன் தந்தை சக்திவேலுடன் செல்பவன், எட்டு மணி அளவில் தான் வீடு திரும்புவான்.

காலையில் வெறும் வயிற்றில் சத்துமாவு கஞ்சியைக் குடிப்பவன்.. பிறகு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து குளித்துக் காலை பலகாரத்தை உண்டுவிட்டு, தன்னுடைய கரும்பு ஆலைக்கும், ஜவ்வரிசி தொழிற்சாலைக்கும் செல்லுவான்..

இடையில் நேரம் கிடைக்கும்போது ரைஸ் மில்லையும் பார்த்துக் கொள்வான்.. மதிய உணவு வரை இப்படி அங்கேயே பொழுதை கழித்து விட்டு..

மூன்று மணிக்கு மேலே.. தங்கள் கலைக்கல்லூரிக்கு செல்பவன்.. அங்கே மாலை ஆறு மணி வரை செய்ய வேண்டிய வேலைகளையும், தன் கையெழுத்துக்காகத் தேங்கி நிற்கும் கோப்புக்களையும் பார்த்து விட்டு.. பிறகு மீண்டும் தன்னுடைய தொழிற்சாலைக்கே திரும்பி சென்று முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு எட்டு மணி அளவில் இரவு உணவுக்கு வருவான்.

அதன் பின்னர் சற்று நேரம், அப்பத்தா, அவன் அப்பா மற்றும் ஊரில் இருந்தால் வெற்றியுடனும் அன்றைய நடப்புக்களைப் பேசிவிட்டு இரவு பத்து மணிக்கு உறங்க செல்பவன் அடுத்த நாள் காலையில் மீண்டும் அவனைப் பார்க்கலாம்.. இது தான் அவனுடைய தினப்படி அட்டவணை.

கதிருக்கு அவ்வளவாகக் கல்லூரி விஷயத்தில் ஆர்வம் இல்லாமையால், வெற்றி மேற்படிப்பை முடித்துவிட்டு வந்த பின், இந்த ஒரு வருடமாகக் கல்லூரி நிர்வாகத்தில் அவனை நுழைந்திருக்கிறான்.

ஆனாலும் அவன் வயதையும், அனுபவத்தையும் கணக்கிட்டு அவனைத் தனியாளாக விட்டு விடாமல் கதிரும் மாலை வேலையில் கல்லூரிக்கு செல்பவன்.. அத்தோடு விடாமல் அனுபவம் மிகுந்த அவனுடைய ஓய்வு பெற்ற பள்ளி வகுப்பாசிரியரை அங்கே தலைமை ஆசிரியராக நியமித்து வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.

அன்று காலை பத்து மணி அளவில் கதிர் அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான்.. அவர்கள் வயல்களில் அன்று நாற்று நட்டுக் கொண்டிருந்ததைத் தந்தையுடன் பார்வையிடச் சென்றவன், சற்று தாமதமாகவே வீட்டுக்கு வந்தான்.

தன் வெள்ளை நிற முழுக்கை சட்டையைத் தேடியவன்.. அங்கே அலுமாரியில் காணாமல் எல்லாவற்றையும் கலைத்து தேடி ஓய்ந்தவன், கடைசியில் வேறு வழியில்லாமல் கோபத்துடன் இளம் நீல நிற சட்டையைக் கருப்பு பேண்ட்டுக்குத் தோதாக அணிந்தவன் கீழே இறங்கி வந்தான்.

சாப்பாட்டு மேஜையில் பலகாரத்தை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அப்பத்தாவைக் கண்ட கதிர், "ஏன் அப்பத்தா என்னோடு வெள்ளை சட்டையைப் பார்த்தியா?.. ஆறு வெள்ளை கலர் சட்டை இருந்தாலும், சமயத்துக்கு ஒண்ணு கூட அகப்பட மாட்டேங்குது.. எங்கத்தான் போச்சோ?.. எங்கன எடுத்து வைச்சே?.. எல்லாமுமா இஸ்திரிக்கு கொடுத்திருக்கே?..

"பாரு.. இன்னிக்குன்னு பார்த்து எனக்குத் தொழிற்சாலையில் கணக்கு பார்க்க பெரிய ஆபிசருங்க எல்லாம் வர்றாங்க.. வெள்ளை சட்டை போடலாம்னா காணலை.. நீ என்னத்த பார்க்குற அப்பத்தா.. அந்தக் குப்பனை கொஞ்சம் அதட்டி வையி.. நேரங்காலத்துல துணியெல்லாம் கொடுக்காம இப்படியா?.." என்று கடுகடுத்தான் கதிர்.

"ஏலேய்.. கதிரு.. நல்லாயிருக்குது கதை.. காடு வா வாங்குது.. வீடு போ போங்குது?.. இன்னும் எத்தனை நாளு நான் உன் சொக்காயும், நிஜாரையும் இருக்கான்னு பார்க்குறது?.. எனக்கோ வயசாச்சி போச்சு.. உன் பொஞ்சாதியை எடுத்து வைக்கச் சொல்லு.. அதுக்குத்தான உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுருக்கு.. பாரு அந்தப் புள்ளைய விடிஞ்சி எத்தனை நேரமாச்சு.. சூரியன் உச்சிக்கு வர பொழுதாச்சு.. இன்னும் அவளுக்குப் பொழுது விடியலையாக்கும்..' முகத்தை நொடித்தார் கண்ணாத்தா.

"அய்யோ அப்பத்தா.. விடுவியா.. நான் உன்னைத்தானே கேட்டேன்.. எதுக்கு அவளைக் கேக்குறே.. விடு விடு.. எனக்கு நேரமாச்சு.. பலகாரத்தை எடுத்து வை.. ஒரு வாய் அள்ளி போட்டுட்டு ஓடணும்.."

"அதுக்குத்தான்டா பேராண்டி சொல்லுதேன்.. வந்த மகாராசி இதெல்லாம் பார்த்துட்டா நான் நிம்மதியா அக்கடான்னு தலையைச் சாய்ப்பேன் இல்ல.."

"ஹாய் அப்பத்தா.. குட்மார்னிங்க்.. என்னத்தை நான் பார்த்துக்கணும்.. சொல்லுங்க எனக்கும் போர்தான் அடிக்குது.. எனி ஹெல்ப்.." என அங்கே வந்த சத்யா அப்பத்தாவை நட்புடன் பார்த்தவள்.. அங்கே கதிர் இருப்பதைக் கண்டு..

"ஹாய் கதிர்.. குட்மார்னிங்க்.. என்ன ஃபாக்டிரிக்கா.. இத்தனை நேரம் ஆளு வேலைக்குப் போயிருப்பீங்களே.. இன்னிக்கு லேட்டா?.. தூங்கிட்டீங்களா.." பொதுப்படையாகக் கேட்டாள்.

"குட் மர்னிங்க் சத்யா.." என்றான் கதிர்.. அவள் சொன்ன அந்தக் காலை வணக்கத்துக்கே மகிழ்ந்து போய்..

பாவம் அவன் என்ன செய்வான்.. அவளுடன் பேசியே ஒரு வாரம் ஆகப் போகிறது.. அவள் நட்புடன் ஒற்றை வார்த்தை அவனை வாழ்த்தியதிலேயே மகிழ்ச்சி அடைந்தான்.

"என்ன அப்பத்தாகிட்ட ஆர்கியூ பண்ணிட்டு இருக்கீங்க?.. எனி ஃப்ராப்ளம்.. ஷேர் பண்ணாலாம்ன்னா சொல்லுங்க.."

"ஆமாம்டியம்மா.. பிராப்ளம்தான்.. காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைச்சா.. என் பேரன் குடியும் குடித்தணுமா வாழ்வான்னு பார்த்தா.. இங்கே எல்லாமே பிராப்ளம்தான்..

"ஏன் சொல்ல மாட்டே?.. குட் மார்னிங்க்கா?.. மணி என்னா ஆவுது பார்த்தியில்லை?.. காலையில வெள்ளன எழுந்திருக்க வேண்டாம்.. சரி.. ஆனா கொஞ்சம் முன்ன பின்னால எழுந்தாவது உன் புருஷனுக்கு என்ன வேணும்னு பார்க்கலாமில்லையா?..

"பாரு.. இன்னிக்கு ஆபிசில பெரிய மனுஷங்க எல்லாம் வர்றாங்களாம்.. வெள்ளை சொக்காயைக் காணமேன்னு தேடி அலைஞ்ச புள்ளை என்னைக் கேட்குது.. இந்தத் தள்ளாத வயசுல இதெல்லாம் இன்னும் எத்தனை நாளுக்கு நான் பார்க்கணும் சொல்லு?.. பொண்டாட்டியா லட்சணமா அவன் உடுப்பை எல்லாம் எடுத்து வைக்க மாட்டியா?.." என்று கண்ணாத்தா படபடக்க..

"இதெல்லாம் நான் எதுக்குப் பார்த்துக்கணும்.. ஏன் அவருக்கு அவருடைய சட்டையை எடுத்து வைச்சிக்கத் தெரியாதாமா?.. அதுக்கெல்லாம் வேறு ஆளை பாருங்க.." அத்தனை நேரம் நட்புடன் பேசிக் கொண்டிருந்த சத்யா இப்பொழுது எதிர் குரல் கொடுத்தாள்..

"அப்பத்தா.. தெரியாத்தனமா உங்கிட்ட வாயை விட்டுட்டாங்க.. விடு சத்யா.. நான் பார்த்துக்கறேன்.." வம்பை வளர்க்க விரும்பாமல் கதிர் இடையிட.. அவனை அவர்கள் இருவருமே லட்சியம் செய்யவில்லை.

"அடியே பேத்தி.. பின்னே நான் இதுக்கெல்லாம் என் பேரனுக்கு வேற ஆளையா பார்த்து வைக்க முடியும்.. நீதானே அவனுடைய பெண்டாட்டி.. இனிமேல் இதெல்லாம் நீதான் பொறுப்பா பார்த்து வைக்கணும்.. சொல்லிட்டேன்.." கண்ணாத்தா கண்டிஷன் போட..

"கதிர்.. வாட் இஸ் திஸ்.. உங்க ஷர்ட்டை பார்த்து வைக்கத் தான் நான் உங்களைக் கல்யாணம் பண்ணினேனா?.. ஸ்டுபிட்.." சத்யா போர் கொடியை உயர்த்தினாள்.

"ஹாய் எவ்ரி ஒன்.. குட் மார்னிங்க்.." என்றபடி அங்கே வந்த வெற்றிவேல்.. அவர்கள் முகத்தைப் பார்த்து விட்டு..

"என்ன சீரியஸ்ஸா டிஸ்கஷன் ஓடுது போல.. சம்திங்க் ராங்க்?.." கேள்வியாகக் கதிரை பார்த்தான்.

"வாடா என் சின்ன தொரை.. இன்னும் ஆளை காணமேன்னு பார்த்தேன்.. வா வந்து உன் தீர்ப்பை சொல்லு.."

"என்ன செல்ல அப்பத்தா.. என்னாச்சு.. இன்னிக்கு குளுகுளுன்னு இருக்கே??.. அண்ணன் எதாவது ராங் காட்டின்னா எங்கிட்ட சொல்லு.. ஒரு கை பார்த்திடறேன் அப்பத்தா.."

தன் கை சட்டையை மடித்து விட்டவன் கதிரை பார்த்துக் கண்ணடித்தான்.

கதிர் அவனைப் பார்த்து சிரித்தவன், "அப்பத்தா.. அவன் உன்னைக் கிண்டலடிக்கிறான்.. அந்தக் கரண்டியை எடுத்து அப்படியே அவனை நல்லா இரண்டு மொத்து மொத்துங்க."

அதுதான் சாக்கு என அப்பத்தா கரண்டியை தேட.. கதிர் எடுத்துக் கொடுக்க.. வெற்றியோ சத்யாவின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

"அய்யோ சத்யா.. இல்லை இல்லை அண்ணி.. என்னைக் காப்பாத்து.. இவங்க கூட்டணி வைச்சா நான் டெபாசிட் இழக்க வேண்டியதுதான்.."

"யாம் இருக்கப் பயமேன்.. இந்த அண்ணி உன்னை ரட்சிப்பாள் மகனே.. அடியேன் காலில் பக்தன் விழுந்தால் அவனைக் காத்தருள்வாள் இந்த அம்மா.. இல்லையில்லை.. சத்யாம்பிகை.." எனத் தன் கைகளை ஆசிர்வதிப்பது போலப் பாவிக்க..

அங்கே சிரிப்பலை எழுந்தது.

அதில் ஆச்சர்யம் என்னவென்றால் பேரன்களுக்கு இணையாகக் கண்ணாத்தாவும் பெரிதாக நகைத்தார்.

சிரித்து ஓய்ந்தவர்கள்.. பின்னர்..

"என்னதான் இருந்தாலும் வீட்டுல இளசா ஒரு பொண்ணு இருந்தால் பாரு எவ்வளவு நல்லா இருக்குது.. வீடே கலகலன்னு இருக்குது.."

பேசியபடியே உணவருந்த சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவர்களுக்குக் காலை பலகாரத்தைச் சுடச்சுட பரிமாறினார் கண்ணாத்தா.

"என்னடா.. இன்னிக்கு இவ்வளவு நேரமாச்சு.. இவ்வளவு லேட்டாவா போறது?.. படிப்பு விஷயத்துல நேரம் தவறாமல் நாம இருக்கணும்.. நமக்கே ஒழுக்கம் இல்லைன்னா நம்ம கல்லூரி பசங்க கிட்ட அதை எப்படி எதிர்பார்க்கலாம்?.."

அத்தனை நேரமாகச் சிரித்துக் கொண்டிருந்த கதிர் இப்பொழுது சற்று இறுக்கமானான்.

"இல்லைண்ணா.. இன்னிக்குக் கொஞ்சம் தாமதமாயிடுச்சு.. அட்மிஷன் டயமில்லையா?.. அதான் நம்ம பிரின்சி எல்லாருடைய லிஸ்ட் எல்லாம் எனக்கு மெயில் அனுப்பி இருந்தாரு.. கொஞ்சம் அதைப் பைனலைஸ் பண்ண வேண்டியதா போச்சு.. அத்தோடு புது லெக்ச்சர் போஸ்ட்டுக்குக் கொஞ்சம் அப்ளிகேஷன் வந்திருந்ததா அதையெல்லாம் பார்த்திட்டு இருந்தேன்..

"நீயும் ஒரு முறை பார்த்திடுண்ணா.. அப்புறம் பைனலைஸ் பண்ணிடலாம்.."

"சரி.. எப்படியும் பிரின்சி எனக்கும் அனுப்பி வைச்சிருப்பாரு.. கொஞ்சம் தொழிற்சாலையில இன்னிக்கு வேலை இருக்கு.. மதியத்துக்குள்ள உனக்கு செக் பண்ணிட்டு அனுப்பி வைச்சிடறேன்.." என்றான் கதிர்.

"ஹேய் வெற்றி.. அதென்ன காலேஜ்.. அது இதுன்னு.. ஒருவேளை டுடோரியல் காலேஜ் ஏதாவது நடத்திறீங்களா?.. பரவாயில்லை உங்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும்.." அதுவரை அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சத்யா சும்மாயில்லாமல் வாயை விட்டாள்.

"டுடோரியல் காலேஜ்ஜா.. ஹேய் அண்ணி.. இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்.. எங்களை என்னன்னு நினைச்சே.. எங்க அண்ணனை யாருன்னு நினைச்சே.." வீறு கொண்டான் வெற்றி.

"விடு வெற்றி.. அவளுக்கு நாம என்ன தொழில் பண்ணறோம்.. இதெல்லாம் இன்னும் தெரியாது.. இப்போதானே அவ வந்திருக்கா.. கொஞ்சம் நாள் போகட்டும்.. எல்லாம் தெரியும்.." தன்னை மட்டம் தட்டவதை கண்டு கொளாமல் கதிர் பேச்சை மாற்றினான்.

ஆனாலும் உள்ளுக்குள் அவனுக்குச் சற்று வருத்தமே.. கல்யாணம் ஆகி இந்த ஒரு மாதத்தில் தன்னைக் கணவனாக என்ன வேண்டாம்.. சக மனிதாகக் கூட ஏற்கப் பிடிக்காதவளை அவனும் தான் என்ன செய்ய முடியும்.. அவனால் அப்பொழுது வருத்தப்பட மட்டுமே முடிந்தது.

ஹோ.. ஹோவெனச் சிரித்த வெற்றி.. "ஓ.. அப்படியா விஷயம்.. அம்மாவுக்கு நேரமே இல்லையா??.. ஊ..ம் ஒத்துக்கிறேன்.. ஒத்துக்கறேன்.. நீங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிங்க.. இதெல்லாம் பேச நேரமிருக்காது தான்.." விஷமாகச் சிரித்தான் வெற்றி.

முகம் சிவந்து முறைத்த சத்யாவை பார்த்த கதிர்.. 'அய்யோ.. நான் வேற அர்த்தத்துல சொன்னா.. இவன் வேறு சொதப்பறான்.. இவ மண்டகப்படி நடத்துவதற்குள் நாம் தப்பிக்க வேண்டியதுதான்..'

"வெற்றி.. சாப்பிடாச்சுன்னா.. கிளம்பு.. எனக்கும் நேரமாச்சு.." என பேச்சை அப்படியே கத்திரித்து விட்டு எழுந்து கொண்டான்.

"ஒன் மினிட் கதிர்.. எனக்கும் இங்கே வீட்டுல கிடந்து போர் அடிக்குது.. அது எந்தக் காலேஜ்ஜுன்னாலும் பரவாயில்லை.. நானும் கொஞ்சம் நாள் வரட்டுமா?.. இன்ஃபாக்ட் நானே இங்கே சுத்து பக்கத்துல ஏதாவது ஆபிஸ் இருந்தா போகலாம்ன்ணு இருந்தேன்.. இப்போ உங்க வீட்டிலேயே இத்தனை ஆபீஸ் இருக்கும்போது நான் எதுக்கு வெளியில போகணும்.. எதையாவது ஒண்ணை நான் பார்த்துக்கறேன்.. என்ன சொல்லறீங்க கதிர்.."

என்ன சொல்லுவான் கதிர் பாவம்.. இன்னும் அவளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.. 'என்னவோ இவள் அடுத்தவன் வீட்டுத் தொழில்கள் போல நினைக்கிறாளே?.. உரிமையா, நம்ம வீட்டு தொழில்களைப் பார்த்துக் கொள்ளவா எனக் கேட்காமல்..'

'அதுவரையில் சரிதான்.. வெளியே உத்தியோகத்திற்குப் போக வேண்டும் என்று சொல்லாமல்.. வீட்டுத் தொழில்கள் ஒன்றில் பங்கு கொள்கிறேன் என்று தானே சொன்னாள்.. இதுவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் தான்.. என்னுடன் இவள் உடன் வந்தால் என்னைப் புரிந்து கொள்ள அவளுக்கு ஒரு அவகாசம் கிடைக்கும்’.

'ஆனால் அப்பத்தா என்ன சொல்லுவார்களோ?..'

அவன் வாயைத் திறக்க வேண்டிய அவசியமே இல்லாமல்..

"அம்மாடி.. சத்யா.. இதெல்லாம் இந்த வீட்டுக்கு சரிபடாதும்மா.. உங்க பட்டிணத்துல பொம்பளை புள்ளைக ஆபீஸுக்குப் பேகை மாட்டிட்டுப் போறது நாகரீகமா இருக்கலாம்.. ஆனால் அதெல்லாம் இங்கன முடியாதும்மா.. கல்யாணம் கட்டிட்டு வந்த மருமவளை வேலைக்கு அனுப்பினதா இந்தக் கண்ணாத்தா பரம்பரையில் சரித்திரமே இல்லை.. அத்தோடு நமக்கு அதுக்கான அவசியமும் இல்லைம்மா.." கண்ணாத்தா தன் கருத்தை வெளியிட்டார்.

கதிரோ அப்பத்தாவை அறிந்திருந்தவன் சத்யாவை 'இதில் நான் கருத்து சொல்லுவதற்கில்லை..' என ஒரு வெற்றுப் பார்வை பார்க்க

கதிரின் பார்வையைக் கண்டு கொண்ட சத்யா, 'இவன் அப்பத்தாவை மீற மாட்டான்..' என்று வெற்றியை பார்த்தாள்.

அவனோ உதட்டைப் பிதுக்கினான்.. அப்பத்தாவை மீறி அண்ணனே எதுவும் சொல்லாத போது, நான் மீறி கையைசைக்க முடியாது எனத் தன் பார்வையில் உணர்த்தினான்.

'உஹூம்.. இவர்கள் வேலைக்கு ஆகமாட்டார்கள்.. நேரடியா அப்பத்தாவிடம் மோத வேண்டியதுதான்..'

"அப்பத்தா.. நான் வேலைக்குப் போகலாம்ன்னு இருக்கேன்.. அவசியத்துக்காக வேலைக்குப் போகலை.. எனக்கு வீட்டுலு ஒரே போர் அடிக்குது.. அத்தோட நான் படிச்ச படிப்பும் வீணாகுது.." என்றாள் மொட்டையாகச் சத்யா.

"ஏம்மா பேத்தி.. நீ இப்போ என்னா சொல்ல வார்றே?.. நான் வேலைக்குப் போவேன்னு எங்கிட்ட அனுமதி கேக்க வர்றீயா.. இல்லை ஒப்புக்கு ஒரு வார்த்தை என் காதுல போட்டு வைப்போன்னு சொல்லுறீயா?.."

'ஓ..கிழவி..நல்ல கெட்டிதான்.. நான் ஜஸ்ட் இன்ஃபார்ம் செய்ய வந்ததை நல்லாவே புரிஞ்சிட்டு என்னை மடக்கப் பார்க்குது?.. இந்தச் சத்யா யாரு?.. எங்கிட்டையா?..'

"இல்லை அப்பத்தா.. நீங்க எப்படி வேணுமானாலும் எடுத்துக்கங்கோ.. நான் வீட்டிலும் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.. எனக்கு ஏதாவது ஒரு அவுட்லெட் வேணும்.. இல்லைன்னா நான் துரு பிடிச்சா மாதிரி ஆகிடுவேன்..” என்றவள்..

"கதிர்.. உங்க காலேஜோ.. அது எந்தக் காலேஜ்ஜுன்னாலும் எனக்கு ஓ.கே.. எனக்குப் படிப்பு சம்மந்தமா இருந்தா பெட்டர்.. இந்தச் சுகர் மில், ரைஸ் மில் இதெல்லாம் ஐயாம் ஜீரோ.. நமக்கு இதெல்லாம் ஒத்து வராது.. ஏன்னா நான் படிச்சவ.. எனக்குப் பொருத்தமா இது பெட்டர்ன்னு தோணுது..

ஒரு வேளை உங்களுக்கு இதுல இஷ்டமில்லைன்னா.. நான் வேற எங்கையாவது சேலம் சிட்டியில வேளை டிரை பண்ணுறேன்.. எங்கப்பா சிட்டிக்கும், இந்த வில்லேஜ்ஜுக்கும் ரொம்ப டிஸ்டன்ஸ் இல்லைன்னு சொன்னாரு.." என்றாள் கறாராக.

என்ன சொல்லுவான் கதிர்.. தலையை ஆட்டி வைத்தான் வேறு வழியில்லாமல்.. 'அப்போ இவளுக்குக் காலேஜ் ஒண்ணுதான் வேலைப் போல.. என்ன மாதிரி இப்படிக் கரும்பாலை, ரைஸ் மில் பார்க்கறவன் எல்லாம் கேணக் கிறுக்கன்.. விவசாயம் நாட்டுல படுத்தா இந்தப் படிச்ச மேதாவிகளுக்குத் தெரியும்..'

அவன் மனதை படித்தது போல அப்பத்தா தொடங்கி விட்டார்.

"அம்மாடி என் பேரன் பொஞ்சாதியே.. அது என்ன எப்பப்பாரு படிச்சவ படிச்சவன்னு பெருமை பீத்திக்கறே.. இங்க நாங்களும் கொஞ்சம் படிச்சவங்கதான்..”

"என்னவோ ஊர் ஊலகத்துலேயே நீ மட்டும் தான் படிச்சவ மாதிரி இந்த அலட்டு அலட்டுறே.. நிறை குடம் தளும்பாதுன்னு எங்க ஊர்ல சொல்லுற வழக்கம்..

"இப்படிப் படிச்சவங்க எல்லாம் காலேஜ் வேலைக்கும், கலெக்டரு வேலைக்கும் போகணும்ன்னு ஆசைப்பட்டா.. பொறகு யாரு விவசாயத்தைப் பார்ப்பாங்களாம்.. நாங்களெல்லாம் அருவெறுப்பு பார்க்காம அந்தச் சேத்துல இறங்கிறதுனாலத்தான் நீங்க பட்டிணத்துக்காரங்க பகட்டா உங்கார்ந்து திண்ண முடியுது.. மொத்தமா நாங்க வேலையை நிறுத்தினா.. அப்போ தெரியும் சங்கதி..

“வெயில்லையும், மழையிலும் கஷ்டப்பட்டுப் பாடுபடும் விவசாயிக்கு கடைசில கிடைப்பது என்ன?.. உழைச்சத்துக்குக் கூட அவங்களுக்கு வரவு இல்லை.. நடுவில யாரோ ஒருத்தர் லாபம் பார்க்கிறாங்க.. அப்படித்தான் இந்த உலகம் இருக்கு.. எதுவுமே நேரடியா அனுபவித்து பார்த்தாதான்மா அவங்க அவங்க கஷ்டம் புரியும்..” என்ற கண்ணாத்தா..

"அது என்னாம்மா வார்த்தையை அப்படி விடுறே.. எப்பப்பாரு எம் பேரனை நக்கலடிக்கிறது.. இந்தக் குத்தி காமிக்கிற வேலையெல்லாம் இங்க வேண்டாம்.. நீ நினைக்கிறா மாதிரி என் பேரன் படிக்காத தற்குறி இல்லை.. அவனும் பண்ணெண்டு படிச்சிருக்கான்.. என்னமோ அந்தச் சமயத்துல அவனுக்குச் சூழ்நிலை சரியில்லை..

"வீட்டை பார்த்துக்க விவசாயத்துல இறங்கிட்டான்.. ஆனாப் பாரு.. நீ போறேன்னு சொல்லுறீயே அந்தக் காலேஜ்ஜூ.. அங்கே போய்ப் பாரு.. உன்னை மாதிரி எத்தனைப் பேருக்கு எம் பேரன் கூலி கொடுக்கறான்னு.. அவனுக்குக் கீழே இந்தச் சுத்து வட்டாரத்துல ஆயிரம் பேரு கைக்கட்டி வேலை பார்க்கறாங்க.. என்னவோ பேச வந்துட்டா.."

பொரிந்து கொட்டினார் கண்ணாத்தா..

"விடு அப்பத்தா.. அந்தப் புள்ளைக்குப் பிடிச்சதா செய்யட்டுமே.. எதுக்குத் தேவையில்லாம வீட்டுக்கு வாழ வந்தவகிட்ட மல்லுக்கு நிற்கறே?.." கதிர் சமாளிக்க..

சத்யாவோ எரிச்சலானாள்.. சாதாரணமாக ஒரு வேலைக்குப் போவதற்கு இப்படி ஒரு லெக்ச்சரா..

"அப்பத்தா.. நான் என்னோட விஷயத்தைத்தான் சொன்னேன்.. எனக்கு வேலைக்குப் போவதில் இன்ட்ரெஸ்ட்டு.. இதுக்குப் போய் இவ்வளவு ஸீனா?."

"வாடி பட்டிணத்து மருமவளே. .நானாடி சீனு போடுறேன்.. என்னமோ போர் அடிக்குது போர் அடிக்குதுன்னு சொல்லிட்டு திரியறியே.. முதல்ல நாளையில் இருந்து இந்த வீட்டை ஒழுங்கா பார்த்துக்கோ.. காலையில உன் புருஷனுக்கும், மாமானாருக்கும் கஞ்சி வச்சி கொடுக்கறதுலேர்ந்து ஆரம்பி.. காலை பலகாரம், மதிய சாப்பாடு, இராத்திரிக்கு டிபனு எல்லாம் செய்து பாரு.."

"ஹாங்க்.. இதுல நடுநடுவுல வேலையாள்களைக் கட்டி மேய்க்கணும்.. ஆடு, மாடுகளுக்கு வேண்டியதை செய்யணும்.. என்ன செய்யறீயா?.. நல்லா பொழுதும் போகும்.. உன் இடுப்பும் நோகும்.. அத்தோடு என் வேலையும் குறையும்.. என்ன சொல்லறே?.." கெத்தாகச் சொன்ன கண்ணத்தாவை..

என்னத்தைச் சொல்லுவாள் சத்யா.. 'என்னடா இது கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையா இருக்கு.. ஜஸ்ட் ஒரு வேலைக்குப் போகலாம்ன்னு நினைச்சா.. அதுக்கு இவ்வளவா??.. இது எதிரில நமக்குப் பொழுது போகலைன்னு சொன்னது தப்பா.. சரியான விவரம் பிடித்த கிழவியா இருக்கு..'

ஹாஹாவெனச் சிரித்தான் வெற்றி.. "என்ன அப்பத்தா.. எங்க அண்ணிக்கு சவால் விடுறீங்களா?.. இதெல்லாம் சத்யா அண்ணிக்கு ஜூஜூபி.. அவங்க என்ன உங்களை மாதிரி குண்டு சட்டியில குதிரை ஓட்டினவர்களா.. பட்டிணத்துல படிச்சவங்க.. இதுக்கெல்லாம் அசர மட்டாங்க.."

"அப்படியா.. இந்தாம்மா பேத்தி.. இந்தா பிடி.. இந்த வீட்டு கொத்துச் சாவி.. இனிமேல் நீதான் எங்க எல்லோரையும் பார்த்துக்கணும்.. நீ மெத்த படிச்சவ.. இதெல்லாம் உனக்கு ஒரு மேட்டரா இருக்காது.. சின்னவன் சொல்லறபடி உன்னால முடியும்.. பிடிம்மா.. இனி நான் அக்கடான்னு என் டிவி சீரியல்களைப் பார்த்திக்கினு விழுந்து கிடக்கலாம்.. போற காலத்துக்குப் புண்ணியமாவது வரும்.."

தன் கண்டாங்கி புடவை தலைப்பில் முடிந்து வைத்திருந்த கொத்து சாவியை இடுப்பில் இருந்து உருவி எடுத்தார் கண்ணாத்தா.

இப்பொழுது பேரன்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

'டேய் வெற்றி.. உன்னை நான் ஹெல்ப் கேட்டேனா?.. இது எனக்கும் எங்க அப்பத்தாவுக்கும் இடையில நடக்குற பாசப் பேச்சு.. அவங்க எதுவோ சொல்லுறாங்க.. நான் கேட்டுட்டு போறேன்.. நீ ஏன் டா கொழுந்தானாரே.. நடுவுல உன் வேலையைக் காட்டுறே.. கொஞ்சம் அடங்கு தம்பி.." என்றவள்..

"அய்யோ.. அப்பத்தா.. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்க இப்படிக் கொத்து சாவியைக் கையில கொடுக்கிறீங்க.. நான் சும்மா வேலைக்குப் போகலாம்ன்னு கேட்டேன்.. உங்க பேரனுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும்.. பாவம் அவரும் தான் எத்தனை பிசினஸ் பார்க்குறது?.. கொஞ்சம் நானும் பொறுப்பெடுத்து கொண்டா அவருக்கு வேலைப் பளு குறையும்ன்னு சொன்னேன்..

"அத்தோட அப்பத்தா.. நீங்க சொல்லற வேலையெல்லாம் ஒண்ணும் பெரிய வேலையெல்லாம் இல்லை.. உங்களுக்கு வயசாகி போச்சு இல்லை.. அதான் கொஞ்சம் திணறுறீங்க.. ஒண்ணு பண்ணுவோம்.. நாம ரெண்டு பேரும் ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்குவோம்.. “

"உங்களுக்கு வேலைகளைச் சிம்பிளாக்க.. நான் இன்னும் நாலு சர்வெண்ட்ஸ் போட சொல்லுறேன் கதிர்கிட்ட சொல்லி.. நீங்க அவங்களுக்கு என்ன வேணும்ன்னு ஜஸ்ட் ஆர்டர் பண்ணா போதும்.. அவங்களே சமைப்பாங்க, வீடு க்ளீனிங்க்.. வாஷிங்.. எல்லாம் செய்யறா மாதிரி பார்த்துப்போம்.. வேணா ஒண்ணு செய்யலாம்.. வீட்டோட தங்கி எல்லா வேலையும் பார்த்துக்கற மாதிரி ஒரு ரெண்டு பேரை அப்பாயிண்ட் பண்ணிடலாம்.. எங்க வீட்டுல எல்லாம் அப்படித்தான் நடக்குது..”

"வேலைக்கு வேலையும் முடியும்.. நீங்களும் ஜாலியா டிவி பார்த்திட்டு எஞ்சாய் பண்ணலாம்.. உங்களுக்கு வயசாச்சு.. உங்களையும் காடு அழைக்குதுன்னு அப்பப்போ சொல்லுறீங்க.. இருக்குற வரை கொஞ்சம் சந்தோஷமா இருந்துட்டு போங்களேன்..”

"என்ன சொல்லுறீங்க அப்பத்தா.." எனப் போட்டாளே ஒரு போடு.. பின்னே வீட்டுக்குள் மாட்டிக் கொள்ள அவள் என்ன கேணக் கிறுக்கியா.. அவர்கள் பாஷையில் சொன்னால்..

கண்ணாத்தா கன்னத்தில் கையை வைத்துக் கொண்டவர்.., அப்படியே சாப்பாட்டு மேஜையில் சாய்ந்து கொண்டார் அவள் பேச்சை கேட்டு..

"என்னாச்சு அப்பத்தா.. இந்த அக்ரிமெண்ட் பிடிக்கலையா.. சரி ஒண்ணு பண்ணுவோம்.. உங்களுக்கு மனசுக்குக் கஷ்டமா இருந்தா அந்தக் கொத்து சாவியை நான் எடுத்துக்கறேன்.. ஆனா வித் ஒன் கண்டிஷன்.. நான் வெறுமே கேஷ்.. அதாவது பணப்பட்டுவாடா மட்டும் பார்த்துப்பேன்.. மத்தபடி நீங்க எல்லாத்தையும் பார்த்துக்கணும்.. நான் வெளியில வேலைக்குப் போகணும் இல்லை.. எனக்கு நேரமிருக்காது இல்லே?.." வம்பிக்கிழுத்தாள் சத்யா.

கதிருக்கும், வெற்றிக்கும் அப்பத்தாவிடம் விடாமல் வாயடிக்கும் சத்யாவை பிடித்திருந்தது.. இதுவரை அந்த வீட்டில் அப்பத்தா வைத்தது தான் சட்டமாக இருந்தது.. இன்று அவரையும் எதிர்த்து இப்படி வாயடிக்கும் சத்யாவை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

வெற்றி சத்யாவின் குறும்பை அறிந்தவன், அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் சிரிக்க.. கதிரோ தன் மனைவியின் புத்திசாலித்தனத்தில் மெய் மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான்.

சத்யா அவர்களைக் கண்டு கொண்டால் தானே..

"டேய் கதிரு.. பார்த்தியா என் பேத்தியோடு புத்திசாலித்தனத்தை.." தன் பேத்தியின் கன்னத்தை வழித்தார் கண்ணாத்தா.

"அம்மாடி.. இந்தச் சொத்தெல்லாம் இதோ என்னோட இரண்டு பேரனுக்கும் தான்.. நீயே கணக்கு வழக்கெல்லாம் பாரு.. நான் வேண்டாம்ன்னு சொல்லலை.. உடையவன் உட்கார்ந்து பார்த்தாதான் எதுவுமே நிலைச்சி நிக்கும்.. இது பணத்துக்கு மட்டுமில்லை.. எல்லாத்துக்கும் பொருந்தும்..”

"நம்ம வீட்டுல நீ நினைக்கிறா மாதிரி நான் தனியா எதுவுமே செய்யதில்லை.. என் மருமவ காலத்துக்கு அப்புறம், எம் மகன் சக்தி எனக்கு எல்லாத்துக்கும் ஆளை வைச்சிட்டான். ஏன் அவ இருந்தவரைக்கும் அவளையும் தலை மேல வைச்சிட்டுத்தான் தாங்கினான்.. ஆனா அவ எல்லாத்தையும் தானே செய்தாத் தான் திருப்தின்னு செய்தவள்..”

"இப்போ நான் வெறுமே மேற்பார்வை பார்த்தால் போதும்.. ஆக்கறதுக்கு, எடுத்து வைக்கிறதுக்கு, பாத்திரம் பண்டம் கழுவறத்துக்கு, வீடு கூட்ட அத்தோடு துணி துவைக்க எல்லாத்துக்கும் இங்க ஆளுங்க உண்டு..”

"ஆனாலும் நான் ஏன் இப்படி உங்கிட்டே சொன்னேன்னா.. அவங்க எல்லாத்தையும் செஞ்சி ஆக்கி போட்டாலும், அத்தையும் நாம சரியா கவனிக்கலைன்னா நம்மை ஏய்ச்சிட்டு போயிட்டே இருப்பாங்க.. நாமதான் அவங்ககூட நின்னு எடுத்து சொல்லணும்.. அவங்க காய் நறுக்கி, அரைச்சி கொடுத்தா.. அதை அடுப்பில வைச்சி கூட்டி இறக்க.. அதுக்கும் பக்குவம் சொல்லணும்..”

"ஒவ்வொருத்தனுக்கு ஒண்ணொண்ணு பிடிக்கும்.. அவங்க வயித்துக்குச் சிலது ஒத்துக்கும்.. சிலது சேராது.. எல்லாத்தையும் நாம பக்குவமா பார்க்கோணும்.. இது சாப்பாட்டு விஷயத்துல மட்டுமில்ல எல்லாத்துக்கும் பொருந்தும் தாயி..

அதைத்தான் உங்கிட்ட நான் எதிர்பார்க்கிறேன்.. நீ பட்டிணத்து படிச்ச பொண்ணா இருக்கலாம்.. ஆனாலும், எல்லாருக்கும் வயிறு ஒண்ணுதானே.. உம் புருஷன் மனசும், வயிறும் நிறைய மாதிரி பார்த்துக்கோணும்.. தாய்க்கு பின்னால தாரமுன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க.. நீதான் இனி பொறுப்பா இருக்கணும்..

உன்னை நான் வெளியில வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லலை.. கிராமத்துல பொம்பளைங்க என்னிக்குமே சோம்பி இருந்தது கிடையாது.. புருஷனுக்குத் துணையா ஏதோ ஒரு விதத்துல பணம் சம்பாதிப்பாங்க.. ரெண்டு பேரும் உழைச்சாத்தான் இங்கெல்லாம் முடியும்.. இது விவசாயத்தை நம்பி இருக்கிற பூமிம்மா.. அதனால பொம்பளைங்க எதையாவது வேலை செஞ்சி, களை எடுத்து, நாட்டு நட்டு, இல்லை.. கல்லுடைச்சாவது சிறுவாட்டுப் பணத்தைச் சேமிச்சி வைப்பாளுங்க..”

"நீ பொழுது போக்குக்குப் படிச்ச படிப்பு வீணா போகுதுன்னு வேலைக்குப் போறேன்னு சொல்லறே.. ஆனா எங்க ஊரு பெண்களுக்கு அதுதான் வாழ்க்கைக்கு ஆதாரம்..”

"நீ என் பேரனோடு வேலைக்குப் போ.. எனக்கு அதுல சந்தோஷம் தான்.. அவனுக்குத் தோள் கொடு.. நான் உன்னைப் பாராட்டுறேன்.. ஆனால் அதே சமயம்.. கொஞ்சம் நம்ம வீட்டு வேலையும் சேர்த்து பாரு.. வீட்டில என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு.. உனக்கு நான் துணை இருக்கேன்..

இப்போ பிடி இந்தக் கொத்து சாவியை.. நீ இந்த வீட்டு மூத்த மருமவ.. இனி நீ என்ன சொல்லுறீயோ அதை நாங்க கேட்டு நடப்போம்.." என்ற கண்ணாத்தா கொத்து சாவியை அவள் கைகளில் வைக்க..

சத்யாவுக்கே என்னமோ மாதிரியாகிவிட்டது..

'என்னடா நாம் எதையோ பேசப் போக.. இப்படி அப்பத்தாவிடம் உருக்கமா லெக்சர் கேட்க வேண்டியதாகிவிட்டது.. இதெல்லாம் இப்போதைக்கு நமக்கு ஒத்து வராது.. பேசாமல் சரண்டர் ஆகவிட வேண்டியதுதான்..' என்று தீர்மானித்தவள்..

"இல்லை அப்பத்தா உங்க கிட்டேயே கொத்துச் சாவி இருக்கட்டும்.. நான் அப்புறமா எல்லாம் தெரிஞ்சிட்டு வாங்கிக்கிறேன்.. முதல்ல நான் கதிரோட தொழில்களைப் பார்க்கப் போறேன்.. உங்க காலம் வரை நீங்க வீட்டை பார்த்துக்கங்க.. நானும் உங்களுக்கு முடியும் வரை ஹெல் பண்ணுறேன்.. நீங்க ஹாயா இருக்கலாம்.." என நாசூக்காக மறுத்து விட்டாள்..

இதில் மாட்டிக் கொள்ள உண்மையில் அவள் தயாராக இல்லை.. விஷயம் அவ்வளவுதான்..

கதிரோ பெரியவர் என்று கண்ணாத்தவை மதித்து அவள் சாவிக் கொத்தை வாங்கவில்லை என்று சத்யாவை மெச்சிக் கொள்ள.. வெற்றியோ சத்யாவை மரியாதையுடன் பார்க்க..

கண்ணத்தா அவள் சாமர்த்தியமாக வீட்டு வேலைகளை ஒதுக்குவதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்..

எப்படியோ பேரனோடு தொழிலையாவது பார்க்கப் போனால் சரி.. அவர்களுக்குள் ஒரு புரிதல் வந்தால் அவளே வழிக்கு வருவாள் என நினைத்துக் கொண்டார்.

Kothaisuresh

Well-known member
பாட்டி தடுக்குல பாய்ஞ்சா பேத்தி கோலத்துல பாயறா👌👌👌. காலேஜ் போய் பார்க்கட்டும்
 
Mohanapriya M

Patti nijamave vera level uh 👌🏻 sathya vum semaya patti ku eedu kudukra petchula 😂 intha family full fun tan pola 😂 patti, sathya, kathir, vetri nu 😉
 
Top