கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டாம்...அத்தியாயம் 16

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 16

அன்றைய இரவின் தனிமையில் சத்யா உறங்காமல் கதிருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.. கதிரின் மேல் அவளுக்குக் கடும் கோபமாக இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்பு தான், அவளது அன்னை அறிவுரை என்ற பெயரில் திட்டி தீர்த்திருந்தார்.. இரண்டு நாட்களாக அவள் கதிரிடம் நடந்து கொள்ளும் முறை மிகவும் தப்பென்றும்,

மற்றவர்கள் முன்னால்.., அதுவும் பெற்றவர்களே என்றாலும் இப்படிக் கணவனை உதாசீனமாக நடத்துவது மரியாதை இல்லை என்றும்..,

இதில் அடுத்தவர் வீட்டுக்கு மாமா குடும்பமாக இருந்தாலும் விருந்துக்கு என்று சென்று விட்டு அங்கே கதிரை அவமானப் படுத்தும் விதத்தில் அவள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் தான் எனச் சொல்லி சொல்லி அவளை வாட்டி எடுத்து விட்டுச் சென்றிருந்தார்.

அத்தோடு விடாமல், அவளைத் தாங்கள் வளர்த்த விதமே தப்போ என்று தோன்றுவதாகவும் வேறு நிந்தித்து விட்டுப் போயிருந்தார்.

இத்தனை நாட்களாகச் செல்ல மகளாக, அவர்கள் அருமை புதல்வியாக இருந்து வந்தவள்.. இப்பொழுது மணமானபின் குற்றம் செய்பவளாக அவர்கள் கண்களுக்குப் படுவது எல்லாமே இந்தக் கதிரால் தான் என்று தோன்றியது சத்யாவிற்கு.

‘தன் தந்தை வாயை விட்டாலும், இந்தக் கதிர் மறுத்திருந்தால் அவர் என்ன வற்புறுத்தியா இருக்கப் போகிறார்..’

‘என்றுமே அவள் தந்தை மற்றவர்களுக்குப் பிடிக்காததை செய்ய மாட்டாரே?.. வேறு வழியில்லாமல், குமரேசன் மாமாவுக்கு வாக்குக் கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட இவன் தடுத்திருந்தால் பிரச்சனை அங்கேயே முடிந்திருக்குமே..’

‘அதை விட்டு விட்டு.. இதுதான் சாக்கு என்று வேதா அவனுக்குக் கிடைக்காததால்.. வீம்புக்குப் படித்த தன்னை மணக்க ஒப்புக் கொண்டு விட்டு.. இப்போது.. தான் எதையாவது சொன்னால்.. எல்லோரையும் தன் பக்கத்தில் இழுத்துக் கொண்டு, எனக்கு எதிராக, தனக்குச் சாதகமாகப் பேச வைக்கிறானே..’

பெற்றவர்களைக் கூட மன்னித்து விட்ட சத்யா கதிரை மன்னிக்கத் தயாராகவில்லை.. வாழ்க்கை முழுவதும் வர வேண்டிய துணையை இப்படி அவள் சம்மதமில்லாமல் மணப்பது என்பது அவளைப் பொருத்தவரை குற்றமாகவே பட்டது..

‘இதில் அவள் அவனை அலட்சியப் படுத்தினால் இவர்களுக்கு எதற்குக் கோபம் வர வேண்டும்.. அவன் செய்ததெல்லாம் சரியாகிவிடுமா?..’

அவன் மீதிருந்த வெறுப்பினாலோ, இல்லை கோபத்தினாலோ எல்லாவற்றையும் தப்பு தப்பாகவே யோசித்தாள் சத்யா.

அவள் தனக்குச் சாதகமாகவே ஒன்றை நினைக்க மறந்து விட்டாள்.. இதில் சம்மந்தப்பட்ட அவளுமே தடுத்து நிறுத்தி இருக்கலாமே.. அவள் தந்தையை என்னதான் மீற முடியவில்லை என்றாலும்.. அவளுக்கு என்றுமே சுதந்திரம் கொடுத்துத்தான் வளர்த்திருந்தார்.

அவளுக்கு இதில் விருப்பமில்லை என்று நினைத்திருந்தால் கெட்டியாகப் பேசி இந்த மனதுக்குப் பிடிக்காத திருமணத்தை நிறுத்தி இருக்கலாம்..

ஏன் அவள் செய்யவில்லை.. இன்று வரை அவளுக்கும் புரியாத புதிர்தான்.

ஒருவேளை பிரகாஷ் தடுத்து நிறுத்துவான் என்று எதிர்பார்த்தாளோ.. எது எப்படியோ கடைசியில் நஷ்டம் அவளுக்குத்தானே..

“என்ன சத்யா.. இன்னுமா தூங்கலை..”

“ஏன் நான் தூங்கிட்டா ஜாலியா என் பக்கத்துல படுத்துட்டு கட்டி பிடிச்சிக்கலாம்ன்னு நினைச்சீங்களோ?..”

அப்பொழுதுதான் அறைக்குள் நுழைந்த கதிரை வாட்டி எடுக்க ஆரம்பித்தாள்.

“ஏன் முழிச்சிருந்தா மட்டும் கட்டி பிடிக்க மாட்டேனா என்ன?..” என்று உல்லாசமாகச் சொன்னவன், சட்டென அவளை நெருங்கி அணைத்திருந்தான்.

“சீ.. வெட்கமாயில்லை உனக்கு.. இதுதான் சாக்குன்னு காத்திட்டு இருந்தீங்களோ?..” எனக் கோபமாகச் சொன்னவள் அவனைப் பிடித்துத் தள்ளினாள்.

அசைக்க முடிந்தால் தானே.. இறுக்கிப் பிடித்திருந்தான் உடும்பு பிடியாய்..

“அப்படித்தான் வைச்சிக்கோயேன்.. இதுல என்ன தப்பு.. என் பொண்டாட்டி கட்டி பிடிக்கறேன்..”

“கதிர்.. வேணாம்.. விடுங்க.. ஏன் அவகிட்ட இழஞ்சது போதாதுன்னு இப்போ எங்கிட்டேயா?..”

சட்டென அவளைத் தள்ளி நிறுத்தினான் கதிர்.. அவன் உதறிய உதறலில் கட்டிலில் அப்படியே சாய்ந்தாள் சத்யா.

இளமை பளிச்சிட விழுந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு இப்பொழுது எந்தவித உணர்ச்சியும் தோன்றவில்லை.

“அப்படி யார் கிட்ட இழைஞ்சேன்..”

அவன் குரல் அடுக்க முடியாத கோபத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்தது.. பாவம் சின்னப் பெண் என்று கொஞ்சம் பொறுத்துப் போனால் இப்பொழுது இப்படி ஒரு பழியைச் சுமத்துக்கிறாள்.

“அவ கிட்ட என்ன அப்படிப் பேச்சு.. நான் பார்க்கலைன்னு நினைச்சீங்களோ?.. அதான் நீங்க ரெண்டு பேரும்.. அதான் நீங்களும் வேதாவும் வாஷ் பேசின் கிட்ட இழைஞ்சி இழைஞ்சி குசுகுசுத்தீங்களே?..”

‘ஓ.. மேடம் நாங்க ரெண்டு பேரும் பேசினதைப் பார்த்திருப்பா போல.. சரியான லூசு.. இவளை.. அந்தப் பொண்ணுக்கிட்ட அப்படி என்ன நான் பேசினேன்..’

வேதாவிடம் பேசியது அவனுக்கு அப்பொழுது நினைவுக்கு வந்தது.

எடுத்தெறிந்து, வேதாவை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டி இளக்காரப் படுத்திய சத்யாவின் மேல் கதிருக்குக் கோபம் வந்தாலும், மற்றவர்கள் முன் அவளை அடக்கி அவளை அவமானப் படுத்த நினைக்காமல் கதிர் மௌனித்திருந்தான்.

உணவு முடிந்தவுடன் கையலம்ப வாஷ் பேசினினை நோக்கிச் சென்றான்.. அப்பொழுது வேதா அவனுக்காக வழிவிட்டு ஒதுங்கினாள்.

“கதிர் மாமா.. கைகழுவிட்டு அங்கன மாட்டியிருக்கத் தாங்கியில கை துடைக்கிற டவல் மாட்டி இருக்கு பாருங்க.. அதுல தொடச்சீக்கங்க..”

அவளுக்குத் தலையாட்டிய கதிர்.. “அம்மாடி வேதா.. சத்யா பேசறதை நீ மனசுல வைச்சிக்காதே.. உன்னோட தங்கச்சி இன்னும் சின்னப் பொண்ணுதான்.. உன் அளவுக்கு அவளுக்குப் பக்குவம் வரலை..”

“என்ன பேசறோம்.. நாம பேசறது அடுத்தவங்களை மனசை எப்படி நோவடிக்கும்ன்னு யோசிக்காமல் பேசறா..”

“நீங்க அடக்கலாமேன்னு நீ நினைக்கலாம்.. உன்னை மாதிரி நிலமைதான் எனக்கும்.. “பிரகாஷ் எப்படி உன்னைப் பிடிக்காமல் திருமணம் செய்தானோ, அதே போலத்தான் இங்கேயும்..”

“இவங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிற காலம் வரும்மா.. நான் அதனாலதான் அவளை ஒண்ணும் சொல்லலை.. அவளா மாறுவான்னு நினைச்சி இருக்கேன்.”

“இவ என்னைச் சொன்னால் பராவாயில்லை.. நான் அவளுக்கு அடுத்தவன் என்கிற நினைப்பு அவளுக்கு.. நீ அவளோட சொந்த அக்காதானே.. இப்படி உன்னைக் கேவலப்படுத்தறது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை..”

“நான் உனக்குச் சப்போர்ட்டா பேசப் போய்ப் பிரகாஷ் தம்பி ஏதாவது தப்பா எடுக்கப் போறாருன்னு சும்மா இருக்கேன்.. நீ எதையும் மனசுல போட்டு உளப்பிக்காதே..”

“உன் வாழ்க்கையை ஜெயிக்கிற வழியைப் பாரும்மா.. ஹாங்க்.. ஏதாவது உதவி தேவைன்னா இந்தக் கதிர் மாமா உனக்கு ஆதரவா இருக்கான்னு எப்பவும் நினைவில் வைச்சிக்கோம்மா..” என்ற கதிரின் மேல் வேதாவுக்குத் தனக்குக் கூடப் பிறவா சகோதரன் ஒருவன் கிடைத்து இருக்கிறான் என்றே இப்பொழுது தோன்றியது.

“ஆகட்டும் மாமா.. நீங்களும் சத்யாவை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.. நீங்க சொல்லறாப்புல நடந்துக்கறேன்.. பிரகாஷ் அத்தான் சீக்கிரம் என்னைப் புரிஞ்சிப்பார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா..”

“எங்கம்மா என்ன ஆனாலும் அவர் விருப்படி நடக்கணும் சொல்லி சொல்லி அனுப்பிருக்காங்க.. அவர் என்னைத் தப்பா நினைச்சாலும் அதில எந்தத் தப்பும் இல்லை.. அவருக்கு ஏத்தாமாதிரி நான் மாற முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கு..”

என்ற வேதா அவனிடம் தலையாட்டி விட்டு அங்கிருந்த நகர்ந்தாள்.

இதை இப்பொழுது நினைவு கூர்ந்த கதிர் முகத்தில் ஒரு வித பெருமிதம் வந்தது.. எவ்வளவு நல்ல பெண் வேதா.. எத்தனை நம்பிக்கையாகப் பேசுகிறாள்.. கிடைத்த வாழ்க்கையை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று அறிந்தவள்..

அவள் சொல்லுவதுபடி நாமும் சத்யாவை புரிந்து கொள்ளத்தானே முயற்சிக்கிறோம்.

சட்டெனக் கதிரின் முகம் நூறு வாட்ஸ் பல்ப் போலப் பிரகாசித்தது.. ‘நாங்கள் இருவரும் பேசிக் கொண்டதை கண்டவளுக்கு எதற்கு இந்த எரிச்சல்..’

‘அப்போ சத்யாவுக்கு.., வேதா மேல் பொறாமை என்றுதானே அர்த்தமாகிறது.. பொறாமை காதலின் முதல் படி அல்லவா?..’

‘அப்படியானால் சத்யாவின் மனசில் நான் இருக்கிறேனா?.. நான் வேதாவிடம் பேசுவது இவளுக்கு எரிச்சலைத் தருகிறது என்றால், அவளையறியாமல் அவள் மனதில் நான் இருக்கிறேன் என்று தானே பொருள்..’

‘அந்தப் பொறாமையில்.. அந்தக் கோபத்தில் தான் இவள் இப்போ என்னிடம் கடுப்படிக்கிறாள்..’

முகம் கொள்ளா மகிழ்வில், தன்னவளின் மனதை அறிந்து கொண்ட பரவசத்தில் விகசித்தவனை..

“அவ்வளவு நல்ல நினைவோ?.. அப்படியே பூரிச்சி போய் நிக்கிறீங்க.. அப்படி என்ன சொக்கு பொடி போட்டா எங்கக்கா?..”

பக்கெனச் சிரித்தான் கதிர்.

“அதை அவகிட்டேயே போய்க் கேக்கறது தானே?.. எப்படிப் புருஷனை சொக்கு பொடி போட்டு மயக்கணும்னு..”

“ரொம்ப அவசியம் பாரு எனக்கு.. நீங்களும்.. அந்தப் பட்டிக்காட்டு லூசும்.. நல்ல பொருத்தம் தான்..”

உதட்டை இகழ்ச்சியாக வளைத்தவளைப் பார்த்தவனுக்கு என்னென்னவோ தோன்றியது.. தோன்றியதையெல்லாம் செய்து விட முடியுமா என்ன?..

“இதைத்தான் நாங்களும் பேசிட்டு இருந்தோம்.. வேதாவுக்கு நல்லா சமைக்க வரும்.. ஒருத்தி புருஷன் மனசுல இடம் பெறணும்ன்னா அவளோட வயத்துக்கு நிறைவா சமைச்சி போட்டா அவன் இதயத்துல இடம் கிடைக்கும்னு எங்க பட்டிகாட்டுல சொல்லுவாங்க..”

“அந்த விதத்துல நீ கொடுத்து வைச்சவம்மா வேதான்னு சொல்லிட்டு இருந்தேன்.. எல்லாம் எங்க வீட்டுக்கு இந்த அதிர்ஷ்டமெல்லாம் அடிச்சி இருக்கணும்.. என்ன பண்ணரது எங்களுக்கு அதுக்குக் கொடுப்பினை இல்லை..”

“இதைப் போய்ப் பெரிசா பேச வந்திட்ட.. போடி பைத்தியக்காரி.. எதையாவது நினைச்சி எதையாவது உளறாதே..”

“ஓ.. உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வேறு இருக்கா.. நாங்க உங்க அதிர்ஷடத்தை தடுக்கலையே.. உங்களுக்கெல்லாம் அந்தப் பட்டிக்காட்டு வேதாதான் சரியா வருவா.. நல்லா வக்கணையா சமைச்சி போட்டுப் புருஷனை வளைச்சி போடறதெல்லாம் அவளுக்குச் சரி வரும்..

“இந்தச் சத்யா பைத்தியக்காரியாவே இருந்திட்டு போறேன்.. ஆனா ஒண்ணு அந்த வேதா என்ன வேணா சமைக்கட்டும்.. இல்ல சமைக்காத வேணா போகட்டும்.. இன்னும் ஒண்ணை மட்டும் அந்தப் பட்டிக்காடு புரிஞ்சிக்கலை..”

“புருஷனோடு மனசை புடிக்கிறதுக்கு இது ஒண்ணுதான் வழியின்னு இல்லை.. எவ்வளவோ இருக்கு.. அதைப் புரிஞ்சிக்காமா?..” எனப் பொரிந்து கொட்டினாள் சத்யா.

“அப்படியா மேடம்.. வேற என்னென்ன வழியெல்லாம் இருக்குங்க.. கொஞ்சம் அதை நீங்களும் புரிஞ்சிட்டா எங்களுக்கும் உபயோகமா இருக்கும்.. செய்வீங்களா மேடம்..”

“ஹலோ.. என்ன நக்கலா?.. இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்.. அப்புறம் நடக்கறதே வேற..”

“ம்.. அப்படி ஏதாவது நடந்தா நல்லாதான் இருக்கோம்..” என உல்லாசமாக விசில் அடித்தான் கதிர்.

“வோய்.. என்ன விசிலெல்லாம் பலமா இருக்கும்.. அடங்கிப் படுக்கிற வழியைப் பாரு..”

பலமாகச் சிரித்தான் கதிர்.

“உன் வாய்தான் உன்னை வாழ வைக்கிறதடி..” என அதற்கும் சிரித்தான் கதிர்.

“அடச்சே.. படுக்கிற வழியைப் பார்.. டேய் குண்டா அதுக்கும் எதையாவது சொல்லி வைக்காதே.. உன்னோட வர வர தொல்லையா போச்சு..” என்று கடுகடுத்தவள்..

அருகே இருந்த தலையணையை எடுத்து அவன் மேல் வீசி ஏறிந்தாள்..

“கேட்ச்” சட்டெனத் தாவி பிடித்த கதிரோ அதற்கும் சிரித்து வைக்க..

“போதும்.. ரொம்பச் சிரிக்காதே.. பல்லு சுளுக்கப் போகுது.. போய் லைட்டை அணைச்சிட்டு தலையணையை வைச்சிட்டு தரையில படு..”

என்ற சத்யா கட்டிலில் நிம்மதியாகப் படுத்துக் கொண்டு போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.

படுக்கையின் அசைவில் சட்டென முகத்திலிருந்து போர்வையை விலக்கியவள் சடாலென எழுந்து உட்கார்ந்தாள்.

‘டேய் இங்க என்ன பண்ணறே?.. உங்களைக் கீழேத்தானே படுக்கச் சொன்னேன்.. வேணாம் முதல்ல நீ இறங்கு.. இது என்னோட கட்டில்..”

தன் அருகே படிக்க முயன்ற கதிரின் அசைவில் எழுந்து உட்கார்ந்த சத்யா அவனை எழுப்ப முயல..

‘உ ம்.. நல்ல மரியாதை..கிலோ என்ன விலைன்னு கேட்பே போல இருக்கு.. சரி இங்க கட்டிலில் படுக்காமல் எங்கம்மா படுக்கறது?.. தரையில படுக்கவெல்லாம் வேற ஆளைப் பாரு.. நமக்கு அதெல்லாம் ஒத்து வராதும்மா..”

“ஏன் உங்க வீட்டுல கட்டிலில் தான் படுப்பீங்களோ?..”

பைத்தியக்காரத்தனமாகக் கேள்வி கேட்கும் தன் மனைவியைப் பார்த்து கதிருக்கோ..

“எங்க வீட்டில எப்படி இருந்தா என்ன?.. அங்கேயும் உன் விருப்படி உனக்குத் தனியா ரூம் ஒதுக்கி அதுல நீ சொகுசா படுக்க நல்ல தேக்கு மர கட்டிலும், அதுக்குத் தோதா கர்லான் குஷன் மெத்தையும் வாங்கிப் படுக்க வைச்சிருக்கேன்..”

“ஆனா.. நீ.. உங்க வீட்டுக்கு வந்திருக்கிறவனுக்கு நல்ல மரியாதை கொடுக்கறே.. உன்னைப் பெத்தவங்ககிட்ட போய் இப்போவே சொல்லட்டா..”

“அத்தை அத்தை.. மாமா மாமா.. உங்க பொண்ணு எனக்குக் கட்டிலுல இடம் இல்லைன்னு சொல்லிட்டா.. எனக்கு வேறு ரூம் ஒதுக்கி கொடுத்தீங்கன்னா வசதியா இருக்கும்.. என்ன நான் சொல்லட்டா?.. இல்லை நீயே போறீயா?..”

அதற்கும் மேல் வாயை திறப்பாளா என்ன சத்யா..

பெற்றவர்களைப் பற்றித் தெரியாதா என்ன.. ஏற்கனவே இந்த அழகு மாப்பிள்ளையைத் தாங்கு தாங்கென்று தாங்கி தன்னைத் திட்டும் அன்னை ரேவதி நினைவுக்கு வர.. வாயை மூடிக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள் சத்யா.

“அஃது” என்று சிரித்தவன் குரல் செவியில் விழுந்தாலும் கண்டு கொள்ளவில்லை சத்யா. .

**************************************************************************************************

மறு நாள் காலை சத்யா எழுவதற்கு முன்பாகவே கதிர் எழுந்து குளித்துத் தயாராகிக் கீழே வந்து காலை உணவை முடித்திருந்தான்.

சத்யா தயாராகி வந்தவுடன் அவளைக் கண்டவன்,

“சத்யா.. பலகாரத்தை முடிச்சிட்டு கிளம்பும்மா.. இப்போ கிளம்பினால் தான் பொழுது சாயப் போய்ச் சேர முடியும்..”

“எங்க கிளம்பணும்?..” என்றபடி..

“மாம்.. எனக்கு டிபனை எடுத்து வைங்க.. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்.. நான் இடியாப்பமும், கடலைக் கறியும் செய்யச் சொன்னேனே.. சமையல்காரம்மா செய்தாங்களா?..”

“எல்லாம் ரெடியாத்தான் டேபிள்ல வைச்சிருக்கு.. வா.. வந்து சாப்பிடு..” என்றவர்..

“தம்பிக்கு பிடிக்கும்ன்னு இடியாப்பத்துக்குத் தோதா மட்டன் சால்னாவும் வைச்சிருக்கு.. தேங்காய் பாலும் செஞ்சிருக்கு.. அதையும் சாப்பிட்டுட்டு கிளம்பற வழியைப் பாரு.. மறு வீட்டுப் பலகாரமெல்லாம் தயாரா எடுத்து வைச்சிருக்கோம்..ஊர்ல எல்லாருக்கும் ஆச்சி கொடுத்து விடுவாங்க..”

எதுவும் பேசாமல் சாப்பாட்டு மேசைக்குச் செல்லும் மகளை விநோதமாகப் பார்த்த ரேவதி, பின்னர்த் தன் கணவர் ராஜ்குமாரை கேள்வியாக நோக்கினார்.

‘எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீ அவசரப்படாதே..’ எனப் பொருள்பட அவரோ கண்ணை மூடி அமர்த்தினார்.

பெற்றவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டு கொள்ளாமல் சத்யா தன் காலை உணவிலேயே தீவிரமாக இருந்தாள்.

“மாப்பிள்ளை.. வாங்க.. இன்னொரு கப் காஃபி சாப்பிடலாம்..” என்று மருமகனை உபசாரமாக அழைத்தார் ராஜ்குமார்.

இப்படி மகள் தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு இப்படி அருகில் இருக்கும் கதிரை கண்டு கொள்ளாமல் இருப்பதில் கடுப்பானார் ராஜ்குமார்.

“தாங்க்ஸ் மாமா.. இன்னொரு காப்பிக் குடிச்சா நல்லாதான் இருக்கணும்.. டிரைவ் பண்ணணுமே?..” என்ற கதிர்..

“சத்யா.. சாப்பிட்டாச்சுன்னா கிளம்பலாம்.. நேரமாகுது பார்..”

“எங்கே கிளம்பணும்னு நானும் அப்போவே கேட்டேனே??.. இப்போ எனக்கு எங்க போற மூடும் இல்லை..”

“இப்படிச் சொன்னா எப்படிச் சது.. விருந்தும் மருந்தும் மூணு நாலு தான்.. ஏற்கனவே இங்க வந்து அஞ்சு நாளாச்சு.. இன்னிக்கு கிளம்பினா நாளைக்குச் சன்டே.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வேலையைப் பார்க்க சரியா இருக்கும்..”

“மாப்பிள்ளை என்ன சொல்லறீங்க?.. இது உங்க வீடு.. நீங்க இங்க உரிமைப்பட்டவரு.. நீங்க இங்க எப்ப வேணா வரலாம்.. எப்ப வேணா போகலாம்.. இப்படி மூணு நாள் விருந்துன்னு பேசறது மனசுக்குக் கஷ்டமா இருக்கும்..”

“அய்யோ மாமா.. தப்பா எடுத்துக்காதீங்க.. நான் அந்த அர்த்துல சொல்லலை.. எதோ பொதுப்படையா பேசினேன்.. மன்னிச்சுக்கங்க மாமா.. வந்து நாலைஞ்சு நாளா ஆச்சு.. ஊருக்கு போகணும்ங்கறதுல வாய் தவறிப் பேசிட்டேன்.. மனசுல வைச்சிக்காதீங்க.” என்று அவரிடம் மன்னிப்பை வேண்டிய கதிர்,

“அங்க ஊர்ல வெற்றி தனியா எல்லாத்தையும் பார்த்துக்கணும்.. அப்பாவுக்கும் வயசாச்சு இல்லையா மாமா.. நாங்க தானே பொறுப்பெடுத்திக்கணும்.. உங்களுக்குத் தெரியாததா மாமா.. பெரிய தொழிலெல்லாம் பார்க்கிறவரு.. உடையவன் இருந்தாதானே எல்லாமே தங்கும்.. அதான் சத்யாவை கூட்டிட்டு ஊருக்கு கிளம்பலான்னு சொன்னேன்..”

“நீங்களும், அத்தையும் உங்க பொண்ணைப் பார்க்க எப்ப வேணுமானாலும் நம்ம ஊருக்கு வரலாம்.. நாங்களும் முடியும் போது வந்து தங்கிட்டு போறோம்..” என்றான் பதவிசாகக் கதிர்.

அவன் பதவிசான மன்னிப்பிலும், பொறுப்பான பேச்சிலும் மகிழ்ந்த ராஜ்குமாரும், ரேவதியும் ஒரு சேர, “சத்யா கிளம்பு.. மாப்பிளைக்கு நேரமாச்சு பார்..”

“என்னால கிளம்ப முடியாது.. நான் போகலை..”

“சத்யா என்ன பேச்சு இது.. ஒழுங்கு மரியாதையா கிளம்பு..” ராஜ்குமார் அதட்ட..

“என்னடி என்ன ஆச்சு.. மறு வீட்டு விருந்து முடிஞ்சி புருஷன் வீட்டுக்கு போக வேண்டாமா?..”

“இல்லைம்மா.. எனக்கு இப்போ அங்க போகப் பிடிக்கலை.. ஒரே போர் அந்த ஊர்.. சரியான பட்டிக்காடு..”

“வரப் பிடிக்கலைன்னா என்ன அர்த்தம் சத்யா.. ஊர் பிடிக்கலையா?..இல்லை என்னைப் பிடிக்கலையா?.. சொல்லு சத்யா?.. அந்தப் பட்டிக்காட்டுல தான் உன் புருஷங்கிறவன் இருக்காங்கிறது நினைப்பில வைச்சுக்கோ..” கதிர் உள்ளடிக்கிய குரலில் அமைதியாகச் சொல்ல..

அவனைக் கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்பினாள் சத்யா.

“சத்யா என்னம்மா இது..” ராஜ்குமார் மகளைப் பார்க்க..

“என்னம்மான்னா என்ன?.. நான் தமிழ்ல தானே சொன்னேன்.. எனக்கு அவரோடு ஊருக்குப் போகப் பிடிக்கலை..”

“எனக்கு ஒண்ணு தெரியணும் சத்யா.. உனக்கு ஊருக்கு கொஞ்ச நாள் வரப் பிடிக்கலையா இல்லை மொத்தமாவே என்னோடு வரப் பிடிக்கலையா.. விளக்கமா சொல்லிட்டேன்னா நல்லா இருக்கும்.. நானும் என் பொழப்பை பார்த்திட்டு போயிட்டு இருப்பேன்..”

அவளுடய அலட்சிய மனப்பான்மையில் அவனுக்குக் கோபம் சுறுசுறுவெனக் கந்து வட்டியாய் ஏறிக் கொண்டிருந்தது.

“தம்பி.. அவ சின்னப் பொண்ணு.. எதோ தெரியாமல் பேசுகிறா?.. நான் எடுத்து சொல்லி உங்களோடு அனுப்பி வைக்கிறேன்..” ரேவதி பதற்றமாய் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“என்னடி சத்யா.. இது.. கிளம்பும்மா.. மாப்பிள்ளை தப்பா எடுத்துக்கப் போறாரு.. கிளம்புமா.. நாங்க அப்புறமா உன்னை வந்து பார்க்கிறோம்..” மகளைத் தாஜா செய்ய..

“இல்லைமா.. எனக்குக் கொஞ்சம் நாளாவது இங்கே இருக்கணும்.. நேத்திக்குப் பிரகாஷ் சொன்னான் இல்லையா என்னோட வேலையெல்லாம் நிறையப் பெண்டிங் இருக்குன்னு.. அதான் எல்லாத்தையும் முடிச்சி கொடுத்திட்டு வரலாம்ன்னு நினைச்சேன்..”

“என்னம்மா இது.. பிரகாஷ்..பிரகாஷ்ன்னு.. எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்.. அவனுக்கு வேதா இருக்காம்மா.. உன் வாழ்க்கையைப் பாரு முதல்ல..” நயமாகவே எடுத்துச் சொன்னார் ராஜ்குமார்.

“இல்லைப்பா.. வேதா ஒரு வேஸ்ட்டு.. அவ சமைக்கத்தான் லாயக்கு.. என்னோட வேலையை நாந்தானே பார்க்கணும்.. இந்தச் சத்யா எதையும் நடுவில விட்டுட்டு போக மாட்டாள்.. முதல்ல நான் என்னோடு வேலையை இங்கே இருந்து முடிக்கிறேன்..

“இதுக்கு மேலையும் என்னை வற்புறுத்த மாட்டீங்கன்னு நினைக்கறேன்..” என்றவள் கதிரை அர்த்தத்துடன் பார்த்தாள்.

‘கிளம்புகிறாயா?.. உன்னோடு நேரத்தை வீணாக்காதே..’ என்றதோ அந்தப் பார்வை.

அவன் என்ன முட்டாளா.. அதற்கு மேல் அவளை வற்புறுத்த..

“மாமா.. அத்தை.. நான் கிளம்புகிறேன்.. அவளுக்கு எப்பொழுது இஷ்டமோ அப்போ வரட்டும்.. இல்லைன்னாலும்..”

சத்யாவை பார்த்தவன் பார்வை ஆயிரம் சொன்னது.. ‘நீ இனி வந்தாலும், வராவிட்டாலும் எனக்கொன்றுமில்லை.. இந்தப் பட்டிகாட்டானுக்கும் சுய மரியாதைன்னு ஒண்ணு இருக்கு..’

சத்யாவோ முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் அறைக்குள் செல்ல மாடிக்குப் போனாள்.

கதிரும் அவளை லட்சியம் செய்யாமல் அவளுடைய பெற்றவர்களுக்குத் தலையாட்டி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி தன் காரை நோக்கிப் போனான்.

“மாப்பிள்ளை.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. நாங்க அவளுக்கு நல்ல புத்தி சொல்லிக் கூட்டி வந்து விடறோம்.. அப்பத்தா கிட்டேயும், சக்திவேல் கிட்டேயும் நீங்க எடுத்து சொல்லணும்.. நானும் போன் போட்டு பேசறேன்..”

அவனுடன் நடந்தபடி ராஜ்குமார் மகளுக்காகத் தழைந்து வேண்டிக் கொள்ள..

ரேவதியோ, “தம்பி.. அவளை மன்னிச்சிடுங்க தம்பி.. அவளுக்கு விவரம் போதாது.. கானலைக் காட்சியாய் நினைக்கிறா.. நல்லா எடுத்து சொல்லி புத்தி புகட்டி அனுப்பி வைக்கறேன்.. பெரியாத்தா கிட்ட நானும் பேசறேன்.. இந்தப் பொண்ணை என்ன செய்ய?.. இப்படிப் புத்தி பிசகிப் போய் இருக்காளே?..” புலம்பியபடி அவரும் அவனைத் தொடர்ந்தார்.

மறுவீட்டுப் பலகாரத்தையும், சீர் வரிசைகளையும் எடுத்துக் காரில் வைக்கப் பணிந்த ரேவதிக்கு மறுப்பாய் தலையாடி மறுத்தான் கதிர்.

“அத்தை.. தப்பா எடுத்துக் கொள்ளாதீங்க.. இதெல்லாம் உங்க பொண்ணு வரும் போது கொடுத்து அனுப்புங்க.. அப்பதான் எனக்கு மரியாதை.. இதைக் கொண்டு வரும் அவளுக்கு மரியாதை..”

என்று சொல்லியவன் அவர்களைக் கை கூப்பி வணங்கிவிட்டு தன் காரை எடுத்தான்.

கிளம்பும் முன்பும் தன்னையறியாமல் தாங்கள் தங்கியிருந்த மாடியில் இருந்த அவளது அறையை நோக்கிய கதிருக்கு ஏமாற்றமே.

தன்னை வழி அனுப்ப வரவில்லையென்றாலும், அங்கே அவளது அறையிலிருந்து பார்ப்பாளோ என எதிர் பார்த்தவனுக்குத் தோல்வியே கிடைத்தது.

ஏமாற்றப் பெருமூச்சுடன் காரை எடுத்தவன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பெரியவர்களைக் கூடக் கண்டு கொள்ளாமல் வேகமாகச் செலுத்தினான்.

இருவருமாகச் சேர்ந்து விருந்தாட வந்துவிட்டு, இப்பொழுது ஒற்றையில் செல்பவனுக்கு இனி என்ன காத்து இருக்கிறதோ….

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

******************************************************************************************
 
Jothiramar

Moderator
Staff member
வேதா வாழ்க்கை சத்யாவால் பிரச்சனையை வருமா

********************************************
 
Mohanapriya M

Well-known member

இந்த கதிர் கு இன்னும் எவ்ளோ தான் கஷ்டம் குடுக்க போறாளோ இந்த சத்யா 🤦🏻
 
Chellam

Well-known member
சத்யா இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறாளோ.
 
Top