அடுத்த வந்த இரண்டு மாதங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் சத்யாவின் வாழ்க்கை கழிந்தது.. நாட்கள் விரைந்தோடின.
எப்பொழுதும் போலக் காலையில் பிரகாஷுடன் கிளம்பி இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீட்டுக்குத் திரும்பும் வழக்கத்தை மேற் கொண்டாள்.. ஆறு மணிக்கு அலுவலக வேலை முடிந்தாலும், இருவரும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போல ஊரை சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் சினிமா, அல்லது பீச்.. இல்லை ஏதாவது மாலுக்குப் போவது.. சில சமயங்களில் ஹோட்டலில் நண்பர்களுடன் சந்திப்பது.. சால்சா டான்ஸ் செல்வது.. இப்படி இப்படி..
அது எதுவுமே இல்லையென்றால் அலுவலகத்திலேயே இருவரும் இப்பொழுது தொடங்கி இருக்கும் புது ப்ராஜக்ட்டில் தங்கள் நேரத்தைச் செலவிடுவது என்று வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
கதிரும், வேதாவும் சென்றதற்கு மறு நாளிலிருந்தே ஒரு வித விடுதலை உணர்வில் இருவரும் நிம்மதியாக எப்பொழுதும் போலத் திருமணத்திற்கு முன்பு இருந்தது போல நடந்தனர்.
எப்படியோ விட்டது தொல்லை என்ற மனப்பாங்கு அவர்களுக்குள் வந்திருந்தது..
சிறு பிராயத்தில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்.. இப்பொழுது தங்கள் திசை மாறிப் போன வாழ்க்கையைப் பற்றிப் பேசி தங்களுக்குள் ஆராய்ச்சி செய்து, குத்திக் கிளராமல், பழையபடி தங்கள் நட்பைத் தொடர்ந்தனர்..
இதுதான் அவர்கள் கார்ப்பரேட் கல்ச்சர்.. தேவையில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது அநாகரீகம் என்றே நினைத்தனர்.. தான், தன் சுகம் என்று நினைப்பதே அங்கே பரவி வரும் நாகரீகம்..
அவசியத்திற்காக என்று கூட அடுத்தவரின் சொந்தப் பிரச்சனையில் தலையிட்டால் அதற்குப் பிறகு தொடரும் பின்விளைவுகளை ஏற்கத் தயங்கி நமக்கெதற்கு வம்பு எனப் போகும் கூட்டத்தினர்.. இதற்குச் சத்யாவும், பிரகாஷும் கூட விதிவிலக்கு இல்லை.
எப்படி.. தான் கதிரை ஒதுக்கினோமோ, அதே போல் வேதாவை தள்ளி வைக்கப் பிரகாஷுக்கும் உரிமை இருக்கிறது என்று எண்ணிய சத்யா அதைப்பற்றிப் பேசாமல் நாசூக்காக மௌனிக்க.. பிரகாஷுமே அதே மனநிலையில் இருந்தவன்.. கதிரை பிடிக்காமல் ஒதுக்கி வைக்கச் சத்யாவுக்குச் சம உரிமை இருப்பதாக நினைத்து அந்தப் பேச்சை எடுக்காமல் நாகரீகம் காத்தான்.
இதுவே அவர்களுக்குள் இருந்த பழைய நட்பை மேலும் பலப்படுத்தக் காரணமாக அமைந்தது.
பிரகாஷின் தொழில் சாஃப்ட்வேர் சம்மந்தப்பட்டது.. அதிலும் அவர்கள் கம்பெனி படிப்புச் சம்மந்தமாகச் சாப்ட்வேரில் பெயர் போனவர்கள்.. அவர்கள் இலக்கு கல்லூரி மாணவர்களை நோக்கி இருந்தது.
வெளிநாடு செல்பவர்களுக்கு ஏதுவாகப் பரிட்சை கொடுக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு உதவும் வகையில் அதையொட்டிய சீடீக்கள் தயார் செய்து வெளியிட்டு வந்தனர்..போதாதற்கு ஆன்லைன் பரிட்சை மையம் வேறு வைத்திருந்தனர்..
ஓரளவு அதில் முன்னேற்றம் அடைந்தவர்கள்.. இப்பொழுது பள்ளி மாணவ மாணவிகளை நோக்கி தங்கள் நோக்கத்தைத் திருப்பி இருந்தனர்.
சத்யாவின் ஆலோசனையில் இதைத் தொடங்கியிருந்த பிரகாஷ் அதைச் செயல்படுத்தி வெளி நாட்டவருடன் ஒப்பந்தம் போடும் நேரத்தில் தான் இவர்கள் திருமணம் நடந்து குழப்பத்தை விளைவித்தது.
எப்படியோ அதையெல்லாம் கடந்து சத்யாவின் ஒத்துழைப்பில் அந்த ப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடித்திருந்த பிரகாஷ் அதற்காகத்தான் அன்று பார்ட்டி கொடுத்திருந்தான்.
எங்கே சத்யா மீண்டும் தன்னை விடுத்து கதிருடன் சென்று விடுவாளோ என்று நினைத்திருந்தவன்.. அவள் கதிரிடம் இருந்த பிரிந்ததைப் பொருட்படுத்தாமல் தங்கள் மற்றொரு புதிய ப்ராஜக்ட்டை அவள் துணையுடன் தொடங்கி இருந்தான்..
மேலும் வேதா மேல் எந்தவித ஈடுபாடும் இல்லாததும் அவனுக்கு ஒரு சாக்காகிப் போனது.. கணவன் மனைவியிடையே ஒரு ஈர்ப்பு, ஸ்பார்க் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை சுகிக்காது.. அதற்கு ஈர்ப்பு நிச்சயம் அவசியம் அது வேதாவைப் பார்த்தால் தனக்கு ஏற்படவில்லை என்று அவனாகவே ஒரு முடிவு செய்து வைத்திருந்தான்.
அவனைப் பொருத்தவரை தன் வேலைகளுக்குத் தடங்கல் இல்லாமல் இருந்தால் சரிதான்.. இத்தகையை மேம்போக்கான எண்ணத்தைக் கொண்டிருந்த பிரகாஷும்.. அதே மனப்பான்மையில் ஒத்து தான், தன் சுகம் என்று இருக்கும் சத்யாவும் மீண்டும் நட்பு கொண்டதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லைதான்..
இது எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் உற்ற சொந்தம் என்ற உறவும் அவர்கள் நட்பைப் பலப்படுத்தி இருந்தது.
அன்று பிரகாஷ் வெளி வேலையாக எங்கோ தனியாகச் சென்றிருக்க.. சத்யா அலுவலகம் முடிந்தவுடன் ஆட்டோ பிடித்துத் தன் வீட்டுக்கு அதிசயமாக மாலையில் நேரத்திற்கு வந்தாள்.
வரவேற்பறையில் வீற்றிருந்த தன் பெற்றவர்களைக் கண்டவள் எதுவும் பேசாமல் அவர்களைக் கடக்க முயல.. தாய் ரேவதியின் அழைப்பு அவளைத் தடுத்து நிறுத்தியது.
என்றைக்கு கதிரை விட்டுப் பிரிந்து விட்டதாகச் சத்யா சொன்னாளோ.. அன்றிலிருந்தே அந்த வீட்டில் அவளுடன் அவர்கள் பேச்சு வார்த்தை நின்றிருந்தது.. பெற்ற கடமைக்கு அவளுக்குச் சமைத்து கொடுக்கும் ரேவதி.. எல்லாவற்றையும் சாப்பாட்டு மேஜையில் வைத்து விடும் வழக்கத்தை மேற் கொண்டார்.. ராஜ்குமாருமே சத்யாவுடன் முகம் கொடுத்துப் பேசாமல் ஒதுங்கிப் போனார்.
‘இவர்கள் இப்படி இருந்தால் எனக்கென்ன.. அப்படி நான் என்ன தவறு செய்தேன்.. பிடிக்காத பந்தத்தை வெட்டி விட்டது என்ன இமாலய குற்றமா?..’ என்று சத்யாவும் ஒதுக்கிப் போகத் தொடங்கினாள்.. முடிந்தவரை வீட்டில் உண்ணுபதைத் தவிர்த்து அலுவலகக் காண்டீனில் சாப்பிடத் தொடங்கினாள்..
"சத்யா.. ஒரு நிமிஷம்.. உங்கிட்ட பேசணும்.. வந்து உட்காரு.." ரேவதி அழைக்க..
இன்று அதிசயமாகத் தாய் அழைக்கவும் தன் அறைக்குச் செல்ல விழைந்தவள் திரும்பி அவரை நோக்கி வந்தவள், அவர் முகத்தைப் பார்த்தபடி எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
'அவர்தானே அழைத்தார்.. சரி அவரே தொடங்கட்டும்..' என்று சத்யா நினைக்க..
ரேவதியோ.. 'உடம்பெல்லாம் திமிர்.. என்ன என்று ஒரு வார்த்தை கேட்கிறாளா பார்..'
அங்கே மௌனம் குடி கொண்டது.
இவர்கள் இருவரும் வாயைத் திறக்க மாட்டார்கள் என்று எண்ணிய ராஜ்குமார் தானே தொடங்கினார்.
"ரேவதி.. கொஞ்சம் சும்மா இரு.. ஒண்ணு நீ பேசு.. இல்லை என்னையாவது பேசவிடு.." என அடக்கியவர்..
"சொல்லும்மா.. உனக்குப் புரியாமல் இல்லை நாங்க எதைப்பத்தி பேச விரும்பறோம்ன்னு.."
"அப்பா.. அம்மா.. எனக்கு நீங்க யாருன்னு நல்லாவே ஞாபகம் இருக்கு.. அதை முதல்ல தெரிஞ்சிக்கங்க.. இத்தனை நாளா நீங்கதான் என்னை அவாய்ட் செய்தீங்க என்னவோ நான் கொலை குத்தம் பண்ணிட்டாப் போல.."
'வாடி வா.. இதைத்தானே நாங்க எதிர்பார்த்தோம்.. நீயா உன் வாயால இந்தப் பேச்சை எடுக்கணும்ன்னு தானே நாங்க நினைச்சோம்..'
"அதைதான்டி நாங்களும் சொல்ல வந்தோம்.. குத்தம் பண்ணவனுக்குக் கூட நியாயம் சொல்லுவதற்கு அவகாசம் கொடுப்பாங்கடி.. அந்தக் கால அவகாசத்தை உனக்கும் நாங்க கொடுத்தாச்சு.. இப்போ சொல்லு சத்யா.. உன் பக்க தப்பை உணர்ந்தியா?.. என்ன டிசைட் பண்ணே?.."
“அம்மா.. முதல்ல நான் என்ன தப்பு பண்ணினேன்.. என்னைப் பொருத்தவரை நான் எந்தத் தப்பும் பண்ணியதா ஞாபகம் இல்லை.. ஒரு வேளை நான் கதிரை பிரிஞ்சதை பத்தி நீங்க சொல்லறதுன்னா.. அதை நான் தப்பா நினைக்கலை.. அதைப் பத்தி நான் பேசவும் விரும்பலை.. அது முடிஞ்சி போன அத்தியாயம்..” என்றாள் கூலாகச் சத்யா.
“என்னடி.. இரண்டு மாசமா நாங்க உன் கிட்ட இதைப் பத்தி பேச்சை தொடங்கினமா?.. அன்னிக்கு மாப்பிள்ளையைச் சண்டை போட்டு வீட்டை விட்டுத் துரத்திருக்க.. ராத்திரி நேரத்துல அவர் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போயிருக்கார்ன்னா.. எவ்வளவு கோபம் இருந்திருக்கணும்..”
“உன் மனசுல என்னதான்டி நினைச்சிருக்கே.. அய்யோ பாவம்.. சின்னப் பொண்ணுன்னு.. கொஞ்சம் விட்டுப் பிடிப்போன்னு நினைச்சோம்.. உனக்காக அப்பா கதிர் கிட்ட மன்னிப்பும் கேட்டிருக்காரு.. நானும் அப்பத்தாகிட்ட உன்னைச் சீக்கிரமே அனுப்பி வைக்கறேன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டேன்..”
“அன்னிக்கு உன் கிட்ட சொன்னமா இல்லையா?.. நல்லா யோசிச்சு முடிவுக்கு வான்னு.. இத்தனை நாளா நீயா சொல்லுவேன்னு பொறுமையா காத்திருந்தோம்.. நேத்திக்கு அப்பத்தா போன் பண்ணி புள்ளைய அனுப்பி வைங்கன்னு சொல்லி கேட்கறாங்க..”
“மாப்பிள்ளை தம்பி எதையோ அவங்ககிட்ட சொல்லி சமாளிச்சி இருக்கணும்.. இல்லைன்னா வேலை முடிஞ்சிருச்சுன்னா அனுப்பி வைச்சிடுங்க.. பேரன் ஏங்கி போறான்னு சொல்லுவாங்களா.. சொல்லு..”
“ப்ளீஸ்.. புரிஞ்சிக்கடி சத்யா.. போதும்.. நீ இங்க வந்து ரொம்ப நாளாச்சு.. நாங்க கொடுத்த காலமும் முடிஞ்சி போச்சு.. இனி கிளம்புடி.. நாங்களே உன்னைக் கொண்டு விட்டு வர்றோம்.. என்னடி சரியா..”
மகளுக்குப் பெரிய லெக்ச்சர் கொடுத்த ரேவதி அவள் பதிலுக்காகக் காத்து இருந்தார்.
“ஓ.. மாம்.. ஏம்மா.. இப்படி என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க.. சின்ன வயலிருந்து எனக்குப் பிடிக்கும்ன்னு பார்த்து பார்த்து செஞ்சவங்களா நீங்கள்ன்னு இருக்கு.. எனக்கு அந்த வாழ்க்கை பிடிக்கலேன்னு தானே நான் ஒதுங்கி போனேன்..”
“இரண்டு மாசமா நான் உண்டு என் வேலை உண்டுன்னு ஹாப்பியா இருந்தேன்.. திரும்ப எதுக்கும்மா மறுபடியும் தொடங்கிறீங்க.. பிடிக்கலைன்னா விட வேண்டியதுதானே..”
சலித்துக் கொண்டாள் சத்யா.. அவளுக்குத் தன் முடிந்து போன திருமண வாழ்க்கையைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச பிடிக்கவே இல்லை.
“ஆமாம்டி.. ஏன் சொல்ல மாட்டே.. உனக்குப் பிடிக்கலேன்னா நாங்க வாயை மூடிட்டு போகணும் இல்லையா?.. மருந்து கசக்குதுன்னு குடிக்காம இருப்பமா?.. எந்தப் பெத்தவங்கடி தன் குழந்தையை அப்படி விடுவாங்க.. அழ அழ மருந்தைப் புகட்டி குணமாக்கத்தான் பார்ப்பாங்க..”
“நீயும் எங்களுக்கு வளர்ந்த குழந்தை தான்டி.. உனக்குப் பார்த்து பார்த்து செஞ்சோம்ன்னு சொன்னியே?.. அதுலேர்ந்தே புரியலை.. உன் மேல எவ்வளவு அக்கறையும் பாசமும் நாங்க வைச்சிருக்கோம்னு..”
“உனக்கு நல்லதுதான் நாங்க செய்ய நினைக்கிறோம்.. புரிஞ்சிக்கோ.. உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருக்கிறோம்.. சும்மா லூசு கணக்கா.. அவரு படிக்கலை.. அழகாயில்லைன்னு.. தங்கச்சிக்கு நாய் கடிச்சிடுச்சு ரீதியில பேசறதை முதல்ல நிறுத்து..”
“முதல்ல ஒண்ணை நீ புரிஞ்சிக்கோ.. வாழ்க்கைக்குப் படிப்போ.. அழகோ தேவையில்லை.. முதல்ல மனசு வேணும்டி.. அது பொருந்தினா போதும்.. கதிர் தம்பி மட்டும் என்ன.. மட்டமாயில்லை.. ஆளு நல்லா கம்பீரமாத் தான் இருக்காரு.. அவர் ஹெயிட்டுக்கு அந்த வெயிட்டு கூட அழகுதான்.. உனக்கு அவரை இன்னும் இளைக்க வைக்கணும்ன்னா.. நீ எடுத்து சொல்லி புரிய வை.. படிக்கலைன்னு சொல்லாதே.. படிப்புக்கு வயசு இருக்கா சொல்லு.. அவரு நினைச்சா என்னிக்கு வேணா படிக்கலாமே..
“அப்புறம் என்ன சொன்னே.. கலரு.. அதெல்லாம் வாழ்க்கைக்கு அவசியமே இல்லை.. அப்படி நீ நினைக்கிற அளவுக்கு அவரும் ஒட்டற கருப்பெல்லாம் இல்லை..அப்படியே இருந்தாலும் என்ன போச்சு?..”
“உங்கப்பாவை பாரு.. அவர் கூடக் கருப்புதான்?.. நானும் உன்னைப்போலத் தான் பால் நிறம்?.. ஆனால் நாங்க சேர்ந்து சந்தோஷமா வாழலை.. இல்லைன்னு சொல்லிடு பார்க்கலாம்?..” என்று சவால் விட்ட ரேவதியை..
“பார்த்தியாம்மா.. சந்தடி சாக்குல உங்கம்மா எப்படி என்னை இடிச்சி காட்டறா.. இப்பத்தானே தெரியுது.. உங்கம்மா மனசில இத்தனை விசனம் இருந்துன்னு?..” ராஜ் குமார் போர் கொடி பிடித்தார்.
“ச்.. அடங்குங்க.. நானே என் பொண்ணு கஷ்டப்பட்டுப் புரிய வைக்க டிரை பண்ணா.. ஆற வயசுக்கு உங்க கலரை பத்தி ஆராய்ச்சி பண்ணாமல் அடங்கி உட்காருங்க..” என ஒரே போடாகப் போட்ட ரேவதி..
“அதை விடு சத்யா.. கதிர் தம்பிக்கு பணமும் கொட்டி கிடக்கு.. வாழ்க்கைக்கு அதுவும் தேவைதானே.. அஷ்டலஷ்மியும் அவங்க வீட்டுல தாண்டவமாடுறாங்க.. போடி.. போய் நல்லபடியா அவரோடு குடுத்தனம் நட்த்தற வழியைப் பாரு..” என்று நல்லவிதமாகவே பெண்ணுக்கு அறிவுறையை வழங்கினார் அந்தப் பாசமான தாய்.
ஆனால் சத்யாவோ..
“அம்மா.. எல்லாம் சரிதான்.. படிப்பு, அழகு, கலர் எல்லாமே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. ஆனால் மனசு.. அதாம்மா.. எனக்கு அவர் மேல் காதல் வரலை.. என் மனசு அவர் மேல இல்லைம்மா..” என்று அழுத்தமாக ஆனால் தெளிவாகச் சொன்னவள்..
“நீ சொன்னியே கலர்.. அப்பா கலர் இல்லாமல் இருக்கலாம்.. ஆனா உங்க மேல் காதலாக இருக்கிறார்.. அந்தக் காதல், அன்பு, பாசம் இதான்மா உங்களை ஆசையா இருக்க வைக்கிறது.. அதனால் உங்களுக்கு அவர் குறை தெரியலை.. மனசு பொருந்தி நிறைவா வாழறீங்க..”
“ஆனால் நான்…. உண்மை அதுதாம்மா.. எனக்கு என்னமோ அவரைக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை.. அவர் மேல் காதல் இருந்தால் தானேம்மா.. நான் அவரைக் காதலிக்கலை.. பின்னே நீ சொன்ன எல்லாமே எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்?.. வாழ்க்கைக்கு ஆதாரமான மனசே பொருந்தலைன்னா.. மத்தது பத்தி யோசிச்சு என்ன பிரயோஜனம்?..”
“ப்ளீஸ் மா.. இனி இது பத்தி பேச வேண்டாம்.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்.. அத்தோடு இதைப் பத்தியெல்லாம் நான் கதிர்கிட்ட பேசலைன்னா நினைச்சீங்க.. அன்னிக்கு நான் தெளிவா எடுத்து சொல்லி இருக்கேன்.. மனசுக்கு பொருந்தாத இந்தத் திருமணப் பந்தத்திலிருந்து நான் விலகிக்கறேன் சொல்லிட்டு தான் ஒதுங்கினேன்..” என்றாள் சத்யா முடிவாக.
“அடிப்பாவி.. இப்படியா டி சொல்லுவே?.. அதான் அந்தப் புள்ளை எங்ககிட்ட கூடச் சொல்லிக்காம கிளம்பிருச்சு.. இப்படி விரட்டி அடிச்சிருக்கியே?.. பெரிசா மனசு மனசுன்னு பீத்திக்கிறீயே.. அது உனக்கு வேணா இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அவருக்கு அது இருக்கப் போய்த் தான் நாகரீகமா கிளம்பி போயிருக்காரு..”
“இன்னொருத்தவங்களா இருந்தா கத்தி கூச்சல் போட்டுக் கலாட்டா பண்ணி.. உன்னைச் சந்தி சிரிக்க வைச்சிருப்பாங்க.. கதிர் தம்பி மனசு உங்கிட்ட இருக்குடி.. அவர் உன்னைக் காதலிக்கிறாரு.. அவர் பார்வை ஒண்ணே போதுமே.. அவர் உன்னை விரும்பறதாலத்தான் உனக்கு விட்டுக் கொடுத்து போயிருக்காரு..
“காதல் இருந்தால் தாண் புரிதல் வரும்.. அவர் உன்னைப் புரிந்து கொண்டிருக்கிறார்.. ஆனால் நீ கொஞ்சம் கூட அதைப் புரிஞ்சிக்காமல்..” அது வரை அமைதியாகவும், நல்லதனமாகவும் மகளுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருந்த ரேவதி..
“சரி டி அதை விடு..இதுக்குப் பதில் சொல்லுடி..”
“அவர் மேல் உனக்கு காதல் இல்லைன்னா.. அப்போ இன்னும் அந்தப் பிரகாஷை நினைச்சிருக்கியா?.. உனக்கு வெட்கமாயில்ல?.. அடுத்தவன் புருஷனை நினைக்கலாமாடி?.. இப்படிப் பேச வைக்காதே என்னை.. அசிங்கமா இருக்கு.. அவ உன் அக்காடி.. கதிர் உனக்குப் பொருத்தமானவன் டி.. அவனை அலட்சியப் படுத்தாதே..”
“கிடைச்ச வாழ்க்கையைத் தங்களுக்கு ஏற்றதா மாத்திக்கறதுல வேதாவும் சரி.. கதிரும் சரி இரண்டு பேருமே புத்திசாலிகள்.. ஆனா நீ.. எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடாதே” என்று சீறினார் ரேவதி..
“அதைத்தான் நானும் சொன்னேன்.. ச். சீ.. இந்தப் பழம் புளிக்கும்ன்னு விட்டுட்டு போற டைப்பும் இல்ல நான்.. பிரகாஷை எனக்குப் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரிஞ்சும்..அந்த அதி புத்திசாலிகளை ஒண்ணா சேர்க்காமல், தேவையில்லாமல் எங்களையும் இதில இழுத்து விட்டு பிரச்சனையை உண்டு பண்ணி.. இப்போ புரியுதா.. யார் மேல் தப்புன்னு.. இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு?..”
தன் தந்தையைத் திரும்பி பார்த்து சத்யாவின் கண்களில் குரோதம் இருந்தது.. இது அத்தனைக்கும் காரணம் நீங்கள் தான் என்ற குற்ற சாட்டும் இருந்தது.
“ச்.சீ.. என்ன பொண்ணுடி நீ.. கிடைச்ச வாழ்க்கையைத் தக்க வச்சிக்கத் துப்பு இல்லை.. இதுல உங்கப்பாவை குத்தம் சொல்ல வந்திட்டே?.. எங்களைச் சொல்லணும் டி.. நாங்க வளர்த்த விதமே சரியில்லை.. என் அக்கா கல்யாணி அவ பொண்ணை நல்லா வளர்த்திருக்கா.. அந்தப் பொண்ணு வேதாவுக்குக் கால் தூசி வருவியாடி நீ.. அப்பா பேச்சை மீறிச்சா.. வாயை கூட அன்னிக்கு திறக்கலை.. நீ என்னடான்னா.. உங்கப்பா பேரை நல்லா காப்பாத்திட்டேடி..” என ஆத்திரத்தில் மிண்டும் திட்டத் தொடங்கினார் ரேவதி.
“ரேவதி.. விடு.. முடிஞ்சி போனதைப் பத்தி இனி பேசி பிரயோஜனமில்லை.. நான் தப்பு பண்ணினேன்.. என் பெண் என் பேச்சை கேட்பாள்ன்னு கனவு கண்டு விட்டேன்.. என்னை நல்லா செருப்பால அடிச்சா மாதிரி கேள்வி கேட்டா பாரு.. போதும்மா.. எனக்கு என்ன உரிமை இருக்கு என் பொண்ணு வாழ்க்கையை என் கையில் எடுக்க.. இது ஒண்ணே என் வாழ்க்கைக்குப் போதும்.. இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.. ஆமாம் நான் தப்பு தான் பண்ணினேன்..” என்ற ராஜ்குமார் முகத்தில் சொல்லலெணா வேதனைப் பிரதிபலித்தது.
“அய்யோ என்னங்க இது.. நீங்க கவலைப்பட்டுப் பி.பி. ஏத்திக்காதீங்க.. ஏற்கனவே உங்களுக்கு இவளால பிரஷர் ஏறினதுதான் மிச்சம்.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க உட்காருங்க..” என்ற ரேவதியோ..
“சத்யா.. கடைசியா.. நான் கேக்குறேன்.. நீ உன் புருஷனோடு குடித்தனம் நடத்த போவியா இல்லையா?..”
என்ன இவர்கள்.. எத்தனை முறை இவர்களுக்கு எடுத்துச் சொல்வது?.. கொஞ்சம் கூட என் மனசைப் புரிந்து கொள்ளாமல்.. இனி வேறு வழியே இல்லை.. ஆனது ஆகட்டும் என்று தீர்மானித்த சத்யா..
“அம்மா.. அப்பா.. உங்களை வருத்தபட நான் சொல்லவில்லை.. ப்ளீஸ்.. என்னைப் புரிஞ்சிக்கங்கன்னு சொல்லறேன்.. பிடிக்காத இந்தப் பந்தத்திலிருந்து நான் வெளியே வந்து இரண்டு மாசம் ஆச்சு.. இதில் கதிரே ஒத்துக் கொண்ட பின்னால பிரச்சனையை வளர்த்து சிக்கலாக்காதீங்க.. நான் எப்பவும் போல உங்கள் மகளாகத்தான் இருக்க நினைக்கறேன் மா.. ப்ளீஸ்.. என்னை விட்டு விடுங்களேன்..”
“போதும் சத்யா.. நிறுத்துடி.. நீ எங்க மகளாக இருப்பதில் எங்களுக்கு விருப்பமில்லைடி.. கதிரோட மனைவி எங்க மகள் சத்யான்னு சொல்லறதுலத்தான் எங்களுக்குப் பெருமை.. உன்னால இது முடியுமா?.. அந்தப் பெருமையை உங்கப்பாவுக்கும், எனக்கும் கொடுப்பியா?..”
இதுதான் உங்கள் முடிவா எனச் சத்யா அவர்களையே பார்க்க.. ரேவதியோ.. உன் முடிவை சொல்லுடி எனப் பார்வையால் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
சத்யா தலையாட்டி முடியாது எனத் தன் பார்வையைத் தழைக்க.. அடுத்த நொடி..
“இன்னிக்கு இப்படி ஒரேயடியாய் பிடிவாதம் பிடிக்கிறவ அன்னிக்கே கல்யாணத்தை வேண்டாம்னு பிடிவாதம் பிடிகச்சிருக்கனும்டி.. அப்போ எங்கே போச்சு இந்த மூர்க்க புத்தி…இனி சொல்லித்தான் என்ன பயன்..ஓ.கே டி.. இனி நாங்க உன்னை வற்புறுத்த மாட்டோம்.. உன் முடிவை சொல்லிட்ட.. சரி.. இப்போ எங்க முடிவையும் நீ கேட்டுக்கோ.. எங்களுக்கு எங்க மகள் சத்யா வேண்டாம்.. கதிரோடு மனைவி சத்யா எங்க மகள் அப்படிங்கறவத்தான் வேணும்.. என்ன அப்படிப் பார்க்கிறே?..
“நீ கிளம்பலாம் இந்த வீட்டிலிருந்துன்னு சொல்ல வர்றோம்..” என்றார் ரேவதி அடக்கப்பட்ட கோபத்தை உள்ளுக்குள் வைத்து அமைதியாக..
“மாம்.. டாட்.. வாட் நான்சென்ஸ்..” சத்யா அலற..
“நிறுத்துடி.. இதான் எங்க முடிவு..நாங்க இரண்டு பேரும் உங்க அப்பா ஆபிஸ் விஷயமா ஃபாரினிக்கு போறோம்ன்னு உனக்கு ஏற்கனவே தெரியும்.. அதுக்கு முன்னால உன்னைக் கதிர் வீட்டுல சேர்க்கலாம்ன்னு நினைச்சோம்..அதான் இப்போ நீ உன் இஷ்டத்தை சொல்லிட்டியே?..”
“சோ.. இதுக்கு மேல பேச்சுக்கு இடமில்லை.. உன் வாழ்க்கை.. உன் இஷ்டம்.. தப்பு செஞ்ச பெத்தவங்களோடு நீ இருக்கணும்னு எந்தவித அவசியமும் இல்லை.. உன் வழியைப் பார்த்துப் போகலாம்.. நீ அந்தத் தம்பியை டைவர்ஸ் பண்ணுவியோ இல்லை தக்க வைச்சிப்பியோ இனி உன் சாமர்த்தியம்..”
“ஒரு வேளை எங்க மகளா நீ வரணும்ன்னு நினைச்சா.. கதிரோட மனைவின்னு அந்தஸ்துல இங்க வரலாம்.. எங்க வீடு உனக்குத் திறந்திருக்கும்..அதுவரை.. கெட் அவுட் அஃப் திஸ் ஹவுஸ்..” என்ற ரேவதி வாசலைக் காட்டியவர்..
அதிர்ந்து போன சத்யா தன் தந்தையைப் பார்க்க..
“ரேவதி.. நாம நாளைக்கே அமெரிக்காவுக்குக் கிளம்பலாம்..ஏற்கனவே நமக்கு ஓபன் டிக்கெட் தான்.. நான் செக் பண்ணுகிறேன்.. இவளுக்காக யோசித்து இத்தனை நாளாக நம் பிரயாணத்தைத் தள்ளி போடாச்சு.. இனி நம் வழியைப் பார்க்கலாம்..” என்றவர் திகைத்து நின்ற சத்யாவை பார்க்காமல் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
ரேவதியோ தலையாட்டி விட்டு சமையலறைக்குள் நுழைந்து கொள்ள.. சத்யாவுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று புரியவில்லை.
தான் எடுத்த முடிவில் தன் மகள் படும் வேதனை அறிந்திருந்த அந்தத் தாய் தன் துக்கத்தை அடக்கச் சமையல் கட்டுக்குள் ஒளிந்து கொள்ள இடம் தேட..
தந்தையோ இந்தக் கதிக்கு தன்னால்தானே மகளுக்குக் கஷ்டம் என்று தன்னையே நிந்தித்துக் கொண்டு அலுவலக அறையில் அடைக்கலமானார்.
கத்தி எடுக்காமல், ரத்தம் சிந்தாமல் அங்கே அறுவை செய்ய முடியவில்லை..
கொட்டிவிட்டால் அள்ள முடியாத வார்த்தைகளின் வீரியம், பேசுபவர்களுக்கு அப்பொழுது தெரிவதில்லை.
இது அனைவருக்கும் பொருந்தும்.. தெரியாமல் சிதற விட்ட வார்த்தைகள் நல்லதுக்கு என்றாலும் கூடப் பிரச்சனைகளைப் பெரிதாக்கிவிடும் அபாயமும் உண்டு..
யோசிக்காமல் சிதற விட்ட வார்த்தைகள் தீட்டிய கத்தியின் கூர்மையைப் போன்றது.. எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பித் தாக்கும் வல்லமை படைத்தது.
அன்று சத்யா யோசிக்காமல் பிரச்சனையைப் பெரிது படுத்தி வார்த்தைகளை விட்டாள்.. தன் வாழ்க்கையைத் தொலைத்தாள்.
அதற்கு மேல் அங்கே நின்று கொண்டிருக்கச் சத்யா சொரணை அற்றவள் இல்லையே.. பெற்றவர்களை விட ரோஷமானவள் என்று நிரூபித்தவள்..
வேகமாகத் தன்னறைக்குள் நுழைந்து.. தான் சம்பாதித்து வாங்கிய உடைகள், அணிகலங்களை எடுத்துப் பெட்டியில் வைத்தவள் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவள் செல்லுவதைப் பார்த்துக் கொண்டிருந்த ரேவதியோ இல்லை ராஜ்குமாரோ வாயைத் திறக்கவில்லை..
சத்யாவும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியேறியவள்.. தன் இரண்டு பெட்டிகளுடன் ஏதாவது ஆட்டோ வருகிறாதா எனப் பார்க்க.. பிரகாஷின் கார் அவளருகில் வந்து நின்றது.
பிரகாஷை பொருத்தவரை அதெல்லாம் பெரிய விஷயமாக இல்லை.. பெட்டியைப் பார்த்ததும் சரி ஊருக்குப் போக டிசைட் பண்ணிவிட்டாள் போல என்ற மனப்போக்கு.. இலகுவாகக் கேட்டான்..
“ப்ச்.. சாகப் போகலாமான்னு யோசிக்கிறேன்.. ஆனால் நான் என்ன தப்பு செஞ்சேன் சாவதற்கு.. அதான் லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போகலாம்ன்னு டிசைட் பண்ணி வெயிட் பண்ணறேன்..” என்றாள் கூலாக.
“என்னாச்சு சத்யா?.. எதுக்கு ஹாஸ்ட்டல்?.. என்ன விஷயம்.. முதல்ல அந்தப் பொட்டியை கொடு..” என்றவன் காரின் பின்னிருக்கையில் வைத்து விட்டு..
“வா.. ஏறு.. எதுவா இருந்தாலும் வீட்டில போய்ப் பேசிக்கலாம்.. நீ எங்க வீட்டுக்கு வா.. நான் இல்லையா உனக்கு?..”
“இல்லை.. பிரகாஷ்.. அது சரி வராது.. உனக்கு இந்தப் பத்தி புரியலை.. இட்ஸ் ஆல்ரையிட்.. நம்ம ஆபிஸ் ஸ்டாப்ஸ் நிறைய லேடீஸ் ஹாஸ்ட்டல்ல தங்கி இருக்காங்க.. நான் அவங்களோடு ஜாயின் பண்ணிக்கிறேன்..”
“ஏய்.. சத்தி.. முதல்ல லூசு மாதிரி உளருகிறதை நிறுத்து.. என்ன நடந்ததுன்னு சரியா சொல்லு.. எப்படி அத்தையும், மாமாவும் உன்னை ஹாஸ்ட்டலுக்கு அனுப்ப சம்மதிச்சாங்க.. அப்புறம் நான் சொல்லறேன் என்ன பண்ணலாம்ன்னு.. சொல்லும்மா.. என்ன நடந்தது?.. அப்படியே ஏதாவது உனக்குப் பிடிக்காதது நடந்திருந்தாலும் நான் இருக்கேன் உனக்கு..”
பரிவுடன் கேட்ட பிரகாஷின் மேல் சத்யாவுக்கு எப்பொழுதும் போல அன்பு சுரந்தது.. எப்படி என்னைப் புரிந்து கொள்கிறான்.. இவன் தான் எவ்வளவு நல்லவன்..’
“ஆஸ் யூஷுவல்.. அம்மா, அப்பாவும் கதிரோடு நான் போய் வாழணும்ன்னு சொன்னாங்க.. நான் மறுத்துப் பார்த்தேன்.. எனக்கு நிறைய டைம் கொடுத்தாச்சாம் யோசிக்கிறதுக்கு.. இனிமேல் அவரோடு மனைவியா இருந்தால் தான் எனக்கு இடமாம்.. ப்ளா…ப்ளா… இதெல்லாம் தான் நடந்தது..”
“இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும் சொல்லு.. வீட்டை விட்டு போன்னு சொன்ன பின்னால வெளியே போறதுதானே டிசென்ஸி.. அதான் பொட்டியை தூக்கிட்டு நடையைக் கட்டிட்டேன்..” என்றாள் சத்யா வெகு சாதாரணமாக.
“புல்ஷிட்.. இந்த அத்தைக்கும் ,மாமாக்கும் என்னாச்சு?.. யாரோ ஒரு மூன்றாவது மனுஷன் கதிருக்காக.. அவங்க செல்ல பெண்ணையே வீட்டை விட்டு துரத்தனுமா?.. இதை இப்படியே விட முடியாது.. நீ என்னோடு வா.. நான் போய் அவங்களே என்னன்னு கேக்கறேன்..”
“ஷ்.. பிரகாஷ்.. விடு.. அதுக்குத்தான் சொன்னேன்.. நான் வரலைன்னு.. எனக்கு இனிமேல் அந்த வீட்டுக்கு போறதுக்கு இஷ்டமில்லை.. உன்னால முடிஞ்சா என்னை லேடீஸ் ஹாஸ்ட்டல் எதிலாவது சேர்த்து விடு.. தட்ஸ் இனஃப்..”
“சரி.. நீ முதல்ல காரில ஏறு..” என்றவன் நேராகத் தங்கள் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
என்ன பிரகாஷ் இது என்று கேட்டவளுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் காரை நிறுத்தியவன்.. வேலைக்காரனை அழைத்துச் சத்யாவின் பெட்டிகளை மாடியில் இருக்கும் விருந்தினர்கள் அறையில் வைக்கச் சொல்லி உத்தரவிட்டவன் சத்யாவை கையைப் பிடித்துத் தங்கள் வீட்டிற்குள் இழுத்து வந்தான்.
ஹாலிலேயே அமர்ந்திருந்த ருக்மணியும், ராஜேந்திரனும் பெட்டியை எடுத்துச் செல்லும் வேலையாளை வினோதமாகப் பார்த்தபடி அவனைப் பின்னால் தொடர்ந்து வந்த சத்யாவையையும், பிரகாஷையும் பார்த்தனர்.
“வாம்மா சத்யா.. ரெண்டும் பேரும் சாப்பிட்டிங்களா?.. இல்லை எடுத்து வைக்கச் சொல்லவா?..” என்று கேட்ட ருக்மணி..
“பிரகாஷ்.. யாரோட பெட்டிடா.. என்ன ஏதாவது ஹெவி ஷாப்பிங்கா?..” எனச் சிரித்தார்
“நோ மாம்.. அது சத்யாவோடது.. மாம்.. டாட்.. இனி சத்யா நம்ம வீட்டிலதான் இருக்கப் போகிறாள்..” என்றான் மொட்டையாக.
“வாவ்.. சூப்பர்.. சத்யா வாடா.. உனக்கு இல்லாத இடமா?.. தாராளமா நீ தங்கலாம்.. ஹப்பாடி எனக்கும் இனிமேல் நல்ல கம்பெனி கிடைக்கும்.. வா.. வா.. “ என்றவர் எழுந்து போய்த் தன் செல்ல மருமகளைக் கட்டிக் கொண்டார்.
சத்யாவுக்கோ தன் அத்தையின் பாசத்தைக் கண்டு மனம் குளிர்ந்தது.. அதே சமயம் வீட்டுக்குள் வந்தவளுக்கு ஒரு காப்பிக் கூடக் கொடுக்காமல் தன்னை வீட்டை விட்டுப் போகச் சொன்ன தன் பெற்றவர்களை எண்ணி முகமும் சிணுங்கியது.
தன் மனைவியின் முக மலர்ச்சியும், சத்யாவின் முகச் சுருங்கியதையும் பார்த்திருந்த ராஜேந்திரனுக்கோ விஷயம் ஏதோ பெரியது எனத் தோன்ற..
“அவங்களுக்கு என்னப்பா.. நல்லா திவ்யமா அவங்க வீட்டுல இருக்காங்க.. நாளைக்கு ஃபாரீனுக்குப் போறாங்களாம்.. சத்யாவைதான் வீட்டை விட்டு அனுப்பி வைச்சிட்டாங்க..”
“இல்லைப்பா.. நான் சரியாத்தான் சொன்னேன்.. இனி சத்யா இந்த வீட்டில் தான் இருப்பாள்..” என்றவன் விஷயம் முழுவதையும் எடுத்துச் சொல்ல.. திகைத்துப் போனவர்கள்..
“உங்க தங்கச்சிக்கும், எங்கண்ணனுக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு நம்ம பிரகாஷ் சொல்லறா போல.. பொண்ணைப் புரிஞ்சிக்காம இது என்னன்னு இப்படி நடந்துக்கிறா அவ..” கோபமாக ருக்மணி ஆரம்பிக்க..
“ஷ்.. சும்மா இரு ருக்கு.. சத்யா.. உங்க அம்மா, அப்பா மேல நான் எந்தத் தப்பும் சொல்லலை.. அவங்க உனக்கு நல்லதுதான் செய்வாங்க.. ஏன் மா நீ யோசிக்கக் கூடாது..இது உன்னுடைய வாழ்க்கைம்மா..”
“பிரகாஷ்.. என்னடா இது.. உன் மனசுல என்ன நினைச்சி பேசறே?..” ராஜேந்திரனும் குரலை உயர்த்த..
“பிரகாஷ்.. லீவ் இட்.. நான் கிளம்பறேன்.. என்னால உங்களுக்குள்ள பிரச்சனை வேணாம்.. ஐ கேன் ஸ்டே இன் ஹாஸ்ட்டல்..” சத்யா இடை மறிக்க..
“நீ சும்மா இரு சத்யா.. இதுக்கெல்லாம் எங்கப்பாதான் காரணம்.. அவருக்கும் இதுல ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு.. அன்னிக்கு சும்மா இல்லாமல் அந்தக் குமரேசு மாமாகிட்ட வாயை விட்டாரு.. அதுனால நம்ம லைஃபே மாறி போச்சு.. இப்போ நாலு பேர் வாழ்க்கையும் திசை மாறியாச்சு..
“யு ஆர் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்.. என்னோட உறவினள், நீ இங்கதான் இருக்கப் போறே சத்யா.. உனக்கு இல்லாத இடம் எனக்கும் இங்க இல்லை.. நீ போனா நானும் இந்த வீட்டை விட்டு போறேன்..” என்றான் பிரகாஷ் ஒரு முடிவாக.
“ராஜ்.. இதை நான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கலை.. சத்யா நம்ம வீட்டு குழந்தை.. நீங்க தோள்ளையும், மாரிலும் போட்டு மாமனாகச் சீராட்டி வளர்த்த குழந்தை.. உங்க தங்கச்சி புரிஞ்சிக்கலைன்னாலும், நீங்க அவளைப் புரிஞ்சிப்பிங்கன்னு நினைச்சேன்.. சே.. நீங்களும் சராசரியா பிஹேவ் பண்ணுறீங்க..
“என் பிள்ளை இல்லாத வீட்டில இனிமேல் எனக்கு என்ன வேலை.. நானும் அந்தக் குழந்தைகளோடு போகிறேன்..” என ருக்மணி சொல்ல..
அதுவரை தன் உணர்வுகளை அடக்கி வைத்திருந்த ராஜேந்திரன்..
“சத்யா.. நீ உள்ள போம்மா.. உன் முடிவு எனக்கு மனசுக்கு வருத்தமா இருந்தாலும்.. இப்போ என்னால ஒண்ணும் செய்ய முடியாது.. ஒரு நாள் உன் மனசு மாறும்மா.. அதுக்காகக் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.
“என் பையன் சொன்னா மாதிரி இது எல்லாவற்றுக்கும் நானும் ஒரு காரணம் தான்.. முழுக்க முழுக்க என்னால ஆன தவறுதான்.. என்னால சரிப்படுத்த முடியலைன்னாலும்.. அதுக்காக உங்களை வெறுக்க முடியாது..
“நீ நான் தூக்கி வளர்த்த குழந்தைதான்.. இந்தச் சமயத்தில ஒரு மாமனா நான் கை கொடுக்கணும்.. நீ தாராளமா இங்கே இருக்கலாம்.. இது உனக்கும் உரிமையான வீடுதான்.. போம்மா.. போய் ரெஃப்ரஷ் பண்ணிட்டு சாப்பிட வாங்க..” என்றார் உறவுகளின் அருமையைப் புரிந்து வைத்திருந்த அந்தப் பெரிய மனுஷர்.
“தாங்க்ஸ் மாமா.. தாங்க்யூ அத்தை..” என்ற சத்யா..
“பிரகாஷ்.. தாங்கஸ் பார் அன்டர்ஸ்டாண்டிங்க் மீ.. யூ ஆர் சோ குட்.. என் ரூமுக்கு போறேன்.. குளிச்சிட்டு வந்து ஒரு வெட்டு வெட்டணும்.. பசி ஆளை கொல்லுது..” எனச் சிரித்தபடி ஓடினாள் சத்யா.
பிரகாஷும் “தாங்க்ஸ் டாட்..” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு சத்யாவுடன் சிரித்தபடி இணைந்து கொண்டான்.
சிரித்தபடி செல்லும் அவர்களைப் பார்த்த ராஜேந்திரனுக்கோ மனம் பாரமானது.. முதல் முறையாக உண்மையில் நான் தவறு செய்து விட்டேனா என யோசிக்கத் தொடங்கினார்.. இனி இதை எப்படிச் சரி படுத்து முடியும் என நினைக்கையில் வேதாவின் பாசமான முகம் தோன்றிச் சிரித்தது.
‘கடவுளே.. நீ தான் இவர்கள் நால்வரின் வாழ்க்கையையும் சரிப்படுத்த வேண்டும்.. நீ ஆட்டி வைக்கும் பொம்மைகள் அவர்கள்.. இவர்கள் வாழ்க்கை என்ற கயிறு உன் கையில் இருக்கிறது.. நீயே அதன் சூத்திரதாரி.. உன் மேல் பாரத்தைப் போட்டு நான் இணைத்த இவர்கள் பந்தம் சிறக்க நீ தான் வழி நடத்த வேண்டும்.. உன் மேல் என் பாரத்தை ஏற்றி விட்டேன்.. இனி காப்பது உன் பொறுப்பு..’ எனத் தன் பிரார்த்தனையை அந்த எல்லாம் படைத்த இறைவன் மீது வைத்தார் அந்த நல்ல மனிதர்.