கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 27

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 27

இரண்டு மாதங்கள் கழிந்திருந்த நிலையில் இங்கே சங்ககிரியில் கதிர்.......

ஏனோ காலையில் எழுந்ததிலிருந்து கதிருக்கு சோர்வாகவே இருந்தது..

மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.

சத்யாவின் ஞாபகம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.. இன்றோடு அவர்களுக்குத் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் பூர்த்தியாகின்றன.. எதையோ நினைத்துக் கொண்டு வேதாவின் கல்யாணத்திற்குக் கிளம்பி.. கடைசியில் அன்று அவனுக்குத் திருமணமானதை விதி என்றுதானே சொல்ல வேண்டும்.

தலையணையில் மீண்டும் தலை சாய்த்தவன் மனமோ காய்ந்து இருக்க.. கண்களும் இரவு முழுவதும் தூங்காத எரிச்சலில் வறண்டுதான் போயிருந்தது.. இதென்ன வாழ்க்கை.. முடியவே முடியாதா.. எங்கே போகிறது இந்த வாழ்க்கை பயணம் என்ற சலிப்பும்.. அவனுக்குள் தோன்ற..

விதியின் வசத்தால் சேர்ந்த இருவரும் இன்று அதே விதியின் கதியால் திசைக்கொருவராய் பிரிந்து இருப்பதை என்னவென்று சொல்லுவது.. அவன் மனம் அலைபாய்ந்தது.

‘என்னவெல்லாம் பேசி விட்டாள்.. அவளுக்குத் தான் தகுதியே இல்லை என்பது போல.. எப்படி இவளால் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது.. வாய் இருப்பது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச முடியுமா?..’

‘கொஞ்சமாவது யோசித்தாளா?.. இவள் ஒவ்வொரு வார்த்தையும் தன்னை எப்படித் தீயில் எரிப்பதைப் போல உடலெல்லாம் அனலாகக் கொதித்ததே..’ ஆனாலும் ஒவ்வொரு முறையும் தன்னைக் கேலி செய்தோ இல்லை வருத்தப்பட என்று குத்தியதோ கூட அவனை எரித்து விடவில்லை என்பது நிஜமே..

அதை இப்பொழுது ஆராய்ந்தால் அவள் மேல் தனக்கிருந்த காதலின் ஆழம் தான் அவள் அத்தனை பேசி வெறுத்து ஒதுக்கினாலும் அவள் மீது தனக்கு வெறுப்பு வராமல் காத்ததோ..

அவளை விட்டுப் பிரிந்து இருப்பது உயிர் வரை வலித்தாலும் அவனுக்குக் கஷ்டமாகவே இல்லையே.. அவளுக்காகத் தன் உயிரையே கொடுக்கலாமே.. அது ஏன்?.. என்று புரிந்த போதோ.. தன் உயிரே அவள் தானே என நிதர்சனம் உரைக்க.. இப்பொழுது அவள் மகிழ்ச்சியை அவனுக்குப் பிரதானமாக இருந்தது.

அவளை எப்பொழுதிலிருந்து காதலிக்கத் தொடங்கினான் என்றால் அவனுக்கே புரியவில்லை.. திருமணமான தினத்திலிருந்தே அவளை விரும்பத் தொடங்கியதாகவே அவனுக்குப் பட்டது.

'இனியாவது அவள் சந்தோஷமாக இருப்பாளா?.. ஹும்.. ஏன் இருக்க மாட்டாள்.. இதைத்தானே அவள் எதிர்பார்த்தாள்..' வறட்சியுடன் சிரித்துக் கொண்டான்.

‘இன்னும் கையெழுத்து இட்டு விடுதலைப் பத்திரம் கொடுக்காததுதான் பாக்கி.. சொல்லமுடியாது இன்னும் கொஞ்சம் நாட்களில் டைவர்ஸ் நோட்டீசையும் எதிர்பார்க்கலாம்..’

'ம்.. அவளாவது நிம்மதியாக இருக்கட்டும்.. ஆனால் தனக்கு இனியொரு வாழ்க்கை?.. நெஞ்சம் கசந்தது.. வாழ்க்கை.. தனக்கு வாழ்க்கை இல்லாமல் எங்கே போகப் போகிறது.. அப்படி எல்லாம் தன்னை விட்டுவிட்டுப் போய் விடுமா என்ன?..'

‘அப்படி என்ன நான் தப்பு செய்தேன்?.. பெரியவர்கள் தானே இந்தத் திருமணத்தை நடத்தினர்?.. நான் கேட்கவில்லையே?.. அவர்களாகவே பேசினார்கள்.. அவர்களாகவே தீர்மானித்தார்கள்.. அப்படியும் நான் எனக்கு அவள் பொருத்தமா என்று தானே கேட்டேன்?.. என்ன ஒன்று நான் செய்த ஒரே தப்பு.. அவளை நான் நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.. பெண்ணுக்கு இதில் சம்மதமா என்று..'

‘பெரியவர்கள் விளையாடிய இந்த ஆட்டத்தில் பெண்கள் இருவரின் வாழ்க்கையல்லவா பகடையாய் உருட்டப்பட்டு விட்டது?..'

'இனி அடுத்தது என்ன என்று யோசிக்கக் கூடப் பிடிக்கவில்லையே?.."

இனி தான் என்ன செய்யப் போகிறோம்.. மனதைச் சோகம் பிசைய.. தன் இறந்து போன அன்னையை நினைத்தவன்.. ‘அம்மா எப்பவும் போல எனக்குத் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் நீங்க தாங்க..’ என்று வேண்டிக் கொண்டவன் தன்னைச் சமன் படுத்திக் கொண்டான்.

அந்தத் தைரியமும், தன்னம்பிக்கையில் தானே இந்த இரண்டு மாதங்களாக எதைப்பற்றியும் நினைக்காமல் தான்.. தன் வேலை என்று உழன்று கொண்டிருந்தான்..

அவளின் நினைவுகளை யாரும் அறியாமல் தனக்குள் புதைத்துக் கொண்டான். அந்த நினைவுகளின் மேலே தன் வேலைகளைப் பாலமாக அமைத்துக் கொண்டான்.

தொழில்.. தொழில்.. தொழில்.. அது ஒன்றே அவன் உயிர் மூச்சானது.. தன்னுடைய வேதனைகள் அனைத்தையும் தன் தொழிலில் தொலைத்தான்.. காலையில் நான்கு மணிக்கு எழுந்தால் இரவு பதினொன்று இல்லை பணிரெண்டு கூட ஆகிவிடும் அவனுக்கு.

வயல் வரப்புக்களைப் பார்வையிட்டு.. பின்னர்த் தங்களுடைய கரும்பு ஆலைகளுக்கும், ஜவ்வரிசி தொழிற்சாலை.. பிறகு மதியத்தில் கல்லூரி எனப் பறப்பவன்.. மீண்டும் இரவு எழு மணிக்கு மேல் தன்னுடைய அரிசி மில்கள் இப்படிப் பார்வையிட்டு நேரம் கழித்து வீட்டுக்கு திரும்புகிறவன்.. கடனுக்காக ஏதோ பெயரளவில் உணவை உண்டு விட்டு மீண்டும் தன்னுடைய மடிக்கணினியில் மூழ்குபவன்.. எப்பொழுது கண்ணை அசறுகிறதோ அப்பொழுது உறங்கி…. தன்னை வருத்திக் கொண்டு.. என அவன் நேரங்கள் கழிந்தன.

இருபத்தி நான்கு மணி நேரம் இப்பொழுதெல்லாம் அவனுக்குப் போதவில்லை.. எப்பொழுதும் வேலைப் பளுதான்.. தன்னை மறக்க.. தன் தொழிலை விரிவுபடுத்த முயன்றான்.

இது தானாக ஏற்படுத்துக் கொண்ட சுமை அல்லவா?.. ஆனால் அதை மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டான்.

அவளை மறக்கத் தன்னை வேலையில் தொலைத்தவனுக்கு அன்று ஏனோ காலையில் எழுந்திருந்ததிலிருந்து அவள் நினைவுகள் மேலோங்க.. சற்று சோர்ந்து படுத்து விட்டான்.

இன்று இதே தேதியில் அவனுக்கும் அவளுக்கும் திருமணமான நாள்.. ஒவ்வொரு மாதமும் இந்த நாளை நினைவு கூர்பவனுக்கு அவளுக்கு அந்த நாள் நினைவில் இருக்குமா எனச் சந்தேகம் தோன்றியது.

‘பாவி.. உனக்கு நான் என்ன துரோகம் பண்ணினேனடி.. இப்படிப் பிரிந்து செல்ல முடிவெடுத்து விட்டாயே?..’

யாரோ தன் அருகில் நெருங்கி வருவதை உணர்ந்தவன்.. ஒருவேளை அவள் என்னிடம் வந்துவிட்டாளா?.. அவளுக்கும் இந்த நாள் நினைவு வந்துவிட்டதோ.. ஆசை வெட்கமறியாது.. சட்டென ஒருவித எதிர்பார்ப்பில் கண்களைத் திறந்தவனுக்கு ஏமாற்றமே..

“ம்ப்ச்..” மீண்டும் கண்களை மூடினான்.

அவனது அப்பத்தா கண்ணாத்தா அவன் அருகே கட்டிலில் அமர்ந்தார்.. அவருடன் அவன் தந்தை சக்திவேலும் உடனமர்ந்தார்.

“ஏலேய் பேராண்டி.. என் ராஜா.. என்னப்பா பண்ணுது உடம்புக்கு.. என்னாச்சு கண்ணப்பா.. விடிஞ்சி இம்மா நேரமா நீ கீழேயே வரலையே??.. விடிஞ்சும் விடியாத கருக்கல்லுல வயக்காட்டுக்கு போயிடுவியே?..”

“உங்க அப்பாரு.. எம் மவன் இப்போதேன் சொல்லுதான்.. நீ அவன் கூட இன்னிக்கு காலையிலே வரவேயில்லைன்னு.. என் பேராண்டிக்கு என்னாச்சோன்னு பதறியடிச்சி ஓடி வாரேன்..”

“என்னாச்சு அப்பு.. எதுக்கு இப்படிப் படுத்திருக்கே?.. மேலுக்கு சுகமில்லையா?.. சொல்லு ராஜா.. ஒரு நாளும் இப்படிச் சோர்ந்து படித்ததில்லையே..நம்ம வைத்தியனை வரச் சொல்லவா?..” பரிவுடன் கேட்டவர் அவன் தலையைப் பாசமாக வருடிக் கொடுத்தார்.

அவர் பின்னாடியே வந்த அவனது தந்தையோ எதுவும் பேசாமல் அவன் காலருகில் அமர்ந்தவர் அவன் கால்களை மெல்லப் பிடித்து விட்டார்.

பதறி எழுந்தமர்ந்தான் கதிர்.

“அய்யோ.. என்னப்பா.. எனக்கு ஒண்ணுமில்லை.. என் காலை நீங்க பிடிச்சிவிட்டுட்டு.. வேண்டாம்ப்பா.. ஏற்கனவே நான் என்ன தப்பு பண்ணேன்னு தெரியலை.. என் வாழ்க்கை இப்படித் தனிமரமா நிக்குது.. இதுல நீங்க வேறு என் காலை அமுக்கி.. வேணாம்ப்பா..” எனத் தந்தையின் கைகளைத் தடுத்து பற்றியவன் அப்படியே தன் முகத்தைப் பதித்தான்.. அவர் கைகளில் ஈரத்தை உணர்ந்தாரோ?..

பதறிப் போனார் சக்திவேல்.. எப்பொழுதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் சற்று அமைதியாகவே இருக்கும் கதிர் இன்று எதற்கு இப்படிப்பட்ட பெரிய பேச்சுக்களைப் பேசுகிறான்?.. அவர் நெஞ்சம் பதறியது.

தன் மனைவியை இழந்து இப்பொழுது தாங்கள் பெற்ற தங்கள் செல்வங்களுக்காகவே வாழ்ந்து வருபவர்.. இன்று தன் மூத்தமகன்.. அவர்கள் தலை வாரிசு கண் கலங்குகிறான் என்றால்..

“என்னப்பா.. என்னாச்சு.. நீ கண்ணீர் சிந்துற அளவுக்கு அப்படி என்னாச்சுப்பா..”

“அப்பு.. நீ பதறாதே.. பேராண்டிக்கு ஒண்ணும் இருக்காது.. ராத்திரி பகலு பார்க்காமல் இப்படி வேலையை இழுத்து விட்டுவிட்டுத் திரியறான் இல்ல.. அதான் களைப்பா சோர்ந்து படுத்திருப்பான்.. உடனே பொண்டாட்டி ஞாபகம் வந்திருக்கும்.. தூக்கம் இல்லாமல் அவளை நினைச்சிருப்பான்.. கண்ணு சிவந்திருக்கும்..” எனத் தான் பெற்ற மகனை ஆறுதல் படுத்தி விட்டு..

“பேராண்டி.. இங்கன என் முகத்தைப் பாரு ராஜா.. எதுக்கு இப்படிப் பீலீங்க்ஸ் விடறே?.. பொண்டாட்டியை பிரிஞ்சி இப்படி யாராவது அழுவாங்களா?.. அய்யே சின்னப் பிள்ளையா நீ.. முதல்ல போய் முகம் கழுவி வா ராஜா.. இன்னிக்கு சக்தியை வண்டியை எடுக்கச் சொல்லறேன்.. மூணு பேருமா போவோம் பட்டிணத்துக்கு..போய் முதல்ல என் பேத்தியை கூட்டிட்டு வந்திடலாம்..”

“போதும்.. அவ வேலைக்குப் போனது.. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிப் பிரிஞ்சி இருக்க முடியும் சொல்லு.. புதுசா கல்யாணம் ஆகி பத்து நாளு கூடச் சேர்ந்து இருக்கலை.. அப்படி என்ன பொல்லாத வேலை இங்க இல்லாத பட்டிணத்தில் கிடக்கு..

“அப்படி வேலைக்குப் போகணும்னாலும் நாந்தேன் உன்னோடு போகலாம்ன்னு சொல்லிப்புட்டேனே?.. இன்னும் என்னவாம் அவளுக்கு.. கிளம்பு ராஜா.. அந்தச் சத்யா புள்ள வந்துட்டா எம் பேரன் தெம்பா எழுந்து உட்கார்ந்திட மாட்டான்..”

கண்ணாத்தா தன் பேரன் பசலை நோயில் வாடுகிறானோ.. பெண்டாட்டியைப் பிரிந்த ஏக்கத்தில் இப்படிச் சோர்ந்திருக்கிறான்.. என எண்ணி அவனை உற்சாகமூட்ட விழைந்தார்.

திடுக்கிட்டு நிமிர்ந்து சரியாக உட்கார்ந்தான் கதிர்.. அய்யோ இப்போ எப்படி அப்பத்தாவைச் சமாளிப்பது.

‘என் சோர்வுக்குச் சத்யாவை பிரிந்து இருப்பதுதான் காரணமென்று இவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து.. இப்பொழுது சென்னைக்குக் கிளம்ப வேண்டும் என்று தீர்மானித்து.. கடவுளே.. இது என்ன சோதனை..’

“அதெல்லாம் வேணாம் அப்பத்தா.. விடு.. அவளுக்கு வேலை இருக்கு இல்ல.. அப்படியெல்லாம் நினைச்சபடி கூப்பிட்டுகிட்டு வர முடியாது..” கதிர் பதற..

கதிர் உண்மையை மறைத்திருந்தான்.. அன்று சத்யாவுடன் ஏற்பட்ட பிரிவைப் பற்றி இவர்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.. சத்யாவுக்கு இன்னும் அவள் எடுத்துக் கொண்ட வேலை முடியவில்லை என்றும்.. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே அவளால் வரமுடியும் என்றும் சொல்லி சமாளித்திருந்தான்.

நடுநடுவில் அப்பத்தா விடாமல் கதிரை ஊருக்குப் போய்ச் சத்யாவை பார்த்து விட்டு வரச் சொன்னாலும்.., அவன் வேலைப் பளுவை காரணம் காட்டி இத்தனை நாட்களாக ஒத்தி வைத்துச் சமாளித்தான்.. அவனுக்குள் ஒரு வேளை அவளாகத் திரும்பி வந்துவிடுவாளோ என்ற நப்பாசை இருந்ததாலும்..

கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் சத்யாவின் பெற்றோர் வெளிநாட்டுக்குப் போவதாகவும்.. இனி தங்கள் மகளை எண்ணி அவன் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் என்றும்.. அவனுக்கு விருப்பம் இருந்தால் வேறு திருமணம் கூடச் செய்து கொள்ளச் சொல்லியவர்கள்.. தங்கள் மகளின் நடத்தைக்காக மன்னிப்பையும் வேண்டி விட்டுச் சென்றிருந்தனர்.

ஆனால் இன்று அப்பத்தா.. இப்படி எதையோ எண்ணிக் கொண்டு உடனே பட்டிணத்துக்கு போகலாம் என்றவுடன் கதிருக்கு வந்த பதற்றத்தில் வேண்டாம் என மறுத்தான்.

என்றுமே நிதானமாக எதையும் செய்யும் கதிர் இந்தளவுக்குப் பதட்டப்பட்டவுடன் அப்பத்தா இதில் என்னவோ வேறு விஷயம் இருக்கிறது என ஊகித்தவர்..

“கதிரு.. உண்மையைச் சொல்லு.. அந்தப் புள்ள சத்யா வேலைன்னுதான் உன்னோடு வரலையா?.. நீ பேசறத பார்த்தா.. என்னவோ உண்மையை மறைக்கப் பார்க்கிற மாதிரி இருக்கு.. இல்லைன்னா இத்தனை நாளா சும்மா இருப்பியா நீ?.. போனவகிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை.. நீ எப்ப கேட்டாலும் அதுக்கு வேலைன்னு சொல்லறே??.. நாங்க பேசணும்னு சொன்னாலும் எங்களைப் பேச விட மாட்டேங்கிற?.. என்ன நடந்தது ராஜா.. எதுவா இருந்தாலும் சொல்லுப்பா..”

“கதிர்.. என்னச்சுப்பா.. ஆத்தா பேசறதை பார்த்தா.. எனக்கென்னவோ ஏதோ தப்பு நடந்தா போலத் தோணுது?.. என்ன தம்பி.. உண்மையைச் சொல்லு.. எதையும் நாம சரிபடுத்தி விடலாம்.. சொல்லுப்பா..”

இப்பொழுது அவனது தந்தை சக்திவேலும் துளைத்தெடுக்க..

வேறு வழியில்லாமல் அவன் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சென்னைக்குச் சென்றது முதல் அங்கே நடந்தது அத்தனையும் சொல்லி முடித்தவன் சத்யா இனி இங்கு வாழ வரமாட்டாள் எனச் சொன்னான்.

வேதா பிரகாஷை விட்டுப் போனது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.. சத்யா தன் மாமா வீட்டில் தங்கியிருப்பதை அவளது பெற்றோர் மூலம் அறிந்திருந்தவன்.. வேதா பிரகாஷை விட்டுப் பிரிந்ததை அவனுக்கு அவர்கள் தெரியப்படுத்தி இருக்கவில்லை..

அதற்கேற்றாற் போல.. அதே ஊராக இருந்தாலும் குமரேசன் குடும்பத்தவர்களுடன் அவர்களுக்குப் பேச்சு வார்த்தையும் இல்லை..வேதாவை மறைந்து போன விஷயம் யாருக்கும் தெரியப்படுத்தாததால் சத்யாவும், வேதாவும் ஒரே வீட்டில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் இன்னும் அவளைத் தப்பாக எண்ணப் பிடிக்கவில்லை.. அதனால்தான் விஷயத்தை மறைத்திருந்தான்.. சத்யாவுக்குத் தன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்று மட்டும் சொன்னான்.. தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல், இத்தனை நாட்களாக உண்மையாக இருந்த தன் சுற்றங்களுக்கு அடுக்கடுக்காகப் பொய்களைச் சொல்லி மறைத்தான்.

அவ்வளவுதான் விஷயத்தைக் கேட்ட சக்திவேல் அதிர்ச்சி அடைந்து அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட.. கண்ணாத்தாவோ வெகுண்டு எழுந்தார்.

“ஏம்ப்பா.. கதிரு.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கு.. ஆனால் நீ இரண்டு மாசமா மறைச்சிருக்கியே?.. அந்தப் புள்ள சத்யா விவரமான பொண்ணு நினைச்சேன்.. ஆனால் இப்புட்டு விவரமுன்னு தெரியாமைப் போச்சே?.. இதான் படிச்ச புள்ளைங்களோடு பட்டிணத்து நாகரீகமோ?..”

“ஆத்தாடி.. எங்களை மாதிரி கிராமத்து ஜனங்களுக்கு இந்த நீக்குப் போக்கெல்லாம் தெரியாதே?.. என்ன தைரியம் சாமி.. இப்படிப் புருஷனை வேண்டாம்ன்னு சொல்லிட்டு அப்பன் வீட்டுல குந்திட்டு.. நான் பார்த்தாலும் பார்த்தேன்.. இப்படித் திமிர் எடுத்தவளை பார்க்கலை..”

“ஏலே சக்தி.. வண்டியை எடுடா.. அவங்க அப்பனையும், ஆத்தாளையும் ரெண்டு வார்த்தை கேட்காமல் விடறதில்லை.. பொண்ணு வீம்பு பிடிச்சா.. செவிடு பிய்ய நாலு அறை வைக்காமல்.. செல்லம் கொஞ்சி வீட்டிலே வைச்சிக்கப் பார்க்கராளுகளோ.. கிளம்பு கதிர்.. அவங்களைக் கேக்கிற கேள்வியில நாண்டுகிட்டு சாகணும்..” கண்ணாத்தா கையை வீசி வீசிக் கத்தி கத்தி கதிரை கதிகலங்க விட்டார்.

“ஷ்.. ஆத்தா.. சித்த சும்மா இரு.. அவன் முழுசா விவரம் சொல்லட்டும்.. விஷயத்தைக் கேட்காமல் இப்படி எதுக்குக் கிடந்து ஆடறே..” சக்திவேல் தாயை அடக்க..

கதிர் நொந்தே போனான்.. தன் அப்பத்தாவின் பாசத்தை அறியாதவனா இவன்..

“விடு அப்பத்தா.. பிடிக்கலைன்னு சொல்லறவங்களைக் கையைக் காலையா கட்டி இழுத்துட்டு வரணும்.. நல்லா கேட்டுக்கோ அப்பத்தா.. அப்பா.. நீங்களும் தான்.. திரும்பித் திரும்பி இனி இதைப் பத்தி பேசாதீங்க..”

“நீங்க நினைக்கிற மாதிரி சத்யா அன்னிக்கு பார்ட்டில நடந்ததுக்காக அப்படிச் சொல்லலை.. அவளுக்கு இந்த ஊரு பிடிக்கலையாம்.. என்னைப் பிடிக்கலையாம்.. நான் அவளுக்குப் பொருத்தமில்லையாம்.. கலர் இல்லையாம்.. அழகில்லையாம்.. படிப்பும் இல்லையாம்.. அவளுக்கேத்தவன் நான் இல்லையாம்.. மொத்தத்துல எனக்குப் பொண்டாட்டியா இருக்கவே விருப்பமில்லையாம்..போதுமா..”

“அதான்..அவளுக்குப் பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டாம்னு நான் அவளை விட்டு விட்டு வந்துட்டேன்.. இல்லையில்லை.. அவள் என்னை ஒதுக்கிட்டு போயிட்டாள்..”

“என்ன காரணமுன்னு கேட்டீங்களே?.. முழு விவரத்தையும் புட்டு புட்டு வைச்சிட்டேன்..”

ம்.. இனிமேல் இதைப் பத்தி பேசவேணாம்.. இதுக்கு மேலையும் போய் நான் அவகிட்ட கெஞ்ச முடியுமா சொல்லுங்க.. பிடிக்காதவளோடு வாழ எனக்கும் விருப்பமில்லை.. போதும்ன்னு இருந்திட்டிட்டேன்.. இப்போ சொல்லுங்க.. நான் செஞ்சது சரிதானே அப்பத்தா?..”

“சொல்லுங்கப்பா.. எங்கம்மாவும், நீங்களும் காதலோடு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டு சந்தோஷமா நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கீங்க.. ஆனால் நான்..”

“ஒண்ணுமட்டும் நிச்சயம்ப்பா.. நானும் அவளை மனப்பூர்வமா விரும்பினேன்.. அவளைக் கல்யாணம் பண்ண முதலா காதலிக்கத் தொடங்கினேன்.. அவளை உசுராதான் நினைச்சேன்.. அதனால்தான்பா.. அவ சந்தோஷம் என்னைப் பிரிஞ்சி இருக்கிறதல இருக்குன்னா.. அதை அவள் கேட்ட அந்தப் பிரிவை அவளுக்குக் கொடுக்க நினைச்சி விலகி நிற்கிறேன்..”

“நான் செஞ்சது சரிதானே.. அம்மா இருந்தா என்னைச் சரின்னு தானே சொலுவாங்க..” என்றவன் கண்களின் தன் இணையைப் பிரிந்த வேதனையில் கண்ணீர் ஊற்றெடுத்தது..

பெற்றவனையும், தன்னை வளர்த்தவரையும் பார்க்க தெம்பில்லாமல் சன்னலருகே சென்று மேலே தெரிந்த வானத்தை அங்கிருந்து வெறித்தான்..

‘நிர்மலமாய் வெளித்திருந்த வானம் போல அவன் வாழ்க்கையும் வெளுத்து விட்டதோ..’

என்ன சொல்லுவார்கள் அவர்கள்.. வாய் மூடி மௌனித்தனர்.. ஒரு வளர்ந்த ஆண்மகன்.. தன்னை மீறி கண்ணீர் விடும் அளவிற்கு வந்து விட்டான் என்றால் இத்தனை நாளாக எத்தனைத் துன்பங்களை அடைந்திருப்பான்.

அய்யோ இந்தப் பையன்.. இப்படித் தன் வேதனையைத் தன்னுள் புதைத்து இத்தனை நாளாக மறுகிக் கொண்டிருந்ததோ.. இது புரியாமல் நாமும் இருந்து விட்டோமே என அவர்கள் இருவரும் கண்ணீர் ஊற்றெடுக்கச் சிலையாகி நின்று கதிரின் முதுகை வெறித்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேர அமைதிக்குப் பின்னால் முதலில் சுதாரித்தவன் கதிரேதான்.. மெல்லத் திரும்பியவன், கண்ணீர் வழிய நின்றிருந்தவர்களைக் கண்டு வேதனையடைந்தாலும்.. அப்படியே விட்டுவிடாமல் அவர்கள் அருகே சென்றான்.

“இதுவே முதலும், கடைசியுமா இருக்கட்டும் அப்பத்தா.. இனி இந்தப் பேச்சு வேணாம் சரிதானே.. உன் பேரன் எதையும் தாங்குவான்னு சொல்லுவியே?.. விடு.. இப்படி அழுவாதே.. அவ போனால் போகட்டும்.. அவ நம்ம வீட்டுக்கு சரிவரமாட்டா.. நான் நல்லா வாழ்வேன் அப்பத்தா.. நீங்க ரெண்டும் பேரும் என்னை நினைச்சி கலங்கினா எப்படி?.. அப்புறம் வெற்றியும் கலங்கி போயிடுவான்.. நாம சந்தோஷமா முன்ன மாதிரி இருப்போம்.. சரியா?..”

“இப்போ போய் உன் கையால எனக்கு வெள்ளை பணியாரத்தை ரெடி பண்ணுவியாம்.. நான் குளிச்சிட்டு ஓடி வாறேன்.. பசி ஆளை கொல்லுது அப்பத்தா..” என்றவன்..

“அப்பா இன்னிக்கு நானும் உங்களோடு காலையிலேயே ரைஸ் மில்லுக்கு வர்

றேன்.. வெயிட் பண்ணுங்க..”

“ராசா..” என ஆறுதலாக அவனைக் கட்டிக் கொண்டார் அந்த மூதாட்டி.

“கதிரு உன்னை ஒண்ணு கேட்கலாமா?.. இன்னிக்கு முழுசா இதைபத்தி பேசிடுவோம்.. இதுக்குப் பிறகும் உனக்குப் பிடிக்கலைன்னா நான் இதைப்பத்தி பேசலைப்பா..”

“என்ன அப்பத்தா.. எதுவா இருந்தாலும் சொல்லு.. நான் கேட்டுக்கறேன்.. ஆனால் அந்தப் புள்ளையைக் கூப்பிட்டுட்டு வரலாம்ன்னு இதுக்கு மேலையும் சொன்னா.. ப்ளீஸ் அது மட்டும் வேணாம்..” என்றான் கதிர் அழுத்தமாக ஆனால் சற்று கண்டிப்புடன்.

“இல்லப்பா.. இது அது இல்லை..” என்றவர்.. தன் மகனின் கண்களையும் சந்தித்தார்.

‘இன்னும் எதற்கு ஆத்தா அவனுக்குப் பிடிக்காததைப் பேசி அவனை வருத்தப்பட வைக்கணும்..’ என்ற கேள்வி தொக்கி இருக்க.. தன் கண்களால் சற்று பொறு..’ என விவரம் சொல்லிவிட்டு..

“கதிர்.. நான் சொல்லறேன்னு உன் அப்பத்தாவை தப்பா எடுத்துக்காதே.. உனக்கு அங்க அம்மாவும், அப்பாவும் காதலிச்சி அந்தக் காலத்திலேயே கையைப் பிடிச்சவங்கன்னு தெரியும்.. காஞ்சனா உங்கப்பாவுக்காவே உயிர் வாழ்ந்தவ..”

“அவனுக்காகத் தன் குடும்பத்தையே தொலைச்சி கடைசி வரை வாழ்ந்து உயிரை விட்டவ.. அப்பேற்பட்ட காதல் அவங்க இரண்டு பேருக்கும்.. காதல்ன்னா என்னான்னு அவங்களைப் பார்த்து கத்துக்கணும்..இதை எதுக்குச் சொல்ல வாறேன்னா..

“நீ அந்தப் புள்ள சத்யாவை காதலிக்கறேன்னு வாய்க்கு வாய் சொல்லறே.. சரிதான்.. அவளுக்காக அவளோடு சந்தோஷத்துக்காக வாழ்க்கையை விட்டுக் கொடுத்து வந்தேன்னு சொல்லறீயே?.. அதுவாப்பா காதல் சொல்லு..”

“என்ன அப்பத்தா.. என்ன சொல்ல வர்றீங்க.. அவளுக்கு அதுதானே சந்தோஷம்ன்னு சொல்லுறா.. அதான் அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழட்டும்ன்னு விட்டுக் கொடுத்தேன்.. இது தப்பா?.. விட்டு கொடுத்ததினால என்னோடு காதல் இல்லைன்னு எப்படி நீங்கள் சொல்லலாம்?..” எரிச்சலடைந்தான் கதிர்.

‘இந்த அப்பத்தா எதற்கு மீண்டும் மீண்டும் இதே பேச்சை குத்தி கிளறுது.. குப்பைன்னு ஒதுக்கித் தள்ளிய பிறகு அதை மறுபடியும் கிளறினால் தொலைந்த வாழ்க்கை என்ன கிடைத்து விடுமா என்ன?.. நாத்தம் தானே மிஞ்சும்.. கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம இப்போ எதுக்கு அம்மாவை பத்தி பேசி.. அவங்களுக்கு இவ இணையாவாளா என்ன?.. தன் தாய் எங்கே?.. இந்தத் திமிர் பிடித்த சத்யா எங்கே?..’

“உன் மனசு புரியுது ராசா.. உங்க அம்மாவோடு எதுக்கு உன் பொண்டாட்டியை ஒப்பிட்டு பேசறேன்னு உன் உள் மனசு சொல்லு.. அதுக்குக் காரணமிருக்கு..”

“நான் அப்படிச் சொல்ல வரலை.. அந்த உத்தமிக்குப் பிறந்த நீ, உன் பொஞ்சாதி மேல வைச்சிருக்கக் காதலும் உசத்தி தான்.. அதை நீ இப்படித் தூக்கி போட்டுட்டு வந்திட்டியேன்னு ஆதங்கத்தில பேசறேன்..”

“ஆத்தா.. ரொம்பக் குழப்பறே.. காஞ்சனாவை விடு.. நாங்க அந்தக் காலம்.. இரண்டு பேரும் காதலிச்சோம்.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி வாழ்ந்தோம்.. என்னோட போததாத காலம் விதி எங்களைப் பிரிச்சி சதி செஞ்சிடுச்சு.. என்னைத் தனியா அல்லாட விட்டுட்டு அவ போய்ச் சேர்ந்தா..புள்ளைகளுக்காக நான் இருக்கணும் வேறு சொல்லிட்டு போயிட்டா..”

“இப்போ இவங்க கதையே வேற.. திடீர்ன்னு கல்யாணம்.. அந்தப் புள்ள பட்டிணத்து பொண்ணு.. நாம கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும்.. அப்போ அவங்க கேட்டவுடனே நம்ம கௌரவம் பெரிசா போச்சு.. விடு இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்.. எதையாவது பேசி அவனை வருத்தப்பட வைக்காதே..” எனச் சக்திவேலும் சற்று எரிச்சலுடன் பேசினார்.

“ஏன்டா இரண்டு பேரும் இப்படி அவசர பட்டா?.. நான் சொல்ல வர்றதை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு கதிரு.. நீ அந்தச் சத்யா புள்ளையை விரும்பற தானே?.. அதுக்கு முதல்ல பதில் சொல்லு..”

“அய்யோ அப்பத்தா.. என்னா நீ.. திரும்பத் திரும்ப ஒரே பல்லவியைப் பாடுறே.. எத்தனை வாட்டி சொல்லுவதாம்.. ஆமாம்.. அவளை எனக்குப் பிடிச்சிருக்கு.. அதான் அவளுக்கு என்னைப் பிடிக்கலையே?.. என்னை என்ன பண்ண சொல்லுறே?..”

“ம்.. ஒண்ணும் பண்ண வேண்டாம்.. முதல்ல அந்தப் புள்ளைக்குப் புடிச்சா போல நீ மாறுன்னு சொல்லறேன்..” எனச் சிரித்தார் அப்பத்தா.

“என்னடா புரியலையா?.. சரியாத்தான் என் பேத்தி சொல்லிருக்கா?.. ஏலேய் கேணப் பயலே?.. உன் பொண்டாட்டியை காதலிக்கிறீயே?.. இது கூடவா புரியலை?.. அவள் என்ன சொன்னா.. எதையும் தப்பா சொல்லலையே?..” என மீண்டும் சிரித்தார் அப்பத்தா.

“அப்பத்தா.. போதும்.. சிரிச்சது.. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு..” பல்லைக் கடித்தான் கதிர். அவன் கருத்த முகம் இப்பொழுது கோபத்தில் சிவந்து இன்னும் அவனை விகாரமாக்கியது.

“டேய்.. அடங்குடா.. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.. அது உன் விஷயத்தில சரியாதான் இருக்கு.. நல்லா யோசிச்சு பாரு.. அந்தப் புள்ள நீ படிக்கலை.. சித்த தாட்டியா இருக்கே.. பட்டிணத்து நாகரீகம் தெரியலைன்னு சொலிச்சு இல்ல.. அப்புறம் என்ன சொல்லிச்சு நீ படிக்காதவன்.. பொருத்தமில்ல அப்படிதானே சொன்னா என் பேத்தி..”

ஆமாம் எனத் தலையாட்டி தலை குனிந்தான் கதிர்.. என்னதான் இருந்தாலும் அவனும் ஒரு ஆண்மகன்.. ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்ட போது அவன் ஆண்மனம் சிணுங்கி அந்த அவமானத்தில் தலையைக் குனிய வைத்தது.

“இப்போ எதுக்குடா தலைய குனியறே?.. நீ தலையை நிமிர்த்தி என் பொண்டாட்டின்னு நிக்கிற காலம் வரப் போகுது?..பாரு..” என்றவர்..

“ஏன் பேராண்டி.. நீ அவளுக்காகப் பொருத்தமா ஏன் மாறக் கூடாது?.. அவளுக்குப் புடிச்ச மாதிரி நீ ஏன் இருக்கக் கூடாது?.. அவளைப் பிடிச்சிருக்கு.. அவளை நான் காதலிக்கிறேன்.. அவள் சந்தோஷத்துக்கு விட்டு கொடுத்தேன்னு வீரவசனமா பேசறீயே?.. உனக்கு ஏன்டா தோணலை.. அவளுக்குப் பிடிச்சா மாதிரி நான் இருக்கணும்ன்னு?..”

“அப்பத்தா.. ரொம்பக் குழப்பறே?.. கொஞ்சம் தெளிவாதான் சொல்லேன்..” தலையைச் சொறிந்த கதிரின் தலையில் சிரித்தபடி கொட்டு வைத்தார் கண்ணாத்தா.

“ம்.. சுரைக்காய்க்கு உப்பில்லை.. மரமண்டை.. நீ படிக்காதவன்னு பேத்தி சொன்னதுலே என்னடா தப்பு.. ஏலேய்.. அவளைப் பிடிச்சிருக்குங்கறே?.. அவளை விரும்பறே?..அப்போ ஏன் அவளுக்குப் பிடிச்சா மாதிரி நீதான்.. மாதிக்கக் கூடாதா என்ன?..

“எப்பவும் ஆம்பளைங்களுக்கு எத்தா மாதிரிதான் பொம்பளைங்க இருக்கணும்னு சட்டமிருக்கா என்ன?.. எத்தனை பொண்ணுங்க புருஷனுக்குப் பிடிச்சாமாதிரி தங்களை மாத்திகிறாங்க?”

“ஆப்படி ஏன் நீ மாறக்கூடாது?..அவ என்ன கேக்கறா?.. படிப்பை எதிர்பார்க்கிறா.. சரி அவ சொல்லறதுல நியாயம் இருக்கு.. அது படிச்ச பொண்ணு.. தனக்கு வர்றவன் படிச்சிருக்கணும் எதிர்பார்த்ததில தப்பு இல்லை.. உனக்குப் படிப்பு வராதுன்னு இல்லை.. இத்தனை தொழிலகளைப் பார்க்கிற உனக்கு இந்த காலேஜ் படிப்பு ஒரு பெரிய விஷயமா?.. நீ நினைச்சா சுலபமா படிச்சி பட்டம் வாங்கிடலாமே?.. உன் தம்பி இப்போ படிக்கலையா சொல்லு?..”

“அடுத்து என் பேத்தி என்ன கேட்டா?.. கலர் கம்மின்னு சொன்னாப்ல சொன்னே?.. அதை நாம் மாத்த முடியாது.. அழகுங்கறது ஆண்டவன் கொடுக்கிற வரம்.. நீ ஒண்ணும் மை கருப்பு இல்ல.. அதே சமயத்தில பால் வெளுப்பும் இல்லை..என்ன கொஞ்சம் கருப்புக்கு மேல மாநிறம்..வயல்லையும்,தோப்புலையும் அலைஞ்சி.. வெய்யிலுல காய்ஞ்சி கொஞ்சமா கருத்து தெரியறே?..”

“அதெல்லாம் ஒரு மேட்டரா?.. நீ டிப்டாப்பா நல்லா டிரைஸ்ஸ போடு.. அப்புறம் பாரு.. ஆளு ராஜா கணக்குல கம்பீரமா தெரியுவே?.. அப்புறம் பேத்தி ஏன் முகம் சுளிக்கப் போகுது?.. அதுக்கு ஏத்த ராஜகுமாரன் நீன்னு புரிஞ்சிக்கும்.”

“அப்புறம் என்ன சொல்லு.. கொஞ்சம் சதை பூசின உடம்பு.. ஆனா உன் உசரத்துக்கு அது சரியாத்தான் இருக்கு..இன்னும் நாலு பஸ்கி எடு.. கம்பை சுத்து.. ஒரே மாசத்தில வேண்டாத சதை குறைஞ்சி எப்படி எலும்பா மாறுதுன்னு பாரு..

“பணம்..அது நமக்குக் கொட்டி கடக்கு.. அதைப் பத்தி கவலையில்லை.. உத்யோகம் புருஷ லட்சணம்.. உனக்குன்னு சில தொழில்கள் இருக்கு.. அதுக்கு ஏத்த அந்தஸ்தும் இருக்கு.”.

“இன்னும் என்னப்பா.. அதுக்குப் பிடிச்சதை நீ செய்.. அப்புறம் பேத்தி உன் கால்ல விழுதா இல்லையான்னு என்னை வந்து கேளு.. அப்ப வந்து சொல்லறேன்..” என அப்பத்தா பிட்டு பிட்டு வைக்க..

கதிரோ.. தன் அப்பத்தாவே கூர்ந்து நோக்கியவன்..

“அப்பத்தா.. அப்படியெல்லாம் என்னை மாத்திட்டு பிறகு அவ என்னோடு வாழணும்ன்னா.. எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.. நான் எப்படியோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டு..எனக்காக..என் மனசைப் புரிந்த பெண்டாட்டியாகத்தான் நான் அவளை எதிர்பார்க்கிறேன்.. இப்படி நான் மாறினால் தான் என் மேல் காதல் அவளுக்கு வருமென்று நீங்கச் சொன்னால் அப்படிப்பட்டவளின் காதலே எனக்கு வேண்டாம் அப்பத்தா..”

“நான் இப்படியே இருந்திட்டு போறேன்.. அவளுக்குப் பிடிச்ச சந்தோஷமான வாழ்க்கையை அவள் வாழட்டும்..” என்றான் கதிர் அமைதியாக ஆனால் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“ஆத்தா.. அவன் சொல்லறதுல நியாயம் இருக்காத்தா.. விடு இந்தப் பேச்சை.. நான் தப்பு பண்ணி அவளைக் கட்டி வைச்சி என் மகன் வாழ்க்கையைப் பாழாக்கிட்டேன்.. விடு..நடப்பது இனி நடக்கட்டும்..”

“அதானே பார்த்தேன்..அப்பனும் மகனும் இன்னும் ஒண்ணா சேரலையேன்னு.. எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதானே..ஆம்பளை வர்கம்.. பின்னே எப்படிப் பேசுவீங்க..”

“ஏன் அப்பு.. ஒரு பொண்ணு கல்யாணம் கட்டி அவ பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு வருவா.. வந்தா அவ மொத்தமா உங்க குடும்பம், உங்க வீட்டு பழக்க வழக்கம், உங்க ஆசைன்னு இப்படி ஒவ்வொண்ணும் உங்க விருப்படி மாறி இருக்கணும்னு நீங்க பிரியப்படலாம்.. அவ உங்களைக் காதலிக்கணும்.. உங்க மனசு நோகமா பிரியமா இருக்கணும்.. சமைக்கணும்.. உங்களோடு வாழணும்.. பிள்ளைகுட்டியை பெத்துக்கணும்..”

“வர்ற பொண்ணு உங்களுக்கும்,உங்க குடும்பத்துக்கும் ஏத்தவளா இருந்தாதான் குடும்பம் ஒத்துமை குலையாதுன்னு சொல்லி சொல்லி அவளை உங்களுக்கு ஏத்தா மாதிரி மாதிட்டுத் தன்னைத் தியாகம் செய்யறா.. தன்னோடு ஆசா பாசங்கள் எல்லாத்தையும் தனக்குள்ள புதைச்சிட்டு உங்களுக்காக வாழ தயாராகிறாள்.”

“நீங்க என்ன அப்பு செய்யறீங்க அவங்களுக்காக.. ஏன் பெண்கள்தான் ஆம்பளைகளுக்கு ஏத்தா மாதிரி மாறணுமா?..நீங்க ஏன் அப்பு ஒரு மாறுதலுக்கு அவளுக்குப் பிடிச்சா மாதிரி மாத்திக்கக் கூடாது..”

“குடும்பம்ங்கறது ஒரு அமைப்பு.. அதில எல்லாரும் நேரா இருந்தாதான் எல்லாமே ஒழுங்கா போகும்.. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கோணலா இருந்தா எதுவும் உருப்படாது.. குடும்பத்தைக் கோயிலாக்கிறதோ.. இல்லை சீர்குலைக்கிறதோ ரெண்டு பேர்கிட்டையும் தான் இருக்கு..”

“யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தாதான் அந்தக் குடும்ப அமைப்புமே சீரா ஓடும்.. சும்மா சும்மா சண்டை போட்டுட்டு இருந்தா?.. ரெட்டை மாட்டு வண்டியில ஒண்ணு கோணலானால் வண்டி சாய்ந்து விழும்.. உனக்குத் தெரிஞ்சதுதானே..யோசிப்பா..”

“சத்யாவை காதலிக்கிறேன்னு சொல்லற நீ, ஏன் அவளுக்காக.. அவள் ஆசைப்படி மாறக் கூடாது?.. நீ செய்து காண்பி.. அவளுக்குப் பிடிச்சாப்போல உன்னைத் தயாராக்கு.. அப்புறம் பாரு..உன் மனசை புரிஞ்சிக்கிராளா இல்லையான்னு.. உன் காலடியில விழுந்து கிடப்பா பாரு..”

“தன் தப்பை உணருவா.. உன்னையே வந்து சரணடைவா.. யோசி அப்பு.. இந்த அப்பத்தா சொல்லறதுல அர்த்தம் இருக்கு..”

இத்தகையா தெளிவான விளக்கத்தைத் தன் அப்பத்தாவிடம் இருந்து எதிர்பார்க்காத கதிர் முதலில் திகைத்தாலும்.. அவர் சொன்னதை ஏன் செய்து பார்க்கக் கூடாது எனத் தோன்ற முகத்தில் புன்முறுவல் தோன்ற.. அப்படியே தன் அப்பத்தாவை புரிந்து கொண்ட பாசத்துடன் கட்டி அணைத்துக் கொண்டான்.

தன் தாயே காலையில் அவன் கேட்ட தீர்வை அப்பத்தாவின் மூலம் தெளிவு படுத்தி விட்டதாகத் தோன்றியது.

“சரிப்பா.. இனி நாங்க இதைப்பத்தி பேசலை.. போ ராசா.. நீயும் கலங்காதே.. ஆனால் நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு.. இப்போ போய்க் குளிச்சி ரெடியா வா.. சாப்பிடுவியாம்.. போப்பா..” என்ற கண்ணாத்தா.. அவன் தலையைத் தலையைத் தடவி கொடுத்து விட்டு.. தன் மகனுடன் வெளியேறினார்.

தலையைத் தடவி கொடுத்து விட்டு அப்பத்தா கீழே இறங்கியவர் மனதுக்குள் தன் பேரன் வாழ்வு இனி சரியாகிவிடும் எனத் தோன்ற.. அந்தச் சந்தோஷத்தில் வயது குறைந்ததைப் போலக் கீழே ஓடினார் பேரனுக்குக் காலை பலகாரத்தைத் தயார் செய்ய.

அடுத்த அரை மணியில் குளித்து,தயாராகிக் கீழே வந்த கதிரின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.

அத்தனை நாட்களாகத் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் போட்டு உலுப்பிக் கொண்டிருந்தவன் இப்பொழுது அவர்களிடம் நடந்ததைச் சொல்லிவிட்ட பிறகு ஒருவித மன நிம்மதி கிடைத்தது.

இனி அவர்களுக்காக வாழ வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவன்..

“அப்பத்தா டிபன் ரெடியா?..” எனக் குரல் கொடுக்க..

“தோ வந்திட்டே இருக்கேன் பேராண்டி..”

காலை உணவை தன் தந்தையுடன் சேர்ந்து உண்டவனுக்கு .. அன்று செய்யப் போகும் வேலைகளைத் திட்டமிடுவதில் உற்சாகம் பெருக.. அவருடன் வேலைக்குப் பயணித்தான்.

எப்பொழுதும் போல இல்லாமல் கடமைக்குத் தன்னை மறக்க வேலையில் தொலைத்துக் கொண்டிருந்தவன் இன்று பிறந்த தெளிவில் முழுமூச்சுடன் தன் பணியில் மூழ்கினான்..

*****************************************************************

Mohanapriya M

Well-known member

Appatha adidhoooollllll🤩🤩🤩🤩
 
Chellam

Well-known member
அப்பத்தாவிடம் காலத்திற்கேற்ப சிந்தனை.
 
Top