கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 31

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 31

அத்தை ருக்மணிக்கு மதியம் மூன்று மணிக்கு மேல் இன்று ஹாஸ்பிட்டலுக்குப் போக வேண்டும் என்று மாமா சொல்லியிருந்தது.. வேதாவுக்கு அப்பொழுதுதான் ஞாபகத்தில் வந்தது..

"மேடம்.. மணி இரண்டாச்சு.. உங்களுக்கு டாக்டர் அப்பாயின்மெண்ட் இருக்கே?.. இப்போ கிளம்பினால்தானே நாம இந்த டிராஃபிக்கில் சரியான நேரத்திற்குள் போக முடியும்.."

"ம்.. அதுவும் சரிதான்.. எனக்கு என்ன?.. நான் ரெடியாதான் இருக்கேன்.. ஆனால் சத்யா இன்னும் வரலையே?.. ராஜ் அவளுக்குச் நேற்றே சொல்லிவிட்டதாகச் சொன்னாரே?.. எனக்கும் காலையில திரும்பவும் ஞாபகப்படுத்த தோணலை.. நீ அவளுக்குப் போனை போடு.."

தலையாட்டி விட்டு வேதா நகர..

காலையில் பிரகாஷுக்கும், சத்யாவிற்கும் நடந்த வாக்குவாதத்தில் அன்று மருத்துவமனைக்குப் போக வேண்டியதை மறந்தே போயிருந்தார்.. ‘இன்னும் ஏன் சத்யா வரவில்லை..’

"என்ன வேதா.. சத்யா என்ன சொன்னா?.. வந்திட்டு இருக்காளாமா?.. பேசினியா?.."

"இல்லை மேடம்.. டிரை பண்ணிட்டு இருக்கேன்.. லைன் பிசின்னு வருது.. தெரியலையே?.." கடந்த பத்து நிமிடங்களாகத் தொடர்பு கொள்ள முயற்சித்த வேதாவுக்குப் பலன் பூஜ்யமே..

"சரி இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம்.. மணி இரண்டரை தானே ஆகுது.. போயிடலாம்.. முதல்ல நீ எல்லாத்தையும் ரெடி பண்ணி எடுத்து வை.. போய் ஹால்ல வெயிட் பண்ணுவோம்.."

அவர் இஷ்டப்படியே வீல் சேரில் அவரை அமர வைத்து.. எடுத்துச் செல்ல வேண்டிய மருத்துவ அறிக்கைகளுடன் தயாராகவே இருந்தாள் வேதா.

நேரம் கடந்ததே ஒழிய சத்யா வந்த பாடாய் இல்லை.. ருக்மணி பொறுமை இழக்கத் தொடங்கினாள்.

‘இவ என்ன பொண்ணும்.. கொஞ்சம் கூட வர வர்ர பொறுப்பே இல்லை.. ரேவதி சொல்லறது சரிதான் போல.. இப்படிக் கூடவா இந்தப் பொண்ணு இருக்கும்..’

“மேடம் நாமளே போயிடலாமா?.. இன்னும் கால் மணி நேரம் தான் இருக்கு டாக்டர் கொடுத்த நேரத்திற்கு.. இப்போ கிளம்பினாலே மூன்றரை ஆகிடும்..”

அவளை ஏற இறங்கப் பார்த்தா ருக்மணிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. ‘இவள் என்ன லூசா..’

‘அவ என்னடாவென்றால் ஆளையே காணம்.. அப்படி என்னத்தைதான் ஆபிஸ்ல வெட்டி முறிக்கிறாளோ?.. பிரகாஷ் காலையில் அவளைத் திட்டியது கூடச் சரிதான்..

இவ என்னவோ லேட்டாச்சு போகலாம்ன்னு..’

“உம்.. எப்படிப் போக.. பறந்து போகலாமா?.. உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?.. அவ இன்னும் வரலையேன்னு நானே கடுப்புல இருக்கேன்.. இதில நீ வேற போகலாமா.. டைம் ஆச்சுன்னு.. தொணதொணத்திட்டு..”

“முதல்ல திரும்பவும் அவளுக்குப் போனை போடு.. இல்லை பிரகாஷுக்கோ.. இல்லை உங்க மாமா.. இல்லையில்லை அவரால முடியாதுன்னு சொல்லிட்டுத்தான் போனார்.. முதல்ல சத்யாக்கு பேசு..” சுள்ளென எறிந்து விழுந்தார் ருக்மணி.

முகம் வாடினாலும்.. அதை மறைத்து வேதா பேசாமல் மறுபடியும் சத்யாவுக்குச் செல்போனில் அழைத்துப் பார்க்க.. அவளோ எடுப்பேனா என்று இருக்க..

அவள் முகத்திலிருந்தே அறிந்த ருக்மணி.. “சரி விட்டுத் தொலை.. நாளைக்குப் போகலாம்.. ஒரே வெறுப்பா இருக்கு.. என் கால் சரியா இருந்தா நான் ஏன் இப்படி அடுத்தவர்களை எதிர்பார்க்கவேண்டும்.. நானே எட்டு ஊருக்கு போயிட மாட்டேன்..” எனத் தன் வீல் சேரை தள்ளத் தொடங்கினாள்.

“மேடம்.. நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா.. நானே உங்களை அழைச்சிட்டு போறேன்.. வாசல்ல டிரைவர் இருக்காரு.. இல்லைன்னாலும் என்னால சமாளிக்க முடியும்..”

“அதெல்லாம் வேண்டாம்.. உனக்கு அங்கெல்லாம் எப்படி அழைச்சிட்டு போகணும்ன்னு தெரியாது.. இது உங்க ஊரு மாதிரி இல்ல.. இப்போ விடு அப்புறம் பார்க்கலாம்..”

“இல்ல மேடம்.. சார்.. ஏற்கனவே இன்னிக்குக் கட்டாயம் உங்களுக்கு டாக்டரை பார்க்கணும்.. இல்லைன்னா அடுத்தப் பத்து நாளைக்கு டாக்டர் வெளியூருக்குப் போவதாகச் சொன்னார்.. நீங்க வாங்க.. நான் சமாளிப்பேன்.. எனக்குத் தெரியும்.. எங்கம்மாவோடு நான் தான் போயிருக்கேன்.. இல்லைன்னாலும் நீங்களும் தான் வர்றீங்களே?..”

“உ ம்.. அது சரிதான்.. டிரைவரை கூப்பிடு.. எப்படியும் ஐ கேன் மேனேஜ்.. உனக்குப் பேசத் தெரியலைன்னாலும் எனக்குப் பழகிய ஊர்தானே..” பந்தாவாகச் சொன்ன ருக்மணியைக் காரில் வாட்ச்மேனின் உதவியுடன் உட்கார வைத்து விட்டு.. டிரைவருக்காகத் தேட.. சமயம் பார்த்து அவனோ கண்ணில் படவில்லை.

“ச்..சை.. இன்னிக்கு எந்த நேரத்தில முழிச்சேனோ?.. காலையிலிருந்து ஒண்ணும் சரிபடலை.. விடு வேதா.. ஏற்கனவே மணியாச்சு.. இதுக்கு மேல போய்.. கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லை இங்க ஒருத்தருக்கும்..”

சட்டென டிரைவர் சீட்டில் அமர்ந்த வேதா சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டாள்..

“மேடம்.. நீங்க சரியா உட்கார்ந்துகோங்க.. வாட்ச்மேன்.. நீங்க வீட்டை பார்த்துக்கங்க..நான் மேடமுக்கு ஹாஸ்பிட்டல் வரை போயிட்டு வந்து விடுகிறோம்..” எனச் சொன்னவள் கையில் அடுத்த நொடியில் கார் பறந்தது.

“ஏய்.. வேதா.. என்னடி பண்ணறே?.. உனக்குக் கார் ஓட்டத் தெரியுமா?.. அய்யோ.. வேண்டாம்டி.. நிறுத்துடி வண்டியை.. எங்கையாவது வண்டியை இடிச்சிடாதே.. அடிப்பாவி.. வேதா.. விளையாடாதே.. என்னைக் கொன்னுடுவே போல இருக்கே.. உன்னைப் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு என்னைப் போட்டு தள்ள நினைச்சிட்டியா?..”

கோபமாக அலறி கத்திக் கொண்டிருந்த ருக்மணியை அலட்சியமாகத் திரும்பிப் பார்த்த வேதா,

“ஏன் பட்டிக்காட்டுக்குக் கார் ஓட்டத் தெரியாதுன்னு நினைச்சீங்களோ?.. நான் நல்லாவே கார் ஓட்டுவேன்.. எங்கப்பா எனக்குக் கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து லைசென்ஸும் எடுத்து கொடுத்திருக்காரு.. அடுத்து எங்க வீட்டிலேயும் கார் உண்டுங்கிறது உங்களுக்கு மறந்துடுச்சோ? நீங்க தைரியமா உட்கார்ந்து வாங்க..” என்று அலட்சியமாக சொன்ன வேதா..

“ஹாங்க்.. என்ன சொன்னீங்க மேடம்.. உங்களைப் பழி வாங்கப் போட்டு தள்ளிடுவேனா?.. அந்த மாதிரி அல்ப புத்தியெல்லாம் எனக்குக் கிடையாது மேடம்.. எங்கம்மா என்னை அப்படி வளர்க்கலை.. எதிரியா இருந்தாலும் அவங்க மேலையும் பாசத்தையும், கருணையையும் காட்டணும்னு சொல்லித்தான் வளர்த்திருக்காங்க..” என்றாள் அலட்சியமாக.

அதற்கு மேல் வாயை திறப்பாரா என்ன?.. அமைதியாக இருந்தார் ருக்மணி..

வேதாவின் புதுப்பது பரிணாமங்களில் அவருக்குக் குழப்பமாகவே இருந்தது.. அவளது அக்கறையும், பரிவும், பாசமும்.. இத்தனை நடந்த பிறகும் மீண்டும் பெற்றோர்களிடம் செல்லாமல்.. தன் காலில் நிற்க எதிர் நீச்சல் போடுவதும்.. இப்பொழுது அவர் கண்களுக்குப் புது மனுஷியாகவே அவளைத் தோற்றுவித்தது.

“மேடம்.. வாங்க.. ஹாஸ்பிட்டல் வந்தாச்சு.. மெல்ல.. மெல்ல.. நான் ஹெல் பண்ணுறேன்..” என்றபடி ருக்மணியை இறக்கி.. வீல் சேர் உதவியுடன் ஹாஸ்ப்பிட்டல் வரவேற்பு பெண்ணிடம் சென்றாள்.

ருக்மணி அவளிடம் பேசத் தொடங்குவதற்கு முன்பே அவருடைய மருத்துவ அறிக்கைகளைக் கொடுத்து விட்டு.. ‘தங்களுக்கு மூன்று மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கொஞ்சம் தாமதமாகி விட்டதற்கு மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டு, டாக்டரை பார்க்கலாமா?.. எங்கே செல்ல வேண்டும்’ என்று மென் புன்னகையுடன் கேட்ட வேதாவை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ருக்மணி.

‘இந்தப் பட்டிக்காட்டுக்கு இப்படிப் பதவிசாகப் பேசத் தெரியுமா.. எவ்வளவு தைரியமாக அந்த ரிசெப்ஷன் பெண்ணிடம் பேசுகிறாள்.. பரவாயில்லை.. படிப்பு ஏறவில்லையென்றாலும்.. வெளி இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்கிறதே.. அந்த மட்டும் பிழைச்சிப்பாள்..’

அடுத்தப் பத்தே நிமிடங்களில் டாக்டரின் அறை வாசலில் ருக்மணியை அமர வைத்து விட்டு.. அவருடைய அழைப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள் வேதா.

“வேதா.. சமாளிச்சிட்டே.. நாட் பேட்.. இப்படிப்பட்ட பெரிய இடங்களில் என்ன செய்வீயோன்னு நினைச்சேன்.. நான் பேசறதுக்கு முன்னாடியே நீயே சிச்சுவேஷனா ஹாண்டில் பண்ணிட்டே.. பரவாயில்லை.. தேறிட்டே..” தன் கெத்தை விடாமல் குத்தினார்.

“இதுல என்ன இருக்கு மேடம்.. இது நம்ம ஊரு.. அங்க ரிசெப்ஷன்ல இருக்கிற லேடி அழகா எனக்குக் கைட் பண்ணிட்டாங்க.. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இல்லையா?.. என்ன எனக்கு உங்களை மாதிரி எல்லாம் ஸ்டெய்லா இங்கிலீஷ்ல அலங்கார வார்த்தைகளெல்லாம் போட்டுப் பேசத் தெரியாது?.. ஏன் நம்ம ஊரு தமிழ்ல பேசினா பதில் சொல்லாமல் போய் விடுவாங்களா என்ன?.. எல்லாருக்கும் எல்லாம் வந்திடாது மேடம்..”

“அத்தோடு மொழி என்ன பெரிய பிரச்சனையா என்ன?.. சொல்லுங்க மேடம்.. மொழிங்கறது ஒரு பாஷை.. அது நம்ம எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கு ஒரு செய்கை.. வெளிப்பாடு.. உங்க பாழையில கம்யூனிகேஷன்.. வாயால் பேசி நம் மனதை தெரியப்படுத்துகிறோம்.. பேசத் தெரியாதவங்க.. அதான் ஊமையெல்லாம் செய்கையாலையே சமாளிக்கலையா என்ன?.. ஒரு வேளை அவங்களுக்கு நான் பேசறது புரியலைன்னா.. ஆக்ஷன் தான் இருக்கே..”

“எந்தப் பாஷையா இருந்தாலும் மற்றவர்கள் மனசைப் புண்படுத்தாமல் பேசினாலே போதும்.. அவ்வளவுதான் மேடம்.. இதுல என்ன இருக்கு.. நான் என்ன பெரிசா சமாளிச்சிட்டேன்.. எனக்குத் தெரிந்த வரை சூழ்னிலைக்கு ஏற்ப நடந்து கொண்டேன்.. இதுக்கு என்னைப் போய்ப் பாராட்டுகிறீர்களே?..” என்று தன்மையாகப் பேசியவள்..

“என்னவோ இன்னிக்கு டாக்டர் லேட்டா வந்ததால நம்மை உள்ளே போகச் சொல்லிட்டாங்க.. இல்லைன்னா நாம வந்ததே வீணாகப் போயிருக்கும் இல்லையா?..” என அத்துடன் பேச்சை மாற்றினாள்...

அதே நேரத்தில் அவர்களுக்கு டாக்டரிடம் இருந்து அழைப்பும் வந்தது.

உள்ளே டாக்டரை சந்திக்கச் சென்ற ருக்மணிக்கு மனசுக்குள் வேதாவை மெச்சிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை..

அடுத்த அரை மணி நேரம் ருக்மணிக்குக் கால்கட்டைப் பிரித்து.. அவருக்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்து முடித்து விட்டு.. சற்று முன்னர் எடுத்த மருத்துவ அறிக்கைகளைப் பார்த்த மருத்துவருக்கோ முகத்தைச் சுருக்க வைத்தது.

“மிஸர்ஸ்..ராஜேந்திரன்.. நீங்க உங்க உடம்பைப் பார்த்து கொள்வதே இல்லையா?..” சலிப்பாகத் தொடங்க..

“என்னாச்சு டாக்டர்.. இன்னும் கால் சரியாகலையா?.. நான் நீங்க சொன்னாப்ல காலை பார்த்திட்டேனே?.. பெட் ரெஸ்ட்லதான் இருந்தேன்..”

“என்னம்மா காலை பார்த்துண்டா போதுமா?.. அதெல்லாம் நல்லாதான் கூடி இருக்கு.. நான் அதைப் பத்தி பேசலை மேடம்.. பாருங்க.. உங்க ரிப்போர்ட்ல நீங்க அனிமிக்குன்னு சொல்லுது?.. நல்லா சத்தான சாப்பாடா சாப்பிட மாட்டீங்களோ?..”

“இல்லையே.. நல்லாதான் சாப்பிடுகிறேன்.. எனக்குத் தெரியலை…”

“நீங்க சொல்லுங்க டாக்டர்.. என்னவெல்லாம் சாப்பிடலாம்ன்னு.. இல்லைன்னா ஏதாவது மாத்திரைகள் சொன்னீங்கன்னா நான் கேர் எடுத்து பார்த்துக்கறேன்..”

அது யார் நடுவில் என அவளைப் பார்த்தவர்.. “நீங்க யாரும்மா.. இவங்களுக்கு என்ன வேணும்..”

“நான்…..”

வேதா தயங்கி ருக்மணியைப் பார்த்தாள்..

“டாக்டர்.. இவ வேதா.. என்னுடைய மருமகள்..” என்றாள் ருக்மணி சட்டென்று..

“ஓ.. குட்.. அப்போ நல்லதா போச்சு.. இப்படிப் பார்த்துக்கறேன் சொல்லற மருமகள் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை மிஸர்ஸ். ருக்மணி..”

“நான் என்னவெல்லாம் அவுங்க எடுத்துக்கணும்னு எழுதி தரேன்மா.. நல்ல உணவு, நிம்மதியான தூக்கம், சரியான எக்ச்சைர்ஸ்.. இதெல்லாம் இருந்தாலே போதும்.. அனீமிக்கெல்லாம் பெரிய விஷயம் இல்லை.. அவங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்க.. இரும்பு சத்து கேல்சியம் இதெல்லாம் உள்ள உணவா சேர்த்துக்கங்க..அது போதும்..”

“ஓ.கே.. மிஸர்ஸ்.ராஜேந்திரன்.. அடுத்த மாசம் வாங்க.. இனிமேல் நீங்க மெல்ல நடக்கலாம்.. சின்னச் சின்ன எக்சர்சைஸ் எல்லாம் செய்தால் போதும்.. போகும் போது பிசியோ தெரபிஸ்ட்டை பார்த்து விட்டு போங்க.. அவர் எல்லாவற்றையும் சொல்லுவார்.. உங்களுக்கு வேண்டுமானால் வீட்டுக்கே ஆளை அனுப்பிப் பயிற்சிகளைச் செய்ய வைப்பார்..” என விடை கொடுத்த டாக்டருக்கு நன்றிகளைச் சொல்லிவிட்டு இருவரும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினர்.

வேதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவே இருந்தது.. அத்தை ருக்மணி தன்னை மருமகள் என்று டாக்டரின் சொன்னதே அவள் எதிர்பார்க்கவில்லை.. பரவாயில்லை இப்பொழுதாவது தன்னை ஏற்கத் தோன்றியதே.

அதற்குப் பின் வீட்டை அடைந்தவர்கள்.. ருக்மணியைச் சற்று ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு.. வேதா சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

மாலை ஏழு மணியளவில் ருக்மணியின் அறைக்குள் சென்று அவரை எழுப்பி அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்த வேதா,

“மேடம்.. உங்களுக்கு இரவு உணவை எடுத்து வரவா?.. காலையிலேயே தாளிச்சி வைச்ச தயிர்சாதம் தயாரா இருக்கு.. இன்னும் சத்யா மேடம் வரவில்லை..”

“அய்யோ.. அதே தயிர்சாதமா?..” அலறி அப்படியே படுக்கையில் விழுந்தார் ருக்மணி.

“அய்யோ அத்தை என்னாச்சு.. எதுக்கு இப்படிப் பதட்டம்.. இந்தாங்க கொஞ்சம் தண்ணீரை குடியுங்கள்.. உங்களுக்கு ஒண்ணுமில்லையே?.. டாக்டருக்கு வேணா போன் போட்ட்டுமா?..” பதறத் தொடங்கி விட்டாள் வேதா.

ருக்மணி விழுந்த அதிர்ச்சியில் அத்தை என்று அழைத்ததை வேதாவும் கவனிக்கவில்லை.. ருக்மணியும் பொருட்படுத்தவில்லை..

வேதா நீட்டிய தண்ணீரை குடித்த ருக்மணி..கண்களில் நீர் ததும்ப “வேதா.. ப்ளீஸ்.. எனக்கு அந்தத் தயிர் சாதம் வேண்டாமே?.. இல்லையில்ல..எனக்கு டின்னரே வேண்டாம்.. பேசாமல் என்னைத் தூங்க விடு..நான் வேணா இன்னிக்கு விரதம்.. ஃபாஸ்டிங்க்ன்னு சொல்லிடறேன்..”

சட்டென்று சிரித்து விட்டாள் வேதா.. கடைசியில் இதுக்கா இப்படி ஆர்ப்பாட்டம் செய்தார்.. அவளால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

“சாரி மேடம்.. மாத்திரை சாப்பிடணுமே?.. வெறும் வயிற்றில் கொடுக்க முடியாதே?..”

“வேதா.. நீ தப்பா எடுத்துக்கலைன்னா.. உனக்கும், மாமாவுக்கும் சமைச்சி வைச்சிருப்பியே அதிலிருந்து.. கொஞ்சமே கொஞ்சுண்டு.. ஏதுவா இருந்தாலும் பரவாயில்லை.. நான் அட்ஜெஸ்ட் பண்ணிப்பேன்.. அதைத் தருவியா?..”

பாவமாகப் போய்விட்டது வேதாவுக்கு.. கடைசியில் இப்படி ஒரு சாண் வயிற்றுக்குக் கெஞ்ச வேண்டிய நிலமை.

“என்னம்மா பார்க்கிறே?.. உனக்கு வேணுமானா எக்ஸ்ட்ராவா இந்த மாத சம்பளத்தில் போட்டுக் கொடுத்திட்டேனே?.. எதையாவது சாப்பிட கொடு.. அது மட்டும் வேணாம்..”

‘சே.. சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றாது.. இவர் என்ன பட்டாலும் அந்தத் திமிர் மாத்திரம் அடங்காது.. அதிகப் பணம் தருவாராமா?.. இவர் பணம் இல்லையென்று நான் அழுதேனா?..’

பேசாமல் வெளியே சென்ற வேதா அடுத்த நொடிகளில் தட்டு முழுவதும் உணவுகளை ரொப்பிக் கொண்டு வந்து அவர் முன்னால் வந்து நின்றார்.

“மேடம்.. உங்க பணத்துக்காக நான் உங்களுக்கு உணவைச் செய்து கொடுக்கலை.. இது மனிதாபிமான அடிப்படையில் கொடுக்கிறேன்.. மற்றவர்களை ஏங்க விட்டு என் வயிற்றை மட்டும் கவனித்துக் கொள்ள எப்படி முடியும் சொல்லுங்க?..”

“நீங்க சொன்னீங்களே ஒரு வார்த்தை என்னை விட்டுக் கொடுக்காமல் என்னுடைய மருமகள் என்று.. அந்தச் சந்தோஷம் ஒன்றே போதும்.. அதுக்காக நீங்கள் உடனே என்னைத் தப்பாக யோசிக்க வேண்டாம்.. உடனே நான் மருமகள் என்று இங்கே ஒட்டிக் கொள்ள மாட்டேன்.. என்னோடு உரிமையை நீங்களாக அங்கீகரிக்கும் வரை நானாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை..என் இடம் எனக்குத் தெரியும்..

“ஆனால் மேடம்.. ஒண்ணை மட்டும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. பணம் மட்டுமே இந்த உலகத்தில் பிரதானம் இல்லை.. அதையும் மீறி சில விஷயங்கள் இருக்கிறது.. அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. இன்னொரு முறை இப்படி அதிகப் பணத்தைக் கொடுக்கிறேன் என்று எதற்கெடுத்தாலும் கொடுக்கிறேன் என்று சொல்லி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்..”

“என்னடா இவள் இப்படிப் பேசுகிறாளே என்று நினைக்க வேண்டாம்.. எங்கே ஒட்டிக் கொள்வாளோ என்று கவலையும் பட வேண்டாம்.. வந்த வேலை முடிந்த பின்பு நான் இங்கிருந்து கிளம்பி விடுவேன்..” என்று அழுத்தம் திருத்தமாக ஆனால் ஆணித்தரமாகச் சொன்ன வேதாவை பார்த்து ருக்மணிக்கு தலை தானாகக் குனிந்து கொண்டது.

கைகள் தட்டில் அலைந்தாலும்.. மனம் வேதாவை நினைத்துப் பெருமை அடைந்தது.. மகிழ்ச்சியாக உணவை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டார். இப்பொழுது அதில் எந்தவித அவமானமும் அவருக்குத் தோன்றவில்லை.

தன் மருமகள் கையால் கொடுத்த உணவு தேவார்மிதமாக இனித்தது.. அந்த வெறும் மெத்தென்று மூன்று சப்பாத்திகளும், காய்கறி குருமாவும்.. சாதமும் பருப்புடன் காய்கள் போட்ட கூட்டும்.. சாலடும் இனித்தது.

‘பாசத்தையும், அன்பையும் பிசைந்து கொடுத்திருந்த வேதாவை தன் மருமகளாக அடையத் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமோ..’ மனம் சிந்திக்கத் தொடங்கியது..

ஆம் முதல் முறையாகத் தான் தப்புச் செய்து விட்டோமோ என யோசிக்கத் தொடங்கினாள்.

அன்று தாமதமாக வந்த சத்யா ருக்மணியைப் பற்றியே மறந்து போயிருந்தாள்.. வேகவேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள்.. சட்டென அவர் நினைவு வந்து.. இரவு உணவு கொடுக்க வேண்டிய நேரமாயிற்றே.. மதியம் வைத்த சாதம் போதுமா இல்லை.. ஓட்ஸ் கஞ்சியைக் கொடுக்கலாம் என்று பரபரப்புடன் அவர் அறைக்குள் உள்ளே நுழையப் போனவளில் செவியில்..

‘வேதா தான் என்னவோ மருமகள் என்ற உரிமையை அவராகக் கொடுக்கும்வரை எடுத்துக் கொள்ளவில்லை’ என்ற பேச்சு விழுந்து.. சற்றே ஒதுங்கி நின்று கவனித்தவள்.. பிறகு ஒன்றும் புரியாமல் உள்ளே நுழைந்தாள்..

தட்டில் விதவிதமான உணவுகளுடன் ருக்மணி உணவருந்தும் காட்சி தென்பட..’அடிப்பாவி வேதா.. அத்தையும் சாப்பாட்டை ஆசைகாட்டி கைக்குள் போட்டுக் கொண்டு விட்டாளே?..’

“அத்தை.. என்ன இது?.. சப்பாத்தியும், குருமாவுமா?..உங்களுக்கு ராத்திரிக்கு இதெல்லாம் சேராதே?..

“ஏய் வேதா.. உன் மனசில என்னடி நினைச்சிருக்கே?.. அத்தைக்கு இதெல்லாம் ஒத்துக்காதுன்னு தெரியாது உனக்கு?.. யூ இடியட்.. படிச்சிருந்தா லைட் ஃபுட் பத்தி தெரியும்.. வயசானவங்களுக்குக் கஞ்சி பெஸ்ட்ன்னு தெரியாது?..எந்தத் தைரியத்தில் இதெல்லாம் கொடுத்தே?.. ஓ.. மருமகள்கிற நினைப்போ?..”

அவளை வெறித்தாள் வேதா.. மீண்டும் அதே கேள்வி.. ‘எனக்கா.. மருமகளாகவா..’?

******************************************************************

Jothiramar

Moderator
Staff member
அய்யோ இந்த சத்யா திருந்தவே மாட்டாளா? ருக்கு வேதாவை மருமகளா ஏத்துக்கிட்டா இவளுக்கு என்ன வந்தது. வேதா மேல பொறாமை தான் அதிகமாக இருக்கு
 
Chellam

Well-known member
இந்த சத்யா எப்போது தன் நிலையை உணர்வாளர்.
 
Mohanapriya M

Ammadiyov aunty oruvaliya yosikaa ampitchuruchu🤩🤩 atha keduka intha sathya enga irunthu tan varuvaloo🤦🏻🤦🏻🤦🏻
 
Kothaisuresh

Well-known member
ம்கும் வந்துட்டா, ருக்குவே திருந்தினாலும் இவ விட மாட்டா
போலவே
 
Top