கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 35

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 35

கணவனின் ஒற்றை வார்த்தையிலேயே ஜன்னி கண்ட மாதிரி உடல் நடுங்கத் தொடங்கியது சத்யாவிற்கு,

'ஐயோ ஐயனார் முறைக்கிறார்.. அருவா எடுத்து வீசிடுவாரோ நம் மேல்?..', என்று அபத்தமாய் நினைத்தபடி அவன் பின்னே ஓடிச் சென்று வண்டியில் ஏறி அமர்ந்தவளுக்கு அப்போது தான் உரைத்தது அவனிடம் ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது என்று..

அது என்ன என்று அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் ஒரு சில நிமிஷம்.. அதற்குள் வண்டியை ரிவர்ஸ் எடுத்துப் பாதையில் கவனம் காட்டி செலுத்தத் தொடங்கினான் கதிர்.

ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடியே வந்தவளுக்கு அவன் இப்போது கொஞ்சம் உடல் இளைத்து கட்டுக்கோப்பாய் மாறி இருப்பது போல் தோன்றியது.. ‘ஜிம் பாடி டெவலப் பண்ணுகிறாரோ?', என்று யோசித்தவளுக்கு வேறு ஒன்றும் உறைத்தது..

'அட இதென்ன திடீரென்று இவர் அவர் சுவர் என்று நினைக்கத்

தொடங்கிவிட்டாயே.. கல்லானாலும் கணவன் ரேஞ்சில் அவர் என்று மரியாதையாய் கூப்பிடுவது இருக்கட்டும் இப்போ நினைப்பே மரியாதையாய் வருகிறதே.. சத்யா உஷார்.. சம்திங்க் ராங்க்.. இந்தத் திடீர் மரியாதைக்குக் காரணம் என்னவோ சொல்லு மகளே, இப்போ மாட்டினே அவ்வளவுதான் நீ', என்று அவளுடைய ப்ளாக்கி மனதில் இருந்து நையாண்டிக் குரல் கொடுத்தது.

'ஏய் சீ அடங்கு.. நான் என்ன தெருவில் போற வரவனையா அப்படி நினைத்தேன்..என் புருஷன் தானே.. அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.. நீ உன் வேலையைப் பார்..', என்று செல்லமாய் அதை அடக்கியவள் நிச்சயம் மாறித் தான் போயிருந்தாள்.

‘என்ன இருந்தாலும் கதிர் நிச்சயம் நல்லவன்.. என்ன கொஞ்சம் குவாலிஃபிகேஷன் குறைவு அவ்வளவுதானே.. இதெல்லாம் இந்தக் காலத்தில் ஒரு பெரிய விஷயமா?.. அவருக்கும் சேர்த்து நான் படித்திருக்கிறேனே அது போதாதா என்ன?’

என்று அப்போதும் தான் என்கிற அந்த அகங்காரம் லேசுபாசாய் இருந்தாலும்.. ஓரளவு பரவாயில்லை என்கிற அளவில் தான் மாற்றம் இருந்தது..

இந்தச் சில மாதங்கள் பிரிவும் அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகளும் நிச்சயம் அவளிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தித்தான் இருந்தது..

என்னதான் இருந்தாலும் இவர்கள் தான் என் மனிதர்கள் என்ற புரிதலும் ஏற்பட்டு இருந்தது அவளுள்.

அதிலும் சமய சஞ்சீவியாய் பாட்டி அன்று வந்து எதையும் யோசிக்காமல் தன்னை உடன் அழைத்துச் சென்றது அவளை நிச்சயம் பாதித்துத் தான் இருந்தது..

ஆனால் கதிர் தான் அவள் கண்ணில் படாமல் ஏன் மறைந்து இருந்தான் என்பது மட்டுமே புரியாத புதிர் அவளுக்கு.. அவன் தான் அவள் மேல் அவ்வளவு பாசமாய்க் காதலாய் இருந்தவனிடம் ஏன் இந்தத் திடீர் முகத்திருப்பல்?.."

எதற்கும் அவளிடம் விடை இல்லை.. ஆனால் தான் கொஞ்சமாக இவர்களை வருத்தவில்லை பயங்கரமாய் அவர்களை வாட்டிவிட்டது மட்டும் புரிந்தது அவளுக்கு..

மெல்ல தன் கணவனைப் பார்த்தவளுக்கு, லேசாய் புன்முறுவல் எட்டிப் பார்த்தது..

ஆனால் அதற்குள் கடுகடுத்த முகத்துடன், "என்ன திரும்பித் திரும்பி பார்த்துகிட்டு வரே.. ‘பார்த்த முதல் நாளே..’, ந்னு கமல் பாட்டு நியாபகம் வருதோ?, அதுக்கெல்லாம் நீ இனி வேறு ஆளைத்தான் பார்க்கணும்..", என்றான் கதிர்..

அப்பாடி ஒரு வழியா பேசிட்டான்.. என்னதான் ரொம்பப் பிடிக்கலைன்னா கூட ஒரளவுக்கு இவன் பரவாயில்லை தான், என்று மீண்டும் ஒருமையில் நினைக்கத் தொடங்கியவளுக்கு அவளது வெள்ளை மனம் காரணம் கற்பித்தது.. ‘உரிமை இருக்கிற இடத்தில் இதெல்லாம் சகஜமப்பா..', என்று,

"என்ன பேச்சைக் காணோம்..?", என்று மீண்டும் கடுத்தவனை இப்போது நன்றாய் திரும்பிப் பார்த்து முறுவலித்தவள்,

"ராங்க்... சிச்சுவேஷன் ராங்க்.. நான் 'காக்க காக்க', சூர்யா ஜோதிகாவைல்ல இல்ல இந்தச் சிச்சுவேஷன்லே நினைச்சு இருந்தேன்.. கமல் பாட்டு பைக்கிலே.. ஹி.. ஹீ.. நாம போறது ஜீப்பிலே.. என்ன நான் சொல்லுறது.. கூட்டி கழிச்சு பாருங்க சரியா இருக்கும்", என்றாள் லேசாய் உதட்டை சுழித்துச் சிரித்துக் கேலியாய்.. நிலைமையை லேசாக்கும் பொருட்டு.

என்னதான் மனம் நிறைய நிராசையும் கோபமும் மண்டியிருந்தாலும்.. கதிரின் நெஞ்சம் மறைத்து வைத்த காதலில் பொங்கியதை கட்டுப்படுத்த திணறித்தான் போனான் ஒரு நிமிடம்.. 'அடியேய்..ப்பா..', என்று, அப்படியே அந்த உதடுகளைக் கவ்வி பிடிக்கத் துடித்த மனதை அடக்கியபடி

'ராட்சசி.. நோக்காம நுங்கு எடுக்கிறா.. பொல்லாதவ.. கதிர் சாக்கிரத்தை..', என்று மனம் அறைகூவல் விட்டது..

"அதெல்லாம் இருக்கட்டும்.. இதுக்கு அப்புறம்.. இல்லை இல்லை இதான் லாஸ்ட்.. இனி இந்த மாதிரி அதிகப் பிரசங்கி வேலையெல்லாம் செஞ்சே.. நீ வேறு வேலைத் தான் தேட வேண்டியிருக்கும் சொல்லிட்டேன்..", என்று விஷயத்திற்கு நேராய் வந்தான்..

கோபம் சுறுசுறு என்று ஏறத் தொடங்கியது சத்யாவிற்கு..

"ஏன் நான் என்ன அப்படித் தப்பா செஞ்சிட்டேன்.. இந்தக் காலேஜுக்கு நான் வேலைக்குச் சேர்ந்தது உங்கப்பா சொல்லி.. அதை நீங்க மறந்துட வேணாம்.. சோ.. அவர் சொல்லட்டும் நான் என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு.. இதெல்லாம் நீங்க முன்னாடியே கவனிச்சிருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காதில்லே?..", என்று அவனையே குற்றம் சாட்டினாள் மனைவி.

"ஹலோ.. கொஞ்சம் அடக்கி வாசி.. நீ வரதுக்கு முன்னாடியிலேந்தே இந்தக் காலேஜ் இருக்கு.. இந்த ஸ்டூடண்ட்சும் இருக்காங்க.. சில விஷயங்களை நான் கண்டும் காணாமே போகத்தான் வேணும்..",

அவன் முடிக்கக் கூட விடவில்லை அவள், "சோ.. அந்தப் பொறுக்கி செஞ்சது தப்பு இல்லைன்னு சொல்லறீங்களா.. அவன் எல்லாப் பொண்ணுங்களையும் இந்த மாதிரி டார்ச்சர் செய்வான்.. ஆனா தட்டி மட்டும் கேட்கக் கூடாதா..? அப்புறம் எதுக்கு இங்க ஒரு அட்மின் அதுக்கு ஒரு நான்..", என்று படபடத்தாள்.

"எதுவும் தப்பில்லை.. அவனை எப்படிக் கவனிக்கனுமோ அப்படிச் செஞ்சிருக்கணும்.. போலீஸ் கிட்டே ஏன் கம்பிளைண்டு செய்யலை அந்தப் பொண்ணு.. விஷயம் அப்படியே முடிஞ்சிருக்குமில்லே.. இல்லாட்டி.. தைரியமா அவங்க அப்பா கிட்டே போயிருக்கணும்..”

“எல்லாத்தையும் விட்டு நீ ஏன் வீணா அந்த வளையத்தில் மாட்டிக்கப் பார்த்தே.. அவன் அப்பா நல்லவராக இருக்கப் போயி உனக்குச் சப்போர்ட் கிடைச்சிது.. இல்லாட்டி உன் கதி?.. புருஷன்னு ஒருத்தன் எதுக்கு இருக்கேன் உனக்கு.. என் கிட்ட சொல்லி ஏதாவது செய்யணும்னு தோணலை உனக்கு?..", என்றான் சற்றும் கோபம் அடங்காமல்.

ஒரு கணம் பயந்தவள், "அதில்லை கதிர்.. என்னாலேயே செய்ய முடியுமின்னு நினைச்சேன்.."

இன்னமும் கூட ஆத்திரம் கூடி, "ஆமாம் நிச்சயம் நீ நினைச்சிருப்பேடி.. இந்தக் கேணக்கிறுக்கனால் என்ன செய்ய முடியுமின்னு.. உன்னைப் பொருத்தவரை நான் அனெஜுகேடட் புரூட்.. இவந்தானேன்னு ஏளனம் உனக்கு.. இவங்கிட்டே எதுக்கு நாம கேட்கணும்கிற திமிர்.. இவனா என்னை வேலைக்கு வச்சான் இவன் அப்பன் ஒரு வயசானவன், படிக்காதவன், இவங்களுக்கெல்லாம் என்ன பேகிரவுண்ட் இருக்குமின்னு நினைச்சிட்டே இல்லை..”

“நீ என்ன செஞ்சாலும் எனக்கு விஷயம் வந்துரும்டி.. அதான் அங்கே நான் எண்டிரி கொடுத்தேன்.. கொஞ்சம் விட்டிருந்தா அவன் உன்னைக் கொத்து பரோட்டாவுக்குத் தொட்டுக்கக் கைமா பண்ணியிருப்பான்.. ", வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் கைகள் நன்றாய்ச் சிக்கியிருந்த ஸ்டியரிங்க் வீலை ஒடித்துத் திருப்பியபடி வேகத்தைக் கூட்டி பறந்தான் கதிர்.

'இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது.. நிச்சயம் கோபம் அதிகரிக்கத்தான் செய்யும்.. நாம் சற்றே இவன் கவனத்தைக் கலைக்காமல் இருப்பது நல்லது’ என்று நினைத்தவள், பேச்சைத் திசை திருப்பும் பொருட்டு..

"எப்பவும் சாப்பாடு பத்தித் தான் பேசுவீங்களா.. கைமா பரோட்டான்னு..கதிர்.. ப்ளீஸ்.. மேட்டர் முடிந்தது.. இனி உங்க அட்வைஸ் கேட்டுக்கறேன்.. போகட்டும்.. இத்தனை நாள் நீங்க எங்கே போயிருந்தீங்க.. நான் இங்கே வந்து ரெண்டு மாசம் போல ஆயிடுச்சு.. உங்களைக் காணோமே..?", என்று ஆவலாய் கேட்டாள்.

அவளைத் திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு காரை வேகமாய்ச் செலுத்தினான் கதிர்.

'ஆமாம் பெரிய மகாராணி.. இத்தனை நாள் கழிச்சி இப்போ தான் நான் எங்கே போனேன்னு நியாபகம் வந்திருக்கு.. இவளை..', என்று நினைத்தவன் வண்டியை அவர்கள் வீட்டுப் பக்கம் போகும் வழியில் திருப்பாமல் வேறு பாதையில் செலுத்தினான்.

வாயைத் திறந்து கேட்கப் பயப்பட்டு ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் சத்யா..

வயல் வெளிகளிடையே பறந்த வண்டி.. சிறிது நேரத்தில் ஒரு தோப்பை அடைந்து நின்றது.

காரின் கதவைத் திறந்தபடி வெளியே வந்த கதிர் அவள் பக்கம் வந்து கதவைத் திறந்து

"வா", என்றான்

மெல்ல இறங்கி நின்று ஆழ் மூச்சு எடுத்தவளுக்கு அப்போதும் படபடப்பு குறையவில்லை.. இங்கே.. எதற்கு.. இது என்ன இடம் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் சத்யா..

"என்ன பார்க்கிறே.. வா..", என்று அவள் கையைப் பிடித்து இழுத்தபடி அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் கதிர்..

இப்போது நிஜமாகவே பயம் தொற்றிக் கொண்டுவிட்டது சத்யாவிற்கு..

"நில்லுங்க எங்கே கூட்டிட்டு போறீங்க, விடுங்க என்னைப் பயமாயிருக்கு..", என்று உள்ளே நுழையாமல் வாயிற்படியிலேயே நின்று கொண்டு மறுத்தாள்.

ஒரு கணம் ஹாஹா என்று சிரித்தவன், “ம்ம் பயமா உனக்கா.. நவீன ஜான்சி ராணி... இல்லையில்லை சொர்ணாக்கா ரேஞ்சில் ஆளை தூக்கறே.. உனக்குப் பயமா.. என்ன கேட்டே?.. கூட்டிட்டு போயி உன்னை.. என்ன செய்யப் போறேன்னு நினைக்கிறே.. பழைய படத்தில் மலையிலிருந்து உருட்ட கூட்டிட்டுப் போகையில் பெண்டாட்டி புருஷனை நைசா தள்ளிவிடுவாளே.. அதை மாதிரி என்னை நீ போட்டுத் தள்ளாமல் இருந்தா சரி..", என்றான் பற்களைக் கடித்துக்கொண்டு..

இப்போது நன்றாகவே ஆத்திரம் வரத் தொடங்கியது சத்யாவிற்கு...

"சை.. என்ன ரோதனை இது.. ஒரு கேள்வி கேட்டேன்.. அதுக்குப் பதில் சொல்லாமல் இங்கே இழுத்துட்டு வந்துருக்கீங்க?; சரி.. இப்போ என்ன நான் உள்ளே வரணும் அவ்வளவுதானே?..", என்றவள் தானும் அந்த வீட்டினுள் நுழைந்தாள்..

"ஆமாண்டி.. உள்ளே வா... நீயும் தெரிஞ்சிக்கோ நான் எங்கே இருந்தேன்னு..", என்றவன் உள்ளே அழைத்துச் சென்று அந்த வீட்டைக் காண்பித்தான்..

சின்னதாய் அழகாய் ஒரு முற்றத்துடன் கூடிய வீடு.. நடுவில் ஒரு மர ஊஞ்சல் வேறு நல்ல கெட்டி பித்தளை சங்கிலியுடன்..

"சரி பார்த்துட்டேன்.. அங்கே ஒரு பெரிய மாளிகையே இருக்கையில் இப்படிச் சின்னதாய் ஒரு வீட்டில் இருக்க அப்படி என்ன நிலை உங்களுக்கு வந்துவிட்டது.. ஏதோ திருடனைப்போல் மறைந்து வாழணும்?"

"ம்ம்.. ஏன்னா.. எனக்கு நீ தானே பெண்டாட்டியா வந்துருக்கே.. அனுசரிச்சுப் போகப் பிடிக்காம நான் வேண்டான்னு ஓடிப் போனவதானே நீயி.. நீயே போனே.. உன்னை வலிய திரும்பிக் கூட்டிட்டு வந்துடுச்சு அப்பத்தா..”

“வீட்டுக்கு வந்தவங்களை எதிரியா இருந்தாலும் முகம் சுளிக்காமல் கவனிக்கணும்னு எங்கம்மாவும் அப்பத்தாவும் சொல்லி சொல்லி வளர்த்தாங்க எங்களை.. உன்னை நேரில் பார்த்து நான் ஆத்திரத்தில் ஏதும் சொல்லிவிடக் கூடாதேன்னு தான் நான் விஷயத்தை ஆறப்போட நினைச்சு இங்கே வந்துட்டேன்.. போதுமா விளக்கம்..", என்றான் முகத்திலடித்தாற்போல்..

பழைய ஆத்திரம் மெல்லத் தலை தூக்க, தன்னை இப்படித் துச்சமாய் ஒருவன் நினைப்பதா என்ற கோபமும் அத்துடன் சேர்ந்து கொள்ள

"ஹேய்.. நிறுத்துங்க.. என்னமோ நான் உங்க வீட்டுக்கு வர துடிச்சிக்கிட்டு இருந்த மாதிரி பேசறீங்க?.. உங்கப்பாவும் அப்பத்தாவும் தான் என்னைக் கூட்டி வந்தாங்க.. ஏதோ இங்கே வர நான் துடிச்சிக்கிட்டு இருந்தாப்போலப் பேச வேண்டாம்..", என்றாள் லேசான மனக்குன்றலுடன்..

ஆனாலும் மனதுள், ‘நல்ல வேளையா வந்தாங்க இல்லாட்டி என் கதி என்னவாயிருக்குமோ.. நிச்சயம் வேலைக்குப் போயிருப்பேன்.. ஆனாலும் கூட என் மைண்ட் டிஸ்டர்ப்டா தானே இருந்தது அப்போ.. இங்க தான் என் எடம்னு நான் முடிவுக்கு வர முடிஞ்சதே அதுவே நல்லது தானே எனக்கு.. இவன் என்னடான்னா.. எதையும் புரிஞ்சிக்காம இப்படித் தாண்டுறான்..’ என்று நினைத்துக் கொண்டு,

"அதானே பார்த்தேன்.. ஒரு நிமிஷம் நான் கூட ஏமாந்து தான் போனேன்.. என்னடா நம்ம பெண்டாட்டி அக்கறையா நாம எங்கே இருக்கோம்னு கேக்கறாளேன்னு.. ஏதோ மனசு மாறி நீ இங்கே வந்தேன்னு நான் கனவுலே கூட நினைக்கலேடி..

“எனக்கா தெரியாது நீ யாரு எப்படிப்பட்ட பின்லேடின்னு.. உனக்கு அந்தச் சமயத்துலே காரியம் ஆகணும்னா காலைப் பிடிப்பே இல்லாட்டி கழுத்தை..", என்றவன் சொல்லி முடிக்காமல் நிறுத்திவிட்டு வேறு புறம் பார்க்கத் தொடங்கினான்.

அடுத்தக் கணம் அதுவரை அவள் கட்டிக்காத்த பொறுமை நிதானம் எல்லாம் பறந்து போனது சத்யாவுக்கு..வன்மம் தலைதூக்க,

"இங்கே பாருங்க சும்மா என்னை ஏதோ டெரரிஸ்ட் ரேஞ்சுக்குப் பேசுறதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்.. ஏதோ பிடிக்காம கல்யாணம் ஆகியாச்சு.. சரி இன்னமும் எத்தனை நாள் தான் நானும் என் கோபத்தையெல்லாம் வெச்சு என்ன செய்யுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா என்னைத் தேத்திகிட்டுத் தான் இங்கே வந்தேன்.. சரி பரவாயில்லை நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் பொறுத்து போம்மான்னு அப்பத்தா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப் பட்டுத் தான் வந்தேன்", என்று வாயை விட்டாள் சத்யா.

"ம்ம்.. அப்ப சரி இரு உன்னோட பொறுமையின் அளவை நானும் பார்க்கிறேன்,", என்றவன் சட்டென்று அவளை இழுத்து எலும்பு நொறுங்கும் அளவுக்கு இறுக்கி அணைத்தான்..

இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பாராத சத்யா ஒரு கணம் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவள், அவன் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் இங்கு வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டு ஒன்றும் சொல்லாமல் அதே சமயம் தன் எதிர்ப்பையும் காட்டாமல் அவன் கைகளில் ஒரு பொம்மை போல் அப்படியே கண் மூடி நின்றாள்.

மனதுள், 'கடவுளே எனக்குப் பொறுமையைக் கொடு.. இவன் நிச்சயம் இப்போது குதர்க்கமாகத்தான் பேசுவான்.. இவன் என்னை ஏதோ சோதனை செய்து பார்க்கிறான்.. இதற்குமேலும் அவனிடம் வெறுப்பைக் காட்டவும் பிடிக்கவில்லை.. ஆனால் அதேசமயம் அவனை நெருங்கவும் மனம் இடம் கொடவில்லை.. என்ன நான் செய்வது', என்று நினைத்தவளின் மூடிய கண்களின் வழியே நீர் வழிந்து ஓடியது.

அவளைக் கூர்ந்து கவனித்தவனின் இதழ்களில் லேசாய் ஒரு வறட்டுப் புன்னகை ததும்பியது..

சட்டென்று குனிந்து அவளை நெற்றியில் முத்தமிட்டுவிட்டுத் தள்ளி நிறுத்தியவன்,

"இதோ பார் சத்யா.. நீ இங்கே எந்தப் போக்கிடமுமில்லாமல் வந்திருக்கிறாய் என்று நான் நினைக்கவில்லை.. அதனால் இந்தக் கணம் உன்னிடம் எந்தப் பொய்மையுமில்லை என்பதும் எனக்குத் தெரிகிறது.. நீ ஏதோ உனக்கென்று ஒரு ஈகோ வைத்துக்கொண்டு.. தான் என்கிற நினைப்பைவிட்டு வெளியே வரத் தயங்குகிறாய்..”

“அதனாலயே உனக்கு என்னை ஏற்பது கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.. என்னை நெருங்கவும் யோசிக்கிறாய் என்பதும் எனக்குப் புரிகிறது.. உனக்கும் சீக்கிரமே புரியும் உன்னை அறியாமல் நீ என்னை உன் மனதில் ஏற்றுக் கொண்டதை..”

“அடுத்து ஒரு ஆம்பளைன்னா கட்டிய மனைவியாயிருந்தாலும் அவளை மனம் நோகவிடாமல் இருப்பவன் தான் ஆம்பளைன்னு நான் நினைக்கிறேன்..”

“உனக்கு இப்போதே உன்னுடைய மாற்றம் தெரிந்தாலும் கூட அதை ஏற்க மறுக்கிறாய்.. இதுவும் மாறும்.. கூடிய சீக்கிரம்.. இந்தத் தயக்கமும் உன்னைவிட்டுப் போகும்.. அதுவரை உன்னிடமிருந்து நான் விலகி இருப்பதே நமக்கு நல்லது.. இல்லாவிட்டால் தானாய் கனியாத பழத்தை தடி கொண்டு அடித்தாற் போலாகிவிடும்..”

“அதுவரை நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.. அங்கே நான் வந்து இருந்தால் நீ நிச்சயம் உன்னை மயக்குவதற்காகத்தான் நான் வந்தேன் என்று சொல்லுவாய்.. உன் விருப்பம் போல் தான் இதுவரை நடந்திருக்கிறாய்.. இனியும் உன் விருப்பம்தான்..", என்றவன்,

"சரி சரி, ரொம்ப நேரம் ஆகிவிட்டது.. உன்னை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு நான் திரும்ப வேண்டும்.. நீ ரெடியானால் நானும் ரெடி..", என்று சொல்லிவிட்டு வாசற்புறம் நடக்கத் தொடங்கினான்..

சத்யாவிற்கு அந்த நொடியிலேயே தரையில் புதைந்து விட மாட்டோமா என்றாகிவிட்டது..

'சே.. ஒர் நிமிஷத்தில் என்னை அக்கு வேறு ஆணி வேறாகக் கூறு போட்டுவிட்டான்.. அவன் சொன்னது நூறு சதம் உண்மை என்றாலும் கூட.. நிச்சயம் ஏதோ என்னைத் தடுக்கிறதே.. அது என்ன?..', என்று மனதை உழப்பியபடி தலையை மட்டும் ஆட்டியவள்,

"கதிர்.. நான் ஒன்றும் உங்களை அந்த மாதிரி கெட்டதாய் நினைக்கவில்லை.. ஆனாலும் கூட உங்கள் சொந்த வீட்டைவிட்டு நீங்கள் வெளியே தங்கியிருப்பது ஏற்க முடியா ஒன்றுதான் என்னைப் பொருத்தவரை.. எனக்கு நிச்சயம் உறுத்துகிறது.. இனி அங்கே வந்துவிடுங்கள்..”

“நாம் கணவன் மனைவி என்பதை விடுத்து.. ஏன் நல்ல ஃப்ரெண்ட்ஸாக இருக்கலாமே.. இத்தனைக்கும் நாம் சொந்தம் வேறு.. ஊரில் ஒவ்வொருத்தர் ஒருமாதிரி பேச நாம் ஏன் இடம் கொடுக்க வேணும்?", என்று மனதில் பட்டதை மெல்லத் தெரிவித்துவிட்டாள்.

அவளைக் கூர்ந்து நோக்கியவன், வேறு ஒன்றும் பேசாமல்,

"போகலாம்", என்று சொல்லிவிட்டு வாசலைப் பார்த்து விரைந்தான்.

ஒன்றும் பேசமுடியாமல் அவன் இழுத்த இழுப்புக்கு ஆடத் தொடங்கினாள் அந்தப் பாவை.. கணவன் கையில் மனைவியும் மனைவி கையில் கணவனும் பொம்மைகள்தான் என்பதை இருவருமே புரிந்து கொண்டு அவரவர் தங்கள் ஆட்டத்தை ஆடத் தொடங்கினர்.

அன்றைக்கு இரவே கதிரும் தன் மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து வீடு திரும்பினான்.

***********************************************************

Mohanapriya M

Well-known member

Superuuuuuu😍😍😍😍😍😍
 
Kothaisuresh

Well-known member
இவ இந்த அளவுக்கு மாறி இருக்காளே. பார்ப்போம்
 
Chellam

Well-known member
சத்யாவின் இந்த மாற்றம் பட்ட அனுபவங்களால்.
 
Top